இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday, 31 December 2007

விடைபெறுகிறேன் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்..

பொதுவாக எதையும் நேரடியாக அனுகும் பழக்கம் உள்ள நான் பொடியன் என்ற முகமூடியுடன் யாரையும் அனுகுவதில் விருப்பம் இல்லை. இந்த முகமூடியை வைத்து நான் ஒன்றையும் சாதித்ததில்லை. இனி எதுவும் சாதிக்கப் போறதும் இல்லை. பிறகு எதற்கு இந்த முகமூடி. ஆகவே தான் விடைபெற முடிவு செய்துவிட்டேன். இதை வைத்து தம்மை விட வயதில் இளையவரை கூட ஆண்ட்டி, அங்கிள் என்று அழைக்கும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததை விட வேறொன்றும் கிழிக்கவில்லை. உண்மையில் எதயும் சாதிக்கும் எண்ணத்துடனோ அல்லது பதிவுகள் எழுதி கால் அடி அரை அடி எதையும் உயர்த்தும் எண்ணமோ இல்லை. அப்படி உருப்படியா எதுவும் எனக்கு தெரியாது. பிறகு எதற்கு இந்த முகமூடி.

நான் தமிழ் பதிவுலகில் படித்ததே போலி சண்டைகளைத் தான். அதை படிக்கும் போது இங்கு யாருமே தன் சுய மரியாதையை காப்பாற்றி கொள்ள முடியாது என்பது போல் உணர்ந்தேன். அப்போது எனக்கு மற்ற நல்ல பதிவுகள் எதுவும் படிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை. அப்போது வரை நான் என் பெயரிலேயே ஆங்கிலத்தில் மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன்.சில ஃபார்வர்ட் மெயில்களின் உதவியுடன்:). ஆனால் தமிழில் பதிவுகள் எழுத ஆசை மட்டும் இருந்தது. சும்மா மொக்கை தான். ஆனாலும் அப்போது அதிலும் பாதுகாப்பு உணர்வு இல்லை. நான் எதாவது எழுதப் போய் அல்லது யாருக்காவது பின்னூட்டம் போடப் போய் நானும் போலி சிக்கல்களில் மாட்டிக் கொள்வேனோ என்று பயம் இருந்தது. பயம் என்றால் உயிர் பயம் இல்லை. நேரம் பற்றிய பயம். காரணம் எனக்கு கோபம் சற்று அதிகமாகவே வரும். யாராவது கொஞ்சம் சீண்டினாலும் அதை விட மாட்டேன். அதனால் என் நேரம் வீணாகும் என்று பயந்தேன். அதனால் தான் முகமூடியுடன் வந்தேன்.

உண்மையில் இந்த வலைப்பூவிற்கு நான் வைத்த பெயரே வேறு. 3 பதிவுகளுக்கு அப்புறம் தான் பொடியன் என்ற பெயர் மாற்றினேன். இதற்கு ஒரு காரணம் இருந்தது. நான் தமிழ் வலைப்பதிவுக்கு புதியவன் என்பதால் பொடியன் என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன். பிறகு என்னை பொடியனாகவே பாவித்து எல்லாரயும் ஆண்ட்டி அங்கிள் என்று கலாய்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் என்னால் நீண்ட நாட்களுக்கு முகமூடி அனிந்துக்கொண்டு அல்லது வேஷம் போட்டுக் கொண்டு இருக்க முடியவில்லை. ஆகவே விடைபெறுகிறேன். இன்னும் சில விஷயங்கள் சொல்ல ஆசை.ஆனால் மாதக் கடைசி மற்றும் வருடக் கடைசி என்பதால் இணையத்தில் இன்று நீண்ட நேரம் செலவிட முடியவில்லை. இப்போதும் ரொம்ப நேரம் இருக்க முடியவில்லை. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக கிளம்ப வேண்டியதாகி்விட்டது. அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க்கை வாழ்வத்ற்கே.

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
இப்படிக்கு
~பொடியன்~

Sunday, 30 December 2007

Sunday Special .. கோவை பார்க்..

மாதக் கடைசி என்பதால் இன்றும் வேலை இருந்தது. 3 மணி வரை வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் பசி வயிற்றை குடைத்துக் கொண்டிருந்தது. சாப்பிடலாமே என்று நேரு ஸ்டேடியம் பக்கம் இருக்கிற கார்டன் ரெஸ்டாரண்ட் போகலாம்னு கெலம்பினேன். அங்க போனவுடனே வயித்தெரிச்சல் ஸ்டார்ட் ஆய்டிச்சி. எல்லாரும் ஜோடி ஜோடியா உக்காந்து திங்கறானுங்க. திண்ணதவிட கடல வறுத்தது தான் அதிகம். வறுத்த வாசம் பார்க் முழுசுக்கும் பரவி இருந்தது. இதுல நான் மட்டும் தனியா:( உக்காந்து சாப்டுட்டு இருந்தேன். ஒரே ஆறுதல் வெஜ் பிரியாணி அற்புதமா இருந்தது. அப்புறம் சமோசா கூட நல்லா தான் இருந்தது.:P

அப்டியே ஸ்டேடியம் பக்கம் இருக்கிற மைதானத்துக்கு போனாக்க அங்க பவிழம் ஜிவல்லரியும் யூ டிவியும் சேர்ந்து நடத்தற கிரிக்கெட் போட்டி நடந்துட்டு இருந்தது. நம்மாளுங்க கிரிக்கெட் மோகத்துக்கு ஒரு அளவே இல்ல போங்க. அம்புட்டு கூட்டம் அத பாக்க. ஞாயிற்றுக் கிழமை என்பதால் கூட்டம் ஜாஸ்தியா இருந்தது.நானும் அப்டியே கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டு வந்தேன்.

