இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comThursday, 18 June 2009
ரயிலுக்கு அழகிரி பஸ்ஸுகு லதா அதியமான்
சமீபத்துல டில்லியில் ரயிலை தவறவிட்டுத் தவித்த தமிழக மாணவர்கள் சிலருக்கு அண்ணன் அஞ்சா நெஞ்சன் அழகிரி உதவியது நினைவிருக்கலாம். அதே போல் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் லதா அதியமான் ஒரு உதவி செய்திருக்கிறார்.
ஒரு நாள் அவர் சென்னையில் இருக்கும் போது காலை 8 மணிக்கு ஒரு போன். பேசியவர் ஒரு பள்ளி மாணவி. ஊர் பெயர் மறந்துட்டேன்.
“ அக்கா நான் பஸ் ஸ்டேண்ட்ல நின்னிட்டிருக்கேன். ரொம்ப நேரமா பஸ் வரவே இல்ல. ஸ்கூலுக்கு டைம் ஆய்டிச்சி. பஸ் அனுப்ப சொல்லுங்கக்கா”
“ ஏன்மா பஸ் வரலையா? அங்க வேற யாரும் இல்லையா?”
“நானும் என் கூட படிக்கிற புள்ளைங்களும் தான்கா இருக்கோம். வேற யாரும் இல்ல. வேற ஒருத்தவங்க கிட்ட உங்க நம்பர் வாங்கி காயின் பூத்ல இருந்து பேசறேன்”
“அப்டியா.. சரி இரும்மா. நான் பேசறேன்”
உடனே அந்தப் பகுதி போக்குவரத்து மேலாளரை( வெங்கடேசனோ எதோ பெயர் சொன்னார்) தொடர்புக் கொண்டு காரணம் கேட்டிருக்கிறார் லதா அதியமான். பஸ் ப்ரேட் டவுன் ஆய்டிச்சின்னு சொன்னாராம். ப்ரேக் டவுன் ஆச்சின்னா என்ன வேற பஸ் அனுப்ப வேண்டியது தானே. அங்க ஸ்கூலுக்குப் போக முடியாம பசங்க எல்லாம் தவிச்சிட்டு இருக்காங்க. என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது. உடனே அந்த பகுதிக்கு பஸ் போயாகனும்னு சொல்லி இருக்காங்க. எம் எல் ஏ சொல்லி மறுக்க முடியுமா?. உடனே வேற பஸ் அனுப்பி இருக்காங்க.
மருதகாரய்ங்க கலக்கறாய்ங்கப்பு..... :)
தொகுதி மக்கள் தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்பதற்காக இதை சொன்னார்.
Tuesday, 20 January 2009
நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் பெரிய சாதனைகள் என்றால் அதில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கும் தகவல் அரியும் உரிமை சட்டத்திற்கும் முக்கிய இடம் உண்டு. இந்த சட்டத்தால் பல அழுகிய நாறிப் போன சமாச்சாரங்கள் எல்லாம் வெளிய வந்தது. அரசின் ரகசியமில்லாத எந்த ஆவணத்தின் விவரங்களையும் பொது மக்களால் அறிந்துக் கொள்ள முடிகிறது. இதை பற்றி ஏற்கனவே நிறைய பேர் எழுதிவிட்டதால் இப்போதைய விவகாரத்திற்கு வருவோம்.
சமீபத்தில், தகவல் அறியும் உரிமை அமைப்புக்கான கமிஷனர், நீதிபதிகளின் சொத்து விவரங்களையும் இந்த சட்டத்தின் படி யாராவது கேட்டால் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். உடனே நம்ம தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் ஈகோ டமார்ன்னு எகிறி குதிச்சி ருத்ர தாண்டவம் ஆடிடிச்சி. நாங்க எல்லாம் நீதிபதிகள். நாங்க யாருக்கும் எங்க சொத்து விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று திருவாய் மலர்ந்தார்.
ஏனுங்க சொல்ல மாட்டிங்க அப்டின்னு கேட்டதுக்கு, “ நீதிபதிகள் நியமனம் மாதிரியான விவரங்களை நான் சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் கூட சொல்வதில்லை. நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். அதை வெளியே சொல்வது நம்பிக்கை துரோகம் “ என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அட என்னங்க இது வம்பா போச்சி.. மக்கள் என்ன நீதிபதிகளின் வீட்டு விவகாரத்தையும் சொந்த கஷ்ட நஷ்டங்களையுமா கேக்கறாங்க. சொத்து விவரங்களைத் தானே. அரசாங்க அமைப்பின் அங்கத்தினர் என்ற வகையில் நீங்களும் இந்த சட்டத்திற்கு கட்டுபட்டவர்கள் தான்.
மேலும் , நீதிபதிகளின் மீதான நம்பிக்கை இப்போதெல்லாம் குறைந்து வருகிறது. நீதிபதிகளுக்கு பணவெறி பிடித்து ஆட்டுவதும் சமீக காலங்களாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. கீழ்க் கோர்ட்டுகளில் நீதிபதிகள் கவர் வாங்குவது போன்ற குற்றச் சாட்டுகள் ஏற்கனவே வந்துக் கொண்டிருக்கிறது. ஆகவே நீதிபதிகளின் சொத்து விவரங்களை வாங்கி அதை ஆவணமாக தலைமை நீதிபதி வைத்திருக்கிறார். அந்த ஆவணங்களில் உள்ள விவரங்களை மக்கள் கேட்க்கும் போது தெரியபடுத்துவது தலைமை நீதிபதியின் கடமையே. சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். இதை நிலைநாட்டும் நீதிபதிகள் இதற்கு முன்னாதாரணமாக இருக்க வேண்டுமே ஒழிய தங்களுக்கே உத்தரவா என்ற தலைக்கனத்தில் இருக்கக் கூடாது.
Posted By..
Friday, 9 January 2009
திருமங்கலத்தில் அதிமுக தான் ஜெயிக்கும்.
சென்ற பதிவின் தலைப்பு கும்மிக்கு மட்டும் இல்லை. நிஜமும் கூட. அதிமுக தான் ஜெயிக்கும். நம்ம நாட்ல இன்னும் சின்னத்தை பார்த்து ஓட்டுப் போடுபவர்கள் தான் அதிகம். அதுவும் சிறிய பின்தங்கிய பகுதியான திருமங்கலம் மாதிரியான பகுதியில் வேட்பாளரையோ நாட்டு/மாநில நலனையோ வேறு எந்த கருமத்தையோ பார்த்து வாக்களிக்க மாட்டார்கள். ஒன்லி சின்னம் மேட்டர்ஸ். :)
ஆகவே எந்த கூட்டணி பலமோ அந்தக் கூட்டணி ஜெயிக்கும். கடந்த தேர்தலில் திமுக+காங்கிரஸ்+பாமக+கம்யூனிஸ்டுகள் எல்லோரும் ஓரணியில் இருந்தார்கள். அதிமுக+மதிமுக ஓரணியில் இருந்தார்கள். பெரிய கூட்டணியாக இருந்தும் திமுக தோல்வி அடைந்தது. மதிமுக தான் வென்றது.
