இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comTuesday 2 June, 2009
சிறுக(வி)தை
Lables
கவிதை
மாரியாத்தாவ தயார் பண்ண
தேசிங்கன் பூசேரிகோழிக்கூப்ட வந்துட்டார்..
தலைவர் ஊட்ல
மாரியாத்தா உடுத்த
புதுத்துணி தயாராய்,,
கைகூப்பி வணங்கி
ஆடைகளை கண்ணில் ஒத்தி
உற்சாகமாய் இருந்தார்
தேசிங்கன் பூசேரி..
ஆத்தாவுக்கு அணிவிக்கும்
துணிகளை தொட்டதே
பல ஜென்ம பாக்கியமாம்..
புத்தாடை, புது நகை,
கையில் புதுக் கத்தி..
ஆத்தா அழகாய் ஜொளித்தாள்
“என்னடா தேசிங்கா..
என்ன சொல்றா எங்கம்மா?”
மாரியாத்தா மகனாய்
மாறினார் தலைவர்..
“ அவளுக்கென்ன சாமி
இப்போதான் பொறந்தவ மாறி
புது துணி புது நகைல
ஜெகஜோதியா இருக்காளே”
ஆத்தாளுக்கு மகனும்
பூசேரிக்கு சாமி தான்..
துணி எடுத்து வச்சிருக்கேன்
ஊட்ல வாங்கினு போடான்னாரு சாமி.
பூசேரிய பாத்ததும்
கைப்பையை கொடுத்தா
எசமானியம்மா..
நல்ல அழகான துணிப்பா
உனுக்குன்னு தான் குடுக்கறாரு மொதலாளி
அவளுக்கு புருஷந்தான் ஊருக்கே மொதலாளி
இந்த வெருஷ தட்சணையை
பூரிப்பா வாங்கினு
ஊடு பாத்து கட்டினான் நடய.
” இந்தாப்பா பூசேரி..”
போகவிட்டு பொறவு கூப்பிட்டா எசமானியம்மா
”பார்த்துட்டேனாத்தா
இந்த வெருஷம் எடக்கைல தான் கிழிஞ்சிருக்கு
சீல ஊசில தெச்சிக்கிறேன்..”
Subscribe to:
Post Comments (Atom)
32 Comments:
அருமையா இருக்கு...
போடாங்go..!!!!
டிஸ்கி 1 : போடான்னாலும் go ன்னாலும் ஒரே அர்த்தம் தானே. அப்புறம் ஏன் போடாங்கோன்னு சொல்றாங்க
இது சஞ்சய் க(வி)தை படிச்சு வந்த சந்தேகம் இல்லை. பொதுவா ஏதாச்சும் கமெண்டுல எழுதனுமே எழுதி வைக்குறேன்.
டிஸ்கி 2 : இங்கு இந்த கமெண்டு போட முன்னமே சஞ்சயிடம் அனுமதி வாங்கப்பட்டது.
இதனால் சஞ்சய் ரசிகர் மன்றத்தினர் கோவப்பட்டு தீக்குளிக்க வேண்டாம் என்ற அறிவுரையும் சேர்த்து தரப்படுகிறது.
/டிஸ்கி : இது கவிதை அல்ல.. சிறுகதையும் அல்ல..//
அப்ப இது டிஸ்கியே இல்ல
நாங்கள் தீக்குளிக்கமாட்டோம்!
சஞ்சய் ரசிகர் பேரவை
தோஹா கத்தார் (இன்னிக்குத்தான் ஆரம்பிச்சது!)
//ஆத்தாளுக்கு மகனும்
பூசேரிக்கு சாமி தான்..//
அருமை.
சஞ்சய் பூனை ச்சீ.. புனைப்பெயரில் எழுதுங்க.. இல்லைனா எல்லாரும் கலாய்ப்பாங்ல்ல..
-தலைவர்
[அகில உலக நவ யுக கவிஞர் சஞ்சய் ரசிகர்மன்றம்.]
ஹேய், ரொம்ப நல்லா இருக்கு. எழுதினது சஞ்சய் தானா....
/ஆயில்யன் said...
நாங்கள் தீக்குளிக்கமாட்டோம்!
சஞ்சய் ரசிகர் பேரவை
தோஹா கத்தார் (இன்னிக்குத்தான் ஆரம்பிச்சது!)//
கத்தார்ல எல்லோரும் டெய்லி குளிப்பாங்கன்னு நம்பிட்டு இருந்தேன் :)
ஹூம், என்னத்த சொல்ல .
///கொலை முயற்சி///
உண்மைதான். ஒத்துக்குறோம் சாமி, ஒத்துக்குறோம். கவிதை ச்சே கதை ச்சேச்சே க(வி)தை.
நிஜமாகவே கலக்கல் சிறுக(வி)தை.. பாராட்டுகள் சஞ்சய்..
super sanjay
நல்லாருக்குது பாஸ். பூசேரி, ஜொளித்தாள் - பூசாரி, ஜொலித்தாள் (எங்கே போனாலும் தப்பு கண்ண்டுபிடிப்போர் சங்கம்)
இது ஒரு நல்ல கதைக் கவிதை. ஒரு சிறுகதைக்கான முரணைக் கவிதையில் கொண்டுவந்திருக்கிறீர்கள்.
வட்டார வழக்கில் வரும் வரிகளுக்கிடையில் சில வார்த்தைச் சேர்க்கைகள் தரப்படுத்தப்பட்ட எழுத்து நடையில் இருக்கின்றன. அதைக் கொஞ்சம் அடுத்த முறை எழுதும்போது மாற்றிக் கொள்ளவும்.
