இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comTuesday, 11 November 2008
டேய்... பர்ஃபார்மன்ஸ் பண்ண உடுங்கடா...
ஈரோடு முதல் ஹோசூர் வரையிலான 6 மாவட்டங்களில் எங்கள் துறையில் அனைவருக்கும் நன்கு தெரிந்த நிறுவனமாக இருந்தாலும் கோவையைப் பொறுத்த வரையில் நாங்கள் அப்போது புதிது. அந்த மாவட்டங்களில் ராஜா என்பதை விட மகராஜா போல் தான் எங்களுக்கு மரியாதை இருக்கும். எந்த நிறுவனமாக இருந்தாலும் விநியோகம் செய்ய எங்களை அணுகிவிட்டு தான் பிறரை பார்ப்பார்கள். அந்த மிதப்பிலேயே இருந்த எங்களை ஒரு நிறுவனம் கோவையில் வியாபாரம் ஆரம்பிக்க வற்புறுத்தியது. அவர்கள் நச்சரிப்பாலும் ஈரோட்டு சாம்ராஜ்ய மிதப்பிலும் எதோ ஒரு தைரியத்தில் ஒரு இளிச்சவாயனின் தலைமையில் கோவையிலும் கால் பதித்தோம்..
அந்த இளிச்சவாயன் அதற்கு முன் இரு முறை மட்டுமே கோவை வந்திருக்கிறான். ஒரு முறை ஒரு நிறுவன முகவர்கள் சந்திப்பிற்கும் மற்றொரு முறை ஒருவர் திருமணத்திற்கும் மட்டுமே. ஆகவே அவனுக்கு கோவையில் அப்போது கிழக்கு மேற்கு கூட தெரியாது. ஆனாலும் ஒரு மாதம் பெரும் அலைச்சலுக்கு பின் அலுவலகமும் , சேமிப்புக் கிடங்கும் முடிவு செய்து குடி புகுந்தாயிற்று. ( அந்த நாட்கள் அனுபவத்தை 10 பதிவா போடலாம்..:) )
அடுத்து தான் ஆரம்பிச்சது சீனே.. :)
முதல் வேலையாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் டீலர்களை வளைச்சிப் போடனும். நாம் இங்கு புதிது என்பதாலும் நாங்கள் ஒப்பந்தம் போட்ட நிறுவனத் தயாரிப்புகளை அதற்கு முன் கோவை ஏரியாவில் விநியோகித்தவர்கள் சரியாக செயல்படாததாலும் எங்களுக்கு கடும் சவால்கள் காத்திருந்தது. சிறு மற்றும் நடுத்தர டீலர்கள் எங்கள் ஈரோட்டு புராணத்தை கேட்டதும் கொஞ்சம் பவ்யமாக நடந்துக் கொள்வார்கள். ஆனால் இந்த பெரிய டீலர்கள் இருக்கிறார்களே முதல் ஒரு மாதம் என்னை சாவடிச்சிட்டாங்க..
அந்த கால்ங்களில் பெரும்பாலான டீலர்களிடம் நான் பட்ட பாடு...
ஒவ்வொரு முறையும் வழக்கமான சம்பிரதாயமான பேச்சுகளுக்கு பின் ஆரம்பிப்பேன்..
[பச்ச கலரு - நானு
சேப்பு கலரு - டீலரு
கருப்பு கலரு - கடை ஸ்டாப் அல்லது கஸ்டமர்]
“இந்த மாடல் மத்த ப்ராண்ட் விட ரொம்பவே பெட்டர் சார்”
“ம்ம்ம்... வேர்ல்பூல்ல இதே ரேஞ்ச்ல ஒன்னு இருக்கு”
“ஆமாம் சார்.. ஆனா அதுல ஹெல்த்கார்ட் இருக்காது.. அதும் இல்லாம”
“ஏம்ப்பா அந்த கஸ்டமர்க்கு ஓனிடால ப்ளாக் 200 காட்டு”
“ம்ம்.. சொல்லுங்க..”
“ அதை விட இதுல...”
“சார் அந்த கஸ்டமர் எல்ஜில சவுண்ட்மாஸ்டர் கேக்கறார்.. இப்போ அது நம்மகிட்ட ஸ்டாக் இல்லை”
டீலர் நம்ம ப்ராடக்ட் கேட்டலாக் எடுத்து பார்ப்பார்..