இப்போது திமுகவுடன் இருப்பதோ காங்கிரஸ் மட்டுமே. வி.சிறுத்தைகளால் தென்மாவட்டங்களில் எந்த பயனும் இல்லை. அவர்களால் பயனும் இல்லை.பாதகமும் இல்லை. அப்போ பெரிய கூட்டணியா இருந்தும் தோல்வி அடைந்த திமுக இன்று சிறிய கூட்டணி ஆகிவிட்டது.
மாறாக அன்று சிறிய கூட்டணியாக இருந்த அதுமுக கூட்டணி இன்று பலமான கூட்டணியாக இருக்கிறது. பாமகவின் ஓட்டுகள் நிச்சயம் அதிமுகவிற்கு தான் விழும். இல்லை என்றால் ராமதாஸ் நடுநிலை வகிப்பதாக அறிவித்திருக்க மாட்டார். பாமக தொண்டர்கள் திமுக கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் இருப்பதால் தான் இந்த நிலை.
சரி.. ஆளுங்கட்சி செல்வாக்கை வைத்து தில்லுமுல்லு செய்து ஜெயிக்கலாம் என்று நினைத்தாலும் நரேஷ்குப்தாவும் கோபால்சாமியும் அதுக்கும் வச்சிட்டாங்க ஆப்பு. மாநில காவல்துறையை நம்பாமல் துணை ராணுவப் படையை இறக்கி விட்டுவிட்டார்கள். அதோடு விட்டார்களா? எப்போதும் திமுகவிற்கு விசுவாசமா இருக்கும் தமிழக ஆசிரியர் பெருமக்களை வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டு மத்திய அரசு ஊழியர்களை வாக்கு மையங்களில் பணி அமர்த்திவிட்டார்கள். ஆகவே ஆளுங்கட்சிக்கே உரிய அஜால் குஜால் வேலைக்கும் வழி இல்லாமல் போய்விட்டது. ஆகவே எந்த நவீன கேமராவை வைத்து எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அதிமுக வெற்றி தான் தெளிவாகத் தெரிகிறது..
பிறகு எதற்கு 2 கூட்டணிகளும் சேர்ந்து தனித்தனியா 150 கோடி ரூபாய்க்கு மேல செலவு பண்ணதா பேசிக்கிறாய்ங்க.. இவ்வளவு முதலீடு பண்ணவங்க இனி வரும் நாட்களில் இதை வட்டியோட சம்பாதிக்க என்ன எல்லாம் பண்ணுவாய்ங்களோ? அது ஒன்னும் சொந்த பணம் இல்ல.. அடிச்ச பணமாத் தான் இருக்கு.. ஆனாலும் அடிச்சதுக்கு அப்புறம் அவங்க சொந்தப் பணமா ஆயிருக்கும் இல்ல..என்னமோ போங்க...
டிஸ்கி : திமுகவும் காங்கிரஸும் கூட்டணி கட்சிகளா இருந்தா எல்லாத்துக்கும் சப்பை கட்டு கட்டனுமா என்ன? போங்கய்யா.. )
Posted by..
Thursday, 18 December 2008
ஈழத்து எதிரிகளும் கோடம்பாக்கத்து கோமாளிகளும்
ராஜிவ்காந்தி படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் இந்த அளவு ஈழ தமிழர்களுக்கான ஆதரவு குரல் இருந்ததில்லை என நினைக்கிறேன். ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் மிக பலமாகவே குரல்கள் எழுந்தன. எல்லாம் மிக அழகாக சீராக போனதாகவே நினைவு. தினம் தினம் இந்த குரல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அதுவும் ஒரே குரலாக இருந்தது. ஈழ மக்கள் படும் அவதிக்கு எதிராக மக்கள் பெரும் ஆதரவு உருவானது. வழக்கமாக ஈழப் போராட்டங்களுக்கு எதிராக பேசுபவர்கள் கூட அந்த மக்கள் படும் துயரங்களை பார்த்து அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு எதிராக எதுவும் பேசாமல் அல்லது பேச முடியாமல் இருந்தார்கள். எல்லாம் நல்லபடியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. அனைத்துக் கட்சி கூட்டம்.. ராஜினாமா முடிவு.. எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. போராட்டங்களின் நோக்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அரசியல் நிர்பந்தம் குடுத்து போரை நிறுத்தவைப்பது. பாதிக்கப் பட்ட மக்களுக்கு மருந்து பொருள் உட்பட்ட நிவாரணம் வழங்குவது.. அந்த குறிக்கோளை நோக்கி எல்லாம் ஓரளவு நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.. எந்த எதிர்ப்பும் அல்லது தடுமாற்றமும் அல்லது நோக்கச் சிதறலும் இல்லாமல்.. இடையில் வந்தார்கள் பாரதிராஜா, சத்தியராஜ், அமீர், சேரன் , சீமான் போன்ற கோடம்பாக்கத்து கோமாளிகள். வந்தோமா ஈழ மக்களுக்கு ஆதரவும் சிங்கள அரசுக்கு எதிர்ப்பும் தெரிவித்துவிட்டு மூடிக்கொண்டு வந்தோமான்னு இருந்திருக்கணும். ஏன்னா, அதான் எல்லாம் சரியான திசையில் போய்ட்டு இருக்கே.. பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து திரைத் துறையினரும் தங்கள் குரலை எழுப்பியதன் மூலம் சப்தம் இன்னும் பலமாகி இருக்கும். ஆனால் இந்த கோமாளிகள் என்ன செய்தார்கள்?.. ஈழ மக்கள் என்ற தளத்திலிருந்து பிரபாகரன் என்ற தனிமனித துதிபாடலுக்கு சென்றார்கள். ஈழமக்கள் படும் அவதியிலிருந்து அவர்களைக் காக்கணும்.. பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கணும்...அதற்கு போரை நிறுத்தணும்.. அதற்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கணும்... அதைவிடுத்து புலிகள்.. தடைநீக்கம்.. வீரன் .. வெங்காயம் என்று எது இப்போதைக்கு தேவை இல்லாததோ அதை நோக்கி போராட்டத்தை திசை திருப்பினார்கள்.. அதோடு விட்டார்களா? அமைதிப் படையில் சென்ற சில ராணுவ வீரர்கள் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த இந்திய ராணுவ வீரர்களையும் இந்தியாவையும் எதிர்த்து அவமதித்து பேசினார்கள்.. இவனுங்களுக்கு ஈழத்தில் தவறிழைத்த ராணுவ வீரர்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தார்கள். இரவு பகலாக எல்லையில் நின்று நம்மை காக்கும் கண்ணிய வீரர்கள் இவனுங்களின் நினைவுக்கு வரவே இல்லை. ஆகவே ஒட்டுமொத்தமாக இந்தியா மற்றும் இந்திய ராணுவத்தினை குறை கூறினார்கள்... மக்களின் உணர்ச்சியைத் தூண்டி கோடிகோடியாக காசு சம்பாதிக்க இந்திய ராணுவத்தை புனிதப் படையாக காட்டிக் கொள்ளை அடிக்கும் இந்த குள்ள நரிக் கும்பல் ராமேஷ்வரத்திம் நின்றுகொண்டு பிரபாகரன் காதுகுளிரவேண்டும் என இந்தியாவை குறை சொல்லி கத்திக் கூப்பாடு போட்டது. ஈழ மக்கள் இதைத் தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லது சரியான தீர்வையா? இது போதாதா என்னடா காரணம் கிடைக்கும் கோதாவில் குதிக்கலாம் என்று இருப்பவர்களுக்கு. ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர்களும் புலிகள் எதிர்ப்பு என்ற பெயரில் எதிர்ப்புக் குரல் கொடுக்க தொடங்கினார்கள். இந்த கோ.கோமாளிகளின் கோமாளித்தனமான பேசுக்களுக்காக இவர்களை தமிழக அரசாங்கம் கைது செய்தது. இவர்களோடு சேர்ந்தார்கள் வையகத்து கோமாளியும் அவரது அடிபொடியும். இலங்கையில் என்ன நடக்குதுன்னு சொல்றேன் பேர்வழின்னு கிளம்பி தனித் தமிழ்நாடு என்பதில் முடித்தார்கள். இதனால் இவர்களையும் கைது செய்ய வேண்டியதாயிற்று. ஈழமக்களுக்கு ஆதரவு என்ற ஒரே நோக்கத்துடன் நடைபெற்ற போராட்டங்களும் ஆதரவுக் குரல்களும் இந்த கோமாளிகளின் கைது.. இவர்களுக்கு ஆதரவு/எதிர்ப்பு.. ஜாமின்.. விடுதலை என அப்படியே திசை மாறியது. ஒரே குரலாக இருந்ததை பல குரல்களாக மாற்றிய பெருமை இந்த ஜோக்கர்களையே சேரும். பிறகு ஈழமக்களுக்கு ஆதரவு என்ற நிலை மாறி புலிகள் எதிர்ப்பு என்ற பேச்சு பலமாக ஒலிக்க ஆரம்பித்தது. முழுமையாக இருந்த ஈழ ஆதரவு நிலை பாதியாக குறைந்தது. இதுதான் ஈழத் தமிழர்களுக்கு இந்த கோமாளிகள் செய்யும் நன்மையா? இவர்கள் தான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்களா? பிறகு.. மிதிக்க வேண்டிய இடத்தில் மிதித்ததால் கொஞ்சம் பொத்திக் கொண்டு இருந்தார்கள். புலிகள் எதிர்ப்பு என்ற பெயரில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும் குறைந்தன. பிறகு மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம்... டில்லி பயணம்... வெளியுறவு துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்ப முடிவு .. என்று நிலமை ஓரளவு சீரடைந்தது... பொது மக்கள் மீதான தாக்குதலும் ஓரளவு குறைந்து புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்துக்கிடையிலான போராக மட்டும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வைகோ மட்டும் அவ்வப்போது கருணாநிதியை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.. ஏன் சொன்னபடி ராஜினாமா செய்யவில்லை என்று.. அட கூறுகெட்ட குப்பா, உங்க கட்சியில இருக்கிற 2 பேரும் ஏனய்யா இன்னும் ராஜினாமா செய்யவில்லை? கருணாநிதியை பற்றி உமகென்னய்யா கவலை.. உம்ம வேலையை ஒழுங்கா பார்க்க வேண்டியது தானே.. ராஜினாமா செய்து இந்தியாவின் கவனத்தை ஈர்க்க வேண்டியது தானே.. அப்போ தானே இலங்கை பிரச்சனைன்னா விடுதலைபுலிகள் மற்றும் ராணுவத்துக்கிடையேயான போர் என்பது மட்டுமில்லை.. அது அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கை பிரச்சனையும் கூட என்று தமிழகம் தாண்டிய பிற மாநில மக்களுக்கும் புரிந்திருக்கும். அதை செய்யாமல் தனி தமிழகம், பிரபாகரன் துதிபாடல் என்று விஷயத்தை திசை திருப்பிவிட்டு ஈழ மக்களின் நிஜ எதிரியாக இருக்கிறீர்களே நீங்களும் அந்த கோ.கோமாளிகளும்... இப்போது இந்திய வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கே அனுப்பி போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் குடுக்க முடிவு செய்துள்ள நிலையில் மீண்டும் சீமான் என்னும் அரைவேக்காடு பழைய பல்லவியை ஆரம்பித்திருக்கிறது. ஈழ மக்களின் துயரங்களை பற்றி பேசியதைவிட பிரபாகரன் பிரபாகரன் என்று பொலம்புவதையே தொழிலாகக் கொண்டுள்ளது அந்த ஜந்து. அதாவது ஓரளவு நிலைமை சீரடைந்து ஈழ தமிழர்களுக்காக மீண்டும் சில நல்ல முயற்சிகளை அரசாங்கம் எடுக்கும் போது தேவை இல்லாமல் பேசி எதிர்ப்புக் குரல்களை மீண்டும் எழுப்புகிறது இந்த அரைலூசு முண்டம். இவனைப் போன்ற ஆட்கள் இந்தியாவை குறை சொல்லும்போது கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுக்கும் போது இதை யாராவது கேட்கிறீர்களா என்ற கீறல் விழுந்த ரிக்கார்டை போடுகிறார்கள். நான் சொல்கிறேன்.. கர்நாடகாவை குறை சொல்ல தமிழனுக்கு யோக்கியதையே கிடையாது.. ஏன் என்று விரைவில் தனிப்பதிவாக போடுகிறேன். புலிகள் ராஜிவை கொன்றார்கள் என்று சொல்லும் காங்கிரசார், காந்தியை கொன்றவனை இந்திராவை கொன்றவனை என்ன செய்தார்கள் என்று கேட்டிருக்கு இந்த முண்டம். அடேய் வீரவெங்காயம்.. அவர்களுக்கெல்லாம் காங்கிரஸ்காரர்கள் பாராளுமன்ற வளாகத்தில் சிலைவைத்திருக்கிறார்களா? இல்லை கோவில் கட்டி வழிபடுகிறார்களா? இல்லை அவர்களுக்கு தியாகி பட்டம் குடுத்திருக்கிறார்களா? எதற்கெடுத்தாலும் காங்கிரஸ்காரர்கள் ராஜிவ் படுகொலை என்ற பல்லவியையே பாடுகிறார்களாம். அட அல்லக்கைகளே.. எப்போதாவது எதற்கெடுத்தாலும் இந்திய அமைதிப் படை செய்த தவறுகள் என்ற பல்லவியையே பாடுகிறார்கள் என்று சொல்லி அந்த மக்களின் அவதியை கொச்சை படுத்தி இருக்கிறோமா? அப்படி சொல்லவும் விரும்பவில்லை. ஏன்னா அன்று நடந்த தவறுகள் கடுமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான் அதை நாங்கள் துன்பியல் சம்பவம் என்ற ரீதியில் கூட கொச்சை படுத்தவில்லை..