இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday, 20 July, 2009

எல்லாரும் பார்த்துக்கோங்க...நான் ஜெயிலுக்குப் போறேன்..

நாம என்ன பண்ணாலும் நம்மள யாரும் பிரபலப் பதிவர்னு ஒத்துக்கப் போறதில்லை.. எந்த அனானியும் திட்ட மாட்டேன்றான்.. ஆப்பு வைக்கிறவனும் நம்மள கண்டுக்க மாட்டேன்றான்.. அட , நம்ம சக்திவேல் அண்ணன் கூட நான் காமெடியா போடற கமெண்டுக்கு சீரியசா பதில் சொல்றார். நம்மள யாருமே ஜீப்புல ஏத்த மாட்டேன்றாய்ங்களே.. அட்லீஸ்ட் பிரபலப் பதிவர்கள் மாதிரி எதுனா பண்ணலாமேன்னு நானும் வெப்சைட் ஆரம்பிச்சி அதுல ப்ளாக் ஆரம்பிச்சிட்டேன். இனி அங்க தான் எதுவா இருந்தாலும்.. கீழ இருக்கிற விடியோ பாருங்க.. அப்டியே இனி அங்கிட்டு அசெம்பிள் ஆய்டுங்க.. வழக்கம் போல நல்லாப் பழகலாம்.

புது இல்ல முகவரி : http://www.blog.sanjaigandhi.com
ஒரு இசைத் தளமும் இருக்கு.. கேட்டுப் பாருங்க.. http://sanjaigandhi.com/music


Monday, 13 July, 2009

அரைவேக்காட்டுக் குடிகாரன் - ஒரு சிறிய போதை

ஒரு ஊரில் மொடாக் குடிகாரன் என்று தன்னைத் தானே நினைத்துக் கொண்டிருந்த குடிமகன் ஒருவன் இருந்தானாம். எப்போதும் சரக்கடித்த பிறகே புரோட்டாவும் சால்னாவும் சாப்டுவது அவன் வழக்கம். ஓரளவு தம் அடிக்கும் பழக்கம் உள்ளவன். ஒரு கோர்ட்டரோ ஆஃபோ வாங்கிக் குடுத்துவிட்டு வழி கேட்டால் உடனே பட்டை சாராயம் காய்ச்சும் இடத்தை கூட காட்டிவிடுவானாம்..

ஒருநாள் 12 வயது மதிக்கத் தக்க சிறுவன் நடந்து வந்தவன் இந்த குடிகாரன் வீட்டின் முன் கஞ்சா கிடைக்காத கடுப்பில் வந்து உட்கார்ந்துவிட்டானாம்.. உடனடியாக பதறிய அந்த குடிகாரன், அவனை வீட்டிற்குள் அழைத்து வந்து அவன் முன் ஒரு சரக்கு பாட்டிலைக் காட்டி,

"கோவியானந்தரே, இந்த சிறுவனுக்கு போதை ஏற்றி வைக்க எனக்கு நல்ல உள்ளம் கொடுத்ததற்கு நன்றி, சிறுவனே பார், ஓல்ட் மங்க் இருக்கிறது, இல்லை என்றால் நீ என்வீட்டு வாசலில் விழுந்து இருக்கமாட்டாய், உடனடியாக உனக்கு ஓல்ட் மங்கும் கிடைத்திருக்காது" என்றானாம்

இதைக் கேட்ட சிருவன் திடுக்கிட்டான், காரணம் அவர் ஒரு கஞ்சா குடுக்கி.

"தலைவா நான் ஒரு கஞ்சா குடுக்கி, நீங்கள் ஒரு கொடாக் குடிகாரனாக இருந்தாலும் எனக்கு கஞ்சா தருவதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறேன், நான் உங்கள் சரக்குக்கு எதிரானவன், எனக்கு குடிப்பழக்கம் கிடையாது" என்றாராம்

இதைக் கேட்டதும் அருவெறுப்பு பட்ட மொடாக் குடிகாரன், மேலே கைக்கூப்பி

"நான் ஒரு கஞ்சா குடுக்கிக்கா உதவ இருந்தேன். நல்லவேளை பகவானே, சரக்கை நிந்திப்பவருக்கு ஓல்ட் மங்க் அளித்து பாவம் செய்ய இருந்தேன்...என்னை மன்னியுங்கள்" என்று கூறிவிட்டு, அந்த சிறுவனை நோக்கி,

