இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comWednesday, 31 October 2007
தெஹல்கா விரித்த வலை - குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி
சி.என்.என்._ஐ.பி.என்., தொலைக்காட்சியில் ஓர் அரசியல் நேர்காணல். நடத்தியவர் பிரபல அரசியல் பேட்டியாளர் கரன் தாப்பர். கிடுக்கிப்பிடி கேள்விகளால் எதிரே இருப்பவரை சிக்கவைப்பதில் சமர்த்தர். நம்மூர் ஜெயலலிதா, வைகோ முதல் பல தேசியத் தலைவர்களை திக்குமுக்காட வைத்தவர். இந்தமுறை அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
ஒவ்வொரு கேள்வியும் தீப்பந்தாகப் பாய்ந்து வந்து மோதின. எல்லாவற்றையும் தனக்கேயுரிய பாணியில் சாமர்த்தியமாக எதிர்கொண்டார் மோடி. திடீரென ஒரு கேள்வி. அவ்வளவுதான். நெருப்பில் பட்ட ரப்பர் பலூன் போல சுருங்கியது மோடியின் முகம். என்னென்னவோ பேசினார். ‘தாகமாக இருக்கிறது, தண்ணீர் வேண்டும்’ என்றார். பதில் சொல்லாமல் தப்பிக்கும் எல்லாவித முயற்சியிலும் ஈடுபட்டார். விளைவு, பேட்டி பாதியிலேயே முடிக்கப்பட்டது. அவசர அவசரமாக வெளியேறினார் நரேந்திர மோடி.
அப்படியே ‘முதல்வன்’ படத்தில் ரகுவரன், அர்ஜுன் நடித்த காட்சி போலவே இருந்தது. விஷயம் என்னவென்றால், கரன் தாப்பர் கேட்டது கோத்ரா மற்றும் குஜராத் கலவரம் பற்றிய கேள்விதான். மோடி பதிலளிக்கத் தடுமாறியது அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தக் காட்சிகள் குஜராத் அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்தது.
மோடியின் தடுமாற்றத்துக்கு இதுவரை பா.ஜ.க. தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், அதற்கு பதிலளிக்கும் விதமாக தெஹல்கா இணையதளம் சென்ற வாரம் வீடியோகாட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோத்ரா தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான ஹரேஷ் பட் உள்ளிட்ட சிலருடைய பேட்டிகள் ஒளிபரப்பாகின. அவர்கள் அத்தனை பேருமே கோத்ரா மற்றும் குஜராத் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்.
ரகசிய கேமரா மூலம் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பது தெஹல்காவுக்கு வழக்கமான விஷயம்தான். இந்தமுறை அவர்கள் குறிவைத்தது நரேந்திர மோடியை. இதற்காக கோத்ரா சட்டமன்ற உறுப்பினர், குஜராத் கலவரத்தில் களத்தில் இறங்கி ‘செயல்பட்ட’ ஏழு பேர், மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அரசு வழக்கறிஞர் ஒருவர் மற்றும் ஐந்து குஜராத் ‘கரசேவகர்கள்’ ஆகியோருக்கு வலை விரிப்பது என முடிவு செய்தது தெஹல்கா நிருபர் குழு. இவர்களுக்குத் தலைமை, ஆஷிஷ் கெய்தான் என்கிற நிருபர். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தனர்.
‘அய்யா, நாங்கள் இந்துத்வாவைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறோம். புத்தகத்தின் பெயர் '‘வி.ஹெச்.பி.யும் இந்துத்வாவும்.’ அதற்கு உங்களுடைய கருத்துக்கள் அவசியமாகின்றன. புத்தகத்துக்காக நாடு முழுக்கத் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறோம். நிறையப் பேர் பேசியிருக்கிறார்கள். நீங்களும் பேசினால் புத்தகம் மிகச்சிறப்பாக வரும். குறிப்பாக, கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேச வேண்டும். இந்துத்வத்தின் பெருமை எல்லோர் மத்தியிலும் பரவும்.'
