இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday, 27 June 2008

Set என்பதற்கு சரியான தமிழ் சொல் என்ன?

சற்று நேரத்திற்கு முன் மக்கள் தொலைகாட்சியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தேன். டென்னிஸ் பற்றிய செய்தி சொல்லும் போது , .................... என்ற set கணக்கில் வெற்றி பெற்றார்கள் என குறிப்பிட்டார்கள். செட் என்பதற்கு தமிழ் சொல் தெரியவில்லை போலும். டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப் படும் இந்த SET என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் சொல் என்னவாக இருக்கும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

34 Comments:

பிரேம்ஜி said...

அம்பி வணக்கம். முடியாத சில ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே சொல்வது நல்லதுன்னு நினைக்கிறேன். இப்ப பாருங்க டென்னிஸ் என்பதற்கு தமிழ் படுத்துவதே கொஞ்சம் கஷ்டம். அதில் செட் எனபதற்கு தமிழ் பதம் இன்னும் சிரமம். நானும் ரொம்ப நாளா பெட்ரோல் மற்றும் டீசல் என்பதற்கு தமிழ் பதம் கிடைக்குமான்னு தேடிட்டிருக்கேன்.

மங்களூர் சிவா said...

செட் என்பதற்கு தமிழில் 'சோடி'

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

set - தொகுதி என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

petrol - கல் நெய், பாறை நெய் என்று சொல்லும் வழக்கு உண்டு.

புரட்சி தமிழன் said...

பெட்ரோலுக்கு கல் நெய் என்று சொன்னால் டீசலுக்கு என்ன சொல்வீர்கள் அடர் கல் நெய் என்று சொல்வீர்களோ

புரட்சி தமிழன் said...

டென்னிஸ் என்பது வினைச்சொல்லாக இல்லாமல் பெயர்ச்சொல்லாக இருப்பதனால் அதனை மொழி பெயர்ப்பது கடினம். எந்த ஒரு பெயர்ச்சொல்லையும் மொழி பெயர்ப்பது கடினம் அந்த பொருளின் பெயர் நம் மொழியில் பயன்பாட்டில் இருந்தால் மட்டுமே சாத்தியம். வினைச்சொல் அனைத்தையும் மொழி பெயர்க்கலாம் அது சாத்தியம்.

புரட்சி தமிழன் said...

ஒரு வேலை டென்னிஸை வட்ட மட்டைப்பந்த் என்றும் கிரிக்கெட்டை நீள் மட்டைப்பந்து என்று கூறலாம் ஷெட்டில் கார்க்கை தக்கை மட்டை ஆட்டம் என்று கூறலாம்.

தமிழநம்பி said...

Set என்றால் கணம்.
'...என்றகணக்கணக்கில் வெற்றி பெற்றார்' என்று எழுதலாம்.
-த.ந.

சென்ஷி said...

செட் என்பதற்கு அர்த்தம் இடம், பொருளுக்கு ஏற்றாற் போல் மாறுபடும் தன்மை கொள்ளும்.

ஆடுகளத்தில் செட் என்பதற்கு "முயற்சி" என்பதே சரியானதாக இருக்கும்.

இந்த முயற்சியை முன்பே தேசிய தொலைக்காட்சி செய்திகளில் கேட்ட அனுபவம் உண்டு..

புருனோ Bruno said...

//பெட்ரோலுக்கு கல் நெய் என்று சொன்னால் டீசலுக்கு என்ன சொல்வீர்கள் அடர் கல் நெய் என்று சொல்வீர்களோ//

சாமி, டீசல் என்பது பெயர்சொல். அதை மொழி பெயர்க்க கூடாது.

xerox என்பது செராக்சு தான்
Photo copying தான் நகலெடுப்பது.

Anonymous said...

Look at...

http://www.etymonline.com/index.php?l=s&p=15

set (n.)
"collection of things," 1443, from O.Fr. sette "sequence," variant of secte, from M.L. secta "retinue," from L. secta "a following" (see sect). The word had been earlier used in Eng. in the sense of "religious sect" (1387), which likely is the direct source of some meanings, e.g. "group of persons with shared status, habits, etc." (1682). Sense of "burrow of a badger" is attested from 1898. That of "scenery for an individual scene in a play, etc." is recorded from 1859. Meaning "group of pieces musicians perform at a club during 45 minutes (more or less) is from c.1925, though it is found in a similar sense in 1590.

'தொகுதி' seems to make better sense.

மாதங்கி said...

சஞ்சய்,

செட் என்ற ஆங்கில வார்த்தைதான் ஆங்கில அகரமுதலியில் மிக அதிகமாக வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்ட சொல்லாம்.

