இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday, 2 July 2008

வலை நண்பர்கள் சந்திப்பு - கோவை

அன்பு தாய்மார்களே.. அருமை பெரியோர்களே.. இனிய (என்னை மாதிரி) குழந்தைகளே.. எல்லார்க்கும் வணக்கம்யா.. கடந்த சனி இரவு ஒரு சிறிய வலை நண்பர்கள் சந்திப்பு நடத்தினோம்யா.. அதுல நம்ம முத்தமிழ் மஞ்சூர் ராஜாவும் அண்ணன் தமிழ்பயணி சிவாவும், "நாயகன்" ஓசை செல்லாவும் என்னை மாதிரி பொடியனும் இன்னும் சில நண்பர்களும் சந்திச்சிக்கிட்டோம்யா.. அதுல எனக்கு முன்னாடி சொன்ன பெரிய மனுஷங்க எல்லாம் ஒன்னு கூடி இந்த மாதம் அதாவது சூலை 13, 2008 ஞாயித்துக் கெழம ஒரு பெரிய வலை நண்பர்கள் சந்திப்பு வைக்காலாம்னு முடிவு பண்ணி இருக்காங்கய்யா...

தருமபுரி, சேலம் , நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர் இன்னும் பக்கத்துல அல்லது தூரத்துல இருந்து யாரெல்லாம் வர முடியுமோ எல்லாரும் வாங்கய்யா.. வந்து பழகுங்கய்யா... பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுங்கய்யா.. இல்லைனா பதிவ படிச்சிட்டு வேற யாராவது வர மாதிரி இருந்தா அவங்க கிட்ட சொல்லுங்கய்யா..

கோவையில் எங்கு சந்திக்கலாம் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை.. எத்தனை பேர் வருவீங்கனு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி இடம் முடிவு செய்யனும். அதனால் தயவு செய்து வருபவர்கள் வரும் ஞாயிறுக்குள்ள சொல்லிடுங்க சாமியோவ்.. உங்களுக்கு புண்ணியமா போவும்... அப்பால வந்து போண்டா பத்தலை, வடை எனக்கு வரலை, சின்ன டம்ப்ளர்ல தான் டீ குடுத்தாங்கனு பதிவு போட்டு மானத்த வாங்காதிங்க..:)) சொல்லிட்டேன்...

.... புதியதாக வந்து தமிழ்மணத்தை கலக்கும் தங்க தமிழரசி வர விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... அம்மணியின் வருகையால் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்த பிறகே அனைவரும் அனுமதிக்கப் படுவர் என்பதால் யாரும் பயங்கர ஆயுதங்களுடன் வர வேண்டாம் என வேண்டுகிறேன். வருகிறவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது... செல்லா தலைமையிலான கமாண்டோ படையும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும். :P...

சரி மேட்டர்க்கு வரேன்...
.... வர விருப்பம் உள்ள நண்பர்கள்/நண்பிகள் தயவு செய்து வருகிற 8ம் தேதிக்குள் தெரியபடுத்துங்கள்....
sanjaigandhi@msn.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்கள்.
அல்லது அழையுங்கள் 9842877208...

பின்னூட்டம் மூலமாகவும் தெரிவிக்கலாம்..

எவ்வளவு பேர் வருகிறீர்கள் என்பதை பொறுத்து இடம் தேர்வு செய்து 10.07.2008 தேதிக்குள் தெரிவிக்கிறோம்...

அலைகடலெனத் திரண்டு வாரீர்.. ஆதரவு தாரீர்... :)

63 Comments:

Anonymous said...

உண்மைய சொல்லுங்கய்யா?




தங்க தமிழரசி தமிழச்சி தானே!

Anonymous said...

//உண்மைய சொல்லுங்கய்யா?
தங்க தமிழரசி தமிழச்சி தானே!//

அப்பாவி அப்பூ தமிழச்சிக்கு ஏதுய்யா இம்புட்டு அறிவு.

Karthik said...

கோயம்புத்தூர் வரலாம்னுதான் இருக்கேன். வலையுலக சீனியர்ஸ பார்த்த மாதிரி இருக்கும். ஞாயிற்றுக்கிழமைக்குள் சொல்லிவிடுகிறேன்.

Sanjai Gandhi said...

