இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSaturday, 29 December 2007
ந.ஒ.க...ஐடியா நெ.911
சர்வேஷன் அங்கிள் நான் பிசியாக இருக்கும் நேரத்தில் ந.ஒ.க போட்டி நடத்தி முடித்துவிட்டார். ஆனாலும் என் பங்கிர்கு ஒரு கதை எழுதி விட்டேன்.
" இந்த கதையில் வரும் கதா பாத்திரங்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் மனதில் வைத்தோ புண்படுத்தும் நோக்கத்திலோ எழுதப் படவில்லை"
அதிபர் ஓவர்டோஷ் அலுவலகத்தில் இருந்து AIC இயக்குனர் வாட்டர் கேஸிற்கு அழைப்பு வந்தது. உடனே கேஸ், அதிபர் அலுவலகம் புறப்பட்டார்.அங்கு அதிபரும் வெளியுறவு மந்திரி மோனலிஸா ஐஸும் முக்கியமான ஆலோசனையில் இருந்தார்கள்.அங்கு சில புலனாய்வு உயர் அதிகாரிகளும் தெற்காசிய விவகாரங்களுக்கான் அரசாங்க உயர் அதிகாரிகளும் உடனிருந்தார்கள். அதிபரின் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது. மற்றவர்களும் பரபரப்பாக இருந்தார்கள்.
அதிபர்:"உங்கள எல்லாம் எதுக்கு வர சொல்லி இருக்கேனு தெரியுமா?"
மந்திரி மோனலிஸா ஐஸ் எல்லாரயும் ஒரு பார்வை பார்த்தார்.
AIC இயக்குனர் கேஸ் : மிக முக்கியமான விஷயத்திற்காக என்பது மட்டும் புரிகிறது.
அதிபர்: போராக் விஷயத்தில் உங்க எல்லார் பேச்சயும் கேட்டு எனக்கு பெரிய தலை வலி வந்தது தான் மிச்சம். இதுல இருந்து மக்களையும் மற்ற உலகத் தலைவர்களையும் திசை திருப்பனும்னா ஏதாவது அதிரடியா செஞ்சாகனும்.
கேஸ் : போராக்ல இருக்கிற படைகளை எல்லாம் வாபஸ் வாங்கிக்கலாம். கொஞ்ச நாள் அதப் பத்தி பேசிட்டு அப்புறம் எல்லாரும் மறந்துடுவாங்க.
மோனலிஸா ஐஸ் : பாதுகாப்பு படைகள் இல்லைனா அந்த நாடு மொத்தமா தீவிரவாதிகள் கைல போய்டும்னு உங்களுக்கு தெரியாதா மிஸ்டர் கேஸ்.
அங்கு கூடியிருந்த அதிகாரி அவர் பக்கத்திலிருந்தவரிடம்" இப்போ மட்டும் என்னவாம். தீவிரவாதமும் ஒரு வித அதிகார வெறிதானே. நாம் எந்த விதத்தில் அவர்களுக்கு சளைத்துவிட்டோம்.?"
கேஸ் (மனதிற்குள்) : ரொம்பத்தான் அக்கறை. அங்க இருக்கிற பெட்ரோல் கிணறுகளை விட்டு வர முடியாதுனு சொல்ல வெண்டியது தான.
அதிபர் டோஷ் ( கோபமாக) : எதற்கு தேவை இல்லாத வாக்கு வாதம். இப்போ செய்ய வேண்டியதப் பத்தி பேசறிங்களா?.. போராக் விஷயத்த மறக்கனும்னா உடனே பால் காய்தா இயக்கத் தலைவன் பன்வேடனை பிடித்தாக வேண்டும்.அதற்கு வழி சொல்லுங்க.
கேஸ் : அதற்கு என்னிடம் ஒரு ஐடியா இருக்கு மிஸ்டர் ப்ரசிடெண்ட்.
அதிபர் : இதுவரை 910 ஐடியா குடுத்துட்டிங்க. இனியாவது உருப்படியா ஒரு ஐடியா குடுங்க மிஸ்டர் கேஸ்.இன்னும் 24 மணி நேரத்துக்குள் எனக்கு திட்ட அறிக்கை குடுக்கனும்.
.. மேலும் பல ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டம் கலைகிறது.
அடுத்த நாள் இதே கூட்டம் நடக்கிறது.
அதிபர்: மிஸ்டர் கேஸ். விஷயத்துக்கு வறேன். நான் சொன்னது என்னாச்சி?
கேஸ் :திட்டம் தயார் மிஸ்டர் ப்ரஸிடெண்ட். இது ஐடியா நெ.911. சொல்றேன் கேளுங்க.
கேஸ் விவரிக்கிறார்.