உங்களுக்கு மட்டும் ராஜிவ் உயிர் துச்சமாக தெரிகிறதா? ராஜிவ் படுகொலை துன்பியல் சம்பவம் என்று சொல்லி கொச்சைபடுத்திய பிரபாகரன் அமைதிப் படையின் தவறுகளையும் துன்பியல் சம்பவம் என்று ஏன் விடவில்லை? அமைதிப் படையின் தவறுகளுக்கு ராஜிவ் குற்றவாளி என்று நினைத்தால் ராஜிவை கொன்றதற்காக பிரபாகரனும் புலிகள் பயங்கரவாத அமைப்பும் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். ராஜிவுக்கு ஒரு நீதி இந்த பயங்கரவாதிக்கு ஒரு நீதியா? இந்த கோமாளிக் கூட்டம் மறுபடியும் முட்டாள்தனமாக உளறினால் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு தளம் பெரிய அளவில் குறையும் என்பது நிஜம். இது தேவை இல்லாமல் அரசாங்கத்தை உசுப்பிவிடும் செயல் தான். இவன் சிறையில் இருக்கும் போது இவனுடன் இருந்தவர்கள் எல்லாம் சொந்த அண்ணன் தம்பிகளை கொன்றுவிட்டு சிறைக்கு வந்தார்களாம். பார்ப்பணன் போன்ற எதிரிகளை கொல்லாமல் அண்ணன் தம்பிகளை கொன்றுவிட்டார்கள் என்று முத்துக்களை உதிர்த்திருக்கிறது இந்த அரைவேக்காடு. தெரிந்தோ தெரியாமலோ உயர்பதவிகளில் பிராமணர்கள் இருக்கும் போது இது போன்ற லூசுத் தனமான உளறல்கள் இவனுக்கு எந்த பெரிய பிரச்சனையையும் உண்டாக்காது.. ஆனால் ஈழ மக்களுக்கு ஆதரவாக உருவாகும் சூழலை நிச்சயம் பாதிக்கும். ஆகவே இவனைப் போன்ற ஈழதமிழர்களின் எதிரிகளை அடையாளம் காணவேண்டும். ஒன்று ஆக்கப் பூர்வமான உதவி செய்.. இல்லை எனில் மூடிக் கொண்டு போய்விடு. வெளியில் சொல்ல விரும்பாத .. என்னால் முடிந்த ஆக்கப் பூர்வமான உதவியை செய்தவன் என்ற யோக்கியதையில் இதை சொல்ல உரிமை இருப்பதாலேயே இவனை போன்ற ஜந்துக்களை மூடிக் கொண்டு இருக்க சொல்கிறேன்.
Sunday, 14 December 2008
இதுதாண்டா போலிஸ்
ஆந்திராவில் பெண்கள் மீது திராவகம் வீசிய 3 பொறம்போக்குகளை அம்மாநில காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இதை கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. எல்லா மாநில காவல்துறையும் இதுபோல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் இந்த பொறம்போக்குகள் மாதிரி மேலும் பல பொறம்போக்குகள் உருவாவதை தடுக்கலாம்.
இதை தெலுங்கு தேசம் போன்ற அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் சில ”மனித உரிமை அமைப்புகளும்” எதிர்த்துள்ளன. இந்த மானம்கெட்ட மனித உரிமை அமைப்பினரை முதலில் என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும். அதென்னவோ தெரியவில்லை ரவுடிகளையும் தாதாக்களையும் அவர்களைப் போன்ற பரதேசிகளையும் கொன்றால் இந்த “மனித” உரிமை ஆர்வலர்களுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது.
அட வெங்காயங்களா.. இது போன்ற ரவுடி நாய்களால் எத்தனை அப்பாவி உயிர்கள் போகிறது.. எவ்வளவு பேர் வாழ்க்கை நாசமாகிறது.. அவர்களால் கட்டவிழ்த்துவிடப் படும் வன்முறைகள் தான் எவ்வளவு?.. அவர்களால் எடுக்கப் பட்ட உயிர்கள் தான் எவ்வளவு? அவர்களெல்லாம் உங்கள் பார்வையில் மனிதர்களாகத் தெரியவில்லையா? அவர்களின் உயிர்களை இந்த ரவுடி நாய்கள் எடுக்கும் போது எப்போதாவது இந்த நாய்களுக்கு எதிராக போராடி இருக்கிறீர்களா?..
அரசியல்வாதிகளை விட கேவலமான விளம்பரப் பிரியர்கள் இந்த மனித உரிமை அமைப்பினர். ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுக்கப் படும் விவகாரங்களில் மட்டும் அதுவும் தீயவர்களுக்கு ஆதரவாக மட்டும் களமிறங்கும் இந்த விளம்பர கும்பல்.
பேசாமல் மனித உரிமை அமைப்பு என்ற பெயரை மாற்றி “ரவுடிகள் உரிமை அமைப்பு” என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த என்கவுண்டரில் ஈடுபட்ட ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு “வீர தீர “ சாதனை புரிந்ததர்காக குடியரசுத்தலைவர் விருது வழங்க வேண்டும்..
அப்டியே இந்த அப்சல் குருவுக்கும் ஒரு என்கவுண்டர் ப்ளான் பண்ணா நல்லா இருக்கும்..
Monday, 24 November 2008
பச்சா பாய் Vs லுச்சா பாய்
1984 Sikh carnage was wrong: Rahul
Amritsar, November 18 Congress general secretary Rahul Gandhi condemned the anti-Sikh violence in the aftermath of Indira Gandhi’s assassination, saying “whatever happened was wrong”.“The 1984 riots were wrong. I strongly condemn the carnage,” Rahul said at a news conference in response to a question on Operation Bluestar and the riots. “There is no truth that there is hatred among Sikhs against the Congress party. I have travelled a lot and wherever I go and interact with them (Sikhs), I find lots of love for us... When my grandmother lost elections in 1977, I saw with my own eyes many Sikhs assembling by her side at our residence, when many others had left her isolated. We cannot forget all this.”
Rahul said he and his family bore no ill-will against the community of “which the whole country is proud of”.
Rahul reacted to BJP chief Rajnath Singh’s description of him as a “bachcha” in politics. “Yes, I am a bachcha. But then, 70% of the country’s population is bachcha. What kind of message is Rajnath Singh sending?”
In an interview with The Indian Express Editor-in-Chief Shekhar Gupta on NDTV’s Walk the Talk, Rajnath Singh had said, “I would not like to comment on Rahul at all, I consider Rahul a child... Maybe some politicians consider him a rival but as far as I’m concerned he is just like my child.”
இது பச்சா பாய் கதை .... :)
அடுத்து பாருங்க .... லுச்சா பாய் கதை.. :)
Friday, 10 October 2008
ஜெயலலிதாவுக்கு வைகோ சவால்
”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்.”
