இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner
Showing posts with label விடியோ. Show all posts
Showing posts with label விடியோ. Show all posts

Monday, 23 March 2009

கூட்டாஞ்சோறு v 1.03.2

எனக்கு ஒரு சந்தேகம். சுஜாதாவின் கடவுள் புத்தகத்தை படிக்கிறப்போ வந்தது தான். சில நூற்றாண்டுகளுக்கு முன் பேசிய தமிழுக்கும் இப்போ நாம் பேசும் தமிழுக்கும் சின்ன ஒற்றுமை கூட இல்லை.

தொலைகாட்சிகளில் நடன, பாட்டு நிகழ்ச்சிகள் அந்தக் காலத்து புராணங்கள் இதுகாசங்கள் காப்பியங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் எல்லாம் இப்போ நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளில் இல்லை. இப்போது வரும் கவிதைகள் கதைகள் உள்ளிட்ட இலக்கியங்கள் எல்லாமே நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளில் தான் இருக்கிறது. அப்படின்னா , அந்த காலத்துல எழுதிய வார்த்தைகள் தானே மக்கள் பேசும் வார்த்தைகளாகவும் இருந்திருக்கும். அப்போது பேசிய மொழி தமிழாக இருந்தால் இப்போது நாம் பேசும் மொழி என்ன? அல்லது நாம் இப்போது பேசுவது தான் தமிழ் என்றால் பழைய இலக்கியங்கள் எல்லாம் எழுதப்பட்டிருப்பது என்ன மொழியில்? இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் செய்தி தாள்களில் வந்த வார்த்தைகளுக்கும் இப்போது பயன்படுத்தப் படும் வார்த்தைகளுக்குமே ஏராளமான வித்தியாசங்கள் இருக்கே. இப்படி மாற்றியது யார்? ஒரு மொழியில் தேவைக்கேற்ப புதிய வார்த்தைகள் ( இணையம். கணினி மாதிரி) கண்டுபிடிக்கப் படலாம். ஆனால் இருக்கும் வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தைகள் உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன?

இன்றைக்கு ஏராளமான ஆங்கில வார்த்தைகளை மாற்று வார்த்தைகளாக பயன்படுத்துகிறோம். அதேபோல் பழைய தமிழ் வார்த்தைகளுக்கு மாற்றாக வேறு மொழி பயன்படுத்தி இருப்பார்களோ? அதாவது நாம் இப்போது பேசும் மொழி... இது என்ன மொழி?
----புதசெவி-----

$$


இப்போதெல்லாம் செய்தி சேனல்களைத் தாண்டி வேறு சேனல்கள் பார்க்க முடியவில்லை. எரிச்சலாக இருக்கிறது. எந்த சேனலைப் பார்த்தாலும் ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். அலல்து பாடிக் கொண்டே இருக்கிறார்கள். அதைத் தாண்டி புதுமையாக( இதுவும் புதுமை இல்லை.. காப்பிதான்) ஒன்றும் யோசிக்க முடியவில்லை போலும். அதிலும் நிகழ்ச்சியின் பரபரப்புக்காக இவர்கள் அடிக்கும் கூத்து சகிக்கலை. நிகழ்ச்சி உருவாவதை படம் பிடிப்பதாக சொல்லி இவர்கள் அடிக்கும் தம்பட்டம் ஓவரோ ஓவர். எதோ பிறவிக் கலைஞர்கள் மாதிரி இதுல டிப்ஸ் எல்லாம் தந்து அசத்துவாங்க பாருங்க.. :)).. அதையும் தாண்டி மேடைல இவங்க அடிச்சிக்கிறது இருக்கு பாருங்க.. யபபா.. சாமிகளா.. எப்டிங்கய்யா இப்டி எல்லாம் கலக்கறிங்க.. இவங்க அடிச்சிக்கிறதை( மாதிரி நடிக்கிறதை) ஒரு நாளைக்கு 100 வாட்டி போட்டு விளம்பரப் படுத்துவாங்க. இதெல்லாம் கூட பரவால்ல.. ஆனா இந்த குட்டீஸ் வச்சி நடத்தற நிகழ்ச்சிகள் இருக்கே. ரொம்ப கொடுமையானது. இந்த காலத்துல ரொம்ப செல்லமா வளர்வதால் அவர்களால் சிறு தோல்விகளைக் கூட தாங்கிக்க முடியறதில்லை. அவர்கள் தாங்காமல் அழுவதை ஸ்லோ மோஷன்ல சில பல நிமிடங்கள் காட்டி சந்தோஷப் படறானுங்க. இதை பார்க்கும் அவர்களின் பள்ளி அல்லது தெருவில் இருக்கும் குழந்தைகள் கிண்டல் கேலி செய்வார்கள். இந்தக் குழந்தைகளுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை வரும். இதை எல்லாம் தடுக்கனும் பாஸ். இதுக்கு எதாவது செய்யனும் பாஸ். குசும்பனை தினமும் குளிக்க சொல்லிடுவோமா? :))