அனானி அண்ணே.. இதுல கும்மி வேணாம்ணே.. விட்ருங்கண்ணே.. வலிக்கிது.. :(

அவங்க தமிழச்சி இல்லைண்ணே.. தமிழரசிண்ணே.. புது பதிவர்ணே...

Sanjai Gandhi said...

// Karthik said...

கோயம்புத்தூர் வரலாம்னுதான் இருக்கேன். வலையுலக சீனியர்ஸ பார்த்த மாதிரி இருக்கும். ஞாயிற்றுக்கிழமைக்குள் சொல்லிவிடுகிறேன்..//

முயற்சி பண்ணுங்க கார்த்திக்.. வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.

கிரி said...

சஞ்சய் சூப்பர் போங்க..கலக்குங்க

நான் 9 ம தேதி இந்தியா வருகிறேன். முடிந்த வரை வர முயற்ச்சிக்கிறேன்..உங்களை அனைவரையும் சந்திக்க ரொம்ப ஆவலாக இருக்கிறது.

நான் கோபி தாங்க ..2 மணி நேர பயணம் தான்..

முடிந்த வரை உங்களுக்கு முன்பே மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன்

வந்தா "கௌரி ஷங்கர் சாம்பார் வடை" வாங்கி தருவீங்களா? :-))

Sanjai Gandhi said...

//வந்தா "கௌரி ஷங்கர் சாம்பார் வடை" வாங்கி தருவீங்களா? :-))//

ஹாஹா.. அட என்னங்க கிரி? கொழந்த மாதிரி.. வாங்க அசத்திடுவோம்.. :) கோபி தானா? கண்டிப்பா வரனும்..

Sanjai Gandhi said...

வரும் பதிவர்கள் :
சஞ்சை
ஓசை செல்லா
மஞ்சூர் ராசா
தமிழ்பயணி சிவா
திருப்பூர் தியாகு
லதானந்த் மற்றும் அவர் நண்பர்
நந்து ( நிலா அப்பா )
கிரி - வரலாம்
தமிழரசி - வரலாம்
.. மற்றவர்கள் விரைவில் தகவல் தெரிவிக்கவும்..

கிரி said...

வடகரை வேலன் கோவை காரர் தானே அவரை காணோம். ஒரு வேளை வெளி நாட்டில் இருக்காரா?

சூர்யா வை காணோம்..

ஊர்ல இருக்கிற எல்லோரும் வந்து கலந்துக்குங்க ...

பரிசல்காரன் said...

ஐயையோ.. நானும் வர்றேனுங்கோஓஓஓஓஓவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

(நண்பர் வெயிலானையும் கூட்டீட்டு வர்ற ஐடியா இருக்கு.. இப்போ மணி காலை எட்டரைதான் ஆகுது, கூப்ட்டா “ஏன்யா பாதிராத்திரில கூப்ட்டு தொந்தரவு பண்ற”-ன்னு திட்டுவாரு. அதுனால அப்புறமா அவரைக் கேட்டு, அவரையே பின்னூட்டம் போடச்சொல்றேன்!!)

என்கூட - வலையில விழாத, ஆனா நாமெல்லாம் விழுந்து தவிக்கறத பாத்து ரசிக்கற- இரு நண்பர்களும் வர வாய்ப்புண்டு!!

பரிசல்காரன் said...

@ கிரி..

//நான் 9 ம தேதி இந்தியா வருகிறேன். முடிந்த வரை வர முயற்ச்சிக்கிறேன்..உங்களை அனைவரையும் சந்திக்க ரொம்ப ஆவலாக இருக்கிறது.//

கிரி.. எனக்கு உங்களை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளது.

கண்டிப்பாக வரவும்!!

(இது கோரிக்கை அல்ல! கட்டளை!!)

பி.கு. கிரி.., நான் வரும்போது என் profile-ல இருக்கற படத்துல இருக்கற பையனைக் கூட்டீட்டு வர்றேன்.. நீங்களும்.... உங்க profile-ல இருக்கறவங்களை...ப்ளீஸ்..

கிரி said...

