இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner
Showing posts with label பொலம்பல்ஸ். Show all posts
Showing posts with label பொலம்பல்ஸ். Show all posts

Tuesday, 11 November 2008

டேய்... பர்ஃபார்மன்ஸ் பண்ண உடுங்கடா...

ஈரோடு முதல் ஹோசூர் வரையிலான 6 மாவட்டங்களில் எங்கள் துறையில் அனைவருக்கும் நன்கு தெரிந்த நிறுவனமாக இருந்தாலும் கோவையைப் பொறுத்த வரையில் நாங்கள் அப்போது புதிது. அந்த மாவட்டங்களில் ராஜா என்பதை விட மகராஜா போல் தான் எங்களுக்கு மரியாதை இருக்கும். எந்த நிறுவனமாக இருந்தாலும் விநியோகம் செய்ய எங்களை அணுகிவிட்டு தான் பிறரை பார்ப்பார்கள். அந்த மிதப்பிலேயே இருந்த எங்களை ஒரு நிறுவனம் கோவையில் வியாபாரம் ஆரம்பிக்க வற்புறுத்தியது. அவர்கள் நச்சரிப்பாலும் ஈரோட்டு சாம்ராஜ்ய மிதப்பிலும் எதோ ஒரு தைரியத்தில் ஒரு இளிச்சவாயனின் தலைமையில் கோவையிலும் கால் பதித்தோம்..

அந்த இளிச்சவாயன் அதற்கு முன் இரு முறை மட்டுமே கோவை வந்திருக்கிறான். ஒரு முறை ஒரு நிறுவன முகவர்கள் சந்திப்பிற்கும் மற்றொரு முறை ஒருவர் திருமணத்திற்கும் மட்டுமே. ஆகவே அவனுக்கு கோவையில் அப்போது கிழக்கு மேற்கு கூட தெரியாது. ஆனாலும் ஒரு மாதம் பெரும் அலைச்சலுக்கு பின் அலுவலகமும் , சேமிப்புக் கிடங்கும் முடிவு செய்து குடி புகுந்தாயிற்று. ( அந்த நாட்கள் அனுபவத்தை 10 பதிவா போடலாம்..:) )

அடுத்து தான் ஆரம்பிச்சது சீனே.. :)

முதல் வேலையாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் டீலர்களை வளைச்சிப் போடனும். நாம் இங்கு புதிது என்பதாலும் நாங்கள் ஒப்பந்தம் போட்ட நிறுவனத் தயாரிப்புகளை அதற்கு முன் கோவை ஏரியாவில் விநியோகித்தவர்கள் சரியாக செயல்படாததாலும் எங்களுக்கு கடும் சவால்கள் காத்திருந்தது. சிறு மற்றும் நடுத்தர டீலர்கள் எங்கள் ஈரோட்டு புராணத்தை கேட்டதும் கொஞ்சம் பவ்யமாக நடந்துக் கொள்வார்கள். ஆனால் இந்த பெரிய டீலர்கள் இருக்கிறார்களே முதல் ஒரு மாதம் என்னை சாவடிச்சிட்டாங்க..

அந்த கால்ங்களில் பெரும்பாலான டீலர்களிடம் நான் பட்ட பாடு...

ஒவ்வொரு முறையும் வழக்கமான சம்பிரதாயமான பேச்சுகளுக்கு பின் ஆரம்பிப்பேன்..

[பச்ச கலரு - நானு
சேப்பு கலரு - டீலரு
கருப்பு கலரு - கடை ஸ்டாப் அல்லது கஸ்டமர்]


“இந்த மாடல் மத்த ப்ராண்ட் விட ரொம்பவே பெட்டர் சார்”

ம்ம்ம்... வேர்ல்பூல்ல இதே ரேஞ்ச்ல ஒன்னு இருக்கு

ஆமாம் சார்.. ஆனா அதுல ஹெல்த்கார்ட் இருக்காது.. அதும் இல்லாம

ஏம்ப்பா அந்த கஸ்டமர்க்கு ஓனிடால ப்ளாக் 200 காட்டு

ம்ம்.. சொல்லுங்க..”