Thursday, 9 October 2008
ஆற்காட்டாரை திட்டுவது மடத்தனம்
முதலில் 3 மணி நேரம் மின் வெட்டு..பிறகு 4 மணி நேரம்.. பிறகு 5 மணி நேரம்.. இப்போது 6.30 மணி நேரம் மின்வெட்டு.. வேறு வழி இல்லை.. சுய தொழில், தொழிற்சாலை விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகள் என நீங்கள் பாட்டுக்கு பண வெறி பிடித்து ஆடுவதை நிறுத்துங்கள். பிறகு எல்லோருக்கும் 24 மணி நேரம் மின்சாரம் கிடைக்கும். மின் வெட்டு தமிழகத்தில் மட்டுமா இருக்கு? ஆந்திரா , கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரம்.. ஏன் டில்லியில் கூட தினம் ஒரு மணி நேரம் மின் தடை அமலில் இருக்கு. இதற்கெல்லாம் ஆற்காட்டாரா காரணம்? இல்ல... அங்கெல்லாம் திமுக ஆட்சிதான் நடக்கிறதா?..
தமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.. இன்னும் ஆயிரக் கணக்கான கிராமங்களுக்கு மின்சார இணைப்பே கிடையாது.. அவர்களெல்லாம் 24 மணி நேரமும் மின்சாரம் இல்லாமல் வாழ வில்லையா? உங்களால் வெரும் 6.30 மணி நேர மின்வெட்டை தாங்கிக் கொள்ள முடியாதா?
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை பயன் படுத்தக் கூடாது என்று சொல்வதால் இந்த வீணாப் போன தொழில் துறையினர் எதற்கு இப்படி குதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. எதோ தினமும் தொழில் நடந்தால் தான் இவர்களால் சாப்பிடவே முடியும் என்பது போல் கத்துகிறார்கள். எல்லாரும் நகரின் மையப் பகுதியில் ஆடம்பர பங்களாக்களில் வாழ்ந்துக் கொண்டு மின்சாரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி தொழிற்சலைக்கு மின்சாரம் கிடைக்கும்?..
இவர்களிடம் இருக்கும் பணவசதிக்கு வாரத்தில் 2 நாட்கள் முழுமையாக மின்சாரம் பயன் படுத்த தடை விதிக்க வேண்டும். இதனால் ஒன்னும் குடி மூழ்கிடாது.
இவர்களைவிட மோசம் இந்த விவசாயிகள். எதற்கெடுத்தாலும் நீலிக் கண்ணீர் விடும் கும்பல். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டும். முழுநேரமும் இலவச மின்சாரம் வழங்குவதால் செலவில்லாமல் நோகாமல் விவசாயம் செய்து கொள்ளை லாபம் பார்த்து தங்கள் பிள்ளைகளை எல்லாம் இஞ்சினியர்களாகவும் டாக்டர்களாகவும் உறுவாக்கி விடுகிறார்கள். பிறகு யார் விவசாயம் பார்ப்பது? நகரத்தில் இருப்பவருக்கெல்லாம் எவன் சோறு போடுவது?.. ஆகவே இவர்களுக்கும் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டும். அதுவும் இலவசமாக வழங்க கூடாது.
இதனால் என்ன ஆச்சி பாருங்க.. எல்லா துறை ஊழியர்களுக்கும் போனஸ் அள்ளி வழங்குகிறார்கள். ஆனால் கடுமையாய் உழைக்கும் மின்சார வாரிய ஊழியர்களுக்கு மிகக் குறைந்த அளவே போனஸ் வழங்க முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பாவம் விவசாயிகளை சும்மா விடாது.
பிறகு இந்த சொகுசு வாழ்க்கை வாழும் நடுத்தர குடும்ப கூட்டம்.. இரவில் மின் தடையால் இவர்களால் தூங்க முடியவில்லையாம். கொசுக் கடிக்கிறதாம். மக்களுக்காக எவ்வளவோ போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்ற அரசியல் தலைவர்களுகெல்லாம் சிறையில் ஏசி வசதியா செய்துக் கொடுக்கிறார்கள். அவர்களெல்லாம் கொசுக் கடியில் இருக்கவில்லையா?.. அரசியல் தலைவர்களே தாங்கிக் கொள்கிறார்கள். ஒண்டுக் குடித்தனத்தில் வாடகை வீட்டில் வாழும் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாதா? அட அதை கூட விடுங்க.. அந்த காலத்தில் எல்லாம் எல்லோர் வீட்டிலும் மின்சாரம் இருந்ததா?.. இல்லை ஃபேனும் ஏசியும் தான் இருந்ததா? உங்க தாத்தா பாட்டிகளெல்லாம் வாழவில்லையா? உங்களுக்கு மட்டும் என்ன சுகபோக வாழ்க்கை வேண்டி இருக்கு...
கோவிலுக்குள் செருப்பு போடாமல் போக ஒரே காரணம்.. அங்கு ஏழை பணக்காரன் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என எல்லோரும் சமமாய் இருக்கவேண்டும் என்பதால் தான். அதே போல் தான் இரவு நேர மின்வெட்டும். இதனால் சேரியில் வாழ்பவனும் மாட மாளிகையில் வாழ்பவனும் ஒன்றாகிவிடுகிறார்கள்.
இந்த உயரிய சிந்தனையை புரிந்துக் கொள்ள முடியாத கும்பல் ஆற்காட்டாரையும் திமுக ஆட்சியையும் குறை சொல்லித் திரிகிறது.
இலவசமா டிவி குடுக்கிறாங்கனு தெரிஞ்சதும் கட்சி பாகுபாடு இல்லாம வீட்டுக்கு 4 போலி ரேஷன் கார்டு தயாரிச்சு கார்டுக்கு ஒரு கலர் டிவி வாங்கி ஒரே ரூம்ல 2 டிவி வச்சி ஆளுக்கொரு நிகழ்ச்சி பாக்கறிங்களே.. அதுகெல்லாம் எங்க இருந்து வருது கரண்டு.. இப்படி அநியாயமா மின்சாரத்த வீணாக்குவதோடு மட்டும் இல்லாம ஆற்காட்டாரை கொற வேற சொல்லுவியளோ?
இனியாவது உங்க முட்டள் தனமான புலம்பலை நிறுத்துங்க. அவ்ளோ தான்.
Wednesday, 24 September 2008
பெரிய கட்சிகளுக்கு வடிவேலு சவால்

"விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நின்று ஜெயிப்பேன்"
- இவை அண்ணார் வடிவேலு சமீபத்தில் உதிர்த்தவை...
"விஜயகாந்தை புகழ்ந்து அரசியல் வசனம் பேசி நடிக்க சொன்னதால் அவர் படங்களில் நடிக்கவில்லை. அதனால் தான் என் மீது தாக்குதல் நடக்கிறது. நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன்"
- இதுவும் அண்ணார் வடிவேலுவின் டயலாக் தான்.
