இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 18 June, 2009

ரயிலுக்கு அழகிரி பஸ்ஸுகு லதா அதியமான்

சமீபத்துல டில்லியில் ரயிலை தவறவிட்டுத் தவித்த தமிழக மாணவர்கள் சிலருக்கு அண்ணன் அஞ்சா நெஞ்சன் அழகிரி உதவியது நினைவிருக்கலாம். அதே போல் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் லதா அதியமான் ஒரு உதவி செய்திருக்கிறார்.

ஒரு நாள் அவர் சென்னையில் இருக்கும் போது காலை 8 மணிக்கு ஒரு போன். பேசியவர் ஒரு பள்ளி மாணவி. ஊர் பெயர் மறந்துட்டேன்.

“ அக்கா நான் பஸ் ஸ்டேண்ட்ல நின்னிட்டிருக்கேன். ரொம்ப நேரமா பஸ் வரவே இல்ல. ஸ்கூலுக்கு டைம் ஆய்டிச்சி. பஸ் அனுப்ப சொல்லுங்கக்கா”

“ ஏன்மா பஸ் வரலையா? அங்க வேற யாரும் இல்லையா?”

“நானும் என் கூட படிக்கிற புள்ளைங்களும் தான்கா இருக்கோம். வேற யாரும் இல்ல. வேற ஒருத்தவங்க கிட்ட உங்க நம்பர் வாங்கி காயின் பூத்ல இருந்து பேசறேன்”

“அப்டியா.. சரி இரும்மா. நான் பேசறேன்”

உடனே அந்தப் பகுதி போக்குவரத்து மேலாளரை( வெங்கடேசனோ எதோ பெயர் சொன்னார்) தொடர்புக் கொண்டு காரணம் கேட்டிருக்கிறார் லதா அதியமான். பஸ் ப்ரேட் டவுன் ஆய்டிச்சின்னு சொன்னாராம். ப்ரேக் டவுன் ஆச்சின்னா என்ன வேற பஸ் அனுப்ப வேண்டியது தானே. அங்க ஸ்கூலுக்குப் போக முடியாம பசங்க எல்லாம் தவிச்சிட்டு இருக்காங்க. என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது. உடனே அந்த பகுதிக்கு பஸ் போயாகனும்னு சொல்லி இருக்காங்க. எம் எல் ஏ சொல்லி மறுக்க முடியுமா?. உடனே வேற பஸ் அனுப்பி இருக்காங்க.

மருதகாரய்ங்க கலக்கறாய்ங்கப்பு..... :)

தொகுதி மக்கள் தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்பதற்காக இதை சொன்னார்.

27 Comments:

said...

இவங்களே இந்த அளவுக்கு பண்ணும்போது, நீங்க எம் எல் ஏ ஆனா, டெய்லி மாணவர்களுக்கு உங்க தோட்டதிலேந்து சத்துணவுதான்.

said...

சபாஷ் எம்.எல்.ஏ!

(ம்ஹூம். சினிமாவுல மட்டும்தான் இந்த மாதிரி காட்சியெல்லாம் பார்க்க முடியும் என்கிற நிலையை இனியாவது மாத்தட்டும்)

said...

லேசா ஒரு நம்பிக்கை துளிர் விடுது

பகர்வுக்கு நன்றி பாஸ்

said...

குட் குட் குட்

said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

said...

விளம்பரம் நல்லாயிருக்கு!

said...

முதல்வன் பட ஹீரோ மாதிரி முதல்வியா?????
Well Done!!!

said...

அடடே!!!!!!!!!!

said...

நம்ம ஊர்லதானா இதெல்லாம்
அடடே...........

said...

அட..இது நல்லா இருக்கே..
அப்போ எனக்கு ஒரு Flight அனுப்ப சொல்லுங்களேன்... :P

said...

புல்லரிச்சுபோச்சுதுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

said...

மதுர உண்மையிலேயே இவ்வளவு முன்னேறிடுச்சா....

said...

