இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday, 26 November 2008

செல்லம்.. ஐ லவ் யூ டி..

கல்யாணம் முடிந்து சொந்த பந்தங்களின் விருந்து, ஊர்சுத்தல் எல்லாம் முடிந்து வந்துவிட்டோம். இன்று நாங்கள் இருவர் மட்டுமே இருக்கும் முதல் நாள். வித்தியாசமான உணர்வு.. உறக்கம் இன்ஸ்டால்மெண்டில் தான் வந்தது. ஒருவழியாய் விடியல் வந்துவிட்டது.. மெதுவாக போர்வை விலக்கி மொபைலில் நேரம் பார்க்கிறேன்.. ஆஹா மணி 6.30..


என்ன இவள்.. என்னை விட மோசமான்வளா இருப்பாள் போல.. இன்னும் எந்திரிக்கலையா.. எழுப்பலாமா.. இல்லை.. இன்று தான் இருவரும் தனியாய் ஆரம்பிக்கும் முதல் நாள்.. அவள் விருப்பத்திற்கு இருக்கட்டும்.. மெதுவாய் விழிக்கட்டும்.. ஹ்ம்ம்ம்.. இல்லை.. எழுப்பலாம்... அவள் கையால் இன்று ஒரு அதிகாலை காபி குடிக்கலாம்.. வேறு வழி இல்லை.. எழுப்பி விட வேண்டியது தான்..

அட.. போர்வை காலியாய் இருக்கே.. முன்னாடியே எழுந்திட்டா போல.. டேய் உனக்கு இப்படி ஒரு பொறுப்பான பொண்டாட்டியா? இருக்காதே.. தப்பாச்ச்சே.. சரி.. விதி வலியது.. நமக்கும் இப்டி வந்திருக்கு போல..

படுக்கை அறைக் கதவு லேசாய் திறந்து இருக்கு.. எங்கிருந்தோ லைட்டா வெளிச்சம் வருதே.. அட.. ஹாலில் லைட் எரியுது.. வீட்டை கூட்டி பெருக்கிட்டு இருக்கா.. அடியேய் கிராதகி.. எனக்கு டஸ்ட் அலர்ஜிடி.. இங்கயும் கூட்டல் பெருக்கலை பண்ணாதே.. இந்த அறை தவிர மற்றவை மட்டும் பெருக்கு.. ஹ்ம்ம்.. நான் மனசுல நெனைக்கிறது அவளுக்கு கேட்கவா போகுது.. கொஞ்ச நேரம் ஆய்டிச்சி.. ஆஹா.. நிஜமாவே இந்த அறை கூட்ட வரலை.. செல்லம் ஐ லவ் யூ டி..

எதோ கமகமன்னு வாசம் வருதே.. குளிச்சிட்டு தலை நிறைய பூ வச்சிருப்பாளோ.. ஹ்ம்ம்.. இருக்கும்.. இருக்கும்..வாசம் இப்போ அதிகமாய் வருதே.. ஆமாம்.. என்னை நோக்கித் தான் வரா.. அச்சச்சோ.. இந்த நேரத்துலையே எனனை எழுப்ப ட்ரை பண்ணுவாளோ.. முதல் நாளே எப்படி எரிஞ்சி விழறது.. அதுககாக நல்லவன் மாதிரி நடிச்சி எழுந்திட்டாலும் தினமும் இவ்ளோ சீக்கிறம் எழுப்ப ஆரம்பிச்சிடுவாளே..

சரி .. என்னதான் பண்றான்னு பார்ப்போம்.. அய்யோ.. பக்கத்துல வந்துட்டா.. டேய் கண்ணை மூடிக்கோ.. ஹ்ம்ம்.. ஆச்சு.. அச்சச்சோ இதென்ன கலாட்டா காலைத் தொட்டு கும்பிடறாளே.. ஆஹா.. இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணா.. டேய்... நீ உனக்கே தெரியாம எதுனா புண்ணியம் பண்ணி இருக்கியாடா?.. அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லையே.. சரி.. மறுபடியும் விதி வலியது..!
ஹாலின் வெளிச்சத்தை கடன் வாங்கி இருப்பதால் இங்க தெளிவா எதுவும் பார்க்க முடியாது.. அதனால கொஞ்சமா கண் திறந்திருப்பது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை.. அட.. என்னடா இவ.. இப்போ எதுக்கு முன்னாடி வரா.. அடேய் உஷாரா இரு.. கழுத்தை நெறிக்க போறா.. இல்லை தலையணை வச்சி மூச்சி முட்ட வச்சி போட்டுத் தள்ளிடுவாளோ.. காலைத் தொட்டு கும்பிடறதை எலலாம் பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கே.. ச்சே..ச்சே.. அப்டி எல்லாம் இருக்காது.. பார்க்க கொஞ்சூண்டு நல்ல புள்ளயாத்தான் இருககா..

பக்கம் வந்துட்டா.. கண்ணை மூடிக்கிறேன்.. என்ன செய்யப் போறா இப்போ..

ஹய்ய்ய்ய்ய்ய்யோ...என்னால நம்பவே முடியலை... உதட்டில் இவ்வளவு அழகான முத்தமா? அடியேய் என் அழகான அப்பாவியே.. காலையிலேயே ரொமான்ஸா.. வேணாம்டி.. இதுக்கு மேல தாங்க மாட்டேன்.. போய்டு.. சொல்லவும் முடியவில்லையே.. இதெல்லாம் திருட்டு தனமா இல்ல ரசிச்சிட்டு இருக்கேன்... அப்பாடா.. போய்ட்டா..

எங்க போறா.. அடடே நேரா சமயலறைக்கு தான் போறா.. இன்னைக்கு என்ன செய்வா.. சிம்பிளா தோசை இட்லின்னு முடிச்சிடுவாளா.. இல்லை.. புருஷனை அசத்த முதல் சமையலே கலக்கலா செய்வாளா?.. டேய்.. இரு..இரு.. கற்பனையில மிதக்காத.. உன் பொண்டாட்டிக்கு மொதல்ல சமையல் தெரியும்னு உனக்கு தெரியுமா? ஓவரா அலட்டிக்காதடா டேய்.. அட ஆமால்ல.. இல்ல.. எதும் தெரியாம எதுக்கு அங்க போகப் போறா.. அட்லீஸ்ட் ஒரு காப்பியாவது போடத் தெரியாதா?

என்னவோ உருட்டறா.. எதையோ தேடறா போல.. என்ன இது.. இந்த நேரத்துல லேசா தூக்கம் வருது.. சரி.. அவ சமைக்கட்டும்.. அலாரம் அடிக்கிறவரை நாம கொஞ்சம் தூங்குவோம்.. அடடா..தூங்க விட மாட்டா போல.. காப்பி வாசம் கமகமன்னு வருதே.. பேஷ் பேஷ் இத இதத் தான் நான் எதிர்பார்த்தேன்.. ஆஹா அடேய் நல்லவனே.. நீ இப்படி அநியாயத்துக்கு குடுத்து வச்சவனா இருக்கியேடா.. நீ கெட்டவன்னு நீயே தான் ஊர் பூராவும் சொல்லிட்டு திரியற.. ஆனா நீ ரொம்ப நல்லவண்டா.. இல்லைனா உனக்கு இப்படி ஒரு பொண்டாட்டி கெடைப்பாளா?.. சரி சரி.. நீயே கண்ணு வைககாத..

இன்னைக்கு ஒரு கப் காப்பி சேர்த்து குடிக்கனும்.. வாசமே இப்படி இருக்கே.. குடிச்சா இன்னும் சுவையா இருக்கும் போல இருக்கே... இதை எப்டி பாராட்டறது.. ஹ்ம்ம்ம்ம்...சரி 2 கப் காப்பி குடிச்சி முடிக்கிற வரைக்கும் எதுனா புதுசா யோசிச்சி பாராட்டலாம்.. அவ காப்பி போட்டு அசத்தற மாதிரி நான் பாராட்டி அசத்திடறேன்...

பக்கம் வந்து எனனை எழுப்பப் போறா.. நானும் ஒன்னும் தெரியாதவன் மாதிரி எந்திரிக்கப் போறேன்..

அட ச்ச.. அதுக்குள்ள இந்த அலாரம் வேற.. ம்ம்ம்.. அலாரம் ஆஃப் பண்ணறேன்..

"என்னங்க இது.. இந்த நேரத்துக்கு போய் அலாரம் வச்சி எந்திரிக்கிறிங்க?"

"அதுவா.. தினமும் 7 மணிக்கு அலாரம் வச்சி பழக்கம் ஆய்டிச்சி கண்ணா..அதான்"

" இனி இந்த நேரத்துல எல்லாம் அலாரம் வைக்காதிங்க.. அப்டி வைக்கிறதா இருந்தா 8 மணிக்கு அலாரம் வைங்க.."

போர்வையை இன்னும் நல்லா இழுத்து போத்திகிட்டா..

Tuesday, 25 November 2008

அவியல் - பரிசல்காரன் கவனிக்க


நம்ம பரிசல்காரர் அவியல் என்ற பெயரில் தவறான தகவலைத் தந்து ஊரை ஏமாற்றுகிறார்... இதோ உண்மையான அவியல்..

தேவையான பொருட்கள்

  • கத்தரிக்காய் 2
  • வாழைக்காய் 2
  • உருளைகிழங்கு 2
  • கேரட் 2
  • பீன்ஸ் 100 கிராம்
  • பூசணிக்காய் 2 பெரிய துண்டுகள்
  • முருங்கக்காய் 3
  • தேங்காய் பாதியளவு
  • புளித்தத் தயிர் 2 கப்
  • பச்சை மிளகாய் 5
  • மஞ்சள் பொடி ½ டேபிள் ஸ்பூன்
  • கடுகு ½ டேபிள் ஸ்பூன்
  • உப்பு தேவைக்கேற்ப ( சூடு சொரணைக்கேற்ப )
செய்முறை :

காய்கறிகள் அனைத்தையும் நன்றாகக் கழுவி 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.( காய்கறிகளை மட்டும்.. கையையும் சேர்த்து அல்ல)..

பிறகு மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்... பின் தேங்காயை துருவி அதனுடன் சிறிதளவு சீரகம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும். சீரகம் சேர்த்தால் நல்ல பசை போன்று அரைக்கமுடியும்.( டிப்ஸ்மா டிப்ஸ்.. )

இப்போது வேக வைத்த காய்கறிகளுடன், அரைத்த தேங்காய் + பச்சை மிளகாய் கலவையை சேர்த்து அதனுடன் புளித்த தயிர் மற்றும் சூடு சொரணைக்கேற்ப உப்பும் சேர்த்து குறைவான வெப்பத்தில் சில நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்.

பின் கடைசியாக சிறிதளவு கடுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பி்லை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்.

....... அவியல் ரெடி.......

பரிசலாரே இது தான் அவியல்.. கண்டதையும் சொல்லி ஊரை எமாற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.. :))

.....எங்களுக்கும் சமையல் தெரியும் ஓய்.. :))

Monday, 24 November 2008

பச்சா பாய் Vs லுச்சா பாய்

1984 Sikh carnage was wrong: Rahul

Amritsar, November 18 Congress general secretary Rahul Gandhi condemned the anti-Sikh violence in the aftermath of Indira Gandhi’s assassination, saying “whatever happened was wrong”.

“The 1984 riots were wrong. I strongly condemn the carnage,” Rahul said at a news conference in response to a question on Operation Bluestar and the riots. “There is no truth that there is hatred among Sikhs against the Congress party. I have travelled a lot and wherever I go and interact with them (Sikhs), I find lots of love for us... When my grandmother lost elections in 1977, I saw with my own eyes many Sikhs assembling by her side at our residence, when many others had left her isolated. We cannot forget all this.”

Rahul said he and his family bore no ill-will against the community of “which the whole country is proud of”.

