இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 6 December, 2007

பபாசங்கம் போட்டி - நடந்தது என்ன?சென்ற மாதம் பபாசங்கத்து தங்கங்கள்( நன்றி : G3 ஆண்ட்டி ) ஒரு போட்டியை அறிவித்து இருந்தார்கள். ஆனால் பாவம் யாருமே அந்த போட்டியில் கலந்துக் கொள்ள முனனும் வரவில்லை... பின்னும் வரவில்லை. யாராவது ஒருவராவது கலந்து கொள்வாரா என எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சங்கத்து தங்கங்கள் ஆள் வைத்து( அடியேன் உட்பட) அந்த போட்டி அறிவிப்பு பதிவுக்கு பின்னூட்டம் போட்டு 27ம் தேதி வரை இழு இழு என்று இழுத்து அந்த பதிவு தமிழ்மணத்தில் தெரிந்துக் கொண்டே இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள். அப்படியும் யாரும் போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை.

பொதுவாக ஒரு போட்டியை அறிவிக்கும் நிறுவனம் மற்றும் அதை சார்ந்தவர்கள் அந்த போட்டியில் கலந்துக் கொள்ளக் கூடாது என்ற விதியையும் மீறி, வேறு வழியே இல்லாமல் சங்கத்து உருப்பினரே ஒரு பதிவை (என்ன கொடுமை சார் இது??) போட வேண்டிய நிலைக்கு வர வேண்டியதாகிவிட்டது. அதற்கடுத்தும் யாரும் போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை. இதை கண்டு வெறுத்து போன மை ஃப்ரண்ட் அத்தை "சாவடிக்கிறாங்களே என்னைய!!!!!" என்று புலம்பி " போட்டி முடிய இன்னும் நாளே நாள்.. இன்னும் தாமதம் ஆகுல.. வாங்க.. " என்று கெஞ்சும் நிலைக்கு தள்ளப் பட்டது அனைவரும் அறிந்ததே. அப்படியும் யாரும் வரவில்லை.

இப்படி ஒரு அவலநிலைக்கு ஆளாகி விட்டதை எண்னி மனம் நொந்து போன பபாச தங்கங்கள் என்ன கொடுமை சார் இது என்று தலையிலடித்துக் கொண்டு யோசித்து பின் ஏகமனதாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது சங்கத்து செயர்குழுவை கூட்டுவதென்று. இந்த கொடுமையான விஷயம் வெளி உலகத்திற்கு தெரியும் முன் எதாவது செய்தாக வேண்டும் என்று விவாதித்ததில் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

"என்ன கொடுமை சார் இது?" என்று யாரவது தங்கள் பதிவில் தப்பி தவறி சொல்லி இருந்தால் அந்த பதிவை தாங்களே முன்சென்று அதை போட்டிக்கு எடுத்துக் கொண்டு அந்த பதிவரையே வெற்றியாளராக அறிவித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். எப்படியும் வெற்றியாளர் என்று அறிவிப்பதாக சொன்னால் அந்த பதிவரும் தான் அந்த போட்டியில் கலந்து கொண்டதாக வெளியே பீற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இந்த அரிய முடிவுக்கு வந்தார்கள்.

பிறகு வலை வீசித் தேடியதில் கண்ணில் பட்டது தான் நம்ம குசும்பன் அங்கிளின் "பெண்களை குட்டினால் என்ன ஆகும்? அது தப்பா?"பதிவு. இந்த பதிவுக்கும் போட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். இந்த பதிவின் கடைசியில் எதேச்சையாக " என்ன கொடுமை சார் இது" என்ற டயலாகை சொல்லி இருப்பார். வேறு வழியே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த சங்க தங்கங்களுக்கு இது சொக்கத் தங்கமாய் தெரிய உடனே குசும்பன் அங்கிளை தொடர்பு கொண்டார்கள்.

இது தான் சந்தர்ப்பம் என நினைத்த குசும்பன, இந்த உள்குத்திற்கு சம்மதிக்க வேண்டுமெனில் சில நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஏகப் பட்ட நிபந்தனைகளை விதித்தார். பேச்சு வார்த்தை விரைவில் முடிந்து ஒரு சுபமான முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் "போட்டிக்கு வந்த படைப்புகளில் பரிசு பெற்றவங்கள தேர்ந்‍தெடுத்து இன்னும் ரெண்டு நாள்ள அறிவிப்பு வெளியிடறோம்." என்று அவசரமாக டிசம்பர் 1 அன்று நன்றி சொல்லி அறிவிப்பெல்லாம் கொடுத்து அமர்க்களப் படுத்தினார்கள்.ஆனால் பேச்சுவார்த்டை நீண்டு கொண்டே போனதில் டிசம்பர் 6ம் தேதி தான் உடன்பாடு கையெழுத்தானது. இறுதி செய்யப்பட்ட நிபந்தனைகள் வருமாறு :-

1. பரிசு வழங்குவதற்கு பிரமாண்டமான விழா ஏற்பாடு செய்ய வேண்டும்.
2. தன் தலைவி ஸ்ரேயா கோசல் கைய்யால் விருது வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் வரும் கலக்கல் மன்னர்கள் மாதிரி கோட் அணிய வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.


