இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSunday, 28 September 2008
புகைப்பிடிக்கத் தடை - மாட்டினாலும் தப்பிக்க ஐடியா
வருகிற அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து பொது இடத்தில் புகைப் படித்தால் அபராதம் விதிக்கப் படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஒருவேளை நீங்கள் புகைப் பிடிக்கும் போது போலிஸ்ல மாட்டிகிட்டா தப்பிக்க ஒரு ஐடியா..
நீங்க உங்க வாய்ல தான புகைப் பிடிப்பிங்க.. அது எப்படி பொது இடமாகும்.. உங்க வாய் பொது இடமா? போலிஸ்ல இதை சொல்லி தப்பிக்கலாம்..
சரோஜா - படத்துக்கு வேற எதுனா பேர் வச்சிருக்கலாம்
இதுவரை நானும் எவ்வளவோ கேவலமான சினிமாக்கள் எல்லாம் பார்த்திருக்கேன்.. ஆனா இவ்வளவு கேவலமான சினிமாவை நேற்று தான் பார்த்தேன்... இதை முழு நீளக் காமெடி படமாக எடுத்திருந்தால் கொஞ்சம் ரசித்திருக்கலாம்...
யுவன் பின்னனி இசையை அநியாயத்துக்கு வீணடித்திருகிறார்.. ஒரு நிஜமான திரில்லருக்கு அந்த இசையை பயன்படுத்தி இருக்கலாம்..
ப்ரேம்ஜிக்காக திணித்திருக்கும் situation songs எல்லாம் செம எரிச்சல் ரகம்...
முதல் 45 நிமிடங்கள் எதோ மியூசிச் சானல் பார்ப்பது போன்ற உணர்வு... அடுத்த காட்சிகள் எல்லாம் என்ன செய்வது என்றே தெரியாமல் திணிக்கப் பட்டிருக்கிறது.. சகிக்கலை... நான் இந்தளவு எந்த படம் பார்க்கும் போதும் எரிச்சல் அடைந்தது இல்லை...
அந்த 4 பேரும் யாரிடமாவது அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.. அல்லது யாருமே துரத்தவில்லை என்றாலும் தப்பித்து ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் அல்லது தேடி போய் வில்லன் கும்பலிடம் வலுக் கட்டாயமாக மாட்டிக் கொள்கிறார்கள்.
ஜெயராமின் லூசுத்தனமான ப்ளாஷ் பேக்... சுத்தமா ஒட்டல.. கர்மம்..
ஒரு பர்சிர்க்காக உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் மீண்டும் ஆபத்தை தேடிப் போகிறார்கள். அதற்கு சொல்லும் காரணம் சுத்த அபத்தம். அதில் இருக்கும் விலாசத்தை வைத்து வில்லன் சரண் வீட்டுக்கு வந்துடுவானாம்... ஏன் வெளிய போலிஸ்ல சொல்ல வேண்டியது தான?
தமிழ்நாட்ல இருந்து போகும் சரணும் அவர் தம்பியும் தெலுங்கில் தான் அதிகம் பேசுகிறார்கள்.. ஆனால் ஆந்திராவில் இருக்கும் அனைவரும் தமிழில் மட்டுமே பேசுகிறார்கள்.. கொடுமைடா சாமி..
பாடல்கள் எல்லாம் பரவாயில்லை...
காட்சி அமைப்பு மகா கேவலம்.. பெரும்பாலான காட்சிகள் ஸ்ளோ மோஷனில் தான் அமைத்திருக்கிறார்கள்.. சீரியல் பார்பப்து போன்ற உணர்வு....
ஒரே ஆறுதல் - ப்ரகாஷ்ராஜ் .. அற்புதமா நடிச்சி இருககார்.. அடுத்து சரண் - மோசம் இல்லை.. கொஞ்சம் நல்லாவே நடிச்சிருக்கார்.. மத்தது எல்லாம் வேஸ்ட்.. பழகின தோஷத்துக்கு வாய்ப்பு கெடைச்சிருக்குன்னு நல்லா தெரியுது..