.... வடிவேலு வர்த்தைப் படி அவர் எந்த கட்சியையும் சாராத பட்சத்தில் விஜயகாந்தை எதிர்த்து சுயேட்சையாகத் தான் போட்டியிடுவார். அப்போது நிச்சயம் மற்ற அரசியல் கட்சிகளும் தன் வேட்பாளர்களை அந்த தொகுதியில் நிறுத்துவார்கள்... நம் அரசியல் சட்டத்தின் சாபக் கேடு, ஒரு தொகுதியில் ஒருவர் தான் ஜெயிக்க முடியும். வடிவேலு சொல்வது போல் அவர் வெற்றிபெறுவாரேயானால்.. அது விஜயகாந்திற்கு மட்டும் தோல்வி அல்ல. அந்த தொகுதியில் தங்கள் வேட்பாளர்களை போட்டியிடச் செய்த மற்ற அரசியல் கட்சிகளுக்கும் தான் தோல்வி... அப்படியானால் சுயேட்சையாக போட்டியிட்டு விஜயகாந்த் , ஜெயலலிதா , கருணாநிதி, தங்கபாலு, ராமதாஸ் , காவி மற்றும் சிவப்புக்காரர்கள் ஆகியோர்களின் வேட்பாளர்களை தன்னால் தோற்கடிக்க முடியும் என்கிறார் வடிவேலு..
.. யப்பா.. இந்த காமெடியனுங்க தொந்தரவு தாங்க முடியலைடா சாமி.. இம்புட்டு நாள் ஈரோவா நடிச்சவனுங்க தான் மொத மந்திரியா ஆவனும்னு வந்தாங்க.. இப்போ காமெடியனுங்களும் போட்டிக்கு வந்துட்டாங்கய்யா... அட வடிவேலுவும் ஈரோவா நடிச்சிருக்கார் இல்ல.. அப்போ மொத மந்தி ஆசை நாயந்தாண்யா..
.......இந்த பதிவை எழுதி முடிக்கும் இந்த நேரத்திலே சன் நியூஸ் மீண்டும் தலைப்புச் செய்திகளில் கேட்டது " விஜயகாந்தை எதிர்த்து கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும்..வடிவேலு ரசிகர்கள் நேரில் வந்து வலியுறுத்தல்"
.... ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்கய்யா... அடுத்து என்ன?.. கட்சிக் கொடி.. சாரி.. மன்றத்துக் கொடி டிசைன் பண்ண வேண்டியது தான்.... :))
.... கொய்யால தியேட்டர்ல ப்ளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்த்து உங்களை உசுப்பேத்தி விடற எங்களுக்கு இதுவும் வேணும்... இதுக்கு மேலயும் வேணும்டா.. :(
Monday, 25 August 2008
எவன்டா என் தலைவனை உசுப்பேத்தி விட்டவன்?
ப்ளீஸ்.. ப்ளீஸ்.. முழுசா பாருங்க... என் தலைவனின் உணர்வில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்... என் தலைவனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ப்ளீஸ்...
நன்றி : சின்னக்குட்டி
Saturday, 26 July 2008
ஆனாலும் கூகுளுக்கு இம்புட்டு நக்கல் இருக்கப்படாது.
வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி , மின்வெட்டை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் பண்றாய்ங்களாமாம். மக்கள் நலனில் சரத்திக்கு எவ்ளோ அக்கறை இருந்தா இதை செய்வார்? இதை போய் இந்த கூகுள் நக்கல் அடிச்சி வச்சிருக்கு பாருங்க. படத்தை பெரிசு பண்ணி பாருங்க புரியும்.
அந்த ஆர்ப்பாட்ட செய்தியை பொழுது போக்கு பிரிவில் வகைபடுத்தி இருக்கு. இதை பார்த்தால் சரத் எவ்ளோ வருத்தப் படுவார். அவரோட மக்கள் நலன் சார்ந்த விஷயம் கூகுளுக்கு பொழுதுபோக்கா தெரியுதா? :))
ஆகவே.. வருங்கால முதல்வரை நக்கல் அடித்த கூகுளை கண்டித்து நாம் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அலைகடலென திருண்டு வாரீர்..வரீர்..வாரீர்..
( இதை நகைச்சுவை பிரிவுல போட்ற போகுது.. :P )
Wednesday, 23 July 2008
மாயாவதி+பிரகாஷ் காரட்+வடிவேலு
மாயாவதி + சந்திரபாபுநாய்டு + வடிவேலு என்றும் சொல்லலாம்.. ஆனால் சந்திரபாபு நாய்டு பரவாயில்ல... உசுப்பேத்திவிட்ட கைய்யோடு எஸ்கேப் ஆனவர் பிரகாஷ் காரட் தான்... :))
Saturday, 29 March 2008
இயக்குனர் சீமானை உதைக்கலாமா?
வெளிவராத ஒரு சிங்கள படத்தின் இயக்குனரை சிலருடன் இணைந்து இயக்குனர் சீமானும் தாக்கி இருக்கிறார். இது போன்ற கீழ்த்தரமான இயக்குனர் இருப்பது தமிழ்சினிமாவின் சாபக்கேடு. தாக்குதலுக்கு காரணம் அவர்களின் கொள்கை(!?)க்கு மாறாக அந்த சிங்கள படம் இருக்கிறது என்பது தான். படமே வெளிவராத நிலையில் இவர் எப்படி அதை கண்டுபிடித்தார் என தெரியவில்லை. ஒரு வேளை இவர் சொல்லும் காரணம் நிஜமானதாகவே இருக்கட்டும். அப்படியானால் ஒருவர் எடுக்கும் சினிமா நம் கொள்கைகளுக்கு மாறாக இருந்தால் நமக்கு பிடிக்காத வகையில் இருந்தால் அந்த படத்தின் இயக்குனரை உதைக்கலாம். அப்படித்தானே.
சீமான் எடுத்த எல்லா படங்களுமே எல்லோருக்குமே பிடித்தவை தானா?. எதோ காரணத்தால் எத்தனையோ பேருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம் இல்லையா?.. அப்போ அவங்க எல்லாம் சேர்ந்து இந்த டுபாக்கூர் இயக்குனர் சீமானை உதைக்கலாமா?
சுப.வீ.பா மற்றும் கோஷ்டி எதிர்க்கிறார்கள் என்றால்... அவர்களுக்கு தேவை இருக்கிறது எதிர்க்கிறார்கள். இவரும் ஒரு இயக்குனராக இருந்துக்கொண்டு இதை எபப்டி செய்யலாம்? நாளை இவருக்கும் இந்த நிலை வந்தால் யாரையும் இவர் குறை சொல்லமாட்டாரோ?...
இதில் வேடிக்கை .. சுப.வீ யின் அண்ணன் தான் இயக்குனர் திரு. முத்துராமன் அவர்கள். :) இவர் இன்னொரு இயக்குனரை தாக்குவதற்கு முன் யோசித்திருக்க மாட்டாரா? நம் அண்ணன் எடுத்த படங்கள் கூட யாருக்காவது பிடிக்காமல் இருந்திருக்கலாமே.. அவர்களும் நம் வழியை பின்பற்றினால் என்ன செய்வது என்று....