Rahul reacted to BJP chief Rajnath Singh’s description of him as a “bachcha” in politics. “Yes, I am a bachcha. But then, 70% of the country’s population is bachcha. What kind of message is Rajnath Singh sending?”

In an interview with The Indian Express Editor-in-Chief Shekhar Gupta on NDTV’s Walk the Talk, Rajnath Singh had said, “I would not like to comment on Rahul at all, I consider Rahul a child... Maybe some politicians consider him a rival but as far as I’m concerned he is just like my child.”

இது பச்சா பாய் கதை .... :)

அடுத்து பாருங்க .... லுச்சா பாய் கதை.. :)

Thursday, 20 November 2008

Reversible Specialist Nanthu f/o Nila

இதுல இரண்டாவது பாதியை பின்னாடி ( யாரு பின்னாடியா? அடிங்க! ) இருந்து படிக்கனுமாம்.. நந்துf/oநிலா சொல்றார். :)

Saturday, 15 November 2008

பெண்களூரில் அப்பாரவி

நம் தோழர் செந்தழல் ரவி இன்று முதல் அப்பாரவியாக பதவி உயர்வுப் பெறுகிறார். ஒரு குட்டி தேவதைக்கு அபபா ஆகி இருக்கிறார். இனியாவது நல்ல புத்தியுடன் பொறுப்பாக நடந்துக் கொள்ள ப்ரார்த்திப்போம். :).. தாயும் குட்டிப் பாப்பாவும் நலமாக இருப்பதாக தகவல். குழந்தை ஆரோக்கியமாகவும் எல்லா வளங்களுடனும் வளர வாழ்த்துக்கள்.. :)

Thursday, 13 November 2008

இந்த நாய்ங்கள எல்லாம் அம்மணமாக்கி அடிக்கனும் - Adults Only

சென்னை சட்டக் கல்லூரியில் ஜாதி சண்டை அரங்கேறி இருக்கிறது. அந்த ஜாதி வெறிபிடித்த பரதேசிகளின் செயலை பார்க்கும் போது அவமானமாய் இருந்தது.. இந்த கம்மனாட்டி பசங்களா நாளை சட்டத்திற்கு போராடப் போகிறார்கள். ஜாதித் தலைவர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் அடியாட்களாய் போக வேண்டிய பன்னாடை பரதேசிகள் எல்லாம் சட்டம் பயின்று என்ன மயிறப் புடுங்கப் போகுதுங்க? இதுங்களால ஈடூபாட்டுடன் இந்த படிப்பை படிப்பவர்கள் மீதும் ஒட்டு மொத்தமாய் வெருப்பு வருகிறது. சட்டம் படித்தால் சில நாய்கள் சட்டத்தால் கட்டுபடுத்த முடியாதவர்கள் என்று நினைத்துக் கொள்கின்றன. எதற்கெடுத்தாலும் வன்முறை தான் இவர்களின் வழி. ஜாதி சண்டை போடவா இந்த நாய்களை பெத்து வளர்க்கிறார்கள். இந்த பேமானிகளின் செயல்களை பார்த்து இவர்களை பெற்றவர்கள் எவ்வளவு கலங்கிப் போய் இருப்பார்கள்.. இதுக்காடா உங்களை எலலாம் கடன் வாங்கி கஷ்டப் பட்டு படிக்க வைக்கிறாங்க? இந்தக் கபோதிகள் சாப்பிட போனால் ஹோட்டலில் பணம் கொடுப்பதில்லை.. கேட்டால் வன்முறை.. போலிஸ்காரர்களுடன் எப்போதும் மோதல்.. எந்த பொது விதியையும் கடைபிடிப்பதில்லை.. எப்போதும் ஒரு வெறித்தனம்.. இதுக்காடா சட்டம் படிக்க வரீங்க? ஒவ்வொரு நாயும் கையில் ஆயுதங்களுடன் அடியாட்களை விட கேவலமாக காட்சி அளித்தார்கள்... த்தூ தெறி.. இந்த சொறிநாய்களின் உதவியுடன் தான் நீதி மன்றங்களுக்கு போக வேண்டும் என்பதை நினைக்கையில்.. பேசாமல் தூக்குப் போட்டு தொங்கலாம்..

இந்த வெறிநாய்களை அம்மணமாக்கி அடிபப்தற்கு முன் அப்போது அம்மணமாய் வேடிக்கை பார்த்த காவல் துறை துணிமாட்ட வேண்டும். அங்கே காக்கி சட்டை அணிந்து வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் அம்மாணமகத் தான் தெரிந்தார்கள்.

சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கொடிய ஆயுதங்களுடன்....
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியவர்கள் கையில் லத்தியுடன் அம்மணமாய்..
சந்தோஷம்டா.. ரொம்ப சந்தோஷம்..

( வன்முறையில் ஈடுபடும் சில சொறி நாய்களின் மீதுள்ள நியாயமான கோபம் தான் இந்த பதிவு.. எல்லா சட்ட மாணவர்களையும் சாடுவது நோக்கமல்ல )

கவிதாயினி காயத்ரிக்கும் இலக்கியவாதி சித்தார்த்துகும் கல்யாண வாழ்த்து!

அகில உலக அழுகாச்சிக் கவிதாயினி.. குருந்தொகை உரையாசிரியை.. தொலைந்த தன் பர்ஸை தானே கண்டுபிடித்த தானைத் தலைவி ..போலி முனைவர் காயத்ரிக்கும் ஆலிவுட் முதல் அமிஞ்சிக்கரை வரை அத்தனை கதைகளையும் அலசி ஆராயும் குவைத்தின் மாபெரும் இலக்கியவாதி சித்தார்த்துக்கும் வருகிற டிசம்பர் 4ஆம் தேதி கல்யாணமுங்க.. இந்த இரு இலக்கியவாதிகளும் அனைத்து வளங்களும் பெற்று என்றும் சந்தோஷமாய் வாழ வாழ்த்திடுவோமுங்க.

திருமண நாள் : 04.12.2008, வியாழக் கிழமை.
இடம் : சக்தி மஹால், பெருந்துறை ரோடு, ஈரோடு.

வரவேற்பு : 08.12.2008 திங்கட்கிழமை.
இடம் : Yes Yes ராயல் மஹால், திருமங்கலம், சென்னை.

Wednesday, 12 November 2008

டரியல் v1.11.2


தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போக பிடிக்காம இங்கயே இருக்கிறதுன்னு முடிவு பண்ணி இருந்தேன். ஆனால் தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு அக்கா அழைத்து நன்றாக அர்ச்சனை செய்ததாலும் 2 அக்கா குடும்பங்கள் அண்ணன் மற்றும் சித்தப்பா குடும்பம் எல்லாம் ஊருக்கு வந்திருப்பதால் எங்க வீட்டு செல்லங்களை எல்லாம் பார்த்து சில மாதங்கள்/ஆண்டுகள் ஆனதாலும்.. நாமதான் அவர்கள் வீட்டிற்கு போறதில்ல.. அவர்கள் வரும் போதும் பார்க்காமல்இருப்ப்து சரியல்ல என்று நினைத்ததாலும் தீபாவளி அன்று காலை ஊருக்கு கிளம்பி மாலையே கோவை வந்துவிட்டேன். வரும் போது எங்கம்மா பாதி பை நிரப்பி சில பல பலகாரங்கள் வச்சிட்டாங்க.. அதிரசம், இனிப்பு பூந்தி போன்றவை.... அவ்வளவையும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.. மொரப்பூருக்கு அடுத்த ரயில் நிலையமான பொம்மிடியில் தலை தீபாவளி முடித்துவிட்டு என் நண்பன் ரயில் ஏறினான். நான் முன்பதிவு செய்யாமல் அமர்ந்த இடம் தான் அவன் முன் பதிவு செய்து வைத்திருந்த இடம்..:). எதிரில் இருந்த சீட் காலியாக இருந்ததால் அவர்களை அங்கே உட்கார சொல்லிவிட்டேன். நண்பனின் மனைவி எங்கள் பள்ளி ஜூனியர்.அவர்கள் வீட்டில் குடுத்துவிட்ட பலகாரங்களை எடுத்து அண்ணா இதை வச்சிக்கோங்க.. அதை வச்சிக்கோங்கன்னு ஒரே அன்புத் தொல்லை.. எல்லாத்தையும் உன் ஊட்டுக்காரனுக்கு குடு .. ஆளை விடு என்று தப்பித்தேன்.சிலதை என் பையில் போட பார்த்தார்கள். ஹிஹி.. விடுவோமா.. நான் கொண்டு வந்ததை எல்லாம் அப்படியே சிந்தாமல் சிதறாமல் அவர்கள் பையில் திணித்துவிட்டு எஸ் ஆகிவிட்டேன்.


^^^^^

என் அக்கா ஒரு அறுந்த வாலை பெத்து வைத்திருக்கிறாள்.2 வயது தான் ஆகிறது. இந்த காலத்து குழந்தைகளுக்கு யார் தான் இப்படி பேசக் கத்துக் குடுத்தாங்களோ.. வாய் ஓயாம பேசிட்டே இருக்கா. நான் சின்ன பையனா இருந்தப்போ என்னை சிரிக்க வைக்கவே பந்தயம் கட்டுவார்களாம். இப்போவும் ஊருக்கு போனா " ரெண்டு வார்த்தை பேசித்தான் பாருடா.. ஒன்னும் கொறஞ்சிடாது" என்று பெரியவங்க பலர் நக்கல் அடிப்பாங்க. "ஊர்ல" அவ்ளோ அடக்க ஒடுக்கம்.:).. ஆனா இப்போ இருக்கிற குட்டீஸ் வெளுத்து வாங்கறாங்க. பார்க்கும் எதற்கும் விளக்கம் கேட்கிறர்கள். இது என்ன ?அது என்ன? இது ஏன் இப்டி இருக்கு? அது ஏன் அப்டி இருக்கு? அப்பப்பா.. என்னா ஒரு சந்தேகம்.. என்னா ஒரு அறியும் ஆர்வம்?.. எல்லாம் சரி தான் .. அதை எல்லாம் என் அக்கா மகள் எப்படி என்னைக் கேட்கலாம்... அவளுக்கு விளக்கம் சொல்ல எனக்கு தெரியவில்லை என்பதையும் அன்று அவள் தெரிந்துக் கொண்டிருப்பாள். பிறகு அவள் அம்மாவிடம் கேட்டிருப்பாள்..
“ஏம்மா இப்படி இருக்கான்
உன் தம்பி
ஒன்னுமே தெரியாமல்....

அவளுக்கு விளக்கம்
தேவைப்படும் பட்டியலில்
இப்போதும் நானும்...”
..... அவள் என்னை அன்பொழுக அழைப்பது.. “ டேய் சஞ்சய்” :(

^^^^^

என்னடா இது வெங்காய வாழ்க்கை நகரத்தில்.. காசை தவிர பெறுவதற்கு வேறு ஒன்றுமே இல்லையா?.. கிராமத்தில் புதியதாய் ஒருவன் குடி புகுந்தால் பெரிசோ சிறுசோ நடத்தரமோ தானே வழியப் போய் அந்த புதிவனிடம் பேச்சுக் குடுப்பார்கள். சில நிமிடங்களில் அவன் அத்தனை விவரங்களும் பிரதி எடுக்கப் பட்டிருக்கும்.. அடுத்த சில நாட்களில் அந்தப் புதியவன் ஊரின் பழையவர்களில் ஒருவனாக நடத்தப் படுவான்/நடந்துக் கொள்வான். பாத்திர பண்டங்களும் பரிமாற ஆரம்பித்திருக்கும்...ஆனால் இங்கே நகரத்தில்...நான் இந்த தெருவில் குடிபுகுந்து ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. எங்க வீட்டு ஓனரைத் தவிர வேறு ஒரு பயலையும் எனக்குத் தெரியாது.வீட்டு ஓனர், வாடகை வாங்கியாகனுமே... இந்த காலிப்பையன் தன் வீட்டை ஒழுங்காய் பராமறிக்கிறானா என்று கண்காணித்தாகனுமே... நான் எவ்வளவு சினேகமாய் பார்த்தாலும் எல்லோரும் ஒருவித இறுக்கத்தோடே கடந்து செல்கிறார்கள்.. என் எதிர் வீட்டுக் குட்டி பாப்பாவைத் தவிர... அவள் மட்டுமே பார்க்கும் போதெல்லாம் புன்னகைக்கிறாள் ரொம்பவே அழகாக....