செட் என்பதற்கு
சோடுப்பு என்ற பதம் பயன்படுத்தப்படலாம் என்று எங்கோ படித்தேன்


ஓரணை- one pair
ஒருப்படி- uniform

இராம.கி said...

set = கொத்து;
set theory = கொத்துத் தேற்றம்.

பல ஆட்டங்கள் சேர்ந்தது ஒரு கொத்து.

"சான்யா 7க்கு 6 என்ற ஆட்டக் கணக்கில் முதற் கொத்தை வென்றார். இருப்பினும் சிறுசிறு தவறுகளால், வலுவிழந்து, இரண்டாவது கொத்தில் எதிராளியிடம் தோற்றுப் போனார். மீண்டும் பெரும்பாடுபட்டு மூன்றாவது கொத்தை வென்றார்."

கொத்து எ்னும் போது அதனுள்ளே ஓர் ஒழுங்கு இருப்பது சட்டென்று நமக்குப் புரிபடுவதில்லை. ஆனாலும் ஏதேனும் ஒன்று கொத்தின் எல்லா உறுப்புக்களையும் இணைக்கும். அந்த உறவு ஒன்றைச் சொன்னால் கொத்தின் கட்டுமானம் புரிந்து போகும்.

தமிழில் "ஒரு கொத்து மாங்காய், ஒரு பூங்கொத்து, ஒரு கொத்து வீடுகள்" என்னும் போது நம்மையறியாமல் கணிதத்தில் வரும் set என்பதையே நாம் உணருகிறோம்.

கணம் என்னும் போது அடுத்துறும் பாங்கு(இதற்கு அடுத்தது அது; இதற்கு முந்தையது, பிந்தையது என்னும் associative property) பெறப்படும். இதை ஒழுங்குப் பாங்கு (order property)என்றும் சொல்லுவர். எனவே இந்தக் காலக் கணிதத்தின் set theory இல் கணம் அடிப்படைத் தொகுதி ஆகாது.

கொத்து என்பது ஒரு விதப்பான தொகுதி. தொகுதி என்பது பொதுமையான collection என்பதற்குச் சரி வரும்.

set (கொத்து),category (கட்டுக் கூறு),ring (வளையம்),group (குழு)
போன்றவை ஏற்கனவே 30, 40 ஆண்டுகளாய் உயர்கணிதத்தில் பயன்படும் தமிழ்ச் சொற்கள்.

அன்புடன்,
இராம.கி.

பாபு said...

டென்னிஸ் பொறுத்தவரை செட் க்கு சுற்று என்பதை use பண்ணலாம்

"இந்த சுற்றில் வெற்றி பெற்றார்" என்று கேள்வி
பட்டதில்லையா
இது நேரடியான மொழி பெயர்ப்பு இல்லை

Anonymous said...

தொடை

நிஜமா நல்லவன் said...

In tennis a unit of match consisting of six or more games is called as set அப்படின்னா செட் என்பதற்கு தொகுதி என்று அர்த்தம் கொள்ளலாம்:)

நிஜமா நல்லவன் said...

///புருனோ Bruno said...
சாமி, டீசல் என்பது பெயர்சொல். அதை மொழி பெயர்க்க கூடாது.///



ரிப்பீட்டேய்.....!

FunScribbler said...

set? எனக்கு செட் தோசை மட்டும் தான் தெரியும்ண்ணா!:))

புரட்சி தமிழன் said...

//நிஜமா நல்லவன் said...
///புருனோ Bruno said...
சாமி, டீசல் என்பது பெயர்சொல். அதை மொழி பெயர்க்க கூடாது.///

அய்யா அங்க என்ன சொல்லி இருக்குனு கொஞ்சம் கவனிங்கய்யா பெயர்ச்சொல்லை மொழி பெயர்க்க முடியாதுனுதான் நான் சொல்லியிருக்கேன். கொஞ்சம் நிதானமா பாருங்க

//புரட்சித் தமிழன் said...
டென்னிஸ் என்பது வினைச்சொல்லாக இல்லாமல் பெயர்ச்சொல்லாக இருப்பதனால் அதனை மொழி பெயர்ப்பது கடினம். எந்த ஒரு பெயர்ச்சொல்லையும் மொழி பெயர்ப்பது கடினம் அந்த பொருளின் பெயர் நம் மொழியில் பயன்பாட்டில் இருந்தால் மட்டுமே சாத்தியம். வினைச்சொல் அனைத்தையும் மொழி பெயர்க்கலாம் அது சாத்தியம்.//

Sanjai Gandhi said...

