இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner
Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Saturday, 2 May 2009

குரு என் ஆளு - விமர்சனம்

$#%$#%$%$^$%^^(^&# #%$#%^%$#%^$*&($#@ங்ங்ற்$ ஸ்ஸ்றேGFDSFDS%^$ #%ESDFDS$#FZDAR# %^^^&(&#@$#@$#@$%^$# DSFGF$#%DSDSF^$% ^*&%^&$869875jh *^&^&%^$%JGKJHG *^*&^^&%^& $#%^*&^(*#@$!#@$$#^$^*^&* FGSDFFDASFASFA$#%$#%$ ^&$@%$#@%FGF 6456457465$#%$#%$#%

Sunday, 21 December 2008

அபியும் நானும் - டபுள் விமர்சனம்


பெண் குழந்தைகள் என்றால் அப்பாக்கள் ஓவர் அழிச்சாட்டியம் செய்வார்கள். அது தான் இந்த படத்தின் முதல் பாதி. படம் அழகாக நகர்கிறது. குழந்தையின் PreKG அட்மிஷனுக்கு பண்ணும் ஆர்ப்பாட்டம் ஜாலி. அதற்காக அவர்கள் பண்ணும் வாக்குவாதம் இப்போது எல்லார் வீட்டிலும் நடப்பது தான்.

“ குழந்தைக்கு சொல்லிக்குடுக்கும் அளவுக்கு அப்பா அம்மாவுக்கு நாலேஜ் இருக்கான்னு பரீட்சை வைப்பாங்க”ன்னு ஐஸ்வர்யா சொல்லும் போது “ அப்போ பள்ளி கூடத்துல என்ன புடுங்குவாங்களாம்” என்று நந்துf/oநிலா மாதிரி ப்ரகாஷ்ராஜ் கேட்பார் என்று எதிர்பார்த்து எமாந்தேன். அதற்காக அலெக்சாண்டரின் குதிரையின் பெயர் என்ன என்று தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு மெனக்கெட்டு தயார் செய்வது டூ மச்சி.. இதற்கும் குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? சிலர் பல வருடங்களாக குழந்தையின் அடிமிஷனுக்காக பரீட்சை எழுத வருகிறார்களாம். கொய்யால கொழந்தைக்கு அட்மிஷனா? இல்ல வயசுக்குவந்த பையன்/பொண்ணுக்கு அட்மிஷனாடா?

பொண்ணு பள்ளியில் படிக்கும் போதே வெளிநாட்டு பல்கலைகழகங்களோட அப்ளிகேஷனை கையில் வைத்துக் கொண்டு அலையும் அப்பாக்களை விட கல்லூரி முடிந்ததும் எந்த வெளிநாட்டு மாப்பிள்ளை சிக்குவான் பொண்ண எப்போ தொரத்திவிடலாம்னு காத்துட்டு இருக்கும் அப்பாக்கள் அதிகம் இருக்கும் இந்த காலத்தில் MBA படிக்க பொண்ணு டில்லி போவதை எதிர்க்கிறார் ப்ரகாஷ்ராஜ். சரி தொலையட்டும்..

ஒருவழியாக முதல் பாதி சுபம்.

இரண்டாம் பாதி.. அடக் கொடுமையே!.. ப்ரகாஷ்ராஜ் எனும் அப்பனை கேனையனாக காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அநியாயத்துக்கு ஜோக்கராய் தெரிகிறார். கல்லூரியில் படிக்கும் பொண்ணுகிட்ட “ உன் வாழ்க்கையை நீயே அமைச்சிக்கிறது உன் உரிமை மட்டுமில்லை.. கடமையும் கூட”ன்னு டகால்ட்டி டயலாக் விடுபவர் பொண்ணு ஒருத்தனை லவ் பன்றான்னு தெரிஞ்சதும் கொதித்தெழுகிறார். அந்த பையன் ஒரு பஞ்சாபி என்று தெரிந்ததும் மேலும் நொந்து போகிறார். அப்பா செல்லமாக வளர்ந்த ஒரு பெண் தன் கல்யாண தேதியை சாப்பிடும் நேரத்தில் அப்பாவிடம் தகவலாய் தெரிவிக்கிறார். கல்யாண தேதி பற்றி அவரிடம் கேட்க கூட மாட்டாராம். கல்யாணம் எப்படி நடக்க வேண்டும் என்பது உட்பட எல்லாம் ப்ரகாஷ்ராஜ்க்கு தெரியாமலே தீர்மாணிக்கப் படுகிறது.

தன் மீதான் பாசம் குறைவதாக படுவதால் ப்ரகாஷ்ராஜ்க்கு மாப்பிள்ளை மீது வெறுப்பு வருகிறது. பிறகென்ன? இருக்கவே இருக்கு தமிழ் சினிமா சீன் டெம்ப்ளெட்.

கதவருகே காரணமே இல்லாமல் நாயகி வந்து நிற்கும் போது வீட்டில் ஒரு வெட்டி கும்பல் உட்கார்ந்துக் கொண்டு நாயகனுக்கே தெரியாத அவனை பற்றின நற்குணங்களை எல்லாம் பட்டியல் போடுவார்கள். உடனே ஒளிந்திருந்து இதை ஒட்டு கேட்கும் நாயகிக்கு நாயகன் மீது நல்ல அபிப்ராயம் வந்துவிடும்.