$$

க்ராக்&ஜாக்
விஜய் : ராமா ராமா ராமன்கிட்ட வில்லக் கேட்டேன்
பீமா பீமா பீமன் கிட்ட கதய கேட்டேன்
முருகு முருகு முருகன் கிட்ட மயிலைக் கேட்டேன்
ஈசு ஈசு ஈசன் கிட்ட மலையைக் கேட்டேன்
க்ராக்&ஜாக் : ஏனுங்க்ணா.. இப்டி வெட்டியா கண்டதையும் கேட்கற நேரத்துல
ஒரு நல்ல கதையைக் கேட்டிருந்தா ஒரு படமாவது ஓடி இருக்குமே.

^^^^^^^^^^^^^^

க்ராக் : மாசம் 25000 சம்பளம். ஒரு நல்ல வேலை இருக்கு. வேணுமா?
ஜாக் : அட. அப்டியா.. உடனே சேர்ந்துக்கிறேன். வேலை என்ன சொல்லு?
க்ராக் : ஏவிஎம் வாசல்ல நின்னுகிட்டு அஜித் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தா குச்சி வச்சி விரட்டனும்.
ஜாக் : !?!?!?!

டரியல்ட்யூப் ஆஃப் திஸ் வீக்
இப்போ விஜய் தான் Youtube-ல நம்ம விஜய டீஆருக்கு பயங்கர போட்டியா இருக்கார்.. :))




Posted By

Wednesday, 30 January 2008

காஃபியில் ஓவியம் வரையும் ரகசியம்!

காஃபி டே மற்றும் பரிஸ்டா போன்ற காஃபி ஷாப்களில் வித விதமான டிசைன்களில் எப்படி காஃபி தயாரிக்கிறார்கள் என்ற ரகசியத்தை கண்டு மகிழுங்கள்.

Thursday, 24 January 2008

ஞானும் எண்ட 50வது பதிவும்!.. ஒரு ஜொள்ளு விடியோவும்

இது என்னோட 50வது பதிவு. எல்லாரும் இது மாதிரி சமயங்கள்ல தங்களோட பழைய பதிவுகள தான் பாப்பாங்க. எதுனா உருப்படியா எழுதி இருக்கோமானு பாக்க. ஆனா நான் அப்டி எல்லாம் எந்த தப்பும் பண்ணல. எனக்கு தெரியாதா என்ன பத்தி? நான் திரும்பி பாக்கற அளவுக்கு ஒரு புண்ணாக்கும் எழுதல.அப்புறம் எதுக்கு அந்த கர்மத்த எல்லாம் பாத்துகிட்டு.:). அதுக்கு பதிலா எனக்கு வந்த பின்னூடங்கள பாத்தேன். மத்தவங்க எனக்கு போட்ட பின்னூட்டங்கள் தான் பாத்தேன். நான் மத்தவங்களுக்கு போட்ட பதில் பின்னூட்டங்கள இல்ல. :)

என்னக் கொடுமை சார் இது? ஒருத்தர் கூட என்ன திட்டல. பதிவர்னா யார்கிட்டயாச்சும் திட்டு வாங்கனுமாம்ல? :(..அப்போ யாருமே என்ன ஒரு பதிவரா மதிக்கவே இல்லை. :(. அதனால் 50வது பதிவாவது மத்தவங்க நம்மள பதிவரா ஏத்துக்கிற மாதிரி இருக்கனும்னு தான் பொங்கல் பண்டிகை பத்தி எழுத நெனச்சத விட்டுட்டு இந்த பதிவு. அதாங்க நெறய திட்டு வாங்கனும். ப்ளீஸ் நல்லா திட்டுங்க. நானும் ப்ளாகர் தான்.. நானும் ப்ளாகர் தான்னு சிலர் மாதிரி சொல்லிக்கனும். :)



சிவா மாம்ஸ்.. மொறைக்காதிங்க... உங்களுக்கு போட்டியா வர மாதிரி எந்த ஐடியாவும் இல்லை. இது ஒன்னோட நிப்பாட்டிகிறேன். :)).. யார் யார் எத எத செய்யனுமோ அவங்கவங்க அத செஞ்சா தான் அழகு. :)) எப்படியும் என்னால உருப்படியா எதையும் எழுதி யார்கிட்டயும் திட்டு வாங்கவோ விவாதம் பண்ணவோ முடியாது.அதனால் இது சும்மா திட்டு வாங்க மட்டும். :))

இப்பத்திக்கு அப்பீட்டு.....

Tamiler This Week