பொழுது போகனுமே. அப்டியே பார்க் உள்ள போனேன். 3 ரூபாய் டிக்கெட். உள்ள நெறய வெளிநாட்டு பறவைகள் இருக்கு.நம்ம ஊர் கிளி முதல் ஆப்பிரிக்க காதல் பறவைகள் வரை.வேடிக்கை பார்க்க கூட்டம் அலை மோதியது. குட்டி பசங்கள கூட்டிட்டு போக அற்புதமான இடம். குரங்கு , நரி, பாம்பு, புறா, கிளி, வாத்து. வெள்ளை எலி, ஒட்டகம், மயில், குட்டீஸ் ரயில் என குட்டீஸ்க்கு பிடித்த எல்லாம் இருக்கு.
திடிர்னு மூளைகுள்ள மணி அடிச்சது. அட்டேண்ட் பண்ணாக்கா வாஷிங் மெஷின் கண்ணாபிண்ணானு திட்டுது. சாவு கெராக்கி. ஏண்டா ஒவ்வொரு ஞாயித்துக் கெழமையும் 6 மணிக்கு மேலயே என் உயிர வாங்கற. மூதேவி வந்து சீக்கிரம் உன் அழுக்கு துணிய தொவைச்சிட்டு என்ன சீக்கிரம் தூங்க விடுடானு திட்டுச்சி. வேற வழி.. பேக் டூ பெவிலியன்...

இந்த சமோசா மாதிரியே நானும் இங்க தனியா தான் சாப்பிட்
கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
ரசிகர் படை :)
பூங்காவில் நண்பர்களை தண்ணீரில் விட்டு தலைவர் மட்டும் பீடத்தில் ஓய்வெடுக்கிறார்.
வாத்துப் படை
ஜோடிய பாத்தே ஆகனும்னு ஒத்த கால்ல நிக்கிறார்.:P
வெளிநாட்டு பறவைகள்
வேடிக்கை பார்க்கிறவங்களை பத்தி கமெண்ட் அடிச்சிட்டிருப்பாங்களோ?
பேச மாட்டேன் போ... எதோ குடும்ப சண்டை போல..
இது எலியா முயலா என்பதில் இப்போது வரை கொஞ்சம் சந்தேகமா இருக்கு. எலிதானே? :O

பார்க் நுழைவாயில்.. அந்த பொண்ணுங்க யார்ன்னு சத்தியமா தெரியாதுங்கோ. :(
பாம்பு சார் சட்டயை கழட்டறார். அரிய காட்சி. கண்ணாடி மற்றும் சரியான ஒளி இல்லாததால் சரியாக படம் எடுக்க முடியவில்லை. ஒரிகினல் படம் வேண்டுவோர்க்கு அனுப்பி வைக்கப் படும். 10MP படம். புகைப்பட தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தெளிவாக்கலாம்.
கோழி பிடிக்க கூரை எறுகிறார் போல..
வேடிக்கை பார்த்தவர்கள் இதை பாம்பு முட்டை என்றார்கள். பாம்புக்கக வைத்த கோழி முட்டைகள் போல் இருக்கு. ஆனால் அதில் உள்ள அழுக்குகளை பார்த்தால் பாம்பு முட்டை தான் என்ரும் தோன்றுகிறது.
பயப்படாதிங்க.. சும்மா மண் பொம்மை தான்...:)
கலர் கலரா இருக்கய்ங்கய்யா.. :)

முக்கியமான மேட்டர் : பார்க்ல காதல் செய்யும் புண்ணியவான்களே.. கொஞ்சம் நாகரிகமா காதல் பண்ணுங்கய்யா. சகிக்கல. இவ்வளவு கூட்டம் இருக்கிறதே என்ற குறைந்த பட்ச கூச்சம் கூட இல்லாமல் படு கேவலமான முறையில் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.பார்க்கின் எந்தப் பக்கம் போனாலும் இவர்கள் ராஜ்ஜியம் தான்.

Saturday, 29 December 2007

ந.ஒ.க...ஐடியா நெ.911

சர்வேஷன் அங்கிள் நான் பிசியாக இருக்கும் நேரத்தில் ந.ஒ.க போட்டி நடத்தி முடித்துவிட்டார். ஆனாலும் என் பங்கிர்கு ஒரு கதை எழுதி விட்டேன்.

" இந்த கதையில் வரும் கதா பாத்திரங்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் மனதில் வைத்தோ புண்படுத்தும் நோக்கத்திலோ எழுதப் படவில்லை"

அதிபர் ஓவர்டோஷ் அலுவலகத்தில் இருந்து AIC இயக்குனர் வாட்டர் கேஸிற்கு அழைப்பு வந்தது. உடனே கேஸ், அதிபர் அலுவலகம் புறப்பட்டார்.அங்கு அதிபரும் வெளியுறவு மந்திரி மோனலிஸா ஐஸும் முக்கியமான ஆலோசனையில் இருந்தார்கள்.அங்கு சில புலனாய்வு உயர் அதிகாரிகளும் தெற்காசிய விவகாரங்களுக்கான் அரசாங்க உயர் அதிகாரிகளும் உடனிருந்தார்கள். அதிபரின் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது. மற்றவர்களும் பரபரப்பாக இருந்தார்கள்.

அதிபர்:"உங்கள எல்லாம் எதுக்கு வர சொல்லி இருக்கேனு தெரியுமா?"

மந்திரி மோனலிஸா ஐஸ் எல்லாரயும் ஒரு பார்வை பார்த்தார்.

AIC இயக்குனர் கேஸ் : மிக முக்கியமான விஷயத்திற்காக என்பது மட்டும் புரிகிறது.

அதிபர்: போராக் விஷயத்தில் உங்க எல்லார் பேச்சயும் கேட்டு எனக்கு பெரிய தலை வலி வந்தது தான் மிச்சம். இதுல இருந்து மக்களையும் மற்ற உலகத் தலைவர்களையும் திசை திருப்பனும்னா ஏதாவது அதிரடியா செஞ்சாகனும்.

கேஸ் : போராக்ல இருக்கிற படைகளை எல்லாம் வாபஸ் வாங்கிக்கலாம். கொஞ்ச நாள் அதப் பத்தி பேசிட்டு அப்புறம் எல்லாரும் மறந்துடுவாங்க.

மோனலிஸா ஐஸ் : பாதுகாப்பு படைகள் இல்லைனா அந்த நாடு மொத்தமா தீவிரவாதிகள் கைல போய்டும்னு உங்களுக்கு தெரியாதா மிஸ்டர் கேஸ்.