இதில் முதல் நிபந்தனை பற்றி கவலை இல்லை. இருகவே இருக்கு Youtube. 3வது நிபந்தனை பற்றியும் கவலை இல்லை. குசும்பனே போட்டோஷாப்பில் கோட் மாட்டிக்கொள்வார். 2வது நிபந்தனை பற்றி தான் சங்க தங்கங்களுக்கு பெரும் கலக்கம். இங்கும் குசும்பனே கை கொடுத்துவிடார். இதை அமுக்கி இதில் 2வது படத்தையும் , இதை அமுக்கி இதில் ஸ்ரேயா போட்டியாளரை அறிவிப்பதாக பாவ்லா காட்டும் படத்தையும் பாருங்க.

ஸோ குசும்பன் புண்ணியத்தில் சங்கத்து சிங்கங்கள் ஆறு நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நிம்மதி பெருமூச்சி விட்டுக் கொண்டார்கள்.

45 Comments:

said...

:-))))))))))
:-)))))))))))))))))))))))))))

said...

//மங்களூர் சிவா said...

:-))))))))))
:-)))))))))))))))))))))))))))
//

வாங்க அங்கிள்.. இது தெரியாம எல்லாரும் போட்டி நடத்துனவங்களையும் குசும்பன் அங்கிளையும் பாராட்டிட்டு இருக்காங்க. :((

said...

எங்க ஆண்ட்டீங்ககிட்ட வாங்கிகட்டிக்க தயாரா இருக்கீங்க்க போல? சொ.செ.சூ தான்

said...

//நிலா said...

எங்க ஆண்ட்டீங்ககிட்ட வாங்கிகட்டிக்க தயாரா இருக்கீங்க்க போல? சொ.செ.சூ தான//

உண்மையை உலகத்துக்கு சொல்லவேண்டியது நம்ம கடமை கண்ணம்மா :)

said...

அடடே இவ்ளோ விசயம் நடந்து இருக்கா, என்னாது இது குசும்பு மாம்ஸ் ஷ்ரேயா'ன்ன உடனே இப்படி கவுந்திடீங்களே...

said...

இதில வேற உங்கள அடுத்த முதல்வர் ஆக்கியே தீருவோம்னு நாங்க சபதம் போட்டு இருக்கோம்... இப்ப அத கலைச்சிட்டி நிலா பாப்பாவ முதல்வர் ஆக்கனும் போல இருக்கே

said...

//Baby Pavan said...

அடடே இவ்ளோ விசயம் நடந்து இருக்கா, என்னாது இது குசும்பு மாம்ஸ் ஷ்ரேயா'ன்ன உடனே இப்படி கவுந்திடீங்களே..//
நல்லவனே... அந்த ரசிகர் மன்றத்துல சேர அப்ளிகேஷன் போட்டவன் தான நீயும்? :P

said...

//Baby Pavan said...

இதில வேற உங்கள அடுத்த முதல்வர் ஆக்கியே தீருவோம்னு நாங்க சபதம் போட்டு இருக்கோம்... இப்ப அத கலைச்சிட்டி நிலா பாப்பாவ முதல்வர் ஆக்கனும் போல இருக்கே//
ஏன் ராசா உனக்கு இந்த கொல வெறி? தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஒரு ஜெயலலிதா போட்தும்பா.. இவள CM ஆக்கினா நாடு தாங்குமா? :(

said...

பொடி!
தவுசன் தான் இருக்கட்டுமே!

ஸ்ரேயா கையால பிரைஸ் வாங்குன எங்க நற்பனி(ணி) மன்ற தலைவர நீங்கள் விமரிச்சித்திருப்பது ஒவரோ ஒவர்...!

said...

ஏன் இந்த பிரச்சனைய அடிப்படையா வைச்சு, நாங்க மன்றத்து சார்பா உங்க பிளாக்க மூன்று நாட்களுக்கு புறக்கணிக்ககூடாது?

said...

//ஆயில்யன் said...