" பன்வேடன் இப்போ Talkistanல தான் இருக்கான் என்பது நமக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா நேரடியா நம்மளால டாக்கிஸ்தான்ல கால் வைக்க முடியல. விஷரப் பின்னாடி இருந்துகிட்டு தான் செயல்பட முடியுது. அந்த ஆள முழுசா நம்ப முடியாது. நாம நேரடியா களத்துல இறங்கனும். அதுக்கு டாக்கிஸ்தான்ல பெரிய அளவுல ஒரு குழப்பத்த உண்டாக்கனும். அத பெரிய கலவரமா மாத்தி அதுக்கு பால் காய்தா மேல பழிய போடனும். அத காரணம் காட்டி பன்வேடனை பிடிக்க டாக்கிஸ்தான் நம்ம உதவியை கேக்க வைக்கனும்."
மோனலிஸா ஐஸ்: விஷரப் அதுக்கு சம்மதிக்கனுமே. அத விட முக்கியம் டாக்கிஸ்தான் மக்கள் நமக்கு எதிராவும் பால் காய்தாவிற்க்கு ஆதரவாகவும் இருக்காங்களே. இத எல்லாம் எப்டி சமாளிகிறது.
கேஸ்: ( மனதிற்குள்) அட மங்குனி அமைச்சரே. (சத்தமாக) அதுக்கு தான் ஐடியா நெ.911 முக்கியத்துவம் தருது. அதாவது டாக்கிஸ்தான் மக்கள் மதிக்கிற ஒரு தலைவரை கொல்லனும். அதுக்கு காரணம் பன்வேடன் தான்னு அவங்கள நம்ப வைக்கனும்.அப்புறம் தானா நாட்டுல கலவரம் வெடிக்கும். நம் கைவரிசையை காட்டி கலவரத்தை கட்டுக்கடங்காமல் ஆக்கி விடலாம். இதுக்கு முதல்ல விஷரப்பிற்கு நெருக்கடி தந்து தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட செய்வோம். பிறகு டபாய்லயும் டண்டண்லயௌம் இருக்கிற அந்த 2 தலைவர்களையும் டாக்கிஸ்தானுக்கு வரவைப்போம்.
... மேலும் பல ரகசியங்களை சொல்லி முடிக்கிறார்...
பிறகு இவை எல்லாவற்றையும் செய்ய தனித்தனி குழுக்கள் நியமிக்கப் படுகிறது.
ஒரு குழு கானாஸிரை சந்திக்கிறது.
" திருமதி கானஸிர், நாங்கள் விஷரப்பிடம் பேசி உங்கள் மீது இருக்கும் எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வைக்கிறோம். நீங்களும் அவருடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் பிரதமர் ஆவதற்கு அவர் உதவி செய்வார். அவர் அதிபர் ஆவதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோ தான்.'
எதிர் வரும் ஆபத்து பற்றி தெரியாமல் கானாஸிர் இதற்கு சம்மதிக்கிறார்.
மற்றொரு குழு அரிப்பை சந்திக்கிறது
" மிஸ்டர் அரிப்,எங்கள் நோக்கம் பன்வேடனை பிடிப்பது அல்லது அழிப்பது தான்.அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை. அதற்கு பலனாக நாங்கள் உங்களை பிரதமராக்குகிறோம்.இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, விஷரப் அதிபர் ஆவதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருங்கள். உங்கள் மீது இருக்கும் ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்ய வைக்கிறோம்.பொது தேர்தலையும் நடத்த ஏற்பாடு செய்கிறோம்.பிறகு நீங்கள் நாட்டிற்கு சென்று தேர்தலில் பங்கேற்கலாம்.நீங்கள் ப்ரதமர் ஆனதும் விஷரப்பை அதிபர் பதவியில் இருந்து தூக்கிவிடலாம். அதற்கும் வலுவான காரணம் இருக்கு. நாங்கள் கொடுத்த நிதி பெரும்பாலும் பால் காய்தாவிற்கு போய் சேர்ந்திருக்கிறது. அதை நிரூபித்து அவரை தூக்கிவிடலாம். அல்லது தூக்கிலிடலாம்."
அரிப்: இதற்கு நான் சம்மதிக்கிறேன். ஆனால் தேர்தலில் கானாஸிரும் போட்டியிடுவாரே. அவர் விஷரப்புடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ளார். அவரை வெற்றிபெற வைப்பதற்கு விஷரப் முயற்ச்சி செய்வார். அதை எப்படி சமாளிப்பது?. மேலும் மக்கள் பால் காய்தாவிற்கு அதராவாகவும் உங்களுக்கு எதிராகவும் இருக்கிறார்கள்.அப்படி இருக்கும் பொது எப்படி பன்வேடனை அழிப்பது?