அங்கு கூடியிருந்த அதிகாரி அவர் பக்கத்திலிருந்தவரிடம்" இப்போ மட்டும் என்னவாம். தீவிரவாதமும் ஒரு வித அதிகார வெறிதானே. நாம் எந்த விதத்தில் அவர்களுக்கு சளைத்துவிட்டோம்.?"

கேஸ் (மனதிற்குள்) : ரொம்பத்தான் அக்கறை. அங்க இருக்கிற பெட்ரோல் கிணறுகளை விட்டு வர முடியாதுனு சொல்ல வெண்டியது தான.

அதிபர் டோஷ் ( கோபமாக) : எதற்கு தேவை இல்லாத வாக்கு வாதம். இப்போ செய்ய வேண்டியதப் பத்தி பேசறிங்களா?.. போராக் விஷயத்த மறக்கனும்னா உடனே பால் காய்தா இயக்கத் தலைவன் பன்வேடனை பிடித்தாக வேண்டும்.அதற்கு வழி சொல்லுங்க.

கேஸ் : அதற்கு என்னிடம் ஒரு ஐடியா இருக்கு மிஸ்டர் ப்ரசிடெண்ட்.

அதிபர் : இதுவரை 910 ஐடியா குடுத்துட்டிங்க. இனியாவது உருப்படியா ஒரு ஐடியா குடுங்க மிஸ்டர் கேஸ்.இன்னும் 24 மணி நேரத்துக்குள் எனக்கு திட்ட அறிக்கை குடுக்கனும்.

.. மேலும் பல ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டம் கலைகிறது.
அடுத்த நாள் இதே கூட்டம் நடக்கிறது.

அதிபர்: மிஸ்டர் கேஸ். விஷயத்துக்கு வறேன். நான் சொன்னது என்னாச்சி?

கேஸ் :திட்டம் தயார் மிஸ்டர் ப்ரஸிடெண்ட். இது ஐடியா நெ.911. சொல்றேன் கேளுங்க.
கேஸ் விவரிக்கிறார்.
" பன்வேடன் இப்போ Talkistanல தான் இருக்கான் என்பது நமக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா நேரடியா நம்மளால டாக்கிஸ்தான்ல கால் வைக்க முடியல. விஷரப் பின்னாடி இருந்துகிட்டு தான் செயல்பட முடியுது. அந்த ஆள முழுசா நம்ப முடியாது. நாம நேரடியா களத்துல இறங்கனும். அதுக்கு டாக்கிஸ்தான்ல பெரிய அளவுல ஒரு குழப்பத்த உண்டாக்கனும். அத பெரிய கலவரமா மாத்தி அதுக்கு பால் காய்தா மேல பழிய போடனும். அத காரணம் காட்டி பன்வேடனை பிடிக்க டாக்கிஸ்தான் நம்ம உதவியை கேக்க வைக்கனும்."

மோனலிஸா ஐஸ்: விஷரப் அதுக்கு சம்மதிக்கனுமே. அத விட முக்கியம் டாக்கிஸ்தான் மக்கள் நமக்கு எதிராவும் பால் காய்தாவிற்க்கு ஆதரவாகவும் இருக்காங்களே. இத எல்லாம் எப்டி சமாளிகிறது.

கேஸ்: ( மனதிற்குள்) அட மங்குனி அமைச்சரே. (சத்தமாக) அதுக்கு தான் ஐடியா நெ.911 முக்கியத்துவம் தருது. அதாவது டாக்கிஸ்தான் மக்கள் மதிக்கிற ஒரு தலைவரை கொல்லனும். அதுக்கு காரணம் பன்வேடன் தான்னு அவங்கள நம்ப வைக்கனும்.அப்புறம் தானா நாட்டுல கலவரம் வெடிக்கும். நம் கைவரிசையை காட்டி கலவரத்தை கட்டுக்கடங்காமல் ஆக்கி விடலாம். இதுக்கு முதல்ல விஷரப்பிற்கு நெருக்கடி தந்து தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட செய்வோம். பிறகு டபாய்லயும் டண்டண்லயௌம் இருக்கிற அந்த 2 தலைவர்களையும் டாக்கிஸ்தானுக்கு வரவைப்போம்.
... மேலும் பல ரகசியங்களை சொல்லி முடிக்கிறார்...

பிறகு இவை எல்லாவற்றையும் செய்ய தனித்தனி குழுக்கள் நியமிக்கப் படுகிறது.

ஒரு குழு கானாஸிரை சந்திக்கிறது.
" திருமதி கானஸிர், நாங்கள் விஷரப்பிடம் பேசி உங்கள் மீது இருக்கும் எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வைக்கிறோம். நீங்களும் அவருடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் பிரதமர் ஆவதற்கு அவர் உதவி செய்வார். அவர் அதிபர் ஆவதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோ தான்.'
எதிர் வரும் ஆபத்து பற்றி தெரியாமல் கானாஸிர் இதற்கு சம்மதிக்கிறார்.

மற்றொரு குழு அரிப்பை சந்திக்கிறது
" மிஸ்டர் அரிப்,எங்கள் நோக்கம் பன்வேடனை பிடிப்பது அல்லது அழிப்பது தான்.அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை. அதற்கு பலனாக நாங்கள் உங்களை பிரதமராக்குகிறோம்.இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, விஷரப் அதிபர் ஆவதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருங்கள். உங்கள் மீது இருக்கும் ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்ய வைக்கிறோம்.பொது தேர்தலையும் நடத்த ஏற்பாடு செய்கிறோம்.பிறகு நீங்கள் நாட்டிற்கு சென்று தேர்தலில் பங்கேற்கலாம்.நீங்கள் ப்ரதமர் ஆனதும் விஷரப்பை அதிபர் பதவியில் இருந்து தூக்கிவிடலாம். அதற்கும் வலுவான காரணம் இருக்கு. நாங்கள் கொடுத்த நிதி பெரும்பாலும் பால் காய்தாவிற்கு போய் சேர்ந்திருக்கிறது. அதை நிரூபித்து அவரை தூக்கிவிடலாம். அல்லது தூக்கிலிடலாம்."