ப்ரேம்ஜி சொல்லும் காப்பி வசனம் - எவ்வ்வ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாடோமா? மாப்ள.. இனி உங்க குடும்ப படம் தியேட்டர் போய் பாக்க மாட்டோம்டா..
எதாச்சும் கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணுங்க மிஸ்டர் வெங்கட் ப்ரபு.. சகிக்கல உங்க சரக்கு....
இதுக்கு மேல என்னத்த சொல்றது... இனி பழயபடி இணையத்தில் மட்டுமே சினிமா பாக்கறதுனு முடிவு பண்ண வச்ச படம் இது...
... கமல், மணிரத்னம், ஷங்கர் மாதிரி சிலர் படங்கள் மட்டும் விதிவிலக்கு... :)
Wednesday, 24 September 2008
பெரிய கட்சிகளுக்கு வடிவேலு சவால்
"விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நின்று ஜெயிப்பேன்"
- இவை அண்ணார் வடிவேலு சமீபத்தில் உதிர்த்தவை...
"விஜயகாந்தை புகழ்ந்து அரசியல் வசனம் பேசி நடிக்க சொன்னதால் அவர் படங்களில் நடிக்கவில்லை. அதனால் தான் என் மீது தாக்குதல் நடக்கிறது. நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன்"
- இதுவும் அண்ணார் வடிவேலுவின் டயலாக் தான்.
.... வடிவேலு வர்த்தைப் படி அவர் எந்த கட்சியையும் சாராத பட்சத்தில் விஜயகாந்தை எதிர்த்து சுயேட்சையாகத் தான் போட்டியிடுவார். அப்போது நிச்சயம் மற்ற அரசியல் கட்சிகளும் தன் வேட்பாளர்களை அந்த தொகுதியில் நிறுத்துவார்கள்... நம் அரசியல் சட்டத்தின் சாபக் கேடு, ஒரு தொகுதியில் ஒருவர் தான் ஜெயிக்க முடியும். வடிவேலு சொல்வது போல் அவர் வெற்றிபெறுவாரேயானால்.. அது விஜயகாந்திற்கு மட்டும் தோல்வி அல்ல. அந்த தொகுதியில் தங்கள் வேட்பாளர்களை போட்டியிடச் செய்த மற்ற அரசியல் கட்சிகளுக்கும் தான் தோல்வி... அப்படியானால் சுயேட்சையாக போட்டியிட்டு விஜயகாந்த் , ஜெயலலிதா , கருணாநிதி, தங்கபாலு, ராமதாஸ் , காவி மற்றும் சிவப்புக்காரர்கள் ஆகியோர்களின் வேட்பாளர்களை தன்னால் தோற்கடிக்க முடியும் என்கிறார் வடிவேலு..
.. யப்பா.. இந்த காமெடியனுங்க தொந்தரவு தாங்க முடியலைடா சாமி.. இம்புட்டு நாள் ஈரோவா நடிச்சவனுங்க தான் மொத மந்திரியா ஆவனும்னு வந்தாங்க.. இப்போ காமெடியனுங்களும் போட்டிக்கு வந்துட்டாங்கய்யா... அட வடிவேலுவும் ஈரோவா நடிச்சிருக்கார் இல்ல.. அப்போ மொத மந்தி ஆசை நாயந்தாண்யா..