அதை விட இதுல...”

“சார் அந்த கஸ்டமர் எல்ஜில சவுண்ட்மாஸ்டர் கேக்கறார்.. இப்போ அது நம்மகிட்ட ஸ்டாக் இல்லை”

டீலர் நம்ம ப்ராடக்ட் கேட்டலாக் எடுத்து பார்ப்பார்..

சார் அதுல லெஃப்ட் சைட்ல இருக்கு பாருங்க...

ப்ரகாஷ் சவுண்ட்மாஸ்டர் ஸ்டாக் இருக்கா.. அர்ஜெண்டா 5 செட் வேணுமே” - இது போன்ல..
பேசி முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணனும்...
பேசி முடிச்சிட்டார்..

ஆக்சுவலா இந்த மாடல் தான் இருக்கிறதுலயே ஃபாஸ்ட் மூ....

ஏம்ப்பா.. சவுண்ட் மாஸ்டர் நாளைக்குத் தான் வரும்.. சாம்சங்க்ல கே44 காட்டு..”

ஃபாஸ்ட் மூவிங் சார்..”

சார்.. உங்களுக்கு சவுண்ட் நல்லா வேணும்னா சான்சுய்ல ஹார்ட்ராக் பாருங்க.. அருமையா இருக்கும்.. வெலையும் கம்மி தான்..” ஒரு கஸ்டமரிடம்..

ம்ம்ம்.. என்ன சொன்னிங்க சஞ்சய்..?

வாஷிங் மெஷின்ல நம்மள்து ஃபைபர் ட்ரம் சார்.. மத்த ப்ராண்ட் மாதிரி ஸ்டீல்.....”

ஏம்ப்பா .. ஏன் அந்த ஃப்ரிட்ஜ் பார்த்த கஸ்டமர் வெளிய போறாங்க..?

“ சார் அவங்க வாங்கற மாதிரி தெரியலைங்க.. சும்மா வெலை விசாரிச்சிட்டு இருக்காங்க..”

அப்புறம் சஞ்சய்.. உங்க ப்ராண்ட்டுக்கு அவ்வளவா விளம்பரம் இல்லையே.. நாம் என்ன தான் கஸ்டமருக்கு எதுத்து சொன்னாலும் அவங்க கேக்கறது.........”

“ சொல்லுங்க.. என்ன வேணும்...”

“ ஏனுங்க.. போன வாரம் டிவி எடுத்துட்டு போனோம்.. புள்ளி புள்ளியா வருதுங்களே...”

கேபிள் பிரச்சனையா இருக்கும்.. பாருங்க..”

“ இல்லீங்க .. நாங்க டிஷ் ஆண்டனா போட்டிருக்கோம்..”

ஏம்பா குமாரு.. இவர் கிட்ட அட்ரஸ் வாங்கி வச்சிக்கோ.. அந்த கம்பனி சர்வீஸ் செண்டருக்கு போன் பண்ணி கம்ப்ளைண்ட் புக் பண்ணிடு..”

சர்விஸ் செண்டர்ல இருந்து ஆளுங்க வருவாங்க.. போய்ட்டு வாங்க...”

“ இவங்க டிஷ் சரியா ஃபிட் பண்ணி இருக்க மாட்டாங்க.. இருந்தாலும் டிவி தான் பிரச்சனைன்னு வந்துடுவாங்க.. என்ன பன்றது பாருங்க

கஸ்டமர் சாதாரனமா விட்டாலும் பக்கத்து வீட்டுக்காரன் வந்து பயமுறுத்துவான் சார்..

அது தான் இப்போ பெரிய பிரச்ச.....

“ ஏனுங்க.. அந்த கருப்புகலர் டிவி பாத்தேனுங்க.. வெல ரொம்ப ஜாஸ்தியா இருக்குதுங்களே.. மத்த கடைல எல்லாம் கம்மியா சொல்றாங்க...”- எனக்கு இடதோ வலதோ ஒருத்தன்..