பொடி!
தவுசன் தான் இருக்கட்டுமே!

ஸ்ரேயா கையால பிரைஸ் வாங்குன எங்க நற்பனி(ணி) மன்ற தலைவர நீங்கள் விமரிச்சித்திருப்பது ஒவரோ ஒவர்...! //

அப்போ பபாசங்கத்த விமர்சனம் பண்ணா பரவால்லயா? சங்க தங்கங்கள் கவனிக்கவும் :). நான் யாரையும் விமர்சனம் எல்லாம் பண்ணல.. எனக்கு தெரிஞ்ச உண்மையை சொன்னேன்.. அது தப்பா அங்கிள்? :(

said...

//ஆயில்யன் said...

ஏன் இந்த பிரச்சனைய அடிப்படையா வைச்சு, நாங்க மன்றத்து சார்பா உங்க பிளாக்க மூன்று நாட்களுக்கு புறக்கணிக்ககூடாது?//

3 நாட்களுக்கு தான.. எனக்கும் புதுசா பதிவு போட ஒன்னும் மேட்டர் இல்ல.. ஸோ.. நீங்க தாரளமா உங்க ஆசைய நிறைவேத்திக்கலாம் :-))

அனுசுயா said...

அட பாவி. எல்லாத்தையும் இப்படி புட்டு புட்டு வச்சிட்டயேடா. :(

மங்களூர் சிவா said...

புட்டா? எங்கே எங்கே?

கவிதாயினி காயத்ரி said...

நான் கொஞ்ச நாட்களாக ப்ளாக் பக்கம் வராம இருந்ததற்கு காரணம் இந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றதால் தான் என்பதை நல்லவேளையாக கண்டுபிடிக்கவில்லை. :))))))))))

G3 said...

இதெல்லாம் பொடியனுக்கு சொன்னது குட்டீஸ்கார்னர்ல இருக்கிற நம்ம ஆளு மை ஃபிரண்ட் தானாம்.

.:: மை ஃப்ரண்ட் ::; said...

G3யை எதிர்த்து குட்டீஸ்கார்னரில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பபாசங்கத்தில் இருந்து விலகவும் முடிவெடுத்திருக்கிறேன்.

குசும்பனால் கலாய்க்கப் பட்டோர் சங்கம் said...

ஆகா ஆகா அருமை.

யூட்யூப் said...

என்ன வச்சு காமிடி கீமிடி பன்னலயே :(

அமுக தலைமை நிலையம் said...

கடைசியில எங்க ஆள் மேலையே கை வச்சுட்டயே பொடி பயலே.
:( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

said...

// அனுசுயா said...

அட பாவி. எல்லாத்தையும் இப்படி புட்டு புட்டு வச்சிட்டயேடா. :( //

எதோ என்னால முடிஞ்சது.. :P

said...

// மங்களூர் சிவா said...

புட்டா? எங்கே எங்கே?//

மாமா.. நீங்க திருந்தவே மாட்டிங்களா? சீக்கிரம் ஒரு கால் கட்டு போட வேண்டியது தான். ரொம்ப காஞ்சி போய் இருக்கிங்க. :D

said...

// கவிதாயினி காயத்ரி said...

நான் கொஞ்ச நாட்களாக ப்ளாக் பக்கம் வராம இருந்ததற்கு காரணம் இந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றதால் தான் என்பதை நல்லவேளையாக கண்டுபிடிக்கவில்லை. :))))))))))//

ஹிஹி..

said...

// G3 said...

இதெல்லாம் பொடியனுக்கு சொன்னது குட்டீஸ்கார்னர்ல இருக்கிற நம்ம ஆளு மை ஃபிரண்ட் தானாம்.//

எங்க சங்கத்த ஒழிக்க பாக்கறிங்களா? நடக்காது. :)

said...

// .:: மை ஃப்ரண்ட் ::; said...

G3யை எதிர்த்து குட்டீஸ்கார்னரில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பபாசங்கத்தில் இருந்து விலகவும் முடிவெடுத்திருக்கிறேன்//

வெரி குட்.. :P

said...

// குசும்பனால் கலாய்க்கப் பட்டோர் சங்கம் said...

ஆகா ஆகா அருமை.//

ஓ.. இது வேறயா? :)))))

said...

// யூட்யூப் said...

என்ன வச்சு காமிடி கீமிடி பன்னலயே :( //

இப்போ Youtube கூட கமெண்ட் போட ஆரம்பிச்சிடிச்சா? :(

said...

// Delete
அமுக தலைமை நிலையம் said...