//ஐயையோ.. நானும் வர்றேனுங்கோஓஓஓஓஓவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

என்னங்க நீங்க..எல்லோரும் ஊர்ல தான் இருக்கீங்களா ..நான் எல்லோரும் வெளிநாடுன்னு நினைத்துட்டு சரி அதுனால தான் வரலை போல இருக்குன்னு நினைத்துட்டேன்

//நண்பர் வெயிலானையும் கூட்டீட்டு வர்ற ஐடியா இருக்கு//

இந்த கதையெல்லாம் வேண்டாம் ..கண்டிப்பா இழுத்துட்டுவறீங்க

இல்லைனா அவரை வெய்யில் ல முட்டி போட வைத்து விடுவோம்னு சொல்லுங்க

//என்கூட - வலையில விழாத, ஆனா நாமெல்லாம் விழுந்து தவிக்கறத பாத்து ரசிக்கற- இரு நண்பர்களும் வர வாய்ப்புண்டு!!//


பதிவு ன்னு யாரு வாய திறந்தாலும் கப்புன்னு அமுக்கி கூட்டிட்டு வந்துடுங்க

//பி.கு. கிரி.., நான் வரும்போது என் profile-ல இருக்கற படத்துல இருக்கற பையனைக் கூட்டீட்டு வர்றேன்.. நீங்களும்.... உங்க profile-ல இருக்கறவங்களை...ப்ளீஸ்..//

ஹா ஹா ஹா ஹா

இவங்க கோர்ட் ஹாஸ்பிடல் னு ரொம்ப பிசி ..அதனால வர மாட்டங்க....

//(இது கோரிக்கை அல்ல! கட்டளை!!)//

அன்புக்கு நான் அடிமை ..கண்டிப்பாக வர முயற்ச்சிக்கிறேன்

சரி நீங்க வந்தா எல்லோரையும் பரிசல் ல கூட்டிட்டு போவீங்களா ..இல்ல காண்டுல நடுவுல குப்புற தள்ளிடுவீங்களா :-)))

MyFriend said...

//இனிய (என்னை மாதிரி) குழந்தைகளே.. //

நான் வருவேன்னு தெரிஞு எழுதீயிருக்கீங்களே. நன்னி. ;-)

MyFriend said...

//அலைகடலெனத் திரண்டு வாரீர்.. ஆதரவு தாரீர்... :)//

வந்தால் என்ன தருவீங்கன்னு மங்களூர் சிவா கேட்குறாரு. :-P

இவன் said...

நானும் வாரேன் ஆனா எனக்கு டிக்கெட் எடுத்து அனுப்புவீங்களா??

இவன் said...

justu (aus) $1500 அதிகமா இல்லை

அனுசுயா said...

Enakum oru ticket please :)

பரிசல்காரன் said...

கிரி..
//சரி நீங்க வந்தா எல்லோரையும் பரிசல் ல கூட்டிட்டு போவீங்களா ..இல்ல காண்டுல நடுவுல குப்புற தள்ளிடுவீங்களா :-)))//

கிரி.. பரிசல் எங்க இருக்கும்... தண்ணிலதானே?

Sanjai Gandhi said...

வரும் பதிவர்கள் :
சஞ்சை
ஓசை செல்லா
மஞ்சூர் ராசா
தமிழ்பயணி சிவா
திருப்பூர் தியாகு
லதானந்த் மற்றும் அவர் நண்பர்
நந்து ( நிலா அப்பா )
பரிசல்காரன் மற்றும் 2 நண்பர்கள்.
கிரி - வரலாம்
வெயிலான் - வரலாம்
தமிழரசி - வரலாம்
.. மற்றவர்கள் விரைவில் தகவல் தெரிவிக்கவும்.

Sanjai Gandhi said...

@கிரி : வடகரை வேலனுக்கு தகவல் சொல்லுங்க... வந்தால் சந்தோஷம்.

@பரிசல்காரன் : வாங்க வாங்க.. இன்னும் நிறைய பேரை கூட்டிட்டு வாங்க..

@ மைஃப்ரண்ட் : ஆமா.. ஆமா.. உங்க ஆளை பாக்க திருச்சிக்கு வரும் போது இங்க வர மாட்டிங்களா என்ன? :P
//வந்தால் என்ன தருவீங்கன்னு மங்களூர் சிவா கேட்குறாரு. :-P//
வந்து பாருங்க... போதும் போதும்னு சொல்ற அளவுக்கு தருவோம் :P..

