இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comWednesday, 12 November 2008
டரியல் v1.11.2

தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போக பிடிக்காம இங்கயே இருக்கிறதுன்னு முடிவு பண்ணி இருந்தேன். ஆனால் தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு அக்கா அழைத்து நன்றாக அர்ச்சனை செய்ததாலும் 2 அக்கா குடும்பங்கள் அண்ணன் மற்றும் சித்தப்பா குடும்பம் எல்லாம் ஊருக்கு வந்திருப்பதால் எங்க வீட்டு செல்லங்களை எல்லாம் பார்த்து சில மாதங்கள்/ஆண்டுகள் ஆனதாலும்.. நாமதான் அவர்கள் வீட்டிற்கு போறதில்ல.. அவர்கள் வரும் போதும் பார்க்காமல்இருப்ப்து சரியல்ல என்று நினைத்ததாலும் தீபாவளி அன்று காலை ஊருக்கு கிளம்பி மாலையே கோவை வந்துவிட்டேன். வரும் போது எங்கம்மா பாதி பை நிரப்பி சில பல பலகாரங்கள் வச்சிட்டாங்க.. அதிரசம், இனிப்பு பூந்தி போன்றவை.... அவ்வளவையும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.. மொரப்பூருக்கு அடுத்த ரயில் நிலையமான பொம்மிடியில் தலை தீபாவளி முடித்துவிட்டு என் நண்பன் ரயில் ஏறினான். நான் முன்பதிவு செய்யாமல் அமர்ந்த இடம் தான் அவன் முன் பதிவு செய்து வைத்திருந்த இடம்..:). எதிரில் இருந்த சீட் காலியாக இருந்ததால் அவர்களை அங்கே உட்கார சொல்லிவிட்டேன். நண்பனின் மனைவி எங்கள் பள்ளி ஜூனியர்.அவர்கள்
வீட்டில் குடுத்துவிட்ட பலகாரங்களை எடுத்து அண்ணா இதை வச்சிக்கோங்க.. அதை வச்சிக்கோங்கன்னு ஒரே அன்புத் தொல்லை.. எல்லாத்தையும் உன் ஊட்டுக்காரனுக்கு குடு .. ஆளை விடு என்று தப்பித்தேன்.சிலதை என் பையில் போட பார்த்தார்கள். ஹிஹி.. விடுவோமா.. நான் கொண்டு வந்ததை எல்லாம் அப்படியே சிந்தாமல் சிதறாமல் அவர்கள் பையில் திணித்துவிட்டு எஸ் ஆகிவிட்டேன்.
^^^^^
. இந்த காலத்து குழந்தைகளுக்கு யார் தான் இப்படி பேசக் கத்துக் குடுத்தாங்களோ.. வாய் ஓயாம பேசிட்டே இருக்கா. நான் சின்ன பையனா இருந்தப்போ என்னை சிரிக்க வைக்கவே பந்தயம் கட்டுவார்களாம். இப்போவும் ஊருக்கு போனா " ரெண்டு வார்த்தை பேசித்தான் பாருடா.. ஒன்னும் கொறஞ்சிடாது" என்று பெரியவங்க பலர் நக்கல் அடிப்பாங்க. "ஊர்ல" அவ்ளோ அடக்க ஒடுக்கம்.:).. ஆனா இப்போ இருக்கிற குட்டீஸ் வெளுத்து வாங்கறாங்க. பார்க்கும் எதற்கும் விளக்கம் கேட்கிறர்கள். இது என்ன ?அது என்ன? இது ஏன் இப்டி இருக்கு? அது ஏன் அப்டி இருக்கு? அப்பப்பா.. என்னா ஒரு சந்தேகம்.. என்னா ஒரு அறியும் ஆர்வம்?.. எல்லாம் சரி தான் .. அதை எல்லாம் என் அக்கா மகள் எப்படி என்னைக் கேட்கலாம்... அவளுக்கு விளக்கம் சொல்ல எனக்கு தெரியவில்லை என்பதையும் அன்று அவள் தெரிந்துக் கொண்டிருப்பாள். பிறகு அவள் அம்மாவிடம் கேட்டிருப்பாள்..
“ஏம்மா இப்படி இருக்கான்உன் தம்பி
ஒன்னுமே தெரியாமல்....
அவளுக்கு விளக்கம்
தேவைப்படும் பட்டியலில்
இப்போதும் நானும்...”
..... அவள் என்னை அன்பொழுக அழைப்பது.. “ டேய் சஞ்சய்” :(
”எப்போதும்
மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும்...
எனக்கு மட்டும்
வெறிச்சோடியே தெரிகிறது
எங்கள் தெரு....”
டரியல் SMS :-
" நடிகர் விவேக் மு.க. ஸ்டாலின்னு போன் செய்கிறார்.
