இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday, 31 December 2007

விடைபெறுகிறேன் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்..

பொதுவாக எதையும் நேரடியாக அனுகும் பழக்கம் உள்ள நான் பொடியன் என்ற முகமூடியுடன் யாரையும் அனுகுவதில் விருப்பம் இல்லை. இந்த முகமூடியை வைத்து நான் ஒன்றையும் சாதித்ததில்லை. இனி எதுவும் சாதிக்கப் போறதும் இல்லை. பிறகு எதற்கு இந்த முகமூடி. ஆகவே தான் விடைபெற முடிவு செய்துவிட்டேன். இதை வைத்து தம்மை விட வயதில் இளையவரை கூட ஆண்ட்டி, அங்கிள் என்று அழைக்கும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததை விட வேறொன்றும் கிழிக்கவில்லை. உண்மையில் எதயும் சாதிக்கும் எண்ணத்துடனோ அல்லது பதிவுகள் எழுதி கால் அடி அரை அடி எதையும் உயர்த்தும் எண்ணமோ இல்லை. அப்படி உருப்படியா எதுவும் எனக்கு தெரியாது. பிறகு எதற்கு இந்த முகமூடி.

நான் தமிழ் பதிவுலகில் படித்ததே போலி சண்டைகளைத் தான். அதை படிக்கும் போது இங்கு யாருமே தன் சுய மரியாதையை காப்பாற்றி கொள்ள முடியாது என்பது போல் உணர்ந்தேன். அப்போது எனக்கு மற்ற நல்ல பதிவுகள் எதுவும் படிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை. அப்போது வரை நான் என் பெயரிலேயே ஆங்கிலத்தில் மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன்.சில ஃபார்வர்ட் மெயில்களின் உதவியுடன்:). ஆனால் தமிழில் பதிவுகள் எழுத ஆசை மட்டும் இருந்தது. சும்மா மொக்கை தான். ஆனாலும் அப்போது அதிலும் பாதுகாப்பு உணர்வு இல்லை. நான் எதாவது எழுதப் போய் அல்லது யாருக்காவது பின்னூட்டம் போடப் போய் நானும் போலி சிக்கல்களில் மாட்டிக் கொள்வேனோ என்று பயம் இருந்தது. பயம் என்றால் உயிர் பயம் இல்லை. நேரம் பற்றிய பயம். காரணம் எனக்கு கோபம் சற்று அதிகமாகவே வரும். யாராவது கொஞ்சம் சீண்டினாலும் அதை விட மாட்டேன். அதனால் என் நேரம் வீணாகும் என்று பயந்தேன். அதனால் தான் முகமூடியுடன் வந்தேன்.

உண்மையில் இந்த வலைப்பூவிற்கு நான் வைத்த பெயரே வேறு. 3 பதிவுகளுக்கு அப்புறம் தான் பொடியன் என்ற பெயர் மாற்றினேன். இதற்கு ஒரு காரணம் இருந்தது. நான் தமிழ் வலைப்பதிவுக்கு புதியவன் என்பதால் பொடியன் என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன். பிறகு என்னை பொடியனாகவே பாவித்து எல்லாரயும் ஆண்ட்டி அங்கிள் என்று கலாய்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் என்னால் நீண்ட நாட்களுக்கு முகமூடி அனிந்துக்கொண்டு அல்லது வேஷம் போட்டுக் கொண்டு இருக்க முடியவில்லை. ஆகவே விடைபெறுகிறேன். இன்னும் சில விஷயங்கள் சொல்ல ஆசை.ஆனால் மாதக் கடைசி மற்றும் வருடக் கடைசி என்பதால் இணையத்தில் இன்று நீண்ட நேரம் செலவிட முடியவில்லை. இப்போதும் ரொம்ப நேரம் இருக்க முடியவில்லை. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக கிளம்ப வேண்டியதாகி்விட்டது. அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க்கை வாழ்வத்ற்கே.

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
இப்படிக்கு
~பொடியன்~

13 Comments:

MyFriend said...

aahaa.. ennathu ithu thideer baldi...?????

manjoorraja said...

அன்பு நண்பரே

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பொடியனாக இல்லாமல் இப்பொழுது வளர்ந்து விட்டதால் இளைஞனாக தைரியமாக வெளியில் வந்து உங்கள் பதிவுகளை தொடர்ந்து எழுதி வெற்றியடையவேண்டும் என வாழ்த்துகிறேன்.

