இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday, 30 May 2009

செல்வேந்திரனுக்காக ஒரு பதிவு

தலைப்பைப் பார்த்து டரியல் ஆனவர்கள் மன்னிக்க.. :)

நம் நண்பர் பதிவர் கம் இலக்கியவாதி செல்வேந்திரன் , சிறப்பு விருந்தினராக ( விவாதிக்கும் குழுவில் ஒருவராக அல்ல ) பங்கு பெற்ற “ நீயா நானா” நிகழ்ச்சி நாளை (31.05.2009 - ஞாயிற்றுக்கிழமை ) இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. அனைவரும் தவறாமல் பார்த்து பாக்கியம் பெருவீர்களாக..

வாழ்த்துகள் செலிப்ரிட்டி செல்வேந்திரன்.. மேலும் பல மேடைகளில் மிளிர வாழ்த்துகள்..

வடகரை வேலன் அண்ணாச்சி, இணையத்தில் புது வீடு வாங்கி இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள்.

Thursday, 28 May 2009

காந்தியின் மறுபக்கம்

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பம். பெரியப்பா கட்சியில் பல பதவிகளில் இருக்கிறார். அவர் வைத்தப் பெயர் இது. நான் பிறந்த சமயத்தில் இந்திராகாந்தி குடும்பத்தில் சஞ்சய்காந்தி தான் புகழ்மிக்கவராக இருந்தார். அதனால் எனக்கு இந்தப் பெயர். என் தம்பி பெயர் ராஜிவ்காந்தி. :) எங்கள் குடும்பத்தில் மேலும் பல காந்திகள் இருக்கிறார்கள்.

பெயரில் என்ன இருக்கிறது?. பெயர் என்பது வெறும் அடையாளத்துக்கு தான் என்றாலும் இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஊரிலும் உறவினர்கள் மத்தியிலும் என் பெயர் காந்தி மட்டுமே. பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது கூட நெருங்கிய நண்பர்கள் காந்தி என்று தான் அழைப்பார்கள். என்னை சஞ்சய் என்று அழைப்பவர்கள் மிகக் குறைவு தான்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வேளான் கல்லூரிப் பெண்களைக் காப்பாற்ற முடியாமல் பின் வழிப் படிக்கட்டுகளின் ஒருவர் மீது ஒருவராக மூவரும் கருகி இருந்ததைப் பார்த்து அழுதேன். அதன் பிறகு இல்லை. அதற்கு முன்பும் கூட எதற்கும் அழுததாக நினைவில்லை. வீட்டிலோ பள்ளியிலோ சிறுவயதில் அடிவாங்கி அழுதிருக்க வாய்ப்புண்டு. ஆனால் நினைவில்லை. :)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப ரொம்பப் புடிக்கும். எனக்குத் தான் ஓவியங்களை ரசிக்கும் பழக்கம் உண்டே. :)
( ரொம்ப நன்றிங்க. நல்லவேளை.. புரியுமான்னு கேட்கலை)

4).பிடித்த மதிய உணவு என்ன?
சோறு சாமி சோறு.. 3 வேளையும் சோறு சாப்பிட்ட வளர்ந்த ஒடம்பு இது. அதிலும் சோற்றில் தயிர் விட்டு கரைத்து அம்மிக் கல்லில் புளியை அரைத்து தொட்டுக் கொண்டே சோற்றுக் கரைசைலைக் குடிப்பது மிகவும் பிடிக்கும். புளி இல்லாத சமயங்களில் மாங்காய் பறித்து அதை கல்லால் உடைத்து உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்துக் கடித்துக் கொண்டு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதால் ஹோட்டலில் அல்லது வீட்டில் சாம்பார், ரசம் சாதம் மட்டுமே.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
(நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களுடன் நட்பு வைத்துக் கொள்வீர்களா என கேள்வி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.)

நிச்சயம் நண்பனாக இருப்பேன். ஒருவர் என்னிடம் எப்படிப் பழகுகிறார் என்பது தான் எனக்கு முக்கியம். பொதுவான அபிப்ராயத்தில் அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
முதலில், குளிக்கப் பிடிக்குமா என்பதை கேட்டுவிட்டு இதைக் கேட்பதே நாகரிகம் என நினைக்கிறேன். என்ன சொல்றிங்க? :)

கடலில் குதித்திருக்கிறேன். குளித்ததில்லை. அருவியிலும் அதிகம் குளித்ததில்லை. எனக்கு கிணற்றில் குளிக்கவே பிடிக்கும். பள்ளியில் படிக்கும் போது 40 கிமீ தொலைவு செல்ல வேண்டும் என்பதால் 7 மணிக்கு பஸ் ஏறி ஆகனும். அதனால் தினமும் காலை 6 மணிக்கெல்லாம் கிணற்றில் குதித்து விடுவேன். மிகச் சிறந்த உடற்பயிச்சியும் கூட. கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும்ப் போது கூட அருகில் இருந்த ஒரு நண்பனின் கிணற்றில் தான் தினமும் குளியல். அதன் பிறகு கிணற்றில் குளிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

இப்போதெல்லான் எனக்கு மிகவும் பிடித்தது இதில் குளிக்கத் தான். தொட்டியில் நீர் நிரம்பி முன்புறம் இருக்கும் சிறு இடைவெளியில் கொட்டும். அதன் கீழ் அமர்ந்து குளிப்பது அலாதி சுகம். இப்போதும் ஊருக்கு போனால் குளிப்பது இங்கு தான்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் இல்லை. அவர் முழுத் தோற்றமும் தான் கண்ணில்படும். அதைத் தவிர்த்து சொல்ல வேண்டும் என்றால் முகம் தான். முகபாவணைகளை கவனிப்பேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது : ரொம்ப திமிர், வைராக்கியம், பிடிவாதம் - பல சமயங்களில் என்னை தலைநிமிர வைத்திருக்கு. மனிதாபிமானம். எதிரியாக யாரையும் நினைககாமல் இருப்பது.( என்னை எதிரியாக எத்தனைப் பேர் நினைத்திருக்கிறார்களோ? :) ). என் மேல பாசமா இருக்கிறவங்க கிட்ட அதை விடா 100 மடங்கு அதிக பாசமா இருப்பேன்.