.......இந்த பதிவை எழுதி முடிக்கும் இந்த நேரத்திலே சன் நியூஸ் மீண்டும் தலைப்புச் செய்திகளில் கேட்டது " விஜயகாந்தை எதிர்த்து கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும்..வடிவேலு ரசிகர்கள் நேரில் வந்து வலியுறுத்தல்"
.... ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்கய்யா... அடுத்து என்ன?.. கட்சிக் கொடி.. சாரி.. மன்றத்துக் கொடி டிசைன் பண்ண வேண்டியது தான்.... :))
.... கொய்யால தியேட்டர்ல ப்ளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்த்து உங்களை உசுப்பேத்தி விடற எங்களுக்கு இதுவும் வேணும்... இதுக்கு மேலயும் வேணும்டா.. :(
Tuesday, 23 September 2008
Saturday, 20 September 2008
Wednesday, 17 September 2008
செந்தழல் ரவியின் காற்றாலைக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட்
ஞாயிறு மாலையே செந்தழல் ரவி அவர் தங்கமணியுடன் என் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்... அச்சச்சோ.. ஒரு காபிப் போட்டுக் குடுக்கக் கூட முடியாதே.. சமயல்க் கட்ல எல்லாரும் சமையல் தான் செய்வாங்க.. நான் துணித் தானேக் காயப் போட்டிருக்கேன் என்று கவலை பட்டாலும்.. சரி என்று சொல்லிவிட்டேன்... பிறகு ரவி என்ன நினைத்தாரோ.. அடுத்த நாள் செல்லா காரில் தங்கமணியுடன் வருவதாக சொல்லிவிட்டார்... ரைட்டு...
அடுத்த நாள்.. முக்கிய அலுவலக வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு ரவியை அழைத்தால் போன் எடுக்கலை.. சரி... அவருக்கு இன்னும் விடியலைப் போலன்னு நெனைச்சி செல்லாவுக்குப் போன் பண்ணேன்.. அவர் மச்சினியப் பார்த்துட்டு இப்போ தான் வந்ததாகவும் 2 பேரும் அவர் அலுவலகத்துக்கு வந்துடுங்கன்னும் சொல்லிட்டார்.. சரின்னு ரவியை அழைச்சிட்டு செல்லா அலுவலகம் போனேன்.. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்.. ரவி ஸ்கூல் பய்யன் ரேஞ்ச்ல மத்தியான சோத்துக்கு போலாம்.. மத்தியான சோத்துக்கு போலாம்னு ரகளை பண்ணிட்டே இருந்தார்... சரி இதுக்கு மேல தாங்காதுன்னு புறப்பட்டோம்...
எங்க சாப்பிட போகலாம்னு யோசிச்சப்போ.. ரவி, அண்ணபூர்னா போகலாம்னு சொன்னார்.. எனக்கு எப்போவும் இந்த மாதிரி ஹோட்டல்கள்ல சாப்பிட சுத்தமா பிடிக்கறதில்லை... எதோ சத்திரத்தில் அடிச்சி பிடிச்சி சாப்பிடற மாதிர் ஒரு ஃபீல்.. நம்மூர்க்காரங்க ஊட்ல சமைக்கவே மாட்டாங்க போல.. எல்லாருமே சமயல்கட்ல துணிதான் காயப் போடறாங்களோ? :D..
செல்லா சும்மா இருககாம.. உங்கள எல்லாம் ஒரு கிராமத்துக்கு சாப்பிட கூட்டிட்டு போறேன்னு சொன்னார்.. அப்போ எனெக்கென்னவோ புன்னகைப் பூவே சார்ளி நினைவுக்கு வந்தார்.. " உங்கள எல்லாம் நான் கற்காலத்துக்கே கூட்டிட்டுப் போகப் போறேனு" அதுல அவர் சொல்வார்.. அப்போவே நான் உஷார் ஆயிருக்கனும்.. . சரி.. விதி வழியது.. :(
போனோம்.. போனோம்.. ஆனைக்கட்டியே வந்துடிச்சி.. ஆனா அந்த வழியெங்கும் அப்படி ஒரு பசுமை.. மலைகளுக்கு இடையே சாலைகள்.. ரொம்ப ரம்மியமாய்... வழியில ஒரு கடைல ராகிப் பக்கோடா வாங்கி சாப்ட்டோம்.. அடடா.. எனனா ஒரு சுவை? ரொம்ப அற்புதமா இருந்தது...
அடுத்து ஆனைக்கட்டி போய் சேர்ந்தோம்.. ஒரு ஹோட்டலி(மாதிரி)ல் சாப்பிட உக்கார்ந்தோம்... நான் பாட்டுக்கு புரோட்டா வாங்கி நிம்மதியா சாப்ட்டிருப்பேன்.. கிராமத்து சாப்பாடு நல்லா இருக்கும்னு( கிராமத்து சாப்பாடு பத்தி என்கிட்டயேவா? ) சொல்லி எல்லாருக்கும் சோறு - அளவு சாப்பாடு :( - சொல்லிட்டார் செல்லா.. சரி போகட்டும்...