@இவன் : டிக்கெட் எதுக்கு.. யார் யாருக்கோ ஆட்டோ அனுப்பறோம்.. உங்களுக்கு அனுப்ப மாட்டோமா என்ன? அட்ரஸ் ப்ளீஸ்.. :))

@அனுசுயா : இவனுக்கு சொன்ன அதே பதில்.. அட்ரஸ் ப்ளீஸ்.. :P... ஆடி மாசம் வீட்டுக்கு வருவீங்க இல்ல.. கொஞ்சம் முன்னாடியே வந்துடுங்க.. ஐடியா சூப்பரா இருக்குல :)))

@பரிசல்காரன் :
//கிரி.. பரிசல் எங்க இருக்கும்... தண்ணிலதானே?//

பரிசல் தண்ணில இருக்கலாம்.. ஆனா பரிசல்காரர் தண்ணில இருக்க கூடாது.. :)

Karthik said...

Im game.

I'd love to know the place. When you'll say?

Sanjai Gandhi said...

//Karthik said...

Im game.

I'd love to know the place. When you'll say//

very soon karthik..

Anonymous said...

என் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நானும் சந்திப்புக்கு வருகிறேன்

Anonymous said...

அட மக்கா, என்னய விட்டுப்புட்டீயளே.

ஒரு குருப்பாய்த்தாங் கெளம்பீட்டிங்களா?

பொடிப்பொண்ணு said...

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா!!! :) :)

பொடிப்பொண்ணு said...

ஹ்ம்ம் என்னால வர முடியாதுங்கோ . ரொம்பா பீலிங்க்ஸா இருக்கு :( :(

கிரி said...

SanJai said...
@பரிசல்காரன் :
//கிரி.. பரிசல் எங்க இருக்கும்... தண்ணிலதானே?//

பரிசல் தண்ணில இருக்கலாம்.. ஆனா பரிசல்காரர் தண்ணில இருக்க கூடாது.. :)//

ஹா ஹா ஹா

//வடகரை வேலன் said...
அட மக்கா, என்னய விட்டுப்புட்டீயளே.//

வடகரை வேலன்..நான் உங்களை எவ்வளோ பொறுப்பா கேட்டு இருக்கிறேன் பாருங்க..:-))))

நாமக்கல் சிபி said...

கிரி said.....

//நான் கோபி தாங்க //

என்னங்க இது! ஒரே காண்ட்ரவெர்ஷியலா இருக்கு!

டிஸ்ப்ளேல பேரு கிரின்னு இருக்கு!

ஆனா கோபின்னு சொல்லிக்கிறார்!

கடவுளே! என்னை குழப்புறத்துக்குன்னே ஏன்யா ஆட்களைப் படைக்கிறே!

Sanjai Gandhi said...

@போலி டோண்டு : நெசமாவா? வருக வருக :))

Anonymous said...

//@போலி டோண்டு : நெசமாவா? வருக வருக :))//


என்னை விட்டுடுங்கய்யா! வலிக்குது! அழுதுடுவேன்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!

போதும்! இத்தோட நிறுத்திக்குவோம்!

(ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே நிறுத்திக்குவோம்)

இதுவரைக்கும் என்னை யாரும் கலாய்ச்சதில்லை!

Sanjai Gandhi said...

//
இதுவரைக்கும் என்னை யாரும் கலாய்ச்சதில்லை!//

அதான் கலாய்க்கிறத ஒட்டு மொத்த குத்தகை எடுத்து வச்சிருக்கிங்களே.. :) கலாய்க்கிறது நீங்களா இருந்தா தான புடிக்கும்.. :)))))

Sanjai Gandhi said...

//வடகரை வேலன் said...

அட மக்கா, என்னய விட்டுப்புட்டீயளே.

ஒரு குருப்பாய்த்தாங் கெளம்பீட்டிங்களா?//

வாங்க வாங்க வேலன்.. ரொம்ப சந்தோஷம்.. விரைவில் இடம் சொல்றோம்.

Sanjai Gandhi said...

//Nithya (நித்யா) said...

ஹ்ம்ம் என்னால வர முடியாதுங்கோ . ரொம்பா பீலிங்க்ஸா இருக்கு :( :(//

எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சி.மா. :))

Sanjai Gandhi said...

//கடவுளே! என்னை குழப்புறத்துக்குன்னே ஏன்யா ஆட்களைப் படைக்கிறே!//

முடியலை.. விட்ருங்க.. :)

நாமக்கல் சிபி said...

//ஹ்ம்ம் என்னால வர முடியாதுங்கோ//


அப்போ எந்தப் பிரச்சினையும் இல்லாம மீட்டிங்க் நல்ல படியா நடக்கும்ணு சொல்லுங்க!

