இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 25 March, 2009

ஆத்தா எனக்கு அவார்டு கெடைச்சிடிச்சி.


நாம இப்போல்லாம் வலைப்பூக்கள் படிக்கிறதே கொறைஞ்சிருந்தாலும் பாசக்கார புள்ளைங்க பதிவுகளை மட்டும் முடிஞ்ச வரைக்கும் படிக்கிறதுண்டு. அப்டி பார்க்கும் போதெல்லாம் இந்த பட்டாம்பூச்சி விருதுன்னு ஒரு மேட்டர் பதிவுலகம் முழுக்க பட்டாசுக் கிளப்பிட்டு இருந்தது. எனக்கும் ஆசை, யாராவது நமக்குத் தர மாட்டாங்களான்னு.:).. நானும் இந்த விருது வாங்கின நம்ம பாசக்கார புள்ளைங்க பதிவுக்கெல்லாம் போய் குடுத்தவங்களுக்கும் வாங்கினவங்களுக்கும் வாழ்த்துகள் சொல்லிட்டு இருந்தேன். அப்டியாவது யாராவது நமக்குத் தரமாட்டாங்களான்னு தான். :))

ஹிஹி.. இம்புட்டு தானுங்க நம்ம ரேஞ்ச். சின்ன சின்ன விஷயங்களுக்கு தான் ரொம்ப ஆசைப் படுவேன்.தேன்மிட்டாய், ஐஸ், கடலை மிட்டாய், பொரி, எள்ளுருண்டை மாதிரி.. இந்த பட்டாம் பூச்சி விருது மாதிரி..:))

ஆனா பாருங்க ஒருத்தரும் மதிக்கலை.. :(. சரி.. நாம எழுதறதும் யாருக்கும் பிடிக்கலை அல்லது நம்மள நண்பனாவும் யாரும் நினைக்கலைப் போலன்னு நினைச்சிக்கிட்டேன்... நான் எழுதறது பெரும்பாலானவங்களைக் காயப் படுத்தற மாதிரியே இருக்குன்னும் அது எனக்கு தெரியாதுன்னும் என் உடன்பிறப்பு ஒருத்தர் வேற சொல்லி இருந்தாரா.. அதனால விட்ரா..விட்ரா.. சானா கானான்னு மனசைத் தேத்திக்கிட்டேன். :))

ஆனா பாருங்க.. நான் எதிர்பார்க்காத நேரத்துல என்னையும் தன் நண்பனா நினைச்சி பட்டாம் பூச்சி அவார்டு குடுத்துட்டார் நம்ம சுரேகா. :) இதுல இன்னும் ரொம்ப சந்தோஷம் என்னன்னா .. என் மாமன் அப்துல்லா மற்றும் சினிமா பதிவு நிபுணர் முரளி கண்ணன் கூட சேர்த்து எனக்கும் குடுத்திருக்கார்.

அன்பு நண்பர் சுரேகாவிற்கு நன்றி.. நன்றி.. நன்றி.. :)) உங்கள் நட்பில் பெருமை கொள்கிறேன்.

இப்போ நானும் யாருக்காவது தரனுமாம்.. எனக்குத் தெரிஞ்சி இதை வாங்காம யாரும் இல்லை. அப்டி யாராவது இருந்தா அவங்களுக்குத் தான் நான் இந்த பட்டாம்பூச்சி விருது தர ஆசைப் படறேன். அதனால யாருக்கெல்லாம் இன்னும் இதை யாரும் கொடுக்கலையோ அவங்க எல்லாருக்கும் நான் தரேன் பட்டாம் பூச்சி விருது. எல்லோரும் என் நண்பர்களே. மொத்த பதிவுலக நண்பர்களுக்கும் இந்த விருதைக் கொடுக்கிறேன். வள்ளல்டா காந்தி நீ.. என்னவோ போடா.. :))

நன்றாக தமிழில் எழுதும் திறமை இருந்தும் தமிழ் பதிவுகளுக்கு பரிச்சயம் இல்லாத என் தோழி பதுமையின் பதிவுகளை அறிமுகப் படுத்தும் விதமாக அவளுக்கு இதை சிறப்பு விருதாகக் குடுக்கிறேன் மற்ற எல்லோரோடும் சேர்ந்து..

மேலும் சிறப்பு விரு(ந்)தினர்கள்
குசும்பன்
கோவி கண்ணன்
நாகைசிவா
வால்பையன்
தூயா
பொடிப்பொண்ணு
லவ்டேல் மேடி
கும்கி
... இன்னும் பட்டியல் தொடரும்.. :-)

38 Comments:

said...

//என் மாமன் அப்துல்லா மற்றும் சினிமா பதிவு நிபுணர் முரளி கண்ணன் கூட சேர்த்து எனக்கும் குடுத்திருக்கார்.//

உங்களோட சேர்த்து அவுங்களுக்கும் கொடுத்ததால் அவுங்க எல்லாம் ரிட்டன் செய்ய போறாங்க அந்த விருதை!

said...