கடைசியில எங்க ஆள் மேலையே கை வச்சுட்டயே பொடி பயலே.
:( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். //
கடைசினு யார் சொன்னது? :)

said...

///3. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் வரும் கலக்கல் மன்னர்கள் மாதிரி கோட் அணிய வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.///

:))) பொடியன் மிகவும் ரசித்து சிரித்தேன்.

said...

ஆயில்யன் said...
பொடி!
தவுசன் தான் இருக்கட்டுமே!

ஸ்ரேயா கையால பிரைஸ் வாங்குன எங்க நற்பனி(ணி) மன்ற தலைவர நீங்கள் விமரிச்சித்திருப்பது ஒவரோ ஒவர்...!////

இதுல என்ன இருக்கு டேக் இட் ஈசி கத்தார் கழக நிர்வாகியே!:)))

said...

//குசும்பன் said...

///3. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் வரும் கலக்கல் மன்னர்கள் மாதிரி கோட் அணிய வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.///

:))) பொடியன் மிகவும் ரசித்து சிரித்தேன்.//

நன்றி அங்கிள்..எல்லாம் தங்கள் ஆசிர்வாதம் குருவே.. :)

said...

//குசும்பன் said...

ஆயில்யன் said...
பொடி!
தவுசன் தான் இருக்கட்டுமே!

ஸ்ரேயா கையால பிரைஸ் வாங்குன எங்க நற்பனி(ணி) மன்ற தலைவர நீங்கள் விமரிச்சித்திருப்பது ஒவரோ ஒவர்...!////

இதுல என்ன இருக்கு டேக் இட் ஈசி கத்தார் கழக நிர்வாகியே!:)))//

இங்க.. இங்க தான் தல நீங்க நிக்கறிங்க.. :)என் கலாய்ததலில் எப்போதுமே உள்நோக்கம் இருக்காது.. :)

said...

//இதுல என்ன இருக்கு டேக் இட் ஈசி கத்தார் கழக நிர்வாகியே!:)))//
தலைவா நீங்க ஸ்ரேயா ஜூரத்தில ரொம்ப பாதிக்கப்பட்டிர்ருந்த சமயத்தில நான் மன்ற நடவடிக்கைகளில் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்திருந்தேனே பார்க்கலையா?

said...

பொடியா... விரிவான புலனாய்வு ரிப்போர்ட்!

இத்தன பேர கலாய்க்கிற குசும்பரு, ஷ்ரேயான்னதும் கவுந்துட்டாரே??

த்சு..த்சு...

said...

//ஆயில்யன் said...

//இதுல என்ன இருக்கு டேக் இட் ஈசி கத்தார் கழக நிர்வாகியே!:)))//
தலைவா நீங்க ஸ்ரேயா ஜூரத்தில ரொம்ப பாதிக்கப்பட்டிர்ருந்த சமயத்தில நான் மன்ற நடவடிக்கைகளில் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்திருந்தேனே பார்க்கலையா?//

ச்ச.. மனதில் தோன்றும் சில விஷயங்கள நாகரிகம் கருதி வெளியில சொல்ல முடியறதில்லையேனு நெனைக்கும் போது துக்கம் தொண்டையை அடைக்கிது ஆயில்யன் மாமா. :P
சொன்னா நம்மள கெட்ட பையன்னு சொல்றாங்க.. என்ன கொடுமை சிவா :P மாமா இது? :-))

said...

//தஞ்சாவூரான் said...

பொடியா... விரிவான புலனாய்வு ரிப்போர்ட்!

இத்தன பேர கலாய்க்கிற குசும்பரு, ஷ்ரேயான்னதும் கவுந்துட்டாரே??

த்சு..த்சு..//

வாங்க அங்கிள். தாய்லாந்து போய்ட்டு வந்ததும் உங்க " தமிழ்நாட்டை அவமதிக்கும் கிளிண்டன்" பதிவுக்கு எதிர் பதிவு போட நெனைச்சேன். அத இன்னும் செய்யல. அங்க சர்ச்ல கூட மன்னரோட படம் வச்சாகனுமாம். எங்கு திரும்பினாலும் அவர் கட் அவுட் தான். நாங்கள் போன சமயத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த்து. நம்ம ஊர் போல தான் வேனில் மக்க்ளை ஏற்றி கொண்டு வாழ்க கோஷம் போட்டு கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.:)

said...

பொடியன் அங்கிள்,

உங்களை குழந்தைன்னு சொல்லலைன்னா எனக்கு ஆப்பு வைப்பேன்னு சொன்னீங்களே.. அதான் இதா?