வாழ்த்துக்கள் சஞ்சய்!

Anonymous said...

////ரொம்ப சந்தோஷம்.. விரைவில் இடம் சொல்றோம்.////

சீக்கிரம் எடத்த சொல்லுங்கய்யா! ஸ்பை கேமரா செட் பண்ண வேண்டியிருக்கு

Anonymous said...

எல்லா விதமான சந்திப்புகளும் ஆர்டரின் பேரில் குறைந்த செலவில், நிறைவான தரம் மற்றும் சுவையில் போளிகள் சப்ளை படும்.

டோர் டெலிவரி : சார்ஜஸ் கிடையாது!

cheena (சீனா) said...

சஞ்ஜய், வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற நல் வாழ்த்துகள்

நிஜமா நல்லவன் said...

/////நாமக்கல் சிபி said...
கிரி said.....

//நான் கோபி தாங்க //

என்னங்க இது! ஒரே காண்ட்ரவெர்ஷியலா இருக்கு!

டிஸ்ப்ளேல பேரு கிரின்னு இருக்கு!

ஆனா கோபின்னு சொல்லிக்கிறார்!

கடவுளே! என்னை குழப்புறத்துக்குன்னே ஏன்யா ஆட்களைப் படைக்கிறே!/////


ஹாஹா...ஹாஹா...

பொடிப்பொண்ணு said...

//@sanjai
எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சி.மா. :))//


அதென்ன சி மா . பீ மா என்று !! ரொம்ப பேசினா கோ மா தான் ! :)

Sanjai Gandhi said...

வரும் பதிவர்கள் :
சஞ்சை
ஓசை செல்லா
மஞ்சூர் ராசா
தமிழ்பயணி சிவா
திருப்பூர் தியாகு
லதானந்த் மற்றும் அவர் நண்பர்
நந்து ( நிலா அப்பா )
பரிசல்காரன் மற்றும் 2 நண்பர்கள்.
கார்த்திக்
கவிதாயினி காயத்ரி
கிரி - வரலாம்
வெயிலான் - வரலாம்
தமிழரசி - வரலாம்
.. மற்றவர்கள் விரைவில் தகவல் தெரிவிக்கவும்.

Anonymous said...

ஏம் பேரு இல்ல.

நா அழுதுருவேன்.

நானும் பதிவர்தான், பதிவர்தான்.

எல்லாரும் கேட்டுக்குங்க நானும் பதிவர்தான்.

Sanjai Gandhi said...

வரும் பதிவர்கள் :
சஞ்சை
ஓசை செல்லா
மஞ்சூர் ராசா
தமிழ்பயணி சிவா
திருப்பூர் தியாகு
லதானந்த் மற்றும் அவர் நண்பர்
நந்து ( நிலா அப்பா )
பரிசல்காரன் மற்றும் 2 நண்பர்கள்.
கார்த்திக்
கவிதாயினி காயத்ரி
வடகரை வேலன்
கிரி - வரலாம்
வெயிலான் - வரலாம்
தமிழரசி - வரலாம்
.. மற்றவர்கள் விரைவில் தகவல் தெரிவிக்கவும்.

வ.வேலன் மன்னிச்சிடுங்க.. தெரியாம உங்க பேர் விட்டு போச்சி.

பரிசல்காரன் said...

கிரி & சஞ்சய்க்கு
@பரிசல்காரன் :
//கிரி.. பரிசல் எங்க இருக்கும்... தண்ணிலதானே?//

பரிசல் தண்ணில இருக்கலாம்.. ஆனா பரிசல்காரர் தண்ணில இருக்க கூடாது.. :)//

அப்புறம் எப்படிங்க பரிசல் ஓடும்?

@ வடகரை வேலன்

அதெப்படி உங்களை விட முடியும்.. நான் சத்தமில்லாம வந்து உங்களை கூட்டிட்டு போகணும்ன்னு நெனச்சிருந்தேன்!

@ போளி சஞ்சய் said...

யாருயா இது? நிறைய போளி திம்பாரு போல..

@sajai
//வ.வேலன் மன்னிச்சிடுங்க.. தெரியாம உங்க பேர் விட்டு போச்சி. //

அண்ணனுக்காக நான் உங்களை மன்னிக்கறேன். (சந்திப்புல எனக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு பஜ்ஜி எடுத்து வெச்சுடுங்க!)

ஓசை செல்லா said...

