இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Tuesday 20 January, 2009

நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?

மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் பெரிய சாதனைகள் என்றால் அதில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கும் தகவல் அரியும் உரிமை சட்டத்திற்கும் முக்கிய இடம் உண்டு. இந்த சட்டத்தால் பல அழுகிய நாறிப் போன சமாச்சாரங்கள் எல்லாம் வெளிய வந்தது. அரசின் ரகசியமில்லாத எந்த ஆவணத்தின் விவரங்களையும் பொது மக்களால் அறிந்துக் கொள்ள முடிகிறது. இதை பற்றி ஏற்கனவே நிறைய பேர் எழுதிவிட்டதால் இப்போதைய விவகாரத்திற்கு வருவோம்.

சமீபத்தில், தகவல் அறியும் உரிமை அமைப்புக்கான கமிஷனர், நீதிபதிகளின் சொத்து விவரங்களையும் இந்த சட்டத்தின் படி யாராவது கேட்டால் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். உடனே நம்ம தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் ஈகோ டமார்ன்னு எகிறி குதிச்சி ருத்ர தாண்டவம் ஆடிடிச்சி. நாங்க எல்லாம் நீதிபதிகள். நாங்க யாருக்கும் எங்க சொத்து விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று திருவாய் மலர்ந்தார்.

ஏனுங்க சொல்ல மாட்டிங்க அப்டின்னு கேட்டதுக்கு, “ நீதிபதிகள் நியமனம் மாதிரியான விவரங்களை நான் சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் கூட சொல்வதில்லை. நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். அதை வெளியே சொல்வது நம்பிக்கை துரோகம் “ என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அட என்னங்க இது வம்பா போச்சி.. மக்கள் என்ன நீதிபதிகளின் வீட்டு விவகாரத்தையும் சொந்த கஷ்ட நஷ்டங்களையுமா கேக்கறாங்க. சொத்து விவரங்களைத் தானே. அரசாங்க அமைப்பின் அங்கத்தினர் என்ற வகையில் நீங்களும் இந்த சட்டத்திற்கு கட்டுபட்டவர்கள் தான்.

மேலும் , நீதிபதிகளின் மீதான நம்பிக்கை இப்போதெல்லாம் குறைந்து வருகிறது. நீதிபதிகளுக்கு பணவெறி பிடித்து ஆட்டுவதும் சமீக காலங்களாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. கீழ்க் கோர்ட்டுகளில் நீதிபதிகள் கவர் வாங்குவது போன்ற குற்றச் சாட்டுகள் ஏற்கனவே வந்துக் கொண்டிருக்கிறது. ஆகவே நீதிபதிகளின் சொத்து விவரங்களை வாங்கி அதை ஆவணமாக தலைமை நீதிபதி வைத்திருக்கிறார். அந்த ஆவணங்களில் உள்ள விவரங்களை மக்கள் கேட்க்கும் போது தெரியபடுத்துவது தலைமை நீதிபதியின் கடமையே. சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். இதை நிலைநாட்டும் நீதிபதிகள் இதற்கு முன்னாதாரணமாக இருக்க வேண்டுமே ஒழிய தங்களுக்கே உத்தரவா என்ற தலைக்கனத்தில் இருக்கக் கூடாது.

Posted By..

8 Comments:

said...

வக்கிலுக்கு படிக்கிற பள்ளிக் கூடத்திலேயே காவல் துறை உள்ள போவக் கூடாதுங்க சாமியோவ். நீங்க நிதிபதி அது இதுங்கிறீங்க. கொஞ்சம் பார்த்து செய்யுங்க. (எழுத்துப் பிழை இல்லை என்று நினைத்துப் படிக்கவும்)

அது சரி,
இந்தியா வெளிநாடுகளுக்கு வழங்கும் ஆயுதங்களையும், எந்தெந்த நாடுகளுக்கு என்னென்ன ஆயுதங்கள் வழங்குகிறது என்பதையும், இந்திய வெளியுறவு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகளின் சாரத்தையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்து கொள்ளலாமா? அல்லது இது ரகசிய காப்புப் பிரமாணத்தில் வருகிறதா? தெரியாம தான் கேக்கிறேன்.

said...

மாப்ள சீமான ஜாமீன்ல உட்டதுக்கு இப்படி ஒரு இண்டேரக்ட் பதிவா ?

said...

ஜோதி சார்,, அதெல்லாம் ராணுவ ரகசியம். சொல்லமுடியாது. :)
ஆனாலும் முயற்சித்து பாக்கலாம். இவைகள் அந்த சட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தால் சொல்லியே ஆக வேண்டும்.

said...

ரவி,

எல்லாத்தையும் மூடிட்டு கம்முனு இருந்துக்கிறேன் வெளிய கொஞ்ச நாள் உடுங்க சாமியோவ்னு கெஞ்சித் தான் அந்த சிங்கம் வந்திருக்கு மாமோய்.. :))

said...

ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஏற்கனவே இருந்தது. காங்கிரஸ் கூட்டணி அரசு அதை '100 நாள் வேலை பாதுகாப்பு திட்டம்' என்று அறிவித்தது. கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலையை குடும்பத்தில் ஒருவருக்கு உறுதிப்படுத்தும் திட்டமிது. அந்த வேலை கிராமாப்புறங்களில் சாலை, ஊரணி, கால்வாய் செப்பனிடும் வேலைகள். ஏற்கனவே இவை 'ஜவகர் வேலை வாய்ப்பு திட்டத்தில்' நடந்தவை தான். ஒரே வேறுபாடு பழைய கள்ளுக்கு புதிய 'ப்ரான்ட்'. குறைந்தபட்சம் சுமார் 9 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு 80 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. 100 நாட்கள் முழுவதும் வேலை செய்தாலும் ஒரு குடும்பத்துக்கு 8000 ரூபாய் மட்டும் ஆண்டொன்றுக்கு கிடைக்கிற திட்டம் சாதனையா? வேறு எந்த பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்காத இந்த திட்டம் புரட்சிகரமானதோ, மாற்றத்தை உருவாக்கவோ இல்லை. வாக்கு வங்கியை குறிவைத்த வெற்று முழக்கமிது. இப்படி ஒரு வேலைக்கு நம்மில் எத்தனை பேர் செல்ல தயாராக இருப்போம்?

நீதிபதிகள் பற்றி கருத்து சொன்னா, காப்பு வீட்டுக்கு வரும் :) அவங்க ரொம்ப 'சுத்தமானவங்க' :))

said...

//நீதிபதிகள் பற்றி கருத்து சொன்னா, காப்பு வீட்டுக்கு வரும் :) //

பார்த்து சஞ்செய்...!!!:)
அன்புடன் அருணா

said...

இந்த நாடு இன்னுமா நம்மள நம்புது!

said...

உச்ச நீதி மன்றத்தில் சில நீதிபதிகள் அர்சாங்கத்தையே மூடி விடுவேன் என்று பேசியதும்,
தன் மகனின் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததும்,
இன்னும் பெட்டிகள் வாங்கியதும்,
இதையெல்லாம் வைத்துக் கொண்டு
நாங்கள் தூய்மையானவர்கள் என்றால் யார் நம்புவார்கள்.
மடியில் கணமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும்.
தங்கள் சொத்துக்களைச் சொல்வதில் என்ன மூடி மறைக்க வேண்டியிருக்கிறது.
இவரல்லவா முதல் மாதிரியாக இருக்க வேண்டும்.

Tamiler This Week