இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comMonday 16 March, 2009
தர்மபுரி @ தகடூர்
Lables
தர்மபுரி
நண்பர் குடுகுடுப்பைக் கேட்டுக் கொண்டதற்காக வருங்கால முதல்வர் வலைப்பூவிற்காக எழுதிய பதிவு.
தர்மபுரி @ தகடூர்
1965ஆம் ஆண்டு (02.10.1965) தனி மாவட்டமாக பிரிக்கும் வரை சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தனி மாவட்டமாக பிரித்தவுடன் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தது. பின்பு 2004ல் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளை பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமானது. கிருஷ்ணகிரி , திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களையும் கர்நாடகாவின் எல்லையையும் எல்லையாய் கொண்டு அமைதிருக்கிறது எங்கள் தர்மபுரி.இப்போது தர்மபுரி மாவட்டம் என்பது ஒகேனக்கல், பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி , மொரப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக இருக்கிறது. சுமார் 4500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கும் மாவட்டமாக தர்மபுரி மாவட்டம் இருக்கிறது.
எங்கள் தர்மபுரியை பற்றி சில விவரங்கள்
வருவாய் வட்டங்கள்
1.தர்மபுரி 2.அரூர்
தாலுகா ( வட்டாட்சிகள் )
1. தர்மபுரி 2. அரூர் 3. பென்னாகரம் 4.பாப்பிரெட்டிபட்டி 5. பாலக்கோடு
மிகவும் வெப்பமான பகுதி. கோடையில் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குளிர்காலங்களில் 17 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை இருக்கும்.மாவட்டம் முழுவதுமே பரவலான கனிம வளமிக்க பகுதிகள் இருக்கின்றன. எங்கள் ஊருக்கு அருகில் மாலிப்டினம் பெருமளவில் கிடைக்கின்றன. பரவலாக கருங்கல் குவாரிகளும் உண்டு,
[அதியமான் கோட்டம்]
- எப்போதுமே தர்மபுரிக்காரன் என்று சொல்வதில் எனக்கு ஒரு கர்வம் உண்டு. அந்த அளவுக்கு அந்த மண்ணுக்கு பெருமை மிகு வரலாறுகள் உண்டு. பேரே சொல்லும் மண்ணின் மகிமையை. தர்ம புரி. மன்னராட்சிகள் நடந்த காலத்தில் தர்மபுரிக்கு தகடூர் என்று பெயர். கடைசி ஏழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் அதியமான் நெடுமான் அஞ்சி அஞ்சாமல் ஆண்ட பூமி எங்கள் பூமி. கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் இன்றும் அதியமான் கோட்டை என்றே அழைக்கப் படுகிறது. அதியனின் வீரத்திற்கு ஏராளமன வரலாறுகள் உண்டு. ஆனால் அவரை அனைவரும் அறிவது ஒரு முக்கியமான செயலுக்காக. அது, மிக அபூர்வமாக காய்க்கும் ஒருவகை காட்டு நெல்லிக்கனியை உண்டால் மரணம் கிடையாதாம். அந்தக் கனி அதியனுக்கு கிடைத்ததும் தான் உண்ணாமல் ஒளவை பாட்டிக்கு தந்து அவர் மரணம் அடையாமல் தமிழில் மேலும் பல செய்யுள்கள் படைத்து தமிழை வாழ வைக்க வேண்டும் என்று எண்ணி அந்தக் கனியை அவருக்கு அளித்துவிட்டார்.
- மாம்பழம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சேலம். ஆனால் சேலத்திற்கும் மாம்பழத்திற்கும் இருக்கும் ஒரே சம்பந்தம், சேலத்துக்காரர்களும் அதை சாப்பிடுவார்கள். அவ்வளவுதான். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி தான் பாழ்மபழம் பெருமளவில் விளையும் பூமி. இந்தப் பகுதிகள் ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்ததால் மாம்பழமும் சேலத்துக்கு சொந்தமாகி விட்டது. இப்போதும் கிருஷ்ணகிரி - தர்மபுரி நெடுஞ்சாலையில் ஏராளமான மாம்பழக் கூழ்(pulp) தொலிற்சாலைகள் இருக்கின்றன.
- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த திரு,ராஜாஜி அவர்கள் பிறந்தது ஓசூருக்கு அருகில் இருக்கும் தொரப் பள்ளி கிராமத்தில். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டம். அவர் சேலம் மாநகராட்சி சேர்மனாக இருந்ததால் பலரும் அவரை சேலத்துக்காரர் என்றே நினைக்கிறார்கள்.
