இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday 23 March, 2009

கூட்டாஞ்சோறு v 1.03.2

எனக்கு ஒரு சந்தேகம். சுஜாதாவின் கடவுள் புத்தகத்தை படிக்கிறப்போ வந்தது தான். சில நூற்றாண்டுகளுக்கு முன் பேசிய தமிழுக்கும் இப்போ நாம் பேசும் தமிழுக்கும் சின்ன ஒற்றுமை கூட இல்லை.

தொலைகாட்சிகளில் நடன, பாட்டு நிகழ்ச்சிகள் அந்தக் காலத்து புராணங்கள் இதுகாசங்கள் காப்பியங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் எல்லாம் இப்போ நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளில் இல்லை. இப்போது வரும் கவிதைகள் கதைகள் உள்ளிட்ட இலக்கியங்கள் எல்லாமே நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளில் தான் இருக்கிறது. அப்படின்னா , அந்த காலத்துல எழுதிய வார்த்தைகள் தானே மக்கள் பேசும் வார்த்தைகளாகவும் இருந்திருக்கும். அப்போது பேசிய மொழி தமிழாக இருந்தால் இப்போது நாம் பேசும் மொழி என்ன? அல்லது நாம் இப்போது பேசுவது தான் தமிழ் என்றால் பழைய இலக்கியங்கள் எல்லாம் எழுதப்பட்டிருப்பது என்ன மொழியில்? இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் செய்தி தாள்களில் வந்த வார்த்தைகளுக்கும் இப்போது பயன்படுத்தப் படும் வார்த்தைகளுக்குமே ஏராளமான வித்தியாசங்கள் இருக்கே. இப்படி மாற்றியது யார்? ஒரு மொழியில் தேவைக்கேற்ப புதிய வார்த்தைகள் ( இணையம். கணினி மாதிரி) கண்டுபிடிக்கப் படலாம். ஆனால் இருக்கும் வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தைகள் உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன?

இன்றைக்கு ஏராளமான ஆங்கில வார்த்தைகளை மாற்று வார்த்தைகளாக பயன்படுத்துகிறோம். அதேபோல் பழைய தமிழ் வார்த்தைகளுக்கு மாற்றாக வேறு மொழி பயன்படுத்தி இருப்பார்களோ? அதாவது நாம் இப்போது பேசும் மொழி... இது என்ன மொழி?
----புதசெவி-----

$$


இப்போதெல்லாம் செய்தி சேனல்களைத் தாண்டி வேறு சேனல்கள் பார்க்க முடியவில்லை. எரிச்சலாக இருக்கிறது. எந்த சேனலைப் பார்த்தாலும் ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். அலல்து பாடிக் கொண்டே இருக்கிறார்கள். அதைத் தாண்டி புதுமையாக( இதுவும் புதுமை இல்லை.. காப்பிதான்) ஒன்றும் யோசிக்க முடியவில்லை போலும். அதிலும் நிகழ்ச்சியின் பரபரப்புக்காக இவர்கள் அடிக்கும் கூத்து சகிக்கலை. நிகழ்ச்சி உருவாவதை படம் பிடிப்பதாக சொல்லி இவர்கள் அடிக்கும் தம்பட்டம் ஓவரோ ஓவர். எதோ பிறவிக் கலைஞர்கள் மாதிரி இதுல டிப்ஸ் எல்லாம் தந்து அசத்துவாங்க பாருங்க.. :)).. அதையும் தாண்டி மேடைல இவங்க அடிச்சிக்கிறது இருக்கு பாருங்க.. யபபா.. சாமிகளா.. எப்டிங்கய்யா இப்டி எல்லாம் கலக்கறிங்க.. இவங்க அடிச்சிக்கிறதை( மாதிரி நடிக்கிறதை) ஒரு நாளைக்கு 100 வாட்டி போட்டு விளம்பரப் படுத்துவாங்க. இதெல்லாம் கூட பரவால்ல.. ஆனா இந்த குட்டீஸ் வச்சி நடத்தற நிகழ்ச்சிகள் இருக்கே. ரொம்ப கொடுமையானது. இந்த காலத்துல ரொம்ப செல்லமா வளர்வதால் அவர்களால் சிறு தோல்விகளைக் கூட தாங்கிக்க முடியறதில்லை. அவர்கள் தாங்காமல் அழுவதை ஸ்லோ மோஷன்ல சில பல நிமிடங்கள் காட்டி சந்தோஷப் படறானுங்க. இதை பார்க்கும் அவர்களின் பள்ளி அல்லது தெருவில் இருக்கும் குழந்தைகள் கிண்டல் கேலி செய்வார்கள். இந்தக் குழந்தைகளுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை வரும். இதை எல்லாம் தடுக்கனும் பாஸ். இதுக்கு எதாவது செய்யனும் பாஸ். குசும்பனை தினமும் குளிக்க சொல்லிடுவோமா? :))

