இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday, 12 January, 2009

முத்தக்கா வீட்டு திருவிழா

நம்ம முத்தக்காவோட தாத்தா சைவப் பெருந்தகை திரு சு. அருணாச்சலம் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு முத்தக்கா அழைத்திருந்தார். நானும் வடகரை வேலன் அண்ணாச்சியும் போயிருந்தோம். 4.30 க்கு அண்ணபூர்ணா கலையரங்கத்துக்கு போய்ட்டோம். அங்க போனதும் முத்தக்காவுக்கு போன் பண்ணேன். கீழே உணவகத்தில் குட்டிப் பையன் சபரிக்கு உணவு கொடுத்திருப்பதாகவும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவதாகவும் சொன்னாங்க. ஒன்னும் அவசரமில்லைககா, மெதுவா வாங்க என்று எந்த “உள்நோக்கமும்” இல்லாமல் சொல்லிவிட்டு ஒரு ஓரத்தில் உட்கார்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன் :).

மேடையில் ஒரு குழுவினர் பக்தி கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார்கள். வேலன் அண்ணாச்சி அதை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக இது போன்ற பஜனைகளை கேட்டுக் கொண்டிருப்பவர்களை பார்த்தால் கிண்டலாக இருக்கும். என்ன புரியுதுன்னு இப்டி பார்த்து தலையாட்றாங்க என்று. ஆனால் நேரில் கேட்கும் போது ரொம்பவே இனிமையாக இருக்கு. கொஞ்சம் என் போனில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

பொதுவாக சிலர் வீட்டு விஷேஷதுக்கு அழைத்து நாம் அங்கு சென்றால், எதோ ஒரு சம்பிரதாயத்துக்கு கூப்ட்டோம். உடனே வந்துட்டான் பாரு.. என்ற ரீதியில் நடந்துக் கொள்வார்கள். இன்னும் சிலர், ஹ்ம்ம் கூப்டோம்.. நீ வந்துட்ட. சரி போனாப் போகுதுன்னு வா வான்னு மட்டும் சொல்லிட்டு வேலையப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஹிஹி. வேற எனன் தான் பண்ணனுமாம்? :) . இது போன்ற விழாக்களில் நம் அழிச்சாட்டியம் தாங்க முடியாது. அவர்கள் நம்ம மட்டுமே அல்லது நம்மை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

என்றெல்லாம் ஓவர் சீன் போடுவோம். அது ரொம்பவே தப்பு. அவர்களுக்கு எல்லா விருந்தினர்களையும் கவனித்தாக வேண்டும். நம்ம முத்தக்கா இருக்காங்களே.. இதுல எந்த வகையும் இல்லை. அநியாயத்துக்கு கவனிச்சாங்க. மாயவரத்துக்காரங்க எல்லாருமே இப்டி தானோ. கிருஷ்ணாக்கா ( அபி அம்மா ) இப்டி தான் கவனிச்சி எங்களை திக்கு முக்காட வச்சாங்க. முத்தக்கா எங்களை உட்காரவே விடலை. அவங்க அம்மா, அப்பா, சித்தப்பா, பெரியப்பா, மாமா, சகோதரர்கள், மாமியார் இன்னும் ஏராளமான அவர்களின் நெருங்கிய உறவினர்களை எலலாம் அழைத்து வந்து எங்களை அறிமுகப் படுத்திவைத்துக் கொண்டே இருந்தார்கள். எங்களுக்கு பயங்கர சந்தோஷம். எவ்ளோ பேர் இப்போ இப்டி ஆத்மார்த்தமா விருந்தினர்களை கவனிக்கிறாங்க?. ரொம்ப நன்றி முத்தக்கா. உங்க நூற்றாண்டு விழாவுக்கும் நாங்க வந்து ஆசிர்வாதம் வாங்கனும்.

எங்களை கடந்து போகும் போதும் வரும் போதும் சாப்டுங்க சாப்டுங்கன்னு ரொம்ப அன்பா சொல்லிட்டே இருந்தாங்க. அப்புறம் சாப்ட்டுக்கறோம்னு சொல்லியும் கேட்கலை. அடிக்கடி சொலிட்டே இருந்தாங்க. வேலன் அண்ணாச்சி பொறுமை இழந்துட்டார். யோவ் வாய்யா.. நாம் போகலைனா அவங்களே கொண்டு வந்து குடுத்துடுவாங்க போல. எதுக்கு அவங்களுக்கு சிரமம் வைக்கனும்னு சொல்லி சாப்ட இழுத்துட்டு போனார். நல்ல சுவையான ஜிலேபியும் மசால் போண்டாவும் குடுத்தாங்க.