இதே போல் ப்ரகாஷ்ராஜ், வீட்டுக்கு வரும் போது அந்த சர்தார்ஜி மாப்பிள்ளையின் பேட்டி டிவியில் வருகிறது. நடு வழியில் நின்றுவிடும் காரை மாப்பிள்ளை சரி செய்கிறார். இதெல்லாம் கூட பரவாயில்லை. திட்டக் கமிஷனின் உறுப்பினராய் மட்டுமே இருக்கும் மாப்பிள்ளையிடம் பிரதமரே நேரடியாக போன் செய்து முனுசாமி இருக்காருங்களா என்பது போல் ஜோகிந்தர் இருக்கிறாரான்னு பேசுகிறார். பாவம் பிரதமர் ஆபிசில் வேலை பார்க்கும் டசன் கணக்கான செயலர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள் போல.

பிறகு மாப்பிள்ளையின் சேவை மனப்பான்மை எல்லாம் தெரியவைத்து ப்ரகஷ்ராஜ் மனதை மாற்றுகிறார்கள். ஆனால் இதை எதுவும் சீரியசாக செய்யவில்லை. ஒவ்வொரு சீனிலும் ப்ரகஷ்ராஜ் கட்டாயமாக வழிகிறார். பார்க்கவே பாவமாக இருக்கிறது. ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சி படமும் முடிகிறது.

இந்த மாதிரி கதைக்கெல்லாம் துறுதுறுன்னு குறும்பு கொப்பளிக்க இருக்கிற நாயிகி இருக்க வேணாமா? திரிஷா தான் கிடைத்தாரா? குழந்தைகளாக வரும் குட்டிப் பெண்கள் மனதில் நிற்கிறார்கள். திரிஷா சகிக்கலை..

அபபா மகள் இடையிலான உணர்வு பூர்வமான உறவுக்கும் இந்த படத்துக்கும் பெரிய சம்பந்தம் எதும் இல்லை. முதல் பாதியில் மட்டுமே ஓரளவு சம்பந்தம் தெரிகிறது.

........மேலே இருக்கும் விமர்சனம், தியேட்டரை வாழ்க்கைக்கான வகுப்பறையாக நினைத்து பாடம் கற்க செல்பவர்களுக்கு மட்டுமே.....

என்னை மாதிரி பொழுதுபோக்குக்கு சினிமா பார்ப்பவர்களுக்கு :
முதல் பாதி - அழகு - பார்க்கலாம்..
2வது பாதி - ஜாலி - எதார்த்ததை எல்லாம் தூக்கி எங்காவது வைத்துவிட்டு பார்க்கலாம்.
.. பாடல்களைத் தவிர அதிக பட்சமாக 15 முதல் 20 நிமிடங்கள் தான் எரிச்சல் படுத்தும் காட்ச்சிகள் இருக்கின்றன. மற்ற படி போர் அடிக்காமல் தான் இருந்தது...

Sunday, 28 September 2008

சரோஜா - படத்துக்கு வேற எதுனா பேர் வச்சிருக்கலாம்

இதுவரை நானும் எவ்வளவோ கேவலமான சினிமாக்கள் எல்லாம் பார்த்திருக்கேன்.. ஆனா இவ்வளவு கேவலமான சினிமாவை நேற்று தான் பார்த்தேன்... இதை முழு நீளக் காமெடி படமாக எடுத்திருந்தால் கொஞ்சம் ரசித்திருக்கலாம்...

யுவன் பின்னனி இசையை அநியாயத்துக்கு வீணடித்திருகிறார்.. ஒரு நிஜமான திரில்லருக்கு அந்த இசையை பயன்படுத்தி இருக்கலாம்..

ப்ரேம்ஜிக்காக திணித்திருக்கும் situation songs எல்லாம் செம எரிச்சல் ரகம்...

முதல் 45 நிமிடங்கள் எதோ மியூசிச் சானல் பார்ப்பது போன்ற உணர்வு... அடுத்த காட்சிகள் எல்லாம் என்ன செய்வது என்றே தெரியாமல் திணிக்கப் பட்டிருக்கிறது.. சகிக்கலை... நான் இந்தளவு எந்த படம் பார்க்கும் போதும் எரிச்சல் அடைந்தது இல்லை...

அந்த 4 பேரும் யாரிடமாவது அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.. அல்லது யாருமே துரத்தவில்லை என்றாலும் தப்பித்து ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் அல்லது தேடி போய் வில்லன் கும்பலிடம் வலுக் கட்டாயமாக மாட்டிக் கொள்கிறார்கள்.

ஜெயராமின் லூசுத்தனமான ப்ளாஷ் பேக்... சுத்தமா ஒட்டல.. கர்மம்..

ஒரு பர்சிர்க்காக உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் மீண்டும் ஆபத்தை தேடிப் போகிறார்கள். அதற்கு சொல்லும் காரணம் சுத்த அபத்தம். அதில் இருக்கும் விலாசத்தை வைத்து வில்லன் சரண் வீட்டுக்கு வந்துடுவானாம்... ஏன் வெளிய போலிஸ்ல சொல்ல வேண்டியது தான?

தமிழ்நாட்ல இருந்து போகும் சரணும் அவர் தம்பியும் தெலுங்கில் தான் அதிகம் பேசுகிறார்கள்.. ஆனால் ஆந்திராவில் இருக்கும் அனைவரும் தமிழில் மட்டுமே பேசுகிறார்கள்.. கொடுமைடா சாமி..

பாடல்கள் எல்லாம் பரவாயில்லை...
காட்சி அமைப்பு மகா கேவலம்.. பெரும்பாலான காட்சிகள் ஸ்ளோ மோஷனில் தான் அமைத்திருக்கிறார்கள்.. சீரியல் பார்பப்து போன்ற உணர்வு....