பிடிக்காதது : பொறுமையின்மை,கோபம். வைராக்கியம். பிடிவாதம். இவ்ளோ பிடிவாதம் கூடாதோ என சில சமயங்களில் நினைப்பேன். எளிதில் உணர்ச்சி வசப் படுவேன். ரொம்ப சென்சிடிவ். என் மேல கோவப் படறவங்க கிட்ட அதைவிட 1000 மடங்கு அதிகமா கோவப் படுவேன். :))( நோட் பண்ணுங்கப்பா.. :) ). அதுவும் குறிப்பிட்ட நிகழ்வுக்காகவாத் தான் இருக்கும். கொஞ்ச நேரத்துல நானும் மானங்கெட்ட்வந்தான்னு நிரூபிச்சிடுவேன். :))

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
கல்யாணமே ஆகலையாம்.. அதுக்குள்ள தொட்டில் கட்டி பொறக்கப் போற பொண்ணுக்குத் தேன்மொழின்னு பேர் வைக்கனுமாம்... :)

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
யாருமே பக்கத்துல இல்லையேன்னு சந்தோஷப் படறேன். நான் எப்போதும் சுதந்திரமா இருக்கனும்னு நினைக்கிறவன். சின்ன சின்ன இடைஞ்சல்கள் கூட எரிச்சல் படுத்தும். ஆகவே யாரும் பக்கத்துல இல்லாம இருக்கிறது தான் சந்தோஷம். ( எப்போதும் உடன் இருப்பதைப் பற்றி தான் சொல்கிறேன். நண்பர்களுடன் அவ்வப்போது கும்பல் சேர்வதைப் பற்றி சொல்லவில்லை. அது மிகவும் பிடித்தமான விஷயம்.)

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
எனக்கு ஆடைகளின் நிறத்தை சொல்லத் தெரியாது. எனக்கு பெரும்பாலான நிறங்களின் பெயர்கள் தெரியாது.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சர்கள் பதவியேற்பு விழாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
என் விருப்பங்களை பிறர் மீது திணிக்க விரும்புவதில்லை. அந்தப் பேனாக்களைப் பயன்படுத்துபவர்களுக்குத் தேவையான/பிடித்த வண்ணங்களில் இருக்க விரும்புகிறேன்.

14.பிடித்த மணம்?
உழைப்பாளிகளின் வியர்வை மணம். உச்சி வெயிலில் வெற்றுடம்புடன் வயலில் வேலைப் பார்க்கும் போது கொட்டும் வியர்வை மிக அழகான மணம் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன். அயம் பேசிகலி விவசாயிமா.. :)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
சில வரிகளில் சொல்லிவிடும் அளவுக்கு எனக்குப் பிடித்த பதிவர்கள் யாரும் சாதாரன ஆட்கள் இல்லை.

(அனைவரும் பரிசுப் பொருட்கள் அனுப்ப மெயிலில் தொடர்பு கொள்ளவும்..:) )

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவு என்று ஒருமையில் கேட்பதால் பதில் சொல்ல இயலவில்லை. அவர் மிகப் பெரும் கவிதாயினி. வலிமையான வரிகளுக்கு சொந்தக்காரி. வெறும் காதல் கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டு தானும் கவிஞர் தான் என்று சொல்லிக் கொள்ளாமல் சமூக சிந்தனை உள்ள கவிதைகளும் அற்புதமாக எழுதுவார். அவர் வலிமை அறிய அவருக்கு வரும் பின்னூட்ட எண்ணிக்கைகளைப் பாருங்கள். :)

17. பிடித்த விளையாட்டு?
கபடி, கால்பந்து நன்றாக விளையாடுவேன். அதனால் மிகப் பிடிக்கும். மற்ற சிலதும் ரசிப்பதுண்டு.

18.கண்ணாடி அணிபவரா?
பைக் ஓட்டும் போது கண்ணில் தூசு விழாமல் இருக்கவும் சுற்றுலா செல்லும் போதும் சும்மா சீன் போடவும் அணிவதுண்டு. மேலதிக விவரங்களுக்கு காண்டாக்ட் மிஸ்டர் குசும்பன். :)

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நான் சினிமா பார்ப்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமே. தியேட்டரில் பாடம் நடத்தாமலும் கருத்து சொல்லாமலும் இருக்கும் எல்லாப் படங்களும் பிடிக்கும். ஜாலியா இருக்கனும். காமெடி படங்களுக்கு முக்கியத்துவம். அதுக்காக குமுதம் ஆனந்தவிகடன்ல வர பிட்டு ஜோக்குகளை கோர்த்து படம் எடுத்தா கொலைவெறி தான். :)

20.கடைசியாகப் பார்த்த படம்?
நியூட்டனின் மூன்றாம் விதி.

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலங்கள் ரொம்பப் பிடிக்கும். ஊரில் மழைக்காலங்களில் தினமும் வானவில் பார்ப்பது ரொம்ப அழகா இருக்கும். பலத்த மழை பெய்யும் போது பள்ளி விடுமுறை அறிவித்துவிடுவார்கள். :)

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஹிஹி.. இந்த வார இந்தியா டுடே.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
10 வருடங்களுக்கு முன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்த போது அப்போது இருப்பதை விட நல்ல படம் கண்ணில்பட்டால் உடனே மாற்றிவிடுவேன். கொஞ்ச நாளிலேயே போர் அடித்துவிட்டது. இப்போது அதெல்லாம் மறந்தே போய்விட்டது.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அழுகைத் தவிர குழந்தைகள் வெளிப்படுத்தும் அத்தனை சப்தங்களும் பிடிக்கும். குழந்தைகள் மட்டுமில்லை, யாருமே அழுவது எனக்குப் பிடிக்காது.

குறட்டை சத்தம் சுத்தமா பிடிக்காது. தூங்கும் நேரத்தில் எந்த சப்தமும் கேட்கக் கூடாது. ஸ்விட்ச் போடும் சத்தம் கூட எரிச்சலைத் தரும். இரவு நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களைக் கண்டால் கொலைவெறி வரும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சுற்றுலாவிற்காக தாய்லாந்து.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
டெபனட்லி.. டெபனட்லி.. சரக்கே இல்லாம 2 வருஷமா பதிவுகள் எழுதி அதையும் உங்கள படிக்க வைக்கிறேனே.. இதைவிடத் தனித் திறமை வேற என்ன வேண்டும்? :)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஏராளமா இருக்கு. முக்கியமானது, அசைவம் சாப்பிடுபவர்கள் அதற்காக சொல்லும் எந்தக் காரணத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை. நீங்கள் சாப்பிடடும், ஆடு, கோழி மற்றும் இன்ன பிற ஜீவன்களின் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கும் அவைகளுக்கும் என்ன விரோதம்? ஏன் கொல்கிறீர்கள்? நீங்கள் சாப்பிடும் எந்த ஜீவனாவது இன்னொரு உயிரைக் கொன்று சாப்பிடுகிறதா?. உங்களிடம் எதிர்ப்பைக் காட்டி இருக்கின்றனவா?. ஒரு முறை அவைகளின் முகத்தைப் பாருங்கள். அதில் அப்பாவித் தனத்தைத் தாண்டி எதாவது உணர்ச்சி தெரிந்திருக்கிறதா?. பிறகு ஏன் கொன்று சாப்பிடுகிறீர்கள்?. இன்னொரு உயிரைக் கொன்று நம் உயிரை வளர்க்க வேண்டுமா?. எந்த மாமிசமும் சாப்பிடாமலே நாம் உயிர் வாழத் தேவையான உணவுகள் இருக்கும் போது ஏன் அப்பாவி ஜீவன்களைக் கொல்ல வேண்டும்?.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம் மற்றும் பொறுமையின்மைதான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
எங்க ஊரும் விவசாய நிலங்களும் தான்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நல்லது பண்ணலைனாலும் யாருக்கும் கெட்டது பண்ணாம இருக்கனும்னு..