அரிப்: இதற்கு நான் சம்மதிக்கிறேன். ஆனால் தேர்தலில் கானாஸிரும் போட்டியிடுவாரே. அவர் விஷரப்புடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ளார். அவரை வெற்றிபெற வைப்பதற்கு விஷரப் முயற்ச்சி செய்வார். அதை எப்படி சமாளிப்பது?. மேலும் மக்கள் பால் காய்தாவிற்கு அதராவாகவும் உங்களுக்கு எதிராகவும் இருக்கிறார்கள்.அப்படி இருக்கும் பொது எப்படி பன்வேடனை அழிப்பது?

குழு: அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.தேர்தல் நடக்கும் போது கானாஸிர் உயிருடன் இருக்க மாட்டார்.பால் கய்தாவிலும் எங்கள் ஆட்கள் இருக்கிறார்கள். கானாஸிருடன் எங்கள் புலனாய்வு அதகாரிகள் ஆலோசனை நடத்தும் படங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப் படும். உங்கள் நாட்டில் வைத்துக் கானாஸிர் கொல்லப் படுவார். அதுவும் பால் காய்தா இயக்கத்தின் மூலமே. அதை பால் காய்தவும் ஒத்துக் கொள்ளும்.பிறகு மக்கள் அவர்களுக்கு எதிராகவும் விஷரப்பிற்கு கலவரத்தில் ஈடுபடுவார்கள். விஷரப் மக்களை சமாளிக்க பால் காய்தா மீது நடவடிக்கை எடுப்பார். அதற்கு எங்கள் உதவியை கேட்பார். நீங்களும் TPP கட்சியினருக்கு ஆறுதல் சொல்வது போல் பேசி அவர்கள் மனதில் இடம் பிடித்து, நாங்கள் உள்ளே வர ஆதரவு தர வேண்டும். பிறகு நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

எதிர்காலத்தில் தனக்கு போட்டியே இருக்காது என்ற சபலத்தில் இதற்கு அரிப் உடன்படுகிறார்.

இன்னொரு குழு விஷரப்பை சந்திக்கிறது.
" மிஸ்டர் விஷரப், தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். நீங்கள் அதிபர் ஆவதற்கான வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கானாஸிர் மற்றும் அரிப் ஆகியோர் மேல் இருக்கும் ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்து அவர்கள் இருவரும் நாடு திரும்ப வகை செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் ஜனநாயகத்தை விரும்புவது போன்ற தோற்றத்தை மக்கள் மனதிலும் மற்ற நாடுகளின் மத்தியிலும் உண்டாக்கலாம். ஊழல் வழக்கை தள்ளுபடி செய்தால் அவர்களூம் நீங்கள் அதிபர் ஆவதை ஏற்றுக்கொள்வதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்."
தான் பதவியில் இல்லாமல் இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து என்பது தெரிந்த்ததால், விஷரப் இதற்கு சம்மதிக்கிறார்.

பிறகு பால் காய்தாவிற்கு கானாஸிருடன் தங்கள் நாட்டு புலனாய்வு அதிகாரிகள் பேசும் போது எடுத்த புகை படங்கள் அனுப்பிவைக்க்கப் பட்டு, பால் காய்தாவின் ஹிட் லிஸ்டில் கானாசிர் பெயர் சேர்க்கப் படுகிறது. அவரை கொல்வதற்கான திட்டங்களும் உளவாளிகள் மூலம் பால் காய்தாவில் உருவாக்கப் படுகிறது.

*******

சில மாதங்கள் கழித்து அதிபர், மந்திரி மற்றும் கேஸ் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி கொள்கிறார்கள். தங்களின் 911வது ஐடியா கச்சிதமாக நிறைவேறிக் கொண்டிருப்பதால், இந்த சந்திப்பின் முடிவில் அதிபர் இராணுவத் தலைமயகத்துக்கு முக்கிய செய்தி ஒன்றை அனுபுகிறார்.

" டாக்கிஸ்தான் நாட்டுக்கு செல்ல தேவையான படைகளை தயார் செய்யுங்கள். "

நச்சுன்னு 1000 கள்ள வோட்டு, வாங்க வாங்க... குட்டீஸ் டீல்,



நம்ம சர்வேசன் மாமா நச்சுன்னு ஒரு கதை போட்டி வெச்சிருக்காரு.ஏதோ ஐந்து ஆறு கதைதான் போட்டிக்கு வரும்ன்னு நெனச்ச சர்வேசன் மாமா 57 கதை வந்ததுல அரண்டு போயிட்டாரு. முதல் பரிசுக்குண்டான கதையை தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி தேர்தல் அறிவித்திருக்கிறார்.

இங்குதான் குட்டீஸ் நமக்கு முக்கியத்துவம் வருகிறது.இந்த தேர்தலில் குட்டீஸ் நம்ம வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.நாமளே குட்டீஸ் நமக்கு கதைல்லாம் புரியவா போவுது அதுனால நம்ம வோட்டுக்களை வைத்து நாம் நினைக்கும் விஷயங்களை சாதித்துக்கொள்வோம்.

நம் பலம் பாருங்க. நம்மகிட்டயே மொத்தம் 11 வோட்டு இருக்கு.இது இல்லாம நாம புடிக்கும் அடத்துல நம்ம அப்பா அம்மா வோட்டும் நாம சொல்றவங்களுக்கே போட வைச்சுட்டாப்போச்சு அதுல ஒரு 20 தேறும். அப்புறம் நம்ம இம்சை மாமா ஸ்டூடண்ட்ஸ்க்கு இம்சை மாமா மேல ரொம்ப மரியாதையாமா. இம்சை மாமாக்கு நம்ம சங்கத்து சிங்கம் பவன் மேல பயம் கலந்த மரியாதையாமா. சோ நம்ம சிங்கம் பவன் சொன்னா இம்சை மாமா ஸ்டூடண்ட்ஸ் 600 பேருக்கும் அவங்க மெயில் ஐடி ய வெச்சு வோட்டு போட தயாரா இருக்காங்க.(அவங்களுக்குள்ளாம் தமிழே தெரியாதாம் அதனாலென்ன? ) நந்து மாமா கதை எழுதுன மேட்டர் தெரிஞ்சு அவரு ப்ரண்ட்ஸ் சொந்தம் பந்தம்லாம் வோட்டுப்போட ரெடியா இருக்காங்க

அப்படி இப்படின்னு ஒரு 1000 வோட்டு ரெடியா இருக்கு. பிசாத்து 45அல்லது50 வோட்டுக்கள்தான் மொத்தத்துக்கே விழுதாம். குட்டீஸ் நாங்க கைய காட்டுனா 1000 வோட்டும் ஒருத்தருக்கே.