”எப்போதும்
மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும்...
எனக்கு மட்டும்
வெறிச்சோடியே தெரிகிறது
எங்கள் தெரு....”

டரியல் SMS :-
" நடிகர் விவேக் மு.க. ஸ்டாலின்னு போன் செய்கிறார்.
ஸ்டாலின் : ஹலோ..
விவேக் : முக.ஸ்டாலினா?
ஸ்டாலின் : ஆமாங்க..
விவேக் : சார் ஒரு டவுட்..
ஸ்டாலின் : கேளுங்க..
விவேக் : நீங்க வெறும் முக ஸ்டாலினா இல்ல நாக்க முக்க ஸ்டாலினா? “

டரியல் டயலாக் by Bill Gates:-
"Your most unhappy customers are your greatest source of learning.."

டரியல் of the week :-
கடைசி வரை பார்க்கவும்..

Tuesday, 11 November 2008

டேய்... பர்ஃபார்மன்ஸ் பண்ண உடுங்கடா...

ஈரோடு முதல் ஹோசூர் வரையிலான 6 மாவட்டங்களில் எங்கள் துறையில் அனைவருக்கும் நன்கு தெரிந்த நிறுவனமாக இருந்தாலும் கோவையைப் பொறுத்த வரையில் நாங்கள் அப்போது புதிது. அந்த மாவட்டங்களில் ராஜா என்பதை விட மகராஜா போல் தான் எங்களுக்கு மரியாதை இருக்கும். எந்த நிறுவனமாக இருந்தாலும் விநியோகம் செய்ய எங்களை அணுகிவிட்டு தான் பிறரை பார்ப்பார்கள். அந்த மிதப்பிலேயே இருந்த எங்களை ஒரு நிறுவனம் கோவையில் வியாபாரம் ஆரம்பிக்க வற்புறுத்தியது. அவர்கள் நச்சரிப்பாலும் ஈரோட்டு சாம்ராஜ்ய மிதப்பிலும் எதோ ஒரு தைரியத்தில் ஒரு இளிச்சவாயனின் தலைமையில் கோவையிலும் கால் பதித்தோம்..

அந்த இளிச்சவாயன் அதற்கு முன் இரு முறை மட்டுமே கோவை வந்திருக்கிறான். ஒரு முறை ஒரு நிறுவன முகவர்கள் சந்திப்பிற்கும் மற்றொரு முறை ஒருவர் திருமணத்திற்கும் மட்டுமே. ஆகவே அவனுக்கு கோவையில் அப்போது கிழக்கு மேற்கு கூட தெரியாது. ஆனாலும் ஒரு மாதம் பெரும் அலைச்சலுக்கு பின் அலுவலகமும் , சேமிப்புக் கிடங்கும் முடிவு செய்து குடி புகுந்தாயிற்று. ( அந்த நாட்கள் அனுபவத்தை 10 பதிவா போடலாம்..:) )

அடுத்து தான் ஆரம்பிச்சது சீனே.. :)

முதல் வேலையாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் டீலர்களை வளைச்சிப் போடனும். நாம் இங்கு புதிது என்பதாலும் நாங்கள் ஒப்பந்தம் போட்ட நிறுவனத் தயாரிப்புகளை அதற்கு முன் கோவை ஏரியாவில் விநியோகித்தவர்கள் சரியாக செயல்படாததாலும் எங்களுக்கு கடும் சவால்கள் காத்திருந்தது. சிறு மற்றும் நடுத்தர டீலர்கள் எங்கள் ஈரோட்டு புராணத்தை கேட்டதும் கொஞ்சம் பவ்யமாக நடந்துக் கொள்வார்கள். ஆனால் இந்த பெரிய டீலர்கள் இருக்கிறார்களே முதல் ஒரு மாதம் என்னை சாவடிச்சிட்டாங்க..

அந்த கால்ங்களில் பெரும்பாலான டீலர்களிடம் நான் பட்ட பாடு...

ஒவ்வொரு முறையும் வழக்கமான சம்பிரதாயமான பேச்சுகளுக்கு பின் ஆரம்பிப்பேன்..

[பச்ச கலரு - நானு
சேப்பு கலரு - டீலரு
கருப்பு கலரு - கடை ஸ்டாப் அல்லது கஸ்டமர்]


“இந்த மாடல் மத்த ப்ராண்ட் விட ரொம்பவே பெட்டர் சார்”

ம்ம்ம்... வேர்ல்பூல்ல இதே ரேஞ்ச்ல ஒன்னு இருக்கு

ஆமாம் சார்.. ஆனா அதுல ஹெல்த்கார்ட் இருக்காது.. அதும் இல்லாம

ஏம்ப்பா அந்த கஸ்டமர்க்கு ஓனிடால ப்ளாக் 200 காட்டு

ம்ம்.. சொல்லுங்க..”

அதை விட இதுல...”

“சார் அந்த கஸ்டமர் எல்ஜில சவுண்ட்மாஸ்டர் கேக்கறார்.. இப்போ அது நம்மகிட்ட ஸ்டாக் இல்லை”

டீலர் நம்ம ப்ராடக்ட் கேட்டலாக் எடுத்து பார்ப்பார்..

சார் அதுல லெஃப்ட் சைட்ல இருக்கு பாருங்க...

ப்ரகாஷ் சவுண்ட்மாஸ்டர் ஸ்டாக் இருக்கா.. அர்ஜெண்டா 5 செட் வேணுமே” - இது போன்ல..
பேசி முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணனும்...
பேசி முடிச்சிட்டார்..

ஆக்சுவலா இந்த மாடல் தான் இருக்கிறதுலயே ஃபாஸ்ட் மூ....

ஏம்ப்பா.. சவுண்ட் மாஸ்டர் நாளைக்குத் தான் வரும்.. சாம்சங்க்ல கே44 காட்டு..”

ஃபாஸ்ட் மூவிங் சார்..”

சார்.. உங்களுக்கு சவுண்ட் நல்லா வேணும்னா சான்சுய்ல ஹார்ட்ராக் பாருங்க.. அருமையா இருக்கும்.. வெலையும் கம்மி தான்..” ஒரு கஸ்டமரிடம்..

ம்ம்ம்.. என்ன சொன்னிங்க சஞ்சய்..?

வாஷிங் மெஷின்ல நம்மள்து ஃபைபர் ட்ரம் சார்.. மத்த ப்ராண்ட் மாதிரி ஸ்டீல்.....”

ஏம்ப்பா .. ஏன் அந்த ஃப்ரிட்ஜ் பார்த்த கஸ்டமர் வெளிய போறாங்க..?

“ சார் அவங்க வாங்கற மாதிரி தெரியலைங்க.. சும்மா வெலை விசாரிச்சிட்டு இருக்காங்க..”

அப்புறம் சஞ்சய்.. உங்க ப்ராண்ட்டுக்கு அவ்வளவா விளம்பரம் இல்லையே.. நாம் என்ன தான் கஸ்டமருக்கு எதுத்து சொன்னாலும் அவங்க கேக்கறது.........”

“ சொல்லுங்க.. என்ன வேணும்...”

“ ஏனுங்க.. போன வாரம் டிவி எடுத்துட்டு போனோம்.. புள்ளி புள்ளியா வருதுங்களே...”

கேபிள் பிரச்சனையா இருக்கும்.. பாருங்க..”

“ இல்லீங்க .. நாங்க டிஷ் ஆண்டனா போட்டிருக்கோம்..”

ஏம்பா குமாரு.. இவர் கிட்ட அட்ரஸ் வாங்கி வச்சிக்கோ.. அந்த கம்பனி சர்வீஸ் செண்டருக்கு போன் பண்ணி கம்ப்ளைண்ட் புக் பண்ணிடு..”

சர்விஸ் செண்டர்ல இருந்து ஆளுங்க வருவாங்க.. போய்ட்டு வாங்க...”

“ இவங்க டிஷ் சரியா ஃபிட் பண்ணி இருக்க மாட்டாங்க.. இருந்தாலும் டிவி தான் பிரச்சனைன்னு வந்துடுவாங்க.. என்ன பன்றது பாருங்க

கஸ்டமர் சாதாரனமா விட்டாலும் பக்கத்து வீட்டுக்காரன் வந்து பயமுறுத்துவான் சார்..

அது தான் இப்போ பெரிய பிரச்ச.....

“ ஏனுங்க.. அந்த கருப்புகலர் டிவி பாத்தேனுங்க.. வெல ரொம்ப ஜாஸ்தியா இருக்குதுங்களே.. மத்த கடைல எல்லாம் கம்மியா சொல்றாங்க...”- எனக்கு இடதோ வலதோ ஒருத்தன்..

அவரை சமாளித்து அனுப்பறார்..
இந்த மாடல்ல மட்டும் 5 செட் அனுப்பறேன் சார்.. அது எப்படி போகுதுனு பாருங்க.. அப்புறம் இன்னும் ஜாஸ்தி பண்ணலாம்.. 2 செட் போச்சின்னாலே உங்களுக்கும் ஒரு கான்ஃபிடண்ட் வரு........

ஹலோ.... ஆங்.. சொல்லுங்க சார்.. இல்லைங்க இப்போ எதும் வேணாம்.. இல்லைங்க.. சேல்ஸ் ரொம்ப டல்லா இருக்கு..
பேசி முடிச்சிட்டார்...

சொல்லுங்க சார். ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிங்கன்னா நானும் அப்டியே கெலம்பிடுவேன்.. சார் வேற ரொம்ப பிசியா இருக்.....

“சார்.. சர்வீஸ் செண்டர்ல இருந்து கால் பண்ணாங்க.. அந்த வாப்ப்பாறை கஸ்டமர்து பிக்சர் ட்யூப் கம்ப்ளைண்டாம்... வாரண்டிமுடிஞ்சி போச்சாம்.. ஃப்ரியா மாத்த முடியாதுன்னு சொல்றாங்க....”

அந்த 5 மட்டும் அனுப்ப.....

“ஏனுங்க.. ஒரு மாசம் தான் ட்யூ கட்டலை.. அதுக்கே.......

