இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday, 5 December 2007

ஒரு உண்மை காதல் கதை

ஒரு பணக்கார வீட்டுப் பெண் ஒரு க்ளீனர் பையனை காதலிக்கிறாள். இது அவளோட அப்பாக்கு தெரிஞ்சதும் அவர் வழக்கம் போல தடுக்க நினைக்கிறார். அதனால் 2 பேரும் வீட்ட விட்டு ஓடிப் போறதுனு முடிவு பண்ணி கெளம்பிடராங்க. அந்த பொண்ணோட அப்பா அவங்கள தேட ஆரம்பிக்கிறார். ஆனா கண்டு பிடிக்க முடியல. கடைசில அவர் அவங்க 2 பேரோட காதலை ஏத்துகிட்டு , அவங்க திரும்பி வீட்டுக்கு வரணும்னு ஒரு செய்தி தாள்ல விளம்பரம் குடுக்கிறார்.

" நீ வீட்டுக்கு திரும்பி வந்தா அந்த பையனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன். நீங்க ஒருத்தர ஒருத்தர் உண்மையா காதலிக்கிறீங்கனு ஒத்துகிறேன்."

ஒரு வழியா அவங்க காதல்ல ஜெயிச்சி வீட்டுக்கும் திரும்பி வந்துடறாங்க. அடுத்த நாள் 2 பேர்ரும் அவங்க திருமண உடைகள் வாங்கறதுக்காக நகரத்துக்கு போறாங்க. அன்னைக்கு அந்த பையன் வெள்ளை உடை உடுத்தி இருந்தான். அப்போ அவன் மனைவிக்கு குடிக்க எதாச்சும் வாங்கலாம்ம்னு ரோட கிராஸ் பண்ணி போகும் போது ஒரு கார் அவன் மேல மோதி ரொம்ப அகோரமா இறந்துடறான்.

அத பார்த்ததும் அந்த பொண்ணு நினைவிழந்து போய்டறா. கொஞ்ச நேரம் கழிச்சி தான் அந்த அதிர்ச்சில இருந்து அந்த பொண்ணு மீளுது. அவன் ரொம்ப அகோரமா இறந்து போனதால அடுத்த நாளே இறுதி சடங்கு எல்லாம் முடிச்சிடறாங்க.

2 நாளைக்கு அப்புறம் அந்த பொண்ணோட அம்மாவுக்கு ஒரு கனவு வருது. அதுல ஒரு வயசான பெண் வறாங்க. அந்த வ.பெண் " உங்க பொண்ணு துணியில இருகிற அந்த பையனோட ரத்தக் கறைய உடனே சுத்தம் பண்ணுங்க"னு சொல்றாங்க. ஆனா அந்த அம்மா அத பெரிசா எடுத்துக்கல.

அடுத்த நாள் அந்த பொண்ணோட அப்பாவுக்கும் அதே கனவு வருது. அவரும் அத பெரிசா எடுத்துக்கல.

அப்புறம் அந்த பொண்ணுக்கும் அந்த கனவு வருது. அவ பயந்து போய் எழுந்து அவ அம்மாகிட்ட அந்த கனவு பத்தி சொல்றா.

இப்போ அந்த அம்மாவும் கொஞ்சம் கலவரமாகி உடனே அந்த துணியில இருக்கிற ரத்த கறையை உடனே சுத்தம் செய்ய சொல்றாங்க. அந்த பொண்ணு சுத்தம் செய்யறா. ஆனா கொஞ்சம் கறை மட்டும் அப்டியே இருக்கு.
அடுத்த நாள் அந்த பொண்ணுக்கு மறுபடியும் அதே கனவு வருது. திரும்பவும் அந்த துணிய சுத்தம் பன்றா. அப்போவும் கொஞ்சம் ரத்தக் கறை இருக்கு. அன்னைகும் அந்த பொண்ணுக்கு அதே கனவு வருது. அப்போ அந்த வ.பெண் கடைசி எச்சரிக்கை தறாங்க. அந்த ரத்த கறைய சுத்தம் செய்யலனா ரொம்ப மோசமா எதாவது நடக்கும்னு சொல்றாங்க.

இப்போ அந்த பொண்ணு அவளால முடிஞ்ச வரைக்கும் சுதம் செய்யறா. ஓரளவுக்கு கறை போய்டுது. ஆனாலும் கொஞ்சம் கறை அப்டியே இருக்கு. அவ ரொம்ப சோர்ந்து போய்டறா.

அன்னைக்கு மாலை நேரத்துல அந்த பொண்ணு தனியா வீட்ல இருக்கும் போது யாரோ கதவ தட்றாங்க. திறந்து பார்த்தா கனவுல வந்த அந்த வயசான பெண் எதிர்ல நிக்கிறாங்க. உடனே அந்த பொண்ணு பயந்து மயங்கி விழுந்துடறா. அந்த வ.பெண் இந்த பொண்ண எழுப்பி அவ கைல நீல நிறத்துல ஒரு பொருள குடுக்கிறாங்க. அத பார்த்து அந்த பொண்ணு அதிர்ச்சி ஆகி என்ன இதுனு கேக்கிறா.