“சார் அதுல லெஃப்ட் சைட்ல இருக்கு பாருங்க...”
“ப்ரகாஷ் சவுண்ட்மாஸ்டர் ஸ்டாக் இருக்கா.. அர்ஜெண்டா 5 செட் வேணுமே” - இது போன்ல..
பேசி முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணனும்...
பேசி முடிச்சிட்டார்..
”ஆக்சுவலா இந்த மாடல் தான் இருக்கிறதுலயே ஃபாஸ்ட் மூ....”
“ஏம்ப்பா.. சவுண்ட் மாஸ்டர் நாளைக்குத் தான் வரும்.. சாம்சங்க்ல கே44 காட்டு..”
“ ஃபாஸ்ட் மூவிங் சார்..”
“ சார்.. உங்களுக்கு சவுண்ட் நல்லா வேணும்னா சான்சுய்ல ஹார்ட்ராக் பாருங்க.. அருமையா இருக்கும்.. வெலையும் கம்மி தான்..” ஒரு கஸ்டமரிடம்..
“ம்ம்ம்.. என்ன சொன்னிங்க சஞ்சய்..?”
“வாஷிங் மெஷின்ல நம்மள்து ஃபைபர் ட்ரம் சார்.. மத்த ப்ராண்ட் மாதிரி ஸ்டீல்.....”
“ஏம்ப்பா .. ஏன் அந்த ஃப்ரிட்ஜ் பார்த்த கஸ்டமர் வெளிய போறாங்க..?”
“ சார் அவங்க வாங்கற மாதிரி தெரியலைங்க.. சும்மா வெலை விசாரிச்சிட்டு இருக்காங்க..”
” அப்புறம் சஞ்சய்.. உங்க ப்ராண்ட்டுக்கு அவ்வளவா விளம்பரம் இல்லையே.. நாம் என்ன தான் கஸ்டமருக்கு எதுத்து சொன்னாலும் அவங்க கேக்கறது.........”
“ சொல்லுங்க.. என்ன வேணும்...”
“ ஏனுங்க.. போன வாரம் டிவி எடுத்துட்டு போனோம்.. புள்ளி புள்ளியா வருதுங்களே...”
“ கேபிள் பிரச்சனையா இருக்கும்.. பாருங்க..”
“ இல்லீங்க .. நாங்க டிஷ் ஆண்டனா போட்டிருக்கோம்..”
“ ஏம்பா குமாரு.. இவர் கிட்ட அட்ரஸ் வாங்கி வச்சிக்கோ.. அந்த கம்பனி சர்வீஸ் செண்டருக்கு போன் பண்ணி கம்ப்ளைண்ட் புக் பண்ணிடு..”
“ சர்விஸ் செண்டர்ல இருந்து ஆளுங்க வருவாங்க.. போய்ட்டு வாங்க...”
“ இவங்க டிஷ் சரியா ஃபிட் பண்ணி இருக்க மாட்டாங்க.. இருந்தாலும் டிவி தான் பிரச்சனைன்னு வந்துடுவாங்க.. என்ன பன்றது பாருங்க”
“கஸ்டமர் சாதாரனமா விட்டாலும் பக்கத்து வீட்டுக்காரன் வந்து பயமுறுத்துவான் சார்..”
“அது தான் இப்போ பெரிய பிரச்ச.....”
“ ஏனுங்க.. அந்த கருப்புகலர் டிவி பாத்தேனுங்க.. வெல ரொம்ப ஜாஸ்தியா இருக்குதுங்களே.. மத்த கடைல எல்லாம் கம்மியா சொல்றாங்க...”- எனக்கு இடதோ வலதோ ஒருத்தன்..
அவரை சமாளித்து அனுப்பறார்..
“இந்த மாடல்ல மட்டும் 5 செட் அனுப்பறேன் சார்.. அது எப்படி போகுதுனு பாருங்க.. அப்புறம் இன்னும் ஜாஸ்தி பண்ணலாம்.. 2 செட் போச்சின்னாலே உங்களுக்கும் ஒரு கான்ஃபிடண்ட் வரு........”
“ ஹலோ.... ஆங்.. சொல்லுங்க சார்.. இல்லைங்க இப்போ எதும் வேணாம்.. இல்லைங்க.. சேல்ஸ் ரொம்ப டல்லா இருக்கு..”