காலையிலிருந்தே விழா நடந்துக் கொண்டிருந்தாலும் மாலை தான் களைகட்டியது. சிறிது நேரத்தில் இறைவணக்கப் பாடல்களை பெரியவரின் கொள்ளுபேரனும் பேத்திகளும்(எல்லாம் பொடிசுங்க) பாடினார்கள். அட அட.. என்ன இனிமையான குரல் பசங்களுக்கு, அதைவிட அவர்கள் முகபாவம் இருக்கே. வாவ்.. அவ்ளோ அழகு. இதை எல்லாம் ரசிக்காம எப்டி தான் இந்த அம்மாக்கள் எல்லாம் டிவியிலும் கம்ப்யூட்டரிலும் தலையை விட்டு வாழ்ந்துட்டு இருக்காங்களோ..

ஹ்ம்ம்ம்...
குழலினிது யாழினிது என்பர்......... :(

இறைவணக்கம் வாசிக்க முக்கியமான ஒருவர் நேரில் வரமுடியாததால் அவர் அம்மாவிடம் தன் தேன் குரலில் ஒரு பாடலை தாத்தாவிற்காக பாடி அனுப்பி இருந்தார். அதை ஒலிபரப்பினார்கள். ஆஹா.. என்ன ஒரு கனீர் குரல். வேறு யாரு? ஜூனியர் முத்தக்கா மாதினி பாப்பா தான். அதை வலைப்பதிவில் போட சொல்வோம்.

பிறகு மேடையில் அமர வேண்டிய விருந்தினர்களை எல்லாம் அழைத்தார்கள். அப்போ தான் தெரிஞ்சது முத்தக்கா எம்புட்டு பெரிய ஆளுன்னு.. கோவை மேயர், திமுக முன்னாள் எம்பி, பேரூர் ஆதினம், அறநிலையத் துறை துணை ஆணையர், அவினாசிலிங்கம் பல்கலை வேந்தர், அண்ணபூர்னா நிர்வாக இயக்குநர், சில பேராசிரியர்கள் என் பெரும் புள்ளிகள் தான் எல்லோரும். எல்லோரும் முத்தக்கா குடும்பத்துக்கு மிகவும் நெருகமானவர்கள் போலும். அவர்கள் குடும்பத்தை பற்றியும் பெரியவரைப் பற்றியும் அவ்ளோ பேசினாங்க. மதியமே வைகோ வந்துட்டு போனாராம்.

அதுல ஒரு விருந்தினர் சொன்னார் “ சிலர் தடம் பார்த்து நடப்பார்கள். சிலர் தடையம் விட்டுப் போவார்கள். ஆனால் இந்தப் பெரியவர் தான் தடம் பார்த்து நடந்து தடையமும் விட்டு வைத்திருக்கிறார்”. உண்மைதான். காரணம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்கள் பெரியவரின் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து தான். அதிலும் முத்தக்காவின் பெரியம்மாவும் தாத்தாவின் மருமகளுமான் ஒரு அம்மா தான் அவ்வளவு அழகாய் தொகுத்து வழங்கினார். கல்யாணம் முடிந்ததும் தனிக் குடித்தனம் போனோமா, பெத்தவங்களை கை கழுவினோமா அல்லது முதியோர் இல்லத்தில் விட்டோமான்னு இருக்கிற இந்தக் காலத்துல் நூற்றாண்டு விழா கொண்டாடும் தன் மாமனார் மாமியாரை கொண்டாடும் மருமகள்கள் அதிசயம் தானே.

என்னை வெகுவாக கவர்ந்தது என்று சொல்வதைவிட பிரமிக்க வைத்தது என்று சொன்னால் அது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. அவ்வளவு அருமையாக திட்டமிட்டு நடத்தி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க அவர்கள் குடும்பத்தார் தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்கள். தேர்ந்த ப்ரொஃபொஷனல்களால் திட்டமிட்டு நடத்தப் படும் பல பிசினஸ் மீட்டிங்குகளில் ஏராளமான சொதப்பல்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த விழாவை அவ்வளவு நேர்த்தியாக நடத்தினார்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சபாஷ்.