கண்ணை மூடிக் கொண்டே... மேலும் கோபம் அடைந்தவனாக

"உன்னைப் போன்ற குடிப்பழக்கத்திற்கு எதிரான பார்ட்டிகளுக்கு நான் உதவி செய்வது கிடையாது, உனக்கு உதவி செய்தால் எந்த ஜென்மத்திலும் எனக்கு சரக்குக் கிடைக்காது...இங்கிருந்து சென்றுவிடு மூடனே...." என்று சத்தம் போட

சிறுவன் வசைகளால் குறுக்கிப் போய்......மெளனமாக வெளி ஏறிவிட்டானாம்.

இன்னும் கோவம் தீராத, அந்த மொடாக் குடிகாரன் புலம்ப ஆரம்பித்து

"கோவியானந்தரே, இது என்ன சோதனை, ஒரு கஞ்சா பார்ட்டிக்கு உதவி அளித்து ஜெயிலுக்குப் போக இருந்தேனே......உங்களுக்கு நான் என்ன குறைவைத்தேன்.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வீடெல்லாம் சரக்கு வெள்ளம்.

அந்த குடிகாரனுக்கு முன்னால் குடிபகவான் ஜானி வாக்கர் தோன்றி,

"முட்டாளே ! தினமும் கஞ்சா அடித்தாலும் அந்த சிறுவனுக்கு 7 வயது முதலே எவர் மூலமாவது தொடந்து கஞ்சா அளித்தேன், ஒரே ஒரு நாள் உன் வீட்டு வாசல் வழியாக சென்ற போது கஞ்சா கிடைககாத கடுப்பில் வந்து உட்கார்ந்த காரணத்தினால் சிறுவனை திட்டி விட்டாயே, சிறுவனுக்கான இன்றைய கஞ்சா உன்னால் கிடைத்துவிடும் என்று உன்னை நம்பி இருந்தேனே, இப்போது நானே பாவம் செய்துவிட்டேன் "

என்றாராம்.

பேச்சே எழாமல் தன் தவறை உணர்ந்த குடிகாரன் கண் முன்னே நிற்கும் ஜானி வாக்கரைப் பார்க்கக் கூட வெட்கப்பட்டு, கூசிப் போக வைத்த தன் செயலை நினைத்து தலைகுணிந்தானாம்.

குறிப்பு: இந்த கதை கோவியானந்தா அவர்களின் டைரியில் படித்தது,பதிவுரையில் சிறிது மாற்றி இருக்கிறேன். பொய்முகங்கள் கொண்டு தான் ஒரு மொடாக் குடிகாரன், என்கிற நினைப்பில் கஞ்சா அடிப்பவர்களை தூற்றுவோர்க்கு அர்ப்பணமாக்குகிறேன்.

அடிக்க சரக்கும், தொட்டுக்க ஊறுகாயும், பக்கத்தில் டாஸ்மாக்கும், ஏசி பார் / டாஸ்மாக் பார் என்ற நிலை இல்லாதிருந்தால் எந்த வயதிலும் சரக்கடிக்கலாம். கோவியானந்தா புகழ்பாடலாம், இப்படி இருப்பவன் தானே குடிகாரன்?

இது இந்தப் பதிவின் கதைக்கு எதிரானது அல்ல
.....

Sunday, 12 July, 2009

திருமண வாழ்த்து


இன்று ( 12.07.2009) மணவாழ்க்கையில் நுழையும் என் ஆருயிர் தங்கச்சி ஸ்ரீமதி மற்றும் திரு. கிரிதரன் அவர்களுக்கும்

மற்றும்

காங்கிரஸ் மாநில பொது செயலாளர் மகேந்திரன் அண்ணாவின் சகோதரி
நந்தினி மற்றும் ராம்தாஸ் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, 9 July, 2009

என்னையும் கருத்து சொல்ல வைக்கிறாங்களே.. அவ்வ்வ்வ்..

