இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday, 10 June 2009

சாமி பாட்டுக் கேட்கலாம் வாங்க


பள்ளிப்படிப்பு முடியும் வரை தினமும் வீட்டில் இருந்து தான் சென்று வருவேன். கல்லூரியில் சேர்ந்த பின் தான் ஹாஸ்டல் வாசம். பள்ளிப் படிப்பு முடியும் வரை மார்கழி மாதம் வந்தாலே கடும் எரிச்சலாக இருக்கும். அந்த மாதம் முடியும் வரை காலையில் 5 மணிக்கு மேல் தூங்க முடியாது. கடுமையான குளிர் வேற இருக்கும். அதையும் தாண்டி பெரிய கம்பளி போர்த்தி ரொம்ப நேரம் தூங்கலாம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் அதெல்லாம் ஆகாது. அந்த மாதம் முழுதும் மாரியம்மன் கோவிலுக்கு போய் பொங்கல் வைப்பார்கள். காலை சிலர், மாலை சிலர் என முறை வைத்து பொங்கல் வைப்பார்கள். அந்த மாதம் முடியும் போது அனைவரும் பொங்கல் வைத்துவிடுவார்கள்.

அதனால் தினமும் காலை 4 அல்லது 5 மணிக்கெல்லாம் கோவில் கோபுரத்தில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி அலற ஆரம்பித்துவிடும். சுமார் 5 கிமீ வரை கேட்குமளவுக்குகேட்கும்படி வைத்துவிடுவார்கள். அதுல சினிமா பாடல் போட மாட்டாங்க. மாட்டாங்க என்ன ? மாட்டோம்.. காலைல ரேடியோ செட்டுக்காரர் ஆன் பண்ணி விட்ருவார். அப்புறம் எங்க இஷ்டத்துக்கு பாட்டுப் போடுவோம். அந்த கேசட் பெட்டியில சாமி பாட்டு தவிர வேற ஒன்னும் இருக்காது. அப்போ எல்லாம் சாமி பாட்டுக் கேக்கறதுல விருப்பம் இருக்காதுன்னாலும் வேற வழி இல்ல. கேட்டுத் தான் ஆகனும். அவ்வப்போது பாடலை நிறுத்திவிட்டு மைக் ஆன் பண்ணி அன்று பொங்கல் வைக்க வேண்டியவர்களின் பெயரை சொல்லி சீக்கிறம் வர வேண்டும் என்றும் அன்று மாலை மற்றும் அடுத்த நாள் பொங்கல் வைக்கவேண்டியவர்கள் பெயரை சொல்லி அறிவிப்பும் செய்வோம். இதுக்கு பெரிய போட்டியே இருக்கும். ஹ்ம்ம்.. அதெல்லாம் இப்போ போயே போச்.. இப்போ எல்லாம் மார்கழி மாதமே யாருக்கும் நினைவி இருக்குதான்னு தெரியலை.
மார்கழி மாதம் மட்டும் இல்லை.. கோவில் திருவிழா எப்போ நடந்தாலும் இதே கதை தான். ஆகவே அந்தப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு வரிக்கு வரி நினைவில் இருக்கும். சினிமா பாடல் கூட 4 வரிகளுக்கு மேல் நினைவில் இருக்காது. விருப்பம் இல்லாமல் கேடிருந்தாலும் பின்னாளில் சாமி பாடல்கள் எல்லாம் ரொம்ப பிடித்துப் போய்விட்டது. சாமி கும்பிடுவதை நிறுத்திய பின்னும் கூட ரசிக்க முடிந்தது.

எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் மாரியம்மன் தொடர்பான பாடல்கள், டிஎம்எஸ்-ன் முருகன் பாடல்கள் மற்றும் ஐயப்பன் பாடல்கள் பெரும்பாலானவை வரிக்கு வரி பாட?! தெரியும். மார்கழி மாதம் பற்றி எழுத ஆரம்பித்தாம் 10 பதிவு எழுதலாம். காலையில் வாசல் பெருக்கி, சாணித் தண்ணீர் தெளித்து வெங்கசெங்கல் பொடியில் கோலம் போட்டு.........