பேசி முடிச்சிட்டார்...
“ சொல்லுங்க சார். ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிங்கன்னா நானும் அப்டியே கெலம்பிடுவேன்.. சார் வேற ரொம்ப பிசியா இருக்.....”
“சார்.. சர்வீஸ் செண்டர்ல இருந்து கால் பண்ணாங்க.. அந்த வாப்ப்பாறை கஸ்டமர்து பிக்சர் ட்யூப் கம்ப்ளைண்டாம்... வாரண்டிமுடிஞ்சி போச்சாம்.. ஃப்ரியா மாத்த முடியாதுன்னு சொல்றாங்க....”
“ அந்த 5 மட்டும் அனுப்ப.....”
“ஏனுங்க.. ஒரு மாசம் தான் ட்யூ கட்டலை.. அதுக்கே.......
..... இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சி ஒரு மாசத்துல கிட்டத் தட்ட எல்லா டீலர்கிட்டயும் ஆர்டர் எடுத்து எல்லாக் கடைகள்லயும் இடம் புடிச்சாச்சி.. அதை பார்த்த சாம்சங் நிறுவனம் அப்போ இருந்த டிஸ்ட்ரிப்யூட்டர் கிட்ட இருந்து பாதி மாடல்ஸ் பிரிச்சி எங்களுக்கு குடுத்துட்டாங்க... :) ..... இப்போல்லாம் கால் மேல கால் போட்டு தானே டீலர்ஸ் கிட்ட பேசுவோம்.. அதும் சில லேட் பேமண்ட் டீலர்ஸ் கிட்ட எல்லாம் ஒரே தாதா எஃபக்ட் தான்...:))
Thursday, 19 June 2008
வாங்க நினைத்தால் வாங்கலாம் - நுகர்பொருட்கள் விலை உயர்கிறது.
இப்போ தான் முதன் முதலா நான் செய்கிற தொழில்சார்ந்த ஒரு பதிவை போடறேன். அது ஒன்னும் இல்லீங்க.. அப்புறம் எதுக்குடா பதிவு? :( ஷ்ஷ்ஷ்.. நக்கலடிக்கப்படாது....
.... இதனால் பொது ஜனங்களுக்கு சொல்லிக்கிறது இன்னான்னா... இந்த மாதம் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள்.. குறிப்பாக டிவி, டிவிடி ப்ளேயர், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏசி மற்றும் ஓவன் போன்ற பொருட்களின் விலை கன்னாபின்னவென்று ஏறி இருக்கிறது. இந்த விலை உயர்வு இந்த மாதம் மத்தியில் இருந்தே அறிவிக்கப் பட்டிருந்தாலும் புதிய விலையுடன் இந்த பொருட்கள் இன்னும் முகவர்களுக்கு போய் சேரவில்லை. இந்த மாத இறுதியில் அனுப்பப்படும் சப்ளையில் இருந்து விலையேற்றம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது..
இவற்றை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை ஏறிவிட்டதால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என அனைத்து நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதில் முன்னனி , பின்னனி, கூட்டணி என எந்த வகை நிறுவனமும் விதிவிலக்கல்ல.
இப்போதே சில பெரிய முகவர்கள் முன்னனி நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த மாதம் முதல் இந்த பொருட்களையும் புதிய விலையில் தான் விற்பார்கள்.
விலையேற்றம் என்றால் ஏதோ வழக்கம் போல் இரண்டு அல்லது மூன்று சதவீதம் என்று நினைக்க வேண்டாம். சராசரியாக ஏழு சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 21" கலர் டிவி ரூ.400 முதல் ரூ.750 வரையிலும் 29" கலர் டிவிக்கள் ரூ.1000 முதல் ரூ.1500 வரையிலும் உயர்த்தப் பட்டுள்ளது. LCD மற்றும் ப்ளாஸ்மா டிவிக்களின் விலையில் பெரிய உயர்வு இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் டிவியை பொருத்தவரை விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் Picture Tube மீதான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பது தான். LCD மற்றும் Plasma டிவிக்களுக்கு PT தேவை படாததால் அதன் மீது பெரிய விலை உயர்வு இருக்காது.