அவரை சமாளித்து அனுப்பறார்..
இந்த மாடல்ல மட்டும் 5 செட் அனுப்பறேன் சார்.. அது எப்படி போகுதுனு பாருங்க.. அப்புறம் இன்னும் ஜாஸ்தி பண்ணலாம்.. 2 செட் போச்சின்னாலே உங்களுக்கும் ஒரு கான்ஃபிடண்ட் வரு........

ஹலோ.... ஆங்.. சொல்லுங்க சார்.. இல்லைங்க இப்போ எதும் வேணாம்.. இல்லைங்க.. சேல்ஸ் ரொம்ப டல்லா இருக்கு..
பேசி முடிச்சிட்டார்...

சொல்லுங்க சார். ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிங்கன்னா நானும் அப்டியே கெலம்பிடுவேன்.. சார் வேற ரொம்ப பிசியா இருக்.....

“சார்.. சர்வீஸ் செண்டர்ல இருந்து கால் பண்ணாங்க.. அந்த வாப்ப்பாறை கஸ்டமர்து பிக்சர் ட்யூப் கம்ப்ளைண்டாம்... வாரண்டிமுடிஞ்சி போச்சாம்.. ஃப்ரியா மாத்த முடியாதுன்னு சொல்றாங்க....”

அந்த 5 மட்டும் அனுப்ப.....

“ஏனுங்க.. ஒரு மாசம் தான் ட்யூ கட்டலை.. அதுக்கே.......

............டேய்........ பர்ஃபார்மன்ஸ் பண்ண உடுங்கடா.......... :(

..... இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சி ஒரு மாசத்துல கிட்டத் தட்ட எல்லா டீலர்கிட்டயும் ஆர்டர் எடுத்து எல்லாக் கடைகள்லயும் இடம் புடிச்சாச்சி.. அதை பார்த்த சாம்சங் நிறுவனம் அப்போ இருந்த டிஸ்ட்ரிப்யூட்டர் கிட்ட இருந்து பாதி மாடல்ஸ் பிரிச்சி எங்களுக்கு குடுத்துட்டாங்க... :) ..... இப்போல்லாம் கால் மேல கால் போட்டு தானே டீலர்ஸ் கிட்ட பேசுவோம்.. அதும் சில லேட் பேமண்ட் டீலர்ஸ் கிட்ட எல்லாம் ஒரே தாதா எஃபக்ட் தான்...:))

Wednesday, 15 October 2008

சன் குழுமம் எப்போ திருந்தும்?






அடப்பாவிகளா.. அடப்பாவிகளா.. குறைந்த பட்சம் பின்னனி இசையாவது மாத்தி இருக்கலாமேடா? இதுக்கு சன் டிவியை குறை சொல்றதா? இல்லை இசை அமைப்பாளரையா? சன் டிவின்னாலே காப்பி தானோ.. பேசாம சன் குழுமம் என்பதை காப்பி குழுமம் என்று வைத்துக் கொள்ளலாமே.. :(

Wednesday, 17 September 2008

செந்தழல் ரவியின் காற்றாலைக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட்

ஞாயிறு மாலையே செந்தழல் ரவி அவர் தங்கமணியுடன் என் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்... அச்சச்சோ.. ஒரு காபிப் போட்டுக் குடுக்கக் கூட முடியாதே.. சமயல்க் கட்ல எல்லாரும் சமையல் தான் செய்வாங்க.. நான் துணித் தானேக் காயப் போட்டிருக்கேன் என்று கவலை பட்டாலும்.. சரி என்று சொல்லிவிட்டேன்... பிறகு ரவி என்ன நினைத்தாரோ.. அடுத்த நாள் செல்லா காரில் தங்கமணியுடன் வருவதாக சொல்லிவிட்டார்... ரைட்டு...