- இந்திய சுந்தந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த திரு. சுப்ரமனியம் சிவா அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுப் பயணம் செய்த போது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தன் இன்னுயிரை விட்டார் (1921). அங்கே அவருக்கு நினைவு மண்டபம் அமைந்துள்ளது.
- எல்லோருக்கும் தெரிந்த மிக முக்கியமான இடம் ஒகேனக்கல் முக்கியமான சுற்றுலாத் தலம். இதுவும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியே. காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதி தான் ஒகேனக்கல். பெரிய நீர்வீழ்ச்சிகள் ( ஐந்தருவிகள்) , தொங்குபாலம் , பரிசல் பயணம் மற்றும் ஆயில் மசாஜ் இங்கு சிறப்பம்சங்கள். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து தொடர்ந்து பேருந்து வசதிகள் இருக்கு.
- அரூர் அருகில் தீர்த்தமலை என்னும் புன்னியஸ்தலமும் அமைந்துள்ளது. சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த கோயில் தான் எங்கள் பகுதி மக்களுக்கு திருப்பதி. சிறுவயதில் அடிக்கடி சென்றிருக்கிறேன். புளிசாதம் கட்டிக் கொண்டு தான் போவோம். உடைத்த தேங்காயை கடித்துக் கொண்டு புளிசோறு சாப்பிடும் சுகமே தனிதான். குரங்குகள் அதிகம் வாழ்கின்றன. ஆண்டுதோறும் நடைபெரும் தீர்த்தமலை தேர் திருவிழா மிக பிரபலமானது. அங்கே சில நம்பிக்கைகள் உண்டு. அந்த மலையை புகைப் படம் எடுக்க முடியாது என்று சொல்வார்கள். அது நிஜமல்ல. இன்னும் கூட அந்த தீர்த்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேள்விபட்டேன். தீர்த்தம் வரும் துவாரத்தை அவ்வப்போது குரங்குகள் கைவைத்து அடைத்துக் கொள்ளும். அப்படி செய்தால் பெரிய பாவம் செய்தவர்களோ அல்லது மாதவிடாய் நாட்களில் இருக்கும் பெண்ணோ அந்த கூட்டத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாம். உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் குற்றம் செய்பவர்களுக்கு தெய்வ குற்றம் பற்றிய பயம் ஏற்படுத்தத்தான். அந்த குரங்குகள் அடிக்கடி தண்ணீரை அடுத்துக் கொள்ளும். சோழ மற்றும் விஜயநகர அரசர்களின் ஆதரவால் கட்டப் பட்டது. அரூரில் இருந்து 5 கிமீ தொலைவில் சேலம் சாலையில் விஜயநகரம் என்ற சிறிய ஊர் கூட இருக்கிறது.
- எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். :)
- எங்கள் தர்மபுரியை பற்றி சொல்ல இன்னும் ஏராளமாக இருக்கிறது. பெரிய பதிவாக இருந்தால் படிக்க மாட்டிர்கள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். :)
அன்புடன்
சஞ்சய்காந்தி
http://sanjaigandhi.blogspot.com ( ஹிஹி.. ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்.. )
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
அண்ணா profile போட்டோ சூப்பர்:-)
ம்ம்ம்ம் பரிசல் சவாரி பார்த்தாலே உற்சாகம் பிய்த்துக் கொண்டு போகிறது...
அன்புடன் அருணா
எப்போதுமே தர்மபுரிக்காரன் என்று சொல்வதில் எனக்கு ஒரு கர்வம் உண்டு....
-------------------------------
எங்க ஊட்டுக்கரரோட தாத்தாவோட சம்சாரத்துக்கு [ ஆமாங்க பாட்டி தான் ] சொந்த ஊர் தருமபுரி பக்கம் பாப்பாரபட்டி....நீங்க அவங்களுக்கு சொந்தக்கரவுகளா?
