இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 29 December, 2007

நச்சுன்னு 1000 கள்ள வோட்டு, வாங்க வாங்க... குட்டீஸ் டீல்,நம்ம சர்வேசன் மாமா நச்சுன்னு ஒரு கதை போட்டி வெச்சிருக்காரு.ஏதோ ஐந்து ஆறு கதைதான் போட்டிக்கு வரும்ன்னு நெனச்ச சர்வேசன் மாமா 57 கதை வந்ததுல அரண்டு போயிட்டாரு. முதல் பரிசுக்குண்டான கதையை தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி தேர்தல் அறிவித்திருக்கிறார்.

இங்குதான் குட்டீஸ் நமக்கு முக்கியத்துவம் வருகிறது.இந்த தேர்தலில் குட்டீஸ் நம்ம வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.நாமளே குட்டீஸ் நமக்கு கதைல்லாம் புரியவா போவுது அதுனால நம்ம வோட்டுக்களை வைத்து நாம் நினைக்கும் விஷயங்களை சாதித்துக்கொள்வோம்.

நம் பலம் பாருங்க. நம்மகிட்டயே மொத்தம் 11 வோட்டு இருக்கு.இது இல்லாம நாம புடிக்கும் அடத்துல நம்ம அப்பா அம்மா வோட்டும் நாம சொல்றவங்களுக்கே போட வைச்சுட்டாப்போச்சு அதுல ஒரு 20 தேறும். அப்புறம் நம்ம இம்சை மாமா ஸ்டூடண்ட்ஸ்க்கு இம்சை மாமா மேல ரொம்ப மரியாதையாமா. இம்சை மாமாக்கு நம்ம சங்கத்து சிங்கம் பவன் மேல பயம் கலந்த மரியாதையாமா. சோ நம்ம சிங்கம் பவன் சொன்னா இம்சை மாமா ஸ்டூடண்ட்ஸ் 600 பேருக்கும் அவங்க மெயில் ஐடி ய வெச்சு வோட்டு போட தயாரா இருக்காங்க.(அவங்களுக்குள்ளாம் தமிழே தெரியாதாம் அதனாலென்ன? ) நந்து மாமா கதை எழுதுன மேட்டர் தெரிஞ்சு அவரு ப்ரண்ட்ஸ் சொந்தம் பந்தம்லாம் வோட்டுப்போட ரெடியா இருக்காங்க

அப்படி இப்படின்னு ஒரு 1000 வோட்டு ரெடியா இருக்கு. பிசாத்து 45அல்லது50 வோட்டுக்கள்தான் மொத்தத்துக்கே விழுதாம். குட்டீஸ் நாங்க கைய காட்டுனா 1000 வோட்டும் ஒருத்தருக்கே.

வோட்டு தேவைபடரவங்க எங்க டீல் என்னன்னு தெரிய எங்க குட்டீஸ்கார்னர் மெயில் ஐடிக்கு தனியா வந்து பேசவும். பொதுவில் பேசினால் தலைமை தேர்தல் சர்வேஷனர் தேர்தலை நிறுத்தும் அபாயம் இருக்கிறது.

இது ஒரு அரிய வாய்ப்பு குட்டீஸை அணுகி பயனடைவீர்

8 Comments:

said...

ஆகா ஏன் ஏன் ஏன் இந்த கொலை வெறி... ஆனாலும் டீல் நல்லாதான் இருக்கு....நான் ரெடி...

said...

அடப்பாவமே, இது குட்டீஸ் கூட்டம் மாதிரி தெரீலியே.
வெவகாரமா இல்ல இருக்கு.
மாமான்னு வேற சொல்றீங்க.

ஒண்ணும் புரியல :)

said...

பொடியா உங்களுக்கும் நந்துவுக்கும் என்னா டீலிங்? நீங்க ரெண்டு பேரும் ஒன்னா?குழப்பமா இருக்கே!!!:((((((((

said...

///வோட்டு தேவைபடரவங்க எங்க டீல் என்னன்னு தெரிய எங்க குட்டீஸ்கார்னர் மெயில் ஐடிக்கு தனியா வந்து பேசவும். ///

எல்லா குட்டீஸ்ங்களும் குட்டி பாப்பா வேண்டும் குட்டி தம்பி வேண்டும் என்று கேட்பாங்க இதுங்க என்னான்னா எங்களுக்கு ஒரு "குட்டி" சித்தி வேண்டும் என்று கேட்குதுங்கோ!!! யாரும் டீல் செஞ்சா சிறைசாலைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால் ஜாக்கிரதை!!!

said...

//Baby Pavan said...

ஆகா ஏன் ஏன் ஏன் இந்த கொலை வெறி... ஆனாலும் டீல் நல்லாதான் இருக்கு....நான் ரெடி...//

எல்லாம் நம்ம சங்கத்து வளர்ச்சி நிவாரண நிதிக்குத் தான் பவன் :P

said...

//Blogger SurveySan said...

அடப்பாவமே, இது குட்டீஸ் கூட்டம் மாதிரி தெரீலியே.
வெவகாரமா இல்ல இருக்கு.
மாமான்னு வேற சொல்றீங்க.

ஒண்ணும் புரியல :)//

ஊருக்கே புரிஞ்சாலும் உங்களுக்கு மட்டும் புரியக் கூடாது சர்வே அங்கிள். நான் பிஸியா இருக்கிற சமயம் பார்த்து ஒரு போட்டி அறிவிச்சி, அதுல நான் கலந்துக்கிறதுக்கு முன்னாடியே முடிச்சிட்டிங்க இல்ல? அதான் என்னால முடிஞ்சது இங்க பண்ணிட்டிறுக்கேன். :P

said...

//குசும்பன் said...

பொடியா உங்களுக்கும் நந்துவுக்கும் என்னா டீலிங்? நீங்க ரெண்டு பேரும் ஒன்னா?குழப்பமா இருக்கே!!!:((((((((//

ச்சீ..ச்சீ.. நான் ரொம்ப நல்ல பையன் அங்கிள். அவர் கூட எல்லாம் சேர மாட்டேன்:-)).உங்க சமையல நீங்களே சாப்பிடறது அவ்ளோ நல்லதில்ல குசும்பன் அங்கிள். அதான் இப்படி ரொம்ப குழம்பி போறிங்க.. :P

said...

//குசும்பன் said...

///வோட்டு தேவைபடரவங்க எங்க டீல் என்னன்னு தெரிய எங்க குட்டீஸ்கார்னர் மெயில் ஐடிக்கு தனியா வந்து பேசவும். ///

எல்லா குட்டீஸ்ங்களும் குட்டி பாப்பா வேண்டும் குட்டி தம்பி வேண்டும் என்று கேட்பாங்க இதுங்க என்னான்னா எங்களுக்கு ஒரு "குட்டி" சித்தி வேண்டும் என்று கேட்குதுங்கோ!!! யாரும் டீல் செஞ்சா சிறைசாலைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால் ஜாக்கிரதை!!//

நல்லவேளை... குசும்பன் அங்கிள் குட்டி சித்தி என்று சொன்னிங்க.. உங்களுக்கு ஸிஸ்டர் செண்ட்டிமெண்ட் ரொம்ப ஜாஸ்த்தியோ. இதுவே எங்க சிவா மாமாவா இருந்தா குட்டி அத்தைனு சொல்லி அவர் மனசுல இருக்கிறத வெளிப் படுத்தி இருப்பார். :P

Tamiler This Week