ஆனால் ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷின் மீது நடுங்க வைக்கும் அளவு விலையேற்ற இருக்கிறது. முன்னனி நிறுவங்களின் 21" டிவியின் ஆரம்ப விலை சராசரியாக சுமார் 6500 முதல் 7000வரை இருக்கும். இதற்கே 400 முதல் 750 வரை விலை உயர்வு இருந்தால் , ஆரம்ப விலையே 7500 முதல் 8500 வரை இருக்கும் ஃப்ரிட்ஜ் விலை எவ்வளாவு உயர்ந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். அதிலும் ஆடம்பர(Luxury) மாடல்களும், Double Door மற்றும் அதற்கு மேலுள்ள மாடல்களும்( 300 லிட்டர்களுக்கு மேல்) எக்கச்சக்கமாக விலை ஏறி இருக்கிறது.
வழக்கமாக இந்த சமயங்களில் மக்கள் ஆடி சிறப்பு விற்பனையை எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த முறை அதுவும் சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. வழக்கமாக ஆடி சிறப்பு விற்பனையின் போது தயாரிப்பு நிறுவனம் சில சலுகையை குடுக்கும். பிறகு விநியோகஸ்தர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சில சலுகைகளை குடுப்போம். இதை வைத்து சில முகவர்கள் விலை குறைத்து விற்பார்கள். சிலர் பழைய விலையில் சில கூடுதல் பொருட்களை குடுத்து விற்பார்கள். இன்னும் சிலர் சிறிது விலை உயர்த்தி உங்கள் பணத்திலேயே உங்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களை வாங்கி தருவார்கள்:).... இந்த முறை பெரிய அளவில் விலை உயர்வு இருப்பதால் பரிசு பொருட்கள் அல்லது தள்ளுபடி விலையினால் உண்டாகும் நஷ்டத்தை யாரும் விரும்ப மாட்டார்கள்.
ஆனால் இந்த முறை அதற்கெல்லாம் வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் விலையேற்றத்தை சமாளிக்க தயாரிப்பு நிறுவங்கள் பெரிய ஆஃபர் எதும் தருவதாக தெரியவில்லை. விலையேற்றத்தின் காரணமாக நிச்சயம் விர்பனையில் சரிவு ஏற்படும். ஆகவே அதை ஈடுகட்டவே பெரும்பாடு பட வேண்டி இருக்கும். வினியோகஸ்தர்கள், முகவர்கள் எல்லோருக்கும் இதே நிலை தான்.
ஆகவே வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த மாத இறுதிக்குள் வாங்குவது பயனளிக்கும். அடுத்த மாதம் முதல் நீங்கள் தற்போதுள்ள விலையிலிருந்து கூடுதலாக சுமார் 5% முதல் 7% வரை பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
.....அஸ்கி புஸ்கி : எனக்கு தெரிந்த தகவல்களை வைத்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன். இந்த பதிவை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொண்டு தீர விசாரித்து வாங்குங்கள். இதனால் உண்டாகும் எதிர் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.....
... எந்த பொருளை வாங்கினாலும் பல கடைகளில் விசாரித்த பின்பு வாங்குங்கள்... இல்லை எனில் நீங்கள் ஏமாறக் கூடும்...இதை பற்றி பின்னர் விரிவாக ஒரு பதிவிடுகிறேன்...
Saturday, 19 January 2008
மார்க்கெட்டிங்கும் பதிவர்களும்!