பூர்ணி.. என் மருமகன் கிட்ட சொல்லி உன் வாய்லையே மிதிக்க சொல்றேன் பாரு.. :(
--------------
அருணா அக்கா.. அது ரொம்ப ஜாலியான அனுபவமா இருக்கும்.. பாப்பாவை பார்க்க வரும்போது ஒருமுறை விசிட் பண்ணுங்க. :)
--------------
//எங்க ஊட்டுக்கரரோட தாத்தாவோட சம்சாரத்துக்கு //
எவ்ளோ நல்லவங்க பாருங்க? இவ்ளோ ஷார்ட்டா சொல்லிட்டிங்களே:((
பாப்பாரப் பட்டியில எனக்கு நண்பர்கள் அதிகம்ங்க.. உறவுக்காரங்க யாரும் இல்லை.. என் அக்காவோட ஃப்ரண்ட் ஒருத்தர் இருந்தாங்க. அவங்களை உறவுக்காரங்க ஆக்க ட்ரை பண்றதுக்குள்ள அவங்க வேற ஒருத்தருக்கு உறவுக்காரங்க ஆய்ட்டாங்க.. :))
நிலாவுக்கு ஒரு தம்பி பாப்பா வருவான்ல.. அப்போ நாம உறவுக்காரங்க(சம்பந்திகள்) ஆய்டலாம்.. :))
1997 - 2001 வரை நானும் தர்மபுரிக்காரனே :-) சப்தகிரி பொறியியல் கல்லூரியில் படித்தேன். வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணங்களையும் முக்கியமான நண்பர்களையும் எனக்குத் தந்த ஊர். இன்றைக்கும் பெங்களூருக்கு பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும் தர்மபுரி வந்துவிட்டால் என்னையுமறியாமல் முழிப்பு வந்து விடும். இப்போதும் நான் செல்ல விரும்பும் இடத்தில் தர்மபுரிக்கே முதலிடம்
ஆச்சர்யமா நம்ம இரண்டு பேரும் தர்மபுரியில் மட்டும் ஓரணியில் இருக்கிறோம்:-)
அட அப்டியா? ரொம்ப சந்தோஷம்.. நான் இந்தப் பதிவை எழுதியப் பிறகு தான் தெரிந்தது. தர்மபுரிக்கு தொடர்புடைய ஏராளமனவர்காள் வலைப்பூ வைத்திருக்கிறார்கள்.
இன்னொரு ஒற்றுமை..
அதே 1997 - 2000 ஆண்டுகளில் தான் நான் அரசு கலைக் கல்லூரியில் படித்தேன். :))
நீங்கள் பொறியியல் என்பதால் 4 ஆண்டுகள். நான் அறிவியல் என்பதால் 3 ஆண்டுகள். :))
ஒஹேனக்கல் தமிழ்நாட்டுல வருதா? இல்லை தூக்கிட்டு போயிட்டானுங்களா?
//எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். //
இந்த ஒரு காரணத்துககாகவே எங்க ஊருல இருந்து உங்க ஊரை பிரிச்சது 1000% சரி
//சேலத்திற்கும் மாம்பழத்திற்கும் இருக்கும் ஒரே சம்பந்தம், சேலத்துக்காரர்களும் அதை சாப்பிடுவார்கள்//
விக்கிறதுக்கு எங்க ஊருக்குதானே வரணும் அப்பறம் என்ன :(
//அதே 1997 - 2000 ஆண்டுகளில் தான் நான் அரசு கலைக் கல்லூரியில் படித்தேன். :))
நீங்கள் பொறியியல் என்பதால் 4 ஆண்டுகள். நான் அறிவியல் என்பதால் 3 ஆண்டுகள். :))//
தர்மபுரிகாரங்க இது போல அரிய கண்டுபிடிப்பு எல்லாம் நிகழ்த்துவாங்க.
என் அக்காவோட ஃப்ரண்ட் ஒருத்தர் இருந்தாங்க. அவங்களை உறவுக்காரங்க ஆக்க ட்ரை பண்றதுக்குள்ள அவங்க வேற ஒருத்தருக்கு உறவுக்காரங்க ஆய்ட்டாங்க.. :))
/////*****
சோகக் கதையாகிப் போச்சே
Priya Kannan said...
//எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். //
இந்த ஒரு காரணத்துககாகவே எங்க ஊருல இருந்து உங்க ஊரை பிரிச்சது 1000% சரி ////*******
அட்ரா சக்கை அட்ரா சக்கை
அட்றாசக்கை... அட்றாசக்கை... அட்றாசக்கை... அருமையா எழுதியிருக்கீங்க...
மாம்பழம் குறித்த செய்தி மிக மிக உண்மை. விளைச்சல் முழுதும் எங்க ஊருல நடந்தாலும் அநியாயமாய் சேலத்துக்காரங்க அவங்க ஊருல "விளையாத மாம்பழத்துக்கு" சொந்தம் கொண்டாடுறாங்க.
