இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSaturday, 22 December 2007
"போட்டி Vs விருதுகள் !! - என் சிறு கருத்து"
"போட்டி Vs விருதுகள் !! - என் சிறு கருத்து" என்று செல்லா மாமா ஒரு பதிவு போட்டிருக்கார்.. எபப்டியும் இந்த தலைப்பு ஒரு ரவுண்டு வரும் என்ற நம்பிக்கையில் இப்போது சுடரை 2வது ஆளாக நான் பிடித்திருக்கிறேன். :)
நானும் என் சிறு கருத்தை சொல்லிவிடுகிறேன். :)
போட்டி நடத்தறது எந்த தப்பும் இல்ல. ப்ரச்சனையே அது நடக்கும் இடம் , சூழல், நடத்தும் விதம்... இதுல தான் இருக்கு. இப்போ தமிழ் பதிவுலகத்துல பலவிதமான போட்டிகள் நடந்தாலும் தமிழ்மணம் நடத்தப் போகும் சிறந்த வலைபதூவிற்கான விருது பற்றித் தான் பல விதமான கருத்துகள் வெளிவருகிறது. இந்த விருது வழங்குவதை பலரும் ஆதரித்தாலும் அதை எதிர்ப்பவர்களை செல்லா மாமா போன்றவர்கள் தான் குறை சொல்கிறார்கள்.
தமிழ் பதிவு உலகத்தில் பல மோசமான யுத்தங்கள் இப்போது தான் முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழ்மணத்தின் சிறந்த வலைபதிவு விருதுக்கு பிறகு வெண்டுமென்றே சிலர் புறக்கணிக்கப் பட்டதாகக் கூறி அந்த பழய யுத்தம் மீண்டும் துவங்கப் படலாம். மீண்டும் இரு அணிகள் உருவாகலாம். இப்போது இருக்கும் அமைதி கெட வாய்ப்பு உள்ளது.
சிலர் தமிழ்மணத்தை விட்டு வெளியேறுவார்கள். சிலர் தமிழ்மணம் மற்றும் சில தனி நபர்கள் பற்றி அவதூறாக ஏதேனும் பேசி தமிழ்மணத்தை விட்டு வெளியேற்றப் படலாம்.
அதேசமயம் இந்த விருதுக்கு பல பதிவர்களும் ஆதரவு தெரிவிப்பதால் இதை கை விடவும் கூடாது. அதற்கு எனக்கு தெரிந்த ஒரு சிறு யோசனை..
.... இந்த விருது விஷயத்தில் தமிழ்மணத்தை முழுமையாக நம்புவதற்கு அடையாளமாக " தமிழ்மணம் வலைப்பதிவு விருது 2007" லோகோவை தங்கள் பதிவுகளில் இடம்பெறச் செய்ய வைக்கலாம். அந்த லோகோவை பயன்படுத்தி இருக்கும் வலைப்பூக்களை மட்டும் விருதுக்கு பரிசீலிக்கலாம். இதன் மூலம் சர்ச்சைகளை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.
ஓசை செல்லா அங்கிளின் பதிவிலிருந்து,
"போட்டியாளர்களுக்கு நல்ல உதாரணம்: எங்கள் PiT போட்டியாளர்கள்... நேற்று முடிவு அறிவிக்கப்பட்டதும் பங்கேற்ற அனைவரும் வெற்றியாளர்களைப் பாராட்டும் இலகுவான மனநிலை!" "
ரொம்ப கரெக்ட் அங்கிள். PIT போட்டியில் பங்கேற்க விரும்பியவர்கள் தங்கள் விருப்பத்தை போட்டி அறிவிப்புக்கான பதிவில் வந்து பின்னூட்டமாக சொல்லி இருந்தோம். அதாவது PIT போட்டிக்கான நடுவர்கள் மீதும் அந்த போட்டி மீதும் நம்பிக்கை வைத்து அதில் கலந்துக் கொண்டதை அறிவித்தோம். அதனால் தான் முடிவு தெரிந்ததும் வெற்றியாளர்களை மனதார வாழ்த்தினோம். நடுவர்களையும் பாராட்டினோம்.
இதுவே , போட்டி தலைப்புக்கு ஏற்ற படங்களை PIT நடுவர்களே தேடிப் பிடித்து விருது கொடுத்திருந்தால் இந்நேரம் ரணகளம் ஆக்கியிருக்க மாட்டோமா? :P. ஆகவே மக்களே... தமிழ்மணம் வலப்பதிவு விருது 2007 க்கு பதிவுகளை பரிசீலிப்பதற்கு முன் இதில் விருப்பம் உள்ளவர்களின் பட்டியலை முதலில் தயார் பண்ண வேண்டும். என்ன நாஞ்சொல்றது? :-))
4 Comments:
மாமா உங்க ஸ்டார்டிங் எல்லாம் நல்லா தான் இருக்கு, நீங்க சொல்லறது சரின்னு தோணுது, உங்களுக்கு ஆதரவு கொடுக்கலாம்னு தோணுது எதுக்கும் எங்க குட்டி டீம் கிட்ட பேசிட்டு வந்து ஆதரவு அறிவிக்கறேன்.
சும்மா டமாசுக்கு அப்ப அப்ப எங்க இருந்தாவது தெரியாம ஆப்ப நானே தேடி போய் வெச்சிக்கறேன் அதான் கொஞ்சம் அடக்கி வாசிக்கறேன்.
ச்ச.. உனக்கு போய் ஆப்பு வைப்பேனா நான்.. நீ நம்ம சங்கத்து சிங்கம்டா.. :P
நல்ல ஐடியா தான்.
//தமிழ்மணம் வலப்பதிவு விருது 2007 க்கு பதிவுகளை பரிசீலிப்பதற்கு முன் இதில் விருப்பம் உள்ளவர்களின் பட்டியலை முதலில் தயார் பண்ண வேண்டும். என்ன நாஞ்சொல்றது? :-))//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய் :)
Post a Comment