இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 4 June, 2009

கோவை பதிவர் சந்திப்பு அறிவிப்பு


வணக்கம் மக ஜனங்களே..!

வருகிற 11ஆம் தேதி(11.06.2009) வியாழன் அன்று நம் நண்பன் அதிஷாவின் தங்கைக்கு திருமணம் இனிதாய் நடைபெறவுள்ளது. அதற்காக அவர் அனைத்துப் பதிவர்களையும் அழைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அன்று கோவையில் ஒரு பதிவர் சந்திப்பு வைத்துக்கொள்ளலாம் என ஸ்வாமி ஓம்கார் தெரிவித்துள்ளார். ஆர்எஸ் புரத்தில் இருக்கும் அவரது செண்டரின் மேல்மாடியில் சந்திப்பு வைத்துக்கொள்ளலாம் என சொல்லி இருக்கிறார். அதிஷாவின் தங்கைத் திருமணத்திற்கு வரும் பதிவர்களும் கோவை திருப்பூர் ஈரோடு பதிவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.

கோவை திருப்பூர் ஈரோடு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் பதிவெழுதுகிறார்கள். இதில் பாதிப் பேர் அறிமுகம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

இது சம்பந்தமாக அனைவரின் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது.

40 Comments:

said...

வந்தா கோழி பிரியாணியும், முட்டை வறுவலும் தருவீங்களா?. ;-))

ஹிஹிஹி.. வாழ்த்துக்கள்!

said...

அதிஷாவிற்கு வாழ்த்துக்கள்!

வலைப்பதிவர் சந்திப்பு சிறக்க மற்றொரு வாழ்த்துக்கள்

said...

மண மக்களுக்கு வாழ்த்துகள் !

பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துகள் !

பதிவர்களுக்கு சஞ்செய் சார்பில் அன்பளிப்பாக பணமுடிப்பு அளிக்கப்படும்.

said...

சஞ்சய் அழைக்கிறார்...

பதிவர்களே திரண்டு வாரீர்...

வீறு கொண்டு எழுந்து அறிப்பு கொடுத்த "நவயுக கவிஞர் சஞ்சய்க்கு" எனது அன்பு.

அவர் ஒரு செயல் வீரர் என பதிவின் மூலம் நிரூபித்து விட்டார்.

என்னே அவரில் ஊக்கம்..

(Payment received by DD or electronic money transfer only) :))

said...

அதிஷாவின் தங்கை திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

said...

பதிவர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.

அனைவருக்கும் இது ஒரு நல்ல சந்திப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

சஞ்சய் இடம் ஓக்கே... நாள் மற்றும் நேரம் ?

said...

ஸ்வாமி ஓம்கார் கொடுக்கும் ஆப்பிள் ஜூஸால் தொப்பை குறைவதாக பிரபல ஆங்கில ஏடு கோடிட்டு காட்டி இருந்தது.

said...

//அவர் ஒரு செயல் வீரர் என பதிவின் மூலம் நிரூபித்து விட்டார்.

//

அவரு 10 வீரருக்கு சமம் !

said...
This comment has been removed by the author.
said...

சஞ்சய் அழைப்பு பதிவர்களுக்கு மட்டும் தானா ? எங்களை போல பின்னூட்டம் இடுபவர் எல்லாம் வர கூடாதா ... :)

said...

//ஸ்வாமி ஓம்கார் கொடுக்கும் ஆப்பிள் ஜூஸால் தொப்பை குறைவதாக பிரபல ஆங்கில ஏடு கோடிட்டு காட்டி இருந்தது//


இது போன்ற சிகிச்சை தொப்பை இருப்பவர்களுக்கே செய்யப்படும் :) என டைம்ஸ் பத்திரிகை வட்டமிட்டு காட்டி இருந்தது :)))

said...

திருமணம் இனிதாய் நடைபெற்று மக்கள் சீரும் சிறப்புடன் என்றும் நலமே வாழ வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்!!!!

said...

சஞ்செய் அங்கிள் பதிவர் சந்திப்புல சோறு போடுவீங்கல்ல ???????

said...

//கோவை திருப்பூர் ஈரோடு பதிவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.//

நான் வரணும்னுதான் நினைச்சேன்!!!ம்ம்ம்.......நீங்க
கோவை திருப்பூர் ஈரோடு பதிவர்களை மட்டும் அழைத்திருப்பதால் ஒதுங்கிக் கொள்கிறேன்!!!

said...

தமிழ்பிரியன் அண்ணே.. ஸ்பான்சர் பண்ணா எல்லாம் வாங்கித் தருவோம்.. :)

நன்றி சென்ஷி.. :)

நன்றி கோவியாரே... அக்கவுண்ட் நம்பர் சொல்றேன்.. பணம் அனுப்பிடுங்க.. நான் முடிப்பு குடுத்துடறேன்.. :)

//அறிப்பு கொடுத்த//

ஸ்வாமி, எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாமே.. :))

ஸ்வாமி , வியாழன் காலை எல்லாராலும் வர இயலாது என்று நினைக்கிறேன். புதன் மாலை அல்லது இரவு சந்திக்கலாம்.

நன்றி ஜோசப்.. :)

said...

அதிஷாவின் தங்கை திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

said...

அதிஷா சகோதரிக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் (அட்வான்ஸு)

:)

said...