வோட்டு தேவைபடரவங்க எங்க டீல் என்னன்னு தெரிய எங்க குட்டீஸ்கார்னர் மெயில் ஐடிக்கு தனியா வந்து பேசவும். பொதுவில் பேசினால் தலைமை தேர்தல் சர்வேஷனர் தேர்தலை நிறுத்தும் அபாயம் இருக்கிறது.

இது ஒரு அரிய வாய்ப்பு குட்டீஸை அணுகி பயனடைவீர்

Monday, 24 December 2007

Youtube ல் இங்கிலாந்து ராணியின் அதிகாரப்பூர்வ Channel


இங்கிலாந்து ராணி Youtube ல் தனக்கென ஒரு Channel ஐ உருவாக்கி இருக்கிறார்.விடியோக்கள் வேறு யாரும் பயன்படுத்த முடியாத படி அரண்மனையின் வேண்டுகோளுக்கு இணங்க Embedding Disable செய்யப்பட்டுள்ளது. இதில் பல சமயங்களில் பதிவு செய்யப் பட்ட பல்வேறு அரிய விடியோ படங்களை பார்த்து ரசிக்கலாம். கிரிஸ்துமஸ் செய்தி அல்லது 2007ஆம் ஆண்டிற்கான ராணியின் உரை கிறிஸ்துமஸ் தினத்தன்று சுமார் 3PM (GMT) மணி அளவில் இதில் இடம்பெறும்.
கண்டு ரசிக்க : TheRoyalChannel

Saturday, 22 December 2007

"போட்டி Vs விருதுகள் !! - என் சிறு கருத்து"

"போட்டி Vs விருதுகள் !! - என் சிறு கருத்து" என்று செல்லா மாமா ஒரு பதிவு போட்டிருக்கார்.. எபப்டியும் இந்த தலைப்பு ஒரு ரவுண்டு வரும் என்ற நம்பிக்கையில் இப்போது சுடரை 2வது ஆளாக நான் பிடித்திருக்கிறேன். :)

நானும் என் சிறு கருத்தை சொல்லிவிடுகிறேன். :)

போட்டி நடத்தறது எந்த தப்பும் இல்ல. ப்ரச்சனையே அது நடக்கும் இடம் , சூழல், நடத்தும் விதம்... இதுல தான் இருக்கு. இப்போ தமிழ் பதிவுலகத்துல பலவிதமான போட்டிகள் நடந்தாலும் தமிழ்மணம் நடத்தப் போகும் சிறந்த வலைபதூவிற்கான விருது பற்றித் தான் பல விதமான கருத்துகள் வெளிவருகிறது. இந்த விருது வழங்குவதை பலரும் ஆதரித்தாலும் அதை எதிர்ப்பவர்களை செல்லா மாமா போன்றவர்கள் தான் குறை சொல்கிறார்கள்.

தமிழ் பதிவு உலகத்தில் பல மோசமான யுத்தங்கள் இப்போது தான் முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழ்மணத்தின் சிறந்த வலைபதிவு விருதுக்கு பிறகு வெண்டுமென்றே சிலர் புறக்கணிக்கப் பட்டதாகக் கூறி அந்த பழய யுத்தம் மீண்டும் துவங்கப் படலாம். மீண்டும் இரு அணிகள் உருவாகலாம். இப்போது இருக்கும் அமைதி கெட வாய்ப்பு உள்ளது.

சிலர் தமிழ்மணத்தை விட்டு வெளியேறுவார்கள். சிலர் தமிழ்மணம் மற்றும் சில தனி நபர்கள் பற்றி அவதூறாக ஏதேனும் பேசி தமிழ்மணத்தை விட்டு வெளியேற்றப் படலாம்.
அதேசமயம் இந்த விருதுக்கு பல பதிவர்களும் ஆதரவு தெரிவிப்பதால் இதை கை விடவும் கூடாது. அதற்கு எனக்கு தெரிந்த ஒரு சிறு யோசனை..

.... இந்த விருது விஷயத்தில் தமிழ்மணத்தை முழுமையாக நம்புவதற்கு அடையாளமாக " தமிழ்மணம் வலைப்பதிவு விருது 2007" லோகோவை தங்கள் பதிவுகளில் இடம்பெறச் செய்ய வைக்கலாம். அந்த லோகோவை பயன்படுத்தி இருக்கும் வலைப்பூக்களை மட்டும் விருதுக்கு பரிசீலிக்கலாம். இதன் மூலம் சர்ச்சைகளை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.

ஓசை செல்லா அங்கிளின் பதிவிலிருந்து,
"போட்டியாளர்களுக்கு நல்ல உதாரணம்: எங்கள் PiT போட்டியாளர்கள்... நேற்று முடிவு அறிவிக்கப்பட்டதும் பங்கேற்ற அனைவரும் வெற்றியாளர்களைப் பாராட்டும் இலகுவான மனநிலை!" "

ரொம்ப கரெக்ட் அங்கிள். PIT போட்டியில் பங்கேற்க விரும்பியவர்கள் தங்கள் விருப்பத்தை போட்டி அறிவிப்புக்கான பதிவில் வந்து பின்னூட்டமாக சொல்லி இருந்தோம். அதாவது PIT போட்டிக்கான நடுவர்கள் மீதும் அந்த போட்டி மீதும் நம்பிக்கை வைத்து அதில் கலந்துக் கொண்டதை அறிவித்தோம். அதனால் தான் முடிவு தெரிந்ததும் வெற்றியாளர்களை மனதார வாழ்த்தினோம். நடுவர்களையும் பாராட்டினோம்.

இதுவே , போட்டி தலைப்புக்கு ஏற்ற படங்களை PIT நடுவர்களே தேடிப் பிடித்து விருது கொடுத்திருந்தால் இந்நேரம் ரணகளம் ஆக்கியிருக்க மாட்டோமா? :P. ஆகவே மக்களே... தமிழ்மணம் வலப்பதிவு விருது 2007 க்கு பதிவுகளை பரிசீலிப்பதற்கு முன் இதில் விருப்பம் உள்ளவர்களின் பட்டியலை முதலில் தயார் பண்ண வேண்டும். என்ன நாஞ்சொல்றது? :-))

Sunday, 9 December 2007

அன்னை சோனியாகாந்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Saturday, 8 December 2007

மங்களூர்ல ரயில் எப்படி நிறுத்துவாங்க?. எப்படி ரிவர்ஸ் எடுப்பாங்க?