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
யாரோட கணவர், யாரோட மனைவி இல்லாமல்னு சொல்லாம இப்டி கேட்டா என்ன அர்த்தம்? :)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை வாழ்வதற்கே... எப்புடூ.. :)

நான் அழைக்க விரும்பும் பாசக்கார புள்ளைங்க
1. ரொம்ப நாளா டிமிக்கி குடுக்கும் மங்களூர் முன்னாள் மைனர்
2. கரப்பான் பூச்சி விருது வடிவமைப்பாளர் குசும்பன்
3.எங்க மாவட்டத்துல ( அப்போ எங்க மாவட்டம் தான்) மாப்ள எடுத்திருக்கும் சுபா டீச்சர்
4.கரண்ட் இல்லாம பல்பு எரிக்கும் என் முதல் சமையல் குரு அருணா அக்கா
5. பதிவு போட மேட்டர் இல்லைனு டகால்டி விடும் கும்கீ
6. பஞ்சாபி ஃபுட் ஸ்பெஷல்( சாப்டறதுல மட்டும்) விக்னேஷ்வரி.

இதுல சில கேள்விகள் கல்யாணம் ஆனவங்களுக்காக கேட்டிருப்பதால் சில பாசக்கார பயலுகளை கோர்த்து விட முடியலையேன்னு துக்கம் தொண்டயை அடைக்கிது. :(

பின்ன.. இதை எழுத எனக்கு 3 நாளாச்சே.. :(


என்னை எழுத வைத்த கோவை கவுஜாயினி சக்தி சித்திக்கு கடுப்பான நன்றிகள். மரியாதையா விரல்வலிக்கு தைலம் வாங்கி அனுப்புங்க.. நானெல்லாம் படிக்கிர காலத்துல கூட இம்புட்டு கேள்விகளுக்கு பதில் எழுதியதில்லை..:((

ஒரு கவிதை சொல்லிட்டுப் போங்க மக்கா..

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4

புதியவர்கள் மட்டும் கீழே படிங்க. ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்தவர்கள் நேரடியாக படத்தைப் பார்த்து கவிதை சொல்லிடுங்க.


இதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க
. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.

கவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

இங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.

தனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?. :)

இங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

டிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .


இந்த வாரப் படம்..

முந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்.

Thursday, 21 May 2009

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3

புதியவர்கள் மட்டும் கீழே படிங்க. ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்தவர்கள் நேரடியாக படத்தைப் பார்த்து கவிதை சொல்லிடுங்க.


இதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க
. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.

கவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

இங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.

தனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?. :)

இங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

டிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .


இந்த வாரப் படம்..

முந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்.

Tuesday, 19 May 2009

தத்துபித்துவம் - 2

அப்பப்ப யார்னா தேவைக்கேற்ப எதுனா கண்டுபுடிச்சினு தான் இருக்காங்க. அதுக்கு அவங்க எவ்ளோ கஷ்டப் பட்டிருப்பாங்கன்னு சொல்ல வேண்டியதில்லை. ஆனா அதை பயன் படுத்தற நம்மாளுங்க இருக்காங்களே.. அடடா.. எல்லாம் பயங்கரமான புரோட்டா மாஸ்டருங்க தான். அதை எப்டி எல்லாம் கொத்து புரோட்டா போட முடியுமா அதெல்லாம் பண்ணிடறாங்க. ஈமெயில் என்பது எல்லாருக்கும் மிகப் பெரிய வரப் பிரசாதம். முன்னாடி எல்லாம் மக்கள் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க. என்னடா இது.. ஓசில கெடைக்கிதேன்னு இருக்கிற எல்லா வெப்சைட்லையும் ஐடி வச்சிருந்தும் ஒரு பயலும் மெயில் அனுப்பலையேன்னு ஃபீல் பண்ணுவாங்க. அதனால அப்பப்போ கோடிக்கணககான டாலர்கள் நமக்கே தெரியாம நம்ம பேர்ல லாட்டரில கிடைச்சிட்டு இருந்தது. அது ஒரு சந்தோஷமான பீலிங்கு.

இப்போல்லாம் அந்த பீலிங்கு வேற மாதிரி ஆய்டிச்சி. பின்ன ... தெரிஞ்சவன் மெயில் பண்றானோ இல்லையோ.. இந்த லேகியம் விக்கிறவனுங்க இம்சை தாங்கறதில்லை. 20% ஆஃபர்.. 10 வயாகரா வாங்கினா 100 கிராம் மான்கொம்பு அல்லது சிட்டுக் குருவி லேகியம் ஃப்ரீயா குடுத்து கைல 10 ரூபாய் பணமும் குடுக்கிறோம் என்ற ரீதியில் இவனுங்க அழிச்சாட்டியம் தாங்கறதில்லை. இன்னும் பலானது பலானது எல்லாம் அனுப்பறானுங்க.

ரோட்ல லேகியம் விக்கிறவன் எல்லாம் லேப்டாப் வாங்கிட்டு நம்மள படுத்தறானுங்க. நல்ல வேளை ஆண்டி ஸ்பாம் கோடடிச்சி அதை எல்லாம் தனிப் பொட்டியில ஓரம் கட்டிடறாங்க.

மெயில் அனுப்பினாத் தான இந்த வேலை எல்லாம் பண்ணுவீங்க.. நாங்க வேற வழியா வருவோம்லன்னு ஒரு குருப்பு கிளம்பி இருக்கு. கூகுள்ல SMS Channel என்று ஒரு சேவை இருக்கு. அதுல ஏராளமான சேனல்ஸ் இருக்கும். யார் வேணாலும் இதை உருவாக்கலாம். யாரோட சேனல்ல வேணாலும் இணைந்து நாமளும் செய்தி அனுப்பலாம். அந்த செய்திகள் எல்லாம் அதுல இணைஞ்சிருக்கிற உறுப்பினர்களோட மொபைலுக்கு குறுஞ்செய்தியா போய்டும். இதுல இப்போ இந்த அஜால் குஜால் பார்ட்டிங்களும் சேர்ந்துட்டாங்க.

