இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 25 October, 2007

தமிழ் ரியாலிட்டி ஷோ

ரியாலிட்டி ஷோக்கு தமிழ்ல என்ன? :(

நட்பின் சுவாசம் என்ற பதிவில் அப்பப்போ எதுனா போட்டி நடத்துவாங்க. இப்போ புதுசா ரியாலிட்டி ஷோவ பத்தி எழுதனும்னு ஒரு போட்டி அறிவிச்சு இருக்காங்க. அத பாத்ததும் நம்மளும் எதுனா முயற்சி பன்னலாம்னு தோனுச்சி.

ஆங்கில சேனல்கள்ல வந்த ரி.ஷோ* வ மட்டும் ரசிச்ச நமக்கு தமிழ்ல விஜய் டிவி மொத மொதல்ல ரிஷோவ அறிமுகப்படுத்தினப்ப ரொம்ப சந்தோஷமாவும் ரசிக்கிர மாதிரியும் இருந்திச்சி. ஜோடி நெ1, கிராண்ட் மாஸ்டர், நீயா நானா?, சில்லுனு ஒரு ஜோடி, கலக்கப் போவது யாரு?.. இன்னும் நெறய்ய... இதுக்கு எல்லாம் கெடச்ச வரவேற்ப பாத்துட்டு அதையே அவங்க வாரத்துல 2 தடவ ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க.கொஞ்சமா போர் அடிக்க ஆரம்பிச்சது. ( அவங்களுக்கு பண மழை கொட்ட ஆரம்பிச்சது).

இது பத்தாதுனு சன் டிவி இத அப்படியே காப்பி அடிச்சி( கொஞ்சம் கூட அசிங்கமா இருக்ககதா? இவங்களுக்குனு சொந்த மூளையே இருக்காதா?) ஆட்கள மட்டும் மாத்தி ஒளிபரப்பினாங்க. இப்போ வாரத்துக்கு 3 முறை.

அடுத்து வந்தாங்க கலைஞர் டிவிகாரங்க. இவங்களும் கொஞ்சமும் கூச்ச நாச்சமே( இதுக்கு என்ன அர்த்தம்? ) இல்லாம அப்டியே பேரங்கள் வழியில் காப்பி தொழிலை சூடு பறக்க நடத்தினாங்க. இப்போ ரிஷோக்கள் வாரத்துக்கு 4 முறை. பார்த்தால் மட்டும் இல்லை. நினைத்தாலே எரிச்சல் தான் வருது.

இப்போ ரிஷோக்கள்ல பாக்கற மாதிரி இருக்கிறது நீயா நானாவும் கிராண்ட் மாஸ்டரும் தான். இது ரெண்ட்டும் மூளைக்கு அதிகம் வேலை வைக்கும் சமாச்சாரம்னு காப்பி கடை காரங்க விட்டுட்டாய்ங்க போல. :)

நோகாம நோம்பி கும்பிட நெனைக்கிற சன் டிவியும் கலைஞர் டிவியும் இன்னொரு கோபிநாந்த்துக்கும் இன்னொரு பிரதீப்க்கும் எங்க தான் போவாங்க பாவம். ;(
இதுல கூத்து என்னன்னா... சன் டிவிலயும் கலைஞர்லயும் வந்தப்புறம் தான் ரிஷோக்கு மவுசு( Mouse இல்ல) கூடிடிச்சாம்.
பார்க்க : என்ன சொல்றாங்கனு முக்கியமில்ல

இப்போ என்னதாண்டா பொடியா சொல்ல வற?
அடப் போங்க அமாஸ்* ரிஷோ*வ நெனச்சாலே எரிச்சல் எரிச்சலா வருதமாம். இதுல என்னத்த வந்து( அல்லது போய்) எழுதறது?

ச்ச.. இந்த சிவா மாமா கூட சேந்து நானும் மொக்கபோட ஆரம்பிச்சிட்டேன்.. :)

பொடிக்ஷனரி
ரிஷோ : ரியாலிட்டி ஷோ
அமாஸ் : அத்தை மாமாஸ்

9 Comments:

said...

அட பாவி பொடியா மாமா மாமான்னு சொல்லி என் மானத்தை வாங்காத அண்ணான்னு சோல்லு இல்லைனா சிவான்னு கூப்பிடு பரவாயில்லை

:-))
அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

நோ..நோ.. பெரியவங்கள பேர் சொல்லிகூப்ட கூடாதுனு என் கிளாஸ் மிஸ் சொல்லி இருக்காங்க.
என் கிளாஸ்மேட் அபியும் என் சீனியர் நிலாவும் கூட சொல்லி இருக்காங்க.
ஹக்காங்.. :)

said...

//
நோ..நோ.. பெரியவங்கள பேர் சொல்லிகூப்ட கூடாதுனு என் கிளாஸ் மிஸ் சொல்லி இருக்காங்க.
என் கிளாஸ்மேட் அபியும் என் சீனியர் நிலாவும் கூட சொல்லி இருக்காங்க.
ஹக்காங்.. :)

//
என்னாது அபி உன் க்ளாஸ் மேட்டா, நிலா சீனியரா?

அதெல்லாம் சரி பெரியவங்கள பேர் சொல்லிகூப்ட கூடாதுனு சொல்லிகுடுத்தாங்களே உன் மிஸ் அவிங்களுக்கு மாமா ஒரு ஹாய் சொன்னேன்னு சொல்லிடு

:-)

said...

// அதெல்லாம் சரி பெரியவங்கள பேர் சொல்லிகூப்ட கூடாதுனு சொல்லிகுடுத்தாங்களே உன் மிஸ் அவிங்களுக்கு மாமா ஒரு ஹாய் சொன்னேன்னு சொல்லிடு //

தெரியாமத்தான் கேக்கறேன்.. நீங்க எனக்கு மாமாவா? இல்ல பங்காளியா?
அதெல்லாம் எங்க(ஆளு:P) ஏரியா.. உள்ள வராதிங்க.

said...

நல்லா எழுதறீங்கன்னா!

said...

ரொம்ப நன்றிங்கோ... அப்பப்போ இப்டிக்கா வந்துட்டு போங்கோ.. இந்த சிவா மாமா கமெண்ட்ஸ் மட்டுமே பாத்து பாத்து போர் அடிக்கிது :P
ஹிஹி...

said...

//
~பொடியன்~ said...
சிவா மாமா கமெண்ட்ஸ் மட்டுமே பாத்து பாத்து போர் அடிக்கிது :P
//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அடிக்கடி வந்து என்ன பழைய போஸ்ட்டே பாகிறதா??


மொக்கையோ தக்கையோ புது போஸ்ட் போடுய்யா......

:-))

said...

போட்டுட்டேன் மாமோய்...

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘

Tamiler This Week