இதுதான் அந்த நிருபர் ஆஷிஷ் கெய்தான் விரித்த வலை. ‘இந்துத்வா பரவும்’ என்கிற வார்த்தைகள் அவர்களைச் சுண்டி இழுத்துவிட்டன. மளமளவென நடந்த சம்பவங்களை வார்த்தை விடாமல் ஒப்பித்துவிட்டனர்.
அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் அவர்கள்?
ஒவ்வொரு நபராகப் பார்க்கலாம்.
சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:
‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, ‘நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்’ என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.’
மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:
‘முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம். அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.’
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:
‘வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.’
அனில் படேல் மற்றும் தாபல் ஜெயந்தி படேல்:
‘எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தான் கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணியில் வி.ஹெச்.பி. தொண்டர்கள் ஈடுபட்டனர். எல்லா விஷயமும் போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், விஷயம் வெளியே கசியாதவாறு அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அந்தக் குண்டுகளை வைத்துத்தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.’
பிரகாஷ் ரத்தோட்:
‘பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயா பென் தெருத்தெருவாகச் சென்று தொண்டர்களைக் கலவரம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். ‘முஸ்லிம்கள் ஒருவரைக் கூட விடக்கூடாது. வேகமாகக் கொன்று குவியுங்கள்’ என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே நடந்தார்.’
சுரேஷ் ரிச்சர்ட்:
‘முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறியபோது போலீஸாரே சில இடங்களைச் சுட்டிக் காட்டினர். நாங்கள் அங்கு சென்று கதவுகளை மூடிவிட்டு, அவர்களை உள்ளேயே வைத்து எரித்துவிட்டோம்.’
அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா:
‘கலவரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் இந்துக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கோத்ரா சம்பவம் மோடியை ரொம்பவே வருத்தப்பட வைத்திருந்தது. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால், முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றார் மோடி.’
வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி:
‘மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்குச் சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமாக அவர்கள் வாதாடினர்!’
மேலே இருக்கும் கருத்துகள் அத்தனையும் குஜராத் கலவரத்துக்கு மோடியின் பங்களிப்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ராமர் பால விவகாரம் தங்களுக்குத் தேனை வார்க்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தேளை வார்த்திருக்கிறது தெஹல்கா வீடியோ.
விரைவில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இந்த வீடியோ பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். என்ன செய்யப் போகிறார் மோடி?
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்.
Tuesday, 30 October 2007
Saturday, 27 October 2007
ஆட்களை திரட்ட பிரியாணி பொட்டலம் வேண்டாம்.
முகு: இது கதையல்ல...நிஜம்.. தைரியமாக முயன்று பார்க்கலாம்.
உங்கள் வலைப்பூவிற்க்கு ஆட்கள் வரத்து குறைந்துவிட்டதா? இல்லை யாரும் வருவதே இல்லயா? கவலை வேண்டாம். அற்புதமான லேகியங்கள் கைவசம் இருக்கு. இதற்கு உங்களுக்கு தலைப்புக்கு மட்டும் கொஞ்சூண்டு கற்பனா( கல்பனா இல்ல) சக்தி இருந்தால் போதும். உள்ளடக்கத்தை பற்றி கொஞ்சமும் கவலை பட வேண்டாம்.. தத்துப்பித்தென்று எதை வேண்டுமானாலும் உளறி வைக்கலாம். உளருவதற்கு உங்களுக்கு ஒன்றும் தோன்றவில்லயா? அதற்கும் கவலைப்ப்பட வேண்டாம். பதிவைப் போடுவதற்கு முன்பு உங்க குழந்தையுடன் அல்லது பக்கத்து வீட்டு குழந்தையுடன்( இது கல்யாணம் ஆகாதவங்களுக்கு.. அந்த குழந்தையின் அம்மா அருகில் இருக்கக் கூடாது :P .. அப்புறம் எங்க போய் அல்லது வந்து குழந்தையை கவனிக்க போறிங்க) சிரிது நேரம் செலவிடுங்கள். அவர்கள் பேசுவதைக் கூட ஒரு பதிவாகப் போடலாம்.( மொக்கை போதும்)
லேகியம் தந்துடறேன்.