ஒரே ஆறுதல் - ப்ரகாஷ்ராஜ் .. அற்புதமா நடிச்சி இருககார்.. அடுத்து சரண் - மோசம் இல்லை.. கொஞ்சம் நல்லாவே நடிச்சிருக்கார்.. மத்தது எல்லாம் வேஸ்ட்.. பழகின தோஷத்துக்கு வாய்ப்பு கெடைச்சிருக்குன்னு நல்லா தெரியுது..

ப்ரேம்ஜி சொல்லும் காப்பி வசனம் - எவ்வ்வ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாடோமா? மாப்ள.. இனி உங்க குடும்ப படம் தியேட்டர் போய் பாக்க மாட்டோம்டா..

எதாச்சும் கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணுங்க மிஸ்டர் வெங்கட் ப்ரபு.. சகிக்கல உங்க சரக்கு....

இதுக்கு மேல என்னத்த சொல்றது... இனி பழயபடி இணையத்தில் மட்டுமே சினிமா பாக்கறதுனு முடிவு பண்ண வச்ச படம் இது...

... கமல், மணிரத்னம், ஷங்கர் மாதிரி சிலர் படங்கள் மட்டும் விதிவிலக்கு... :)

Sunday, 17 August 2008

சத்யம் - விமர்சனம் + இத்யாதிகள்

சாப்பிடும் போதே பசங்க கிட்ட கேட்டுகிட்டேன். சத்யம் படம் எந்தெந்த தியேட்டர்ல போடறாங்கனு. யமுனா , கவிதால போட்டிருக்காங்க.. யமுனால டிக்கெட் கெடைக்காது( இந்த படத்துக்கு? ) அதனால கவித போங்கன்னு சொன்னாங்க. இந்த 2 தியேட்டர்லையும் படம் பாக்கறதுக்கு பதில் நான் ஊட்டுக்கு கவுந்தடிச்சி படுத்துடுவேன் ராசாக்களானு சொல்லி படம் பாக்கும் திட்டத்திஅ கைவிட முயற்சித்த கடைசி வினாடியில் சென்ட்ரல்ல போட்டிருக்கங்க பாருங்கனு சொன்னாங்க. அப்போ சரி பாத்துட வேண்டியது தான். சென்ட்ரல் தியேட்டர் ரொம்ப நல்லா இருக்கும்.

தியேட்டர் போனதும் கவுண்டரை பார்த்தா ஒரு பயலும் இல்லை. ஆஹா இன்ஹ படத்துக்கு டிக்கெட் இல்லையா? என்ன கொடுமை குசும்பா என்று நினைத்துக் கொண்டே கவுந்தரை நெருங்கி அங்கிருந்த ஒரு பணியாளரிடம் டிக்கெட் இருக்கான்னு கேட்டேன். இல்லை சார் முடிஞ்சதுனு சொன்னான். பாம்பு புத்துகுள்ள இல்லைனா அத புடிச்சி பொட்டியில அடைச்சி வச்சிருப்பாங்கனு எனக்கு தெரியாதா?.. பசங்க கிட்ட கெடைக்குமானு கேட்டேன். வெவரமான பையனா இருப்பான்(ஹிஹி) போலனு நெனைச்சிருப்பார் போல. ஓரம்கட்டினார். அண்ணே எனக்கு மெஜஸ்டிக் இல்லைனா ராக்கர்ஸ் வேணும்னு சொன்னேன். உடனே மெஜஸ்டிக் ஒன்னு குடுத்தார். 30 ரூபாய் தரை டிக்கெட்டை 200 ரூபாய்க்கு விப்பானுங்களே 75 ரூபாய் டிக்கெட்க்கு எவ்ளோ புடுங்க போறானோ .. இன்னைக்கு என் பர்ஸ் காலினு நெனைச்சேன். ஆனா ரொம்ப நல்லவர் போல.. அல்லது ப்லாக்ல கூட வாங்க ஆளில்லை போல.. 100 ரூபாய் தான் வாங்கினார். சரினு பைக்கை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வந்து ஏசியில் உக்காந்து யோசிச்சதில் ......