Thursday, 6 December 2007
திமுக முதல்வர்கள் பட்டியல் - வெளிவராத தகவல்கள்

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் முக்கியச் செய்தி : அன்பழகன் இணை முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர்.
இன்னும் வெளிவராத தகவல்களை உங்களுக்கு அளிப்பதில் பெருமை அடைகிறேன். :)
கருணாநிதி - முதல்வர்
அன்பழகன் - இணை முதல்வர்
ஸ்டாலின் - துணை முதல்வர்(வடக்கு)
அழகிரி - துணை முதல்வர் ( தெற்கு)
கனிமொழி - கூடுதல் முதல்வர்(வடக்கு பிராந்திய அரசியல் அணி)
பொண்முடி - கூடுதல் முதல்வர் ( தலைமை செயலக நிர்வாகம்)
கோ.சி.மணி - கூடுதல் முதல்வர் ( திமுக உறுப்பினர் தேர்வானையம் )
வீரபாண்டி ஆறுமுகம் -கூடுதல் முதல்வர்( எதிர்க் கட்சியினர் அறிக்கை தடுப்பு பிரிவு )
துரை முருகன் - கூடுதல் முதல்வர் ( சட்டம் ஒழுங்கு)
ஆற்காடு வீராச்சாமி - கூடுதல் முதல்வர் ( குற்ற புலனாய்வு பிரிவு)
ஐ. பெரியசாமி - கூடுதல் முதல்வர் ( பொருளாதாரக் குற்ற தடுப்புப் பிரிவு)
வேலு - கூடுதல் முதல்வர் (பொது விநியோக குற்ற தடுப்பு பிரிவு)
கே.என். நேரு - கூடுதல் முதல்வர் ( சிறப்பு அதிரடிப் படை)
பூங்கோதை - கூடுதல் முதல்வர் ( மகளிர் ஆணையம்)
தங்கம் தென்னரசு - கூடுதல் முதல்வர் ( தொண்டர் அணி பயிற்சி)
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - கூடுதல் முதல்வர் ( லஞ்ச ஒழிப்புத் துறை)
கீதா ஜீவன் - கூடுதல் முதல்வர் ( தொண்டரணி குடியிருப்பு வாரியம்)
பொங்கலூர் பழனிச்சாமி - கூடுதல் முதல்வர் ( தீயணைப்பு துறை)
பெரிய கருப்பன் - கூடுதல் முதல்வர் ( சிறைத் துறை)
இன்னும் ஏராளமான துணை முதல்வர்கள் மற்றும் உதவி முதல்வர்கள் பட்டியல் திமுக இளைஞர் அணி மாநாட்டில் வெளியிடப் படும். :)
Tuesday, 27 November 2007
மருத்துவ மாணவர்கள் போராட்டம் சரியா?
மருத்துவ பட்ட படிப்பு ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதற்கும் ஒரு ஆண்டு கட்டாய கிராமப்புற பணிக்கும் எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவ Moneyகள் புதுசு புதுசா யோசிச்சி போராட்டம் நடத்துறாய்ங்க. எதிர்ப்புக்கு அவர்கள் சொல்லும் காரணம்:
:: ஆறரை ஆண்டுக்கு எதிர்ப்பு ::
17 வயதில் பட்டப் படிப்புக்கு சேர்ந்தால் அதை முடிக்க 24 வயது கடந்துவிடும். அதற்கு பிறகு தான் வேலைக்கு போக முடியும். ஆனால் பொறியியல் படிக்கும் மாணவர்கள் 22 வயதிலேயே மாதம் 30000 மேல் சம்பாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.நாங்கள் மட்டும் நீண்ட வருடங்கள் காத்திருக்க வேண்டுமா என்பது தான்.
பதில் : உங்கள் நோக்கம் விரைவில் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் என்றால் உங்களை யார் மருத்துவம் படிக்க சொன்னார்களாம்?. நீங்களும் பொறியியலோ விஷுவல் கம்யூனிகேஷனோ பேஷன் டிஸைனிங்கோ படிக்க போக வேண்டியது தானே?
:: ஒரு ஆண்டு கிராமப் பணிக்கு எதிர்ப்பு ::
கிராமப் புறப் பணிக் காலத்துல அரசாங்க சம்பளமாக 8000 முதல் 10000 வரை தான் கிடைக்கும். இதுவே உடனடியாக தனியார் மருத்துவ மனைகளில் வேலைக்கு சேர்ந்தால் கை நெறய( சில்லறையா கொடுப்ப்பாங்களோ? :P ) காசு கிடைக்கும். எங்களை எதற்கும் கட்டாயப் படுத்தாதிர்கள். எங்கள் இஷ்டத்திற்கு வேலைக்கு போக அனுமதியுங்கள் என்பது தான்.
பதில் : மேலே சொன்ன அதே பதில் தான். உங்கள் நோக்கம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் அல்லது குறைந்த வயதிலேயே கை நிறய சம்பாதிக்க வேண்டுமெனில் நீங்கள் அதற்குறிய படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டியது தானே. யார் உங்களை தடுத்தது?
இவர்கள் எல்லாம் சிறு பிள்ளைகள். எதோ உணர்ச்சிவசப் பட்டு பேசுகிறார்கள். விட்றலாம்.
ஆனால் இதுக்கு ஆதரவு தெரிவிச்சு வருங்கால முதல்வர் சரத்குமார்ல ஆரம்பிச்சி கடந்த கால முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் வரை வரிந்துக் கட்டிக் கொண்டு பேசுவதை தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
சமீபத்தில் அம்மாவின் அறிக்கை:
"பொறியியல் மாணவர்கள் படித்து முடித்தவுடன் மாதம் ரூ.50000 ல் இருந்த்து 1 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.ஆனால் மருத்துவ மாணவர்கள் ஆறரை ஆண்டு படிப்பு முடித்து பிறகு மேல் படிப்பு முடித்து சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது 30 வயது ஆகிவிடும் . எனவே ஒரு ஆண்டு அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது தான். அப்போ 29 வயது வரை படிப்பதை பற்றி கவலை இல்லை.
இப்போ ராமதாஸ் மட்டும் அம்மாவுடன் கூட்டணி வைக்கத் தயார்னு ஒரு அறிக்கை விடட்டும் பாருங்க. அப்புறம் மம்மிக்கு ஒரு ஆண்டு என்ன? இன்னும் 5 ஆண்டுகள் அதிகரித்தாலும் அதை பற்றி கவலை பட மாட்டாங்க. என்ன கொடுமை அமாஸ் இது?