ஒரு மெய்ஞானியின் அறிவுறுத்தலின் பெயரில் சில மாதங்களாகவே வலைப்பூக்கள் வாசிப்பதை வெகுவாக குறைத்துவிட்டேன். எப்போதாவது பதிவெழுதினால் அதை இணைக்க மட்டுமே தமிழ்மணமும் தமிழிஷும் விசிட்டுவதுண்டு. மற்றபடி, ஸ்டேட்டஸ் மெசேஜ் அல்லது ஆப்புலைன் செய்தியாக சுட்டி தருபவர்கள் மற்றும் மொக்கை மெயில் க்ரூப்பில் யாராவது சுட்டும் பதிவுகள் மட்டுமே படிப்பதுண்டு. அதிலும் கூட பெரும்பாலும் கமெண்டுவதில்லை. அனால் சமீப நாட்களாக அதிகம் வலைப்பதிவுகள் படிப்பதாக உணர்கிறேன். அதுவும் எந்த பதிவுகள் தெரியுமா? அறிவை வளர்க்கும் ( இருந்தா தானே வளர) பதிவுகள் அல்ல. பிரபல பதிவர்களின் சண்டைப் பதிவுகளைத் தான். உங்களின் சண்டைகளால் எங்கள் வக்கிர புத்தி வளர்வதைத் தவிர வெறொன்றும் நிகழ்வதாய் தெரியவில்லை.

மதிப்பு மிக்க பிரபலப் பதிவர்களே..
மேலே மேலே செல்லுங்கள்
அண்ணாந்து பார்த்துக் கொள்கிறோம்
கீழே ஏன் இறங்குகிறீர்கள்
உங்களைப் பார்க்க
நாங்கள் தலைக்குனிய வேண்டியதாக இருக்கிறது.

“கூடவே இருக்கிறியே குப்புசாமி.. நீயாச்சும் புத்திமதி சொல்லக் கூடாதாப்பா”
“ எங்க சஞ்சய் கேக்கறாங்க.கண்ட நாயெல்லாம் புத்திமதி சொல்லுது. வம்பு பண்ணாதிங்கன்னு சொன்னா கேக்க மாட்டேன்றாங்க.. இப்ப பாரு நீ சொல்லிட்ட..”

கொய்யால. நாயை கேவலப் படுத்திட்டிங்கன்னு யாராச்சும் சண்டைக்கு வந்திங்கண்ணா அனுஜன்யா & சென்ஷி சேர்ந்து எழுதின கவிதையை அனுப்பி வச்சிடுவேன்.

Tuesday, 7 July, 2009

இப்படியும் இப்படியும் மனிதர்கள் கூட்டல் வாழ்த்து

சில உதிரிபாகங்கள் வாங்க ஒரு கடைக்கு போனோம்.


“ இந்த மாதிரி வேனுங்க "

"வாங்கிக்கலாம் சார்”.. கடை பையனை வேறு கடைக்கு அனுப்புகிறார்..

நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. அந்த பையன் கொண்டு வந்தது மெட்டலில் செய்தது. எங்களுக்கு பிவிசியில் தான் வேண்டும். இது தான் நல்லா இருக்கும். பிவிசி எல்லாம் இங்க கிடைக்காது என்று இம்சை பண்ண ஆரம்பிக்கிறார். எனக்குத் தெரியாதா என்ன தேவை என்று. குறிபிட்ட கடையை விசாரிக்க அனுப்பிய எங்க ஆள் , அதை விட்டு இந்த ஸ்பேர் கிடைக்குமா என்று விசாரித்துத் தொலைத்ததால் வந்த வினை இவை எல்லாம்.

பிறகு நான் வேறு கடை பெயரை சொல்லிக் கேட்டேன். தோராயமாக ஒரு இடத்தை சொல்லி அதற்கு எதிரில் இருப்பதாக சொன்னார். அந்த இடத்திற்கு போனால் அப்படி எதும் இல்லை. அங்கே வேறு ஒருவரிடம் கேட்டேன். எதற்கென்று விசாரித்தார். சொல்லித் தொலைத்தேன். அவர் கடையை விட்டு( அதுவும் ஒரு ஹார்டுவேர் கடை) வேறு கடையை விசாரித்த கடுப்பில் தவறான இடத்தை சொன்னார். அங்கு போய் விசாரித்தாலும் அதே நிலை. கேவலமான மனிதர்கள்.