இப்போ மேட்டர் அதுவல்லை..சமீபத்தில் ஒரு பதிவர் ஒரு பக்தி பதிவு எழுதி இருந்தார். அவர் எழுதும் அனைத்தும் பக்திமயமானது தான். பெயர் மறந்துவிட்டது. ராமலக்‌ஷ்மி அககாவுக்கு தெரியும். அவர் பதிவில் இந்தப் பாடல்கள் பற்றி படித்ததும் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். எனக்கு இந்த மாதிரி பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என்றும் அதற்கான சுட்டிகள் இருந்தால் கொடுங்கள் என்றும் கேட்டிருந்தேன். பின் நானும் thiraipaadal , imeem , last.fm , vodpod என எனக்குத் தெரிந்த தளங்களில் எல்லாம் தேடினேன். கூகுளிட்டும் பார்த்தேன். ஒன்னும் கிடைக்கலை. கடுப்பாகி விட்டுட்டேன்.

இதை எப்படியோ தெரிந்துக் கொண்ட என் பேவரிட் இசைத் தளமான thiraipaadal புதிதாக bhaktipaadal என்று ஒரு தளம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஏராளமான பக்திப் பாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன. திரைபாடல் தளத்தில் ரொம்ப பிடித்த விஷயமே அவர்கள் வகைப்படுத்தும் விதம் தான். அற்புதமாக இருக்கும். இசையும் தெளிவாகவும் தரமாகவும் இருக்கும். பக்திபாடல் தளத்தின் சென்றதும் ஈஸ்வரி அவர்கள் மற்றும் டி எம் எஸ் பாடல்களைத் தான் தான் கேட்டேன். என்ன ஆச்சர்யம்...!.. சிறு வயதில் கேட்டிருந்தாலும் அனைத்து வரிகளும் இன்னும் நினைவில் இருக்கு. கூடவே பாட?! முடிகிறது. அந்த அளவு மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. :)

டிஸ்கி: என்னை யாருக் காதலிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக காதலை வெறுத்தாலும் காதல் பாடல்கள் கேட்கப் பிடிக்காமலா இருக்கு? அதே போல் தான் இதுவும்.. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் சாமி பாடல்கள் ரொம்பவே பிடிக்கும். கந்தசஷ்டிகவசத்துக்கு நான் அடிமை. :)

சாமி பாட்டு கேட்கும் ஆசை உள்ளவர்களுக்கு,
பக்திபாடல் இசைத்தளம் Baktipaadal.com

24 Comments:

Poornima Saravana kumar said...

காலையில் 5 மணிக்கு மேல் தூங்க முடியாது. கடுமையான குளிர் வேற இருக்கும். அதையும் தாண்டி பெரிய கம்பளி போர்த்தி ரொம்ப நேரம் தூங்கலாம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் அதெல்லாம் ஆகாது.

தினமும் காலை 4 அல்லது 5 மணிக்கெல்லாம் கோவில் கோபுரத்தில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி அலற ஆரம்பித்துவிடும். சுமார் 5 கிமீ வரை //


எனக்கு காலைல தூங்க ரொம்ப பிடிக்கும்.. அதுவும் கம்பளீய போர்த்திட்டு குளீரில் தூங்குவது சூப்பர்..

ஆனால் இந்த மாசம் எங்க ஊர்லையும் இப்படி தான் செய்வாங்க.. என்ன ஒரே வித்தியாசம் இது விநாயகர் கோவில்:))

அன்புடன் அருணா said...

//சிறு வயதில் கேட்டிருந்தாலும் அனைத்து வரிகளும் இன்னும் நினைவில் இருக்கு. கூடவே பாட?! முடிகிறது.//
ம்ம்ம்...எங்களால் கேட்க முடியுமா என்பதுதான் கேள்வி!!!????

KARTHIK said...