சோறு போட்டாங்க.. அப்பளம் வச்சாங்க.. பூசனிக்காய் கூட்டு வச்சாங்க... உருளைகிழங்கு பொரியல் வச்சாங்க... ரவி மீன் குழம்பு வாங்கிகிட்டார்.. நானும் செல்லாவும் பருப்பு சாம்பார் வாங்கிகிட்டோம்... சாம்பார் முடிஞ்சதும் அடுத்ததா புளிக் குழம்பு, மோர்க் குழம்பு, ரசம், தயிர், மோர்.. இப்படி எல்லாம் இருக்கும்ல.... சரி.. சாம்பார் சாதம் முடிஞ்சது... அண்ணே.. புளிக்குழம்பு இருக்கா?.. இப்போ தாங்க முடிஞ்சது.. சரி.. மோர்க் குழம்பு.. அதெல்லாம் இல்லீங்க... சரி.. ரசம்.. அட அதும் இப்போதானுங்க காலி ஆச்சி... சஞ்சய் கண்ட்ரோல்ல்ல்ல்..... சரி ரசம் குடுங்க.. என்ன பண்றது... ஒரு 5 நிமிஷம் முன்னாடி வந்திருக்கக் கூடாதுங்களா?.... ரசம் தீர்ந்துபோனப்ப வந்து கேக்கறிங்களே... சஞ்சய்.. இப்போவும் கண்ட்ரோல்ல்ல்ல்ல்ல்ல்.... சரி தயிர்... இப்போ தாங்க அவருக்கு ( பக்கத்து டேபிள்) குடுக்கும் போது காலி ஆய்டிச்சி.. இப்போவும் கண்ட்ரோல்டா சஞ்சய்... இது மட்டுமா இருக்கப் போகுது என்று நினைத்துக் கொண்டே கேக்கலாமா வேண்டாமா என்று யோசித்து.. அட இவ்ளோ தாங்கிட்டோம்.. இதத் தாங்கிக்க மாட்டோமா.... மோர் இருக்குங்களா.... இவ்ளோ நேரம் வாய்ல சொன்னவன்.. இப்போ மோர் பாத்திரத்தை கொண்டுவந்து.. நீங்களே பாருங்க.. இருந்தா தர மாட்டேனா?... (மனசுக்குள்ள)டேய்.... டேய்... நாங்க சாப்ட உக்காரும் போது இதெல்லாம் சொல்லி தொலையறதுக்கென்ன?.. சரி கொஞ்சம் பூசனிக்கா கூட்டாவது வைங்க... எல்லாமே முடிஞ்சிருச்சிங்க.. மீன் குழம்பும் சாம்பாரும் தான் இருக்கு.. அடங்கொய்யால... தீர்ந்துப் போறதுக்கு முன்னாடி சாம்பாராவது ஊத்தித் தொலைடா என்று வாங்கி அவசர அவசரமா சாப்ட வேண்டியதா போய்டிச்சி.. பின்ன.. அதும் தீர்ந்து போச்சின்னா.. சோத்துல தண்ணி ஊத்தி திங்க சொல்லிடுவானுங்க போல.. :( ..
