இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday 9 January, 2009

திருமங்கலத்தில் அதிமுக தான் ஜெயிக்கும்.

சென்ற பதிவின் தலைப்பு கும்மிக்கு மட்டும் இல்லை. நிஜமும் கூட. அதிமுக தான் ஜெயிக்கும். நம்ம நாட்ல இன்னும் சின்னத்தை பார்த்து ஓட்டுப் போடுபவர்கள் தான் அதிகம். அதுவும் சிறிய பின்தங்கிய பகுதியான திருமங்கலம் மாதிரியான பகுதியில் வேட்பாளரையோ நாட்டு/மாநில நலனையோ வேறு எந்த கருமத்தையோ பார்த்து வாக்களிக்க மாட்டார்கள். ஒன்லி சின்னம் மேட்டர்ஸ். :)

ஆகவே எந்த கூட்டணி பலமோ அந்தக் கூட்டணி ஜெயிக்கும். கடந்த தேர்தலில் திமுக+காங்கிரஸ்+பாமக+கம்யூனிஸ்டுகள் எல்லோரும் ஓரணியில் இருந்தார்கள். அதிமுக+மதிமுக ஓரணியில் இருந்தார்கள். பெரிய கூட்டணியாக இருந்தும் திமுக தோல்வி அடைந்தது. மதிமுக தான் வென்றது.

இப்போது திமுகவுடன் இருப்பதோ காங்கிரஸ் மட்டுமே. வி.சிறுத்தைகளால் தென்மாவட்டங்களில் எந்த பயனும் இல்லை. அவர்களால் பயனும் இல்லை.பாதகமும் இல்லை. அப்போ பெரிய கூட்டணியா இருந்தும் தோல்வி அடைந்த திமுக இன்று சிறிய கூட்டணி ஆகிவிட்டது.

மாறாக அன்று சிறிய கூட்டணியாக இருந்த அதுமுக கூட்டணி இன்று பலமான கூட்டணியாக இருக்கிறது. பாமகவின் ஓட்டுகள் நிச்சயம் அதிமுகவிற்கு தான் விழும். இல்லை என்றால் ராமதாஸ் நடுநிலை வகிப்பதாக அறிவித்திருக்க மாட்டார். பாமக தொண்டர்கள் திமுக கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் இருப்பதால் தான் இந்த நிலை.

சரி.. ஆளுங்கட்சி செல்வாக்கை வைத்து தில்லுமுல்லு செய்து ஜெயிக்கலாம் என்று நினைத்தாலும் நரேஷ்குப்தாவும் கோபால்சாமியும் அதுக்கும் வச்சிட்டாங்க ஆப்பு. மாநில காவல்துறையை நம்பாமல் துணை ராணுவப் படையை இறக்கி விட்டுவிட்டார்கள். அதோடு விட்டார்களா? எப்போதும் திமுகவிற்கு விசுவாசமா இருக்கும் தமிழக ஆசிரியர் பெருமக்களை வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டு மத்திய அரசு ஊழியர்களை வாக்கு மையங்களில் பணி அமர்த்திவிட்டார்கள். ஆகவே ஆளுங்கட்சிக்கே உரிய அஜால் குஜால் வேலைக்கும் வழி இல்லாமல் போய்விட்டது. ஆகவே எந்த நவீன கேமராவை வைத்து எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அதிமுக வெற்றி தான் தெளிவாகத் தெரிகிறது..

பிறகு எதற்கு 2 கூட்டணிகளும் சேர்ந்து தனித்தனியா 150 கோடி ரூபாய்க்கு மேல செலவு பண்ணதா பேசிக்கிறாய்ங்க.. இவ்வளவு முதலீடு பண்ணவங்க இனி வரும் நாட்களில் இதை வட்டியோட சம்பாதிக்க என்ன எல்லாம் பண்ணுவாய்ங்களோ? அது ஒன்னும் சொந்த பணம் இல்ல.. அடிச்ச பணமாத் தான் இருக்கு.. ஆனாலும் அடிச்சதுக்கு அப்புறம் அவங்க சொந்தப் பணமா ஆயிருக்கும் இல்ல..என்னமோ போங்க...