அந்த இடத்தில் இன்னொரு கடையில் சென்று முதலாளியை கேட்காமல் கடை பையனை கேட்டேன். அவர் வெளியே வந்து சரியான திசையை காட்டினார். நான் முதலில் விசாரித்த கடையின் இடதுபுறம் ஒரு சந்தில் இருந்தது நான் தேடிய கடை. அந்த நாய் தெரியாது என்று கூட சொல்லி இருக்கலாம். ஆனால் தவறான திசை காட்டி அலைய விட்டுவிட்டான். அவனுக்கு பிசினஸ் கிடைக்காத கடுப்பை இப்படி காட்டிவிட்டான் போல. எல்லோரும் அதே மாதிரி தான் பண்ணானுங்க.

-----------

ஈரோட்டிலிருந்து ஒரு அரசாங்க பேருந்தில் வந்துக்கொண்டிருக்கிறேன். அவினாசி அல்லது அதற்கு முந்தைய நிறுத்தத்தில் ஒரு நண்பர் ஏறி என் அருகில் அமர்ந்தார். உடல் அமைப்பில் குறைபாட்டுடன் இருந்தார்.

“ கோயம்த்தூர் ஒன்னு ” - நண்பர்

“பாஸ் இல்லையா?” - நடத்துனர்

” இல்லீங்களே”

“ அட என்னய்யா நீ.. முன்னடி ஒரு பொம்பளை.. பார்த்தா எந்தக் கொறையும் இருக்கிற மாதிரி தெரியலை.. அவங்க கூட பாஸ் வாங்கி வச்சிருக்காங்க. இந்தா டிக்கெட்”

சிறிது நேரம் கழித்து மீண்டும் வருகிறார்.

“ ஏன் பாஸ் வாங்கல?”

“ எங்க வாங்கறதுன்னு தெரியலீங்க”

“ அட என்னப்பா.. இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிறதில்லையா? தேவை இல்லாம பணத்தை வீணாக்கறையே. பாஸ் மட்டும் இருந்தா கால் டிக்கெட்டு தான். நீ இப்போ 11 ரூபாய் குடுத்திருக்க வேணாம். 3.50 குடுத்திருந்தா போதும். 11 ரூபாய் கூட கம்மியா தெரியலாம். நீ 50 ரூபாய் குடுத்து போக வேண்டிய இடமா இருந்தா அதுல கால் பாகம் குடுத்தா போதும். எவ்ளோ மிச்சம்னு பாரு. ”

“ அது எனக்கு தெரியாதுங்க”

”கவர்மெண்ட் சலுகை குடுக்கலைனு மட்டும் கொறை சொல்றிங்க.. குடுத்தா அதை பயன்படுத்திக்க மாட்டேங்கறிங்க..”

” பாஸ் எங்க வாங்கறதுங்க”

“ மொதல்ல ஒரு கவர்மெண்ட் டாக்டர் கிட்ட சர்டிபிகேட் வாங்கிக்கோ.நேரா கலெக்டர் ஆபிஸ் போ. அங்க இதுக்குன்னு ஒரு ஆபிஸ் இருக்கு. அங்க போய் ஒரு மனு குடு. அவஙக உடனே பாஸ் குடுப்பாங்க. அதை வச்சி எல்லா மஃப்சல் பஸ்லையும் கால் டிக்கெட்டு வாங்கிட்டு எங்க வேணாலும் போகலாம். எல்லா ஊர்லையும் இது செல்லும்.”

“ சரிங்க.. வாங்கறேன்”

பிறகு இன்னும் சிறிது நேரம் கழித்து வருகிறார்.

“ இந்தா பாரு.. இதான் மாதிரி படிவம். இந்த மாதிரி இருக்கனும். “

“ இது மாதிரி என்கிட்ட இருக்குங்க”
நண்பர் ஒரு புத்தகம் போன்ற அமைப்பில் காட்டுகிறார்.

“ அடப்பாவி .. இதான்யா நான் சொன்னது.. இதுல பாரு.. இந்த பக்கம், இந்த பக்கம், அப்புறம் இந்த பக்கம்.. இத மூனையும் ஜெராக்ஸ் எடுத்து வச்சிக்கோ. அதை எங்க கிட்ட குடுத்தா உனக்கு கால் டிக்கெட் மட்டும் போடுவோம். அப்புறம் இந்த பேப்பரை எல்லாம் எங்க ஆபீஸ்ல குடுத்துடுவோம்.”