அடுத்த நாள்.. முக்கிய அலுவலக வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு ரவியை அழைத்தால் போன் எடுக்கலை.. சரி... அவருக்கு இன்னும் விடியலைப் போலன்னு நெனைச்சி செல்லாவுக்குப் போன் பண்ணேன்.. அவர் மச்சினியப் பார்த்துட்டு இப்போ தான் வந்ததாகவும் 2 பேரும் அவர் அலுவலகத்துக்கு வந்துடுங்கன்னும் சொல்லிட்டார்.. சரின்னு ரவியை அழைச்சிட்டு செல்லா அலுவலகம் போனேன்.. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்.. ரவி ஸ்கூல் பய்யன் ரேஞ்ச்ல மத்தியான சோத்துக்கு போலாம்.. மத்தியான சோத்துக்கு போலாம்னு ரகளை பண்ணிட்டே இருந்தார்... சரி இதுக்கு மேல தாங்காதுன்னு புறப்பட்டோம்...

எங்க சாப்பிட போகலாம்னு யோசிச்சப்போ.. ரவி, அண்ணபூர்னா போகலாம்னு சொன்னார்.. எனக்கு எப்போவும் இந்த மாதிரி ஹோட்டல்கள்ல சாப்பிட சுத்தமா பிடிக்கறதில்லை... எதோ சத்திரத்தில் அடிச்சி பிடிச்சி சாப்பிடற மாதிர் ஒரு ஃபீல்.. நம்மூர்க்காரங்க ஊட்ல சமைக்கவே மாட்டாங்க போல.. எல்லாருமே சமயல்கட்ல துணிதான் காயப் போடறாங்களோ? :D..

செல்லா சும்மா இருககாம.. உங்கள எல்லாம் ஒரு கிராமத்துக்கு சாப்பிட கூட்டிட்டு போறேன்னு சொன்னார்.. அப்போ எனெக்கென்னவோ புன்னகைப் பூவே சார்ளி நினைவுக்கு வந்தார்.. " உங்கள எல்லாம் நான் கற்காலத்துக்கே கூட்டிட்டுப் போகப் போறேனு" அதுல அவர் சொல்வார்.. அப்போவே நான் உஷார் ஆயிருக்கனும்.. . சரி.. விதி வழியது.. :(

போனோம்.. போனோம்.. ஆனைக்கட்டியே வந்துடிச்சி.. ஆனா அந்த வழியெங்கும் அப்படி ஒரு பசுமை.. மலைகளுக்கு இடையே சாலைகள்.. ரொம்ப ரம்மியமாய்... வழியில ஒரு கடைல ராகிப் பக்கோடா வாங்கி சாப்ட்டோம்.. அடடா.. எனனா ஒரு சுவை? ரொம்ப அற்புதமா இருந்தது...

அடுத்து ஆனைக்கட்டி போய் சேர்ந்தோம்.. ஒரு ஹோட்டலி(மாதிரி)ல் சாப்பிட உக்கார்ந்தோம்... நான் பாட்டுக்கு புரோட்டா வாங்கி நிம்மதியா சாப்ட்டிருப்பேன்.. கிராமத்து சாப்பாடு நல்லா இருக்கும்னு( கிராமத்து சாப்பாடு பத்தி என்கிட்டயேவா? ) சொல்லி எல்லாருக்கும் சோறு - அளவு சாப்பாடு :( - சொல்லிட்டார் செல்லா.. சரி போகட்டும்...