$$

க்ராக்&ஜாக்
விஜய் : ராமா ராமா ராமன்கிட்ட வில்லக் கேட்டேன்
பீமா பீமா பீமன் கிட்ட கதய கேட்டேன்
முருகு முருகு முருகன் கிட்ட மயிலைக் கேட்டேன்
ஈசு ஈசு ஈசன் கிட்ட மலையைக் கேட்டேன்
க்ராக்&ஜாக் : ஏனுங்க்ணா.. இப்டி வெட்டியா கண்டதையும் கேட்கற நேரத்துல
ஒரு நல்ல கதையைக் கேட்டிருந்தா ஒரு படமாவது ஓடி இருக்குமே.

^^^^^^^^^^^^^^

க்ராக் : மாசம் 25000 சம்பளம். ஒரு நல்ல வேலை இருக்கு. வேணுமா?
ஜாக் : அட. அப்டியா.. உடனே சேர்ந்துக்கிறேன். வேலை என்ன சொல்லு?
க்ராக் : ஏவிஎம் வாசல்ல நின்னுகிட்டு அஜித் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தா குச்சி வச்சி விரட்டனும்.
ஜாக் : !?!?!?!

டரியல்ட்யூப் ஆஃப் திஸ் வீக்
இப்போ விஜய் தான் Youtube-ல நம்ம விஜய டீஆருக்கு பயங்கர போட்டியா இருக்கார்.. :))




Posted By

19 Comments:

said...

1

said...

எனக்கு அந்த முதல் பத்தியே புரியலை :)

அப்ப கூட நீங்க குளிக்க போறது இல்லை என்ன கொடுமை இது சஞ்சய் :(

said...

அண்ணா இந்த வீடியோவ விடமாட்டீங்களா நீங்க?????

said...

நலலா இருக்கு கூட்டாஞ்சோறு அது என்ன வர்ஷன்ல ஏகப்பட்ட ஐட்டம் இருக்கு !

:))

said...

//குசும்பனை தினமும் குளிக்க சொல்லிடுவோமா? :))//

அது கொஞ்சம் கஷ்டம். வேணும்னா நீங்க தினமும் பல் தேய்ங்களேன் ;)

said...

// ஒரு நல்ல கதையைக் கேட்டிருந்தா ஒரு படமாவது ஓடி இருக்குமே.//


// நாகை சிவா said...

//குசும்பனை தினமும் குளிக்க சொல்லிடுவோமா? :))//

அது கொஞ்சம் கஷ்டம். வேணும்னா நீங்க தினமும் பல் தேய்ங்களேன் ;)//

என்ன கொடும தொழிலதிபர் இது.
சிவா வந்து சொன்னாத்தான் பல்லுதேப்பீங்களா !

said...

மாம்ஸ் உங்க பிளாக் டெம்ளேட் மரத்தில் காதல் இதயம் பூத்து குளுங்குது, ஆனா நிஜத்தில் பாலைவனம் போல் இருக்கு!

ஏன் மாம்ஸ் ஏன்?

said...

இருந்தாலும் உங்களுக்கு இருக்கும் தன்னபிக்கையே தனி தான் மாம்ஸ் ஆட் திஸ் விட்டேஜ் என்று இப்படி ஒரு படத்த போட்டு இருக்கீங்களே, அனானி பெயரில் நீங்களே இன்னும் இரண்டு மூன்று பிளாக்கி இதை சேர்த்தால் தான் உண்டு!

said...

//மொழி பயன்படுத்தி இருப்பார்களோ? அதாவது நாம் இப்போது பேசும் மொழி... இது என்ன மொழி?//

இப்ப புரிஞ்சுடுச்சு மேல இருக்கு ஒன்றரை ஏக்கர் கிரவுண்டுக்கு என்ன காரணம் என்று!

said...