//நாம இப்போல்லாம் வலைப்பூக்கள் படிக்கிறதே கொறைஞ்சிருந்தாலும் //

முழுப்பரிட்சை வருகிற நேரம் ஒழுங்கா இந்த வருடமாவது 8வது பாஸ் பன்னும் வழியை பாரு!

said...

:) வாழ்த்துகள் !

விருதுக்கு பெருமை ! - இதெல்லாம் (ரொம்ப்ப) ஓவரா ? விழுந்தது விக்கட்டா ? ன்னு கேட்கப்படாது !

said...

// குசும்பன் said...
//நாம இப்போல்லாம் வலைப்பூக்கள் படிக்கிறதே கொறைஞ்சிருந்தாலும் //

முழுப்பரிட்சை வருகிற நேரம் ஒழுங்கா இந்த வருடமாவது 8வது பாஸ் பன்னும் வழியை பாரு!
//

ஆமா குசும்பன் ஏழாவது பாஸு.

said...

வாழ்த்துகள் அண்ணா :))

Anonymous said...

வாழ்த்துகள் சஞ்சய்... :) அப்துல்லா மாமாவா?!

said...

வாழ்த்துகள் அண்ணா:)))

said...

வாழ்த்துக்கள் சஞ்சய்

said...

( சோகமான பீபீ ( ட்ரம்பட் ) வாத்தியம்......)

பேம்... பெபெபெபெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... !!!!!!!!!பெபெபெபெபே.... பேம் .............!!!!!!!பேம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......!!!!!!!!!


பேம்ம்ம்ம்ம்...........!!!


பேம்ம்ம்......!!


ஆன் எ மார்ச்.......!!!


அட்டேன்சன்.....!!


ப்ளேக் சல்யூட்.....!!!( தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமர்...... )


ஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!!!!இன்று துக்க தினமாக அறிவித்து ...... அனைத்து கட்சி கொடிகளும் அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.......!!!!!ஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!!!!

said...

வாழ்த்துக்கள்.

அப்படியே டாக்டர் பட்டமும் கூடிய விரைவில் பத்மஸ்ரீ பட்டமும் வாங்க!

said...

வாழ்த்துக்கள் சஞ்சய். நானும் எனக்குக் கிடைத்த விருதை வலையுலகிலுள்ள எல்லோருக்குமாகத்தான் பிரித்துக் கொடுத்தேனாக்கும். அப்போ அதை வாங்கியவர்களில் நீங்களும் உண்டுதானே:))!

said...

வாழ்த்துகள் சஞ்சய்... :) அப்துல்லா மாமாவா?!

said...

//வள்ளல்டா காந்தி நீ.. என்னவோ போடா.. :))//

ஆமாம்...

என்னவோ போடாங்க (மரியாதை இல்லாம பேச கூடாது பாருங்க....)

//நானும் இந்த விருது வாங்கின நம்ம பாசக்கார புள்ளைங்க பதிவுக்கெல்லாம் போய் குடுத்தவங்களுக்கும் வாங்கினவங்களுக்கும் வாழ்த்துகள் சொல்லிட்டு இருந்தேன்.//

இப்ப தாம்ல தெரியுது, நீர் ஏன் அந்த பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டீர் என்று... புத்திக்காரன் தான் நீர் :)

said...

:)))))))))))))))))

வாழ்த்துக்கள் :)

said...

//முழுப்பரிட்சை வருகிற நேரம் ஒழுங்கா இந்த வருடமாவது 8வது பாஸ் பன்னும் வழியை பாரு!//

LOL :)))குசும்பன், அவரு இன்னும் 5-வதே பாஸ் பண்ணலியாமே.. நீங்க என்ன தப்பா 8-வதுன்னு சொல்றீங்க ??

said...

குசும்பா எனக்கும் அந்த சந்தேகம் உண்டு. ;))

8வதா? ஓ.. இப்போல்லாம் பள்ளிக்கூடமே போகாதவஙக் கூட 8வது பரீட்சை எழுதலாமா? :)

--------------

கோவியாரே.. நன்றி.. இருங்க இப்போ பழிவாங்கறேன்.. :)

------------
//ஆமா குசும்பன் ஏழாவது பாஸு.//

ஆனா 8வது முறையாக் கூட லைசென்ஸ் பரீட்சைல பெயிலாமே.. :))

----------------

நன்றி ஸ்ரீமதி.. ;)

------------

நன்றி தூயா.. ஆமா அப்துல்லா என் மாமன் தான். :)

said...

நன்றி பூர்ணி.. :)

நன்றி தென்றல் அக்கா.. :)

ராசா மேடி.. என்னாச்சி சாமி.. சமீப காலமா என் மேல ஏகப் பட்ட கொலைவெறியோட இருக்கிங்க போல.. :)

நன்றி வாலாரே.. உங்கள் ஆசிகள்.. :))

said...