நகைச்சுவை மற்றும் செய்திகளுக்காக நாம இணைஞ்சிருக்கிற சேனல்ல இவங்களும் வந்திருக்காங்க. "Hi, this is sheela. please subscribe our channel to get sex tips free to increase your sex activities. send SEX to 9710******" அப்டின்னு தினமும் ஒரு செய்தியாவது வருது. ஒரு நாளைக்கு ஷீலா, அடுத்த நாள் மீனா, அடுத்த நாள் ரீனா.. சீக்கிறமே அசின் , திரிஷா, நயந்தாரா எல்லாம் வருவாங்கன்னு நினைக்கிறேன். :) . மொபைல்ல எந்த ஆண்டி ஸ்பாம் போட்டு இதை தடுக்க முடியும்?..எப்டி எல்லாம் அஜால் குஜால் பார்ட்டிங்க டெக்னாலஜிய யூஸ் பண்றாங்க பாருங்க.

இதெல்லாம் நமக்குத் தெரியாத யாரோ எங்கயோ இருந்து பண்றது. நம்ம கூடவே இருக்கிற சில கொத்து புரோட்டா மாஸ்டருங்க இதுக்கு மேல. சனிக்கிழமை (மே 16 ) தேர்தல் ரிசல்ட் வந்துட்டு இருக்கும் போது தமிழ்மணம்ல சாட் பண்ண ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. என்ன கோளாறு ஆச்சோ தெரியலை கொஞ்ச நேரத்துல அதைத் தூக்கிட்டாங்க. அப்போ ஒரு மூத்த பதிவரு ( மூனே கால் பதிவு மட்டுமே எழுதி இருந்தாலும் 1 வருஷம் ஆச்சினா மூத்தப் பதிவர் தான்.) போன் பண்ணாரு.

”என்னடா தமிழ்மணம்ல சாட் தூக்கிட்டாங்க போல”
”ஆமாண்ணா”
“இட்லிவடைல கூட ஓடிட்டு இருக்குடா”
“இருங்க பார்க்கிறேன்”
“பாரு பாரு” எதுக்கோ சிரிச்சார்..



“ என்னண்ணா அதுல நாம எதும் சாட் பண்ண முடியாது போல இருக்கே.. அந்த ஆப்ஷனே காணோமே”
“ அது ஒன்னுமில்லைடா.. அந்த சாட் பார்த்த உடனே நான் குஷி ஆய்ட்டன். எனக்கு பழைய ஞாபகம் வந்துடிச்சி. எல்லாரும் ரொம்ப சீரியசா பேசிட்டு இருந்தாங்க..அதான் நான் “ M25 here.. any F32 pls pm " இப்டி எல்லாம் வித விதமா மெசெஜ் பண்ணி விளையாடிட்டு இருந்தேன்.. கடுப்பாய்ட்டாங்க போல.. அதான் தூக்கிட்டாங்க”

இவரை எல்லாம் வச்சிட்டு என்ன பன்றது? கம்பூட்டருல ஆண்டி ஸ்பாம் வச்சி தடுக்கலாம். ஆனா, ஊட்ல இருக்கிற ஆண்டிக்கே அடங்காம அழிச்சாட்டியம் பண்ற இந்த மாதிரி ஆளுங்கள எதை வச்சி தடுக்கிறது?.

இன்னும் சில நல்லவங்க இருக்காங்க.. வெந்த புண்ணுல எப்டி வேலப் பாய்ச்சறதுன்னு சொல்லிக் குடுக்க காலேஜே கட்டுவாங்க போல. ஞாயித்துக்கு கெழம டிவி பார்த்துட்டே ஆன்லைன்ல இருந்தேன். நம்ம அதிஷா சாட்ல வந்து “ சஞ்சய் உடனே ஜெயா மேக்ஸ் பாருங்க. சுச்சுவேஷன் சாங்கு போட்னுகீறாங்க”ன்னாரு. நானும் ஆர்வமா பார்த்தேன். அதுல ஜெய்சங்கர், அருண்பாண்டியன் எல்லாம் ஆளுக்கொரு மெழுகுவர்த்தியைப் பிடிச்சிட்டு பாடிட்டு இருந்தாங்க..

“ தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா? “

அடப்பாவிகளா.. எப்டி எல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா.. நல்ல வேளை மக்கள் டிவியில சினிமா பாட்டுப் போடறது இல்ல. இல்லைனா விளம்பர இடைவேளையா இந்தப் பாட்ட மட்டும் தான் போட்டிருப்பாங்க.

இந்த கூத்தெல்லாம் நடந்துட்டு இருக்கும் போது நம்ம ”ஜி” ஸ்டேட்ட்ஸ்ல இருந்தது “ அடப்பாவிகளா.. ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் போட விட மாட்டேன்றாங்களே ”.. ஹ்ம்ம்ம்.. அவர் எந்த அதிஷாவால பாதிக்கப் பட்டாரோ.. :)

Pussycat Dolls ஃபிகருங்க சேர்ந்து ஜெய் ஹோ பாடலை ”You Are My Destiny”என்ற பெயரில் அட்டகாசமா ரீமேக் பண்ணி இருக்காங்க பாருங்க.. ரசிங்க.. :)

Saturday, 16 May 2009

தத்துபித்துவம் - 1 + 201வது பதிவு

இப்போது எல்லாம் டிவி பார்ப்பது என்பதே ஒரு கொடுமையான சமாச்சாரமா ஆய்டிச்சி. எல்லா சேனல்களைலும் ஒரே மாதிரி நிகழ்ச்சிகள். முன்னாடி எல்லாம் எல்லா சேனல்களிலும் அழுகாச்சி சீரியல்களா ஓடிட்டு இருக்கும். அந்த சமயங்கள்ல விஜய் டிவியில சில புதுமையான நிகழ்ச்சிகளும் ஜாலியான தொடர்களும் ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க. அதனால டிவி பார்க்க உட்கார்ந்தா விஜய் டிவி தான் பார்ப்பேன். இப்போ எல்லா சேனல்களிலும் ஒரே மாதிர் ரியாலிட்டி ஷோக்கள் தான் வருது. எந்த சேனல் திருப்பினாலும் யாராவ்து ஆடிட்டே இருக்காங்க.. யாராவது கெமிஸ்டி , பிசிக்ஸ் எல்லாம் நல்லா வொர்க் அவுட் ஆச்சி, கோ ஆர்டினேஷன் நல்லா இல்ல.. டமிங் மிஸ் பண்ணிட்டிங்க , எனர்ஜி லெவல் கம்மியா இருந்தது ( எப்டி தான் அளக்கறாங்களோ ) என்று அரைச்ச மாவையே அரைக்கிறாங்க.. இல்லைனா எதாவது அற்ப காரணங்களுக்கு சண்டைப் போடறாங்க.. அதையுமாய்யா ஒளிபரப்புவிங்க?. இந்த ஆட்டம் பாட்டம் ஆளுங்க டார்ச்சர் தாங்கறதில்லை.. கொய்யால.. ஒன்னுக்கடிக்கிறதைத் தவிர வேற ஒன்னுவிடாம ஒளிபரப்பறாங்க.

