இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 24 October, 2007

என்ன சொல்றாங்கனு முக்கியமில்ல

ஒரு பழமொழி சொல்வாங்க. அதாவது " யார் சொல்றாங்கனு முக்கியமில்ல.. என்ன சொல்றாங்கனு தான் முக்கியம்" அப்படினு. அது தப்பு போல. இப்போ " என்ன சொல்றாங்கனு முக்கியமில்ல..யார் சொல்றாங்கனு தான் முக்கியம்"

தோ.. வந்துட்டேன்.
நெ.1 : " கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிளாதான் வரும்" --- இத கேட்டதும் உங்களுக்கு யார் நினைவு வரும். ரஜினி அங்கிள் தான?
அவர் கடைசியா நடிச்ச சிவாஜி படத்துல வில்லன் சொல்வார்" சிவாஜி, இப்டி தனியா வந்து மாட்டிகிட்டியே" னு. அதுக்கு தான் சிவாஜி அங்கிள் அப்டி ஒரு டயலாக் விடுவார். தியேட்டர்ல கூட செம விசில் அதுக்கு.( யேந்தான் இப்டி நம்மள கேனயன்ஸ் ஆக்கி பாக்கறாங்களோ?)
போன ஞாயித்து கெழமைக்கு முன்னால வரைக்கும் நானும் அப்டித்தான் நெனச்சிட்டு இருந்தேன். போன ஞாயித்துக் கெழம சன் டீவி ல கிரி படம் பாத்தேன். அதுல அர்ஜுன் அங்கிள் வில்லன் வீட்டுக்கு போவார். அப்போ ஆனந்த்ராஜ் அங்கிள் " உனக்கு என்ன தைரியம் இருந்தா எங்க எடத்த்க்கு தனியா வந்திருப்ப"னு கேப்பார்.

அதுக்கு அர்ஜுன் அங்கிள், " சிங்கம் எப்போவும் தனியா தான்டா வரும்.. பன்னிங்க தான் உங்கள மாதிரி கூட்டமா வரும்"னு சொல்வார். இந்த படத்த எத்தனயோ பேர் பாத்திருப்பாங்க. ஆனா யாருக்கும் ஞாபகம் இருக்காது.

அர்ஜுன் பேசினா அது சாதாரன டயலாக். அதயே ரஜினி காப்பி அடிச்சி பேசினா ஆரவாரமா? என்ன கொடுமை சரவணன்( இது ச.முகி ரஜினி.. அவர்கிட்டயே கேப்போம்) இது? இதுல ஒரே வித்தியாசம் இன்னான்னா? அர்ஜுன் அங்கிள் தனியா னு தமிழ்ல சொல்வார். அதயே ரஜினி அங்கிள் இங்கிலீஷ்ல சிங்கிள்னு சொல்வார்.
நெ.2 : " கலக்கப் போவது யாரு?" " ஜோடி நெ.1" இதெல்லாம் விஜய் டீவில ( தமிழ் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக) வந்தத விட இப்போ சன் டீவிலயும் கலைஞர் டீவிலயும் காப்பி அடிச்சி வந்தப்புறம் ரொம்ப பிரபலம் ஆய்டுச்சாம். அதாகப்பட்ட்டது.... என்ன சொல்றாங்கனு முக்கியமில்ல...
................. உங்களுக்கு தெரிஞ்ச என்ன சொல்றாங்கனு முக்கியமில்லகளை எழுதுங்கோ...........

6 Comments:

Anonymous said...

நல்லாத் தான் கீது :)

said...

//அர்ஜுன் பேசினா அது சாதாரன டயலாக். அதயே ரஜினி காப்பி அடிச்சி பேசினா ஆரவாரமா?
//
யோவ் பொடியா ரஜினியப்போய் யார்கூடவும் கம்பேர் பன்னலாமா?

சின்ன புள்ளைங்கிறதை நிரூபிச்சிட்ட பாரு

:-))

said...

காப்பி அடிச்சி பொலப்பு நடத்தினாலும் ரஜினி ரஜினி தான்னு சொல்றிங்களா அங்கிள். :))

நல்ல கதையா இருக்கே.. இத கேக்க யாருமே இல்லயா? :(((

said...

//அர்ஜுன் பேசினா அது சாதாரன டயலாக். அதயே ரஜினி காப்பி அடிச்சி பேசினா ஆரவாரமா? என்ன கொடுமை ரசிகன் இது?//
ஆமா மச்சி..காஞ்ச தக்காளியகூட ரொட்டில மசாலாதடவி வைச்சு தந்தாக்கா..பீட்சான்னு புகழுற உலகம் இது..
ஹா..ஹா... நல்லா சொன்னீங்க... பொடியன்ஸ்...nice..

said...

வாங்க ரசிகன்.. உங்கள இங்க பாக்கறதுல ரொம்ப சந்தோசம். :P..
//ஆமா மச்சி..காஞ்ச தக்காளியகூட ரொட்டில மசாலாதடவி வைச்சு தந்தாக்கா..பீட்சான்னு புகழுற உலகம் இது..//
ஹா..ஹா... நல்லா சொன்னீங்க... ரசிகன்...nice.. :)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘

Tamiler This Week