  • திருட்டு விசிடி பாக்காதிங்க.. இணையத்தில் பாக்காதிங்க.. சினிமா என்பது பலரில் உழைப்பிலும் வியர்வையிலும் உருவாகிறது. இப்படி பார்ப்பதால் பலரில் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.. என்றேல்லாம் சொல்லி புலம்பும் சினிமா தோட்டத்து காவல்காரர்களே.. ப்ளாக்கில் டிக்கட் விற்பதை நிறுத்தினாலே நங்கள் திருட்டு விசிடி அல்லது இணையத்தை நாட மாட்டோம் என்பது ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை?
  • ப்ளாக்கில் டிக்கெட் விற்பவர்கள் யாரோ மூன்றாம் மனிதர்கள் அல்ல.பேராசை பிடித்த தியேடர்காரர்களின் ஊழியர்கள் தான்.
  • பல தியேட்டர்களில் படம் வெளிவந்து சில வாரங்களுக்கு கவுந்தரில் டிக்கெட் கொடுப்பதே இல்லை. அவர்கள் ஆட்களை வைத்தே ப்ளாக்கில் விற்கிறார்கள்.
  • 30 ரூபாய் டிக்கெட் 100 ரூபாய்க்கு மேல், 60 ரூபாய் டிக்கெட் 150 முதல் 200 ரூபாய்.. சில படங்களுக்கு 300 ரூபாய்க்கு மேல்...
  • படம் புடிக்கும் உங்களுக்கு மட்டும் தான் காசின் அருமை தெரியுமா? நீங்கள் மட்டும் தான் கஷ்டபட்டு சம்பாதிகிறிங்களா? நாங்க எல்லாம் கொள்ளை அடித்தா சினிமா பார்க்க வருகிறோம்.
  • நடிப்பு என்றால் என்ன என்றே கேள்விப் பட்டிராத பதுமைகளை மனித பொம்மைகளை அழைத்து வந்து அவர்களின் உடலின் அங்கங்களை மட்டுமே காட்டுவதற்கு கோடிகளில் சம்பளம் குடுப்பதை நிறுத்துங்கள். பன்ச் டயலாக் பேசியும் மரத்தை சுத்தி பாட்டு பாடியும் ( அதுவும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மரங்கள்) மேக்கப்பில் முகத்தை அழகாக்கி இடுப்பில் கயிறு கட்டி தாவி தாவி சண்டையிடும் நடிகர்களுக்கு கோடிகளில் குளிப்பாட்டுவதை நிறுத்துங்கள்.
  • இதை எல்லாம் குறைத்தால் திரை அரங்கிற்கு குறைந்த விலையில் படங்களை விற்கலாம். அவர்களும் நியாயமான விலையில் டிக்கெட் விற்பார்கள். மக்களும் நியாயமான விலை குடுத்து சினிமா பார்க்க வருவார்கள்.
  • நீங்கள் செய்யும் இந்த மொள்ளமாறித் தனங்களுக்கு நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை தண்டமாக வாரி இரைத்து தியேடருக்கு வந்து உங்களை ஆராதிக்க வேண்டுமா?
  • அப்படியே போனாலும் ஒழுங்காவா படம் எடுக்கிறிங்க? அரசியல்வாதிகள் மேடைகளில் அரசியல் எதிரிகளை திட்ற மாதிர் இவனுங்க சினிமா போட்டியாளர்களை சினிமாவில் திட்டிகிட்டு இருக்கானுங்க. அதை நாங்க காசு குடுத்து கேக்கனுமாம். கருமாந்திரம் புடிச்சவனுங்களா..
  • இனி எவனாச்சும் திருட்டு விசிடில பாக்காதிங்க.. இணையத்துல பாக்காதிங்கனு சொல்லிப் பார்ருங்க.. ரஜினி கிட்ட சொல்லி உதைக்க சொல்றேன்.
சரி.. இந்த பதிவு சத்யம் படம் விமர்சனம்னு தானே சொன்ன.. அது எங்கடா?..
விஜய் டிவில நம்ம சிசூசா சிம்பு ஒரு நடன ஜோடிங்க கிட்ட கேட்ப்பார்.. இந்த செருப்பு எந்த கடைல வாங்கினிங்க? கர்ச்சீப் எங்க திருடிங்க.. இப்டி எல்லாம்.. அப்போ தீதி பாட்டி குறுகிட்டு கேப்பாங்க.. சிம்பு.. இவங்க டான்ஸ் பத்தீஈஈஈ...
சிசூசா சொல்வார் " என்ன சொல்றதுன்னே தெரியலைங்க.. அதான் இப்டி பேசிட்டு இருக்கேன்னு"..

இப்போ என் நிலைமையும் தான்.. :)
ப்ளாக்ல டிக்கெட் வாங்கிட்டு தியேட்டர்ல போய் உக்காந்தா.. அடங்கொய்யால.. பாதி சீட்டு காலி.. இதுல பக்கத்துல ஒரு இம்சை கும்பல்... சர் நாங்க ஒன்னா வந்திருக்கோம். 2 சீட் மட்டும் வேற எடத்துல தான் கிடைச்சது. நீங்க அங்க போய் உக்காந்துக்கிறிங்களா என்று.. ஏண்டா டேய் தியேட்டருக்கு சினிமா பாக்க வரிங்களா இல்ல சோறு திங்க வரீங்களாடா? ஒன்னாவே உக்காந்து என்னடா புடுங்க போறிங்க..:(... அப்புறம் என்ன பண்ணி தொலையறது... அந்த கும்பல்ல பாதி பேர் பொண்ணுங்க.. போய் தானே ஆகனும்.. அட தாய்குலத்துக்கு மரியாதைங்க..