அது இல்லைனா யாராவது பாடிட்டே இருக்காங்க. அங்கயும் யாராவது பல்லவி, ச்சரணம், டெம்போ என்று நமக்கு புரியாத வார்த்தைகளா பேசறாங்க. சும்மா சும்மா டென்ஷன் ஆகறாங்க. போட்டியில கலந்துக்கிறவங்க , ஒரு எபிசோடுக்கு யாராவது ஒருத்தராவது அழறாங்க.. போட்டின்னா தோல்வி சகஜம் தானே.. சும்மா இருந்து தோற்பதில்லையே.. போட்டி போட்டு உங்களை விட திறமைசாலிகிட்ட தானே தோல்வி வருது.. இதுக்கு பெருமை படறதை விட்டு அழுவாங்களா யாராச்சும்? இது கூட பரவால்ல.. இவங்க வீட்ல இருந்து அப்பா அம்மா தாத்தா பாட்டி அத்தை மாமா எல்லாரும் வந்திருப்பாங்க.. அவங்களும் கூடவே அழுவாங்க.. அழுதுகிட்டே திடீர் கருத்து கந்தசாமிகளாவும் ஆய்டுவாங்க.

இவங்களை எல்லாம் தாண்டி வந்தா இந்த காமெடி ஷோ பன்றவங்க இம்சை.. ஸ்டேண்டிங் காமெடி பன்றோம்னு சொல்லிட்டு மொபைல் கண்டுபிடிச்ச காலத்துல வந்த SMS எல்லாம் மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சிட்டு இருக்காங்க.. இல்லைனா மிமிக்ரி என்ற பெயரில் சினிமா நடிகர்கள் குரல்களை எல்லாம் கொத்து புரோட்டா போடறாங்க.. சிலர் பன்றது கொஞ்சம் ரசிக்கிற மாதிரியும் இருக்கும். ஆனால் பெரும்பாலான மிமிக்ரிகள் கடுப்பு தான். வேற கான்செப்டே இல்லை போல. அங்க இருக்கிற நடுவர்கள் இருக்காங்களே.. யப்பா.. தாங்க முடியலை..

சரி, செய்தி பார்க்கலாம்னு சன் செய்தி, கலைஞர் செய்தி திருப்பினா, அவங்க கொடுமை அதுக்கு மேல.. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை வேஷ்டியை அவுத்துப் போட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சின்னு சொல்வாங்களே அந்த மாதிரி தான். காலைல பதிவு பண்ணி வச்ச செய்தியையே ராத்திரி வரைக்கும் ஒளிபரப்பறாங்க.

இவங்கதான் இப்டி. எதுனா இங்கிலீசு சேனல் பாக்கலாம்ன்னு திருப்பினா இந்த அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் காட்டுக் கத்து கத்திட்டு இருக்காங்க.. தேர்தல் முடிஞ்சாலும் கொஞ்ச நாளைக்கு இந்த இம்சை இருக்கும்.. எல்லா சேனல்களிலுமே ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப பேசிட்டு இருக்காங்க.. அதுலையும் இந்த நிகழ்ச்சியைத் தொகுக்கிறவங்க டார்ச்சர் அதுக்கு மேல. ஐபிஎன்னோட சகரிகா கோஸ், எண்டிடிவி பார்க்கா தத் 2 பேரும் கொஞ்சம் பரவால்ல.. தமிழ்நாட்டுக்கு ஓரளவு முக்கியத்துவம் தராங்களேன்னு நெனைச்சி டைம்ஸ்நவ் பார்த்து தொலைஞ்சா அவ்ளோ தான். விவாதம்ன்னு சொல்லிட்டு இந்த அன்னா கோஸ்வாமி அடிக்கிற லூட்டிக்கு அளவே இருக்காது.. இவர் கரன் தாபரோட வள வளா கொழ கொழா வெர்ஷன். பேசறவங்களை மடக்கறதா நினைச்சி மணிக்கணக்குல அவர் மட்டுமே பேசுவார். விவாதத்துக்கு வந்த அரசியல்வாதிங்க எல்லாம் இவர் வாயைத் தான் பரிதாபமா பார்த்துட்டி இருப்பாங்க.. நம்ம சுப்பைய்யா வாத்தியாருக்கு சொந்தக்காரர் போல...

என்னக் கர்மம் தாண்டா பன்றதுன்னு அன்னைக்கு ஒரு நாள் விஜய் டிவியை பார்த்தேன்.. அதுல எதோ ஒரு FM ஸ்டேஷன்ல அதோட ஆர்ஜேவும் பாடகர் ஸ்ரீனிவாசும் இங்கிலிஷ்ல( மட்டுமே) பேசிட்டு இருந்ததை ஒளிபரப்பினாங்க..

கடுப்பாகி ஆன்லைன் வந்து நம்ம கானா பிரபாகிட்ட பேசிட்டு இருந்தேன்..அவர் ஆஸ்திரேலிய தமிழ் வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அப்போ அவர் சொன்ன விஷயம் ஆச்சர்யமா இருந்தது. அவர்கள் வானொலியில் மருந்துக்குக் கூட ஆங்கிலம் பாவிப்பது இல்லையாம். ஒரு மருத்துவ நிகழ்ச்சி தவிர. அது சரி தான்.. அன்னாசினை - மூத்தசகோதரபாவம்னா சொல்ல முடியும்?. அது 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு. அந்த வானொலியுடன் தொடர்புள்ள அனைவருக்கும் பாராட்டுகள்.

ஆனால் நம்ம ஊர் பன்பலைகளில் பெருமளவு ஆங்கிலம் தான். இதற்கு கானா அடிச்ச கமெண்ட் “ எதுவுமே பக்கத்துல இருக்கும் போது அதோட மதிப்பு நமக்குத் தெரியாது பாஸ்”... ஆமால்ல..

ஹிஹி.. இது என்னோட 201வது பதிவு.. :-)
இந்த வலைப்பூ ஆரம்பித்து மிகச் சரியாக 25 மாதங்கள் ஆகிறது. :-)
உங்கள் பொன்னான ஆதரவுக்கு நன்றி..நன்றி.. நன்றி.. :))

Friday, 15 May 2009

இம்புட்டுப் பேருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

மே 14 - கானா பிரபா

மே 15 - மங்களூர் சிவா

மே 15 - தணிகை @ வால்பையன்

மே 15 - துர்கா

மே - 19 நாமக்கல் சிபி

மே - 22 கவிதா

மே - 23 ஸ்ரீமதி

மே - 24 திவ்யா

மே - 28 கும்கி

........ இந்த மாதம் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்.. :)

இன்று ( மே15) திருமணநாள் கொண்டாடும் வால்பையனுக்கு வாழ்த்துகள்.