@ பிரேம்ஜி : நான் எனக்காக கேட்கவில்லை. நிச்சயம் நான் அதை ஆங்கிலத்தில் தான் சொல்லப் போகிறேன். மக்கள் தொலைகாட்சிக்கு நம்மால் ஆன உதவியை செய்யலாமே என்று கேட்டேன். :) கருத்துக்கு நன்றி.

----
// மங்களூர் சிவா said...

செட் என்பதற்கு தமிழில் 'சோடி//
நீங்க எந்த சோடிய சொல்றிங்க மாம்ஸ்? :P

---------
//set - தொகுதி என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.//

ஓ..

//petrol - கல் நெய், பாறை நெய் என்று சொல்லும் வழக்கு உண்டு.//
நல்ல தகவல். நன்றி ரவி.

----
@ புரட்சி தமிழன் : நல்ல விளக்கங்கள். மிக்க நன்றி.

Sanjai Gandhi said...

//சென்ஷி said...

செட் என்பதற்கு அர்த்தம் இடம், பொருளுக்கு ஏற்றாற் போல் மாறுபடும் தன்மை கொள்ளும்.//

நிச்சயமாக. அதனால் தான் இந்த செட்டை எப்படி சொல்வதென்று கேட்டேன்.

//ஆடுகளத்தில் செட் என்பதற்கு "முயற்சி" என்பதே சரியானதாக இருக்கும்.

இந்த முயற்சியை முன்பே தேசிய தொலைக்காட்சி செய்திகளில் கேட்ட அனுபவம் உண்டு..//

அட அபப்டியா?.. நன்றி சென்ஷி.

Sanjai Gandhi said...

//புருனோ Bruno said...

//பெட்ரோலுக்கு கல் நெய் என்று சொன்னால் டீசலுக்கு என்ன சொல்வீர்கள் அடர் கல் நெய் என்று சொல்வீர்களோ//

சாமி, டீசல் என்பது பெயர்சொல். அதை மொழி பெயர்க்க கூடாது.

xerox என்பது செராக்சு தான்
Photo copying தான் நகலெடுப்பது.//

xerox என்பது ஒரு ப்ராண்ட் பெயர் புருனோ சார். ப்ராண்ட் பெயரை அப்படியே தானே உபயோகிக்க முடியும். அந்த நிருவனம் போட்டோ காப்பியிங் இயந்திரத்தை உருவாக்கியதால் அந்த செயலுக்கும் அதுவே பெயராக மாறி xerox என்பது ஒரு வினைச் சொல் என்பது போல் ஆயிற்று.

கருத்துக்கு நன்றி டாக்டர்.

Sanjai Gandhi said...

நன்றி அனானி
....
//ஓரணை- one pair
ஒருப்படி- uniform//
தெரிந்து கொண்டேன். நன்றி மாதங்கி.
...........

//set = கொத்து;
set theory = கொத்துத் தேற்றம்.

பல ஆட்டங்கள் சேர்ந்தது ஒரு கொத்து. //

நன்றி ராம.கி ஐய்யா.. அழகான விளக்கமான பின்னூட்டம். மிக்க நன்றி.

Sanjai Gandhi said...

// babu said...

டென்னிஸ் பொறுத்தவரை செட் க்கு சுற்று என்பதை use பண்ணலாம்

"இந்த சுற்றில் வெற்றி பெற்றார்" என்று கேள்வி
பட்டதில்லையா
இது நேரடியான மொழி பெயர்ப்பு இல்லை//

... என்ற சுற்று கணக்கில் வென்றார் என்பது கூட சரியாகத் தான் இருக்கும் போல.
நன்றி பாபு.

Sanjai Gandhi said...

@ அனானி : யார் தொடை?.

@ நி.நல்லவன் : நல்ல கருத்து. நன்றி.

@ தமிழ்மாங்கணி : உனக்கு திங்கறத தவிர வேற ஒன்னும் தெரியாதா? ஏன் அண்ணன் மானத்தை வாங்கற?

ராஜ நடராஜன் said...

//petrol - கல் நெய், பாறை நெய் என்று சொல்லும் வழக்கு உண்டு.//

இங்கே ஆழ்மணலில் இருந்துதான் கச்சா எண்ணெய் கிடைக்கிறது.கச்சா எண்ணை கருப்புத்தங்கம் என்றால் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை எரிஎண்ணெய் என்று பதம் கொள்ளலாமா?

செட் = இரண்டு?
உடுப்பியில் செட் தோசை கேட்டால் இரண்டு தோசைதான் தருகிறார்கள்.

// (தின்பது தவிர வேற ஒண்ணும் தெரியாதா?//

அப்படின்னு மறுபடியும் கேட்காதீங்க
தின்பதிலும் பலவிசயங்கள் இருக்குதுங்க:)

வெண்பூ said...