குழு: அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.தேர்தல் நடக்கும் போது கானாஸிர் உயிருடன் இருக்க மாட்டார்.பால் கய்தாவிலும் எங்கள் ஆட்கள் இருக்கிறார்கள். கானாஸிருடன் எங்கள் புலனாய்வு அதகாரிகள் ஆலோசனை நடத்தும் படங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப் படும். உங்கள் நாட்டில் வைத்துக் கானாஸிர் கொல்லப் படுவார். அதுவும் பால் காய்தா இயக்கத்தின் மூலமே. அதை பால் காய்தவும் ஒத்துக் கொள்ளும்.பிறகு மக்கள் அவர்களுக்கு எதிராகவும் விஷரப்பிற்கு கலவரத்தில் ஈடுபடுவார்கள். விஷரப் மக்களை சமாளிக்க பால் காய்தா மீது நடவடிக்கை எடுப்பார். அதற்கு எங்கள் உதவியை கேட்பார். நீங்களும் TPP கட்சியினருக்கு ஆறுதல் சொல்வது போல் பேசி அவர்கள் மனதில் இடம் பிடித்து, நாங்கள் உள்ளே வர ஆதரவு தர வேண்டும். பிறகு நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
எதிர்காலத்தில் தனக்கு போட்டியே இருக்காது என்ற சபலத்தில் இதற்கு அரிப் உடன்படுகிறார்.
இன்னொரு குழு விஷரப்பை சந்திக்கிறது.
" மிஸ்டர் விஷரப், தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். நீங்கள் அதிபர் ஆவதற்கான வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கானாஸிர் மற்றும் அரிப் ஆகியோர் மேல் இருக்கும் ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்து அவர்கள் இருவரும் நாடு திரும்ப வகை செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் ஜனநாயகத்தை விரும்புவது போன்ற தோற்றத்தை மக்கள் மனதிலும் மற்ற நாடுகளின் மத்தியிலும் உண்டாக்கலாம். ஊழல் வழக்கை தள்ளுபடி செய்தால் அவர்களூம் நீங்கள் அதிபர் ஆவதை ஏற்றுக்கொள்வதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்."
தான் பதவியில் இல்லாமல் இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து என்பது தெரிந்த்ததால், விஷரப் இதற்கு சம்மதிக்கிறார்.
பிறகு பால் காய்தாவிற்கு கானாஸிருடன் தங்கள் நாட்டு புலனாய்வு அதிகாரிகள் பேசும் போது எடுத்த புகை படங்கள் அனுப்பிவைக்க்கப் பட்டு, பால் காய்தாவின் ஹிட் லிஸ்டில் கானாசிர் பெயர் சேர்க்கப் படுகிறது. அவரை கொல்வதற்கான திட்டங்களும் உளவாளிகள் மூலம் பால் காய்தாவில் உருவாக்கப் படுகிறது.
சில மாதங்கள் கழித்து அதிபர், மந்திரி மற்றும் கேஸ் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி கொள்கிறார்கள். தங்களின் 911வது ஐடியா கச்சிதமாக நிறைவேறிக் கொண்டிருப்பதால், இந்த சந்திப்பின் முடிவில் அதிபர் இராணுவத் தலைமயகத்துக்கு முக்கிய செய்தி ஒன்றை அனுபுகிறார்.
2 Comments:
//கானாஸிர் மற்றும் அரிப் ஆகியோர் மேல் இருக்கும் ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்து அவர்கள் இருவரும் நாடு திரும்ப வகை செய்யுங்கள்
//
நச்சுனு ஒரு திருப்பமா கானாஸிர போட்டு தள்ளீட்டாங்களே!!!
//மங்களூர் சிவா said...
//கானாஸிர் மற்றும் அரிப் ஆகியோர் மேல் இருக்கும் ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்து அவர்கள் இருவரும் நாடு திரும்ப வகை செய்யுங்கள்
//
நச்சுனு ஒரு திருப்பமா கானாஸிர போட்டு தள்ளீட்டாங்களே!!//
இதுக்கு தான் முழுசா படிக்கிற பழக்கத்த கத்துகனும்னு சொல்றது..
.....****சில மாதங்கள் கழித்து அதிபர், மந்திரி மற்றும் கேஸ் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி கொள்கிறார்கள். தங்களின் 911வது ஐடியா கச்சிதமாக நிறைவேறிக் கொண்டிருப்பதால், இந்த சந்திப்பின் முடிவில் அதிபர் இராணுவத் தலைமயகத்துக்கு முக்கிய செய்தி ஒன்றை அனுபுகிறார்.....****
இதயும் படிக்கனும்ல...
Post a Comment