இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday, 25 October 2007

தகர்ப்பதில் தவறென்ன?

சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்தாமல் தடுக்கத் தான் எத்தனை எத்தனை தடைகள்? இதை செயல்படுத்துவதால் என்ன நன்மை என்பதை பெரியவர்கள் அனைவரும் பேசி தீர்த்துவிட்டதால் நான் அதை இங்கு அடுக்க போவதில்லை. சேது கால்வாய் திட்டத்தை எதிர்பவர்கள் சொல்லும் ஒரே காரணம் ராமர் பாலம் சேதமடைந்து விடும் என்பது தான். ராமர் உண்மையா? ராமர் பாலம் என்பது உண்மையா? என்பதை எல்லாம் மறந்துவிடுவோம். ஒருவேளை இது ராமர் பாலமாகவே இருந்தாலும்.

இந்த பாலம் அல்லது மணல் திட்டினால் யாருக்கு என்ன பலன் கிடைத்து வந்தது? இனி என்ன பலன் கிடைக்கப் போகிறது? ஏன் இதை தகர்ப்பதை தடுக்க வேண்டும்?। கோவில்கள் மற்றும் பழைமையான கட்டிடங்கள் அல்லது இடங்களை கூட அழித்துவிடலாமா? என்று மடத்தனமாக யாரும் எண்ண வேண்டாம். ஏனெனில் அவைகளை அழிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்பதால் அப்படியே இருக்கட்டும்.

ஆனால் இந்த பாலம் அல்லது மணல் திட்டை தகர்ப்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். சுற்றுலா வளர்ச்சி அடையும். அதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும்.

நாட்டின் எதிர்கால நலனை மனதில் கொண்டு அந்த நிமிடம் வரை அவர்களை வாழ வைத்த இன்யும் வாழ வைக்கப் போகிற விளைநிலங்களை அழித்து பாரம்பரியமாக அங்கு வாழும் மக்களை இடம் பெயர செய்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும் போது மனதை திடப்படுத்திக் கொண்டு வரவேற்பவர்கள், எந்த பயனும் இல்லாத இந்த ராமர் பாலம் அல்லது மணல் திட்டை அழிப்பதை யேன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்க வேண்டும்?

மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் மூடநம்பிக்கையை வள்ர்த்து அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதை வோட்டுக்களாக மாற்றீ அதன் மூலம் பதவிகளை அடைந்து ஏசி காரிலும் ஏசி பங்களாக்களிலும் சுகம் அனுபவிக்கும் வீணாப்போன இந்த வோட்டுப் பிச்சைக்காரர்களின் சுயநலத் தந்திரம் அல்லாமல் வேறென்ன இருக்க முடியும்?

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கூட எதிர்க்கப் படுகின்றதே என் வாதிடலாம். எங்கே எதிர்க்கப் படுகிறது? யாரால் எதிர்க்கப் படுகிறது என்று பாருங்கள். மேற்குவங்கத்திற்கு வெளியே தானே. சிகப்பு மனிதர்கள் பிழைப்பு நடத்தும் மே.வ. வில் மிகத் தீவிரமாக செயல்படுத்தப் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது? ஒரு வேளை எதிர்ப்பவர்களின் எதிர்ப்பயும் மீறி அங்கு சி.பொ.ம வந்து அதில் துவங்கப்படும் பன்னாட்டு நிருவனத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் வேண்டாம் என்று வீராப்பாய் வந்துவிடுவார்களா?

தமிழகத்தில் தமிழை வாழ வைப்பதாக பாவ்லா காட்டுபவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை வடக்கில் தமிழ் வாசம் வீசாத பள்ளிகளில் தான் படிக்க வைக்கிறார்கள்.

இன்றுவரை உபதேசங்கள் என்பது ஊருக்கு மட்டும் தான். தன் வீட்டுக்கு அல்ல. ஆகவே நல்லவைகளை எதிர்த்து ஊரை ஏமாற்றூபவர்களை ஒதுக்கித் தள்ளி விட்டு சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

நாட்டு நலனை மனதில் கொண்டு எதர்க்கும் உதவாத ராமர் பாலம் அல்லது மணல் திட்டை தகர்த்து எறிவோம்

4 Comments:

மங்களூர் சிவா said...

//
அத்தைகளும் மாமாக்களும் ஆட்சி செய்யும் வலைப்பதிவு உலகத்தில் பொடிப்பொடியாய் எழுதி இடம்பிடிக்க வந்த புதுப் ~பொடியன்~
//
திருத்தம்

அத்தைகளும் மாமாக்களும் மொக்கை போட்டு ஆட்சி செய்யும் வலைப்பதிவு உலகத்தில் பொடிப்பொடியாய் மொக்கை போட்டு இடம்பிடிக்க வந்த புதுப் ~பொடியன்~

Sanjai Gandhi said...

//திருத்தம்//

சிவா மாமா நீங்க மட்டும் திருந்த மாட்டேன்னு அடம் புடிக்கிறிங்களே :))))))))

ஒரு சின்ன கொய்ந்த கிட்ட வந்து(அல்லது போய்) மொக்க கிக்க னு சொல்லிகினு...ச்சி..ச்சி..

நிலா said...

ஆஹா நம்ம ஜூனியர்ன்னு வந்தா பெரிய விஷயம்லாம் பேசரியே? இது வம்பு மேட்டர்ல? சரி கொஞ்சம் அடக்கிவாசி. ஓக்கேவா

Sanjai Gandhi said...

@நிலா : அட போங்க சீனியர். நீங்க எல்லாம் சப்போர்ட் பன்னுவிங்கனு பார்த்தா, இப்டி சொல்றிங்க. :(

பெரிய விஷயங்கள நாம சின்னப் புள்ளத் தனமா சொல்வோமே. யாரும் நம்மள மாதிரி குட்டீஸ திட்ட மாட்டாங்க.

Tamiler This Week