பிறகு எங்கள் அருகில் அமர்ந்து முத்தக்கா தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் காட்டி யார் , என்ன உறவு, என்ன செய்கிறார்கள் என்றெல்லாம்
சொல்லிக் கொண்டிருந்தார். பெருமைப்படும் அளவிற்கு மிகச் சிறந்த குடும்பம். முத்தக்காவின் மகன் சபர் செம சமத்து. பொதுவாகக் குழந்தைகள், அவர்களை தூக்கிவைத்துக் கொள்ள சொல்லி தான் நச்சரிபபார்கள். ஆனால் சபரியோ யார் தூக்கிவைத்துக் கொண்டாலும் கீழே இறக்கிவிட சொல்லிக் கொண்டிருந்தான். முத்தக்கா போலவே ரொம்ப நல்லா பழகினான். இன்று மதியம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பதிவர் சந்திப்பு இருக்காம். மிச்சம் மீதி பலகாரங்களை எல்லாம் வ்சூல் செய்ய ஜி3 அக்கா வரதா சொல்லி இருக்கங்களாம். :)

பெரியவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டு முத்தக்காவிடம் சொல்லிவிட்டு மிகவும் சந்தோஷமாக வந்தோம்.

சொல்வதற்கு இன்னும் ஏராளமாக இருக்கு. ஆனால் இதுவே ரொம்ப பெரிய பதிவா போய்டிசி. இதையே எவ்ளோ பேர் முழுசா படிப்பாங்கன்னு தெரியலை. அதனால இதோட முடிச்சிக்கிறேன். :)

கொசுறு : ஆசிர்வாதம் வாங்க செல்லும் முன் நம்ம பெரியவர் வேலன் அண்ணாச்சி என்னிடம் “ எனக்கு 100 வயசு வழனும்னு எல்லாம் ஆசை இல்லைபா.. ஆனா நீ 100 வயசு வாழனும். உன் கிட்டயும் நான் ஆசிர்வாதம் வாங்கனும். இதான் என் ஆசை” அப்டின்னு சொன்னார். பெரிசுக்கு என்னா வில்லத் தனம் பாருங்க மக்களே. இப்போவே 70 வயசை நெருங்கிட்டு இருக்கார். அவருக்கு இன்னும் 84 வருஷம் கழிச்சி என் நூற்றாண்டுலையும் ஆசிர்வாதம் வாங்கி அதுவரைக்கும் கதம்பம் போடனுமாம். கண்டிக்க ஆளில்லால வளர்ந்துட்டு இருககார் இவரு. :)

விழாவில் தாத்தாவின் நூற்றாண்டு மலர் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றிய குறுந்தகடு வெளியிட்டார்கள். நூற்றாண்டு மலரும் குறுந்தகடும் வெளியிடுவதற்காக மட்டும் குறைந்த அளவில் கொண்டு வந்தார்களாம். மற்றவை அச்சில் இருக்கிறதாம். இது தெரிந்தும் நூற்றாண்டு மலரை நான் முத்தக்காகிட்ட கேட்டேன். உடனே வேகமா எழுந்து போய்ட்டாங்க. அடடா.. தப்பா கேட்டுட்டோம் போல.. அக்கா கோச்சிட்டு போய்ட்டாங்களே.. இரவு சாப்பாடு இல்லாமலே அனுப்பிடுவாங்களோன்னு நான் கவலையோட உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்துல ஒரு மஞ்சள் பையோட வந்தாங்க. அதை என் கையில் கொடுத்து “ இதை இப்போ பிரிக்காத. புத்தகம் அனுப்ப உங்க அட்ரஸ் கேட்டாங்க. அதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு நான் தெரியாம சுட்டுட்டு வந்துட்டேன். வச்சிக்கோ”ன்னு சொன்னாங்க. ஆஹா.. சொந்த வீட்லையே சுட வச்சிட்டோம்ல.. :))

விழாமுடிந்து வந்ததும் இதை எழுதிவிட்டேன். இல்லைனா என் சோம்பேறி தனத்தால எழுதாம விட்டு விடுவேன். மனசுக்கு திருப்தியான நல்ல விஷயங்களை மத்தவங்க கிட்ட பகிர்ந்துக்காம இருக்கிறது தப்புங்கோ.ஆனா தாமதமா இன்னைக்கு தான் பப்ளிஷ் பண்றேன். :)

Posted by..

