இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.com
Showing posts with label அணுசக்தி ஒப்பந்தம். Show all posts
Showing posts with label அணுசக்தி ஒப்பந்தம். Show all posts
Sunday, 20 July 2008
அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து தொலைங்க
Lables
அணுசக்தி ஒப்பந்தம்

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு வரி செய்தி :
நாட்டின் மின் தேவையை சமாளிப்பதே.
இன்று நாட்டின் மின்சார உற்பத்தி எந்த நிலையில் இருக்கு என்று எல்லோருக்கும் தெரியும். தமிழக அரசு தினமும் மின் வெட்டை அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் இதே நிலைமை தான். அவ்வளவு பற்றாக்குறை. காரணம்.. மின் உற்பத்திக்கான ஆதாரங்கள் குறைந்துகொண்டே வருவது தான். நிலக்கரி இருப்பும் குறைந்து கொண்டே வருகிறது. எவ்வளவு காலத்திற்கு தான் வெட்டி எடுக்க முடியும். இருக்கும் வரை தான். இன்னும் சில ஆண்டுகளே நிலக்கரி கிடைக்கும். பிறகு என்ன செய்வது?காங்கிரஸ் அரசாங்கத்தின் "கையாகாத்தனத்தால்" , "தவறான ஆட்சி முறையால்" பருவ நிலைகளும் மாறிவிட்டது. சரியான மழை இல்லை. நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. ஆக.. நீர் மின்சார உற்பத்தியும் குறைந்து விட்டது.
எனவே மாற்று வழியை தேடித் தானே ஆக வேண்டும்?. அந்த மாற்று வழி தான் அணு மின்சாரம். ஆனால் அதை தயாரிக்க போதுமான அளவு மூலப் பொருள் (தோரியம்) நம்மிடம் இல்லை. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப் போகும் அணு சக்தி ஒப்பந்த்ததின் மூலம் நமக்கு அது கிடைக்கும். இதன் மூலம் நம் மின்சாரத் தேவையை ஓரளவாவது பூர்த்தி செய்யலாம். இல்லை எனில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இருளில் மூழ்கும் என்பது உறுதி.
இந்த ஒப்பந்தத்தை எதிர்பவர்கள் சொல்லும் ஒரே காரணம் "அமெரிகா நம் அணு உலைகலை கண்காணிக்கும். நாம் அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட முடியாது. நாம் அணு குண்டு தயாரிக்க அமெரிக்கா தடை விதிக்கும்" என்பது தான். இது பயங்கரமாய் சிரிப்பை வரவழைக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவை எந்த உலக நாடும் கட்டுபடுத்த முடியாது. அமெரிக்காவிடமிருந்து வாங்கும் தோரியத்தை நாம் அணு குண்டு தயாரிக்க உபயோகப் படுத்திவிடக் கூடாது என்று தான் அவர்கள் கண்காணிப்பார்கள். அப்படியே நாம் அனுகுண்டு சோதனை நடத்தினால் இந்த ஒப்பந்தம் ரத்தாகும் அவ்வளவு தான்.
அதுவும் எல்லா அணு உலைகளிலும் அவர்களுக்கு அனுமதி இல்லை. சிவில் மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்கென இரண்டு வகையாக நம் அணு உலைகள் பிரிக்கப் படும். மின்சாரத்திற்கு பயன்படுத்தப் படும் அணு உலைகளை தான் சர்வதேச அணுசக்திக் கழகம் கண்காணிக்கும். இராணுவ பயன்பாட்டிற்கான அணு உலைகளில் நாம் என்ன செய்தாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது.
அப்படியே நாம் அணுகுண்டு வெடித்து அமெரிக்கா நமக்கு அணு சப்ளையை நிறுத்திக் கொண்டாலும் கவலை இல்லை. அணுகுண்டு சோதனைக்கான நேரம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அது வரையில் அவர்கள் அளிக்கும் தோரியத்தை பயன்படுத்திக் கொள்ளளாமே. கிடைக்கும் வரை லாபம் தானே.
அணு குண்டு சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்தாகும் என்று தான் விதிகள் உள்ளதே ஒழிய நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. அப்படியே நாம் அணுகுண்டு ஆராய்ச்சி நடத்தினாலும் யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது. கடந்த முறை அணுகுண்டு சோதனை நடத்தி முடித்து புத்தர் சிரித்தார் என்று அறிவித்த பின் தான் உலக நாடுகளுக்கு தெரிந்தது.
ஆகவே நம் மின் தேவையை உணர்ந்து தேவை இல்லாத குழப்பங்களை தவிர்த்து அனைவரும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் டி.ராஜா : நாங்கள் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிக்கவில்லை. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை தான் எதிர்க்கிறோம்." ஹாஹா.. என்ன கொடுமையான கொள்கை இது?..
Subscribe to:
Posts (Atom)