//குசும்பனை தினமும் குளிக்க சொல்லிடுவோமா? :))//

மாம்ஸ் பெட்டர் லக் நெஸ்ட் டைம்!!!
சரியா வரவில்லை:)

said...

அடேய் மாமா அப்ப என் பதிவில் வரும் க்ராக்ஜாக் என்ற அனானி கிராக் நீதானா?

said...

விஜய், அஜித் ரெண்டு பேரையும் கலாய்ச்சு நடுநிலைய நிறுபிக்கிறிங்களே!

said...

அய்யய்யோ.....!! தம்பி...... மறுபடியும் கூட்டாஞ்சோரா........??


கெட்ட கப்பு அடுக்குது தம்பி.........!!!!!



சிக்குன ரெக்காடு மாதிரி....... இந்த கிளிப்பு தேயற வரைக்கும்.... இந்த கருமாண்டிப்பயல நீ உடமாட்டைனு நெனைக்குறேன்......!!!!!


உனக்கு ஏந்தம்பி இத்தன கொல வெறி.......!!!

.

.


.

.

.

.

.

.
----------------------------------------------------------------------


" தங்கத் தம்பி......




கவியத் தொண்டனே.....





கொங்கு காவியனே..........




தியாகச் செம்மலே........





தேர்தலை முன்னிட்டு ...... உன்னை கட்சிப்பணி அன்புடன் அழைக்கிறது........



சித்தநாளைக்கு போயிட்டு வா ராசா..........!!!!!!!!

Anonymous said...

//அப்ப கூட நீங்க குளிக்க போறது இல்லை என்ன கொடுமை இது சஞ்சய் :(//

கிகிகிகிகி

said...

//அவர்கள் தாங்காமல் அழுவதை ஸ்லோ மோஷன்ல சில பல நிமிடங்கள் காட்டி சந்தோஷப் படறானுங்க. இதை பார்க்கும் அவர்களின் பள்ளி அல்லது தெருவில் இருக்கும் குழந்தைகள் கிண்டல் கேலி செய்வார்கள். இந்தக் குழந்தைகளுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை வரும்.//


சரியாச் சொன்னீங்க சஞ்சய்.

// இதை எல்லாம் தடுக்கனும் பாஸ். இதுக்கு எதாவது செய்யனும் பாஸ்.//

ஏதோ நம்மால ஆனது பதிவைப் போடுவது. போட்டிருக்கேன் பாருங்க http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post_20.html இங்கே நேரம் வாய்த்தால்.

said...

//
Priya Kannan said...

அப்ப கூட நீங்க குளிக்க போறது இல்லை என்ன கொடுமை இது சஞ்சய் :(
//

பதில் சொல்லு மேன் இதுக்கு!!

said...

// ஒரு நல்ல கதையைக் கேட்டிருந்தா ஒரு படமாவது ஓடி இருக்குமே.//

இந்த ஜோக் எஸ்.எம்.எஸ்ஸாக வந்தது எனக்கு. அருமை.

said...

நன்றி தாரணி அக்கா..
( குளிக்கிறதா எனனா கெட்டப் பழக்கம்? )

----------

பூர்ணி, ஹிஹி..

---------

ஆயில்ஸ் , வர்ஷன்னாலே இப்டி தானே இருக்கும். ;))
( இதுல காரணம் இருக்கு )
---------

மிஸ்டர் புலி, இதுக்கு நீங்க என்னை கெட்ட வார்த்தைலையே திட்டி இருக்கலாம். :)

-------------

ஹிஹி கார்த்திக்.. யார் சொன்னாலும் அது நடக்காது.. :)

said...

குசும்பா , உங்க எல்லாப் பின்னூட்டங்களுக்கும் ஒரே பதில் தான்...

“கிகிகி” :))))

--------
வால், நான் எப்போவுமே நடுநிலைமை தான்.. :)

-------------

நன்றி மேடி.. ;)

----------
நன்றி தூயா.. நானும் பழி வாங்குவேன். :)

---------
நன்றி லக்‌ஷ்மியக்கா.. உங்க பதிவு படிச்சேன். சூப்பரா சொல்லி இருக்கிங்க.

-----------
நன்றி மங்களூராரே.. :)

//இந்த ஜோக் எஸ்.எம்.எஸ்ஸாக வந்தது எனக்கு. அருமை.//

எனக்கும்.

Tamiler This Week