I really want to come. no z degree is required! only issue is my damager! hope i will make it in the last minute from Pune!

Very nice to see this anouncement. Showing this to my north indian friends. they could not understand how i can be popular overnight among bloggers. They write in English. I told them to go Native (Slang) than this foreign.. English! (;-) i am typing in english from my north indian friend's lap top).

With love
Thamiz from North Koregoan Road,
Pune (near hot bread)

நாமக்கல் சிபி said...

//(சந்திப்புல எனக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு பஜ்ஜி எடுத்து வெச்சுடுங்க!)//

நேத்தே எடுத்து வெச்சிட்டாராம்!

என்ன நீங்க வரப்போ அதிலே நிறைய நூல் கிடைக்க வாய்ப்பு உண்டு!

Osai Chella said...

Hi see this video invitation! Your name is also included along with Thamiz!

Anonymous said...

அண்ணே,

we are sorry, this video is no longer available னுதா வருது.

ப்ளீஸ் ஹெல்ப்

கிரி said...

//நாமக்கல் சிபி said...
கிரி said.....

//நான் கோபி தாங்க //

என்னங்க இது! ஒரே காண்ட்ரவெர்ஷியலா இருக்கு!

டிஸ்ப்ளேல பேரு கிரின்னு இருக்கு!

ஆனா கோபின்னு சொல்லிக்கிறார்!

கடவுளே! என்னை குழப்புறத்துக்குன்னே ஏன்யா ஆட்களைப் படைக்கிறே//

ஹா ஹா ஹா ஹா ஹா

தெளிவு ஆகனும்னா பதிவர் சந்திப்புக்கு வாங்க..உங்களை நல்ல்ல்ல்லா தெளிய வைத்து விடுகிறோம் :-)))

கூடுதுறை said...

அண்ணா நானும் வர்ரேன்....

என்னையும் ஆட்டத்திலே சேர்த்துக்குங்க அண்ணா...

கூடுதுறை

Sanjai Gandhi said...

வரும் பதிவர்கள் :
சஞ்சை
ஓசை செல்லா
மஞ்சூர் ராசா
தமிழ்பயணி சிவா
திருப்பூர் தியாகு
லதானந்த் மற்றும் அவர் நண்பர்
நந்து ( நிலா அப்பா )
பரிசல்காரன் மற்றும் 2 நண்பர்கள்.
கார்த்திக்
கவிதாயினி காயத்ரி
வடகரை வேலன்
கூடுதுறை
கிரி - வரலாம்
வெயிலான் - வரலாம்
தமிழரசி - வரலாம்
.. மற்றவர்கள் விரைவில் தகவல் தெரிவிக்கவும்.

Sanjai Gandhi said...

//I really want to come. no z degree is required! only issue is my damager! hope i will make it in the last minute from Pune!//

முயற்சி பண்ணுங்க..

Very nice to see this anouncement. Showing this to my north indian friends. they could not understand how i can be popular overnight among bloggers. They write in English. I told them to go Native (Slang) than this foreign.. English! (;-) i am typing in english from my north indian friend's lap top).//

அதெல்லாம் ஒன்னுமில்ல... எவ்ளோ அடிச்சாலும் தாங்கிகிட்டு வலிக்காத மாதிரி நடிக்கனும்.. நெக்ஸ்ட் யாருனு கேட்டு முதுகை காட்டனும்.. அவ்ளோ தான்.. இங்க ரொம்ப பாப்புலர் ஆகறதுக்கு இது தான் அடிப்படை. நீங்க இதை ரொம்ப அழகா செய்றிங்க... சும்மா தாய் மொழி தங்கச்சி மொழினு பீலா உடாதிங்க.. :P

Sanjai Gandhi said...

//நாமக்கல் சிபி said...

//ஹ்ம்ம் என்னால வர முடியாதுங்கோ//


அப்போ எந்தப் பிரச்சினையும் இல்லாம மீட்டிங்க் நல்ல படியா நடக்கும்ணு சொல்லுங்க!

வாழ்த்துக்கள் சஞ்சய்!//

ஹா ஹா.. சிமா பத்தி உங்களுக்கும் தெரிஞ்சிடிச்சா? :))

Sanjai Gandhi said...

//நாமக்கல் சிபி said...

//(சந்திப்புல எனக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு பஜ்ஜி எடுத்து வெச்சுடுங்க!)//

நேத்தே எடுத்து வெச்சிட்டாராம்!