............டேய்........ பர்ஃபார்மன்ஸ் பண்ண உடுங்கடா.......... :(

..... இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சி ஒரு மாசத்துல கிட்டத் தட்ட எல்லா டீலர்கிட்டயும் ஆர்டர் எடுத்து எல்லாக் கடைகள்லயும் இடம் புடிச்சாச்சி.. அதை பார்த்த சாம்சங் நிறுவனம் அப்போ இருந்த டிஸ்ட்ரிப்யூட்டர் கிட்ட இருந்து பாதி மாடல்ஸ் பிரிச்சி எங்களுக்கு குடுத்துட்டாங்க... :) ..... இப்போல்லாம் கால் மேல கால் போட்டு தானே டீலர்ஸ் கிட்ட பேசுவோம்.. அதும் சில லேட் பேமண்ட் டீலர்ஸ் கிட்ட எல்லாம் ஒரே தாதா எஃபக்ட் தான்...:))

Saturday, 8 November 2008

டரியல் v1.11.1

புதுகை தென்றல் அக்கா ஒரு வருடத்தில் 250 பதிவுகள் போட்டிருக்கிறார். கிட்டத் தட்ட தினம் ஒரு பதிவு. ஆனால் அதற்கெல்லாம் தொடர்ந்து பதிவர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருப்பது ஆச்சர்யம் தான். காரணம் ஹஸ்பண்டாலஜி, மாண்டிசோரி, சிறுகதைகள், வாழ்க்கை அனுபவங்கள், கோவில் தரிசனங்கள் என எல்லாவற்றையும் ஜல்லி அடிக்காமல் சுருக்கமாக அழகாக அசால்ட்டாக எழுதி விடுகிறார். படிக்கும்போது நமக்கு சோர்வாய் தெரிவதில்லை. இது தான் அக்காவின் பலம் என நினைக்கிறென். வாழ்த்துக்கள் அக்கா.. இன்னும் நிறைய ஸ்கோர் பண்ணுங்க. :)

^^^^^

கன்னாபின்னாவென்று உடல் எடைக் கூடிக் கொண்டு செல்வதால் இரவில் உணவை தவிர்ப்பது என்று முடிவு செய்து சில வரங்களாக கடைபிடிக்கிறேன். முழுமையாக தவிர்த்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் வரும் என்பதால் பழங்கள் சாப்பிடுகிறேன். ஒரு நாள் இரவு தொலைபேசிய "விவரமான" பதிவர் ஒருவர் என் பழ மெனுவில் சேர்க்க வெண்டியவை மற்றும் நீக்க வேண்டியவை பற்றி உபயோகமான டிப்ஸ் குடுத்தார். அதோடு விட்டிருக்கலாம்.. பேரிச்சம் பழத்தை தனியாக சாப்பிடுவதை விட.......
ஓவர் டூ அந்த விவரமான பதிவர்.... :)
" வளைகுடா நாடுகளில் கொட்டை இல்லாத பேரிச்சம் பழத்தை பாலில் கலந்து அதை நன்றாக அரைத்து அதை நன்றாக காய்ச்சி பிறகு மிதமான சூட்டிற்கு கொண்டுவந்து அதை முதலிரவுக்கு செல்லும் மணமகனுக்கு கொடுப்பார்களாம். அதைக் குடித்ததும் அந்த மணமகனுக்கு ”பல குதிரைகள்” பலம் வந்துவிடுமாம்." :)).. தனியா இருக்கிற ஒரு பையனிடம் சொல்லி இப்படியா உசுப்பேத்தறது.. :( ... இது நம்ம ஊர் சிட்டுக் குருவி லேகியத்தைப் போல் இருக்குமா எனத் தெரியவில்லை. :)).. அப்போ தான் தெரிஞ்சது இவர் விவரமானவர் மட்டுமில்ல.. விவகாரமானவரும் கூட என்று.. :))

^^^^^

தமிழ் தொலைக்காட்சிகளில் ஓரளவுக்கு சுமாரான நிகழ்ச்சிகளை விஜய் டிவி வழங்கியது. மிகவும் விரும்பி பார்க்கும் ஒரே சேனல் அதுவாகத் தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அந்த சேனலை பார்க்கவே எரிச்சலாய் இருக்கிறது. எப்போது பார்த்தாலும் ஏர்டெல் சூப்பர் சிங்கரும் அதன் நிகழ்வுகள், ஜோடி நெ.1 அதன் நிகழ்வுகள் அடுத்த பிரபுதேவா அதன் நிகழ்வுகள் அல்லது கனாக்காணும் காலங்கள், கலக்கப் போவது யாரு போன்றவைகளின் எண்ணிலடங்கா மறு ஒளிபரப்புகள். என்னாச்சி இந்த சேனலுக்கு? வழக்கம் போல் தாய்க் கழகமான ஸ்டாரின் நிகழ்ச்சிகளில் புதியதாக எதையாவது இறக்குமதி செய்யலாமே..

^^^^^

நவம்பர் ஏழாம் தேதி எங்க தலைவரை வாழ்த்தி உலா வந்த ஒரு குறுஞ்செய்தி :
”பிறந்த நாள் என்றால், அப்போது என்ன வயதோ அந்த எடையில் கேக் வெட்டி..பெரிய கட் அவுட் வச்சி அதுக்கு அவங்களே பாலபிஷேகம் பண்ணி.. செய்தித் தாள்கள்ல 3 பக்கங்களுக்கு வாழ்த்து செய்தி போடவச்சி... இன்னும் பல வெட்டி சீன் போடும் பிரபலங்களுக்கு மத்தியில்..ஒரு சகாப்தம்.. ஒரு மன்னன்.. இலங்கைத் தமிழர்களுக்காக இன்று தன் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் இன்றைய தினத்தை அவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சொன்ன எங்கள் உலக நாயகனே உண்மையாகவே,
உலகம் எங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு..
உன்னைப் பெற்றதில்
பெருமைக் கொள்ளுது நாடு....
உலக நாயகன்.. உலக சூப்பர் ஸ்டார் டாக்டர்.கமலஹாசன் அவர்களே வாழ்க வளமுடன். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் தலைவா.

^^^^^

"Its none of my business what you think of me" என்பதை கடைபிடித்தாலும் தேவை இல்லாமல் யாரையும் முகம் சுழிக்க வைக்க வேண்டாம் எனக் கருதுகிறேன். இந்த வீக்கெண்ட் சமாச்சாரம் நம்மைப் பற்றி "மேலும்" தவறான எண்ணத்தை தோற்றுவிக்கும் என்று நினைத்து வீக்கெண்ட் படங்களைத் தவிர்க்கலாமா என யோசிக்கிறேன்.. என் குழப்பத்தை தீர்த்து வைக்கவும்.. :(

^^^^^

டரியல் Of the Week...
யாராவது சிரிச்சிங்க.. கொன்னுடுவேன்..


நான் கஷ்டப்பட்டு ஞாபகப் படுத்தி எழுதின இந்தப் பதிவை ஏன் யாரும் சரியா கண்டுக்கலை? :(

Friday, 7 November 2008

யாரிந்த பிரபலப் பதிவர்?

சில ஆண்டுகளுக்கு முன்....
கொச்சினில் ஒரு நட்சத்திர விடுதியின் அறைகள் சிலருக்கு பிரதியேகமாக புக் செய்யப்பட்டது. அதில் சில தொழிலதிபர்களும் ஒரு நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகளும் பல முகவர்களும் கூடி கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இரவு விருந்து ஒரு கூரை வேய்ந்த நாலாபுறமும் திறந்த ஒரு பெரிய மீட்டிங்ஹாலில். அதற்கான எற்பாடுகள் கன ஜோராக நடைபெறுகிறது.பலவித வகையான "பானங்கள்" தயார் நிலையில்....

விருந்து ஆரம்பிக்கிறது....

வோட்கா குடிக்க விரும்புகிறார். வழக்கம் போல சைட் டிஷ்க்காக சில பழ வகைகளையும் காரவகைகளையும் மாமிசத் துண்டுகளையும் அருகில் வைத்துக் கொள்கிறார். அப்போது அங்கிருந்த அப்போது அந்த தொழிலதிபர்களில் ஒருவர் கூரைவேய்ந்த ஹாலும் வெளியில் ச்சோவென பெய்யும் மழையும் கொடுத்த அற்புத உணர்வால்ஒருவர் புது வித சைட் டிஷ்ஷை அறிமுகப் படுத்துகிறார்.

ஹிஹி.. எலுமிச்சைப் பழம்தான் அது. எலுமிச்சை பழத்தை அறுத்து அதை பிழிந்து அதன் சாற்றை கையில் பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் மணிக்கட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் விட்டுக் கொண்டு அதில் தூள் உப்பை சிறிது தூவிக்கொள்ள வெண்டும். அதை நக்கியவாறே வோட்காவை குடிக்க வேண்டும்.(டெக்கீலா சைட் டிஷ்ஷாம் அது. போக்கிரி படத்துல "என் செல்ல பேரு ஆப்பிள்" பாட்டுல ப்ரகாஷ் ராஜ் செய்வாரே அப்படி) அந்த குறிப்பிட்ட தொழிலதிபர் மெதுவாக வோட்காவை சுவைக்கிறார் வேறு எந்த சைட் டிஷ்களையும் அலட்சியப்படுத்தி தன் மணிக்கட்டில் உள்ள எலுமிச்சைசாறு+உப்பை மட்டும் நக்கியவாறே. அந்த சைட் டிஷ் போதாதென்று ஒரு மூத்த உயர் அதிகாரி வெளிநாட்டில் தனக்கு ஒரு ரஷ்யப் பெண்ணுடன் எற்பட்ட குஜால் அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக முகபாவணைகளுடன் விவரிக்கிறார். அந்த தொழிலதிபருக்கு ரெட்டை சைட் டிஷ் தந்த உற்சாக மிகுதியால் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அப்போது ஒரு ஃபுல் பாட்டில் வோட்காவைத் தன்னந்தனியாக காலி செய்கிறார். விருந்து களை கட்டுகிறது. வெளியில் பெய்யும் மழையை போலவே..

இதோடு நிறுத்தி இருந்தால் பரவா இல்லை. பிறகுதான் கச்சேரியே ஆரம்பிக்கிறது. அந்த தொழிலதிபருக்குள் நம் வால்பையனை விட அதிக ஸ்ப்லிட் பர்சனாலிட்டி இருக்கிறது என்பதை நிரூபித்த நாள் அது.

திடீரென்று கதா காலட்சேபம் நடத்தினார். கொஞ்ச நேரத்தில் மெனேஜ்மெண்ட் குருவாக மாறி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.அதைத் தொடர்ந்து மைக் மேடை எதுவும் இல்லாமலே பெரும் அரசியல் சொற்பொழிவு ஆத்தினார்.(நம்ம வெண்பூ காப்பி ஆத்துவது போல) இன்னும் பலவகையான உரைகளை நிகழ்த்தினார்.. உரைகளை நிகழ்த்தினார் என்பதைவிட பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்று தான் சொல்ல வேண்டும்.
அங்கே குழுமி இருந்த முகவர்கள் அனைவரும் வாயப் பிளந்துக் கொண்டு இவர் உரைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோர் தன்னிலை மறந்திருந்தனர் என்பதால் மறுநாள் அவர்களுக்கு எல்லாம் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக நினைவிருக்க வாய்ப்பில்லை.அந்த உரையால் சிலருக்கு அதுவரை ஏற்றிய அத்தனையும் இறங்கிபோனதும் நடந்தது.அவர்களைப் பற்றி நமக்கு கவலையும் இல்லை.

கவனிக்க : அங்கே சிலர் உற்சாகபானம் எதுவும் ஏற்றிக்கொள்ளாமல் கொஞ்சம் ஆர்வத்துடனும் கொஞ்சம் "கடுப்புடனும்" கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

சுற்றுப்பயணம் சுபமாக முடிந்து அனைவரும் வீடுவந்து சேர்ந்தார்கள்.
-------------^^^^----------------^^^^----------------^^^^---------

கிட்டத் தட்ட ஓராண்டு உருண்டோடி அல்லது தவழ்ந்தோடி விட்டது. அந்த தொழிலதிபருக்கு தீவிரமாக வீட்டில் பெண் பார்ப்பதாக தெரியவில்லை .. ஆதலால் தனக்கு தானே திட்டப் படி தானே பெண் பார்க்க முடிவு செய்து அவரின் ஜாதகம் நாலாப்புறங்களிலும் சிதறி ஓடுகிறது. ஒரு " ஆஸ்தான"தரக ரிடமிருந்து அழைப்பு வருகிறது. அவரிடம் ஜாதகம் மட்டுமே இருந்தது. போட்டோ தரவில்லை. அதனால் அந்த ஆஸ்து "ஒருத்தர் இங்க சிக்கிட்டார்... உடனே போட்டோ கொண்டுவாங்க.. அப்டியே ஒரே அமுக்கா அமுக்கிடலாம்" என்று சொல்கிறார்..

