இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comTuesday 13 January, 2009
வாக்குரிமை இங்கு ஏலம் விடப் படும்
Lables
தேர்தல்
வாக்குகள்... காசுபார்க்க...
அன்பான வாக்காளப் பெருமக்களே!உங்கள் வாக்குரிமைகளை ஏலம் விட்டு நல்ல விலை பெற்றுத் தருவதற்கு புதியதாக வாக்குரிமை ஏல மையம் அரம்பிக்கப் பட்டுள்ளது. எங்கள் கிளைகள் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் செம்மையாக செயல்படும்.
40 ஆண்டுகால கழக ஆட்சிகளின் புண்ணியத்தில் இன்னும் இலவசங்களை எதிர்பார்த்து வாழவேண்டிய உன்னத நிலையிலேயே வாக்காளர்கள் இருப்பதால் தேர்தல் சமயங்களில் பணம் பார்க்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்ற அரிய நோக்கத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது இந்த ஏல மையம். நாம் இன்னும் 4000 ரூபாய் கலர் டிவிக்கும் 750 ரூபாய் கேஸ் அடுப்புக்கும் தேர்தல் சமயத்தில் இலைக்கு அடியில் வைத்துத் தரப்படும் 2000 ரூபாய்க்கும் ஆளாய்ப் பறக்கும் கேவலமான நிலையில் இருப்பதாலும், துவைக்க சோப்பு வாங்கக் கூட வழி இல்லாமல் அழுக்கு வேஷ்ட்டியுடன் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் மகாராஜாக்களை போல் பளிங்கு மாளிகைகளில் வாழ்ந்துக் கொண்டு தேர்தலில் பணமழை பொழிவதாலும் இதை செவ்வனே பயன்படுத்திக் கொள்ள எங்கள் நிறுவனம் உங்களுக்கு உதவி செய்யும்.
இங்கு தனி வாக்காளராகவும், குடும்பமாகவும் பதிவு செய்துக் கொள்ளலாம். தனி வாக்காளர் பதிவுக்கு 10% சேவைக் கட்டணமும், குடும்பமாய் பதிவு செய்தால் 8% சேவைக் கட்டணமும் வசூல் செய்யப் படும். பல்க் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் பரிசுப் பொருட்களும் வழங்கப் படும். அதாவது தெருவில் இருப்பவர்களை எல்லாம் சேர்த்து அவர்களின் வாக்குரிமைகளை ஒட்டு மொத்தமாய் அவர்களின் அனுமதியுடன் ஒருவரே பதிவு செய்யலாம். இதனால் பேப்பர் செலவுகள் மிச்சம் ஆகும். இதனால் மரங்களை காக்கலாம். இது போன்ற பல்க் புக்கிங் செய்பவர்களுக்கு 7% மட்டுமே சேவைக் கட்டணமாக வசூலிக்கப் படும்.
சில கிராமங்கள் மிகவும் கட்டுக் கோப்பாய் இருக்கும். அது போன்ற கிராமங்களின் தலைவர்கள் செய்யும் பல்க் புக்கிங் வாக்குகளுக்கு மிக அதிக சலுகைகள் வழங்கப் படும். அவர்களுக்கு 5% மட்டுமே சேவைக் கட்டணமாக வசூலிக்கப் படும்.
நிபந்தனைகள் :
- குறைந்த பட்சம் ஒரு தேர்தலுக்காவது உங்களை... சாரி.. உங்கள் வாக்குகளை ஏலம் விட நிறுவனத்திற்கு உரிமை உண்டு.
- உங்கள் வாக்குகளுக்கு குறைந்த பட்ச விலையை நீங்கள் நிர்ணயிக்கலாம்.
- குறைந்தபட்ச விலையை விட பல மடங்கு கூடுதல் விலைக்கே ஏலம் விடப் படும். ஒருவேளை உங்கள் ஏலத் தொகை உங்களுக்கு கட்டுபடியாகாத பட்சத்தில் முதல் தேர்தலுக்குப் பிறகு ஒப்பந்தத்தை ரத்து செய்துக் கொள்ளலாம்.
- சேவைக் கட்டணங்கள் உங்கள் வாக்குரிமையின் ஏலத் தொகையின் மதிப்பிலிருந்து கணக்கிடப் படும்.