ஸ்டாலின் : ஹலோ..
விவேக் : முக.ஸ்டாலினா?
ஸ்டாலின் : ஆமாங்க..
விவேக் : சார் ஒரு டவுட்..
ஸ்டாலின் : கேளுங்க..
விவேக் : நீங்க வெறும் முக ஸ்டாலினா இல்ல நாக்க முக்க ஸ்டாலினா? “
டரியல் டயலாக் by Bill Gates:-
"Your most unhappy customers are your greatest source of learning.."
டரியல் of the week :-
கடைசி வரை பார்க்கவும்..
Saturday, 8 November 2008
டரியல் v1.11.1
புதுகை தென்றல் அக்கா ஒரு வருடத்தில் 250 பதிவுகள் போட்டிருக்கிறார். கிட்டத் தட்ட தினம் ஒரு பதிவு. ஆனால் அதற்கெல்லாம் தொடர்ந்து பதிவர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருப்பது ஆச்சர்யம் தான். காரணம் ஹஸ்பண்டாலஜி, மாண்டிசோரி, சிறுகதைகள், வாழ்க்கை அனுபவங்கள், கோவில் தரிசனங்கள் என எல்லாவற்றையும் ஜல்லி அடிக்காமல் சுருக்கமாக அழகாக அசால்ட்டாக எழுதி விடுகிறார். படிக்கும்போது நமக்கு சோர்வாய் தெரிவதில்லை. இது தான் அக்காவின் பலம் என நினைக்கிறென். வாழ்த்துக்கள் அக்கா.. இன்னும் நிறைய ஸ்கோர் பண்ணுங்க. :)
கன்னாபின்னாவென்று உடல் எடைக் கூடிக் கொண்டு செல்வதால் இரவில் உணவை தவிர்ப்பது என்று முடிவு செய்து சில வரங்களாக கடைபிடிக்கிறேன். முழுமையாக தவிர்த்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் வரும் என்பதால் பழங்கள் சாப்பிடுகிறேன். ஒரு நாள் இரவு தொலைபேசிய "விவரமான" பதிவர் ஒருவர் என் பழ மெனுவில் சேர்க்க வெண்டியவை மற்றும் நீக்க வேண்டியவை பற்றி உபயோகமான டிப்ஸ் குடுத்தார். அதோடு விட்டிருக்கலாம்.. பேரிச்சம் பழத்தை தனியாக சாப்பிடுவதை விட.......
ஓவர் டூ அந்த விவரமான பதிவர்.... :)
" வளைகுடா நாடுகளில் கொட்டை இல்லாத பேரிச்சம் பழத்தை பாலில் கலந்து அதை நன்றாக அரைத்து அதை நன்றாக காய்ச்சி பிறகு மிதமான சூட்டிற்கு கொண்டுவந்து அதை முதலிரவுக்கு செல்லும் மணமகனுக்கு கொடுப்பார்களாம். அதைக் குடித்ததும் அந்த மணமகனுக்கு ”பல குதிரைகள்” பலம் வந்துவிடுமாம்." :)).. தனியா இருக்கிற ஒரு பையனிடம் சொல்லி இப்படியா உசுப்பேத்தறது.. :( ... இது நம்ம ஊர் சிட்டுக் குருவி லேகியத்தைப் போல் இருக்குமா எனத் தெரியவில்லை. :)).. அப்போ தான் தெரிஞ்சது இவர் விவரமானவர் மட்டுமில்ல.. விவகாரமானவரும் கூட என்று.. :))
^^^^^
^^^^^
”பிறந்த நாள் என்றால், அப்போது என்ன வயதோ அந்த எடையில் கேக் வெட்டி..பெரிய கட் அவுட் வச்சி அதுக்கு அவங்களே பாலபிஷேகம் பண்ணி.. செய்தித் தாள்கள்ல 3 பக்கங்களுக்கு வாழ்த்து செய்தி போடவச்சி... இன்னும் பல வெட்டி சீன் போடும் பிரபலங்களுக்கு மத்தியில்..ஒரு சகாப்தம்.. ஒரு மன்னன்.. இலங்கைத் தமிழர்களுக்காக இன்று தன் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் இன்றைய தினத்தை அவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சொன்ன எங்கள் உலக நாயகனே உண்மையாகவே,
உலகம் எங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு..
உன்னைப் பெற்றதில்
பெருமைக் கொள்ளுது நாடு....
உலக நாயகன்.. உலக சூப்பர் ஸ்டார் டாக்டர்.கமலஹாசன் அவர்களே வாழ்க வளமுடன். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் தலைவா.
^^^^^
^^^^^
யாராவது சிரிச்சிங்க.. கொன்னுடுவேன்..