  • விஷாலை போலிஸ் உடையில் பார்க்க பல்லி போலிஸ் உடை போட்ட மாதிரி இருந்தது.
  • போலிஸ் உடை மட்டும் என்று இல்லாமல் எந்த உடையுமே அவருக்கு பொருத்தமா இல்லை.. காஸ்ட்யூம் டிசைன் செம சொதப்பல்...
  • ஒரு பாடலில் யார் குறைவான ஆடை உடுத்துவது என்று விஷாலுக்கும் நயனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
  • ஒவ்வொரு ஃப்ரேமிலும் யாரையாவது பந்தாடிக் கொண்டே இருக்கிறார் புரட்சிதளபதி விஷால்.
  • நயன் முன்புறம் பார்ப்பதை விட பின்புறத்தில் பார்க்க அழகாக இருக்கிறார். (என்னாது எப்டி பார்த்தாலும் ஒன்னு தானா.. குசும்பா .. கல்யாணம் ஆகியும் திருந்தலையா நீங்க? :P)
  • அந்த குட்டி பசங்கள எதுக்கு நடிக்க வச்சாங்கனு தெரியலை. அந்த சீன்களையும் பு.த.வுக்கே கொடுத்திருந்தால் பாவம் ஆசை தீர இன்னும் யாரையாவது பந்தாடி இருபபார்.
  • பாடல்கள் அனைத்தும் வலுக்கட்டாயமாக் திணிக்கப் பட்டிருக்கு. அதுவும் அந்த முதல் பாடல்... எந்த காரணமும் இல்லாமல் ஒரு டூயட். கர்மம்.. கர்மம்..
  • சிறையில் வில்லன் கம் எக்ஸ் போலிஸ்காரருடன் பேசும் போதும் க்ளைமாக்ஸில் இரண்டு வில்லைன்கள் தலையிலும் துப்பாக்கி வைத்துக் கொண்டு பேசும் போதும் "நின்று கொண்டே ஆய் போகிறமாதிரி" தெரிகிறார். :)
  • புரட்சிதளபதி கழுத்துக்கு கீழ் எடுத்திருக்கு சிரத்தையை சற்று முகபாவணைக்கும் எடுத்திருக்கலாம்.
  • முதல் காட்சியிலேயே " நான் பொறுக்கி இல்லை.. போலிஸ்" என்று விக்ரமை வம்புக்கு இழுக்கிறார்.
  • முதல்வரை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் போதும் மந்திரிகள் பவ்யமாய் இடுப்பில் துண்டை கட்டிகொண்டு அவரை இதய தெய்வமே என்று அழைக்கும் போது ஏனோ யாரோ மனதில் வந்து போகிறார்கள்.
  • முதல் காட்சியிலும் கடைசிகாட்சியிலும் பறந்து குருவி விஜயை மிஞ்சி இருக்கிறார்.
  • பனியனோடு நயன் கட்டிலில் உருளும் காட்சி நன்றாக இருப்பதாக சொல்லி எனக்கு டிக்கெட்டுக்கு100 + பாப்கார்னுக்கு 20 ரூபாய் செலவு வைத்த லக்கி ஒழிக. அப்டி ப்ரமாதமா எதும் இல்லை.
  • இந்த சோதாப் பயலை NCC பசங்க கூட கம்பேர் பண்ணதுக்கு லக்கிக்கு ஒழிக நெ2.

நயன்: என்னாது.. விஷாலை ஹீரோயினா போட்டிருக்கலாமா? மைண்ட் யுவர் டங் மிஸ்டர். மங்களூர் சிவா.

Sunday, 15 June 2008

தசாவதாரம் - பார்க்க வேண்டிய படம்


என்னை பொறுத்தவரை சினிமா என்பது முழுக்க முழுக்க பொழுது போக்கு ஊடகம் தான். ஆனால் மக்கள் பெரும்பாலும் பாடம் படிக்கவே தியேட்டர் வருவதாக நினைத்து எப்போ பாத்தாலும் மெசேஜ் சொல்லியே படம் எடுக்கும் கருத்து கந்தசாமிங்க இம்சை தாங்கல. நாங்கலாம் வகுப்பறைல சொல்லி தந்ததயே காதுல வாங்கினது இல்லைனு தெரிஞ்சும் இந்த தப்பை பன்றானுங்க நம்ம சினிமாகாரங்க. அதுவும் இல்லைனா மரத்த சுத்தியே எப்போவும் பாட்டு பாடறானுங்க. அதுவும் இல்லைனா எல்லா படத்துலையும் பறந்து பறந்து சண்டை போடறானுங்க.

இவர்களுக்கு மத்தியில் கமல் ரொம்பவே வித்தியாசம் தான். எப்போதும் ஒரே மாதிரி படம் கொடுத்து போர் அடிபப்தில்லை. சினிமா என்பது பொழுது போக்கு அம்சம்தான் என்பதை உணர்ந்து ஒவ்வொரு படத்திலும் எதாவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் நம்மை ரசிக்க வைக்க "முயற்சி" செய்கிறார். இந்தியன், அவ்வை சண்முகி, ஆளவந்தான் வரிசையில் அவைகளை தூக்கி சாப்பிடும் வகையில் இது அபாரமான முயற்சி. நம்மை ரசிக்க வைக்க ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார். இது தான் உண்மையான கலைஞனுக்கான அடையாளம்.

சும்மா மரத்தை சுத்தி பாட்டு பாடியும், பறந்து பறந்து மட்டுமே சண்டை போட்டும், யதார்த்தமாய் கழட்டுகிறேன் என்று சொல்லி நம் பக்கத்து வீட்டில் நடப்பதயே சினிமாவாய் எடுத்து திரையிலும் காட்டி அல்வா கொடுக்கும் மஞ்சமாக்கனுங்களை விமர்சிபது போல் இந்த கலைஞனின் உழைப்பையும் விமர்சனம் என்ற பெயரில் கொச்சை படுத்த விரும்பவில்லை.

தொழில்நுட்ப ரீதியில் கலக்கி இருக்கிறார்கள். லாஜிக் விளக்கெண்ணைகளை தவிர்த்து வித்தியாசமான , புதுமையான முயற்சியை ரசிக்கும் மனது இருந்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

Wednesday, 26 March 2008

போலி கால் செண்டர்களும் சபாஷ் பாலாஜியும்!