என்ன நீங்க வரப்போ அதிலே நிறைய நூல் கிடைக்க வாய்ப்பு உண்டு!//

ஆமா ஆமா.. :))

Sanjai Gandhi said...

//OSAI Chella said...

Hi see this video invitation! //

ஹே.. செல்லா அண்ணன் கிட்ட காஸ்ட்லி மொபைல் இருக்காம்லே.. எல்லாரும் பாத்துக்கோங்க..

//Your name is also included along with Thamiz!//
ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்.. :P

Sanjai Gandhi said...

// (சீனா) said...

சஞ்ஜய், வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற நல் வாழ்த்துகள்//

நீங்களும் வாங்களேன்.. ரொம்ப சிறப்பாக இருக்குமே..முடிந்தால் செல்வி அம்மாவையும் அழைத்து வாருங்கள்... நாங்கள் சதோஷத்தில் துள்ளி குதிப்போம்..

Sanjai Gandhi said...

நி.நலல்வரே.. ரொம்ப சிரிக்காதிங்க... அவர் அடுத்த ஆப்பு உங்களுக்கும் வைக்க கூடும்.. :))

Sanjai Gandhi said...

/Nithya (நித்யா) said...

//@sanjai
எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சி.மா. :))//


அதென்ன சி மா . பீ மா என்று !! ரொம்ப பேசினா கோ மா தான் ! :)//

நீ விஜய டி ஆர் ரசிகர் மன்றத்துல சேர்ந்ததுல இருந்தே ஒரு மார்க்கமா தான் இருக்க.. அம்மா ஊர்ல இல்லாத ஒரு வாரத்துல உன் சமையல நீயே சாப்ட்டு ஒரு மாதிரி ஆய்ட்ட போல.. அய்யோ பாவம்.. சி.மா என்றால் என்ன என்று சொல்லிவிடட்டுமா? :P

Sanjai Gandhi said...

//
அண்ணனுக்காக நான் உங்களை மன்னிக்கறேன். (சந்திப்புல எனக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு பஜ்ஜி எடுத்து வெச்சுடுங்க!)//

உங்களுக்கும் நேத்தே எடுத்து வச்சிட்டேன். கவலை படாதிங்க கள்ள தோணிக்காரரே :P

Sanjai Gandhi said...

// வடகரை வேலன் said...

அண்ணே,

we are sorry, this video is no longer available னுதா வருது.

ப்ளீஸ் ஹெல்ப்//
தெரியாத் தனமா எதுனா பலான படம் லின்க் போய் இருப்பிங்க.. :)

Sanjai Gandhi said...

//தெளிவு ஆகனும்னா பதிவர் சந்திப்புக்கு வாங்க..உங்களை நல்ல்ல்ல்லா தெளிய வைத்து விடுகிறோம் :-)))//

வருவதாக சொல்லி இருக்கிறார் கிரி.. தயாரா வாங்க :)

பரிசல்காரன் said...

ஏய்.. மொக்கையெல்லாம் போதும்ப்பா.. எடத்தை சொல்லுங்க..

சஞ்சய்க்கு கூப்ட்டா லைனைக் கட் பண்றாரு, இன்னீன்னா நாட் ரீச்சபிள்ல இருக்காரு.. ஏதும் மிரட்டல் வந்துச்சா?

//SanJai said...
//
அண்ணனுக்காக நான் உங்களை மன்னிக்கறேன். (சந்திப்புல எனக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு பஜ்ஜி எடுத்து வெச்சுடுங்க!)//

உங்களுக்கும் நேத்தே எடுத்து வச்சிட்டேன். கவலை படாதிங்க கள்ள தோணிக்காரரே//

ஏன்யா.... ஏன்? நான் வெளில இருக்கறது பிடிக்கலியா? வரவேண்டாம்னா சொல்லிடுங்க.. அதுக்காக இப்படியா ஜெயிலுக்கு அனுப்பற ஐடியாவெல்லாம் பண்றது?

thiagu1973 said...

கோவை சந்திப்பிற்கான இடம் :

42, சீனிவாசா நகர்,
கவுண்டம்பாளையம்
கோயம்புத்தூர்.


தொலைபேசி :


மஞ்சூர் ராசா : 9442461246

தமிழ் பயணி சிவா: 9894790836


சஞ்சய் : 9842877208


அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்

Tamiler This Week