1. இணையத்தில் இருக்கும் எல்லா திரட்டிகளிலும் உங்கள் வலைப்பூவை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ்மணம் , தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்பிளாக்ஸ் இத்யாதி...
2. தலைப்பு மிகவும் பரபரப்பானதாக இருக்க வேண்டும். முடிந்தால் தற்போதய சூடான நிகழ்வுகள் பற்றியதாக இருப்பின் இன்னும் நலம்.
3. கொஞ்சம் புகழ்பெற்ற வலைப்பூக்களில் எல்லாம் சென்று உங்கள் கற்பனா ( மீண்டும் கல்பனா இல்ல) சக்தியை பயன்படுத்தி அந்த பதிவுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி பின்னூட்டம் போட வேண்டும்.
தலைப்பு எப்படி இருக்க வேண்டும்?
* நீயெல்லாம் ஒரு ஆம்பிளயா? ( ஒன்றா இரண்டா? இணைப்பு கொடுக்க :( )
* நீயெல்லாம் ஒரு பொம்பாளயா? ( ஒ.இ.இ.கொ:( )
* செக்ஸ் கல்வியாம் - அடி செருப்பால
* பிளாக்கர் பாஸ்வேர்ட் ஹைஜாக் செய்தவர்கள் யார்??? ஆதார பேச்சுக்களுடன்!
* எனக்கும் இந்த மெயில் வந்தது என்று ( அழையா விருந்தாளியாக!? ) பாதிக்கப் பட்ட எல்லார் பதிவுக்கும் சென்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி விளம்பரம் தேட வேண்டும். முடிந்தால் நான் மெயில் அனுப்பி அவரை எச்சரித்தேன் அல்லது காப்பாற்றினேன் :( என்று பீற்றிக் கொள்ள வேண்டும்.
* அபிஅப்பா உண்மைத் தமிழரா என அறிவுப் பூர்வமானா சர்வே எடுக்க வேண்டும்.
* உஷார்.. உஷார் .. உங்கள் வலைப்பூ திருடுபோகலாம்!
* எனக்கு வந்த மெயில்
* ஜிமெயில் / பாளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்படி
* 20 நிமிடங்களில் அந்த தளம் முழுமையாக கைப்பற்றப்பட்டது
* பெண்களை கவர்வது எப்படி?
* அம்பு குறி இட்ட இடத்தை பார்க்கவும்!
* ஹிஹி .. ஆட்களை திரட்ட பிரியாணி பொட்டலம் வேண்டாம். ( இந்த பதிவு தான் )
இப்படி இன்னும் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.
பின்னூட்டம் எப்படி இருக்கனும்?
* பத்மபிரியா பற்றிய பதிவில் ஞானி பற்றி எழுத வேண்டும்.
* தொழில் நுட்பம் பற்றிய பதிவில் உங்களுக்கு பிடிக்காதவரை பற்றி திட்ட வேண்டும்
* குறிப்பாக இதை எல்லாம் அதிக பின்னூட்டங்கள் இருக்கும் பதிவில் செய்ய வேண்டும்.
* சுயதம்பட்டம் அடிப்பவரின் பதிவில் சென்று அவரை பற்றி 4 வார்த்தை அவரை புகழ்ந்து( மனதில் திட்டிக் கொண்டு) எழுத வேண்டும். அடிக்கடி அப்படி செய்வதன் மூலம் அவர் நண்பர்கள் பட்டியலில் உங்களை சேர்த்து அவரது பதிவில் அதற்கான இணைப்பையும் கொடுத்துவிடுவார்.