டிஸ்கி : திமுகவும் காங்கிரஸும் கூட்டணி கட்சிகளா இருந்தா எல்லாத்துக்கும் சப்பை கட்டு கட்டனுமா என்ன? போங்கய்யா.. )

Posted by..

34 Comments:

said...

உங்கள் அரசியல் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. நல்ல கண்ணோட்டத்துக்கு நன்றி. இப்பதிவின் மூலமாக பாமகவுக்கு திருமங்கலத்தில் இருக்கும் அளவுக்கதிகமான செல்வாக்கை தெரிந்து கொண்டேன்.

said...

//இப்பதிவின் மூலமாக பாமகவுக்கு திருமங்கலத்தில் இருக்கும் அளவுக்கதிகமான செல்வாக்கை தெரிந்து கொண்டேன்.//

லக்கியண்ணே.. சட்டமன்ற தேர்தலில் 2700 ஓட்டு கூட ரொம்ப முக்கியமானது என்ற அளவுக்கு தான் என் அரசியல் அறிவு. இதில் நீங்க மெய் சிலிர்க்க எல்லாம் ஒன்னும் இல்லையே.

திமுக தோற்க வேண்டும் என்ற ஆசையில் எழுதவில்லை. திமுகவிற்கு கூட்டணி பலமில்லததால் தோற்கும் என்று தான் சொல்கிறேன். விரைவில் முடிவு தெரியத்தானே போகுது.

Anonymous said...

kandippaga
congress ethirppu VOTUTHAAN....

said...

// Anonymous said...

kandippaga
congress ethirppu VOTUTHAAN....//

யோவ் அனானி.. எனனாதிது பொரளிய கிளப்பி வுட்டுகினு.. எங்காளு சித்தன் தான் அழகிரிய விட அதிகமா தேர்தம் வேலை பார்க்கிறார். நாங்க உள்ள இருந்தே எல்லாம் உள்ளடி வேலை பார்க்க மாட்டோம் சிலர் மாதிரி. 5 வருஷம் திமுக காங்கிரஸ் அரசங்கத்தை ஆதரிச்சிருக்கு.. அதுக்கு காரணம் என்ன வேணாலும் இருக்கட்டும். திமுகவின் முழு பதவி காலமும் காங்கிரசும் அதரிக்கும். ஆதரிக்க வேண்டும்.

said...

தெரியாமத்தான் கேக்குறேன்...

தமிழக காங்கிரசின் மொத்த தொண்டர் பலம் 40 லட்சம் அப்படீன்னு படிச்சேன்...

அது உண்மையா ?

அடுத்து வரும் அதிமுக பாமக கூட்டணிக்கு அங்க குழலி அடி போடறாரு...

காங்கிரசு அதிமுக கூட்டணிக்கு நீங்க மீட்டராவரீங்க...

யோவ் என்னதான் நடக்குது இங்க ?

பேசாம திமுகவையும் அதிமுக கூட்டணியில சேத்துருங்க...விளங்கிரும்

said...

//பேசாம திமுகவையும் அதிமுக கூட்டணியில சேத்துருங்க...//

நம்மை மாதிரி அப்பாவி சனம் இருக்குறப்போ அதுவும் நடக்கும் ரவி!

said...

அட என்ன கொடுமை ரவி இது?
அதிமுக கூட்டணிக்கு யார் அடி போடறது? :)

உள்ளதை சொல்றது ஒரு குத்தமா? என்ன கொடுமை சார் இது? :(

//பேசாம திமுகவையும் அதிமுக கூட்டணியில சேத்துருங்க...விளங்கிரும்//

சேக்கலைனா மட்டும் விளங்கிருமாக்கும்? :)

ஒன்னு சொல்லவா? அதிமுக கூட கூட்டணி வைக்கிறதுல இஷ்டம் இல்ல. ஆனா தமிழகத்துல அதிமுக ஆட்சி வந்தா சந்தோஷப் படுவேன்.
40 லட்சம் பேரை வச்சி ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியை அதிமுகவிற்கு விட்டுத் தரவே விரும்புகிறோம். திமுக ஆட்சி வந்தாலே தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆய்டறான். அதுக்காகவே ஜெயலலிதா மொத அமைச்சரு ஆவோனும் ராசா.

said...