- பதிவு செய்த பிறகு வரும் முதல் தேர்தலுக்கு முன்பே நிறுவனத்திலிருந்து விலக விரும்பினால் 1000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
தேர்தல் அறிவித்தவுடன் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்வார்கள். பிறகு குறிப்பிட்ட தேதியில் எங்கள் உறுப்பினர்களின் வாக்குரிமைகள் ஏலம் விடப் படும். தொகுதிவாரியாக ஏலம் விடப் படும். அதிக விலை கொடுக்க முன்வருபவர்களுக்கு அவர்கள் ஏலம் எடுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு எற்ப உங்கள் முகவரி அடங்கிய விஷேஷ வாக்கு அனுமதி சீட்டு வழங்கப் படும். அதிக எண்ணிக்கையில் ஏலம் எடுக்கும் கட்சிக்கு 1000 வாக்காளருக்கு 10 வாக்காளர்கள் இலவசமாக அளிக்கப் படும். தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு உங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் படும். உங்கள் முகவரி உள்ள விஷேஷ சீட்டை உங்களிடம் கொடுக்கும் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்தக் கட்சி தான் உங்களை ஏலம் எடுத்திருக்கும்.
இதன் உயரிய நோக்கம் :
தேர்தல் பிரச்சார செலவுகள் குறையும். வாக்காளர்களின் நேரம் விரயமாகாது. பண பட்டுவாடாவில் குழப்பம் அல்லது தில்லுமுல்லு நடக்காது. உங்கள் வாக்குக்கு உரிய பணம் உங்களுக்கு மிகச் சரியாக கிடைக்கும்.கலவரங்கள் தடுக்கப் படும். தேவையானது சுமூகமக கிடைப்பதால் வாக்கு மையத்தில் ஏற்படும் கலவரங்கள் குறையும். இதனால் அரசாங்கத்திற்கு டென்ஷன் குறையும். யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நம்மக்கு ஒரு புண்ணாக்கும் கிடைககது. ஆகவே தேர்தல் சமயத்தில் காசு பார்க்கும் வாய்ப்பை நழுவ விடக் கூடாது. எபப்டியும் யார் ஆட்சிக்கு வந்தாலும் சாமானிய மக்கள் வாழ்க்கை மேம்பட இன்று செய்யப் போவதில்லை. அப்படி செய்தால் இப்படி இலவசத்துக்கு அலைவோமா?. ஆகவே கேவலமாய இலவசங்களை பெறாமல் நம் வாக்குரிமையை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கவுரவமாய் நாமே கடைக்கு போய் தேவையானதை வாங்கும் நிலை வரவேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தில் உயரிய நோக்கம்.
முந்துங்கள்.. முதலில் வரும் 100000 பேருக்கு ஒரு பென்சில் இலவசமாக வழங்கப் படும். இலவசம்னா தான் வாய பொளந்துட்டு வருவோமே.
மெலும் விவரங்களுக்கு அனுகவும் : e(lection)Bay.com
Posted by..
Subscribe to:
Post Comments (Atom)
18 Comments:
//முந்துங்கள்.. முதலில் வரும் 100000 பேருக்கு ஒரு பென்சில் இலவசமாக வழங்கப் படும். இலவசம்னா தான் வாய பொளந்துட்டு வருவோமே.//
அதேனே...காங்கிரஸ் காரனுவங்க கைய அறுத்துக் கொண்டாலும் கைகாசை செலவு பண்ணமாட்டாங்களே. சொத்து சேர்த்தால் மட்டும் போதாது, அதை தேர்தலுக்கும் செலவு செய்யனும், திராவிட கட்சிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
:)
யப்பாடி!
குறைந்த பட்ச செயல் திட்டமா?
இதற்கு நான் பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவு தெரிவிக்கிறேன்!!
தொழிலதிபர் சஞ்சய் வாழ்க.
