இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner
Showing posts with label இணையதளம். Show all posts
Showing posts with label இணையதளம். Show all posts

Wednesday, 10 June 2009

சாமி பாட்டுக் கேட்கலாம் வாங்க


பள்ளிப்படிப்பு முடியும் வரை தினமும் வீட்டில் இருந்து தான் சென்று வருவேன். கல்லூரியில் சேர்ந்த பின் தான் ஹாஸ்டல் வாசம். பள்ளிப் படிப்பு முடியும் வரை மார்கழி மாதம் வந்தாலே கடும் எரிச்சலாக இருக்கும். அந்த மாதம் முடியும் வரை காலையில் 5 மணிக்கு மேல் தூங்க முடியாது. கடுமையான குளிர் வேற இருக்கும். அதையும் தாண்டி பெரிய கம்பளி போர்த்தி ரொம்ப நேரம் தூங்கலாம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் அதெல்லாம் ஆகாது. அந்த மாதம் முழுதும் மாரியம்மன் கோவிலுக்கு போய் பொங்கல் வைப்பார்கள். காலை சிலர், மாலை சிலர் என முறை வைத்து பொங்கல் வைப்பார்கள். அந்த மாதம் முடியும் போது அனைவரும் பொங்கல் வைத்துவிடுவார்கள்.

அதனால் தினமும் காலை 4 அல்லது 5 மணிக்கெல்லாம் கோவில் கோபுரத்தில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி அலற ஆரம்பித்துவிடும். சுமார் 5 கிமீ வரை கேட்குமளவுக்குகேட்கும்படி வைத்துவிடுவார்கள். அதுல சினிமா பாடல் போட மாட்டாங்க. மாட்டாங்க என்ன ? மாட்டோம்.. காலைல ரேடியோ செட்டுக்காரர் ஆன் பண்ணி விட்ருவார். அப்புறம் எங்க இஷ்டத்துக்கு பாட்டுப் போடுவோம். அந்த கேசட் பெட்டியில சாமி பாட்டு தவிர வேற ஒன்னும் இருக்காது. அப்போ எல்லாம் சாமி பாட்டுக் கேக்கறதுல விருப்பம் இருக்காதுன்னாலும் வேற வழி இல்ல. கேட்டுத் தான் ஆகனும். அவ்வப்போது பாடலை நிறுத்திவிட்டு மைக் ஆன் பண்ணி அன்று பொங்கல் வைக்க வேண்டியவர்களின் பெயரை சொல்லி சீக்கிறம் வர வேண்டும் என்றும் அன்று மாலை மற்றும் அடுத்த நாள் பொங்கல் வைக்கவேண்டியவர்கள் பெயரை சொல்லி அறிவிப்பும் செய்வோம். இதுக்கு பெரிய போட்டியே இருக்கும். ஹ்ம்ம்.. அதெல்லாம் இப்போ போயே போச்.. இப்போ எல்லாம் மார்கழி மாதமே யாருக்கும் நினைவி இருக்குதான்னு தெரியலை.
மார்கழி மாதம் மட்டும் இல்லை.. கோவில் திருவிழா எப்போ நடந்தாலும் இதே கதை தான். ஆகவே அந்தப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு வரிக்கு வரி நினைவில் இருக்கும். சினிமா பாடல் கூட 4 வரிகளுக்கு மேல் நினைவில் இருக்காது. விருப்பம் இல்லாமல் கேடிருந்தாலும் பின்னாளில் சாமி பாடல்கள் எல்லாம் ரொம்ப பிடித்துப் போய்விட்டது. சாமி கும்பிடுவதை நிறுத்திய பின்னும் கூட ரசிக்க முடிந்தது.

எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் மாரியம்மன் தொடர்பான பாடல்கள், டிஎம்எஸ்-ன் முருகன் பாடல்கள் மற்றும் ஐயப்பன் பாடல்கள் பெரும்பாலானவை வரிக்கு வரி பாட?! தெரியும். மார்கழி மாதம் பற்றி எழுத ஆரம்பித்தாம் 10 பதிவு எழுதலாம். காலையில் வாசல் பெருக்கி, சாணித் தண்ணீர் தெளித்து வெங்கசெங்கல் பொடியில் கோலம் போட்டு.........