இன்று ( மெ15) திருமனநாள் கொண்டாடும் சிங்கை சிங்கம் ஜோசப் மாப்பிளையின் அண்ணனுக்கு வாழ்த்துகள்.

Thursday, 14 May 2009

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 2

புதியவர்கள் மட்டும் கீழே படிங்க. ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்தவர்கள் நேரடியாக படத்தைப் பார்த்து கவிதை சொல்லிடுங்க.


இதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க
. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.

கவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

இங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.

தனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?. :)

இங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

டிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .

விருப்பம் உள்ளவர்கள் வைரஸ் கூட அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவர் : kusumbuonly@gmail.com . அடுத்த வாரம் ஆயில்யன் அட்ரஸ் தறேன். ஆட்டோவே அனுப்பலாம். :)

இந்த வாரப் படம்..


முந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்

Tuesday, 12 May 2009

உப்புமா பதிவு

( இது கொதிக்கிற தண்ணில உப்புமா மிக்ஸ் சேர்த்ததும் எடுத்த படம். இதற்கு மேல் மைக்ரோ ஹையில் 3 நிமிடம் வச்சேன் )

சமீபத்துல( 1938ல இல்ல ) காலைல என் தங்கச்சி பின் நவீனத்துவ சூறாவளி ஸ்ரீமதிகிட்ட இருந்து போன். __ அண்ணா இதெல்லாம் நீ கேக்கமாட்டியா__( அவ மரியாதையா சொன்ன எழுத்தெல்லாம் எதுக்குங்க.. விடுங்க..) . இதென்ன கொடுமை.. என்னா விஷயம் சொல்லுன்னு சொன்னது தான் தாமதம்.. புலம்பித் தள்ளிட்டா. அக்கா கோவிலுக்கோ எங்கயோ போய்ட்டாங்களாம். இவளுக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணலை. அதனால அம்மணி கோதாவுல குதிச்சிட்டா. அப்டி என்னத்த தான் பிரமாதமா பண்ணிட்டான்னு நினைக்கறிங்க? உப்புமா தானுங்க. இதுல என்ன கொடுமைன்னா உப்புமா எப்டி பண்றதுன்னே தெரியாம பண்ணி இருக்கா.. :))

இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிட்டு போற பொண்ணுக்கு உப்புமாக் கூட செய்யத் தெரியலையேன்னு ரொம்ப கவலையா போச்சி. சிம்பிளா அவளுக்கு போன்லையே சொல்லிக் குடுத்துட்டேன். இப்போ இந்த தங்கச்சி மாதிரி இன்னும் பல தங்கச்சிகளுக்கு உதவட்டும் என்றும் நாளைக்கு என் வீட்டிலிருந்தே ஒரு ஜீவன் இதைப் படிச்சி கத்துக்கக் கூடும் என்ற எண்ணத்துடனும் தான் இந்த உப்புமா பதிவு. இது என்னோட வழக்கமான் உப்புமா பதிவு இல்லைங்க. உண்மையான உப்புமா பதிவு தான். ;))

உப்புமா செய்றது ஒன்னும் ரொம்ப கஷ்டமான காரியம் இல்லை. MTR மாதிரி சில உடனடி உப்புமா மிக்ஸ் கிடைக்கிது. 200கிராம் 15 ரூபாய் மட்டுமே. அளவாய் சாப்பிடுபவர்களுக்கு 150 கிராம் போதும். நான் 2 பாக்கெட் வாங்கினால் அதை 3 வேளை பயன்படுத்தறேன்.

செய்முறை :
2 கப் தண்ணீரை 1 டேபிள் ஸ்பூன் நெய் அல்லது சமையல் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு கப் உப்புமா மிக்ஸ் சேர்த்து நன்றாக கலக்கனும். பிறகு மேலும் சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கலக்கனும். அம்புட்டு தான். மிகச் சுவையான உப்புமா ரெடி.


உடனடு உப்புமா மிக்ஸ் இல்லாமல் சேமியா அல்லது ரவை மூலம் வீட்டில் செய்வது போல எப்டி செய்றதுன்னு யாருக்காவது தெரியனும்னா சொல்லித் தரேன். :)) ஆனால் அதை அருணா அக்கா மட்டும் படிக்கக் கூடாது. ஹிஹி.. :)

Thursday, 7 May 2009

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 1

வணக்கம் மகா ஜனங்களே..!
ஓவரா மொக்கை போட்டு லைட்டா போரடிக்கிது. அதனால ஒரு புது முயற்சி உங்கள் ஆசிகளுடன். இனி ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஒரு படம் போட்டு பதிவு வரும். இதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.

கவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

இங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.

தனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?. :)

இங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

டிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .

இந்த வாரப் படம்..

...ரெடி... ஸ்டார்ட் மீஜிக்.... :)

Monday, 4 May 2009

IIT ஆராய்ச்சியாளருடன் ஒரு அலம்பல்

மாலை 7 மணி

Athisha Calling...

”வணக்கம் வினோ.. எப்டி இருக்கிங்க. கோவைல இருக்கிங்களா?” - இல்லைனா கூப்ட மாட்டாரே பெரும்பதிவர். :)
”நல்லா இருக்கேன். முரளிக் கண்ணன் வந்திருக்கார். வேலன் அண்ணாச்சி வீட்டுக்குப் போகனுமாம். அவர்கிட்ட அண்ணாச்சி நம்பர் இல்லையாம். நீங்க பேசிடறிங்களா?”

உடனே பேசிடறேன்..

“ ஹலோ”
“ முரளிகண்ணன்?”
”ஆமாங்க”
“ வணக்கம் முரளி. நான் வடகரை வேலன் பேசறேன்”
“ சார்.. வணக்கம்.. நல்லா இருக்கிங்களா?.”
“நல்லா இருக்கேன். நீங்க கோவைல இருக்கிங்களா?”
“ஆமாம் சார். உங்க வீட்டுக்கு வரனும். எப்டி வரதுன்னு தெரியலை”
“ இப்போ நீங்க எங்க இருக்கிங்க”
“ கவுண்டம்பாளையம் சார்.”
“சரி. நான் இப்போ ரொம்ப பிசியா இருக்கேன். பார்க்க முடியாது. நீங்களும் ரொம்ப தூரத்துல இருக்கிங்க. இன்னொரு நாள் பார்க்கலாமே”
“ அப்டியா. சரிங்க சார். ஒன்னும் பிரச்சனை இல்லை”

...............நிற்க.