குசும்பன் அங்கிள் ஈரோட்ல பஸ் நிறுத்துவாங்க என்றும் எங்க சங்கத்து சிங்கம் வீக் எண்ட் ஊர் சுத்தி பையன் பவன் ஈரோட்ல எபப்டி ரயில் நிறுத்துவாங்க என்றும் விளக்கி ஒரு பதிவு போட்டிருந்தாங்க.

இப்போ நம்ம சிவா மாமா போற ரயில் எப்படி மங்களூர்ல நிறுத்தறாங்க, அவர இறக்கி விட்டு எப்படி ரிவர்ஸ் எடுக்கிறாங்கனு இங்க நீங்க பாக்க போறிங்க..

1. எப்படி நிறுத்தறாங்கனு இங்க பார்க்கலாம்.

2.எப்படி ரிவர்ஸ் எடுக்கிறாங்கனு இங்க பார்க்கலாம்.

Friday, 7 December 2007

டிசம்பர் மாத PIT போட்டிக்கு

ரொம்ப கஷ்ட படாம எங்க வீட்டு காம்பௌண்ட் சுத்தியே எடுத்துட்டேன். :-) இந்த பூக்களை எல்லாம் போட்டிக்கு எடுத்துப்பாங்களா தீபா ஆண்டியும் செல்லா அங்கிளும்? :)




Thursday, 6 December 2007

பபாசங்கம் போட்டி - நடந்தது என்ன?



சென்ற மாதம் பபாசங்கத்து தங்கங்கள்( நன்றி : G3 ஆண்ட்டி ) ஒரு போட்டியை அறிவித்து இருந்தார்கள். ஆனால் பாவம் யாருமே அந்த போட்டியில் கலந்துக் கொள்ள முனனும் வரவில்லை... பின்னும் வரவில்லை. யாராவது ஒருவராவது கலந்து கொள்வாரா என எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சங்கத்து தங்கங்கள் ஆள் வைத்து( அடியேன் உட்பட) அந்த போட்டி அறிவிப்பு பதிவுக்கு பின்னூட்டம் போட்டு 27ம் தேதி வரை இழு இழு என்று இழுத்து அந்த பதிவு தமிழ்மணத்தில் தெரிந்துக் கொண்டே இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள். அப்படியும் யாரும் போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை.

பொதுவாக ஒரு போட்டியை அறிவிக்கும் நிறுவனம் மற்றும் அதை சார்ந்தவர்கள் அந்த போட்டியில் கலந்துக் கொள்ளக் கூடாது என்ற விதியையும் மீறி, வேறு வழியே இல்லாமல் சங்கத்து உருப்பினரே ஒரு பதிவை (என்ன கொடுமை சார் இது??) போட வேண்டிய நிலைக்கு வர வேண்டியதாகிவிட்டது. அதற்கடுத்தும் யாரும் போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை. இதை கண்டு வெறுத்து போன மை ஃப்ரண்ட் அத்தை "சாவடிக்கிறாங்களே என்னைய!!!!!" என்று புலம்பி " போட்டி முடிய இன்னும் நாளே நாள்.. இன்னும் தாமதம் ஆகுல.. வாங்க.. " என்று கெஞ்சும் நிலைக்கு தள்ளப் பட்டது அனைவரும் அறிந்ததே. அப்படியும் யாரும் வரவில்லை.

இப்படி ஒரு அவலநிலைக்கு ஆளாகி விட்டதை எண்னி மனம் நொந்து போன பபாச தங்கங்கள் என்ன கொடுமை சார் இது என்று தலையிலடித்துக் கொண்டு யோசித்து பின் ஏகமனதாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது சங்கத்து செயர்குழுவை கூட்டுவதென்று. இந்த கொடுமையான விஷயம் வெளி உலகத்திற்கு தெரியும் முன் எதாவது செய்தாக வேண்டும் என்று விவாதித்ததில் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

"என்ன கொடுமை சார் இது?" என்று யாரவது தங்கள் பதிவில் தப்பி தவறி சொல்லி இருந்தால் அந்த பதிவை தாங்களே முன்சென்று அதை போட்டிக்கு எடுத்துக் கொண்டு அந்த பதிவரையே வெற்றியாளராக அறிவித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். எப்படியும் வெற்றியாளர் என்று அறிவிப்பதாக சொன்னால் அந்த பதிவரும் தான் அந்த போட்டியில் கலந்து கொண்டதாக வெளியே பீற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இந்த அரிய முடிவுக்கு வந்தார்கள்.

பிறகு வலை வீசித் தேடியதில் கண்ணில் பட்டது தான் நம்ம குசும்பன் அங்கிளின் "பெண்களை குட்டினால் என்ன ஆகும்? அது தப்பா?"பதிவு. இந்த பதிவுக்கும் போட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். இந்த பதிவின் கடைசியில் எதேச்சையாக " என்ன கொடுமை சார் இது" என்ற டயலாகை சொல்லி இருப்பார். வேறு வழியே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த சங்க தங்கங்களுக்கு இது சொக்கத் தங்கமாய் தெரிய உடனே குசும்பன் அங்கிளை தொடர்பு கொண்டார்கள்.