கேக்குறததுக்கக்கு ரொம்ப நல்லா இருக்கு.

மனிதாபிமானதோட செயப்பட்ட உதவி.

said...

உண்மைதான..??!!

உண்மைனா ரொம்ப சந்தோசந்தாங்க..

said...

வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

பாராட்டப்பட வேண்டிய செயல்.
குறைகளை மட்டும் சொல்லாமல் இது மாதிரி நிறைகளையும் தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

said...

நல்ல செய்தி. அவரது தொண்டு செய்யும் மனம் எப்போதும் இதே போல நிலைக்கவேண்டும்.

said...

நல்ல விசயம் சஞ்சய்.. எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டுகள்..

இது போன்ற நல்ல விசயங்கள் ஏன் எந்த ஊடகத்திலும் வரவில்லை? குறைந்தது பெயர் கிடைக்கும் என்பதற்காககவாவது மற்றவர்கள் செய்ய ஆரம்பிப்பார்கள் இல்லையா?

said...

குடுகுடுப்பை, நான் ஸ்ட்ரெய்ட்டா பிரதமர் தன். நமக்கு இந்த எம் எல் ஏ முதல்வர் எல்லாம் ஒத்துவராது. ;))

நன்றி சிபி. அவங்க ஓரளவு உதவும் குணமாத்தான் தெரியறாங்க.

நன்றி ஜமால்.

நன்றி அபிஅப்பா.. உங்க கட்சிக்காரங்களுக்கு நான் வெளம்பரம் தரேன் பாருங்க. :)

said...

வாலு மாமா, இதுல்ல என்ன விளம்பரம் கண்டுபிடிச்சிங்க? நான் என்ன திமுககாரனா இதை விளம்பரம் செய்ய? அரசியல்வாதிகள் செய்ற தவறுகளை மட்டும் தான் சொல்லனுமா? நல்ல விஷயங்களைப் பகிர்ந்துக்கக் கூடாதா? ஏன் சாமி.. தெரியாமத்தான் கேட்கறேன்.. எந்த பதிவா இருந்தாலும் நெகட்டிவாதான் கமெண்ட் போடறதுன்னு திண்டல் முருகனுக்கு எதும் வேண்டுதலா? உங்க பின்னூட்ட வன்முறைக்கு ஒரு அளவே இல்லையா சாமி? :))

வாமுகோமு சிறந்த 10 எழுத்தாளர்கள் பட்டியலில் உங்களுக்கு ஆறாவது எடம் கொடுத்துட்டா நீங்க என்ன வேணா பேசுவிங்களா? :))

இன்னும் எதுனா ஓவர் சீன் போட்டிங்கன்னா அந்த லின்க் எல்லார்க்கும் குடுத்துடுவேன். ஜாக்கிறதை. :)

said...

நன்றி அருணாக்கா..

நன்றி நாஞ்சிலாரே..

மங்களூர் மாமா, கொஞ்சம் ஆச்சர்யம் தான். ஆனா நிஜம். :)

கயல், நீ எதுனா சீன ஹோட்டல் போ. உனக்கு இவங்க ஃப்ளைட் அனுப்புவாங்களா இல்லையான்னு அதிர்ஷ்ட கார்ட் சொல்லும். :)

கும்கி, அந்த கார் ஷெட் காலி பண்ணும் போது ஆணிகள் அடிச்ச ரீபப்ர் கட்டை எடுத்து வச்சிங்களே. அதை வச்சி அரிக்கிற எடத்துல நல்லா தேச்சிக்கோங்க. :)))

said...

ஆமா பங்காளி. நன்றி,

உண்மை தான் பட்டிக்காட்டான். சம்பந்தப் பட்ட ஊர்க்காரங்க முன்னாடி தான் சொன்னாங்க. பொய்யா இருக்க வாய்ப்பில்லை.