” சரி முரளி. ஒன்னு பண்ணுங்க. வந்ததும் வந்துட்டிங்க. இந்த சஞ்சய் இப்போ ஃப்ரீயா தான் இருப்பான். அவனை பார்த்துட்டு போய்டுங்க”
“அப்டியா?.. சரிங்க சார். காலைல பார்க்கிறேன்”
“காலைல அவனை சந்திக்கிறது கஷ்டம். ரொம்ப பிசியா இருப்பான். நாங்களே அவன் கிட்ட 2 நாள் முன்னாடி போன் பண்ணி டைம் வாங்கிட்டு தான் போவோம். பையன் அவ்ளோ பிசியா இருப்பான்.”
”ஓ..ஹோ..”
“ அதனால இப்போவே அவனை பார்த்துடுங்க”
“சரிங்க சார்”
“ எதுக்கும் அவனுக்கு போன் பண்ணிட்டு போங்க. எதுனா மீட்டிங்க்ல இருப்பான். அவன் கிட்ட பேசறதும் பாக்கறதும் அவ்ளோ சுலபம் இல்லை. முயற்சி பண்ணி பாருங்க”
“ சரிங்க சார். அவர் போன் நம்பர் இருக்கா”
“98_______”
“ இப்போ கால் பண்றேன் சார். வச்சிடறேன்”
” சரிங்க முரளி”

......


“ ஹலோ”
“ஹாய் சஞ்சய். எப்டி இருக்கிங்க.”
“ எனனாது சஞ்சயா?. உங்களுக்கு எந்த நம்பர் வேணும்ங்க?”
“98________”
“ நம்பர் கரெக்ட் தான். ஆனா ஆள் கரெக்ட் இல்லையே.நீங்க யாரு?”
“ என் பேரு முரளிக் கண்ணன். என் ஃப்ரண்ட் சஞ்சய் நம்பர்னு நினைச்சி கால் பண்ணிட்டேன். சாரி சார்”
“சஞ்சய் நம்பர் எனக்குத் தெரியும்.. உங்களுக்கு இந்த நம்பர் யார் குடுத்தாங்க”?
” வடகரை வேலன்னு ஒரு நண்பர் குடுத்தாருங்க. நான் அவரோட ஃப்ரண்ட். என் பேர் முரளிகண்ணன்”
“ யோவ் முரளி. நான் தான்யா வடகரை வேலன். நான் எப்போ உனக்கு நம்பர் குடுத்தேன்”
“ அச்சோ.. சார்.. அப்போ உங்களுக்கு முன்னாடி என்கிட்ட பேசினது யாரு?”
“ என்ன பேசினிங்க சொல்லுங்க...”
“-----------”
“-----------”
“-----------”
“-----------”

”அடப்பாவி.. இதுல இருந்தே தெரியலையா?. இது அவன் வேலை தான்யா.. ;)) “
“ யாருங்க சார்?”
“வேற யாரு. சஞ்சய் தான்”
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. முரளிக் கண்ணன் நன்றாக வழிகிறார். வந்த முதல் நாளே ஆரம்பிச்சிட்டிங்களாய்யா? :)

-----------------

.........தொடர்க.
“ முரளி , ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. வேற ஒரு கால் வருது”
”சரிங்க சார்”
..அண்ணாச்சிக்கு போன் செய்கிறேன்...
“ஹலோ”
“அண்ணாச்சி. சஞ்சய் பேசறேன். முரளிக் கண்ணன் வந்திருக்கார். உங்க வீட்டுக்கு வரனுமாம். நான், நீங்க பேசற மாதிரி அவர்கிட்ட பேசி வச்சிருக்கேன். நீங்க கான்கால்ல அமைதியா இருங்க. நான் பேசறேன்.”
“அடப் பாவி.”

“முரளி.சாரிங்க. வேற ஒரு முக்கியமான கால். அதான் பேச வேண்டி இருந்தது.”
“அதனாலென்ன சார். பரவால்ல”

” சரி முரளி. ஒன்னு பண்ணுங்க. வந்ததும் வந்துட்டிங்க. இந்த சஞ்சய் இப்போ ஃப்ரீயா தான் இருப்பான். அவனை பார்த்துட்டு போய்டுங்க”
“அப்டியா?.. சரிங்க சார். காலைல பார்க்கிறேன்”
“காலைல அவனைப் பார்க்கறது கஷ்டம். ரொம்ப பிசியா இருப்பான். நாங்களே அவன் கிட்ட 2 நாள் முன்னாடி போன் பண்ணி டைம் வாங்கிட்டு தான் போவோம். பையன் அவ்ளோ பிசியா இருப்பான்.”
”ஓ..ஹோ..”
“ அதனால இப்போவே அவனை பார்த்துடுங்க”
“சரிங்க சார்”
“ எதுக்கும் அவனுக்கு போன் பண்ணிட்டு போங்க. எதுனா மீட்டிங்க்ல இருப்பான். அவன் கிட்ட பேசறதும் பாக்கறதும் அவ்ளோ சுலபம் இல்லை. முயற்சி பண்ணி பாருங்க”
“ சரிங்க சார். அவர் போன் நம்பர் இருக்கா”
“இருங்க பார்த்து சொல்றேன்”

இந்த கேப்ல அண்ணாச்சி பூந்து குட்டையைக் குழப்பிட்டார்... இல்லைனா அந்த நீலக் கலர்ல இருக்கிறது தான் நடந்திருக்கும். :)

“ யோவ் முரளி. நீ இவ்ளோ அப்பாவியா இருப்பன்னு நினைச்சிக் கூட பார்க்கலைய்யா :)) “
“ சார்.. சொல்லுங்க சார்”
“ யோவ் நான் வடகரை வேலன் பேசறேன். இவ்ளோ நேரமா உன்கிட்ட பேசினது சஞ்சய் தான். ;) “
”அண்ணாச்சி.. இப்டி பூந்து காரியத்தைக் கெடுத்துட்டிங்களே:(” .....நான்.
“ஆஹா.. இப்டியா கலாய்பிங்க.. :)” - முரளி.

ஒருவழியா கொஞ்ச நேரம் மொக்கைப் போட்டு முடிஞ்சது. எங்கயாவது சாப்பிட வெளிய போகலாம்னு முடிவு பண்ணிட்டோம். அண்ணாச்சி 8.30 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துடறதா சொல்லிட்டார். நான் 8 மணிக்கு கிளம்பி முரளியை அழைத்து வருவதாக சொல்லிவிட்டேன்.அண்ணாச்சி செல்வேந்திரன் கிட்ட பேசி அவரையும் கூட்டிட்டு ( இல்லைனா இழுத்துட்டு) வரதா சொல்லிட்டார். முரளியை அழைத்து வரும் வழியில் திட்டம் மாறியது. அண்ணாச்சி கால் பண்ணி சிந்தாமணி அருகில் வர சொல்லிட்டார். எங்களுக்கும் அது சவுகரியமாகவே இருந்து. மேட்டுபாளையம் சாலையிலிருந்து கணபதி சென்று பின் காந்திபுரம் வருவதைவிட, சிந்தாமணி வழியாக காந்திபுரம் செல்வது சுலபம். பின் மூவரும் சேர்ந்து செல்வேந்திரன் அறைக்கு சென்றோம்.