//உங்கள் அரசியல் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. நல்ல கண்ணோட்டத்துக்கு நன்றி. இப்பதிவின் மூலமாக பாமகவுக்கு திருமங்கலத்தில் இருக்கும் அளவுக்கதிகமான செல்வாக்கை தெரிந்து கொண்டேன்.//

ரிப்பீட்டு ;)

எங்க அண்ணன் அஞ்சாநெசனும் & தி.மு.க தலைவர் கலைஞர் கூட்டணி மட்டுமே போதுங்க வெற்றிப்பெற... இதுக்கு எங்க கிட்ட வரலாறு இருக்கு!

ஈழத்தமிழனுக்காக நேற்று கூட கலைஞர் மன்மோக சிங்கிடம் கடிந்து பேசி இருக்காரு! அவரும் பயந்து போய் பினாப் முக்கர்-ஜியை எலங்க அரசுக்கு எச்சரிக்கை கொடுக்க அனுப்பப்போறாரு ... இந்த ஒரு மேட்டரே போது மக்கள் தி.மு.கவுக்கு ஓட்டு போட... யாருய்யா நீ விவரம் தெரியாதனா இருக்க...

பி.கு: அடுத்த வாரம் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பள்ளிகளில் உள்ள எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மாணவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் கலைஞர் தலைமையில பள்ளிக்கு போகாம போராட்டம் செய்யப்போறாங்க அதோட இந்திய அரசு பயந்து போய் ஆர்மீயவே அனுப்பி எலங்கையை பணியவைக்கப்போறாங்க என்பது நிச்சயமான உண்மை...

said...

//தமிழக காங்கிரசின் மொத்த தொண்டர் பலம் 40 லட்சம் அப்படீன்னு படிச்சேன்...
//

ஆனா ரவி இது ரெம்ப ஓவரு... 40 ஆயிரம் தலைவர் கம் தொண்டர்ன்னு சொல்லுங்க ஒரளவுக்கு சரியா இருக்கும் அதை விட்டுட்டு 1975ல எடுத்த கவுண்டிங்கை 2009ல சொல்லறது ரெம்ப ஓவரு.. இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்... அந்த 40 ஆயிரத்திலயும் 20 ஆயிரம் அந்த அந்த குட்டி தலைவர்களோட மகன்/மகள் (மக்கள்) இருப்பாங்கன்னு நினைக்கிறேன் :)))))))))

said...

//வேட்பாளரையோ நாட்டு/மாநில நலனையோ வேறு எந்த கருமத்தையோ பார்த்து வாக்களிக்க மாட்டார்கள். ஒன்லி சின்னம் மேட்டர்ஸ். :)
//

//மதிமுக தான் வென்றது.//./


சஞ்சய் - இது முரண்பாடு..

சின்னத்தை பார்த்து இரட்டை இலை ஜெயிக்கும் என்றால்.. ம தி மு க எப்படி ஜெயித்தது??

ஒரு வேளை மக்கள் ம தி மு க , அ தி மு க வுடன் கூட்டணி என சரியாக ஆராய்ந்து வாக்களித்தார்கள் என்று நீங்கள் சொன்னால், உங்களின் மற்றொரு கருத்தான் சின்னம் மேட்டர்ஸ் அடிப்படிடுகிறது..

சின்னம் பார்த்துமட்டும் வாக்களித்த காலம் மலையேறிப்போச்சுங்க சாரே. .எந்த காலத்துல இருக்கீங்க?? ரெட்ட இலைக்கு மத்திய / முதிய வயதானவர்கள் மத்தியில் இப்படி ஒரு ஆதரவு இருந்தது 10 - 15 வருடத்த்துக்கு முன்.. இப்போ.. அந்த வயதினர் பலர் இல்லை..