....... சார்ளி நினைவுக்கு வந்ததும்.. உஷார் ஆயிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?......:((
ஆர்வக் கோளாறுல நான் புரோட்டா சுடப் போயி அதையும் பொழப்பில்லாம போட்டோ எடுத்துட்டு இருந்தார் செந்தழல் ரவி..:)
இந்த கோயம்புத்தூர்காரங்களுக்கு ஒரு கெட்ட பழக்கம்.. சாம்பார்ல சக்கரை போடுவாங்க போல.. அம்புட்டு இனிப்பா இருக்கும்.. :(.. அதனால நான் கோவை சாம்பாருக்கு எதிரி.. சாம்பார்னா எப்டி இருக்கும்னு தர்மபுரி பக்கம் வந்து சாப்ட்டு பாருங்கய்யா.. அட அட... ஹ்ம்ம்... மாசத்துக்கு ஒருவாட்டி தான் அந்த பாக்கியம் கெடைக்கிது.. :(
...அடுத்து ஆனைக்கட்டி தாண்டி சோழையூர் வழியா அழகான கேரளப்பயணம்... செந்தழல் ரவியின் காற்றாலை நோக்கி.. அதை பற்றி படங்களுடன் விரைவில் ரவி எழுதுவார்.... அது வரை வெய்ட்டீசு மகா ஜனங்களே....:)
Saturday, 13 September 2008
வீரப்பன் வாழ்ந்த மலைப்பகுதி மக்கள் நிலை
2 நாட்களுக்கு முந்தய ரயில் பயணத்தின் போது யாரோ விட்டுச் சென்ற குமுதம் படிக்க நேர்ந்தது. இப்போதெல்லாம் வார இதழ்கள் எல்லாம் பயண துணைக்கு மட்டும் தான் போலும்.. அதில் வீரப்பன் காட்டில்( அதென்ன வீரப்பன் காடு? ) பண புதையல் என்பது போல் ஒரு செய்தி. அந்த புதையலால் தான் அந்த காட்டுப் பகுதி மக்கள் பலர் இப்போது வசதியாய் வாழ்வதாக இருந்தது. இதில் எந்த அளவு உண்மை என்று தெரியாது...
எனக்கு தெரிந்த காரணம் வேறு....
அந்தியூர் மற்றும் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் வாழும் மக்கள் ராகி , சாமை, மக்காச்சோளம் போன்றவற்றை பயிரிடுவார்கள். ராகி எல்லாம் நல்ல விலை கிடைக்கும் தானியம். ஆனால் அவர்களால் அப்போது அந்த பணத்தை பயன் படுத்த முடியாது. வீரப்பன் வாழ்ந்த காலத்தில் அந்த மலைப்பகுதி மக்கள் ஒரு ரேடியோ வாங்கி வந்தாலும் அதை ரொம்ப சிரமப் பட்டு மறைத்தே கொண்டு போவார்களாம். காரணம், அதிரடிப்படையினர் கண்ணில் பட்டால் கொடுமை படுத்திவிடுவார்களாம். இதை வாங்க உனக்கு பணம் எங்கிருந்து வந்தது? வீரப்பன் கிட்ட வாங்கினையா? என்று குடைவார்களாம். அதற்கு பயந்தே அதுவரை யாரும் எந்தப் பொருளும் வாங்காமல் பணத்தை அப்படியே வைத்திருந்து இருக்கிறார்கள்.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. அதிரடிப்படை முகாம் எதும் இல்லை.. எனவே TV, DTH ( மலைப்பகுதியில் கேபிள் வசதி இல்லை) என்று தேவையான எல்லாம் வாங்கி செல்கிறார்களாம். இவ்வளவு நாள் பயன்படுத்தாமல் வைத்திருந்த பணம் தான் இப்போது அவர்களை வசதியாக வாழ வைக்கிறது. வீரப்பன் புதைத்த வைத்து பணம் காரணமாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
இப்போது அவர்களால் அந்தியூர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் நல்ல வியாபாரம் நடைபெறுகிறது.
கொசுறு:
Web Of Trust - நெருப்புநரி மூலம் இணைய உலா வரும்போது அதில் காணும் சுட்டிகள் பாதுகாப்பானதா அபாயகரமானதா என்பதை வெளிப்படுத்தும் add on. பயன்படுத்துங்க.. பயன்பெறுங்க..