இப்போ மேட்டர் அதுவல்லை..சமீபத்தில் ஒரு பதிவர் ஒரு பக்தி பதிவு எழுதி இருந்தார். அவர் எழுதும் அனைத்தும் பக்திமயமானது தான். பெயர் மறந்துவிட்டது. ராமலக்‌ஷ்மி அககாவுக்கு தெரியும். அவர் பதிவில் இந்தப் பாடல்கள் பற்றி படித்ததும் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். எனக்கு இந்த மாதிரி பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என்றும் அதற்கான சுட்டிகள் இருந்தால் கொடுங்கள் என்றும் கேட்டிருந்தேன். பின் நானும் thiraipaadal , imeem , last.fm , vodpod என எனக்குத் தெரிந்த தளங்களில் எல்லாம் தேடினேன். கூகுளிட்டும் பார்த்தேன். ஒன்னும் கிடைக்கலை. கடுப்பாகி விட்டுட்டேன்.

இதை எப்படியோ தெரிந்துக் கொண்ட என் பேவரிட் இசைத் தளமான thiraipaadal புதிதாக bhaktipaadal என்று ஒரு தளம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஏராளமான பக்திப் பாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன. திரைபாடல் தளத்தில் ரொம்ப பிடித்த விஷயமே அவர்கள் வகைப்படுத்தும் விதம் தான். அற்புதமாக இருக்கும். இசையும் தெளிவாகவும் தரமாகவும் இருக்கும். பக்திபாடல் தளத்தின் சென்றதும் ஈஸ்வரி அவர்கள் மற்றும் டி எம் எஸ் பாடல்களைத் தான் தான் கேட்டேன். என்ன ஆச்சர்யம்...!.. சிறு வயதில் கேட்டிருந்தாலும் அனைத்து வரிகளும் இன்னும் நினைவில் இருக்கு. கூடவே பாட?! முடிகிறது. அந்த அளவு மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. :)

டிஸ்கி: என்னை யாருக் காதலிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக காதலை வெறுத்தாலும் காதல் பாடல்கள் கேட்கப் பிடிக்காமலா இருக்கு? அதே போல் தான் இதுவும்.. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் சாமி பாடல்கள் ரொம்பவே பிடிக்கும். கந்தசஷ்டிகவசத்துக்கு நான் அடிமை. :)

சாமி பாட்டு கேட்கும் ஆசை உள்ளவர்களுக்கு,
பக்திபாடல் இசைத்தளம் Baktipaadal.com

Wednesday, 25 February 2009

Google Analytics பதிவர்களுக்காக

கூகுள் அனலிடிக்ஸ் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாத சிலருக்காக இந்தப் பதிவு. இது நம் வலைபக்கத்துக்கு வருபவர்கள் பற்றிய துல்லியமான தகவலை தருகிறது. எங்கிருந்து வந்திருக்கிறார்கள். எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்.. எந்த பதிவுக்கு எவ்வளவு பேர், அவர்கள் உபயோகிக்கும் உலவி, இயங்கு தளம் , நாடு, எதைத் தேடும் போது நம் வலைப்பக்கம் வந்தார்கள்... என இன்னும் ஏராளமான தகவல்கள்.


http://www.google.com/analytics/ என்ற இணையதளத்துக்கு போய் கூகுள் கணக்கை வைத்து லாகின் பண்ணுங்க. அல்லது ஏற்கனவே கூகுள் கணக்கில் லாகின் செய்து இருந்தால் , http://www.google.com/analytics/ முகவரிக்கு சென்றதும் கிடைக்கும் பக்கத்தில் Access Analytics என்பதை தேர்வு செய்யவும். கூகுள் கணக்கு இல்லாதவர்கள் ஒன்றை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்.