வெற்றி நிர்னயிக்கும் அளவில் அந்த பலம் இல்லை..

இப்போ எல்லாம் மக்கள் துட்டு பார்த்து ஓட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க அண்ணே..

உங்க கூற்றுப்படி பார்த்தா 1996 ல அ தி மு க ஒரு 50 தொகுதியாச்சும் வந்திருக்கனும், ஏன்னா அத்தனை பின் தங்கிய தொகுதிகள் (திருமங்கலம் மாதிரி) அப்போவும் இருந்தது.. ரெட்ட இலை அப்போவும் இருந்தது..

திருமங்கலம் வெற்றி பெற்றோர்

2006 - ம தி மு க
2001 - அ தி மு க
1996 - தி மு க முத்துராமலிஙம் (இப்போதய அ தி மு க வேட்பாளர்)
1989 - தி மு க
1984 - காங்கிரஸ்

ஒரு வேளை வெற்றி பெற்றவர் எல்லாம் ஒரே சின்னம் தான் வைத்திருந்தார்களோ???

திருமங்கலம் பற்றிய என் பதிவுகளையும் பாருங்கள் நேரம் இருந்தால்

said...

//ஒரு வேளை மக்கள் ம தி மு க , அ தி மு க வுடன் கூட்டணி என சரியாக ஆராய்ந்து வாக்களித்தார்கள் என்று நீங்கள் சொன்னால், உங்களின் மற்றொரு கருத்தான் சின்னம் மேட்டர்ஸ் அடிப்படிடுகிறது..//

வீஎம்.. நான் சொன்னது வாக்கு சீட்டில் இருக்கும் சின்னம் மட்டுமில்லை.. தங்கள் கட்சியின் சின்னம்.

சரியாக சொல்லி இருக்க வேண்டுமென்றால் வேட்பாளருக்காக ஓட்டு போடமாட்டார்கள். தங்கள் தலைவர்கள் சொல்வதற்க்கு மட்டும் ஓட்டு போடுவார்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். இதை தான் சின்னம் மேட்டர்ஸ் என்று சொல்லிவிட்டேன். எனக்கு அவ்வளவு சரியாக எழுதவராது என்ற குறைபாடு தான் இந்த குழப்பத்திற்கு காரணம்.

said...

//உங்க கூற்றுப்படி பார்த்தா 1996 ல அ தி மு க ஒரு 50 தொகுதியாச்சும் வந்திருக்கனும், ஏன்னா அத்தனை பின் தங்கிய தொகுதிகள் (திருமங்கலம் மாதிரி) அப்போவும் இருந்தது.. ரெட்ட இலை அப்போவும் இருந்தது..
//

வீஎம்.. அப்போ அவர்கள் கூட்டணி பலம் என்ன?

said...

சரி நான் திருத்திக் கொள்கிறென்.

சின்னம் மேட்டர்ஸ் = கூட்டணி மேட்டர்ஸ்.

இது ஓகேவா?

said...

//தமிழக காங்கிரசின் மொத்த தொண்டர் பலம் 40 லட்சம் அப்படீன்னு படிச்சேன்...//

சாரி அது தலைவர் பலம். தொண்டர்கள் 24பேர் அதிலும் ஒருவர் இப்பவோ அப்பவோன்னு இருக்குறதா கேள்ளவி!

said...

என்ன தான் சின்னத்தில் நாட்டம் இருந்தாலும், காசு கொடுத்தவர்களுக்கு தான் முதலிடம் மக்களுக்கு(மனசாட்சி உறித்தும்ல) அதனால காச தண்ணியா வாரி இறைச்ச தி.மு.க தான் வெற்றி பெறும் பாருங்களேன்

said...