பிகு: இந்த பதிவு ச்சும்மா கலாய்க்கத் தான்.. யாரையும் புண்படுத்த அல்ல... இதில் நான் சில உருப்படியான இணைப்பு(தலைப்பு)களையும் கொடுத்துள்ளேன். யாருக்காவது இந்த பதிவில் ஏதேனும் ஆட்சேபகரமான விஷயங்கள் இருந்தால் தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரிவித்து விடுங்கள். உங்கள் காரணம் ஏற்றுக்கொள்ளும் படி இருப்பின் அந்த வாக்கியங்கள் நீக்கப் படும். யாரும் ஆபாச பின்னூட்டம் போட வேண்டாம். அதற்கு இங்கு அனுமதி இல்லை :)...
Friday, 26 October 2007
மாஸ்டர் பாஸ்வேர்ட் இருந்தால்?
இப்போ தமிழ் வலைப்பதிவுகளில் மிகவும் சீரியஸாக விவாதிக்கப்படுவது பாஸ்வேர்ட் திருட்டு பத்தி தான்।
ஒரு மின்னஞசல் முகவரிக்கு 2 பாஸ்வேர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இல்ல? ஒரு மாஸ்டர் பாஸ்வேர்ட், ஒரு சாதாரன பாஸ்வேர்ட். வழக்கமான பயன்பாட்டுக்கு சாதாரன பாஸ்வேர்ட். ஆபத்தான அல்லது சிக்கலான நேரத்தில் மாஸ்டர் பாஸ்வேர்ட்.
இரண்டு கடுவுச்சொல் வசதி கிடைக்கும் வரை.
நாம் மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் போது ரகசிய உள்ளிடும் கேள்வி-பதில்( கேள்வியையும் பதிலயும் நாமளே உருவாக்கிக் கொள்ளலாம்) மற்றும் இரண்டாவது மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பத்திரமாக எழுதிவைத்துக் கொண்டால் பிறர் களவாடினாலும் நம் மின்முகவரி நமக்கே மீண்டும் கிடைக்கும்படி செய்யலாம்।
Forgot Password வசதியை பயன்படுத்தி நாம் ஆரம்பத்தில் அளித்த ரகசிய தகவல்கள் அல்லது இரண்டாவது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி நம் கடவுச்சொல்லை புதுபித்துக் கொள்ளலாம்.
மேலும் யாஹூ மற்றும் கூகுள் ஆகியவற்றில் மின்முகவரி உருவாக்கியதும் எதிர்கால தொடர்புக்காக Refferrence Code அளிக்கிறார்கள்। அதை பாதுகாத்து வைத்துக் கொண்டால் அதை குறிப்பிட்டு நாம் கணக்கு வைத்துள்ள நிருவனத்துக்கு மெயில் அனுப்பி நம் முகவரியை மீட்கலாம்।
பொடி: இந்த பதிவு இதை பற்றி தெரியாதவர்களுக்கு மட்டுமே. தெரிந்த அமாஸ் அவங்கவங்க பதிவுல எழுதி வைங்க. தெரியாதவங்க தெரிஞ்சிக்கட்டும்.
Thursday, 25 October 2007
தமிழ் ரியாலிட்டி ஷோ
ரியாலிட்டி ஷோக்கு தமிழ்ல என்ன? :(
நட்பின் சுவாசம் என்ற பதிவில் அப்பப்போ எதுனா போட்டி நடத்துவாங்க. இப்போ புதுசா ரியாலிட்டி ஷோவ பத்தி எழுதனும்னு ஒரு போட்டி அறிவிச்சு இருக்காங்க. அத பாத்ததும் நம்மளும் எதுனா முயற்சி பன்னலாம்னு தோனுச்சி.
ஆங்கில சேனல்கள்ல வந்த ரி.ஷோ* வ மட்டும் ரசிச்ச நமக்கு தமிழ்ல விஜய் டிவி மொத மொதல்ல ரிஷோவ அறிமுகப்படுத்தினப்ப ரொம்ப சந்தோஷமாவும் ரசிக்கிர மாதிரியும் இருந்திச்சி. ஜோடி நெ1, கிராண்ட் மாஸ்டர், நீயா நானா?, சில்லுனு ஒரு ஜோடி, கலக்கப் போவது யாரு?.. இன்னும் நெறய்ய... இதுக்கு எல்லாம் கெடச்ச வரவேற்ப பாத்துட்டு அதையே அவங்க வாரத்துல 2 தடவ ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க.கொஞ்சமா போர் அடிக்க ஆரம்பிச்சது. ( அவங்களுக்கு பண மழை கொட்ட ஆரம்பிச்சது).