இது தான் சந்தர்ப்பம் என நினைத்த குசும்பன, இந்த உள்குத்திற்கு சம்மதிக்க வேண்டுமெனில் சில நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஏகப் பட்ட நிபந்தனைகளை விதித்தார். பேச்சு வார்த்தை விரைவில் முடிந்து ஒரு சுபமான முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் "போட்டிக்கு வந்த படைப்புகளில் பரிசு பெற்றவங்கள தேர்ந்‍தெடுத்து இன்னும் ரெண்டு நாள்ள அறிவிப்பு வெளியிடறோம்." என்று அவசரமாக டிசம்பர் 1 அன்று நன்றி சொல்லி அறிவிப்பெல்லாம் கொடுத்து அமர்க்களப் படுத்தினார்கள்.ஆனால் பேச்சுவார்த்டை நீண்டு கொண்டே போனதில் டிசம்பர் 6ம் தேதி தான் உடன்பாடு கையெழுத்தானது. இறுதி செய்யப்பட்ட நிபந்தனைகள் வருமாறு :-

1. பரிசு வழங்குவதற்கு பிரமாண்டமான விழா ஏற்பாடு செய்ய வேண்டும்.
2. தன் தலைவி ஸ்ரேயா கோசல் கைய்யால் விருது வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் வரும் கலக்கல் மன்னர்கள் மாதிரி கோட் அணிய வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.


இதில் முதல் நிபந்தனை பற்றி கவலை இல்லை. இருகவே இருக்கு Youtube. 3வது நிபந்தனை பற்றியும் கவலை இல்லை. குசும்பனே போட்டோஷாப்பில் கோட் மாட்டிக்கொள்வார். 2வது நிபந்தனை பற்றி தான் சங்க தங்கங்களுக்கு பெரும் கலக்கம். இங்கும் குசும்பனே கை கொடுத்துவிடார். இதை அமுக்கி இதில் 2வது படத்தையும் , இதை அமுக்கி இதில் ஸ்ரேயா போட்டியாளரை அறிவிப்பதாக பாவ்லா காட்டும் படத்தையும் பாருங்க.

ஸோ குசும்பன் புண்ணியத்தில் சங்கத்து சிங்கங்கள் ஆறு நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நிம்மதி பெருமூச்சி விட்டுக் கொண்டார்கள்.

திமுக முதல்வர்கள் பட்டியல் - வெளிவராத தகவல்கள்


இந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் முக்கியச் செய்தி : அன்பழகன் இணை முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர்.

இன்னும் வெளிவராத தகவல்களை உங்களுக்கு அளிப்பதில் பெருமை அடைகிறேன். :)

கருணாநிதி - முதல்வர்
அன்பழகன் - இணை முதல்வர்
ஸ்டாலின் - துணை முதல்வர்(வடக்கு)
அழகிரி - துணை முதல்வர் ( தெற்கு)
கனிமொழி - கூடுதல் முதல்வர்(வடக்கு பிராந்திய அரசியல் அணி)
பொண்முடி - கூடுதல் முதல்வர் ( தலைமை செயலக நிர்வாகம்)
கோ.சி.மணி - கூடுதல் முதல்வர் ( திமுக உறுப்பினர் தேர்வானையம் )
வீரபாண்டி ஆறுமுகம் -கூடுதல் முதல்வர்( எதிர்க் கட்சியினர் அறிக்கை தடுப்பு பிரிவு )
துரை முருகன் - கூடுதல் முதல்வர் ( சட்டம் ஒழுங்கு)
ஆற்காடு வீராச்சாமி - கூடுதல் முதல்வர் ( குற்ற புலனாய்வு பிரிவு)
ஐ. பெரியசாமி - கூடுதல் முதல்வர் ( பொருளாதாரக் குற்ற தடுப்புப் பிரிவு)
வேலு - கூடுதல் முதல்வர் (பொது விநியோக குற்ற தடுப்பு பிரிவு)
கே.என். நேரு - கூடுதல் முதல்வர் ( சிறப்பு அதிரடிப் படை)
பூங்கோதை - கூடுதல் முதல்வர் ( மகளிர் ஆணையம்)
தங்கம் தென்னரசு - கூடுதல் முதல்வர் ( தொண்டர் அணி பயிற்சி)
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - கூடுதல் முதல்வர் ( லஞ்ச ஒழிப்புத் துறை)
கீதா ஜீவன் - கூடுதல் முதல்வர் ( தொண்டரணி குடியிருப்பு வாரியம்)
பொங்கலூர் பழனிச்சாமி - கூடுதல் முதல்வர் ( தீயணைப்பு துறை)
பெரிய கருப்பன் - கூடுதல் முதல்வர் ( சிறைத் துறை)

இன்னும் ஏராளமான துணை முதல்வர்கள் மற்றும் உதவி முதல்வர்கள் பட்டியல் திமுக இளைஞர் அணி மாநாட்டில் வெளியிடப் படும். :)

Wednesday, 5 December 2007

ஒரு உண்மை காதல் கதை

ஒரு பணக்கார வீட்டுப் பெண் ஒரு க்ளீனர் பையனை காதலிக்கிறாள். இது அவளோட அப்பாக்கு தெரிஞ்சதும் அவர் வழக்கம் போல தடுக்க நினைக்கிறார். அதனால் 2 பேரும் வீட்ட விட்டு ஓடிப் போறதுனு முடிவு பண்ணி கெளம்பிடராங்க. அந்த பொண்ணோட அப்பா அவங்கள தேட ஆரம்பிக்கிறார். ஆனா கண்டு பிடிக்க முடியல. கடைசில அவர் அவங்க 2 பேரோட காதலை ஏத்துகிட்டு , அவங்க திரும்பி வீட்டுக்கு வரணும்னு ஒரு செய்தி தாள்ல விளம்பரம் குடுக்கிறார்.

" நீ வீட்டுக்கு திரும்பி வந்தா அந்த பையனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன். நீங்க ஒருத்தர ஒருத்தர் உண்மையா காதலிக்கிறீங்கனு ஒத்துகிறேன்."

ஒரு வழியா அவங்க காதல்ல ஜெயிச்சி வீட்டுக்கும் திரும்பி வந்துடறாங்க. அடுத்த நாள் 2 பேர்ரும் அவங்க திருமண உடைகள் வாங்கறதுக்காக நகரத்துக்கு போறாங்க. அன்னைக்கு அந்த பையன் வெள்ளை உடை உடுத்தி இருந்தான். அப்போ அவன் மனைவிக்கு குடிக்க எதாச்சும் வாங்கலாம்ம்னு ரோட கிராஸ் பண்ணி போகும் போது ஒரு கார் அவன் மேல மோதி ரொம்ப அகோரமா இறந்துடறான்.