2008ல் ஒரு புதிய சகாப்தம் உருவாகட்டும்.

மங்களூர் சிவா said...

:-)))))))))))

குசும்பன் said...

பதிவர் என்றால் அவர் ஒரு முறையாவது விடைபெறுகிறேன் போஸ்ட் போட்டு இருக்கனும்:))) அதை நிறைவேற்றியதன் மூலம் இன்று நீங்கள் முழுபிளாக்கர் ஆகும் தகுதியை அடைந்து விட்டீர்கள் பொடியன்:))))

நான் எப்படி விடைபெருகிறேன் போஸ்ட் போட்டு இருக்கேன் என்று பாரும்!!!!

http://kusumbuonly.blogspot.com/2007/07/blog-post_20.html

Sanjai Gandhi said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

aahaa.. ennathu ithu thideer baldi...????//

கவலைப்படாதிங்க.. உங்கள எல்லாம் விட்டு அவ்ளோ சீக்கிறம் போக மாட்டேன். பொடியன் தான் விடைபெற்றான். இதோ.. சஞ்சய் வந்துட்டான். :)

Sanjai Gandhi said...

//மஞ்சூர் ராசா said...

அன்பு நண்பரே

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பொடியனாக இல்லாமல் இப்பொழுது வளர்ந்து விட்டதால் இளைஞனாக தைரியமாக வெளியில் வந்து உங்கள் பதிவுகளை தொடர்ந்து எழுதி வெற்றியடையவேண்டும் என வாழ்த்துகிறேன்.

2008ல் ஒரு புதிய சகாப்தம் உருவாகட்டும்.//
நன்றி மஞ்சூர். நான் நானாகவே வந்து விட்டேன். இதற்கு தான் பொடியனுக்கு விடை கொந்த்தேன். இப்போ தெரியுதா நான் யார்னு? :)
குழுமங்கள் பக்கம் வர நேரம் கிடைக்கவில்லை. சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டது உங்களை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

:-)))))))))))//

ரொம்ப சந்தோஷபடாதிங்க மாம்ஸ்.. :)
உங்கள எல்லாம் நிம்மதியா விட்றுவேனாக்கும்..

Sanjai Gandhi said...

//குசும்பன் said...

பதிவர் என்றால் அவர் ஒரு முறையாவது விடைபெறுகிறேன் போஸ்ட் போட்டு இருக்கனும்:))) அதை நிறைவேற்றியதன் மூலம் இன்று நீங்கள் முழுபிளாக்கர் ஆகும் தகுதியை அடைந்து விட்டீர்கள் பொடியன்:))))

நான் எப்படி விடைபெருகிறேன் போஸ்ட் போட்டு இருக்கேன் என்று பாரும்!!!!

http://kusumbuonly.blogspot.com/2007/07/blog-post_20.html//

ஹாஹா.. கலக்கிட்டிங்க மாம்ஸ்.. எனக்கு இன்னும் அதுக்கு விடை தெரியல மாம்ஸ்.. :)

பொடியனுக்குத் தான் விடை கொடுத்தேன். வலையுலகிற்கு இல்லை. :))

ரசிகன் said...

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே !! ( பொடியன் என்ற சஞ்செய்). தொடர்க பதிவுகளை முகமூடி இல்லாமல் - வாழ்க

Sanjai Gandhi said...

@ ரசிகன் : :P

------------

//cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே !! ( பொடியன் என்ற சஞ்செய்). தொடர்க பதிவுகளை முகமூடி இல்லாமல் - வாழ்க// உங்கள் ஆசிர்வாதம் தாத்தா.. :)

( சஞ்செய் இல்ல தாத்தா.. சஞ்சய். ;)

pudugaithendral said...

podiyan uncle,

oru nimisham bayanthuttenn.

Sanjai Gandhi said...

//புதுகைத் தென்றல் said...

podiyan uncle,

oru nimisham bayanthuttenn.
//
எங்க திரும்பி வந்துடுவேனோ அப்டினு தான பயந்திங்க.. ஹிஹி.. நீங்க பயந்த மாதிரியே வந்துட்டேன்ல.. :))

Tamiler This Week