பண்பலைவரிசை ரேடியோக்களை பலரும் குறை சொன்னாலும் அதில் பல நல்ல விஷயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தினமும் காலை 7 முதல் 8 வரை FM கேட்கும் பழக்கம் உண்டு. அனைத்து FM ரேடியோக்களிலுமே பல நல்ல சுவரஷ்யாமான தகவல்களை பறிமாறிக்கொள்கிறார்கள். நேயர்களுக்கு பல வகையான போட்டிகளையும் நடத்துகிறார்கள்.குறிப்பாக ரேடியோ மிர்ச்சியில் நடத்தும் போட்டிகள் ரொம்ப சுவாரஷ்யமா இருக்கும். சமீபத்திய சுவாரஷ்யமான போட்டி.... ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடத்தினார்கள். நகரின் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப் பட்ட சில வண்ணங்களை அவர்கள் தரும் குறிப்புகளை கொண்டு கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முதல் பரிசாக 15000 ரூபாய் கொடுத்தார்கள்.( இது அதிர்ஷ்ட போட்டி அல்ல.. அதை நான் எப்போதும் ஆதரிப்பது இல்லை) எதற்கு பரிசுத் தொகையை குறிப்பிடுகிறேன் என்றால்.. அதே நாளில் திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற மதுரையை சேர்ந்த அணிக்கு 4000 ரூபாய் முதல் பரிசாக கொடுத்திருந்தார்கள். என்ன கொடுமை பாலாஜி இது? :P.... சில நாட்களுக்கு முன்பு சில குழுக்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 5000 ரூபாய் கொடுத்து யார் அதிக பொருட்களை வாங்கி வருகிறார்களோ அவர்களுக்கு பரிசு என்று ஒரு போட்டி நடத்தினார்கள்.

அதெல்லாம் சரி... இப்போ எதுக்கு பாலாஜிக்கு சபாஷ்...
கடந்த செவ்வாய்க் கிழமை காலை நிகழ்ச்சியில் , டுபாக்கூர் கால் செண்டர்களில் பணிபுரிந்து ஏமாந்து போகும் பணியாளர்கள் பற்றிய செய்தியை சொல்லி, அது போன்று ஏமாந்தவர்கள் தனக்கு மெயில் அனுப்பினால் அதை பற்றி நிகழ்ச்சியில் செய்தியாக சொல்லப் படும் என்று சொல்லி இருந்தார். அதற்க்கு நல்ல வரவேற்பு போல... அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப் பட்ட 2 கால் செண்டர் பணியாளர்கள்( சுமார் 30 பணியாளர்களின் சார்பில்) பேசி இருக்கிறார்கள். அவர்களுக்கு 8 மாதங்களாக சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என்றும் கடைசி 3 மாதங்கள் முழு சம்பளமுமே கொடுக்காமல் தங்களை வெளியேற்றி விட்டதாகவும் கூறி இருக்கிறார்கள். அன்று மாலையில் அந்த கால் செண்டரின் உரிமையாளரும் பேசி இருப்பார் போல. இது காவல் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டதன் விளைவாக அந்த கால் செண்டர் உரிமையாளர் முழு பணத்தயும் அளிப்பதாக கூறி இருக்கிறார். அதன் படி நேற்று நிலுவை தொகையில் பாதி கொடுத்திருக்கிறார். மீதியை இன்று தருவதாக சொல்லி வர சொல்லி இருக்கிறாராம். ச்ச.. செம மேட்டர் இல்ல... அவர்களுக்கு மீதி தொகையும் இன்று கிடைக்க வாழ்த்துக்கள்!. ஸோ ஹாட்ஸ் ஆஃப் யூ டியர் பாலாஜி.

4 கணினிகளை மட்டும் வைத்துக் கொண்டு கால் செண்டர் நடத்துவதாக கூறி பணிக்கு ஆட்கள் அமர்த்தி அவர்களுக்கு சரியாக சம்பளம் குடுக்காமல் ஏமாற்றி வெளியேற்றும் மோசடி கால் செண்டர்கள் பற்றிய தகவல்கள் அளித்தால் , அது ரேடியோ மிர்ச்சியின் ஹலோ கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் வெளியிடப் படும் என்று பாலாஜி கூறி இருக்கிறார். இனியும் இது போன்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து ஏமாறாமல் இருக்க இது ஒரு நல்ல முயற்சி. தகவல் அனுப்ப வேண்டிய இமெயில் முகவர் : balaji983@radiomirchi.com

Sunday, 3 February 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

வடிவேலு ஒரு நாடக நடிகர். அவருக்கு கல்யாணத்துல எதோ தோஷம் இருக்காம். அவருக்கு 2 மனைவிகள் அமைவாங்களாம். அதுல முதல் மனைவி
இறந்துவிடுவாராம். அதனால ஊரில் புதிதாய் தோன்றி இருக்கும் ஒரு கற் (பெண்) சிலைக்கு வடிவேலுவை கல்யாணம் செய்து வைக்கிறார்கள். இந்த கல்யாணம் முடிந்து வடிவேலு அண்ட் கோ சென்றவுடன் அந்த கற்சிலைக்கு உயிர் வந்துவிடுகிறது. அவள் தான் இந்திரலோகத்து ரம்பையாம். பூமிக்கு சுற்றுலா வந்த ரம்பை, சூரிய அஸ்தமணத்திற்குள் தேவலோகம் செல்லாததால் "ஒரு பகல் ஒரு இரவு" கற்சிலையாக பூமியில் இருக்க வேண்டும் என இந்திரனால் சபிக்கப் பட்டு அந்த சாபத்தை ரம்பை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த சைக்கிள் கேப்பில் தான் வடிவேலு ரம்பையை கல்யாணம் செய்துக் கொள்கிறார்.
கல்லாக இருக்கும் போது கட்டினாலும் கண்வன் தானே என்று ரம்பை 2 பூதங்களை அனுப்பி வடிவேலுவை இந்திரலோகத்துக்கு தூக்கி வர செய்கிறாள். இரவு அவளுடனும் பகலில் பூமியிலும் இருப்பாராம். ஹூம்.. மச்சம்டா கருப்பா என்று நான் நினைத்திருப்பேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் . ப்ளீஸ் :P..
நாயகி நல்ல உயரமாக அழகாக இருக்கிறார். ரசிக்கலாம்.

