இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.com
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts
Tuesday, 12 May 2009
உப்புமா பதிவு
Lables
சமையல்
( இது கொதிக்கிற தண்ணில உப்புமா மிக்ஸ் சேர்த்ததும் எடுத்த படம். இதற்கு மேல் மைக்ரோ ஹையில் 3 நிமிடம் வச்சேன் )சமீபத்துல( 1938ல இல்ல ) காலைல என் தங்கச்சி பின் நவீனத்துவ சூறாவளி ஸ்ரீமதிகிட்ட இருந்து போன். __ அண்ணா இதெல்லாம் நீ கேக்கமாட்டியா__( அவ மரியாதையா சொன்ன எழுத்தெல்லாம் எதுக்குங்க.. விடுங்க..) . இதென்ன கொடுமை.. என்னா விஷயம் சொல்லுன்னு சொன்னது தான் தாமதம்.. புலம்பித் தள்ளிட்டா. அக்கா கோவிலுக்கோ எங்கயோ போய்ட்டாங்களாம். இவளுக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணலை. அதனால அம்மணி கோதாவுல குதிச்சிட்டா. அப்டி என்னத்த தான் பிரமாதமா பண்ணிட்டான்னு நினைக்கறிங்க? உப்புமா தானுங்க. இதுல என்ன கொடுமைன்னா உப்புமா எப்டி பண்றதுன்னே தெரியாம பண்ணி இருக்கா.. :))
இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிட்டு போற பொண்ணுக்கு உப்புமாக் கூட செய்யத் தெரியலையேன்னு ரொம்ப கவலையா போச்சி. சிம்பிளா அவளுக்கு போன்லையே சொல்லிக் குடுத்துட்டேன். இப்போ இந்த தங்கச்சி மாதிரி இன்னும் பல தங்கச்சிகளுக்கு உதவட்டும் என்றும் நாளைக்கு என் வீட்டிலிருந்தே ஒரு ஜீவன் இதைப் படிச்சி கத்துக்கக் கூடும் என்ற எண்ணத்துடனும் தான் இந்த உப்புமா பதிவு. இது என்னோட வழக்கமான் உப்புமா பதிவு இல்லைங்க. உண்மையான உப்புமா பதிவு தான். ;))
உப்புமா செய்றது ஒன்னும் ரொம்ப கஷ்டமான காரியம் இல்லை. MTR மாதிரி சில உடனடி உப்புமா மிக்ஸ் கிடைக்கிது. 200கிராம் 15 ரூபாய் மட்டுமே. அளவாய் சாப்பிடுபவர்களுக்கு 150 கிராம் போதும். நான் 2 பாக்கெட் வாங்கினால் அதை 3 வேளை பயன்படுத்தறேன்.
செய்முறை :
2 கப் தண்ணீரை 1 டேபிள் ஸ்பூன் நெய் அல்லது சமையல் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு கப் உப்புமா மிக்ஸ் சேர்த்து நன்றாக கலக்கனும். பிறகு மேலும் சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கலக்கனும். அம்புட்டு தான். மிகச் சுவையான உப்புமா ரெடி.
உடனடு உப்புமா மிக்ஸ் இல்லாமல் சேமியா அல்லது ரவை மூலம் வீட்டில் செய்வது போல எப்டி செய்றதுன்னு யாருக்காவது தெரியனும்னா சொல்லித் தரேன். :)) ஆனால் அதை அருணா அக்கா மட்டும் படிக்கக் கூடாது. ஹிஹி.. :)
Tuesday, 25 November 2008
அவியல் - பரிசல்காரன் கவனிக்க
நம்ம பரிசல்காரர் அவியல் என்ற பெயரில் தவறான தகவலைத் தந்து ஊரை ஏமாற்றுகிறார்... இதோ உண்மையான அவியல்..
தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய் 2
- வாழைக்காய் 2
- உருளைகிழங்கு 2
- கேரட் 2
- பீன்ஸ் 100 கிராம்
- பூசணிக்காய் 2 பெரிய துண்டுகள்
- முருங்கக்காய் 3
- தேங்காய் பாதியளவு
- புளித்தத் தயிர் 2 கப்
- பச்சை மிளகாய் 5
- மஞ்சள் பொடி ½ டேபிள் ஸ்பூன்
- கடுகு ½ டேபிள் ஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ப ( சூடு சொரணைக்கேற்ப )
காய்கறிகள் அனைத்தையும் நன்றாகக் கழுவி 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.( காய்கறிகளை மட்டும்.. கையையும் சேர்த்து அல்ல)..
பிறகு மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்... பின் தேங்காயை துருவி அதனுடன் சிறிதளவு சீரகம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும். சீரகம் சேர்த்தால் நல்ல பசை போன்று அரைக்கமுடியும்.( டிப்ஸ்மா டிப்ஸ்.. )
இப்போது வேக வைத்த காய்கறிகளுடன், அரைத்த தேங்காய் + பச்சை மிளகாய் கலவையை சேர்த்து அதனுடன் புளித்த தயிர் மற்றும் சூடு சொரணைக்கேற்ப உப்பும் சேர்த்து குறைவான வெப்பத்தில் சில நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்.
பின் கடைசியாக சிறிதளவு கடுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பி்லை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்.
....... அவியல் ரெடி.......
பரிசலாரே இது தான் அவியல்.. கண்டதையும் சொல்லி ஊரை எமாற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.. :))
.....எங்களுக்கும் சமையல் தெரியும் ஓய்.. :))
Subscribe to:
Posts (Atom)