நல்ல முயற்சி சஞ்சய். தொடர்ந்து செய்யுங்கள்.
கலக்கிட்டிங்க தலைவா
நன்றி மயாதி.. :)
சென்ஷி அடி பலமோ.. :)
கார்க்கிகிகிகி.. :)
ஆயில்யா..தீக்குளக்க வேண்டாம் ரசிகரே.. பின்ன யார் பின்னூட்டம் போடுவாங்க? :)
நன்றி ஸ்வாமி.. :)
//சஞ்சய் பூனை ச்சீ.. புனைப்பெயரில் எழுதுங்க.. இல்லைனா எல்லாரும் கலாய்ப்பாங்ல்ல..//
அதான் கனக்கச்சிதமா கலாய்ச்சிட்டிங்களே.. :)
விக்னேஷ்வரி.. இப்டி ஒரு கவுஜய பார்த்துமா நான் தான்னு தெரியலை? :))
ஒன்னும் சொல்லிக்கறதுக்கில்லை:-))
///இதனால் சஞ்சய் ரசிகர் மன்றத்தினர் கோவப்பட்டு தீக்குளிக்க வேண்டாம் என்ற அறிவுரையும் சேர்த்து தரப்படுகிறது.//
சஞ்சய் பேரவைல இருக்கறவங்க யாரும் அவங்களை கொளுத்திக்க மாட்டாங்க...தேவைன்னா சஞ்சயதான் கொளுத்துவாங்க:-))))
சிவக்குமரன், விட்டுட்டுப் போய் ஹரிபவன்ல கொட்டிக்கிட்டவருக்கு இங்க என்ன வேலை?
ஹ்ம்ம்.. பிறந்தநாள் வாழ்த்துகள்.. நல்லா இருங்க.. :)
ரொம்ப நன்றி ஆவியாரே( வெண்பூ).. :)
நன்றி முரளி :)
நன்றி ஆதி.. ஜொலித்தாள் மாத்திடறேன்.. ஆனால் பூசேரி தெரிஞ்சே எழுதினது.. கிராமத்துல அப்டி தான் சொல்வாங்க.. :)
ரொம்ப நன்றி சுந்தர்ஜி..
இப்போ சில வார்த்தைகளை மாத்திட்டேன்.. அடுத்த முறை நீங்க போனில் சொன்ன ஆலோசனைகள் அனைத்தும் மனதில் வச்சிக்கிறேன்.. அன்புக்கு நன்றி, :)
நன்றி கவின்.. :)
ஓய் இயற்கை.. அடங்க மாட்டிங்களா? ;)
கதை எதோ இருக்குன்னு சொன்னாங்க!
அதை காக்கா தூக்கிட்டு போயிருச்சா?
கலக்கல் சஞ்சய்
இவ்ளோ திறமையா உங்களுக்குள்ளே
ஆதிமூலகிருஷ்ணன் said...
//நல்லாருக்குது பாஸ். பூசேரி, ஜொளித்தாள் - பூசாரி, ஜொலித்தாள் (எங்கே போனாலும் தப்பு கண்ண்டுபிடிப்போர் சங்கம்)//
Once More!!!!!
(எங்கே போனாலும் தப்பு கண்ண்டுபிடிப்போர் சங்கம்)
:))
நல்லா இருக்கு சஞ்சய்
மாப்பி,
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித கவிதை அல்ல அல்ல ல்ல ல ....
அதையும் தாண்டி.....
(இதுக்கு மேல மற்றவர்கள் நிரப்பிக்கட்டும். )
:-))
ஹி...ஹி.
sakthi said...
கலக்கல் சஞ்சய்
இவ்ளோ திறமையா உங்களுக்குள்ளே.....
இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது....?
யாராச்சும் பிகர கிட்டக்க பாத்து பயந்துபோய் ஊருக்கு அவசரமா மூட்டகட்டிக்கிட்டு ஒடவேண்டியது.அங்க போய் கிடா வெட்டி மாரியாத்தாளுக்கு பூசை போட்டுட்டு கையோட பூசாரி காத கடிக்கவேண்டியது. கவிதை எழுதறேம் பேர்வழின்னு அங்க சுட்ட மேட்டர அப்படியே போட்டு தாக்கவேண்டியது.
ஹூம்...உம்ம சொல்லி என்ன பன்றது.கிளப்பி வுட்டுட்டு வேடிக்கை பார்க்கறாரே அவர சொல்லனும்.
நல்லாருங்க.
(அப்புறம் சாமி குத்தமாய்டும்)
என்ன சொல்வது என தெரியவில்லை.
வார்த்தைகள் அழகு.
சில விடயங்கள் மனதை உறுத்தியது.
//மாரியாத்தா உடுத்த
புதுத்துணி தயாராய்,,//
//இந்த வெருஷம் எடக்கைல தான் கிழிஞ்சிருக்கு//
இந்த வரிகளும்..:(
ஆகா அருமை. இப்படி உங்களிடமிருந்து இன்னும் நிறைய வருமெனெ எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் சஞ்சய்!
மிக அருமை!!!
//இந்த வெருஷம் எடக்கைல தான் கிழிஞ்சிருக்கு
சீல ஊசில தெச்சிக்கிறேன்..” //
எதிர்பார்க்கவே இல்லை....
ரொம்ம தைரியம்தான். ரொம்ப நீளமா இருக்கறதனால ஒண்ணும் புரியல. சின்ன சின்ன பாரா போட்டுயிருந்தா, கொஞ்சம் பொறுத்துக்க முடியும்.
Post a Comment