இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday, 28 March 2009

Earth Hour ஒரு மணி நேரம் மட்டும் ப்ளிஸ்


இன்று உலகம் முழுவதும் Earth Hour அனுசரிக்கப் படுகிறது. இந்திய நேரம் இரவு 8.30 முதல் 9.30 மணி வரை. ஆகவே அந்த ஒரு மணி நேரம் விளக்குகள் அனைத்தும் அணைத்து புவி வெப்பமடைதல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கு கொள்வோம்.

Earth Hour நோக்கம்:

  • தனி மனிதர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் அனைவரையும் ஒரு மணி நேரம் விளக்கை அணைக்கச் செய்வது.
  • அதன் முலம் பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எற்படுத்துவது.
  • புவி வெப்பத்தினால் எற்படும் பாதிப்புகளில் இருந்து காக்க மக்கள் பிரதிநிதிகளை செயல்பட செய்வது.

2007ஆம் ஆன்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தோன்றிய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இப்போது சுமார் 80 நாடுகளில் கடைபிடிக்கப் படுகிறது. இந்த ஆண்டு முதல் இந்தியாவிலும் இந்தப் பிரச்சாரம் ஆரம்பிக்கப் படுகிறது.

இதர்காக மார்ச் மாதம் 28ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப் படுகிறது. இதில் நாமும் கலந்துக் கொள்வோம். பூமி வெப்பமடைதலில் இருந்து காப்போம்.

இந்த பிரச்சாரத்திற்கான அமைப்பு, இந்த பிரச்சனைக்கான தீர்வுகளையும் கேட்டிருக்கிறது.
என் கருத்து : ஆற்காடு வீராசாமியை உலக மிந்துறை அமைச்சராக்கினால் போதும். வருடம் ஒரு மணி நேரம் எதற்கு? ஒரு நாளைக்கு 2 மணி நேர விளக்கனைப்பிற்கு உத்திரவாதம் உண்டு.

14 Comments:

said...

இன்றுதான் அந்த நாளென்று எனக்கு தெரியாது. நினைவுபடுத்தியமைக்கு நன்றி. நம் எதிர்கால சந்ததிகளுக்கு பூமியை வாழ உகந்த இடமாக வைத்துவிட்டு செல்வோம். உங்கள் போஸ்டை உரிமையோடு அப்படியே என் மெயில் மூலமாக மற்றவர்களுக்கும் அனுப்புகிறேன். நன்றி!

said...

post pootutom illa ...naangalum..

uruppadiyana pathivu...

said...

இது குறித்து நம்ம ஆற்க்காட்டாருக்கு தெரியுமா?
பாவம் காலம் பூரா பூமி வெப்பமடையாம காப்பாத்தறதே அவர்தானே.

said...

ஆமாங்கோ தம்பி ... !! நானுமும் கண்டிப்பா இதுக்கு ஒத்துழைக்குறேனுங்கோ தம்பி....!!!


ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........!! வர .. வர.... நெம்ப டச்சு பண்ணுற பதிவா போடுரீங்கோ தம்பி.....!! நீங்கோ நேம்போ நல்லவீங்கோ தம்பி......!!!!!

said...

//என் கருத்து : ஆற்காடு வீராசாமியை உலக மிந்துறை அமைச்சராக்கினால் போதும். வருடம் ஒரு மணி நேரம் எதற்கு? ஒரு நாளைக்கு 2 மணி நேர விளக்கனைப்பிற்கு உத்திரவாதம் உண்டு. //



அவன் கெடக்குறான் ப்ளேகிரவுண்டு மண்டையன் ...!!! அவனால மக்கள்தொக அதிகமானதுதான் மிச்சம்....!!!!!!!!!

said...

எங்க நேரம் முடிஞ்சது.

said...

கண்டிப்பாக செய்கிறோம்.

said...

இது போல எப்பவாது நல்ல பதிவும் போடுவிங்க போல‌

said...

நாங்களும் 8:30 முதல் 9:30 வரை விளக்குகளை அணைத்து Earth Hour அனுசரித்தோம்.... வெளியே சுத்தப் போயிட்டோமே!!!!
அன்புடன் அருணா

said...

தம்பீஈஈஈ.............. சஞ்சய்........!! என்ன கொலகாரனா மாத்தீராத சாமி........!!!! உம்பட பேச்ச கேட்டு ... நானு எம்பட ப்ரெண்ட்ஸ்ங்குகிட்ட எல்லார்த்துகிட்டயும் இன்னிக்கு ஈ .பீ பவர் கட்டாகுமுன்னு சொல்லீ..... எங்க ஏரியாவுல அன்னிக்கு பவர் கட்டே ஆகுல.......!!!

ஆஆஆவ்வ்வ்வ்வ்....!!!!! நானு .....!!!! ஆஆஆவ்வ்வ்வ்வ்.......!! செருப்படி வாங்குனதுதான் மிச்சம்......!!! ஆஅவ்வ்வ்வ்.........!!!!!!


எங்கூருபக்கம் வாருவீல்லோ......!! அப்போ கெவுனுச்சுபோடுறேன் உன்னைய .........!!!!!!


ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்.........!!!!!!

said...

நல்ல பதிவுண்ணா..

said...

அன்புடன் அருணா said...
நாங்களும் 8:30 முதல் 9:30 வரை விளக்குகளை அணைத்து Earth Hour அனுசரித்தோம்.... வெளியே சுத்தப் போயிட்டோமே!!!!
//

:))

said...

பார்க்காமல் விட்டுவிட்டேன்,
இருப்பினும் அன்று சனிகிழமை என்பதால் காலையிலேயே நல்லா போட்டுகிட்டு 5 மணிகெல்லாம் மட்டையாகிட்டேன். அதனால் லைட் எறிந்திருக்க வாய்ப்பில்லை!

said...

நன்றி சாஹுல்..

நன்றி இயற்கை..

கிகிகி கும்கிகிகி.. :)

நன்றி மேடி..

நன்றி டீச்சர். உங்க ஊர்ல தானே முதலில். :)

நன்றி லக்‌ஷ்மியக்கா..

நன்றி பிரியாக்கா..

நன்றி அருணாக்கா..

நன்றி பூர்ணி..

மிக்க நன்றி வால்.. :)

Tamiler This Week