//பேசாம திமுகவையும் அதிமுக கூட்டணியில சேத்துருங்க...விளங்கிரும்//


திரு ரவி,
அது எப்பவே சேர்ந்துவிட்டதே,
ராஜ்யசபா தேர்தலில் ஜெயலலிதா அம்மையாருக்கு கலைஞர் விட்டுக் கொடுத்துவிட்டாரே. அதுவும் ஒருவகையில் கூட்டணி தான். இல்லை என்றால் போட்டி போட்டு பலபரீட்சை அல்லவா செய்திருப்பார்கள்.

said...

சஞ்சய் எப்படி இப்படி..?

உங்களது கணக்கு, வழக்கெல்லாம் சரிதான்.. ஆனால் என் கணிப்புப்படி தி.மு.க.தான் ஜெயிக்கும் என்கிறேன். அள்ளித் தெளித்துள்ள பணம் அவ்வளவு என்கிறார்கள். இப்போதைக்கு வாக்காளர்கள் தெளிவாகவே உள்ளார்கள். பணத்தை வைத்தால் ஓட்டை வைப்போம் என்று..

தலைமறைவாக இருக்கும் வீ தி பீப்புள் அண்ணனை வரவழைத்ததற்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..

said...

\\ ஜோதிபாரதி said...
//பேசாம திமுகவையும் அதிமுக கூட்டணியில சேத்துருங்க...விளங்கிரும்//


திரு ரவி,
அது எப்பவே சேர்ந்துவிட்டதே,
ராஜ்யசபா தேர்தலில் ஜெயலலிதா அம்மையாருக்கு கலைஞர் விட்டுக் கொடுத்துவிட்டாரே. அதுவும் ஒருவகையில் கூட்டணி தான். இல்லை என்றால் போட்டி போட்டு பலபரீட்சை அல்லவா செய்திருப்பார்கள்.\\

இல்லை ஜோதிபாரதி! நீங்க அரசியல் தெரிஞ்சவங்க! குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காம கடலில் மீனவனை பார்த்துசெறுக்குடன் ஓடிவரும் கோலா மீன் போன்ற மீனை பிடிக்க ஆசைப்படுங்க!

அப்போ "ராஜீவ் கொலை" என்னும் துன்பியல் நிகழ்வு நடந்த போது தமிழ்நாட்டில் விடுதலைபுலிகளின் ஆதரவு குறைந்தது எல்லாருக்கும் தெரிந்ததே! இன்குலூடிங் திமுக சப்போர்ட்டும்!

அதுவே இப்போது வலைப்பக்கமே திமுக காரன் வர முடியாத அளவு கெட்ட வார்த்தைகளால் அர்சிக்க படுவது மேலும் வெறுப்பையே ஏற்படுத்துகின்றது. நன்றாக ஞாபகம் வைத்து கொள்ளவும் திமுக உருப்பினர் எண்ணிக்கை தமிழீழத்தை விட அதிகம். நான் சகோதர பாசத்திலேயே சொல்கிறேன்! ஆனால் என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாத பட்சத்தில் யாரையும் தூற்றுவானேன்!!

said...

இஙகே காங்கிரசை கிண்டல் பண்ணுவது அடுத்து! திமுக காசு குடுத்துது, காசு குடுத்துதுன்னு சொல்றீங்களே! யோவ் தேர்தல் அறீவிச்ச உடனேயேத்தான் அங்க கோபால்சாமிய்யார் வந்தூட்டாரே அவரு பீகார்விட மோசமா இருக்கு தமிழகம்ன்னு சொன்னாரே இன்னிக்கு அமைதியா தேர்தல் நடந்து 70% ஓட்டு போல் ஆகியிருக்கே! அப்ப அந்த ஆள் எங்க போனான். கேட்டா நான் துணை ரானுவ படை கொண்டாந்தேன்ன்னு சொல்லுவான்
அதை தேர்தல் தேதி சொன்ன போதே கூப்பிட வேண்டியது தானே!

Anonymous said...

இப்படி அருமையா கணிச்சி சொல்லிறிக்கிங்க.மீறி தி.மு.க ஜெயிச்சா பதிவு எழுதுவதையே நிறுத்திவிட வேண்டியதுதான்.தயாராக இருங்க

said...