மருத்துவம் என்பது நோய் போக்கும் உயிர் காக்கும் புனிதமான சேவை.இதை இப்படி பண ரீதியாக ஒரு முன்னால் முதல்வரே பார்க்கும் போது அந்த மருத்துவ மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும்? இவர்கள் இப்படி பணத்தாசை காட்டி பெரியவர்களால்?! வளர்க்கப் படுவதால் தான் விரைவாகவும் அதிகமாகவும் சம்பாதிக்க நினைக்கிறார்கள். படிப்பு முடித்ததும் வங்கி கடனுடன் பெரும் மருத்துவ நிறுவனங்களை ஆரம்பித்து மேலும் பல மருத்துவ நிறுவனங்கள் ஆரம்பிக்கவும் வங்கிக் கடனை அடைக்கவும் அநியாய கட்டணம் வசூலித்து ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு நவீன மருத்துவம் எட்டாக் கனியாக ஆகிவிட்டது. தட்டிக் கேட்க அல்லது தடுத்து நிறுத்த வேண்டிய தலைவர்கள் இவர்களை தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பின்னே.. கட்சி நடத்த நன்கொடை வழங்க நிறைய பணக்காரர்கள் வேண்டுமல்லவா? அவரவர் கஷ்டம் அவரவர்க்கு. :(
மாணவர்களின் இந்த மன நிலைக்கு பணவெறி பிடித்த அரசியல்வாதிகள் மட்டுமில்லை. அரசாங்கமும் தான்.கல்வி நிறுவனங்களில் நடக்கும் பகல் கொள்ளையை தடுத்து மாணவர்களின் படிப்புக்கான பெரும் பண சுமையை ஓரளவாவது குறைத்தால் தான் அவர்களும் படிப்புக்கான பெரும் முதலீட்டை வட்டியுடன் சீக்கிரம் சம்பாதித்து பிறகு எதாவது சேமித்து ஒரு மருத்துவ நிறுவனத்தை நிறுவ முடியும் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் இருந்து ஒழிக்க முடியும்.
அது சரி.. அரசாங்கம் என்பதே பெரும் முதலீட்டுடன் பதவிக்கு வரும் அரசியல் வாதிகளின் சொத்து தானே. குறைந்த பட்சம் மருத்துவ படிப்புடன் சேர்த்து கொஞ்சம் மனிதாபிமானம் அல்லது சேவை மனப் பான்மை பற்றியும் கற்பித்தால் கொஞ்சம் நல்லது நடக்கலாம். யாருமே கிராமத்துக்கு போய் மருத்துவம் பார்க்க விரும்பலனா யார் அவங்க உயிர காப்பாத்தரது? அவங்க அப்படி என்னங்கய்யா பாவம் பண்ணாங்க?
டிஸ்கி: அதிகம் பணம் சம்பாதிப்பதயோ அல்லது பெரும் பணக்காரர்கள் உருவாவதையோ( நேர் வழியில்) நான் ஒரு போதும் எதிர்பவனல்ல.கோயிலுக்கு சாமி கும்பிடப் போகும் போது அங்கு சுண்டலும் புளியோதரையும் தான் கிடைக்கும்( எத்தன பேர் வாரப் போறாய்ங்களோ? :( ). நீங்கள் அங்கு போவது சாமி கும்பிடவும் மன அமைதிக்காகவும் தான்.சாப்பிடுவதற்கு அல்ல. ஆகவே அங்கு கிடைப்பதை தான் நீங்கள் சாப்பிட வேண்டும். உங்களுக்கு வகை வகையாகவும் ருசியாகவும் சாப்பிட ஆசை இருந்தால் நீங்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு தான் போக வேண்டும். கோவிலில் உக்காந்து பொலம்பாதிங்க என்று தான் சொல்கிறேன்.( அப்டியே நான் சொல்றத கேட்டுட்டாலும்:P )
Thursday, 25 October 2007
தகர்ப்பதில் தவறென்ன?
இந்த பாலம் அல்லது மணல் திட்டினால் யாருக்கு என்ன பலன் கிடைத்து வந்தது? இனி என்ன பலன் கிடைக்கப் போகிறது? ஏன் இதை தகர்ப்பதை தடுக்க வேண்டும்?। கோவில்கள் மற்றும் பழைமையான கட்டிடங்கள் அல்லது இடங்களை கூட அழித்துவிடலாமா? என்று மடத்தனமாக யாரும் எண்ண வேண்டாம். ஏனெனில் அவைகளை அழிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்பதால் அப்படியே இருக்கட்டும்.
ஆனால் இந்த பாலம் அல்லது மணல் திட்டை தகர்ப்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். சுற்றுலா வளர்ச்சி அடையும். அதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும்.
நாட்டின் எதிர்கால நலனை மனதில் கொண்டு அந்த நிமிடம் வரை அவர்களை வாழ வைத்த இன்யும் வாழ வைக்கப் போகிற விளைநிலங்களை அழித்து பாரம்பரியமாக அங்கு வாழும் மக்களை இடம் பெயர செய்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும் போது மனதை திடப்படுத்திக் கொண்டு வரவேற்பவர்கள், எந்த பயனும் இல்லாத இந்த ராமர் பாலம் அல்லது மணல் திட்டை அழிப்பதை யேன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்க வேண்டும்?
மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் மூடநம்பிக்கையை வள்ர்த்து அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதை வோட்டுக்களாக மாற்றீ அதன் மூலம் பதவிகளை அடைந்து ஏசி காரிலும் ஏசி பங்களாக்களிலும் சுகம் அனுபவிக்கும் வீணாப்போன இந்த வோட்டுப் பிச்சைக்காரர்களின் சுயநலத் தந்திரம் அல்லாமல் வேறென்ன இருக்க முடியும்?
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கூட எதிர்க்கப் படுகின்றதே என் வாதிடலாம். எங்கே எதிர்க்கப் படுகிறது? யாரால் எதிர்க்கப் படுகிறது என்று பாருங்கள். மேற்குவங்கத்திற்கு வெளியே தானே. சிகப்பு மனிதர்கள் பிழைப்பு நடத்தும் மே.வ. வில் மிகத் தீவிரமாக செயல்படுத்தப் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது? ஒரு வேளை எதிர்ப்பவர்களின் எதிர்ப்பயும் மீறி அங்கு சி.பொ.ம வந்து அதில் துவங்கப்படும் பன்னாட்டு நிருவனத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் வேண்டாம் என்று வீராப்பாய் வந்துவிடுவார்களா?
தமிழகத்தில் தமிழை வாழ வைப்பதாக பாவ்லா காட்டுபவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை வடக்கில் தமிழ் வாசம் வீசாத பள்ளிகளில் தான் படிக்க வைக்கிறார்கள்.
இன்றுவரை உபதேசங்கள் என்பது ஊருக்கு மட்டும் தான். தன் வீட்டுக்கு அல்ல. ஆகவே நல்லவைகளை எதிர்த்து ஊரை ஏமாற்றூபவர்களை ஒதுக்கித் தள்ளி விட்டு சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
நாட்டு நலனை மனதில் கொண்டு எதர்க்கும் உதவாத ராமர் பாலம் அல்லது மணல் திட்டை தகர்த்து எறிவோம்