நன்றி லக்ஷ்மி அக்கா..
//அப்போ அதை வாங்கியவர்களில் நீங்களும் உண்டுதானே:))!//

நிச்சயமாக.. :))

---------
நன்றி மெய்யாலுமே நலல்வரே.. :)

-----------

நன்றி புலி..
//இப்ப தாம்ல தெரியுது, நீர் ஏன் அந்த பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டீர் என்று... புத்திக்காரன் தான் நீர் :)//

அட போங்க.. எல்லாத்தயும் நானேவா சொல்லிட்டு இருக்க முடியும்.. :))

---------------
நன்றி ஜி3.. :))

//LOL :)))குசும்பன், அவரு இன்னும் 5-வதே பாஸ் பண்ணலியாமே.. நீங்க என்ன தப்பா 8-வதுன்னு சொல்றீங்க ??//

விரைவில் பதில் மரியாதை செய்யப் படும்.. :))

said...

குசும்பன்
கோவி கண்ணன்
நாகைசிவா
வால்பையன்
தூயா
பொடிப்பொண்ணு
லவ்டேல் மேடி

......... இவாளுக்கெல்லாம் நான் பட்டாம்பூச்சி விருது குடுக்கிறேன். பட்டியல் இன்னும் தொடருமாக்கும்.. விருது வாங்கினவங்க எல்லாரும் சீக்கிறமே பதிவு போட்ருங்க சாமியோவ்.. :))

said...

வெறுமனே விருத குடுத்தா யார்தாம் சலிச்சுகிறமாட்டாங்க....கூடவே எதாச்சும் செக் இணைப்பு உண்டா?

said...

எது எப்பிடியோ பல நூற்றாண்டுகள் கடந்து கடேசியா அந்த விருத வாங்கினதுக்கு...ஹூம்...வாழ்த்துக்கள்.

said...

லவ் டேல் வர வர ரொம்ப கொட்டாவியா வுடறாரு...என்னாச்சு.
வேற வாயாகிபோச்சா?

Anonymous said...

தோழமைக்கும் விருதுக்கும் நன்றி. வலைபதிவர்கள் ஊக்கமின்றி இறந்து போகாமல் காப்பது இது போன்ற சந்தோஷ தருணங்களே!

Anonymous said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் சஞ்சை...எனக்குமா??

said...

// கும்க்கி said...

லவ் டேல் வர வர ரொம்ப கொட்டாவியா வுடறாரு...என்னாச்சு.
வேற வாயாகிபோச்சா? //


வாங்க கும்கி தம்பி.......!! என்னைய பத்தி விளம்பரம் குடுத்ததுக்கு நெம்ப சந்தோசங்க தம்பி...!!!!


ஆமாங்கோ தம்பி நமபுளுக்கு தோல் வாயி.....!! அடிக்கடி கஞ்சா .. அபின்னு போட்டுகிட்டே இருப்பேன்....... !!!

அதுனால அடிக்கடி நேரிய கொட்டாவியா வருது.........!!!


உங்க சந்தேகத்த தீத்துவெச்ச சந்தோசத்துல போயிட்டு வரனுங்கோவ்........!!!!!!

said...

:--))

said...

வாழ்த்துகள் அண்ணன்

said...

வாழ்த்துக்கள் அண்ணன்

said...

வாழ்த்துகள் Sanjai...

said...

வாழ்த்துக்கள் சஞ்சய்... :-))

said...

என் புதிய பதிவு : வாழ்க்கை


http://madydreamz.blogspot.com/

said...

பட்டாம்பூச்சி விருது குடுத்ததுக்கு நெம்ப தேங்க்ஸ்ங்கோ தம்பி...!!!

நெம்ப டச் பண்ணிபோட்டிங்கோ தம்பி....!!!


ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............!!!!


இங்ஙனம் ,

பாசம்மிகு அண்ணன் ,

லவ்டேல் மேடி

said...

முழுப்பரிட்சை வருகிற நேரம் ஒழுங்கா இந்த வருடமாவது 8வது பாஸ் பன்னும் வழியை பாரு!

hahahahaha

said...

/வள்ளல்டா காந்தி நீ.. என்னவோ போடா.. :))//

ஆமாம்...

என்னவோ போடாங்க (மரியாதை இல்லாம பேச கூடாது பாருங்க....)

//நானும் இந்த விருது வாங்கின நம்ம பாசக்கார புள்ளைங்க பதிவுக்கெல்லாம் போய் குடுத்தவங்களுக்கும் வாங்கினவங்களுக்கும் வாழ்த்துகள் சொல்லிட்டு இருந்தேன்.//

இப்ப தாம்ல தெரியுது, நீர் ஏன் அந்த பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டீர் என்று... புத்திக்காரன் தான் நீர் :)

appadingala

said...

வாழ்த்துக்கள் சஞ்சய்... :

said...

நாகை சிவா said...

//வள்ளல்டா காந்தி நீ.. என்னவோ போடா.. :))//

ஆமாம்...

என்னவோ போடாங்க (மரியாதை இல்லாம பேச கூடாது பாருங்க....)

enna oru mariyathai

said...

வாழ்த்துக்கள் சஞ்சய்..

said...

கும்கி, பதுமை , தூயா, மேடி, azhara, Mrs.Faizakader, இயற்கை, சென்ஷி, சக்தி, டைரக்டர் சங்கர்ஜி எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள். :)

Tamiler This Week