//இஙகே காங்கிரசை கிண்டல் பண்ணுவது அடுத்து! திமுக காசு குடுத்துது, காசு குடுத்துதுன்னு சொல்றீங்களே! யோவ் தேர்தல் அறீவிச்ச உடனேயேத்தான் அங்க கோபால்சாமிய்யார் வந்தூட்டாரே அவரு பீகார்விட மோசமா இருக்கு தமிழகம்ன்னு சொன்னாரே இன்னிக்கு அமைதியா தேர்தல் நடந்து 70% ஓட்டு போல் ஆகியிருக்கே! அப்ப அந்த ஆள் எங்க போனான். கேட்டா நான் துணை ரானுவ படை கொண்டாந்தேன்ன்னு சொல்லுவான்
அதை தேர்தல் தேதி சொன்ன போதே கூப்பிட வேண்டியது தானே!///

அதானே! என்ன் அருமையா கேள்வி கேட்கிறாரு ... மொதல்லேயே கூட்டியாந்திருந்தா இப்புட்டு காசு செலவு இருக்கா, இப்புட்டு பிரச்சனை இருக்கா.. அதுதான் தெரியுமில்லா அஞ்சாதே எறங்கினா ரப்சர் தானும், ஏன் கோப்பால சாமி துணை ராணுவத்தை மொதல்லயே கொண்டுவரல... பதில் சொல்லுங்கடே

:))))))))))))))))

பி.கு: கோ.சாமி ஒரு பார்ப்பணர் என்பதை மனதில் கொள்க...

said...

உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை!!!

திமுக ஜெயிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவே படுகிறது!

அண்ணன் அழகிரியின் விசுவாசிகள் கடுமையாக உழைத்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

அண்ணன் ஸ்டாலினும் தொகுதிக்கு நிறைய நன்மைகள் பெற திருமங்கலத்தில் வெற்றி அவசியம் என்று சொல்லி இருக்கிறார்.

12ந் தேதி தெரிந்து விடுமே?!

மயிலாடுதுறை சிவா....

Anonymous said...

I agree with luckylook views. PMK is negligible in thirumangalam. To me, ADMK is still popular in this constitutency. But, howmuch vijayakanth is getting votes is going todecide this const.

said...

"NAMMA OORLA BY ELECTIONS...ARE ALWAYS CREATING WAVES...ITS NOT A SURPRISE, THAT...THIS PARTICULAR ARTICLE GETS NUMEROUS COMMENTS...BECAUSE OF THE ABOVE SAID REASON ONLY...WE ARE CRAZY ABOUT EXIBITING OUR VIEWS, ESPECIALLY FOR POLITICS...LET US WAIT AND SEE, WHAT IS GOING TO HAPPEN...GOOD ARTICLE(DO'NT KNOW WHEATHER SERIOUS OR COMEDY)...

said...

//எப்போதும் திமுகவிற்கு விசுவாசமா இருக்கும் தமிழக ஆசிரியர் பெருமக்களை வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டு மத்திய அரசு ஊழியர்களை வாக்கு மையங்களில் பணி அமர்த்திவிட்டார்கள்.//
நான் சென்ற தேர்தலில் கண்கூடாக கண்டது. சம்பள உயர்வு தந்த D.M.K வெற்றி பெற அரசு ஊழியர்கள் மிகவும் நன்றி விஸ்வாசம் காட்டினர். D.M.K & A.I.A.D.M.K இரண்டும் மாறி மாறி ஆட்சி செய்து எதையும் கிழித்துவிட வில்லை ஆகவே நான் D.M.D.K கு ஓட்டு போட்டேன். எப்படியும் D.M.D.K ஆட்சிக்கு வந்தால் எப்படி கொள்ளை அடிப்பது என்பதை கற்கும் வரை மக்களுக்கு நன்மை நடக்கலாம் என கனவு காண்பவன். ஆனால் அவர்களும் இப்பொழுது நன்று தேறியவர்கள் போல தெரிவதால், தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.