நன்றி சிவக்குமரன். விழியன் நலமா? :)

நன்றி பட்டாம்பூச்சி. இதை உங்க வால் அண்ணனுக்கு சொல்லுங்க. பிரபல மூத்தப் பதிவர் ஆனாலும் ஆனாரு. அவர் இம்சை தாங்கலை. :))

நன்றி வல்லியம்மா..

நன்றி வெண்பூ. அவஙக் இதை சொல்லும் போது பத்திரிக்கையாளர்கள் யாரும் இல்லை. ஒரு மொக்கை வலைப்பதிவன் தான் இருந்தான். பதிவும் போட்டுட்டான். :))

அவங்க மக்கள்கிட்ட பேசறது கூட வித்தியாசமா இருக்கு. மழுப்பறதே இல்லை. முடியும்னா முடியும். முடியாதுன்னா முடியாது. அவ்ளோ தான். அப்டியே ஒரு ”நல்ல” சொர்ணாக்கா தான் போங்க.. :))

said...

//வாலு மாமா, இதுல்ல என்ன விளம்பரம் கண்டுபிடிச்சிங்க? //

சஞ்சய் தாத்தா,
கடமையை செய்யுறதுகெல்லாம் விளம்பரம் கொடுத்தால் பின் விளம்பரத்திற்காக மட்டுமே கடமையை செய்வார்கள்!

said...

//கடமையை செய்யுறதுகெல்லாம் விளம்பரம் கொடுத்தால் பின் விளம்பரத்திற்காக மட்டுமே கடமையை செய்வார்கள்!//

அபப்டியாவது செய்யட்டுமே. :)

மேலும் விளம்பரத்துக்காக அவங்க ஒன்னும் பத்திரிக்கைக்கு தகவல் தரலையே. இது எந்த பத்திரிக்கையாளனுக்கும் தெரியவும் தெரியாது.குறிப்பிட்ட ஊர்ல பேசிட்டிருக்கும் போது எதேச்சையா சொன்னாங்க. எனக்கு பிடிச்சிருந்தது. பதிவிட்டேன். இப்டி ஒரு பதிவு வரும்னு கூட அவங்களுக்கு தெரியாது. இப்போ வரைக்கும்.

said...

அதன் பின் அந்த பாதைக்கு என்ன ஆக்‌ஷன் எடுத்தார்கள்?

யாரையாவது சஸ்பெண்ட் பண்ணினார்களா?

நானும் இதே போல் ஒரு கதையை சொன்னால் அதையும் எழுதுவீர்களா?

said...

வாலு, உங்க பிரச்சனை என்ன?. சம்பவம் நடந்த ஊர்க்காரங்க முன்னாடி சொல்ற விஷயம் உண்மையா தான் இருக்கனும்னு எழுதினேன். நீங்களும் இதே மாதிரி எதுனா செஞ்சிட்டு சொல்லுங்க. எழுதறேன். எவ்வளாவோ குப்பைகளை எழுதிட்டு தானே இருக்கேன். யாரை சஸ்பண்ட் பண்ணாங்கன்னு எல்லாம் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லையே. எனக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை நான் எழுதி இருக்கேன். அதோட முன் விளைவு பின்விளைவெல்லாம் நோண்டிகிட்டு இருக்கிற அளவு நான் வெட்டியா இல்லை. அரசாங்க இணையத்துல தேடி அவ்னக்க போன் நம்பர் எடுத்து போன் பண்ணி கேளுங்க.

அய்யா பின்னூட்ட அராஜகப் பேர்வழியே.. ஆளை விடுங்க.

said...

//முன் விளைவு பின்விளைவெல்லாம் நோண்டிகிட்டு இருக்கிற அளவு நான் வெட்டியா இல்லை. //

தொழிலதிபரை சந்தேகப்படுவேனா?
இன்னைக்கு யாருக்கு டீவீ மெக்கானிசம் கத்து கொடுத்திங்க!

ஹிஹிஹி

Tamiler This Week