If you're attacking your market from multiple positions and your competition isn't, you have all the advantage and it will show up in your increased success and income. - Jay Abraham
மார்க்கெட்டிங் என்பது இப்போது எல்லோருக்குமே... தனி மனிதனுக்கு கூட தேவையான் ஒரு சமாச்சாரம் ஆய்டிச்சி. பூக்கடைக்கு கூட விளம்பரம் தேவைபடும் காலம் இது. விளம்பரம் என்பது மார்க்கெட்டிங்கின் முக்கியமான அங்கம். மார்க்கெட்டிங்கின் இதயம் என்று கூட சொல்லலாம். அதென்ன பூக்கடைக்கு கூட விளம்பரம்? அங்கும் பூவை விற்கத் தானே செய்கிறார்கள். அதற்கும் விளம்பரம் தேவை தானே. அதில் என்ன ஆச்சர்யம் என்கிறிற்களா? . பூக்கடையில் தான் பூ வாசம் வருமே. அதை வைத்து வாடிக்கயாளர்கள் வரமாட்டர்களா. அதெல்லாம் தெருவுக்கு ஒரு பூக்கடை இருக்கும் போது தான் தேடி வந்த கதை எல்லாம். இப்போ தீப்பெட்டியை வரிசையாய் அடுக்கி வைத்த மாதிரி ஒரே இடத்தில் பல கடைகள் இருக்கும் போது கஸ்டமரை தங்கள் கடைக்கு வர வைக்க அவசியம் விளம்பரம் என்னும் மார்க்கெட்டிங் தேவை தானே. அதுவுமின்றி பாலித்தின் பேப்பரில் பூக்களை அடைத்து பொக்கேவாக விற்கும் இந்த காலத்தில் வாசம் எங்கே வீசுகிறது? ஆகவே மார்க்கெட்டிங் அவசியம் தான். இப்போது எல்லாம் பெண்கள் கூட கூந்தலுக்கு மணம் வீச பூ வைப்பதில்லை. போட்டிருக்கும் உடைக்கு மேட்ச்சிங்காகத் தான் பூ வைக்கிறார்கள். அதனால் ஏகப்பட்ட கலப்பின மலர்கள் வந்துவிட்டன. அதில் வாசமும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை. எவண்டா கண்டுபிடிச்சான் இந்த மேட்ச்சிங்க?
மார்க்கெட்டிங் என்பது எதோ கோட்டு சூட்டு போட்டுகிட்டு ஏசி ரூம்ல பெரிய திரைல ஒரு மடிக்கணினியை இணைச்சு புரியாதை வார்த்தைகளை திரையில் காட்டி புது புது திட்டம் போட்டு விற்பனையை பெருக்கும் யுக்தியை விளக்கும் ஒரு ஸ்மார்ட்டான ஆசாமிக்கு சொந்தமானதுனு நெனைக்கிரிங்களா? அதான் இல்லை. விற்பனை அல்லது சேவை துறைக்கு மட்டுமில்லை... நம் தினசரி நடவடிகைகளுக்கும் அத்தியாவசியமானது தான். தம் தினசரி நடவடிகைகளில் மார்க்கெட்டிங்கை உபயோகிக்காதவர்களே இருக்க முடியாது. சிலர் இதை தெரிந்து செய்கிறார்கள். சிலர் தெரியாமலே செய்கிறார்கள். என்ன தலை சுத்துதா? இதோ வந்துட்டேன்..
சிலர் தங்களை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என திட்டம் போட்டு மார்க்கெட்டிங் செய்வார்கள்.ஏனெனில் அவர்கள் தங்கள் ஸ்டைலில் தங்களிடம் உள்ள திறமையை வெளிப்படுத்துகிறார்கள். அது அனவருக்கும் தெரியவேண்டும் என நினைக்கிறார்கள்.தான் செய்வதை அனைவரும் கவனிக்க வேண்டும் என் நினைக்காதவர்கள் உலகில் இருக்கவே முடியாது.புகழை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா என்ன?
உதாரணத்திற்கு நம் ப்ளாகர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பலர் பல ஆண்டுகாலமாக எழுதுவார்கள். அவர்களை பெருமாலானோருக்கு தெரியாது. ஆனால் சிலர் வந்த வேகத்திலேயே பலராலும் கவனிக்கப் படுவார்கள்.கவனிக்கப் படாதவர்களை சொன்னால் அவர்கள் மனம் புண்படலாம். ஆகவே அவர்களை விட்டு விடுவோம். வெகு விரைவில் கவனிக்கப் பட்டவர்களில் ஒருவர் நம் அண்ணாச்சி நந்தகுமார்.அவர் விவரமாக அவருக்கு வைத்துக் கொண்ட பெயர் நந்துf/oநிலா. ஏனெனில் நிலா தமிழ்மணத்தில் பெரும்பாலானோர் அறிந்த ஒரு பெயர். ஆகவே அதை வைத்துக் கொண்டு பதிவு எழுத வந்ததும் அவரும் தெரிந்த முகமாகவே பலருக்கும் தெரிந்தார். இந்த பெயர் வைக்கும் மார்க்கெட்டிங் உத்தி அவரை பிரபல(?!) பதிவராக :) ஆக்கியது.