யார் ஆண்டாலும் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழை ஆகிறான். இலவசமாக கிடைத்தவை தான் மிச்சம்.

said...

திமுக ஜெயிக்கும். இந்த இழவு காங்கிரஸ் கூட இல்லாம இது நடந்தா மகிழ்ச்சி. இருந்தாலும் அதிமுக தோற்கும்(ம்ம்..தோற்க வேண்டும்) என்பது மட்டற்ற மகிழ்ச்சி.

said...

///திமுக+காங்கிரஸ்+பாமக+கம்யூனிஸ்டுகள் எல்லோரும் ஓரணியில் இருந்தார்கள். அதிமுக+மதிமுக ஓரணியில் இருந்தார்கள். பெரிய கூட்டணியாக இருந்தும் திமுக தோல்வி அடைந்தது. மதிமுக தான் வென்றது. //

what Mr Sanjai, just like that to fill in something u wrote this post and now nicely samalichifying..

first u said symbol.. then one person shown you clearly that it is not symbol, he showed the history of previous elections..

now you said symbol = alliance...


what about the sentence u wrote above means???


what u meant is even against a big alliance , THE MDMK won cos of symbol.. that is what u meant right??

then after VM said symbol is not doing magic nowadays , you suddent put a big bulti to say /. no no.. i meant to say alliance only... then your above statement is false...


hahaha. funny. first be clear on what u say..


as luckyulook said - உங்கள் அரசியல் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.

Anonymous said...

PMK & Congress (infact DMK itself) wants to know the exact % of DMK votes in a very common consituency like this.. They want to know their strength for negotiations for future alliance. Thats the reason PMK & Cong didn't support DMK and they might have discussed all these on the hindsight.So based on their vote % the future allaicnce will change..

In my opinion, if DMK % is less than expected and VK gets more, congress may switch its stand.

If ADMK gets only their vote% (like earlier election), they may cut alliance with Left&Right communists and join with BJP for Parl elections...

So the furture alliance for Parl elec may be

1. DMK+PMK+VS
2. ADMK+MDMK+BJP+Comm
3. DMDK+CONGRESS+....

OR if ADMK wins with big margin and DMDK gets more share then

1. DMK+BJP+VS....
2. DMDK+Cong+...
3. ADMK+PMK+MDMK+Comm...

What do you thinkkkkk..

MSK

said...

அய்யா திருச்சி ராஜேசு.. உங்க புத்திசாலித் தனத்தை எதுனா திவால் ஆன பேங்க்ல போடுங்க.அதுக்கு பயன்படுதா பாக்கலாம்.

கூட்டணி என்று சொல்லி இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் இதை எழுதும் போது சின்னம் பார்த்து ஓட்டுப் போடுகிறார்கள் என்று எழுதிவிட்டேன். அதை வீஎம் அவர்கள் சுட்டிக் காட்டிய பிறகு சின்னம்=கூட்டணி என்று திருத்திக் கொண்டேன்.

இந்த புரிந்துக் கொள்ளாத மஙகுனியாக நீங்கள் இருபப்து என் தவறா?. என் தவறை சுடிக் காட்டினால் அது சரியாக இருக்கும் பட்சத்தில் அதை திருத்திக் கொள்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.

அது சாமாளிப்பு இல்லை. திருத்தம். உங்க மேம்போக்கு சிந்தனைக்கு ரொம்ப நன்றி.

அப்புறம் .. என் அரசியல் அறிவை பார்த்து உங்களுக்கு எது சிலிர்த்தாலும் அதுக்கு நான் ஒரு கருமமும் பண்ண முடியாது.

இங்க விஷயம் தெரிஞ்சவங்க எல்லாம் பின்னூட்டம் போட்டிருக்காங்க. எதிர் கருத்தும் பதிவு பண்ணி இருக்கங்க. கோமாளித் தனமா யாரும் பேசலை. நான் சொல வந்தது அவர்களுக்கு புரிஞ்சிருக்கு. உங்களுக்கு புரியலைனா விளக்கம் கேளுங்க. சொல்றென். அத உட்டு காமெடி பண்ண வேணாம். சரியா?

said...