சோறு போட்டாங்க.. அப்பளம் வச்சாங்க.. பூசனிக்காய் கூட்டு வச்சாங்க... உருளைகிழங்கு பொரியல் வச்சாங்க... ரவி மீன் குழம்பு வாங்கிகிட்டார்.. நானும் செல்லாவும் பருப்பு சாம்பார் வாங்கிகிட்டோம்... சாம்பார் முடிஞ்சதும் அடுத்ததா புளிக் குழம்பு, மோர்க் குழம்பு, ரசம், தயிர், மோர்.. இப்படி எல்லாம் இருக்கும்ல.... சரி.. சாம்பார் சாதம் முடிஞ்சது... அண்ணே.. புளிக்குழம்பு இருக்கா?.. இப்போ தாங்க முடிஞ்சது.. சரி.. மோர்க் குழம்பு.. அதெல்லாம் இல்லீங்க... சரி.. ரசம்.. அட அதும் இப்போதானுங்க காலி ஆச்சி... சஞ்சய் கண்ட்ரோல்ல்ல்ல்..... சரி ரசம் குடுங்க.. என்ன பண்றது... ஒரு 5 நிமிஷம் முன்னாடி வந்திருக்கக் கூடாதுங்களா?.... ரசம் தீர்ந்துபோனப்ப வந்து கேக்கறிங்களே... சஞ்சய்.. இப்போவும் கண்ட்ரோல்ல்ல்ல்ல்ல்ல்.... சரி தயிர்... இப்போ தாங்க அவருக்கு ( பக்கத்து டேபிள்) குடுக்கும் போது காலி ஆய்டிச்சி.. இப்போவும் கண்ட்ரோல்டா சஞ்சய்... இது மட்டுமா இருக்கப் போகுது என்று நினைத்துக் கொண்டே கேக்கலாமா வேண்டாமா என்று யோசித்து.. அட இவ்ளோ தாங்கிட்டோம்.. இதத் தாங்கிக்க மாட்டோமா.... மோர் இருக்குங்களா.... இவ்ளோ நேரம் வாய்ல சொன்னவன்.. இப்போ மோர் பாத்திரத்தை கொண்டுவந்து.. நீங்களே பாருங்க.. இருந்தா தர மாட்டேனா?... (மனசுக்குள்ள)டேய்.... டேய்... நாங்க சாப்ட உக்காரும் போது இதெல்லாம் சொல்லி தொலையறதுக்கென்ன?.. சரி கொஞ்சம் பூசனிக்கா கூட்டாவது வைங்க... எல்லாமே முடிஞ்சிருச்சிங்க.. மீன் குழம்பும் சாம்பாரும் தான் இருக்கு.. அடங்கொய்யால... தீர்ந்துப் போறதுக்கு முன்னாடி சாம்பாராவது ஊத்தித் தொலைடா என்று வாங்கி அவசர அவசரமா சாப்ட வேண்டியதா போய்டிச்சி.. பின்ன.. அதும் தீர்ந்து போச்சின்னா.. சோத்துல தண்ணி ஊத்தி திங்க சொல்லிடுவானுங்க போல.. :( ..

....... சார்ளி நினைவுக்கு வந்ததும்.. உஷார் ஆயிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?......:((

ஆர்வக் கோளாறுல நான் புரோட்டா சுடப் போயி அதையும் பொழப்பில்லாம போட்டோ எடுத்துட்டு இருந்தார் செந்தழல் ரவி..:)

இந்த கோயம்புத்தூர்காரங்களுக்கு ஒரு கெட்ட பழக்கம்.. சாம்பார்ல சக்கரை போடுவாங்க போல.. அம்புட்டு இனிப்பா இருக்கும்.. :(.. அதனால நான் கோவை சாம்பாருக்கு எதிரி.. சாம்பார்னா எப்டி இருக்கும்னு தர்மபுரி பக்கம் வந்து சாப்ட்டு பாருங்கய்யா.. அட அட... ஹ்ம்ம்... மாசத்துக்கு ஒருவாட்டி தான் அந்த பாக்கியம் கெடைக்கிது.. :(

...அடுத்து ஆனைக்கட்டி தாண்டி சோழையூர் வழியா அழகான கேரளப்பயணம்... செந்தழல் ரவியின் காற்றாலை நோக்கி.. அதை பற்றி படங்களுடன் விரைவில் ரவி எழுதுவார்.... அது வரை வெய்ட்டீசு மகா ஜனங்களே....:)

Saturday, 23 February 2008

IPL தேவையா? திருந்துமா BCCI எனும் லூசு கும்பல்..?