”சரிங்க.. இனிமேல் ஜெராக்ஸ் எடுத்து வச்சிக்கிறேன்”

----

“ எங்க இருக்க சஞ்சய்?”

” ஞாயித்துக் கெழம எங்க அண்ணாச்சிப் போகப் போறேன். வீட்ல தான் இருக்கேன்.”

”சரி இரு.. உங்க ஏரியால தான் இருக்கேன். வரேன்..

“ வாங்க வாங்க”

”எதுனா சாப்ட வச்சிருக்கியா?

“ வெட்கம் வேதனை அவமானம்.. என்னை பார்த்து இப்டி கேட்டுட்டிங்களே அண்ணாச்சி..”

“ டேய்.. கேள்விக்கு பதில்”

“ஹிஹி.. வாங்கிட்டு வாங்க..”

“ தெரியும்டா.. சிவவிலாஸ் கிட்ட இருக்கேன்.. அதான் கேட்டேன்”

“ இன்னொரு நண்பரும் இருக்கார்.”

“அப்போ சேர்த்து வாங்கி வரேன்”

“ ஹிஹி.. அதுக்கு தான் சொன்னேன்.. பின்ன.. எனக்கு வாங்கி வரதை அவருக்குக் குடுத்துட்டு நான் என்ன வாய பாத்துட்டா இருக்க முடியும்?”

“ அடப்பாவி .. டேய்.. இரு வரேன்.. வந்து கவனிக்கிறேன்..”

“ சரி சரி.. சூடா வாங்கிட்டு வாங்க.. “

நேந்திரம் பழம் பஜ்ஜி, மெதுவடை, பக்கோடா எல்லாம் சுட சுட வந்தது.. மழை நேரத்துக்கு சூப்பரோ சூப்ப்ரா இருந்தது.

-------

“ எங்க இருக்கிங்க சஞ்சய்”

“ பிருந்தாவன் முன்னாடி”

“ இதோ.. வந்துட்டேன்.. இருங்க”
“ ஓய்.. எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது.. கொன்னுடுவேன்.. சீக்கிறம் வாங்க..”

“ அட வந்துட்டேன்பா.. 5 நிமிஷம் இருங்க”

வந்தாங்க.. கையில் ஒரு கிஃப்டோட..
முதல் முறை சந்திப்பதால் கிஃப்ட் கொடுக்கனுமாம்.. ஹ்ம்ம்.. எனக்கு இப்படி எல்லாம் ஃப்ரண்ட்ஸ்.. :)

அட்டைப் படத்தைப் பார்த்துட்டு அங்கயே திட்டினேன்.. உங்களுக்கெல்லாம் வேற ஒன்னுமே தெரியாதா? இதெல்லாம் ஒரு கிஃப்டான்னு.. அவங்க நம்மள விட நல்ல்வஙக்.. அப்டி எல்லாம் வாங்க முடியாது.. எனக்கு பிடிச்சது தான் தர முடியும்னு சவுண்டு குடுத்தாங்க.. சரி பொழச்சி போகட்டும்னு விட்டுட்டேன். :)

வீட்ல போய் பிரிச்சி பார்த்து அசந்துட்டேன்.. ரொம்ப புதுமையாவும் அழகாவும் இருந்தது.. ஊர்ல இருக்கிற வீட்ல டிவி மேல வச்சிருக்கேன்.. நெறைய பேர் அதை ஆச்சர்யமா பார்த்தாங்க.. அவ்ளோ புதுமையா இருந்தது.

“ இங்க பாருங்க அம்மனி.. நீங்க கிஃப்ட் குடுக்கறிகன்னு.. நானும் குடுக்கனும்னு எதிர்பார்க்காதிங்க.. அதெல்லாம் நமக்கு பழக்கம் இல்லை.. சொல்லிட்டேன்..”

”அட.. இதெல்லாம் நீங்க சொல்லி தான் தெரியனுமா? உங்க கிட்ட போய் அதெல்லாம் எதிர்பார்ப்பேனா?.. கவலைபடாதிங்க.. “

இது நல்ல பொண்ணுக்கு அழகு.. :))

என் இனிய பிறந்தநாள்( ஜூலை 7) வாழ்த்துகள் ராஜி.. வாழ்க வளமுடன்..
Tamiler This Week