அத பார்த்ததும் அந்த பொண்ணு நினைவிழந்து போய்டறா. கொஞ்ச நேரம் கழிச்சி தான் அந்த அதிர்ச்சில இருந்து அந்த பொண்ணு மீளுது. அவன் ரொம்ப அகோரமா இறந்து போனதால அடுத்த நாளே இறுதி சடங்கு எல்லாம் முடிச்சிடறாங்க.

2 நாளைக்கு அப்புறம் அந்த பொண்ணோட அம்மாவுக்கு ஒரு கனவு வருது. அதுல ஒரு வயசான பெண் வறாங்க. அந்த வ.பெண் " உங்க பொண்ணு துணியில இருகிற அந்த பையனோட ரத்தக் கறைய உடனே சுத்தம் பண்ணுங்க"னு சொல்றாங்க. ஆனா அந்த அம்மா அத பெரிசா எடுத்துக்கல.

அடுத்த நாள் அந்த பொண்ணோட அப்பாவுக்கும் அதே கனவு வருது. அவரும் அத பெரிசா எடுத்துக்கல.

அப்புறம் அந்த பொண்ணுக்கும் அந்த கனவு வருது. அவ பயந்து போய் எழுந்து அவ அம்மாகிட்ட அந்த கனவு பத்தி சொல்றா.

இப்போ அந்த அம்மாவும் கொஞ்சம் கலவரமாகி உடனே அந்த துணியில இருக்கிற ரத்த கறையை உடனே சுத்தம் செய்ய சொல்றாங்க. அந்த பொண்ணு சுத்தம் செய்யறா. ஆனா கொஞ்சம் கறை மட்டும் அப்டியே இருக்கு.
அடுத்த நாள் அந்த பொண்ணுக்கு மறுபடியும் அதே கனவு வருது. திரும்பவும் அந்த துணிய சுத்தம் பன்றா. அப்போவும் கொஞ்சம் ரத்தக் கறை இருக்கு. அன்னைகும் அந்த பொண்ணுக்கு அதே கனவு வருது. அப்போ அந்த வ.பெண் கடைசி எச்சரிக்கை தறாங்க. அந்த ரத்த கறைய சுத்தம் செய்யலனா ரொம்ப மோசமா எதாவது நடக்கும்னு சொல்றாங்க.

இப்போ அந்த பொண்ணு அவளால முடிஞ்ச வரைக்கும் சுதம் செய்யறா. ஓரளவுக்கு கறை போய்டுது. ஆனாலும் கொஞ்சம் கறை அப்டியே இருக்கு. அவ ரொம்ப சோர்ந்து போய்டறா.

அன்னைக்கு மாலை நேரத்துல அந்த பொண்ணு தனியா வீட்ல இருக்கும் போது யாரோ கதவ தட்றாங்க. திறந்து பார்த்தா கனவுல வந்த அந்த வயசான பெண் எதிர்ல நிக்கிறாங்க. உடனே அந்த பொண்ணு பயந்து மயங்கி விழுந்துடறா. அந்த வ.பெண் இந்த பொண்ண எழுப்பி அவ கைல நீல நிறத்துல ஒரு பொருள குடுக்கிறாங்க. அத பார்த்து அந்த பொண்ணு அதிர்ச்சி ஆகி என்ன இதுனு கேக்கிறா.

அந்த வ.பெண் " இதான் சர்ஃப் எக்செல்.. இந்த கற ..அந்த கற..எந்த கறையா இருந்தாலும் நொடியில போய்டும்" :P

நோ..நோ.. அழக் கூடாது.. :D

( எனக்கு வந்த மெயில்ல நிர்மானு தான் இருந்தது. அதோட இருந்தா பரவால்ல.. அதுக்கு கீழ ஹிந்தில 4 வரி இருந்தது. அது எவனுக்கு புரிஞ்சது.. அதான் நிர்மா சர்ஃப் எக்செல்லா மாறிடிச்சி :)) )

Tuesday, 4 December 2007

எதிர் தேன் கிண்ணம்

தேன் கிண்ணத்தில் நேயர் விருப்பம் சரியாக கண்டுக் கொள்ளப்படுவதில்லை என்பதை கண்டிக்கும் அதே நேரத்தில் ஒரு எதிர் தேன்கிண்ணம் அரங்கேற்றவும் தேன்கிண்ணம் அதிருப்தி ரசிகர் படை முடிவு செய்துவிட்டது. :-)

எதிர் பதிவு, எதிர் கவிஜ மாதிரி இது எதிர் தேன்கிண்ணம். :-))

ஓகே.. ஸ்டார்ட் மீஜிக்.. :-))

Get this widget | Track details | eSnips Social DNA


வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ஸ்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள் நான் வேண்டும்

(வசீகரா)

நன்றி : Pallasathena

என்ன கொடுமை சார் இது?

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆணாலும் இந்த தலைப்பை நாம விடப் போறதில்லைனு நெனைக்கிறேன் :) .

நம்ம சினிமா ஈரோங்க எல்லாம் அடிக்கடி சொல்ற வசனம் இது " நான் ஒரு தரம் பார்த்தா சுத்துற பூமி கூட சுத்தறத நிறுத்திகும்டா''..
சரி நம்மளால இந்த ரேஞ்சிக்கு எல்லாம் முடியாட்டியும் , சுத்துற ஃபேனையாச்சும் நிப்பாட்டி பாக்கலாம்னு ட்ரை பண்ணி பார்த்தேன். அட போங்கய்யா.. அது நம்மள ஒரு டேஷ்னு கூட மதிக்கல.. வேற வழி.. அத மொறச்சி பாத்துட்டே ஃபேன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன்.. ஹ.. நாமல்லாம் யாரு.. முடியுமா? முடியாது...( வடிவேலு ஸ்டைல்ல படிங்க).

ஆனா அவங்க ஜாதி ஆளு பாகும் போது மட்டும் சுத்தறத நிறுத்திடிச்சிங்க.. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் ஒரு மின்னணு சாதனத்தை பத்தி இன்னொரு மின்னணு சாதனத்துக்கு தாங்க தெரியுது.. நான் பாக்கும் போது சுத்திடிருந்த ஃபேன் என் கேமரா பார்வைக்கு மட்டும் சுத்தாம நின்னுடிச்சி பாருங்க.. என்ன கொடுமை சார் இது? :(

Tamiler This Week