//அவரு 10 வீரருக்கு சமம் !//
இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியலையே. :(

நன்றி ஹீம்.. நீங்களும் வரலாம்.. 5 ப்ளாக் வச்சிருக்கிறாவர் பதிவர் இல்லையாம்.. எகொஹீ இது? :)

சக்தி மாமி, நீங்களும் கலந்துக்கலாமே. :)

முதியபாவி, வாங்க முதுகுல ஆளுக்கு 4 போடறோம்.. :)

அருணாக்கா, உங்க சார்புல கலந்துக்க கோவைல ஆள் இருக்கு.. :))

நன்றி கானா.. :)

said...

சஞ்சய், அழைப்பு பதிவர்களுக்கு மட்டும் தானா ? எங்களை போல பின்னூட்டம் இடுபவர் எல்லாம் வர கூடாதா

said...

நன்றி ஆயில்ஸ்.. :)

சிபி , நீங்க இல்லாமலா? தேர்தல் முடிஞ்சும் ஆளையே காணோம்.. ரொம்ப பிசியோ? :)

said...

இந்தப் பதிவர் சந்திப்பில் பதிவர்களோடு தமிழின் பிரபல எழுத்தாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆரோக்கியமான இந்த உரையாடல்களில் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் தனிமடலில் சஞ்சய் அவர்களைத் தொடர்பு கொண்டு தங்களின் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஏனெனில் வருகை தரும் ஒவ்வொரு பதிவர்களுக்கும் சிறப்பு பரிசுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறோம். எத்தனைப் பேர் வருகிறார்கள் என்பது தெரிந்தால் பரிசுப்பொருட்களை சேகரம் செய்ய ஏதுவாக இருக்கும்.

விழாவின் சிறப்பம்சமாக வலைப்பூவில் தனிநபர் சாதனைகள் புரிந்த பதிவர்களைப் பாராட்டி விருதுகளும் வழங்க இருக்கிறோம்.

இந்த பின்னூட்டத்தை மொக்கையாக்க வேண்டாம்.

said...

மண மக்களுக்கு வாழ்த்துகள் !
பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துகள் !நான் மதுரைக்கு வந்ததுக்கு அப்புறம் நடத்துறீங்களே நண்பா.. ஹ்ம்ம்.. எங்கிருந்தாலும் வாழ்க..:-)

said...

தங்கைக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

அதிஷாகிட்ட மேட்டர் எல்லாம் உண்டான்னு கேட்டுகோங்க!

said...

அதிஷாவின் தங்கை திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

திருப்பூரில் இருந்தால் நிச்சயம் வந்து கலந்து கொள்வேன்.

said...

மண மக்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

லைன் கிளியராகும் அதிஷாவுக்கும் வாழ்த்துக்கள்.

பதிவர் சந்திப்புக்கும் வாழ்த்துக்கள்

\\வணக்கம் மக ஜனங்களே\\

???????

said...

அதிசா , அவர்களுக்கு வாழ்த்துக்கள்... கட்டாயமாக வர முயற்சிக்கிறேன் ...

http://all-oipinion.blogspot.com

said...

லீவு கிடைத்தால் வர முயற்சிக்கிறேன்.

said...

முக்கியமா சஞ்சயைப் பார்க்கணும் ;-)

said...

மண மக்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்:-)

said...

வாழ்த்துகள்

said...

சஞ்சய்,
திருமணத்திற்கும்,
சந்திப்பிற்கும்
எனது நல்வாழ்த்துக்கள்.
சட்ட்க் கல்வி தேர்வுகள் இருப்பதால் கலந்து கொள்ள இயலாது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

said...
This comment has been removed by the author.
said...

மண மக்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!!

said...

நன்றி சஞ்சய் .. நான் கண்டிபாக வருகிறேன் ..

said...

மாம்ஸ் பதிவர் சந்திப்பு 10ம் தேதின்னு போன்ல பேசறப்ப சொன்னீங்க இப்ப 11ன்னு பதிவுல எழுதியிருக்கீங்க!

11ம் தேதி என்றால் சந்திக்கலாம் பிரச்சனை இல்லை.

said...

முரளிகண்ணன் said...

மண மக்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

லைன் கிளியராகும் அதிஷாவுக்கும் வாழ்த்துக்கள்...

இதுக்கு ஒரு ரிப்பீட்டடிச்சு எனது வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன்.

சென்னை கி.ப. மொட்டை மாடிக்கு போட்டியாக கோவையிலும் மொட்டை மாடியை தேர்ந்தெடுத்திருக்கும் சஞ்ஜெய்யின் நுண்அரசியலை புரிந்துகொள்கிறேன்.

said...

அன்புமிக்க செல்வேந்திரன்,
நம்ம பேர் லிஸ்ட்டில் எப்போதும் விடுபட்டுவிடும்.
டி ஏ பில் க்ளெய்ம் இருந்தால் நானும் வருவேன்.

said...

அன்பின் கும்கீக்கு,

'டிஏ' பில்லுக்கு க்ளெய்ம் கொடுப்போம். ஆனால் 'டூர் ரிப்போர்ட்' வைக்கவேண்டும். சம்மதமா?

said...

வந்தா கோழி பிரியாணி கிடைக்குமா?

said...

என்ன எங்க ஏதுன்னு கொஞ்சம் விவரம் சொன்னா, நல்ல இருக்கும்!

Tamiler This Week