BCCI இப்போது செமத்தியான பணவெறி பிடித்து ஆடுகிறது. ஆஸியில் நடபெற்ற டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் திருவிளையாடல் எவ்வளவு மோசமானதோ அதில் கொஞ்சமும் குறைச்சலில்லாதது ஹர்பஜனின் தரம் கெட்ட வார்த்தைகள். சைமண்ட்ஸை மங்கி என்று சொல்லி இருந்தாலும் குற்றம் தான். ஆனால் ஹர்பஜன் மா..கி.. என்று தாயை பழிக்கும் ஒரு மோசமான வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்கிறார். அந்த டெஸ்ட் தொடரின் நடுவர் பதவியில் இருந்து பக்னரை நீக்கியது போல் ஹர்பஜனையும் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் BCCI தனது பணபலத்தால் ஹர்பஜனை காப்பாற்றிவிட்டது. இது தவறான முன் உதாரணம். இனி வரும் காலங்களில் மற்ற வீரர்களும் BCCI காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் இப்படி தரம் தாழ்ந்து நடக்கலாம். இது ஆரோக்கியமான செயல் அல்ல.

அது மட்டுமில்லாமல் கடைசி டெஸ்டிற்கு முன்பே அதில் இடம் பெற்றிருந்த சில வீரர்களை நீக்கிவிட்டு புதிய ஒரு நாள் தொடர் அணியை அறிவித்தார்கள். இது ஒரு நாள் போட்டியில் இட்ம் கிடைக்காத வீரர்களின் மன நிலையை பாதிக்க செய்து கடைசி டெஸ்ட் போட்டியையும் பாதிக்கும் என்பதை அறிந்தும் இந்த முட்டாள் தனத்தை செய்தது. கேட்டால் புதிதாக இடம் பிடித்திருக்கும் வீரர்களுக்கு உடை தயார் செய்ய வேண்டும்.. விமான டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டும் .. ஆதற்கு கால அவகாசம் இல்லை என்று சப்பை கட்டு கட்டினார்கள். எதோ BCCI பிச்சைக் கார நிலையில் இருப்பது போல். உத்தேச அணியை அறிவித்து அனைவருக்கும் ஆடைகள் மற்றும் விமாட சீட்டு எடுக்க வேண்டியது தானே. என்ன கொறஞ்சி போயிருக்கும். லூசு பயலுக.

இது கொஞ்சம் பழய செய்தி.. புதிய செய்திக்கு வ்வருவோம்....

இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை பாழாக்கும் வேலைகளில் BCCI ஈடுபட்டிருக்கிறது. முக்கிய ந்கரங்களில் க்ளப்களை உறுவாக்கி மாட்டு சந்தையில் ஏலம் விடுவது போல் கிரிக்கெட் வீரர்களை ஏலம் விட்டிருக்கிறது. இதனால் என்ன பயன் இருக்க முடியும்? க்ளப்களை உறுவாக்கி அந்தந்த மாநிலத்தை சார்ந்த திறமையுள்ள புதிய வீரர்களுக்கு வாய்பளித்து தேசிய அணிக்கு திறமை வாய்ந்த வீரர்களை உருவாக்கினால் நல்லது தான். ஆனால் இங்கு நடப்பது என்ன? ஏற்கனவே பல நாட்டு தேசிய அணிகளில் விளையாடும் வீரர்களை குத்தகைக்கு அமர்த்தி விளையாட செய்யப் போகிறார்கள். இதில் பணத்தை குவிப்பதை தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்?..

மேலும் இதனால் இந்திய அணிக்கு பாதகமான அம்சங்கள்.