தனித்தன்மையை வெளிப்படுத்துவதும் மார்க்கெட்டிங்கின் ஒரு அங்கம் தான்.உதாரணத்திற்கு....டிவி ஒரு பொதுவான தொழில்நுட்பத்தில் தான் செயல்படுகிறது. எனவே அதை தயாரிக்கும் எல்லா நிறுவனக்களும் அதற்கு பொதுவாகவே டிவி என்று பெயரிட்டே விற்கலாம். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு பெயருடன் தங்கள் டிவியை விற்கிறார்கள். காரணம்...தொழில்நுட்பமாக பொதுவானதாக இருந்தாலும் அதில் பயன்படுத்தப்படும் சில பாகங்கள், வடிவமைப்பு மற்றும் மென்பொருட்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சிறிதளவேனும் மாறுபடும்.ஆகவே தான் தனித் தனிப் பெயர். ஒவ்வொரு நிறுவனமும் தயாரிக்கும் டிவிக்கு பல மாடல்கள் இருக்கும் அவற்றிற்கு தனி தனி பெயர்கள் இருக்கும். பெயரை வைத்தே அதன் தரம் மற்றும் தனித் தன்மையை கண்டுபிடித்துவிடலாம். வாடிக்கையாளர் கடைக்கு போகும் போது டிவி வேண்டும் என்று கேட்பதில்லை. எல்ஜி, சாம்ச்ங், சோனி, ஓனிடா என்று பெயர் சொல்ல்லித் தான் கேட்க்கிறார்கள்.இதற்கு காரணம் அந்த நிறுவனங்களின் மார்க்கெட்டிங் உத்தி தான்.இப்படி தனித் தனி பெயர்கள் இல்லாமல் பொதுவாக டிவி என்று மட்டும் இருந்தால் ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்பம் வேறு நிறுவனத்தின் டிவி விற்பனையை அதிகப் படுத்திவிடும்.
இந்த மார்க்கெட்டிங் உத்தியை பதிவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் பாருங்கள். ஒரே பெயரில் பல பதிவர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் பெயருடன் ஏதேனும் ஒரு வார்த்தையை சேர்த்து வைத்திருப்பார்கள். உதாரணமாக சிவா என்ற பெயரில் 3 ( எனக்கு தெரிந்து)பிரபல பதிவர்கள் இருக்கிறார்கள். மங்களூர் சிவா, நெல்லை சிவா, நாகை சிவா . இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி எழுத்து நடை இருக்கு.நாகை சிவா ஒரு மாதிரி எழுதுவார். நெல்லை சீவா வேறு மாதிரி எழுதுவார். மங்களூர்சிவா "ஒரு மாதிரி":P எழுதுவார். இவர்கள் பெயருக்கு முன்னால் தங்கள் ஊரின் பெயரை வைத்துள்ளதால் தான் ஒருவரின் பதிவுக்கு கிடைக்க வேண்டிய பலன் அல்லது பாராட்டு இன்னொரு பதிவருக்கு போகாமல் உரியவாருக்கு போய் சேருகிறது.மங்கை என்ற பெயரில் கூட 2 பதிவார்கள் இருக்கிறார்கள். ஒருவர் தமிழில் பெயர் வைத்திருக்கிறார். இன்னொருவர் ஆங்கிலத்தில்.இது தான் தயாரிப்புக்கு தனி தனி பெயர் வைக்கும் மார்க்கெட்டிங் உத்தி. ஒரே நிறுவனம் பல மாடல்களில் தனி தனி சிறப்பம்சங்களுடன் தயாரிப்பை வெளியிடுவது போல், பலர் ஒரே பதிவில் எல்லாவற்றை பற்றியும் எழுதாமல் ஒவ்வொரு விதமான பதிவுகளுக்கும் தனித் தனி வலைப்பூக்கள் வைத்திருக்கிறார்கள(ஹிஹி.. மீ டூ..). இதற்கு உதாரணம் சொன்னால் ப்ளாகர் சர்வர் போதாது.