MSK,

DMK+cong+PMK கூட்டணி இருக்கும்னு தான் தோனுது. பேரம் பேசி ராமதாஸ் திமுக பக்கம் வந்துடுவார். ஏன்னா அதிமுகவில் இப்போதைக்கு இடப் பற்றாக் குறை இருக்கு. திமுக கூட்டணியில் தேவையான இடம் இருக்கு.

ஒரு யூகம் தான். திமுகவால் மத்திய அரசாங்கத்திற்கு எந்த பெரிய சங்கடமும் வரவில்லை என்பதால் காங் + திமுக கூட்டணி உடைய வாய்ப்பு இல்லை.

said...

உங்களின் அபார அரசியல் திறானாய்வு படி நீங்கள் சொன்னது சரியே. அ தி மு க வெற்றி பெரும் என் நினைக்கிறேன்..

திமுக - 22,000
அதிமுக - 10,000

இது வெறும் 4 வது ரவுண்டு தான்... ஆகவே, பொருத்திருப்போம்.. வெற்றி ஆ தி மு க வே..

said...

//muthu said...

உங்களின் அபார அரசியல் திறானாய்வு படி நீங்கள் சொன்னது சரியே. அ தி மு க வெற்றி பெரும் என் நினைக்கிறேன்..

திமுக - 22,000
அதிமுக - 10,000

இது வெறும் 4 வது ரவுண்டு தான்... ஆகவே, பொருத்திருப்போம்.. வெற்றி ஆ தி மு க வே..//

:)))))

இந்த தேர்தல் முடிவு திமுகவின் நல்லாட்சியையோ தொண்டர் பலத்தையோ பிரதிபலிக்கவில்லை. புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் ஏழ்மையை தான் வெளிப்படுத்துகிறது. நன்றி. :))

said...

திமுகதான் ஜெயித்துக் கொண்டிருக்கிறது :)

உங்கள் கணிப்பு பொய்த்துப் போனதில் மகிழ்ச்சி :)

said...

//இல்லை ஜோதிபாரதி! நீங்க அரசியல் தெரிஞ்சவங்க! குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காம கடலில் மீனவனை பார்த்துசெறுக்குடன் ஓடிவரும் கோலா மீன் போன்ற மீனை பிடிக்க ஆசைப்படுங்க!

அப்போ "ராஜீவ் கொலை" என்னும் துன்பியல் நிகழ்வு நடந்த போது தமிழ்நாட்டில் விடுதலைபுலிகளின் ஆதரவு குறைந்தது எல்லாருக்கும் தெரிந்ததே! இன்குலூடிங் திமுக சப்போர்ட்டும்!

அதுவே இப்போது வலைப்பக்கமே திமுக காரன் வர முடியாத அளவு கெட்ட வார்த்தைகளால் அர்சிக்க படுவது மேலும் வெறுப்பையே ஏற்படுத்துகின்றது. நன்றாக ஞாபகம் வைத்து கொள்ளவும் திமுக உருப்பினர் எண்ணிக்கை தமிழீழத்தை விட அதிகம். நான் சகோதர பாசத்திலேயே சொல்கிறேன்! ஆனால் என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாத பட்சத்தில் யாரையும் தூற்றுவானேன்!!//

ஆகா! அபி அப்பா சார்!! இப்பதான் பார்த்தேன்,
உங்களை யார் என்றே எனக்குத் தெரியாது. உங்களுடன் இதுவரை ஏதும் விவாதித்தது கிடையாது. ஏன் என்மீது உங்களுக்கு இவ்வளவு காண்டு.
நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள். விவாதிக்கலாம். மொட்டைத்தாத்தா குட்டையில விழுந்த மாதிரி விழுந்தால் குட்டை குழம்பிப் போன மாதிரித்தான் தெரியும். நன்றி ஐயா!

Tamiler This Week