//செட் = இரண்டு?
உடுப்பியில் செட் தோசை கேட்டால் இரண்டு தோசைதான் தருகிறார்கள்.
//

ஐயா... பெங்களூரில் செட் தோசை என்றால் பெரும்பாலான கடைகளில் 3 தோசை தருவார்கள், எனக்குத் தெரிந்து 10 வருடத்திற்கு முன்னால்..

vaaalpaiyan said...

//ஐயா... பெங்களூரில் செட் தோசை என்றால் பெரும்பாலான கடைகளில் 3 தோசை தருவார்கள், எனக்குத் தெரிந்து 10 வருடத்திற்கு முன்னால்..//

அதானே?? எங்க ஊருல கூட ஒரு செட் பூரி கேட்டா 3 பூரி தான் குடுப்பாங்க..

SETkku தொகுப்பு நு சொல்லலாம் நினைக்குர்றேன்...

3 பூரி ஒரு set , 2 தோசை ஒரு set... அது மாதிரி 6 புள்ளி எடுத்த ஒரு தொகுப்பு, இது டென்னிஸ்...

எப்படி புடிச்சேன் பார்த்தியா...<<

ராஜ நடராஜன் said...

வால்பையன் மற்றும் வெண்பூ அறிவது.

உங்கள் பின்னூட்டம் கிடைத்தது.தகவல் அறிந்தேன்.இத்தனை நாட்கள் ஒரு செட் இரண்டுதான் மூன்றில்லை என என்னை ஏமாற்றிய உடுப்பிக்காரர்களை உண்டு இல்லை என ஒரு வழி பார்க்கிறேன் அடுத்த முறை செட் தோசை சாப்பிடப் போகும்போது.

ஐயோ என்ன இது!இப்பவே பசிக்குதே.ஓ!சாப்பிடாம தமிழ்மணத்தை மேஞ்சிட்டு இருப்பது இப்பத்தான் ஞாபகம் வருது.

மங்களூர் சிவா said...

/
வெண்பூ said...

//செட் = இரண்டு?
உடுப்பியில் செட் தோசை கேட்டால் இரண்டு தோசைதான் தருகிறார்கள்.
//

ஐயா... பெங்களூரில் செட் தோசை என்றால் பெரும்பாலான கடைகளில் 3 தோசை தருவார்கள், எனக்குத் தெரிந்து 10 வருடத்திற்கு முன்னால்..
/

மங்களூரில இப்பவும் அப்படித்தான். செட் தோசைனா 3 , சாதா தோசை கேட்டா 2 சிங்கத்தை சிங்கிளா வாங்க முடியாது!!

:))

முகவை மைந்தன் said...

தொகுப்பு, தொகுதி, கொத்து... நாம் ஏற்கெனவே அறிந்த சொற்கள் தான். எனினும் மறந்து விட்டோம்.தோடரட்டும் ஐயா உங்கள் ஐயங்கள். வந்திருக்கும் பின்னூட்டங்கள் ஆர்வமிக்கோரின் எண்ணிக்கையை தெரிவிக்கிறது.

@புருனோ
//Photo copying தான் நகலெடுப்பது.//
நகல் என்பது உருதுச் சொல் என்று அறிகிறேன். தமிழில் தான் ஒற்றெடுத்தல் என்ற சொல் இருக்கிறதே!

@மாதங்கி
//ஓரணை- one pair
ஒருப்படி- uniform//
இதுவும் நல்லா இருக்கு!

Dinesh Jayaraj said...

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையின் தமிழ் பல்கலைக்கழகம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்..

Sanjai Gandhi said...

நன்றி ராஜ நடராஜன்.
---
வெண்பூ , வால்பையன், ராஜ நடராஜன், மங்களூர் சிவா... ஹிஹி... அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்குனு சொல்ல வரீங்க.. :P

Sanjai Gandhi said...

நன்றி முகவைமைந்தன்.
நன்றி தயாமலர். பயனுள்ள சுட்டி.

புருனோ Bruno said...

//xerox என்பது ஒரு ப்ராண்ட் பெயர் புருனோ சார். ப்ராண்ட் பெயரை அப்படியே தானே உபயோகிக்க முடியும். அந்த நிருவனம் போட்டோ காப்பியிங் இயந்திரத்தை உருவாக்கியதால் அந்த செயலுக்கும் அதுவே பெயராக மாறி xerox என்பது ஒரு வினைச் சொல் என்பது போல் ஆயிற்று.//

அதைத்தான் சாமி சொன்னேன்.

வாக்மேன் என்பதை நடைமனிதன் என்று மொழிபெயர்க்க கூடாது.

ரூடால்பு டீசல் என்பது அதை கண்டுபிடித்த அறிஞரின் பெயர்.

Tamiler This Week