41 Comments:

said...

நல்லா எழுதியிருங்கீங்க சஞ்செய்... :)

said...

இடையிலே சொர்ணா'க்கா கலாய்ச்சிதை ஐ லைக் இட் வெரி மச்'ய்யா... :))

said...

சூப்பர்.


நோ பழமொழி திஸ் டைம்:-)))

said...

நேர்ல பார்த்த உணர்வைத் தருகீறது உங்கள் வர்ணனை!!

said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சஞ்சய். வாழ்த்துகள். முத்தக்கா குடும்பம் உண்மையிலேயே ஒரு பல்கலைக்கழகம். ஆண்டவன் எல்லா அருளும் புரியட்டும்.

அனுஜன்யா

said...

அருமையாக எழுதியிருங்கீங்க..;)

said...

அழகாய் சொல்லி விட்டார் அனுஜன்யா. அதை அப்படியே வழிமொழிகிறேன்.

said...

நல்ல சுவையான ஜிலேபியும் மசால் போண்டாவும் குடுத்தாங்க.//மிஸ் பண்ணிட்டனே..

ஆமா, என்னங்க இம்மாம்பெரிசா எழுதி திக்குமுக்காட வைக்கிறீங்க..

said...

:-)))

அருமையாக எழுதியிருங்கீங்க..;)
நேர்ல பார்த்த உணர்வைத் தருகீறது உங்கள் வர்ணனை!!ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சஞ்சய். வாழ்த்துகள். முத்தக்கா குடும்பம் உண்மையிலேயே ஒரு பல்கலைக்கழகம்.

Anonymous said...

நல்லா விவரிச்சிருக்கீங்க. அதோட உங்களுக்கு வயசு 14 ன்னும் கதை விட்டிருக்கீங்க. நம்பியாச்சு

said...

// சென்ஷி said...
:-)))

அருமையாக எழுதியிருங்கீங்க..;)
நேர்ல பார்த்த உணர்வைத் தருகீறது உங்கள் வர்ணனை!!ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சஞ்சய். வாழ்த்துகள். முத்தக்கா குடும்பம் உண்மையிலேயே ஒரு பல்கலைக்கழகம்.

//

வழிமொழிகிறேன்:)

said...

அட உங்களுக்கு இத்தனை நல்ல கூட எழுத வருமா என்ன சொல்லவேயில்லை?
அன்னபூர்ணா ஹால்ல உட்கார்ந்து இருந்த உணர்வை கொண்டு வந்திட்டிங்க.

said...

// சின்ன அம்மிணி said...
நல்லா விவரிச்சிருக்கீங்க. அதோட உங்களுக்கு வயசு 14 ன்னும் கதை விட்டிருக்கீங்க. நம்பியாச்சு//

ஆமாங்க சின்ன அம்மிணி அவருக்கு 14 வயசுதான். போன வருசம்தான் 14வது பிறந்த நாளை கொண்டாடினார்.
என்ன இதே மாதிரி ஒரு 25 வருசமா கொண்டாடிகிட்டு இருக்காராம்.

said...

ஆகா, சஞ்ஜய் அழகா எழுதியிருக்கீங்க! ரொம்ப நல்லா நேர்ல விழாவை பார்த்த மாதிரியே இருக்கு. மாதினி குரலை நெட்ல போல சொல்லனும். டெல்லி வந்த பின்னே பாவம் பொண்ணுக்கு நிறைய வேலை இருக்கு. முதல்ல அணில் பிரியானி வேற இருக்கு. அதுக்கு முன்னாடி நாம எல்லாம் சேர்ந்து சுத்தி போடணும்:-))

said...

ஹை, நடுவே அபிஅம்மா பதிவும் சந்துல சிந்து பாடுதே! நன்னி நன்னி!

Anonymous said...

///ஒரு ஓரத்தில் உட்கார்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன் :).//

அதென்ன வேலை??