தல இதுலையும் பாருங்க http://www.tamiljothy.net/mp3z/index.php

நல்ல பழைய பாட்டு இருக்கஉ.

முரளிகண்ணன் said...

நல்ல அனுபவப் பதிவு

வால்பையன் said...

//இப்போ மேட்டர் அதுவல்லை..//

ஆனா அதுக்காக நாலு பத்தி மாங்கு மாங்குன்னு எழுதியிருக்கிங்களே!
உங்களை என்ன செய்யலாம்!

ராமலக்ஷ்மி said...

சின்ன வயதில் மார்கழி மாதம் 4 மணிக்கு ஸ்பீக்கரில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்து விடும். ஒருசில பாடல்கள் ஆழமாக மனதில் பதிந்தவை, ஆனால் எங்கள் ஊர் கோவில் தவிர எங்கும் கேட்காதவை. அவை நீங்கள் சுட்டியிருக்கும் தளத்தில் கிடைக்கிறதா பார்க்கிறேன். நன்றி.

Kumky said...

எது எப்படியோ சாமி டிஸ்க்கில இருக்கிற உ(ம்)ண்ம ரொம்ப புடிச்சிருக்குது.

Thamira said...

என்னை யாருக் காதலிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக காதலை வெறுத்தாலும் காதல் பாடல்கள் கேட்கப் பிடிக்காமலா இருக்கு? அதே போல் தான் இதுவும்.. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் சாமி பாடல்கள் ரொம்பவே பிடிக்கும்.//

இரண்டாம் வரி செம்ம.. முதல் வரி ஹிஹி.. ஏன் இப்படி.?

மணிநரேன் said...

நினைவுகளை அசைபோடவைத்த பதிவு. ஒரு வித்தியாசம், கோவிலில் பாட்டு ஒலிக்குதோ இல்லையோ எங்கள் வீட்டில் காலையில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.அதனை கேட்டுக்கொண்டே எழுவதும் தனி சுகம்தான்.

கயல்விழி நடனம் said...

நல்லா இருக்கு...அதுவும் அந்த டிஸ்கில நீ சொன்ன உண்மை ரொம்ப நல்லா இருக்கு...

பாலராஜன்கீதா said...

நல்ல மீள்நினைவுகள்

சுட்டிக்கு நன்றி.

Vinitha said...

நன்றி.

நானும் "பள்ளிக்கட்டு", "விநாயகனே" , "குன்றத்திலே", "புல்லாங்குழல்", "மருதமலை", போன்ற பாடல்களை நிறைய தடவை தேடினேன். கேசட் தான் இப்போ இருக்கு.... யாரவது ப்ளீஸ் லிங்க்ஸ் கொடுங்க...

Sanjai Gandhi said...

வினிதா,

http://www.bhaktipaadal.com/mdalbums.asp?art=&schCategory=MD00007

http://www.bhaktipaadal.com/albums/ALBVGR0018.html

மற்றவையும் அதிலே இருக்கு

Sanjai Gandhi said...

//எனக்கு காலைல தூங்க ரொம்ப பிடிக்கும்.. அதுவும் கம்பளீய போர்த்திட்டு குளீரில் தூங்குவது சூப்பர்..//

இப்போவரைக்கும் இப்டி தானே இருக்க பூர்ணி.. :)

--------------
//ம்ம்ம்...எங்களால் கேட்க முடியுமா என்பதுதான் கேள்வி!!!????//
அருணாக்கா, உங்கள் சந்தேகத்தை போக்கும் வகையில் பாட நான் ரெடி.. கேட்க நீங்க ரெடியா? :)

----------------

கார்த்திக் நீங்க குடுத்த லின்க்ல எளிமையா தேடற மாதிரி இல்லை.. பாடல்களை தனித் தனியா கேட்கனும் போல.. இதில் எளிமையாவும் இருக்கு.. தனி ப்ளேயரும் இருக்கு..