இந்திரலோகத்தில் ரம்பை ஒரு படிகத்தை தருகிறாள். இதை வைத்திருந்தால் யார் கண்ணிற்க்கும் வடிவேலு தெரிய மாட்டாராம். அதை வைத்துக் கொண்டு வடிவேலு சொர்கம் நரகம் இரண்டையும் சுத்தி பார்க்கிறார். நா.அழகப்பன் மட்டுமல்ல.. இந்திரன், எமன் எல்லோரும் வடிவேலு தான். எமன் வடிவேலு 23ம் புலிகேசியை நினைவு படுத்துகிறார். ஆனால் புலிகேசி அளவுக்கு ரசிக்க முடியவில்லை.

[இடைவேளைக்கு பிறகு]

தன்னுடன் கொஞ்சி விளையாடும் ஒரு குட்டி பாப்பா இறந்ததும் பொங்கி எழுகிறார் வடிவேலு. குழந்தையின் உயிரை பறித்த எனம் உயிரை பறிக்க திட்டம் போட்டு அதற்காக பூமியில் இருந்து சாராயத்தை எமலோகத்துக்கு எடுத்து சென்று காமெடி பண்ணுகிறார். சகிக்கல.

இறந்த குழந்தைகள் சொர்கத்தில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, இதை அவர்களின் பெற்றோர்கள் பார்த்தால் ஆனந்தப் படுவார்கள் என்று கூறி கண்ணீர் மலக வசனம் பேசுவது தான் படத்தின் மிகப் பெரிய காமெடி.:).. முடியலடா சாமி..

மனிதர்களை கொத்து கொத்தாக(இதென்ன வார்த்தை பிரயோகம்?) கொல்ல எதேதோ செய்தாலும் அதனை மனிதர்கள் முறியடித்துவிடுவதாக பொலம்பிவிட்டு க்ளைமாக்ஸில் மனிதர்கள் தாங்களே சாவை தேடிச் சென்றுவிட்டு அதற்கு தன் மீது பழி போடுவதாகவும் டகால்டி டையலாக் விடுகிறார். ஏண்டா... என்னதான் காமெடி படம்னாலும் ஒரு ஞாயம் வேணாமாடா? :(
வடிவேலு மேலோகத்தில் தான் பார்த்தவைகளை தன் அம்மாவிடமும் நண்பர்களிடமும் சொல்வதால், அவருக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறி பேயோட்ட வருகிறார் ஸ்ரேயா. வந்து வசனம் எதும் பேசி சிரமப் படாமல் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டு போகிறார். அடப் பாவிகளா இதுக்காடா 30 லாவன்னா குடுத்திங்க? :( இதுல வடிவேலு 10 லாவன்னா குடுத்தாராமில்ல.. லேசா கட்டிபுடிக்க கூட இல்லையே.. அட ஸ்ரேயா பாதத்துல கூட முத்தம் தரலயே. இதுக்கு எதுக்குடா கருப்பா 10 லாவன்னாவ வீணடிச்ச? ஹ்ம்ம்ம்.... இதுக்கு தான் கஷ்டப் பட்டு சம்பாதிக்கனும்னு சொல்றது?அற்பனுக்கு வாழ்வு வந்தா....?

ஸ்ரேயாவ இப்படி வீணடிச்சிட்டாங்களே படுபாவி பயலுகன்னு நெனச்சி முடிக்கறதுக்குள்ள இந்திரலோகத்துல ரம்பை ஏடாகூடமா படுத்து நெளியறா.ஸ்ரேயா சம்பளத்துல பாதிய புடுங்கி இந்த பொண்ணுக்கு குடுங்கடானு மங்களூர் சிவா மாமா போராட்டம் நடத்துவதாக கூறியிருக்கிறாராம். :P
தன்னை பூமியில் வறுத்தெடுத்த காவலர் மேலோகம் வந்ததும் அங்கு தரும் தண்டணைகளை பார்த்து, பயந்து அழுது " இந்த தண்டணை எல்லாம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் நான் தப்ப்பெ செய்திருக்க மாட்டேனே" என்று பேசுவதை கேட்டதும் அழகப்பன் மனதில் பொரி பறக்கிறது.( பில்ட் அப் :P.. கண்டுக்காதிங்க..).. நரகத்தில் கிடைக்கும் தண்டனைகள் தெரியாம தான் மக்கள் பூமிய்ல் தப்பு பண்றாங்களாம்.உடனே இந்திரலோகத்தின் ரகசிய அறைக்கு சென்று மனிதர்களின் ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொண்டு பூமிக்கு சென்று மக்களை திருத்துகிறார்... டேய்.. அடங்குங்கடா டேய்.. தாங்க முடியல..