பிறகு அதில் வலது பக்கம் + Add new account என்பதை தேர்வு செய்யவும். அடுத்து தெரியும் பக்கத்தில் உள்ள ”You are just a few steps from Google Analytics. Click on the Sign Up button to get started.” என்பதன் கீழே இருக்கும் Sign Up பொத்தானை அமுக்கினால் அடுத்தடுத்து வரும் பக்கங்களில் கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள். பிறகு ஒப்பந்தத்தை எற்றுக் கொள்வதாக உறுதி அளித்து தொடருங்கள்.

அடுத்தப் பக்கத்தில் கிடைக்கும் நிரலியை வெட்டி உங்கள் வலைப்பக்கத்தின் நிரலிகளுக்குள் ../body>என்பதற்கு மேல் ஒட்டி விடவும். அம்புட்டு தான்.

சரியாக சேர்த்திருக்கிறீர்களா என்பதை அறிய
http://www.google.com/support/analytics/bin/answer.py?hl=en_US&answer=55480&utm_id=ad

அப்பாலிக்கா வித விதமா விவரங்கள் பார்க்க வேண்டியது தான்.. :)



Posted by...

Tuesday, 9 December 2008

Google SMS - பேஷ் பேஷ் - Dont Miss it.

நம்மில் பெரும்பாலோர் கூகிளின் பரம ரசிகர்கள் தான். கூகுளின் ஒவ்வொரு சேவையும் செம கலக்கலா இருக்கும். உதாரணம் சொல்லி பதிவை பெரிசாக்க விரும்பலை.

இப்போ கூகுள் குறுஞ்செய்தி சேவையை அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். குறுஞ்செய்தி என்றால் அடுத்தவர் கைப்பேசிக்கு செய்தி அனுப்பும் மொக்கை சேவை இல்லை.. நமக்கு மிகவும் பயனுள்ள சேவை இது. இதற்காக சிறப்புக் கட்டணங்கள் எதுவும் இல்லை. நாம் வேறு கைப்பேசிக்கு செய்தி அனுப்ப ஆகும் கட்டணம் தான் இதற்கும். கூகுள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. என்னைப் போன்ற அளவில்லா இலவச குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருப்பவர்களுக்கு இன்னும் சவுகர்யமே.. :)

தேர்தல் பற்றிய செய்தி வேண்டுமெனில் news delhi election என்று அனுப்பினால் அடுத்த சில நொடிகளில் டில்லி தேர்தல் பற்றிய தலைப்பு செய்திகள் கிடைக்கிறது.

dlf stock என்று அனுப்பினால் அந்த பங்கின் தற்போதைய விலை கிடைக்கிறது.

கிரிக்கெட்( CRICKET india ) , ராசிபலன் (horoscope september 7), பண பரிமாற்ற மதிப்பு(5000 inr in usd) , விமான நிலவரம் ( it302), ரயில் முன்பதிவு விவரம்( pnr number), வானிலை( weather chennai), கால்குலேட்டர் (5+2*2, half cup in teaspoon, 70F in C, 1 dollar in INR, 3 USD in INR ), மொழிபெயர்ப்பு வசதி(translate hello in french), சில வார்த்தைகளுக்கான விரிவாக்கம் அல்லது சுருக்க விவரம்( define tamil ) , உள்ளூர் வணிக சேவைகள்(parotta chennai :)) ) பற்றிய விவரம் என அத்தனை வசதிகளும் அசத்தலாக இருக்கிறது.

trains morappur to coimbatore என்று செய்தி அனுப்பினால் அடுத்த நொடி மொரப்பூரிலிருந்து கோவை செல்லும் ரயில்களின் பட்டியல் ரயில் எண் உட்பட கிடைக்கிறது. அதில் இருக்கும் வரிசை எண்ணை திரும்ப அனுப்பினால் அந்த குறிப்பிட்ட ரயில் புறப்படும் நேரம் சேரும் நேரம் எல்லாம் கிடைக்கிறது.