எனக்கும் ஒரு கிளை பொருப்பாளர் பதவி கிடைக்குமா
//யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நம்மக்கு ஒரு புண்ணாக்கும் கிடைககது. ஆகவே தேர்தல் சமயத்தில் காசு பார்க்கும் வாய்ப்பை நழுவ விடக் கூடாது. எபப்டியும் யார் ஆட்சிக்கு வந்தாலும் சாமானிய மக்கள் வாழ்க்கை மேம்பட இன்று செய்யப் போவதில்லை. அப்படி செய்தால் இப்படி இலவசத்துக்கு அலைவோமா?. ஆகவே கேவலமாய இலவசங்களை பெறாமல் நம் வாக்குரிமையை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கவுரவமாய் நாமே கடைக்கு போய் தேவையானதை வாங்கும் நிலை வரவேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தில் உயரிய நோக்கம்//
நிஜமாவே இது உயரிய நோக்கம்தான். நாம என்ன பிச்சைக்காரங்களா அவங்க தர்ற இலவசத்தை வாங்கறதுக்கு.
இதுக்கு பேர்தான் நமக்கு நாமே திட்டமா
Terms & conditions உங்களை ஒரு தேர்ந்த தொழிலபதிபர் அப்படின்றதை காட்டுது
இப்படி அறிவிப்பூ வெளியிடுவது குற்றம் என்று தென்னவன் படத்தில் தலைமை தேர்தல் அலுவலர் சொன்னதாக நினைவு
ஏனுங்க கோவியாரே. உங்களுக்கு காங்கிரசை நோண்டலைனா தூக்கம் வராதா? :) இது என் தனிப்பட்ட நிறுவனம். முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எங்கள் ஆடிட்டர்ஸ் : ப்ரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்.. :))
------------
ஆதரவு ரொம்ப நன்றி ஜோதி சார்.. நிறுவனத்தின் ஆலோசகராக செயல்பட விருப்பமா? :)
-----------
நன்றி தாரணி அக்கா.. ஒரு கிளை என்ன எவ்வளவு கிளைக்கு வேணாலும் பொருப்பாளரா இருக்கலாம்.. உங்களுக்கு கிளைக்கு கிளை தாவ முடியும் தானே.. :))
--------------
நன்றி சுரேஷ்.. இந்த அறிவுப்பு அவருக்கும் சேர்த்து தான்.. :))
:))
/தாரணி பிரியா said...
Terms & conditions உங்களை ஒரு தேர்ந்த தொழிலபதிபர் அப்படின்றதை காட்டுது/
ரிப்பீட்டேய்...!
எனக்கு ஏதாவது ஒரு பதவி போட்டு கொடுங்க பொடியன் அண்ணா..!
இலவசடீவியினால உங்க டீவி வியாபாரம் படுத்துறுச்சுன்னு சும்மா குறை சொல்லிகிட்டே இருக்காதிங்க.
கொஞ்சம் அடக்கி வாசிங்க பெரியண்ணங்கிட்ட சொல்லி எதாவது போட்டு தர சொல்றேன்.
//இலவசம்னா தான் வாய பொளந்துட்டு வருவோமே//
கோபமாகவோ,நகைச்சுவைக்காகவோ எழுதியிருந்தாலும் வலி புரிகிறது....ம்ம்ம் என்ன செய்யலாம்?
அன்புடன் அருணா
நன்றி தாரணி அக்கா.. ஒரு கிளை என்ன எவ்வளவு கிளைக்கு வேணாலும் பொருப்பாளரா இருக்கலாம்.. உங்களுக்கு கிளைக்கு கிளை தாவ முடியும் தானே..
ippa neenga avangla enna solla varinga
நன்றிங்க மெய்யாலுமே நலல்வரே. :)
நன்றி வால்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
நன்றி அருணாக்கா.. அது நகைச்சுவை இல்லைக்கா.. நிஜம்.. இல்லைனா திருமங்கலம் திமுகவுக்கு கிடைச்சிருக்காது. நம்ம வாழ்க்கை தரம் அப்படி. எல்லாம் 40 ஆண்டுகால கழக ஆட்சிகளின் புண்ணியம்.. :(
வாம்மா காயத்’திரி’.. சும்மா போற போக்குல திரியை கொளுத்தி போட்டு எங்கக்கா கிட்ட சண்டை மூட்டி விடப் பாக்கறிங்களா? ந்ஈங்க என்ன ட்ரை பண்ணாலும் எங்கக்காவுக்கு கோவம் வராது.. :))
gayathiri en intha kolai veri. muthallaye sanjaykku ennai "pugalarathu" appadinna romba pidikum. ethula neega vera.
Post a Comment