இன்னொன்னு... எங்க ஊருல மண்ணைன்னையை சீமை எண்ணைன்னுதான் சொல்லுவாங்க. 30 வருசத்துக்கு முன்னால அது சேலம் சீமையில இருந்து தான் விற்பனைக்கு தர்மபுரிக்கு வருமாம். அதனால அந்த பேரு...
என்ன பெருமை பேசி என்ன?
அதியமான் புலவர்கள் நலனுக்காக உருவாக்கிய பழம்பெரும் ஊரான இலக்கியம்பட்டி இப்போ வேளாண் கல்லூரி மாணவிகள் எரிப்பு மூலம் உலகம் முழுக்க பலரின் வெறுப்புக்கு உள்ளான ஊர் :-(
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் இல்லாம சாக்கடைக்கு பக்கத்துல குழி வெட்டி குடிநீர் பிடிக்கும் (நகராட்சி தரும் நீர் அந்த அளவு தான் அழுத்ததில் தான் வரும்) கொடுமையும் எங்க ஊருல தான் நடக்குது.
@ முத்துக்குமரன்... 1997 - 2001 சப்தகிரியா..? 1997ல் நான் அங்கே மின்னியல் விரிவுரையாளனா இருந்திருக்கேன். :-)
சொல்ல மறந்துட்டேன்.. இந்த தீர்த்தமலை குறித்து ஒரு செய்தி.. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் நாளில் தீர்த்தமலை கோவிலின் வாசலில் நின்று பார்த்தால் அது தெரியும்னு சொல்லுவாங்க... நான் பார்த்ததில்லை... பார்த்தவங்க சொல்லி கேட்டிருக்கேன்.
வால், காவிரி தான் தமிழ்நாட்ல வ்ருது.. ஒகேனக்கல் தமிழ்நாட்லையே தான் இருக்கு. :)
-------------
//விக்கிறதுக்கு எங்க ஊருக்குதானே வரணும் அப்பறம் என்ன :(//
பின்ன, திங்கிறவங்க அங்க தான இருக்கிங்க... :))
//சோகக் கதையாகிப் போச்சே//
ஆமாங்க நிலாம்மா.. :(
//அட்ரா சக்கை அட்ரா சக்கை//
அட நீங்க வேற.. இவங்களுக்கும் சேலத்துக்கும் சம்பந்தமே இல்ல.. சும்மா புருட விடறாங்க. :)
ஆஹா.. கோபி அண்ணா.. என் பதிவுல நீங்களா? ரொம்ப நன்றிங்ணா... :)
//இன்னொன்னு... எங்க ஊருல மண்ணைன்னையை சீமை எண்ணைன்னுதான் சொல்லுவாங்க. 30 வருசத்துக்கு முன்னால அது சேலம் சீமையில இருந்து தான் விற்பனைக்கு தர்மபுரிக்கு வருமாம். அதனால அந்த பேரு...//
அட.. சிமெண்ணெய்க்கு இதான் பெயர்க் காரணமா? இப்போவும் ஊர்ல சீமெண்ணெய்ன்னு தான் சொல்றாங்க.
//அதியமான் புலவர்கள் நலனுக்காக உருவாக்கிய பழம்பெரும் ஊரான இலக்கியம்பட்டி இப்போ வேளாண் கல்லூரி மாணவிகள் எரிப்பு மூலம் உலகம் முழுக்க பலரின் வெறுப்புக்கு உள்ளான ஊர் :-(
//
இதை ஏன் அண்ணா நினைவு படுத்தறிங்க?. இதை நேரில் பார்த்து துடித்தவன் நான். மூவரும் என் நண்பனின் வகுப்புத் தோழிகள். :((
//அதியமான் புலவர்கள் நலனுக்காக உருவாக்கிய பழம்பெரும் ஊரான இலக்கியம்பட்டி //
ஆனால்.. நம்ம ஆளுங்க இதை ”லக்கியம்பட்டி”ன்னு தானே சொல்றாங்க.
//இதை ஏன் அண்ணா நினைவு படுத்தறிங்க?. இதை நேரில் பார்த்து துடித்தவன் நான். மூவரும் என் நண்பனின் வகுப்புத் தோழிகள். :((//
ரொம்ப கொடுமையான நிகழ்வு. என்ன செய்ய... நம்ம ஊரப் பத்தி நெனைச்சு பாக்கும்போது எல்லாம் இதுவும் ஞாபகத்துக்கு வந்துருது.