1. எல்லா வீரர்களுக்கும் ஒரே விலை இல்லை. ஆகவே ஏலத்தில் குறைவான விலை போன வீரர்கள் மனதில் தாழ்வு மனபான்மை உருவாகும். இது அதிக விலை போன வீரர்கள் மீது குறந்த விலை போன வீரர்களுக்கு பொறாமையும் வெருப்பும் வர வாய்ப்புண்டு. அதே போல் அதிக விலை போன வீரர்கள் குறைந்த விலை போன வீரர்களை ஏளனமாக பார்க்கும் அல்லது மரியாதை குறைவாக நடத்தும் வாய்ப்புண்டு. சாதாரனமாகவே கோஷ்டி பூசல் மலிந்துள்ள அணி இந்திய கிரிக்கெட் அணி. குறிப்பாக தோனிக்கு அதிக பணம் கிடைத்தது மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். நாம் சரியாக விளையாடவில்லை எனில் தோனி தனி மனிதனாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுவிடுவாரா.. என்று மற்ற வீரர்கள் நினைக்க கூடும்.

2.இந்த க்ளப்கள் 20-20 ஆட்டங்களுக்கே முக்கியத்துவம் தரப் போவதால் , அடுத்த முறை நாம் அதிக விலை போக வேண்டும் நம் தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் 20-20 ஆட்டங்களில் அதிக கவனம் செலுத்தி அதற்கேற்றவாறே பயிற்சியில் ஈடுபடுவார்கள். இதனால் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கோட்டை விடுவார்கள்.

3. எளிதில் உணர்ச்சிவசப் படும் நம் அணி வீரர்களிடம் இந்த தாழ்வு மனப்பான்மை மற்றும் மரியாதை குறைவான விஷயங்கள் சேர்ந்து எதிர் அணியில் விளையாடும் நம் நாட்டு வீரர்களிடம் மோசமான வார்த்தை பிரயோகம் அல்லது மோசமான நடத்தைகளை அதிகரிக்கும். இதனால் தேசிய அணிக்காக விளையாடும் போது ஒருவரை ஒருவர் எதிரிகளாக பாவித்துக் கொள்வார்கள். அணியின் ஒற்றுமை முழுமையாக சீரழியும். இதனால் தோல்விகளை மட்டுமே சந்திக்க வேண்டி இருக்கும்.

4. இந்த க்ளப்கள் நடத்தும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தான் நடக்கும். இது இந்திய வீரர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டவே வழி வகுக்கும். ஆனால் இதில் இடம் பெற்றுள்ள வெளி நாட்டு வீரர்களுக்கு இந்திய மைதானங்கள் நன்கு பழகிவிடும். பின்னர் இந்திய மைதானங்களில் வைத்தே இந்திய அணிக்கு மந்திரிச்சி விடுவார்கள்.

5. இந்திய அணியினருடன் ஒன்றாக தங்கி பயிற்சி பெற்று விளையாடப் போகும் வெளிநாட்டு அணியினர் நம் வீரர்களின் அனைத்து பலவீனங்களையும் தெரிந்து கொள்வார்கள். இதை இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது பயன்படு்த்திக் கொள்வார்கள். அதிலும் குறிப்பாக ஆஸியினர் எதிர் அணியினரின் பந்து மற்றும் மட்டைகளுடன் மோதுவதை விட அவர்களின் மன ரீதியிலான பலவீனங்களுடன் தான் விளையாடி ஜெயிப்பார்கள். இது அவர்களுக்கு அருமையான சந்தர்ப்பம்.

IPL பிரபலமான வீரர்கள் மற்றும் BCCI யின் பணபலத்தை பெருக்க தான் உதவுமே தவிர கிரிக்கெட்டிற்கோ அல்லது வாய்ப்பு தேடும் புதிய வீரர்களுக்கோ துளியும் பயன்பட போவதில்லை. இதனால்.... BCCI பெரும் பணக்கார நிறுவனமாக இருக்கும். ஆனால் இந்திய அணியின் நிலை????????????

சுபாஷ் சந்திராவை ஒழுங்காக விட்டால் ICL மூலமாக பல புதிய திறமைசாலிகளை அறிமுகப் படுத்தி இருப்பார். ICL லிலும் பல நாட்டு வீரர்களும் இடம் பெற்றிருந்தாலும் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கிறார்கள்.