இது பத்தாதுனு சன் டிவி இத அப்படியே காப்பி அடிச்சி( கொஞ்சம் கூட அசிங்கமா இருக்ககதா? இவங்களுக்குனு சொந்த மூளையே இருக்காதா?) ஆட்கள மட்டும் மாத்தி ஒளிபரப்பினாங்க. இப்போ வாரத்துக்கு 3 முறை.
அடுத்து வந்தாங்க கலைஞர் டிவிகாரங்க. இவங்களும் கொஞ்சமும் கூச்ச நாச்சமே( இதுக்கு என்ன அர்த்தம்? ) இல்லாம அப்டியே பேரங்கள் வழியில் காப்பி தொழிலை சூடு பறக்க நடத்தினாங்க. இப்போ ரிஷோக்கள் வாரத்துக்கு 4 முறை. பார்த்தால் மட்டும் இல்லை. நினைத்தாலே எரிச்சல் தான் வருது.
இப்போ ரிஷோக்கள்ல பாக்கற மாதிரி இருக்கிறது நீயா நானாவும் கிராண்ட் மாஸ்டரும் தான். இது ரெண்ட்டும் மூளைக்கு அதிகம் வேலை வைக்கும் சமாச்சாரம்னு காப்பி கடை காரங்க விட்டுட்டாய்ங்க போல. :)
நோகாம நோம்பி கும்பிட நெனைக்கிற சன் டிவியும் கலைஞர் டிவியும் இன்னொரு கோபிநாந்த்துக்கும் இன்னொரு பிரதீப்க்கும் எங்க தான் போவாங்க பாவம். ;(
இதுல கூத்து என்னன்னா... சன் டிவிலயும் கலைஞர்லயும் வந்தப்புறம் தான் ரிஷோக்கு மவுசு( Mouse இல்ல) கூடிடிச்சாம்.
பார்க்க : என்ன சொல்றாங்கனு முக்கியமில்ல
இப்போ என்னதாண்டா பொடியா சொல்ல வற?
அடப் போங்க அமாஸ்* ரிஷோ*வ நெனச்சாலே எரிச்சல் எரிச்சலா வருதமாம். இதுல என்னத்த வந்து( அல்லது போய்) எழுதறது?
ச்ச.. இந்த சிவா மாமா கூட சேந்து நானும் மொக்கபோட ஆரம்பிச்சிட்டேன்.. :)
பொடிக்ஷனரி
ரிஷோ : ரியாலிட்டி ஷோ
அமாஸ் : அத்தை மாமாஸ்
தகர்ப்பதில் தவறென்ன?
இந்த பாலம் அல்லது மணல் திட்டினால் யாருக்கு என்ன பலன் கிடைத்து வந்தது? இனி என்ன பலன் கிடைக்கப் போகிறது? ஏன் இதை தகர்ப்பதை தடுக்க வேண்டும்?। கோவில்கள் மற்றும் பழைமையான கட்டிடங்கள் அல்லது இடங்களை கூட அழித்துவிடலாமா? என்று மடத்தனமாக யாரும் எண்ண வேண்டாம். ஏனெனில் அவைகளை அழிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்பதால் அப்படியே இருக்கட்டும்.
ஆனால் இந்த பாலம் அல்லது மணல் திட்டை தகர்ப்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். சுற்றுலா வளர்ச்சி அடையும். அதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும்.