உடனே ஒரு பொடியன் அந்த தொழிலதிபரின் போட்டோவை எடுத்துக் கொண்டு அந்த ஆஸ்துவின் அலுவலகம் செல்கிறான். அப்போது அங்கே ஆஸ்துவும் அமுக்க வேண்டிய பார்ட்டியும் அமர்ந்து எதோ பேசிகொண்டிருந்தார்கள். அந்தப் பொடியன் தொழில்ஸின் போட்டோவை ஆஸ்துவிடம் கொடுக்கிறான். அதை ஆஸ்து அந்த பார்ட்டியிடம் தருகிறார். பிறகு "தொழில்பக்தி"யாலும் உற்சாக மிகுதியாலும் 2 தரப்பிலும் நல்லப் பெயர் பெறவும் அவர்கள் மூலம் மேலும் பல கஸ்டமர்களை அள்ளவும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல் அள்ளிவிடுகிறார்...

புகைப் படத்தை பார்த்த அந்த பார்ட்டி, இந்தப் பொடியனைப் பார்த்து லேசான புன்னகை பூக்கிறார். சரி இதெல்லாம் நாகரிகம் தானே என்று அந்தப் பொடியனும் பதிலுக்கு லைட்டா சிரிச்சி வைக்கிறான். திடீரென்று மண்டைக்குள் மங்கலாக பல்ப் எரிய ஆரம்பிக்கிறது.. இவரை எங்கயோ பார்த்திருப்பது போல் இந்த பொடியனுக்குத் தோன்றுகிறது. ஆனால் எங்கு என்றுதான் தெரியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் கடைசி வரை அந்த பல்பு மங்கலாகவே எரிந்துத் தொலைத்தது... சரி இந்த ஊரில் தான குப்பைக் கொட்டிட்டு இருக்கிறோம். எங்காவது பார்த்திருக்கலாம் என்று பொடியன் லேசில் அல்லது லூசில் விட்டுவிடுகிறான்.

நவ் ஓவர் டூ ஆஸ்து....
" மாப்ள தங்கமானவருங்க... பெரிய பெரிய பிச்னஸ் எலலாம் செய்றாங்க.. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை.. நல்ல குடும்பம்... ரொம்ப அமைதியான சுபாவம்... சின்ன வயசுல இருந்து நமக்கு நல்லா தெரிஞ்சவருங்க ( சொனனதுலையே அண்டப் புளுகு ஆகாசப் புளுகு இது தான் ).. இங்க தான் _____ ரோட்ல ஆபிஸ்... சூதுவாது தெரியாத நல்ல பையனுங்க... செட்டு சேர்ந்துட்டு யார் கூடவும் சுத்தமாட்டாப்ள... தொழில், குடும்பம்னு ரொம்ப நல்ல டைப்பு.. பொறுப்பான பையனுங்க... இந்த மாதிரி எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத பையனை பாக்கறது இந்த காலத்துல கஷ்டம் இல்லீங்களா"
இதே ரேஞ்சில அள்ளிக் கொட்டிட்டு இருந்ததால அதுக்கு மெல சிரிப்பை அடக்க முடியாத அந்த பொடியன், நான் கெள்ம்புரேனுங்க என்று சொல்லிவிட்டு ஜூட் விடுகிறான்... அந்த பார்ட்டி கடைசி வரை ஆஸ்துவில் அள்ளிக் கொட்டல்களுகெல்லாம் முகத்தில் எந்த மாற்றத்தையும் காண்பிக்கவில்லை... சரி எல்லாவற்றையும் உன்னிப்பா கேக்கறார் போல.. அல்லது மாப்பிள்ளை படத்தை பார்த்து தன் அக்கா மகளுக்கு சரியான வரன் என்று நினைத்து அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கிறார் என பொடியன் நினைத்துவிட்டான்.

அலுவலகம் வந்து அந்த தொழிலதிபர் அண்ட் கோவிடம் நடந்தவற்றை எல்லாம் சொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறான். அப்போது இன்னொரு சக தொழிலதிபர் உள்ளே நுழைகிறார். மறுபடியும் முதலிலிருந்து எல்லாவற்றையும் கேட்டு ரசித்த அவர் அந்த பார்ட்டியின் விவரத்தை கேட்கிறார். அந்தப் பொடியனும் தொழில்ஸ் அண்ட் கோவும் பார்ட்டியைப் பற்றி சொல்கிறார்கள்.

அட இவரு நம்ம ____ டயர் கம்பனி ஓனரு.... _____ மாமா கூட(இவர் ஒரு டீலர்) கொச்சின் வந்தாரில்ல.. அட நீங்க கூட ஓவர் அலும்பு பண்ணிங்களே மாமா.. உங்களுக்கு டெக்கீலா டெக்னிக் சைட் டிஷ் சொல்லி கொடுத்தாரே.வோட்காவுக்கு லெமன்காடி+சோடாதான் கரெக்ட் லிம்கா வேனாம்ன்னு சொன்னாரே அவர் தான் இவர்..

சிலர் சாவை உணர்ந்ததை பத்தி எல்லாம் சொல்லி இருப்பாங்க.. ஆனா பேயறைஞ்ச மாதிரினு சொல்றதை யாராவது உணர்ந்திருக்கிங்களா.. அன்னைக்கு அந்த பொடியன் அதை பார்த்தான்.. :))

யாருன்னு கேள்வி பட்ட தொழில்ஸ்கே பேயறஞ்ச மாதிரி ஆச்சின்னா.. அள்ளி விட்டுட்டு இருந்த அந்த ஆஸ்துவின் நிலைமை? :(

எதோ அந்த ஆஸ்த்துக்கு அந்த பார்ட்டியால படு பயங்கர அடி உதை விழுந்திருக்கும் என்று தானே நினைக்கிறிங்க.. அதான் இல்ல.. இங்க தான் செம ட்விஸ்டே இருக்கு.. :))

அந்த பார்ட்டிக்கு அவங்க அக்கா குடும்பத்து மேல என்ன பகையோ என்ன கர்மமோ.. எத்தனை நாளா ரூம் போட்டு யோசிச்சாரோ அவங்களை பழிவாங்க.... இந்த மாப்பிள்ளை ஒகே என்று சொல்லிட்டார்.. :)) ஆனா பாருங்க.. முன்னால சூது ஜெயிச்சாலும் பின்னாலயே வந்து தர்மம் அதை வெல்லும்னு நம்ம குசும்பன் அவர் கூட நாலாவது வரைக்கும் படிச்ச திவ்யா பிரபந்தம் கிட்ட சொன்னா மாதிரி அந்த பொண்ணு வேற ஒரு நல்ல பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. :))

அப்பாலிக்கா வேற ஒரு அப்பாவி போட்டோவை மெனக்கெட்டு ஸ்கேன் பண்ணி இந்த தொழில்ஸ்க்கு அந்தப் பொடியன் மெயில் அனுப்பி , அந்த அப்பாவி வாழ்க்கை வீணாக காரணமா இருந்ததெல்லாம் ஒரு தனிப் பதிவா போட வெண்டிய சமாச்சாரம்.. :(

டிச்சிக்கி 1 : இவர் ஒரு பிரபல பதிவர்.. இவர் யார் என உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களும் இவரைப் பற்றி இது போல் ஒரு பதிவை போட்டு புண்ணியம் தேடிக்கொள்ள்லாம் ... :))
டிச்சிக்கி 2 : இந்த பிரபலப் பதிவரின் புகழை பரப்பும் அரியதொரு சேவையில் தங்களை அற்பணித்துக் கொள்ள விரும்புவர்கள் இங்கே முன் பதிவு செய்துக் கொள்ளவும்...

நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?

Tuesday, 4 November 2008

இலங்கை விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு - No kummi Please


இலங்கை பிரச்சனையில் பெரும்பாலானோர் ஒன்றும் புரியாமலே உணர்ச்சிவசப் பட்டுக் கொண்டு வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறோம்.மலையகம் பற்றி நமக்கு சில விஷயங்களில் தெளிவை கொடுக்கும் விதத்தில் இந்த பேட்டி அமைந்திருக்கிறது.  நண்பர் நிர்ஷனின் வலைப்பூவில் நண்பர் கல்வெட்டு சில நல்ல கேள்விகளை  கேட்டிருக்கிறார். அதற்கு திரு.திலகர் விரைவில் பதில் தருவதாக சொல்லி இருக்கிறார். அதில் நமக்கு மேலும் பல தகவல்கள் தெரியவரலாம். 

இலங்கை பிரச்சனையில் விருப்பமுள்ளவர்கள் குறிப்பாக இந்திய வம்சாவளியினர் பற்றி அறிந்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த பதிவை முழுதாக பொறுமையாகப் படிக்கவும்.

நண்பர் நிர்ஷனின் பதிவு இங்கே..

வலை நண்பர் சேவியர் இன் மல்லியப்பூசந்தி திலகருடனானநேர்காணலை தமிழோசை பத்திரிகை பிரசுரித்திருந்தது। ஈழத்து இலக்கிய ஆர்வலர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், சிறந்த நண்பர் என நிறைய விடயங்களை திலகர் பற்றிக் கூறலாம் சேவியருடானான பதிவுத் தகவல் பரிமாற்றங்கள் தான் இந்த நேர்காணலுக்கு வழிவகுத்தது எனலாம்।
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட,அநேக இந்தியர்களால் அறியப்படாத ஒரு சமுதாயம் பற்றிய குறிப்பாகவும் அவருடைய நேர்காணல் அமைந்துள்ளது। அந்த நேர்காணலை இங்கு தருகிறேன்। படத்தை சொடுக்கியும் பார்க்கலாம்।


உங்கள் ‘மல்லியப்பு சந்தி’ கவிதை நூலின் பாடுபொருள் என்ன?

ஒரு உழைப்பாளர் வர்க்கத்தின் வாழக்கைப்பரிமாணத்தையும் அதன் வலிகளையும், அவலங்களையும் பாடுபொருளாகக் கொண்டதே ‘மல்லியப்பு சந்தி’ ஆகும்। இதில் முக்கிய விடயம் இந்த உழைப்பாளர் வர்க்கம் யார் என அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறது।இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் தென்பகுதியிலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் ‘தினக்கூலிகளாக’ வேலைசெய்யும் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும்தான் ‘மல்லியப்பு சந்தி’ எடுத்துக்காட்டும் மக்களாகும். இவர்கள் ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு முன்பு தெனிந்தியாவிலருந்து குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து (திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்) ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடு அழைத்துவரப்பட்டு கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். 

என் பாட்டனார் இவ்வாறு வந்தவராவார். இவர்கள் இலங்கைக்கு நடக்கவைத்தே அழைத்துவரப்பட்டனர் என்றும் அவ்வாறு வருகையில் பசியினாலும், நோயினாலும் பாதைகளிலேயே செத்து மடிந்ததைச் சொல்லும் சோக வரலாறும் உண்டு. (பதிவு- மரணத்தில் தொடங்கும் வாழ்வு- மல்லியப்பு சந்தி). இவர்கள்தான் இலங்கையில் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்கு உதிரத்தைக் கொடுத்துள்ளனர்.

இவர்களின் வாழிடமாக 10 ஒ 12 அடிகள் பரப்பளவான அறைகளைக் கொண்டதான தொடர் ல(h)யங்கள் வழங்கப்பட்டன. இன்றும் கூட ழுழு குடும்பமுமே அந்த அவலம் நிறைந்த லைன் அறையில் வாழந்து கொண்டு ( பதிவு – வரையப்படாத லைன்கள் - மல்லியப்பு சந்தி) தினக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய மனித அவலமாகும்.


இந்த மக்கள் எல்லோரும் தமிழர்களா? அவர்களின் இலங்கையின் குடியுரிமை நிலை என்ன?

இவர்களுள் 99வீதமானோர் தென்னிந்திய தமிழர்களே. ஏனையோர் மலையாளிகள் மற்றும் தெலுங்கர் ஆவர். இலங்கையில் அரசியலமைப்பின் பிரகாரம் அங்கு வாழும் மக்கள் தொகையினரின் அளவின்படி இனங்களுக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்களவர் (01), இலங்கை தமிழர் (2), முஸ்லீம்கள் (3), இந்திய தமிழர் (4) ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும். அந்தளவுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் தனியொரு இனமாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளோம்.

இதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூர்வீகமாக வாழும் இலங்கை தமிழர்கள் (2) என குறிப்பிடுதல் வேண்டும். இவர்களை மையப்படுத்தியே ஈழப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பொதுவான வழக்கில் “ஈழத்தமிழர்கள்” என்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் “ மலையகத் தமிழர்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இனத்தால், மொழியால், பண்பாட்டினால், மதவழிபாடுகளால் (பெருமளவில் இந்துக்கள், அடுத்து கிறிஸ்தவர்கள்) இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களே. ஆனால் இவர்கள் வேறுபடுவது “இலங்கையின் குடிமக்கள்” என்ற விடயத்தில்தான்.

இலங்கையில் உள்ள ஏனைய இனங்களில் இருந்து மலையகத்தமிழர்கள் வேறுபடுவது இவர்கள் இன்றும் குறித்த ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை. இவர்களின் பதிவுக்காக
இவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது கிழிந்தாலோ, தொலைந்தாலோ இம்மக்கள் கிழிந்த அல்லது தொலைந்த பிரஜைகள்தான். அதன் பின் தங்களை அடையாளப்படுத்த பல பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். அந்த பிரயத்தனங்களில் தோற்றுப்போன எத்தனையோ பாமரமக்கள் அவர்களின் பிள்ளைகள் அநாதைகளாக வாழ்கின்றனர். அண்மையில் (ஆகஸ்ட் 23 2008) நடந்த மாகாண சபை தேர்தலில் கூட ஏறக்குறைய 10000 பேர் வாக்களிக்க முடியாமல் போன துரதிஸ்டமெல்லாம் நடந்துகொண்டுதான இருக்கிறது. தவிர அபிவிருத்தித்திட்டங்கள் எனும் போர்வையிலும், கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டங்கள் மூலமும் மலையக மக்களின் செறிவைக் குறைக்கும் அடக்குமுறைகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
(பதிவு: கூடைபுராணம், நமது கதை, விடிவு, மரணத்தில் தொடங்கும் வாழ்வு – மல்லியப்பு சந்தி)

மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான வழிகள் உண்டா?

நிச்சயமாக உண்டு. இந்தியாவிலிருந்து இந்த மக்கள் இந்திய அரசின் உடன்பாட்டோடுதான் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்கள். பின்னர் 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அதேவருடத்தில் மலையக மக்களுக்கான இலங்கை குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டு பறிக்கப்பட்டது. இவர்கள் நாடற்றவர்களாயினர். பின்னர் அப்போதைய இந்நதிய பிரதமர் சாஸ்திரி அவர்களுக்கும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கும் செய்யப்பட்ட “சிறிமா- சாஸ்திரி” ஒப்பந்தம் மூலம் ஒரு தொகுதி மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் திருப்பிப் பெற்றுக்கொள்ளப்பட்டனர். 

இவர்கள் இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களிலும் வாழ்கிறார்கள்.
அதேநேரம் மலையக மக்களின் ஒரு தொகுதியினரும் இந்தியாவில் அகதியாக முகாம்களில் வாழ்கின்றனர் என்பது ஈழத்தமிழ் அகதிகள் பற்றி தெரிந்த பலரும் அறியாத செய்தி. இந்தியா திருப்பி;பெற்றுக்கொண்டாலும் இந்த மக்களுக்கான புனர்நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமையினாலேயே இவர்கள் அகதியாக வாழ்கின்றனர்.

நான் இந்தியா வரும்போதெல்லாம் இவ்வாறு திரும்பி வந்த எங்கள் உறவுகளை பார்க்கத் தவறுவதில்லை. என் “மல்லியப்பு சந்தி” தொகுதிக்கான முன்னுரையைக்கூட இவ்வாறு இந்தியா வந்து சேர்ந்த என் உறவுக்காரரான என் குருவிடமே பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் இந்த உறவுகள் இலங்கையிலிருந்து திரும்பி வருகையில் இந்தியாவை தமது தாய்நாடாக கருதி பெற்றதாயைக் கூட அங்கே தவிக்கவிட்டு வந்த அவல நிலையும் உண்டு.(பதிவு- பொட்டு, மீண்டும் குழந்தையாகிறேன்- மல்லியப்புசந்தி).
மலையக மக்கள் குடியுரிமை பெறுவதற்கான ஒரே வழி அவர்கள் இலங்கையின் குடியுரிமையாளர்களாக பிரகடனப்படுத்தப்படவேண்டியதுதான். இதற்காக சான்றிதழ் வழங்கப்படகூடாது. இதனை இலங்கை அரசாங்கமே செய்யவேண்டும். இதற்காக இந்திய அரசு தனது அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் 15 லட்சம் பேறும் இலங்கையின் வதிவிடபிரஜைகளாகவும் இந்திய பிரஜையாக அல்லாமலும் இந்து சமுத்திரத்தில் தத்தளிக்கும் “பார்க்கு நீரிணை”பிரஜைகளாகவுள்ளனர்.
இந்தியா எங்களைத் திருப்பிப்பெறவேண்டாம். குறைந்த பட்சம் இலங்கை குடியுரிமையாளர்களாக பிரகடப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையாவது செய்யவேண்டும் என்பதுதான் இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கை எழுத்தாளர்கள் என்றாலே “ஈழப்பிரச்சினையையும்” அதன் பாதிப்புக்களையும் தான் எழுதுவார்கள் எனும் நிலை தமிழகத்தில் உண்டு. அதன் காரணம் என்ன நினைக்கிறீர்கள்?

நான் மேலே சொன்ன விடயங்கள் பற்றிய தெளிவின்மை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஈழப்பிரச்சினையின் வியாபகமாக இருக்கலாம். 

அதேநேரம் மலையக மக்களுக்கும் ஈழப்பிரச்சினைக்கும் தொடர்பில்லை என சொல்லிவிடமுடியாது. ‘தமிழர்கள்’ என்ற பொது அடையாளத்தினால் ஈழப்பிரச்சினையின் பாதிப்புக்களில் மலையக மக்களும் அடங்குகின்றனர்.

மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் 1970களில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் குடியேறிவாழ்கின்றனர். 

அவர்கள் நேரடியாக யுத்தத்தினால் பாதிப்படைகின்றனர். தவிர நான் சொன்ன பிரஜாவுரிமை பிரச்சினை காரணமாக ஆள் அடையாள அட்டை வழங்கப்படாத அல்லது அடையாள அட்டை இருந்தாலும் தமிழர்களென்ற காரணத்தினால் சந்தேகத்தின் பேரிலும் ஏராளமான மலையக இளைஞர் யுவதிகள் ஈழப்பிரச்சினையின் பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர்.

மலையக மக்களின் வாழ்க்கையைபற்றி மட்டும் பாடுவது ஈழம் என்ற முதன்மை பிரச்சினையின் தீவிரத்தை நீர்க்கச்செய்யாதா?

நிச்சயமாக இல்லை. பாரதி சாதியத்துக்கு எதிராகவும் பெண்விடுதலைக்காகவும் பாடியதனால் அதேகாலத்தில் அவனது சுதந்திரத்துக்கான பாடுகை நீர்த்துப்போனதா என்ன? முதலில் ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றி புரிந்துகொள்ளுதல் வேண்டும். பேராசியர் கா.சிவத்தம்பி அவர்கள் இப்படி கூறுகிறார். ‘ஈழத்து இலக்கிய நதி என்பது பல ஓடைகளின் சங்கமிப்பாகும். இதில் யாழப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும்,( வடக்கு, கிழக்கு) கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையக வரும். இந்த எல்லா ஓடைகளினதும் சங்கமிப்புதான் ஈழத்து தமிழ் இலக்கிய நதியின் பிரவாகமாகும்’.(மூலம்- ‘மல்லியப்பு சந்தி’ இறுவட்;டு அறிமுக உரை).எனவே ஈழத்து இலக்கியப்பபரப்பில் மலையக இலக்கியத்துக்கு தனியான ஒரு இடமுண்டு. மலையக இலக்கியம் என்று வரும்போது மலையக மக்களின் வாழ்க்கையையும் வலிகளையும் பாடுவதுதான பொருந்தும். அதுதானே சரியானதும் கூட. 

அதனையே மல்லியப்பு சந்தி யும் செய்கிறது. அதே நேரம் பொதுப்படையான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் பாடாமலில்லை. (பதிவு:- வேள்வி தீயொன்று வேண்டும், பிரிவு, - மல்லியப்பு சந்தி)அடிப்படையில் குடியுரிமை என்ற கோவணத்தடனாவது வாழும் இலங்கைத் தமிழர்கள்களோடு வாழும் மலையக மக்கள் அந்;த குடியுரிமை என்ற கோவணம் கூட இல்லாமல் நிர்வாணமாக நிற்கையில் அதுபற்றி தனியாக பேசுவது, பாடுவது எந்தவகையிலும் ஈழப்பிரச்சினையை நீர்க்கச்செய்யாது என நினைக்கிறேன்.
ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ‘திம்பு கோட்பாட்டில்’ (பூட்டான் நாட்டில் நடைபெற்றது) இந்தியா வம்சாவளி மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கை தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டமையை நன்றியுடன் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளேன்.

இலங்கையில் மலையக மக்களின் நாட்கூலி 170 ரூபா அரிசி 65 ரூபா என்று அறிகிறோம். இந்த நிலை தமிழர்களுக்கு மட்டும் தானா?

இல்லை. விலைவாசி உயர்வு என்பது எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைதான். ஆனால் மலையக மக்களுக்கான பிரச்சினை வருவாய் சம்பந்தப்பட்டதுதான். ஏனைய சமூகங்களைவிட இந்த மக்களின் வருவாய் அளவு மிகக்குறைவாகும்.

மலையகத்தமிழர் பதினைந்து லட்சம் பேரில் 90 வீதமானோர் தொழிலாளர் சார்ந்த குடும்பங்களாகும். ஏனையோர் அரச, தனியார் துறைகளிலும் வியாபாரத்துறையிலும் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளி ஒருவருக்கான நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 170 ரூபா. சராசரியாக ஒரு குடும்பத்தில் ஐந்துபேராகும். குடும்பத்தலைவன், தலைவி இருவரினதும் உழைப்பு ஒருநாளைக்கு 340 ரூபா (இந்திய மதிப்பில் 125ரூபா). இப்போது இந்த குடும்பத்தின் உணவு கல்வி, சுகாதாரம் ஏனைய நலன்களின் நிலையை நீங்களே புரிந்துகொள்ளலாம்.
(பதிவு – ஒப்பந்தம்- மல்லியப்பு சந்தி)

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமக்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இலங்கைப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் சிலரினது அரசியல் விளையாட்டுக்களை தவிர்த்து விட்டுப்பாரத்தால் தமிழக மக்களிடையே இருக்கும் ஆத்மார்த்தமான ஆதரவினையும் பற்றுதலையும் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது. அதனையும் தாண்டி உங்கள் சட்டவரையறைக்குள் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் மலையக மக்கள் தொடர்பில் தமிழக மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என எதிர்பாரக்கிறோம். நாங்கள் நேரடியாக தமிழகத்தில் உறவுகளைக் கொண்டுள்ளதோடு இன்றும் கூட இந்திய வம்சாவளியினர் என்றே பதியப்பட்டும் அழைக்கப்பட்டும் வருகிறோம். இந்தியாவின் ஆதரவை நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லாமலில்லை. 