Thursday, 25 October 2007

தமிழ் ரியாலிட்டி ஷோ

ரியாலிட்டி ஷோக்கு தமிழ்ல என்ன? :(

நட்பின் சுவாசம் என்ற பதிவில் அப்பப்போ எதுனா போட்டி நடத்துவாங்க. இப்போ புதுசா ரியாலிட்டி ஷோவ பத்தி எழுதனும்னு ஒரு போட்டி அறிவிச்சு இருக்காங்க. அத பாத்ததும் நம்மளும் எதுனா முயற்சி பன்னலாம்னு தோனுச்சி.

ஆங்கில சேனல்கள்ல வந்த ரி.ஷோ* வ மட்டும் ரசிச்ச நமக்கு தமிழ்ல விஜய் டிவி மொத மொதல்ல ரிஷோவ அறிமுகப்படுத்தினப்ப ரொம்ப சந்தோஷமாவும் ரசிக்கிர மாதிரியும் இருந்திச்சி. ஜோடி நெ1, கிராண்ட் மாஸ்டர், நீயா நானா?, சில்லுனு ஒரு ஜோடி, கலக்கப் போவது யாரு?.. இன்னும் நெறய்ய... இதுக்கு எல்லாம் கெடச்ச வரவேற்ப பாத்துட்டு அதையே அவங்க வாரத்துல 2 தடவ ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க.கொஞ்சமா போர் அடிக்க ஆரம்பிச்சது. ( அவங்களுக்கு பண மழை கொட்ட ஆரம்பிச்சது).

இது பத்தாதுனு சன் டிவி இத அப்படியே காப்பி அடிச்சி( கொஞ்சம் கூட அசிங்கமா இருக்ககதா? இவங்களுக்குனு சொந்த மூளையே இருக்காதா?) ஆட்கள மட்டும் மாத்தி ஒளிபரப்பினாங்க. இப்போ வாரத்துக்கு 3 முறை.

அடுத்து வந்தாங்க கலைஞர் டிவிகாரங்க. இவங்களும் கொஞ்சமும் கூச்ச நாச்சமே( இதுக்கு என்ன அர்த்தம்? ) இல்லாம அப்டியே பேரங்கள் வழியில் காப்பி தொழிலை சூடு பறக்க நடத்தினாங்க. இப்போ ரிஷோக்கள் வாரத்துக்கு 4 முறை. பார்த்தால் மட்டும் இல்லை. நினைத்தாலே எரிச்சல் தான் வருது.

இப்போ ரிஷோக்கள்ல பாக்கற மாதிரி இருக்கிறது நீயா நானாவும் கிராண்ட் மாஸ்டரும் தான். இது ரெண்ட்டும் மூளைக்கு அதிகம் வேலை வைக்கும் சமாச்சாரம்னு காப்பி கடை காரங்க விட்டுட்டாய்ங்க போல. :)

நோகாம நோம்பி கும்பிட நெனைக்கிற சன் டிவியும் கலைஞர் டிவியும் இன்னொரு கோபிநாந்த்துக்கும் இன்னொரு பிரதீப்க்கும் எங்க தான் போவாங்க பாவம். ;(
இதுல கூத்து என்னன்னா... சன் டிவிலயும் கலைஞர்லயும் வந்தப்புறம் தான் ரிஷோக்கு மவுசு( Mouse இல்ல) கூடிடிச்சாம்.
பார்க்க : என்ன சொல்றாங்கனு முக்கியமில்ல

இப்போ என்னதாண்டா பொடியா சொல்ல வற?
அடப் போங்க அமாஸ்* ரிஷோ*வ நெனச்சாலே எரிச்சல் எரிச்சலா வருதமாம். இதுல என்னத்த வந்து( அல்லது போய்) எழுதறது?

ச்ச.. இந்த சிவா மாமா கூட சேந்து நானும் மொக்கபோட ஆரம்பிச்சிட்டேன்.. :)

பொடிக்ஷனரி
ரிஷோ : ரியாலிட்டி ஷோ
அமாஸ் : அத்தை மாமாஸ்

Tamiler This Week