movies coimbatore என்று அனுப்பினால் கோவையில் பிரபல தியேட்டர்களின் திரைப்படங்கள் பட்டியல் கிடைக்கிறதும். அதன் வரிசை எண்ணை திரும்ப அனுப்பினால் அந்த படம் எந்த தியேட்டரில் போட்டிருக்காங்க அதன் முகவரி தொலைப்பேசி எண் எல்லாம் கிடைக்கிறது.

population of coimbatore என்று அனுப்பினால் கோவயில் மக்கள் தொகை கிடைக்கிறது. இது போல் gdp of pakistan, states of china என்று தேவையான எல்லாம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

”capital of ethiyopia” என்று கேட்டால் , அடேய் தடியா உன்னை எல்லாம் என்னன்னுடா பெத்தாங்க.. எண்டா தப்பா டைப் பண்ணி என் உயிர வாங்குற என்று அசிங்க படுத்துவதில்லை.. ப்ரதர்
Did you mean 'capital of ETHIOPIA'?

Q&A:
Ethiopia
Capital: Addis Ababa
Source: www.britannica.com/eb/article-9344092/Ethiopia - என்று பொறுமையாய் விவரம் தருகிறது..

மேலும் தகவலுக்கு http://www.google.co.in/mobile/default/sms/ .

சேவைக்கான எண்
9-77-33-00000 . +91 அல்லது 0 எதுவும் சேர்க்கத் தேவை இல்லை. உள்ளூர் எண்ணாகவே செயல்படுகிறது.

....என் மொபைலில் “A" என்று பதிவு செய்து வைத்துவிட்டேன். இனி பொழுதுபோக்கே இது தான்.. :))

Friday, 25 July 2008

a ப்பார் ஆப்பிள்

நம்ம சிவா மாம்ஸை யாரோ மாட்டிவிட்டதாம் அதே கடுப்பில் அவரும் என்னை மாட்டி விட்டுட்டார். a ப்பார் ஆப்பிள் என்ற தலைப்பில் நான் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை பட்டியலிட வேண்டுமாம்..ஹ்ம்ம்.. உங்க தலை எழுத்து... :)