///இதையே எவ்ளோ பேர் முழுசா படிப்பாங்கன்னு தெரியலை. அதனால இதோட முடிச்சிக்கிறேன். :)//

2 பேர்
யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்?


//இரவு சாப்பாடு இல்லாமலே அனுப்பிடுவாங்களோன்னு நான் கவலையோட உட்கார்ந்திருந்தேன்.//

ஆமா ஆமா கவலைப்பட வேண்டிய விசயம் தான்

said...

ம்ம்ம் முழுசாப் படிச்சுட்டேன்பா....கொஞ்சம் நீளம்தான் ஆனால் படிக்கிற அளவுக்கு நல்லாவே இருந்தது...
அன்புடன் அருணா

said...

நல்லா இருக்கு பதிவு. முழுவதுமாக படித்தேன் :)

said...

//கீழே உணவகத்தில் குட்டிப் பையன் சபரிக்கு உணவு கொடுத்திருப்பதாகவும் //
ந‌ல்ல‌வேளை! குட்டிப்பைய‌ன்கிட்ட‌ ப‌ங்கு கேக்காம‌ விட்டீங்க‌ளே;-)

said...

//எதோ ஒரு சம்பிரதாயத்துக்கு கூப்ட்டோம். உடனே வந்துட்டான் பாரு//
இதுக்கெல்லாம் அல‌ட்டிக்கிற‌வ‌ங்க‌ளா நாம‌;‍)

said...

//இது போன்ற விழாக்களில் நம் அழிச்சாட்டியம் தாங்க முடியாது//
அங்க‌ ம‌ட்டும் தானா?

said...

//கிருஷ்ணாக்கா ( அபி அம்மா ) இப்டி தான் கவனிச்சி எங்களை திக்கு முக்காட வச்சாங்க.//
அந்த‌ சோக‌த்தை ஏன் அவ‌ங்க‌ளுக்கு திரும்ப‌ நியாப‌க‌ப்ப‌டுத்த‌றீங்க‌ பாவ‌ம்;‍(

said...

//நல்ல சுவையான ஜிலேபியும் மசால் போண்டாவும் குடுத்தாங்க//
அப்பாடா;‍)...ச‌ஞ்ச‌ய் போன‌ நோக்க‌ம் நிறைவேறிடிச்சு

said...

//மிச்சம் மீதி பலகாரங்களை எல்லாம் வ்சூல் செய்ய ஜி3 அக்கா வரதா சொல்லி இருக்கங்களாம். :)//

ச‌ஞ்ச‌ய் நீங்க‌ போயும் மிச்ச‌ம் மீதியா?;‍)cha..too bad

said...

// சொந்த வீட்லையே சுட வச்சிட்டோம்ல.. :))//
உங்க‌ கூட‌ சேந்துட்டாங்க‌ இல்லை ..அப்புற‌ம் வேற‌ என்ன‌ ப‌ண்ற‌து?;‍)

said...

//இது போன்ற பஜனைகளை கேட்டுக் கொண்டிருப்பவர்களை பார்த்தால் கிண்டலாக இருக்கும். என்ன புரியுதுன்னு இப்டி பார்த்து தலையாட்றாங்க என்று. ஆனால் நேரில் கேட்கும் போது ரொம்பவே இனிமையாக இருக்கு///
repeatu!

//இதை எல்லாம் ரசிக்காம எப்டி தான் இந்த அம்மாக்கள் எல்லாம் டிவியிலும் கம்ப்யூட்டரிலும் தலையை விட்டு வாழ்ந்துட்டு இருக்காங்களோ..//
ithukku innonu.. Tvyoda computer serthathu.. ;)

said...

ரொம்ப‌ ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌..யார் எழுதி குடுத்தாங்க‌..

said...

அழகா விவரிச்சு சொல்லியிருக்கீங்க!

நேர்ல கலந்துக்காத குறையை நிறைவேத்திடுச்சு!

:)

said...

அநியாயத்துக்கு கவனிச்சாங்க. மாயவரத்துக்காரங்க எல்லாருமே இப்டி தானோ. கிருஷ்ணாக்கா ( அபி அம்மா ) இப்டி தான் கவனிச்சி எங்களை திக்கு முக்காட வச்சாங்க//

கொங்கு ஊருக்காரங்க சொல்றது கேட்டா உண்மையாவே நொம்ப்ப பெருமையா இருக்கு!