பொடியனுக்கு ஒரு ஆப்பு ரெடி பண்ணனும் போல இருக்கே? இருங்க வேலையை முடிச்சுட்டு வர்றேன்.

அட.. எங்க சங்கத்து போட்டி வின்னர், வருங்கால முதல்வர் எனக்கு பதீலா உங்களுக்கு ஆப்பு வைப்பார். :-))))))

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

பொடியன் அங்கிள்,

உங்களை குழந்தைன்னு சொல்லலைன்னா எனக்கு ஆப்பு வைப்பேன்னு சொன்னீங்களே.. அதான் இதா?//

சொல்லவே இல்ல :(

//பொடியனுக்கு ஒரு ஆப்பு ரெடி பண்ணனும் போல இருக்கே? இருங்க வேலையை முடிச்சுட்டு வர்றேன்.//

வேலையா.. ச்சும்மா காமெடி பண்ணக் கூடாது.. :P

//அட.. எங்க சங்கத்து போட்டி வின்னர், வருங்கால முதல்வர் எனக்கு பதீலா உங்களுக்கு ஆப்பு வைப்பார். :-)))))//

நோ..நோ.. இப்படி எல்லாம் போட்டு கொடுக்கப் படாது :((((

said...

//வாங்க அங்கிள். தாய்லாந்து போய்ட்டு வந்ததும் உங்க " தமிழ்நாட்டை அவமதிக்கும் கிளிண்டன்" பதிவுக்கு எதிர் பதிவு போட நெனைச்சேன். அத இன்னும் செய்யல. அங்க சர்ச்ல கூட மன்னரோட படம் வச்சாகனுமாம். எங்கு திரும்பினாலும் அவர் கட் அவுட் தான்.//

பொடியனுக்கு தாய்லாந்துல என்ன வேல? சரி ... சரி, அது எனக்கு தேவையில்லாத கேள்வி :)

மன்னர் பூமிபோல் தாய்லாந்துல தெய்வம் போல மதிக்கப் படுகிறார். மக்களுக்கு எப்பவுமே மன்னர் குடும்பத்துமேல் மிகுந்த மரியாதை உண்டு. ஆனா, கட் அவுட் வக்கிற அளவுக்குப் போனா கொஞ்சம் ஓவர்தான்!

கொஞ்ச வருஷத்துக்கு முன்னே, தாய் பிரதமர் இந்தியாவுக்கு வந்தபோதே நெனச்சேன் :)

said...

// 3வது நிபந்தனை பற்றியும் கவலை இல்லை. குசும்பனே போட்டோஷாப்பில் கோட் மாட்டிக்கொள்வார். 3வது நிபந்தனை பற்றியும் கவலை இல்லை. குசும்பனே போட்டோஷாப்பில் கோட் மாட்டிக்கொள்வார். ///

ஹா..ஹா.. பொடியன் பண்ணற வேலையெல்லாம் ரொம்பப பெரிசாவே இருக்கு.. சூப்பரேய்ய்ய்ய்ய்ய்....குசும்பர் எதிர்காலத்துல போட்டோஷாப் பாடம் நடத்துறத கூட தொலைநோக்கு(?) பார்வையோட கலாய்ச்சிருக்கிற தளபதி பொடியருக்கு வாழ்த்துக்கள்.

said...

//Blogger ரசிகன் said...

// 3வது நிபந்தனை பற்றியும் கவலை இல்லை. குசும்பனே போட்டோஷாப்பில் கோட் மாட்டிக்கொள்வார். 3வது நிபந்தனை பற்றியும் கவலை இல்லை. குசும்பனே போட்டோஷாப்பில் கோட் மாட்டிக்கொள்வார். ///

ஹா..ஹா.. பொடியன் பண்ணற வேலையெல்லாம் ரொம்பப பெரிசாவே இருக்கு.. சூப்பரேய்ய்ய்ய்ய்ய்....குசும்பர் எதிர்காலத்துல போட்டோஷாப் பாடம் நடத்துறத கூட தொலைநோக்கு(?) பார்வையோட கலாய்ச்சிருக்கிற தளபதி பொடியருக்கு வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி மன்னா...எல்லாம் உங்க ஒத்துழைப்பில் தானே மன்னா.. :P

said...

வேலை பொழப்புன்றதே இல்லையா?

said...

// இம்சை அரசி said...

வேலை பொழப்புன்றதே இல்லையா?//

இது கோவமான கேள்வியா? :(

said...

// SanJai said...

// இம்சை அரசி said...

வேலை பொழப்புன்றதே இல்லையா?//

இது கோவமான கேள்வியா? :(
//

பாத்தா எப்படி தெரியுது???

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘

Tamiler This Week