எங்கு சாப்பிட செல்வது என கேட்டபோது எனக்கு எப்போதும் பிடித்த கையேந்திபவன் போகலாம்னு சொன்னேன். ஆனால் அருகில் இருந்த கீதா கேண்டீனுக்கு செல்வா இழுத்துட்டுப் போனார். கோவையில் பிரபலமான மெஸ்.

சாப்பிட்டதும் சினிமாவுக்கு போக திட்டம். ஒரு தியேட்டருக்கு போனோம். அங்கே ஆனந்த தாண்டவம் மற்றும் இன்னொரு படம் எதோ போட்டிருந்தாங்க. ஆனந்த தாண்டவம் பார்க்க முடிவெடுத்து அண்ணாச்சி காரைப் பார்க் பண்ணிட்டு வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். சரி, நேரம் ஆகிறது என்று டிக்கெட் வாங்க போனால், ஆனந்த தாண்டவம் ஓடும் தியேட்டரில் எதோ வேலை நடக்கிறதாம். அதனால அந்தப் படம் திரையிட மாட்டாங்களாம். கொய்யால.. முன்னாடி ஒரு போர்ட் வைக்க மாட்டிங்களாடா?.

அடுத்து என்ன செய்ய?. முரளிக் கண்ணன் விதி விளையாடியது. புதுசா மாதவன் நடிச்ச குரு என் ஆளு பார்க்கலாம்னு யாரோ சொன்னோம். எந்த தியேட்டர்ல என்று தெரியலை. அப்போது முரளி,

”நாங்க வரும் போது பார்த்தோம். செண்ட்ரல்ல போஸ்டர் இருந்தது”.

அப்டியா? ரைட்டு விடுங்க.. மிண்டும் நாங்கள் மூவரும் ஒன்றாய் கிளம்பிய இடத்திற்கே வந்தோம். டிக்கெட் வாங்கும் போது , வழக்கம் போல
“ அண்ணே ஓரத்து சீட் குடுத்துடாதிங்க. செண்டர்ல வர மாதிரி குடுங்க”
“சீட் நம்பர் எல்லாம் இல்லைங்க. எங்க வேணாலும் உட்காரலாம்.”
அப்போ தான் டிக்கெட்டை பார்த்தேன். சீட் நம்பர் போடவே இல்லை. அப்போவே புரிஞ்சி இருக்கனும். ஆனா முரளிக் கண்ணன் விதி. உள்ளே போய்ட்டோம். அடப்பாவிகளா, இங்க இருக்கிறவனை எண்ணுவதற்கு விரல்கள் கூட தேவை இல்லை போல இருந்தது.

படம் பார்க்க ஆரம்பித்தோம். .................. ஒருவழியாய் முடிந்தது.

பாவம் முரளிக் கண்ணன். இனி எப்போதும் கோவைப் பக்கம் வரவும் மாட்டார். அப்டியே வந்தாலும் எங்க யாருக்கும் சொல்ல மாட்டார்.

படம் எப்டி இருந்ததுன்னு தெரியனுமா? இங்க பாருங்க.

இதோட எங்க கொடுமையை நிறுத்தல. செல்வேந்திரன் ரூம் முன்னாடி தெருவுல நிக்க வச்சி 2 மணி வரைக்கும் மொக்கைப் போட்டுத் தள்ளிட்டோம். தியேட்டருக்கு போகாமலே இங்கயே பேசி இருந்திருக்கலாம். பல நல்ல விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது. செல்வேந்திரன், அண்ணாச்சி மற்றும் முரளிக் கண்ணன் ஆகிய 3 அறிவு ஜீவிகளும் பேசுவதைக் கேட்க இன்னும் சில மணி நேரங்கள் இருந்திருந்தாலும் சந்தோஷமாக இருந்திருக்கும்.

இரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலைன்னு கேட்கறிங்களா? வேற என்ன வேலை.. வழக்கம் போல பார்வையாளர் வேலை தான். :))

இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது முரளிக் கண்ணன் அழைத்தார். இதைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லை. :)

டிஸ்கி : முரளிக் கண்ணன் சினிமா பற்றிய பதிவுகளில் தான் ஜீனியஸ் என்று நினைத்தேன். சென்னை IITயில் ஆராய்ச்சி மாணவரும் கூட. ஒரு சிக்கலான் ஆனால் மிகவும் அவசியமான ஆராய்ச்சியை செய்துக் கொண்டிருக்கிறார். அந்த ஆராய்ச்சியில் அவர் வெற்றி பெற்று புகழ் பெற வாழ்துகள்.

Sunday, 3 May 2009

நிலா & அபிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்



நம்ம நிலா பாப்பாவுக்கும் அபி பாப்பாவுக்கும் இன்னிக்கு(மே - 03) ஹேப்பி பர்த் டே. இந்த இரு குழந்தைகளும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் என்றும் சந்தோஷமாய் வாழ வாழ்த்துவோம்.

Saturday, 2 May 2009

குரு என் ஆளு - விமர்சனம்

$#%$#%$%$^$%^^(^&# #%$#%^%$#%^$*&($#@ங்ங்ற்$ ஸ்ஸ்றேGFDSFDS%^$ #%ESDFDS$#FZDAR# %^^^&(&#@$#@$#@$%^$# DSFGF$#%DSDSF^$% ^*&%^&$869875jh *^&^&%^$%JGKJHG *^*&^^&%^& $#%^*&^(*#@$!#@$$#^$^*^&* FGSDFFDASFASFA$#%$#%$ ^&$@%$#@%FGF 6456457465$#%$#%$#%

Friday, 1 May 2009

வருந்துகிறோம்

நம் நல்ல நண்பனும் என் பாசமிகு மாப்பிள்ளையுமான ஜோசப் பால்ராஜின் தந்தயார் இன்று நம்மையும் தன் குடும்பத்தையும் விட்டு பிரிந்து விட்டார் என்ற தகவலை மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கிறேன். ஜோசப்பின் குடும்பத்தாருக்கு எற்பட்ட இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றும் அண்ணாரது ஆதமா சாந்தி அடைய வேண்டும் எனவும் ப்ரார்த்திக்கிறேன்.

Tamiler This Week