வாழ்க !

மண்ணின் மைந்தனாய்...!
ஆயில்யன் மயிலாடுதுறை

Anonymous said...

சஞ்சய்,

நல்லா எழுதியிருக்கீங்க. முக்கியமான தகவல்கள் எல்லாமே பதிஞ்சிருக்கீங்க.

வாழ்த்துக்கள்.

said...

ரொம்ப நன்றி ராம் :)

சொர்ணாக்காவா? ஜி3யை கிண்டல் பண்ற அளவுக்கு தைரியம் வந்தாச்சா? இந்தியா வராமலா போய்டுவீங்க.. அப்போ எங்கக்கா உங்கள தக்க விதத்தில் கவனிப்பாங்க.. :)
-------------

நன்றி துளசியம்மா.. இந்த வாட்டி தப்பிச்சிட்டேனா? :))

---------

மிக்க நன்றி சந்தனமுல்லை.. முத்தக்காவை சந்திக்கும் போது கோவைல சஞ்சய்னு ஒரு குழந்தை இருக்கானே.. அவனுக்கு சாக்லேட் , ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித் தரனும்னு தோனுச்சா உங்களுக்கு? .. பப்பு கிட்ட நல்ல விஷ்யங்கள் எல்லாம் கத்துக்கோங்க.. :)

--------------

நன்றி அனுஜன்யா.. நீங்க சொல்றது நிஜம் தான்.

----------------

நன்றி கோபிநாத..
------------

நன்றி லக்‌ஷ்மியக்கா. :)

-----------------

said...

ஹிஹி.. தாமிரா.. நீங்க இப்டி ஃபீல் பண்ணுவீங்கன்னு தெரியும்.. ஜிலேபி, மசால் போண்டா மட்டுமில்லை.. சபபாத்தி, இட்லி, கிச்சிடி, தயிர் சேமியா எல்லாமே உங்களுக்கும் சேர்த்து வேலன் அண்ணாச்சி சாப்ட்டார்.. :)

---------------------

நன்றி சென்ஷி. :)

---------------------

சின்ன அம்மிணி அக்கா.. ரொம்ப நன்ரி.. ஆனா ஏன் நான் என்ன சொன்னாலும் நம்பவே மாட்டேங்கறிங்க?.. நல்லவங்களுக்கு காலமே இல்லையா? :( நான் நல்லவன்னு எனனையத் தான் சொன்னேனாக்கும்.. :)

-------------------

நன்றி பூர்ணி :) அடுத்தவாட்டி உன்னையும் கூட்டிட்டு போறேன்.. :) நீ தான் நல்லா சாப்டுவன்னு மாப்ள சரவணன் சொன்னாரு.. :))

------------

தாரணி அக்கா.. ரொம்ப நன்றி.. உங்க சமையலை சாப்டும் கூட கொழுப்பு மட்டும் குறைய மாட்டேங்குதே அது எப்டிக்கா? :))
த்தூ.. :)
-------------------
நன்றி அபியப்பா.. மாதினி குரல் ரொம்ப நல்லா இருந்தது.. நிஜமா சுத்தி போட சொல்லனும்.. முத்தக்கா மாதினியின் பதிவு செய்யப் பட்ட குரலை மைக்ல ஒலிபரப்பினாங்க,, நேர்ல கேட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். அதென்ன அணில் பிரியானி? :)

அபியம்மாவை(கிருஷ்ணாக்கா) மறக்க முடியுமா? விருந்தோம்பல்னா அதுக்கு அபியம்மவைத் தான் உதராணமா சொல்லனும.. :)

-------------------

said...

துப்பாதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் திருந்தாத துப்பு கெட்ட தம்பியே உன்ன மாதிரி கொழுப்பான தம்பி இருக்கும்போது எனக்கு மட்டும் எப்படி கொழுப்பு கொறையும்.

said...