  1. Gmail - இதுவன்றி இணையத்தில் ஒரு நாளும் செலவளிக்க முடியாது.
  2. Youtube India - NDTV, Google, ப்ரிட்னி, ஷகிரா, ஸ்பைஸ் கேர்ள்ஸ் மற்றும் சிலரின் ஆல்பங்கள் சப்ஸ்க்ரைப் பண்ணி வச்சிருக்கேன். அடிக்கடி பார்த்து ஜொள்ளு விடுவது வழக்கம். :P
  3. Thiraipaadal - அலுவலகத்தில் இருக்கும் போது இதிலிருந்து பாடல்கள் கேட்டுக் கொண்டிருப்பேன். இதில் இல்லாத தமிழ் பாடல்களே இல்லை எனலாம். தனித் தனியாக எல்லா வகையிலும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
  4. kumudam Reporter - ஓசியில் பரபரப்பு அரசியல் செய்திகள் படிக்க.
  5. Orkut - நண்பர்களுடன் இணைப்பில் இருக்க.
  6. Download.com - புதிய மென்பொறுள்களை பற்றி அறிய. தேவையான இலவச மென்பொரூள்களை பதிவிறக்க.
  7. imeem - இதன் உறுப்பினர்களின் மெல்லிசைப் பாடல் தொகுப்புகளை கேட்டு ரசிக்க.
  8. Esnips - மாத்தாந்திர வியாபார அறிக்கையை பரிமாறிக் கொள்ள. மின் நூல்கள் படிக்க.
  9. Blogger - சொல்லியாத் தெரியனும்?
  10. SiliconIndia - வியாபாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப செய்திகளுக்கு. வியாபாரத் தொடர்புகளுக்கு.
  11. ZD Net - தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த கருவிகளின் செய்திகளுக்கு.
  12. IOB - நிறுவன வங்கி கணக்கின் தினசரி பரிமாற்றம் பற்றி அறிய.
  13. ICICI Bank - என் வங்கி கணக்கு மற்றும் இணைய வழி பணப் பரிமாற்றத்திற்கு.
  14. HDFC Bank - கடன் அட்டை பயன்பாடு பற்றிய விவரங்களுக்கு.
  15. Wikipedia - பல விஷய்ங்களை பற்றி விவரமாகத் தெரிந்துக் கொள்ள.
  16. IBNLive - சுடச் சுட செய்திகள் மற்றும் விடியோக்களுக்கு.
  17. Yahoo Mail - யாஹூவில் உள்ள ஒரு மெயில் பார்க்க.
  18. MSNIndia- எம் எஸ் என் மெயில் பார்க்க.. மற்றும் அதன் பல பயனுள்ள பிரிவுகளை உபயோகிக்க.
  19. Vodpod - இசை விடியோக்கள் பார்க்க ரசிக்க.
  20. last.fm - நண்பர்களின் இசைத் தொகுப்பை கேட்க. இசைக் கருவிகளின் இசையை கேட்க.
  21. Govt of India - அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய முடிவுகள் பற்றிய விவரத்திற்கு. இதில் பதிவு செய்து வைத்து இருப்பதால் அவ்வப்போது அப்டேட்டும் வந்து கொண்டே இருக்கும்.
  22. maps.live.com - குறிபிட்ட இடங்களின் வழித் தடம் , தூரம் மற்றும் கடக்கும் நேரம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ள.
  23. Tata Indicom Broadband - இணைய பயன்பாடு பற்றிய விவரம் அறிய. அன்லிமிட்டட் தான். ஆனாலும் எவ்ளோ பயன் படுத்தி இருக்கேன் என்று தெரியனும்ல.. எதுலையும் ஒரு கணக்கு வச்சுக்கோனும்ல. ;)
  24. Buzz18 - பாலிவுட் ஃபிகர்ஸ் பத்தி கிசுகிசு படிகவும் அம்க்க நடக்கிற மேட்டர் தெரிஞ்சிக்கவும்.
  25. Forbes - புள்ளிவிவரங்கள் மற்றும் பலவகையான பட்டியல்கள் பார்க்க.. குறிப்பாக பணக்காரர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் பற்றிய பட்டியல் பார்த்து வயித்தெரிச்சல் படுவதற்கு. :(
  26. linked in - சில பெரும்புள்ளிகளின் தொடர்புக்கு.
  27. Howstuffworks - இது மிகப் பெரிய பொக்கிஷம். ஒவ்வொரு செயலும் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய இங்கு போவதுண்டு.
  28. Dictionary - சில சொற்களை தேடும் போது எப்படியும் இங்கு போயாக வேண்டி இருக்கும்.
அவ்வப்போது பார்க்கும் தளங்கள் இன்னும் நெறைய இருக்கு.... மேல இருக்கும் தளங்கள் எல்லாம் வாரத்தில் ஒருமுறையாவது பார்க்கும் தளங்கள். நான் யாரை TAG பன்றதுனு தெரியலை. ஆர்வம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் பேர் குடுக்கவும். :))

.. திட்ட விரும்புபவர்கள் டபுள்யூ டபுள்யூ டபுள்யூ டாட் மங்களூர்சிவா டாட் காமிற்கு கெட்ட வார்த்தையில் திட்டி அனுப்புங்க....:P

நான் அழைப்பது ( புதியவர்களை ஊக்குவிப்போம்..)
1.பொடிப்பொண்ணு
2.ராப்
3. ராமலக்ஷ்மி

Thursday, 24 July 2008

கூகுள் செய்திகள் தமிழில்


நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூகுள் தமிழ் செய்திகள் இப்போது வெளிவந்துவிட்டது.ஆங்கிலத்தில் உள்ள அதே பிரிவுகளுடனும் அதே மேலதிக வசதிகளுடனும் இருக்கிறது. தமிழ் செய்திகளுக்கான முக்கியமான தளங்கள் அனைத்திலும் இருந்து செய்திகள் திரட்டப் படுகிறது. இலங்கை சம்பந்தப் பட்ட செய்திகளுக்கு தனி பிரிவும் இருக்கிறது. ம்ஏலும் நமக்கு விருப்பமான தலைப்புகளை சேர்த்துக் கொள்ளவும் முடிகிறது. இதன் மூலம் அந்த தலைப்பிலான செய்திகளை தனிப் பிரிவாக படிக்கலாம்.