Friday, 12 September 2008
மங்களூர் சிவா திருமண புகைப்படங்கள்
டோண்டு : நம்ம வயசு 26ன்னு சொன்னதுக்கு இந்த சஞ்சய் பய எதோ கமெண்ட் அடிச்சத கேட்டு அப்துல்லா கன்னா பின்னானு சிரிச்சாரே.. என்ன சொல்லி இருப்பான் இவன்? :(
வெண்பூ : சரி சரி அழாத.. நீ தான் உண்மையான வெண்பூ... இனி என் பேரை போலி வெண்பூ என்று மாத்திக்கிறேன்.. :))
வெண்பூ : மேடம்.. ரொம்ப பசிக்கிது.. கொஞ்சமா சாப்ட்டுகிறேனே ப்ளீஸ்...
திருமதி வெண்பூ : ஹ்ம்ம்.. சரி சரி.. கொஞ்சமா சாப்டுங்க.. இல்லைனா உங்களுக்கு தான் பெரிய தொப்பைனு தாமிரா எல்லார்கிட்டயும் சொல்லிடுவார்..
வெண்பூ : சரிங்க மேடம்..
திருமதி வெண்பூ : சரி சரி .. பேச்சை கொறைங்க.. சீக்கிறம் சாப்ட்டு எனக்கு காபி ஆத்தி குடுக்கிற வழிய பாருங்க..
உ.தமிழன் : இதுக்கு தான் கம்பனி மீட்டிங்க் போறேன்னு வீட்ல சொல்லிட்டு தனியா வரனும்னு சொல்றது... தம்பி வெண்பூ இன்னும் வளரவே இல்லை.. :)
மங்களூர் சிவா திருமணம்! (ஒரு லைவ் ரிபோர்ட்) - தாமிரா
மேரேஜ் விமர்சனம் ஆப் மங்களூர் சிவா - புதுகை அப்துல்லா
-
மங்களூர் சிவா திருமணம் - டோண்டு ராகவன்
Sunday, 7 September 2008
மங்களூர் சிவா திருமணம் - சென்னையில்
நம்ம மங்களூர் மைனர் வசமா மாட்டிக்கிட்டார்..
மங்களூர் சிவாவிற்கும் என் பாசமிகு சீனியரும் சைண்டிஸ்டுமான ஜெர்மனி(படிப்பு மட்டும்) பூங்கொடிக்கும் வருகிற வியாழன் 11ம் தேதி சென்னை வடபழனி முருகன் கோவிலில் நண்பர்கள் சூழ எளிமையான திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது...
மணமக்கள் இருவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவோம்... நான் டிக்கெட் போட்டாச்சி.. அப்பா நீங்க? :)
நாள் : 11-09.2008 வியாழன்
நேரம் : காலை 7.30 - 8.30
இடம் : முருகன் கோவில் , வடபழனி
Monday, 1 September 2008
இது பொம்பளைங்க சமாச்சாரம்..பெண்ணியவாதிகள் கவனிக்க..
சமீபத்தில் தோழி ஒருத்தியிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது , பெண்களை பற்றி இழிவாக பேசினால் தான் பொங்கி எழுந்துவிடுவேன் என்று மிரட்டினார். நான் எதும் இழிவாக பேசவில்லை. பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எதேச்சையாக அவர் அப்படி சொன்னார். எதிர்காலத்தில் மகளிர் சங்கத்தில் சேர்ந்து பெண்களுக்காக சேவை செய்யப் போவதாக சொன்னார். வாழ்த்துக்கள்.. :)
எனக்கு தெரிந்தவரையில் மாதர் சங்கம் என்றால் சமுதாயத்தில் பிரபலமானவர்களுக்கு எதிராக மட்டுமே போராடும் சங்கம் தான். தினம் தினம் எத்தைனையோ ஏழை பெண்களுக்கு ஆண் மக்களால் அல்லது மாமியார்களால் பல கொடுமைகள் நடக்கிறது. அதை எல்லாம் அவர்கள் எதிர்ப்பதில்லை. இவர்கள் போராட்டம் நடத்தும் சம்பவத்தில், ஒன்று பாதிக்கப்பட்டவர் பிரபலமானவராக இருப்பார் அல்லது குற்றவாளி பிரபலமாக இருப்பார். அப்போது தான் இவர்கள் வீதிக்கு வருவார்கள். அப்போ தானே இவர்களுக்கும் பப்ளிசிட்டி கிடைக்கும்?...