தூயா ,
//அதென்ன வேலை??//

கிகிகி.. உனக்கு தெரியுமே. :))

//2 பேர்
யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்?//

ஒன்னு, எழுதின நான்.. இன்னொன்னு வேலை வெட்டி இல்லாம கையை வெட்டிகிட்டு ஆபிஸ்க்கு மட்டம் போட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு வெட்டிப் பொண்ணு. :)

-------------

ரொம்ப நன்றி அருணாக்கா.. :)

---------------

நன்றி பொடிபொண்ணு.. நீ முழுசா படிச்சதை நான் முழுசா நம்பிட்டேன்.. :)

--------------------

வாங்க WWW.. என்னை நக்கல் அடிக்கிறதுகுன்னே ஒரு புது ப்ளாகர் ப்ரொஃபைல் உறுவாக்கி இருக்கும் உங்கள் சேவை வாழ்க.. வாழ்க.. யாருங்க நீங்க? :(

------------------

நன்றி இயற்கை.. :)

என்ன இது சின்னப் புள்ளத் தனமா? ஒருநாளைக்கு ஒரு ஐடில வந்துட்டு.. :)

------------
சைண்டிஸ்டு டாக்டர் ராஜி, ஒருநாளைக்கு என் கைல மாடடாமலா போய்டுவீங்க? அன்னைக்கு இருக்குமா உங்களுக்கு கச்சேரி.. :)

--------------
நன்றி தினேஷ்.. :)

---------------

said...

//ராஜி said...

ரொம்ப‌ ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌..யார் எழுதி குடுத்தாங்க‌..//

சிலர் மாதிரி நான் என்ன PhDயா பண்றேன்.. யாராவது தீசிஸ் யாராவது எழுதிக் குடுக்க? :))
.. ஏன் ராஜி சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறிங்க? :))

-------------------
நன்றி ஆயில்யன்.. மெய்யாலுமே மாயவரத்துக்காரங்க அநியாயத்துக்கு பாசக்காரங்களா இருக்கங்கய்யா.. உங்களோட எல்லாம் பழகறதே பெருமையா இருக்கு. :)

--------------

நன்றி வேலன் அண்ணாச்சி.. நீங்க எழுதி இருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும். ஆனா இடையறாத எழுத்துப் பணிக்கு இடையில் உங்களுக்கு ஏன் சிரமம் வைக்கனும்னு தான் நானே களத்துல எறங்கிட்டேன்.. :)

-------------
// தாரணி பிரியா said...

துப்பாதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் திருந்தாத துப்பு கெட்ட தம்பியே உன்ன மாதிரி கொழுப்பான தம்பி இருக்கும்போது எனக்கு மட்டும் எப்படி கொழுப்பு கொறையும்.//

த்தூ..த்தூ..த்தூ.. :)

said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சஞ்சய்... நிஜம்மாவே நான் கவலையா இருந்தேன் சரியா கவனிக்கலையோன்னு.. இப்ப மகிழ்ச்சி.. நீங்க சொன்னதுக்கப்பறம்தான் நான் என்ன என்ன சாப்பிட்டேன்னு லிஸ்ட் தெரியுது.. இன்னும் பேச்சுக்களையெல்லாம் கேட்டு நீங்க் போரடிச்சிருவீங்களோன்னு பய்ந்தேன்.. அதையும் ரசிச்சு சொல்லி இருக்கீங்க நன்றி..

said...

வாங்க முத்தக்கா.. உங்க கவனிப்பு எங்களுக்கு ரொம்ப சந்தோஷமே. சீக்கிறமே அங்க இருந்து வந்துட்ட மாதிரி தோனுச்சி. இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம். ஆனா வேலன் அண்ணாச்சிக்கு பூரி கட்டையோ எதோ நினைவுக்கு வந்ததா சொனனார். அதான் வந்துட்டோம். :) அடுத்த் முறை வரும் போது மறக்காம போன் பண்ணுங்க. மாதினி அன்னைக்கு பாடின பாடலை உங்க ப்ளாக்ல அப்லோட் பண்ணுங்க.

said...

கலக்கல் சஞ்சய். பதிவை முழுசா படிச்சேன்.

said...

மாயவரத்துக்காரங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க சஞ்சய்.

said...

/ம்ம்ம் முழுசாப் படிச்சுட்டேன்பா....கொஞ்சம் நீளம்தான் ஆனால் படிக்கிற அளவுக்கு நல்லாவே இருந்தது.../


ரிப்பீட்டேய்..!

said...

/மங்களூர் சிவா said...
மாயவரத்துக்காரங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க சஞ்சய்./

சஞ்சய் கூட ரொம்ப நல்லவர் தான்..:)

Tamiler This Week