அந்த வ.பெண் " இதான் சர்ஃப் எக்செல்.. இந்த கற ..அந்த கற..எந்த கறையா இருந்தாலும் நொடியில போய்டும்" :P

நோ..நோ.. அழக் கூடாது.. :D

( எனக்கு வந்த மெயில்ல நிர்மானு தான் இருந்தது. அதோட இருந்தா பரவால்ல.. அதுக்கு கீழ ஹிந்தில 4 வரி இருந்தது. அது எவனுக்கு புரிஞ்சது.. அதான் நிர்மா சர்ஃப் எக்செல்லா மாறிடிச்சி :)) )

18 Comments:

Anonymous said...

காலை கொஞ்சம் காமிங்க சாமி

Anonymous said...

ரொம்ப நாளுக்கப்பறம், நச்சுன்னு ஒரு கதை!!
..ராம்

மங்களூர் சிவா said...

இது ஏற்கனவே படிச்ச மெயில்.

ரசிகன் said...

aaaaaavvvvvvv.........

ரசிகன் said...

:)))

Anonymous said...

நல்லாத்தேன் யோசிக்கறாங்கப்பா இந்த உலகத்துல‌

Sanjai Gandhi said...

// இம்சை said...

காலை கொஞ்சம் காமிங்க சாமி //
எனக்கு பதில் என் கூட்டாளி பவன் காலை காமிப்பான் :P
எச்சரிக்கை: முகத்தை சற்று தொலைவில் வைத்துக் கொள்ளவும் :D

Sanjai Gandhi said...

// ராம் said...

ரொம்ப நாளுக்கப்பறம், நச்சுன்னு ஒரு கதை!!
..ராம //

நன்றி ராம் அங்கிள். :)

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

இது ஏற்கனவே படிச்ச மெயில் //
எப்போ பார்த்தாலும் கில்மா மெயில்ஸ் மட்டும் உங்க பிளாக்ல போட்டிங்கனா, எனகெப்படி தெரியும் இத நீங்க ஏற்கனவே படிச்சிங்களா இல்லையானு? . எப்போவாச்சும் நல்ல மெயில்ஸ் போட்டாத் தான தெரியும்.. :P
( அதுக்காக திருந்தி அந்த மாதிரி மெயில்ஸ் போடாம இருந்துடாதிங்க :P.. அப்புறம் கில்மா மெயில் ரசிகர் மன்றத் தலைவர் ரசிகன் மாமாகிட்ட என்னால திட்டு வாங்க முடியாது :D )

Sanjai Gandhi said...

//ரசிகன் said...

aaaaaavvvvvvv......... //
:))))

Sanjai Gandhi said...

//ரசிகன் said...

:))) //
தேங்க் யூ மாம்ஸ்.. ;P

Sanjai Gandhi said...

// சின்ன அம்மிணி said...

நல்லாத்தேன் யோசிக்கறாங்கப்பா இந்த உலகத்துல //

இல்லனா உங்கள மாதிரி பெரியவங்கள எல்லாம் இங்க வர வைக்க முடியுமா சொல்லுங்க? :))
வருகைக்கு நன்றி ஆண்ட்டி :)

குசும்பன் said...

//~பொடியன்~ said...
// சின்ன அம்மிணி said...

நல்லாத்தேன் யோசிக்கறாங்கப்பா இந்த உலகத்துல //

ரிப்பீட்டேய்:)

Sanjai Gandhi said...

@ குசும்பன் அங்கிள்,
//யாராவது அருமை என்று சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)//

உங்க டெம்ப்ளட்ல ஒன்னு யூஸ் பண்ணிட்டிங்க போல :P

பாச மலர் / Paasa Malar said...

பொடியன்

கறை போனதும் காதலனோட ஆவி மெஸேஜ் ஏதாவது வரும்னு நெனச்சேன்
இது நல்லாருக்கு..

Sanjai Gandhi said...

//பாச மலர் said...

பொடியன்

கறை போனதும் காதலனோட ஆவி மெஸேஜ் ஏதாவது வரும்னு நெனச்சேன்
இது நல்லாருக்கு.//

வருகைக்கு ரொம்ப நன்றி.. :))

மங்களூர் சிவா said...

//
பொடியன்~ said...
அப்புறம் கில்மா மெயில் ரசிகர் மன்றத் தலைவர் ரசிகன் மாமாகிட்ட என்னால திட்டு வாங்க முடியாது
//
அவ்வ்வ்வ்வ்

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

//
பொடியன்~ said...
அப்புறம் கில்மா மெயில் ரசிகர் மன்றத் தலைவர் ரசிகன் மாமாகிட்ட என்னால திட்டு வாங்க முடியாது
//
அவ்வ்வ்வ்வ//
:-))

Tamiler This Week