பிறகு எமனை கொல்வதற்க்கு முயன்றது வடிவேலு தான் என்பது தெரிந்ததும் எனம் பொங்கி எழுந்து வடிவேலுவை துரத்திக் கொண்டு இந்திரலோகம் வருகிறார். அங்கு ரம்பை எமனுடன் வாக்குவாதம் செய்கிறார். இதில் இந்திரன் தலையிட்டு ரம்பைக்கும் வடிவேலுவுக்கும் சாபம் குடுக்கிறார். இதனால் வடிவேலு 90 வயது முதியவராகவும் ரம்பை ஆவியாகவும் உலா வருகிறார்கள்.வயோதிக வடிவேலு சாபம் பெற்றதிலிருந்து விமோசனம் பெரும் வரை காரணமே இல்லாமல் கூட அழுதுவடிகிறார்.

ரம்பை குடுக்கும் படிகத்தை வைத்துக் கொண்டிருந்ததால் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருக்கும் வடிவேலு நாரதர் நாசர் கண்ணுக்கு மட்டும் எப்படித் தான் தெரிந்தாரோ? புரியவில்லை.

நாரதர் கலகம் நன்மையில் முடியவேண்டுமல்லவா?(அப்டியா?!).. அதனால் பிரகஸ்பதி இந்த சாபத்திற்கு சாபவிமோசனம் சொல்கிறார். அதாவது ஆவியாக் திரியும் ரம்பை வடிவேலுவின் கலுத்தில் மாலை அணிவித்தால் இருவருக்கும் சாப விமோசனம் கிடைத்து பழய நிலையை அடந்துவிடுவார்களாம். இது தான் க்ளைமாக்ஸ். இதற்காக இவர்கள் செய்யும் கோமாளித் தனங்கள் சீரியல் பார்க்கும் உணர்வைத் தருகிறது. இழு இழுனு இழுக்கறாய்ங்கப்பு. :(

பிறகு ஒருவழியாக ரம்பை உருவத்தில் இருக்கும் ஒரு வட இந்தியப் பெண்ணின் உடலில் புகுந்துக் கொள்ளும் ரம்பையின் ஆவி தமிழில் பேசுவதைக் கண்ட அவர்கள் பெற்றோர்கள் தீவிர ஆராய்ச்சி செய்து அதன் விளைவாக மதுரை அழகர் கோவிலுக்கு அந்த பெண்ணை அழைத்துவந்து வடிவேலு கழுத்தில் மாலையிட செய்து ரம்பைக்கும் வடிவேலுவுக்கும் சாபவிமோசனம் கிடைத்து நாரதர் ரம்பைக்கு எதார்த்தத்தை புரிய வைத்து அந்த வட இந்திய பெண்ணையே வடிவேலுக்கு திருமணம் செய்து வைத்து..... ஸ்ஸ்ஸ்..அப்பாடா.. தாறுமாறா நம்ம கண்ண கட்டி படத்த முடிக்கிறாங்க.

தயவு செய்து யாரும் புலிகேசி போல் இருக்கும் என்று நினைத்து இந்த படத்தை பார்க்க செல்ல வேண்டாம். மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது.
எமன் வேஷத்துக்கு வினுசக்கரவர்த்தியை பயன் படுத்தி இருக்கலாம்.

இடைவேளைக்கு முன் : பார்க்க சென்ற பாவத்திற்காக பார்க்கலாம்.
இடைவேளைக்கு பின் : முதல் பாதியை பார்த்த பாவத்திற்கு தண்டணை.

ஷொட்டு

  • நாயகியின் நாட்டிய நடனங்கள். அற்புதமாக ஆடுகிறார். அழகாகவும் இருக்கிறார்.
  • நாரதராக வரும் நாசரின் நடிப்பும் ஒப்பனையும். மிகையாகவுமில்லாமல் குறையாகவும் இல்லாமல் சரியாக செய்திருக்கிறார்.
  • தோட்டா தரணியின் கலை. அழகான செட்கள்.
  • இந்திரனாக வரும் வடிவேலு கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.

குட்டு
  • அழகப்பன் வடிவேலு லிப்ஸ்டிக்கை குறைத்திருக்கலாம். ராமராஜன் தேவலை.
  • புலிகேசியின் சுவடுகள் மறையும் முன் அதே போல் எடுக்க முயற்சித்தது.
  • இடைவேளைக்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் பேய் முழி முழித்திருக்கிறார்ர்.
  • க்ளைமாக்ஸ் இழுவை.
இதை இந்தியில் மொழிபெயர்த்தால் புதியதாக ஆரம்பித்திருக்கும் NDTV Imagineல் இந்திய தொலைகாட்சிகளில் முதன் முறையாக என்று ஒரு ரவுண்டு வரலாம்.

சந்தேகம் சஞ்சய்காந்தி asks...
  • இது காமெடிப் படமா இல்ல அழுகாச்சி படமா?
மதிப்பெண் : 80 க்கு 35. (80 = ப்ளாக்கில் வாங்கிய டிக்கெட் விலை)

ப்ளாக் டிக்கெட்கள் டிக்கெட் கவுண்டர் அருகில் தான் விற்க்கப் பட்டது.அந்த இடத்தில் விற்க தியேட்டர் ஊழியர்களால் தான் முடியும். நான் வாங்கும் போது ஏராளமானோர் வாங்கினார்கள். எல்லாரும் அப்போதைய காட்சிக்காகத் தான் வாங்கினார்கள். அப்படினா என்ன வெங்காயத்துக்கு ஹவுஸ்ஃபுல் போர்ட். அரசாங்கம் நிர்ணயித்த விலையைவிட அதிக விலையில் விற்க இந்த அய்யயோக்கியத் தனம்.

Tamiler This Week