----------------

நன்றி முரளி.. ;)

--------
வாலு, பவிழம் போகலாம்.. நான் கேக்கறதை எல்லாம் வாங்கிக் குடுங்க.. ;))

------------

Sanjai Gandhi said...

பாருங்க லக்‌ஷ்மியக்கா, கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆயிரக் கணக்கான பாடல்கள் இருக்கு.

-----------

கும்கி, நாம எல்லாம் எப்போ பொய் பேசி இருக்கோம்.. :)) எனக்கெல்லாம் வெக்கமா மானமா சூடா சொரணையா? :))

------------

நன்றி ஆதியாரே.. முதல் வரி உண்மை தானுங்கோ.. முக்கியமான தகவலை மறைச்சிட்டதா நாளைக்கு வரலாறு சொல்லக் கூடாது பாருங்க.. :))

-----------
நன்றி மணிநரேன்.. வீட்டில் எனக்கு அந்த பிரச்சனை இல்லை..:)

-----------
கயல், பிசாசு மாதிரி ராத்திரில உலாத்தறத நிறுத்த மாட்டியா? அங்க போயுமா திருந்தல? :)

-----------

நன்றி பாலராஜன்கீதா.. :)

---------
வினிதா, அதுல தேடுங்க. நீங்க கேட்ட எல்லா பாடல்களுல் இருக்கும்..

Vinitha said...

என்ன பாடல்கள், தரம் வரிசை, தமிழ் பெயரில் இல்லை. தேடுவது கஷ்டம்!

Sanjai Gandhi said...

vinitha,

albums : http://www.bhaktipaadal.com/albums.asp

Singers : http://www.bhaktipaadal.com/singers.asp

Category : http://www.bhaktipaadal.com/md.asp

Search : http://www.bhaktipaadal.com/allsongs.asp

what else u want?

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

Poornima Saravana kumar said...

ungala tag seythirukken
:))

மங்களூர் சிவா said...

//
அன்புடன் அருணா said...

//சிறு வயதில் கேட்டிருந்தாலும் அனைத்து வரிகளும் இன்னும் நினைவில் இருக்கு. கூடவே பாட?! முடிகிறது.//
ம்ம்ம்...எங்களால் கேட்க முடியுமா என்பதுதான் கேள்வி!!!????
//

செம ஷாட்

:)))


மாம்ஸ் பக்தி பாடல்கள் லிங்க் கொடுத்ததற்கு நன்றி.

Sakunthala said...

மார்கழி மாத அனுபவங்கள் நல்லாயிருந்தது. அடுத்ததா தை மாத நெல் அறுவடை, வைக்கோல் போரின் மேல் குட்டிக் கரணம் போட்டது பற்றிய உங்கள் அடுத்த பதிவு விரைவில் வெளி வரும் என்று பட்ஷி சொல்லிச்சு. (கிண்டல் இல்லீங்க, நெஜமாவே அதப் பத்தியும் எழுதலாமேன்னு ஒரு யோசனை சொன்னேன்)

Sakunthala said...

நெல் பயிருடுவது பற்றிய உங்கள் பதிவைப் படித்தேன். நன்றாக இருந்தது. (முன்பு சொன்ன யோசனையை வாபஸ் வாங்கிக்கிறேன்.)

நேசமித்ரன் said...

நல்ல மீள் நினைவுகள்
வாசிப்போரின் அனுபவங்களையும் மீண்டும் கிளர்த்துகிறது இப்பதிவு..

வல்லிசிம்ஹன் said...

இந்தக் கோடையில் அந்தக் கம்பளி நாட்களை நினைப்பது சுகமே. இப்போது மார்கழியில் கூடக் குளிர் வருகிறதா நம் ஊரில்,அதாவது சென்னையில்??
மற்ற மாவட்டங்களில்,
திண்டுக்கல்,கோவை,மதுரை இந்த ஊர்களில் குளிர் இருந்து ,
அதை நானும் உணர்ந்திருக்கிறேன்.
நல்ல தொரு நினைவு அலை.

Tamiler This Week