தமிழக வணிக சஞ்சிகை ஒன்று 10 வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பு எழுதியிருந்தது. அதில் ‘
இலங்கையில் மலைசாதி மக்கள் ஒரு தொகுதியினர் வாழ்கின்றனர். அவர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்
’ என குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு மனம் நொந்துபோனேன். இந்திய வம்சாவளி தமிழர்களாக மலையக மக்கள் என தமது தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் ஒரு சமூகத்தை இது கேவலப்படுத்தும் செயலாகும். நடைமுறையில் தங்கள் வீட்டுசுவரில் காந்தி முதல் எம்.ஜி.ஆர் வரை படமாக தொங்கவிட்டுக்கொண்டும் ‘வடிவேலு’வின் பேச்சு நடையை ஒப்புவித்துக்கொண்டும்,
மலையக தமிழரான முரளிதரன் பந்து வீசும்போது கூட அதற்கு டெண்டுல்கர் சிக்ஸர் அடிக்கவேண்டும் என ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களை இந்தியா அடையாளம் காணாமல் இருப்பது துரதிஸ்டமே.
இந்தியாவில் மலையக தமிழர்கள் இன்றும் ‘அகதியாக’ வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களெனில், இலங்கையில் எமக்கு குடியுரிமை கிடைக்கவேண்டும் என வலியுறுத்துவீர்களெனில் அதுவே நீங்கள் எமக்கு தரும் தார்மீக ஆதரவாகும். 

இந்தியா மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் எதிர்பார்ப்பும் இதுவேயாகும்.

ஒட்டுமொத்தமாக மலையக மக்களின் வாழ்க்கை தரம் உயர என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

இயல்பான போக்கில் அயராத முயற்சியினால் இந்த மக்கள் தமது வாழக்ககைத் தரத்தை உயர்த்த முயற்சித்துக்கொண்டுதான இருக்கிறார்கள். இப்போது கணிசமான அளவில் படைப்பாளிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,ஒரு சில பேராசியர்கள் என விரிந்து செல்கிறார்கள். இலக்கியதுறையில் காத்திரமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். ஆனால் அரசியல் ரீதியாக காத்திரமான தலைமைத்துவத்துக்கான தேவை நிலவுகிறது. அரசியல் ரீதியாக பலம் உறுதிப்படுத்தப்படுகின்றபோது வாழ்க்கைத்தரம் உயர வாயப்புகள் இருக்கின்றன.
அதற்கு ‘குடியுரிமை’ என்கிற பிரகடனம் இன்றியமையாதது. இல்லாத பட்சத்தில் இந்த வளர்ச்சி இரட்டிப்பாக இன்னும் இருநு}று ஆண்டுகள் தேவைப்படலாம்.

சந்திப்பு: சேவியர்

நண்பர் நிர்ஷனின் அனுமதியுடன் அவர் வலைப்பூவிலிருந்து இந்த நேர்க்காணல் இங்கே பதியப் பட்டிருக்கிறது.

Monday, 3 November 2008

எல்லாரும் மெஸ்ல சாப்பிடுங்கப்பு!


நம்ம வெண்பூ அண்ணாச்சி சமீபத்திய துணுக்ஸ்ல பிரபல “உயர்விலை” சைவ உணவகம் பத்தி பொலம்பி இருக்க்கார்.. அந்தப் பக்கம் எல்லாம் ஏன் போறிங்க? எல்லா ஊர்லையும் நல்ல மெஸ் இருக்கும்.. அதன் சராசரி விலைப்பட்டியல் இங்கே ...


2  இட்லி - 6 ரூபாய்
1 தோசை - 5 ரூபாய்
முட்டை தோசை - 10 ரூபாய்
1 சப்பாத்தி - 5 ரூபாய்
1 பரோட்டா - 5 ரூபாய்
ஒரு ரோஸ்ட் - 10 ரூபாய்
ஆனியன் ரோஸ்ட் 12 ரூபாய்
முட்டை ரோஸ்ட் - 12 ரூபாய்
மசால் ரோஸ்ட் - 12 ரூபாய்
முட்டை பரோட்டா - 15 ரூபாய்
வீச்சு பரோட்டா - 5 ரூபார்
முட்டை வீச்சு - 10 ரூபாய்
ஊத்தப்பம் - 8 ரூபாய்
முட்டை ஊத்தப்பம் - 12 ரூபாய்
தக்காளி ஊத்தப்பம் - 12 ரூபாய்


தக்காளி சாதம் , பருப்பு சாதம். எலுமிச்சை சாதம் - தலா 10 ரூபாய்
முழுச்சாப்பாடு - 20 - 25 ரூபாய் ( சாம்பார், குழம்பு , ரசம் , மோர், கூட்டு, பொறியல், அப்பளம் எல்லாம் அடங்கும் )

ஆம்லெட் - 5 ரூபாய்
ஆஃப்பாயில் - 4 ரூபாய்
ஃபுல்பாயில் - 4 ரூபாய்
முக்கா பாயில் - 4 ரூபாய்
கால் பாயில் இன்னும் ஆரம்பிக்கவில்லை போலும் :))
கலக்கி - 4 ரூபாய்

பொங்கல் - 10 ரூபாய்
1 பூரி - 5 ரூபாய்

மெஸ்களில் இன்னும் ஏராளமான உணவு வகைகள் உண்டு.. :)

இன்னும் தக்காளி சேவை, முட்டை சேவை, சாதா சேவை, உப்புமா, இடியாப்பம் என எல்லாமே மலிவு விலை தான்.

சுவையும் ஓரளவுக்கு வீட்டுத் தயாரிப்பு போலத் தான் இருக்கும். இதை விட்டு பெரும்பாலும் ”கவுரவமாக” சாப்பிடுவதற்காக மெஸ்களைத் தவிர்த்து ஹோட்டல்களுக்கு செல்வதால் தான் ஹோட்டல் என்று சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லாத... போர்டில் மட்டும் ஹோட்டல் என்ற வார்த்தையை ஒட்டிவைத்திருக்கும் உணவகங்கள் கூட அநியாய விலையில் உணவை விற்கிறார்கள்....

இது போன்ற ஹோட்டல்களைத் தவிர்த்துவிட்டு பெரும்பாலும் எந்த ஊர்ப் போனாலும் மெஸ்களைத் தேடிச் சென்று சாப்பிடுவதால் தான் 2 ஆண்டுகளாக வீட்டு சாப்பாடு இல்லாமல் வெளியே சாப்பிட்டாலும் இது வரையில் உணவுப் பிரச்சனையால் எனக்கு எந்த உடல் உபாதைகளும் வரவில்லை.

முடிந்தவரை மெஸ்களிலேயே சாப்பிடுங்கள்..

Sunday, 2 November 2008

எச்சரிக்கை : சினிமா தொடர் பதிவு

எச்சரிக்கை : இந்தப் பதிவு அநியாயத்துக்கு பெரியதாக இருப்பதால் வழக்கம் போல் படிக்காமல் கமெண்ட் போடும் நல்லவர்களுக்கு... தடித்த எழுத்துக்களில் இருப்பதை மட்டும் படித்துக் கொள்ளலாம்.:)

என்னை இந்தத் தொடருக்காக அழைத்த "மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி " ஆகியோருக்கு கொலைவெறியுடன் ஆளுக்கு ஒரு நன்றி ):):)

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஒரு வயதுக்கு முன்பே இருக்கலாம். எங்க திரை அரங்கில்(இப்போது இல்லை) எப்போது முதலில் பார்க்க ஆரம்பித்தேன் எனத் தெரியவில்லை. லேசான நினைவு இருக்கும் சம்பவம் எனில் அரூர் தாஸ் தியேட்டரில் வெற்றிவிழா பார்த்தது நினைவிருக்கு. இரவுக் காட்சி பார்த்துவிட்டு அம்மா ,அப்பா மற்றும் அப்பாவின் தோளில் நான் வந்துக் கொண்டிருக்கிறோம். சில அடி தொலைவு போனதும் ஒரு கை என் தோளில் விழுகிறது. லேசாகத் தலையை தூக்கிப் பார்க்கிறேன். எங்கள் ஊரின் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.லட்சுமணபெருமாள் அவர்கள் சிரிக்கிறார். அப்போது என்ன வயதென்று தெரியவில்லை.ஆனால் படம் பார்த்து காலையில் பசங்க கிட்ட செம பில்டப் குடுத்து சண்டைக் காட்சிகளை விளக்கும் வயது என்பது மட்டும் நினைவிருக்கிறது. அப்போ கதைய பத்தி எல்லாம் எவனுக்கு கவலை.. :)) நாங்க எல்லாம் அப்போவே டெர்ரராக்கும்.. :)

1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

நினைவு தெரிந்த பின் தான் எல்லா படமும் பார்த்திருக்கிறென்...நினைவில்லாமலா பிறந்தேன்.. நல்லா கேக்கறாங்கயயா கேள்வி .. :) ஆனால் வெற்றிவிழா தான் நினைவில் இருக்கிறது.

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

ஸ்ஸ்ஸ்ஸபா.. இப்போவே கண்ணக் கட்டுதே. :( ( பின்ன அ,ஆ, இ, ஈ நு கேட்டா என்ன பன்றதாம் )
சூப்பர் சண்டை காட்சிகள்.. சண்டைக் காட்சிகளைத் தவிர வேறு எதையும் புரிந்துக் கொள்ளவோ உணர்ந்துக் கொள்ளவோ முடியாத அல்லது விரும்பாத வயது அது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா :( .. இனி தியேட்டர் வந்து சினிமா பார்க்கக் கூடாது என முடிவெடுக்க வைத்த படம். கொய்யால நான் என்ன கொள்ளை அடிச்சா காசு சம்பாதிகிறேன்.. இந்த குப்பைகளை எல்லாம் 85 ரூபாய் டிக்கெட் வாங்கி பார்க்க. ( நிஜமா நல்லவரு நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்விக்கு கொஞ்சம் கூடுதலாவே கேட்டதால நோ ப்ளாக்ல டிக்கெட் வாங்கிங்.. :))
(1-இ.. கேள்விய இங்க கேட்டிருக்கனும்.. கொலைவெறித் தாண்டவம் ஆடி இருப்பேன்)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

குருவி ...இணையத்தில் பார்த்தேன்.... 3 பகுதிகள் தரவிறக்கி வைத்துருந்தாலும் கஷ்டப் பட்டு இரண்டாம் பகுதியின் பாதி பார்க்கும் போதே... நம்ம நந்து அண்ணா சாவை உணர்ந்ததாக சொன்னாரே.. அதைவிட படுபயங்கர விளக்கமுடியாத உணர்வெல்லாம் எனக்கு ஏற்பட்டது.. யாராவது இஅல்வசமாய் ஒரு கணினி தருவதாக அப்போ சொல்லி இருந்தால் இந்தக் கணினியை கொலை செய்திருப்பேன். :(

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
நான் எப்போதுமே சோகமான அல்லது "மெசேஜ்" சொல்லும் படங்களைப் பார்ப்பது இல்லை. என்னை பொறுத்தவரையில் சினிமா என்பது வெரும் பொழுதுபோக்கு சாதனம். தவமோ தியானமோ செய்து மனதை சாந்தப் படுத்தும் கலை எனக்கு வராது என்பதால்( மூன்றாண்டுகள் தினமும் காலையில் 1 மணி நேரம் தியானம் செய்திருக்கிறேன்.. அந்த அனுபவத்தில் சொல்கிறேன்) மனதை சாந்தப் படுத்தவே அல்லது மன இறுக்கத்தில் இருந்து விடுபடவே சினிமா பார்ப்பதை விரும்புபவன்.