கூகுள் 3D அரட்டைக்கு புதியதாக Lively என்ற சேவையை அறிமுகப் படுத்தி இருக்கிறது. கூகுள் கணக்கை வைத்து உள்ளே சென்று நமக்கென மிக அழகாக நம் கற்பனைக்கேற்ற வகையில் அரட்டை அறையை உறுவாக்கி அதில் நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்...

Monday, 12 May 2008

மங்களூர் சிவா காதலி ஃபோட்டோ.

Make Over Magic Toolன் உதவியுடம் அடையாளம் தெரியாமல் மேக் அக் போடப் பட்டுள்ளது. :P.... அதென்ன Make Over Magic என்று கேட்பவர்கள் மட்டும் தொடரலாம்.இதை பயன்படுத்தி ஒரு பெண்ணின் புகைபடத்தை அப்லோட் செய்து அவருக்கு Lip Liner, Lip Stick, Eye Liner , Hair Style, Hair colour போன்ற வசதிகளை பயன்படுத்தி அந்த பெண்ணிற்கு பிடித்த மாதிரி ஒப்பனை செய்து பார்த்து , பிறகு அதே போல் நேரடியாக செய்து கொள்ளலாம். Indiwo என்ற பெண்களுக்கான பி்ரத்யேக இணையதளத்தில் கிடைக்கிறது இந்த டூல். இந்த டூலை பயன்படுத்தி தான் மங்களூர் சிவாவின் காதலியை அழகு படுத்தி இருக்கிறேன். ஆஹா.. அடுத்த தேர்தல்ல அரசியல் கட்சிகள் டிவி மட்டும் இல்லாம ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஓவன் எல்லாம் குடுத்து நம்ம பிஸினஸ்க்கு ஆப்பு வச்சாலும் கைவசம் ஒரு தொழில் இருக்குடோய். :)..... பெண்களுக்கு உபயோகமான டூல். முயற்சித்து பாருங்க.

இந்த தளம் முழுக்க முழுக்க பெண்களுக்கானதாக இருப்பினும் ஆண்களும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் ஏரளமாக இருக்கு. மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள் அழகாக விளக்கப் பட்டிருக்கு. இதை பதிவாகக் கூட போடலாம். ஆனால் அதை நம் மக்கள் எந்த அளவுக்கு நேர் மறையாக எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியாததால் அதை இங்கு ( Breast Self Examination-
Learn to Detect Breast Cancer
)போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

Week-by-Week Pregnancy Guide - கர்ப்பிணி பெண்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பகுதி. இதில் கருவில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த நிலையில் இருக்கும், அதன் வளர்ச்சி மற்றும் அந்த நேரங்களில் அவர்கள் செய்ய வேண்டியவை என சுருக்கமாகவும் அழகாகவும் இருக்கிறது.

... ஒருத்தன் உருப்படியா எதுனா சொல்ல விடறாங்களா?.. நம்ம மை ஃப்ரண்ட் வம்பிழுக்கிறாங்க... அவங்க கூட ஃபேஸ்புக்ல விளையாடி ஜெயிக்கனுமாம்.. என்ன கொடுமை சார் இது... இருமா கண்ணு.. இதோ இப்போ வரேன்...

போனஸ் : யாஹூ சமீத்தில் பெண்களுக்காக ஆரம்பித்துள்ள தளம்( or Online Magazine ) Yahoo Shine இதையும் பாருங்க. ஆண்களும் படிக்கலாம் சாமியோவ்.
.. இப்பத்திக்கு சஞ்சய் அப்பீட்டு.. :))

Tamiler This Week