நாட்டின் எதிர்கால நலனை மனதில் கொண்டு அந்த நிமிடம் வரை அவர்களை வாழ வைத்த இன்யும் வாழ வைக்கப் போகிற விளைநிலங்களை அழித்து பாரம்பரியமாக அங்கு வாழும் மக்களை இடம் பெயர செய்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும் போது மனதை திடப்படுத்திக் கொண்டு வரவேற்பவர்கள், எந்த பயனும் இல்லாத இந்த ராமர் பாலம் அல்லது மணல் திட்டை அழிப்பதை யேன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்க வேண்டும்?
மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் மூடநம்பிக்கையை வள்ர்த்து அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதை வோட்டுக்களாக மாற்றீ அதன் மூலம் பதவிகளை அடைந்து ஏசி காரிலும் ஏசி பங்களாக்களிலும் சுகம் அனுபவிக்கும் வீணாப்போன இந்த வோட்டுப் பிச்சைக்காரர்களின் சுயநலத் தந்திரம் அல்லாமல் வேறென்ன இருக்க முடியும்?
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கூட எதிர்க்கப் படுகின்றதே என் வாதிடலாம். எங்கே எதிர்க்கப் படுகிறது? யாரால் எதிர்க்கப் படுகிறது என்று பாருங்கள். மேற்குவங்கத்திற்கு வெளியே தானே. சிகப்பு மனிதர்கள் பிழைப்பு நடத்தும் மே.வ. வில் மிகத் தீவிரமாக செயல்படுத்தப் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது? ஒரு வேளை எதிர்ப்பவர்களின் எதிர்ப்பயும் மீறி அங்கு சி.பொ.ம வந்து அதில் துவங்கப்படும் பன்னாட்டு நிருவனத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் வேண்டாம் என்று வீராப்பாய் வந்துவிடுவார்களா?
தமிழகத்தில் தமிழை வாழ வைப்பதாக பாவ்லா காட்டுபவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை வடக்கில் தமிழ் வாசம் வீசாத பள்ளிகளில் தான் படிக்க வைக்கிறார்கள்.
இன்றுவரை உபதேசங்கள் என்பது ஊருக்கு மட்டும் தான். தன் வீட்டுக்கு அல்ல. ஆகவே நல்லவைகளை எதிர்த்து ஊரை ஏமாற்றூபவர்களை ஒதுக்கித் தள்ளி விட்டு சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
நாட்டு நலனை மனதில் கொண்டு எதர்க்கும் உதவாத ராமர் பாலம் அல்லது மணல் திட்டை தகர்த்து எறிவோம்
Wednesday, 24 October 2007
என்ன சொல்றாங்கனு முக்கியமில்ல
ஒரு பழமொழி சொல்வாங்க. அதாவது " யார் சொல்றாங்கனு முக்கியமில்ல.. என்ன சொல்றாங்கனு தான் முக்கியம்" அப்படினு. அது தப்பு போல. இப்போ " என்ன சொல்றாங்கனு முக்கியமில்ல..யார் சொல்றாங்கனு தான் முக்கியம்"
Monday, 22 October 2007
கும்மியடிப்போம்...
கும்மியடி மக்கா கும்மியடி..
பதிவு குலுங்க குலுங்க கும்மியடி..
ஊர் கூடி கும்மியடி..
யார் பதிவுலயும் கும்மியடி..
அதர் ஆப்சன் இருந்தால்
அடுத்தவங்க பேர் போட்டு கும்மியடி...
நாகரிகமா கும்மியடி..
ந்க்கலடிச்சி கும்மியடி..
சிரிச்சி சிரிச்சி க்கும்மியடி...
பதிவர் சிரிக்க சிரிக்க கும்மியடி..
ஐபி ட்ராக்கர் இருக்கானு
பாத்து பாத்து கும்மியடி...
கெட்ட வார்த்தை பேசாம
விடிய விடிய கும்மியடி..
கவுஜ எழுத தெரியலனா
கும்ம்மியடிச்சி பேர் வாங்கு..
தமிழ்மணத்துல கும்மியடி..
தேன்கூடுலயும் கும்மியடி...
இப்போ இந்த பதிவுக்கு
கொஞ்சம் கும்மியடி...