எனக்கு சச்சின், வசீகரா, பஞ்ச தந்திரம், 23ம் புலிகேசி வகையறா சினிமாக்கள் மீது தான் நாட்டம்...
ஆனாலும்.. மகாநதி என்னை வெகுவாக பாதித்த படம் என சொல்வேன். அந்த சிறுமி கொல்கத்தா விபச்சார விடுதியில் படும் அவதி.. பிறகு வீட்டிற்கு வந்தும் தூக்கத்தில் அதை நினைத்து புலம்புவது.. இது மிகவும் தாக்கிய காட்ச்சிகள்...
அடுத்து....தேவர் மகன்... அதில் வரும் பஞ்சாயத்துக் காட்சிகளெல்லாம் எங்கள் வாழ்க்கையில் நிகழ்வது போன்று இயல்பாய் இருந்தது. தாக்கியது என்று சொல்வது கொஞ்சம் மிகையாக இருக்கும். என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஊரில் நாசர் குடும்பம் போன்ற ஒரு குடும்பம்.. எப்போதும் எங்களுடன் மல்லுக்கு நிற்கும்.. ஆனால் இந்த தலைமுறையியில் நாங்கள் ஒற்றுமையாக இருப்பதோடு அப்போது மோதிக் கொண்ட எங்கள் பெற்றோர்களியும் ஒன்றாக்கி இருக்கிறோம். ஒருவர் தவிர மற்ற எல்லாரும் பகை மறந்தே உறவாடுகிறார்கள். :)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

நிறைய இருக்கு.. குறிப்பாக பெயர் பிரச்சனை.. பெயரில் என்ன இருக்கு? அதை எல்லாம் பெரிதாக்கி இம்சை செய்வார்கள் கலாச்சார காவலர்கள். சண்டியர் கிருஷ்ணசாமி கும்பல் பண்ண அட்டகாசம்... ரஜினி படங்களுக்கு ராமதாஸ் வகையறா செய்த ஓவர் டார்ச்சர்.. எல்ல்லம் ரொம்ப மோசமான அரசியல்.

அதைவிட பெரிதாக தாக்கிய அரசியல் தமிழ்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் வரிவிலக்கு அளித்தது. கலைஞரின் மிக மோசமான முடிவு இது. பெயர் மட்டும் தமிழில்.. ஆனால் வசங்கள் பாடல் வரிகளில் பாதி எல்லாம் ஆங்கிலத்தில்... நல்லவன் என்று பெயர் வைத்துக் கொண்டால் கற்பழிப்பு செய்தாலும் குற்றமல்ல என்பது போல இருக்கு இது. சரியான மோசடி இது. விஞ்சான முறை வரி ஏய்ப்பு...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

குறிபிட்டு சொல்ல நினைவு வரவில்லை. அபூர்வ சகோதரர்கள் பார்த்து பிரமித்து போனேன். பிறகு இரட்டை வேடங்கள் படங்களைப் பார்த்து ஆச்சர்யப் பட்டிருக்கேன். விட்டாச்சார்யா பாணி தந்திரக் காட்சிகள் கொண்ட படங்கள் மற்றும் சிவாஜியின் நவராத்திரி ஆகியவைகள் பெரிதும் தாக்கிய தொழில்நுட்பங்கள் என்று சொல்லலாம்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அவ்வப்போது இணையத்தில் மட்டும். சினிமாவின் புதிய விஷயங்கள் அல்லது கமல் பற்றிய செய்திகள் கண்ணில் படும் போது படிப்பேன். மத்தபடி தேடிச் சென்று ஆர்வத்துடன் படிப்பது இல்லை.

7. தமிழ்ச்சினிமா இசை?

என் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்று கூட சொல்லலாம். இப்போதெல்லாம் தினமும் சில மணி நேரங்களாவது தமிழ் சினிமா இசையை கேட்பேன். காலையில் எழுந்ததும் ஜெயா மேக்ஸில் பாடல்கள் கேட்டுக் கொண்டு தான் எல்லா வேலைகளும் நடக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது கணினியில் கேட்டுக் கொண்டிருப்பேன். மின்சாரத் தடை அல்லது பயணத்தில் மொபைலில் கேட்டுக் கொண்டிருப்பேன். பாடல் வரிகளை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை.. இசை மட்டுமே என் விருப்பம்.

இப்போது வரும் தமிழ் சினிமா இசை எல்லாம் தற்காலிகமாகவே இருக்கிறது. அடுத்த நல்ல மெட்டுக்கள் சில வந்தால் முன்னவைகள் காணாமல் போய்விடுகிறது அல்லது முன்னவைகள் கேட்க பிடிப்பதில்லை. என் மொபைலில் சேமித்து வைத்திருப்பது எல்லாம் இளையராஜாவின் “ அரம்பகால” இசைகள் மட்டுமே. அந்த இடத்தை நிரப்ப இனி யாராலும் முடியும் என்று தெரியவில்லை.

இப்போதும் தேவை இல்லாத இசைக் கருவிகளின் இரைச்சலைக் குறைந்தால் இன்னும் சில காலம் கூடுதலாக ரசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

ஹிஹி.. தொலைக்காட்சியில் தமிழ் சினிமா பார்ப்பதே இல்லையே :)).. Star movies, HBO வில் மட்டும் தானே சினிமாவே பார்ப்போம் நாங்க.. :)) இப்போ எல்லாம் HBOவில் சப் டைட்டில் எல்லாம் போட்டு அசத்துகிறார்கள். :)) ஹிந்தி படங்களை தியேட்டர் அல்லது டிவில் பார்ப்பது இல்லை.. ஒரு மண்ணும் புரியாம என்னத்தை பார்க்கிறது.

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

சமீபத்தில் விடியோகான் நிறுவனம் குடுத்த ஒரு ஹிந்தி சினிமா தொகுப்பில் லக்‌ஷ்யா பார்த்தேன் சப் டைட்டில் இருந்ததால். :) .. கார்கில் போரை வைத்து எடுத்த உணர்ச்சிப் பூர்வமான படம். நன்றாக இருந்தது.

ஆங்கிலத்தில் ஜுராசிக் பார்க். பாதித்ததா பயமுறுத்தியதா என்று சொல்ல முடியவில்லை. தாக்கம் குறைய பல காலம் ஆகியது.

சமீபத்தில் அண்ணாச்சி வடகரைவேலன் புண்ணியத்தில் கோவை காஸ்மோபாலிடன் க்ளப்பில் அகிராவின் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அரை மணி நேரத்தில் வந்துவிட வேண்டுமென்று நினைத்து தான் போனேன். பிறகு ஒரு மணி நேரம்.. பிறகு 2 மணிநேரம்.. அப்படியே என்னை கட்டிப் போட்டுவிட்டது. 3 மணி நேரம் ஆகியும் வெளியே வர மனமில்லை. துணிதுவைக்கும் கடமை என்னை கெட்ட வார்த்தையில் திட்டி அழைத்ததால் மனமில்லாமல் வெளியே வந்தேன். படங்களின் பெயரை நினைவில் கொள்ள முடியவில்லை. அவ்வ்ளவு அற்புதமான படங்கள்.

சூபப்ர் மேன் மற்றும் ஸ்பைடர் மேன் படங்களை பார்க்கும் போது எரிச்சலாய் வரும். இவைகளுக்கு லுச்சாத் தனமான ஹாரிபாட்டர் கதைகள் எவ்வளவோ மேல். :(.. இவங்களுக்கு எல்லாம் விஜயகாந்த் மற்றும் விட்டலாச்சார்யார் படங்களை யாராவது போட்டு காட்டுங்கப்பா.. :(


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

Pass Boss :))
(....ஒருவேளை எனக்கு நேரடித் தொடர்பு இல்லாததால் வேண்டுமானால் தமிழ்சினிமா மேம்படலாம்.. :))... )

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரகாசமாய் இருக்கு. அதற்கு முன் சில கும்பல்களை ஓட ஓட விரட்ட வேண்டும் அல்லது திருந்த வைக்க வேண்டும்.
  • சொந்தமய் யோசிக்கத் தெரியாமல் ஆந்திராவில் இருந்து சுட்டுப் போடும் எடிட்டர்” ரீமேக் மோகன்” குடும்பம்.
  • மகேஷ் படங்களின் பூஜை அன்றே தமிழ் ரைட்ஸை வாங்கி பெட்டியில் பூட்டிவைக்கும் இளைய தலவலிபதி விஜய்
  • சந்திரமுகி, குசேலன் என்று கடன்வாங்கியே காலம் தள்ளும் ரஜினி
  • இரட்டை அர்த்த வசனங்கள் மட்டுமே சினிமா எடுக்க போதுமான் தகுதி என நினைத்துக் கொண்டிருக்கும் எஸ்ஜே.சூர்யா
  • யாராவது ஒருவர் வித்தியசமான கதையில் படமெடுத்து தெரிந்தோ தெரியாமலோ அது நன்றாக ஓடினால் அதே பாணியை பல ஆண்டுகளுக்கு பிடித்து தொங்கும் மசாலா இயக்குநர்கள்.
  • சினிமா எடுக்க காதல் என்னும் கன்றாவியை தாண்டி யோசிக்கத் தெரியாத டூபாக்கூர்கள்
இவர்களை எல்லாம் விரட்ட வேண்டும் அல்லது இவர்களாகவே திருந்த வேண்டும். அபப்டி திருந்தினால் தமிழ்சினிமா பெரிய சிகரங்களை எட்டலாம். பாலிவுட் இன்று இருக்கும் உயரத்திற்கு பல தமிழர்கள் தான் காரணம். ஏன்னா அங்க புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பு உண்டு. அதனால் திறமைசாலிகள் புலம் பெயர்ந்துவிடுகிறார்கள். கோடம்பாக்கத்தில் உப்புமாக்களுக்கு மட்டுமே வாய்ப்பு.

பாலிவுட் = சீனா
கோலிவுட் = இந்தியா

இந்தியா =(அ)> சீனா என்ற நிலை வர நிறைய சீர்திருத்தங்கள் தேவை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய
சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா என்பது வெரும் பொழுதுபோக்கு சாதனம். இன்று ஏராளமான பொழுதுபோக்கு சாதங்கங்கள் வந்துவிட்டதால் சினிமா இல்லாதது ஒரு குறையாவே இருக்காது. தமிழர்கள்சினிமாவிற்கு தண்ட செலவு செய்யாமல் ஓராண்டு சேமிப்பு உயரும். மாணர்களின் படிப்பு மேம்படும். மொத்தத்தில் தமிழர்கள் சுபிட்சமாகவே இருபபார்கள்.

சினிமாத் தொழிலை நம்பி இருக்கும் குடும்பங்கள் பெரிய அளவில் பாதிப்படையும் என்பதால் அப்படி ஒரு நிலை வரக் கூடாது என்பதே என் விருப்பம்.


............ யப்பா கேள்வி தயாரித்த புண்ணியவான்களா... பள்ளியோடத்துல கூட இம்புட்டு கேள்விக்கு பதில் சொன்னதில்ல்லை... 5 கேள்வி கேட்டாலே 4 கேள்விகளை சாய்சில் விட்டு 5வது கேள்விக்கு சாய்சில் விட்ட 4 கேள்விகளையும் பதிலா எழுதி வைப்பேன். என்னையப் போய் எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுத வைச்சிட்டிங்களே... நல்லா இருக்கப்பு.. :(

சுத்தி நின்னு தப்பிக்கவிடாம மாட்டிவிட்ட புண்ணியவதிகளா.. இப்போ சந்தோஷமா.. நல்லா இருங்க நீங்களும்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

அநேகமா இந்த தொடர்பதிவின் கடைசி பதிவு என்னோடதா தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஒருவேளை இதுவரை இந்த தொடரில் மாட்டாத புண்ணியவான்கள் யாராச்சும் இருந்தா என்னோட வேண்டுகோளை ஏற்றதா சொல்லி பதிவு போட்டு மறக்காம இந்த பதிவுக்கு ஒரு லின்கும் குடுங்க.. ( எல்லாம் ஒரு வெளம்பரம் தான். :)) )

சின்ன பதிவா இருந்தாலே எழுத்துப் பிழைகள் எண்ணமுடியாத அளவு இருக்கும். இதை மறுமுறை வாசித்து திருத்தம் செய்ய என் சோம்பேறித் தனம் அனுபதியளைக்காததால் வழக்கம் போல் எழுத்துப் பிழைகளை கண்டுக்க வேணாம்னேன்.:))
--

இதைத் தொடர அருணா அக்காவை மற்றும் பொடிப்பொண்ணை மாட்டிவிடுகிறேன்.. :)

Tamiler This Week