//ஆனால்.. நம்ம ஆளுங்க இதை ”லக்கியம்பட்டி”ன்னு தானே சொல்றாங்க.//
அது.. 'இ' சைலண்டு... :-P
நம்மாளுங்க தமிழ் இலக்கணத்தை சரியா பின்பற்றுறாங்க... அதாவது இரப்பர், இலட்சம் இதையெல்லாம் உச்சரிக்கும் போது. ரப்பர், லட்சம் அப்படின்னு சொல்றாங்க இல்லையா.. அது மாதிரி :-D)))
hi i'm arasu from dpi. my native also dharmapuri. i like dhaarmapuri. i wish you why you publish a best news.i will publish about dpi with more details.my area is kumarasamipet.
thank you
தமிழகத்தின் வடக்கு வாசல் - தகடூர்- தருமபுரிப் பகுதியின் சிறப்புக்கள்:
1. இந்தியாவில் ஒரே பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாறை ஓவிய, சிந்துவெளி எழுத்துச் சான்றுகள் கிடைத்திருப்பது தருமபுரிப் பகுதியில்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
2. அதியர் காலத்தில் தகடூர் நாடு என்ற அழைக்கப்பட்ட இப்பபகுதியில் பண்டைக்காலம் தொட்டே பழந்தமிழர் வாழ்ந்ததற்கான சான்றாதாரங்கள் கிட்டுகின்றன. அதியமான்கள் மௌரியரது படைகளை எதிர்த்துப் போரிட்டுள்ளான்.
3. இதுவரை கிடைத்த 89 வட்டெழுத்துக் கல்வெட்டுக்களில் இருளப்பட்டியில் கிடைத்த வட்டெழுத்துக் கல்வெட்டு தமிழகத்தின் தொன்மையான கல்வெட்டாகும்.
4. 1978ல் முதன்முதலில் தமிழ்நாட்டில் குகை ஓவியம் கிருஷ்ணகிரி வட்டம் மல்லப்பாடியில் கண்டுபிடிக்கப்பட்டது.
5. அக்காலத்தில் தகடூர் நாடடின் வடக்கு எல்லை சித்தூர் வரை விரிந்திருந்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளும் சித்தூர் வரையுள்ள குன்றுகளில் காணப்படுகின்றன.
இத்தனை சிறப்பும் கொண்ட தருமபுரிப் பகுதியின் வராலாறும் பண்பாட்டுச் சிறப்பும் வரலாற்றுக்க முற்பட்ட காலம் முதல் இன்றுவரை மிகவும் விரிவாக ஆய்வுக்கு எடுத்தாளப்பட்டிருக்கின்றது.
கொங்கு ஆய்வு மையம் நிறுவப்பட்டு கொங்கு நாட்டினைப் பற்றிப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாற்று நிபுணர்களும் ஆய்வாளர்களும் கண்டிப்பாக வரவேற்க வேண்டும். இளைய தலைமுறைக்கு அவசியம் சென்றடைய வேண்டும். தாங்கள் வாழும் மண் பற்றியும் அந்த மண்ணில் தடங்கள் பதித்த சரித்திர நாயகர்கள் பற்றியும் அவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். தருமபுரி வரலாற்று ஆய்வு மையத்தைத் தொடர்ந்து இப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆய்வு மையமும் துவங்கப்பட்டுள்ளது.
எப்போதுமே தர்மபுரிக்காரன் என்று சொல்வதில் எனக்கு ஒரு கர்வம் உண்டு
அன்புடன் J.P.SENTHIL KUMAR.
தர்மபுரிக்காரன் என்று சொல்வதில் எனக்கு ஒரு கர்வம் உண்டு
boss palaya katha 1000 irukum ,,andha visatha lam kettu namma garvam padra mari, namma kathaya kettu namma generation garvam paduma ?????? inniku namma nelama yenna ,,, namma oorla than padipparivu kammi innamum ,,,,
1,42000 peruku job illa,,,
45,000 per palangudi makkal, namakke varumai nu sollumbothu avangala sollanuma,,,,
ilanyargal paathi peru tasamac laye kaalatha otranga,,sari adha vidunga vivasayatha nambiyavathu vaalalam na,,athiyavasiya vela uram vela adhu idhu nu yethi ippa yellam plot ah kedakudhu,,,paaratrathuku 1000 visayam iruku than , aana yethu mukiyam , adhu rectify pandra kadama namadhu ilaya ?????
Post a Comment