அதனால்.. இந்த வகை பெண்ணியவாதியாகத் தானே வரப் போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவர் நீண்ட தயக்கத்திற்கு பிறகு ஒரு திட்டத்தை சொன்னார். ரொம்ப அற்புதமான திட்டம். முயன்றால் செயல்படுத்தவும் முடியும்...
திட்டம் இது தான் :
1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்(Sanitary napkins) விநியோகிப்பது. கூச்சமாக உணர்ந்ததால் அவர் இதை பற்றி விரிவாக என்னிடம் எதும் சொலவில்லை. நானும் விட்டுவிட்டேன். அதான் இருக்கவே இருக்கிறதே இணையம்.. :)
உருப்படியான மேட்டராக பட்டதால் இணைய ஆராய்ச்சியில் இறங்கியதில் கிடைத்தவை..
பெண்கள் மாதவிலக்கு சமயங்களில் அதிக flow இருக்கும் சமயங்களில் 4 முதல் 6 மணி நேரங்களுக்கு ஒரு முறை நாப்கின் மாற்ற வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்களுக்கு எவ்வளவு தேவை என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். கடைகளில் விற்கும் நாப்கின்கள் ஏழை பெண்கள் வாங்கும் நிலையில் இல்லை. கிராமங்களின் நிலை பற்றி சொல்லவே வேண்டாம். வாங்கும் நிலையில் வசதி இருந்தாலும் விற்பவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே ஏழை பெண்களும் கிராமத்து பெண்களும் சாதாரன துணிகளையே உபயோகிக்கிறார்களாம். அதையும் புதிது புதிதாக எல்லாம் உபயோகிப்பதில்லையாம். ஒரே துணியை துவைத்து உலர்த்தி பின் அதையே உபயோகிக்கிறார்களாம். இதனால் கிருமிகள் தோன்றி தொற்று நோய்கள் வருமாம். எவ்வளவு கொடுமையான விஷய்ம்?
ஆகவே தோழி சொன்னது போல் இதை 1 ரூபாய்க்கு விற்பதன் மூலம் பலரும் உபயோகிக்க வைக்க முடியும். அதையும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் தயாரித்து விற்றால் மலிவாகவும் விற்க முடியும் என்று சொன்னார்.. மேலும் சுய உதவிக் குழுக்களுக்கும் வருமானம் கிடைத்த மாதிரி ஆகும்... கிராமப் புற சுய உதவிக் குழு பெண்கள் மூலம் பிறரையும் நாப்கின் உபயோக படுத்த வைக்க முடியும்.
நான் கேட்பது...அதை ஏன் 1 ரூபாய்க்கு விற்க வேண்டும்? ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவே அரசாங்கம் தரலாமே. எய்ட்ஸ் என்னும் கொடிய நோயில் இருந்து தப்பிக்க இலவசமாக ஆணுரை வழங்கம் போது பெண்களின் ஆரோக்கியத்திற்காக இதை ஏன் இலவசமாக வழங்கக் கூடாது. ரேஷன் கடைகளில் விற்கும் போது கிராமத்து பெண்களும் நகரத்து ஏழை பெண்களும் எளிதில் வாங்கி உபயோகிக்க முடியுமே. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இதை தயாரிக்க பயிற்சி அளித்து அவர்களிடமே அரசங்கம் இதை வாங்கி அவர்களுக்கும் வருமானத்திற்கு வழி செய்யலாம். ஆனால் இதை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கும் நிறுவனங்கள் இதற்கு தடையாக இல்லாமல் இருக்கனும்.
1 ரூபாய்க்கு அரிசி கொடுக்க நிதி இருக்கும் போது அரசாங்கத்திற்கு இதற்கு நிதி இருக்காதா?.. ஒரு வேளை அரசாங்கத்திற்கு இந்த யோசனை இல்லாமல் கூட போயிருக்கலாம். ஆனால் வாய் கிழிய பேசும் பெண்ணிய வாதிகள் இதற்கு என்ன முயற்சி எடுத்தார்கள்?...