இன்னும் சிலர் தங்கள் பதிவுக்கு மார்க்கெட்டிங் செய்யும் விதமே வேறு. பதிவில் பொருளடக்கத்திற்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் பிறரை கவரும் விதத்தில் இருக்கும். சிலர் பதிவு எழுதுவதை விட தலைப்புக்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.( பார்க்க :ஆட்களை திரட்ட பிரியாணி பொட்டலம் வேண்டாம்.)
இன்னும் சிலர் தங்கள் பதிவை மார்க்கெட்டிங் செய்ய ஜிமெயில் மற்றும் யாஹூ ஸ்டேட்டஸ் செய்திகளை பயன்படுத்துவார்கள்.மங்களூர் சிவா மாமா வலைச்சரத்துக்கு ஆள் சேர்ப்பது, மை ஃப்ரண்ட் தேன்கிண்ணத்த பாப்புலர் ஆக்கினது எல்லாம் இந்த வகை மார்க்கெட்டிங் தான்.:)
இன்னும் சிலர் புரியாத( என் பதிவுகள் மாதிரி:P) அல்லது மொக்கை(இதுவும் என்னை மாதிரி:P) பதிவுகளுக்கு எல்லாம் சென்று சம்பந்தமே இல்லாமல மிக வித்தியாசமாய் பின்னூட்டம் போடுவார்கள். குறைந்த பட்சம் வெறும் சிரிப்பானையாவது போட்டு வைப்பார்கள். அப்போது தான் தன்னை பலரும் அடையாளம் கண்டுகொண்டு.. இவர் ரொம்ப ஆக்டிவான பதிவராக இருப்பார் போல.. என்று நினைத்து இவர்கள் பதி்வுக்கும் வருவார்கள்.இதுதான் மார்க்கெட்டிங்.
நம்ம புதுகைதென்றல் மாதிரி பதிவு போட்டதும் எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பி தெரியப் படுத்தறது, சிவா மாமா மாதிரி ஆன்லைன்ல இருக்கிற எல்லார்க்கும் சாட் மூலமா லின்க் அனுப்பி தெரியபடுத்தறது எல்லாமே மார்க்கெட்டிங் தான்.
அப்புறம் மின்னஞ்சல் சிக்னேச்சர் பகுதியிம் ப்ளாக் முகவரி இணைத்து அனுப்புவது, யாரோ கஷ்ட்டப் பட்டு யோசிச்சு எல்லாரும் ரசிக்கிற மாதிரி அழகுப்படுத்தி இணையத்துல போட்டு வைக்கிற புகைப்படம் வகையறா ஃபார்வர்ட் அஞ்சல்களில் கஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் அதில் உள்ள சுட்டியை நீக்கிட்டு நம்ம ப்ளாக் சுட்டியை பதிவு பன்றது எல்லாம் மார்க்கெட்டிங் தான். ;)
யாராவது ஒரு திரட்டியில மட்டும் பதிவு பண்ணி இருக்கங்களா சொல்லுங்க. ஊர்ல இருக்கிற எல்லா திரட்டியிலும் பதிவு பண்ணி வச்சிருக்கங்க. அதில்லாம சர்ச் எஞ்சின்லயும் பதிவு பண்ணி வச்சிருக்காங்க. இதெல்லாம் எதுக்கு தங்களோட வாசகர் வட்டத்த அதிகரிக்க தான்.
ஹிஹி.. என்னடா இது எந்த கர்மத்த பண்ணாலும் இந்த மூதேவி வந்து மார்க்கெடிங்னு கத விடுதேனு திட்றது கெக்குது. என பன்றது மார்க்கெட்டிங் நம்ம வாழ்க்கைல பிரிக்க முடியாத அங்கமாய்டிச்சே. :)
தங்களோட தயாரிப்புகளை எல்லாருக்கும் கொண்டு சேர்க்க நிறுவங்கள் மார்க்கெட்டிங் செய்வது போல தங்களோட கருத்துக்கள் அல்லது மொக்கைகள் எல்லாருக்கும் போய் சேர்வதற்காக நாம் செய்வதும் மார்க்கெட்டிங் தான். :)
If you do build a great experience, customers tell each other about that. Word of mouth is very powerful. - Jeff Bezos
இப்பத்திக்கு அப்பீட்டு......
....... இது கத்துக்குட்டிக்கான பதிவு. தமிழ்மணம் திரட்டும் வரை இங்கும் வெளியிடப்படும்...........