இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comMonday, 19 January 2009
Bay of Pigs - மூக்குடைத்துக் கொண்ட அமெரிக்கா - 50 ஆண்டுகளை கடந்த சுதந்திர கியூபாவிற்கு வாழ்த்துக்கள்.
1961ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி கியூபாவின் தெற்கு பகுதியில் உள்ள Bay of Pigs என்ற இடத்தின் மீது கியூபாவில் இருந்து நாடுகடத்தப் பட்டு அமெரிக்காவில் தஞ்சம் புகுத்தவர்களால் ஒரு படையெடுப்பு நிகழ்த்தப் பட்டது. இதற்கு திட்டம் வகுத்து, நிதியுதவி, ஆயுத உதவி மற்றும் பயிற்சி அளித்தவர்கள் சாட்சாத் அமெரிக்க உளவு நிறுவனமான சி ஐ ஏ தான். Playa Girón என்ற கடற்கரையில் வந்திறங்கிய அமெரிக்க ஆதரவு புரட்சிப் படையை சோவியத் மூலம் பயிற்சியும் ஆயுதபலமும் அளிக்கப் பட்ட கேஸ்ட்ரோவின் ராணுவம் மூன்றே நாட்களில் வெற்றிகரமாக முறியடித்தது. இந்த படையெடுப்பு 19ஆம் தேதியே முடிவுக்கு வந்தது. இந்த புரட்சிப் படையில் சுமார் 1300 ( சிலர் 1400 என்று சொல்கிறார்கள் ) பேர் இருந்தார்கள். அதில் 93 பேர் (அல்லது 68 பேர்) கியூப ராணுவத்தால் கொல்லப் பட்டார்கள். மற்றவர்கள் போர்க் கைதிகளாக பிடிபட்டார்கள்.கியூப ராணுவத் தரப்பில் 87 பேர் இறந்ததாகவும் மேலும் பலர் காயமடந்ததாகவும் அரசாங்கம் அறிவித்தது. ( எண்ணிக்கைகள் பல இடங்களிலும் வேறு வேறாகவே இருக்கிறது )
பிடிபட்டவர்களில் சிலர் தூக்கிலிடப் பட்டதாகவும் , சிலர் சிறையிடைக்கப் பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. பின்னர் 1962 டிசம்பர் 21ம் தேதி கேஸ்ட்ரோவும் ஜேம்ஸ் பி டொனொன் என்ற அமெரிக்க வழக்கரிஞறும் கையெழுத்திட்ட ஒப்பந்ததின் படி 53 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு பதிலாக 1113 கைதிகள் ஒப்படைக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த பணம் அமெரிக்காவின் நன்கொடை மூலம் வசூல் செய்யப் பட்டதாம்.
கென்னடிக்கு முன்பு இருந்த குடியரசுத் தலைவரால் திட்டமிடப் பட்டிருந்தாலும் கென்னடி பொறுப்பேற்ற பின் நடந்த நடவடிக்கை என்பதால் அவர் நிர்வாகத்திற்கு பெரும் கெட்டப் பெயர் பெற்றுத் தந்த இந்த தோல்விக்கு பொறுப்பேற்று சிஐஏவின் இயக்குனர் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் ராஜினாமா செய்ய வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஃபிடல் கேஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிபடை கியூபாவை கைபற்றிய சில ஆண்டுகளிலேயே இந்த நடவடிக்கை நிகழ்த்தப் பட்டது. ஆனாலும் சோவியத் உதவியில் ஓரளவு பலமான ( அரசு எதிர்ப்பு புரட்சிப் படைகளை எதிர்க்கும் அளவிற்கும் அதிகமாக )ராணுவத்தைக் கொண்டிருந்த கியூபா, இதை மூன்றே தினங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பிறகு வேறு வழி இல்லாமல் சில பல குற்றச் சாட்டுகளை சுமத்தி கியூபாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தி தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் இன்று உலகிலேயே மிகச் சிறந்த சுகாதார வசதியும் கல்வி அறிவும் கொண்ட நாடாக கியூபா திகழ்கிறது. 37 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உலகிலேயே கியூபாவில் மட்டுமே உண்டு. கியூபாவின் மருத்துவர்கள் உலகிலேயே மிகச் சிறந்தவர்களாக உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
புரட்சிக்கு முன்னர் கியூப மக்களின் சராசரி வயது 58. இப்போது 78. குழந்தைகள் இறப்பு விகிதமும் 10 மடங்கு குறைந்திருக்கிறது. 1000 பேருக்கு 6 மருத்துவர்கள் உள்ளனர். இது அமெரிக்காவைவிட இரண்டு மடங்கு அதிகமாம். மேலும் உலகம் முழுதும் சேவை செய்ய தங்கள் மருத்துவர்கள் 36,500 பேரை கியூபா அனுப்பி இருக்கிறது. இது ஒட்டுமொத்த உலக நாடுகள் அனுப்பிய மருத்துவர்களையும் விட அதிக எண்ணிக்கையாம்.
முடிஞ்சா இதையும் படிங்க சாமியோவ் ..
CASTRO'S ASCENT TO POWER | |
1952: Castro runs for parliament, but elections are called off after Gen. Fulgencio Batista overthrows Cuba's government on March 10. July 26, 1953: May 15, 1955: Jan. 1, 1959: February 1960: June: October: April 16, 1961: Jan. 22, 1962: Feb. 7: October: March 1968: March 18, 1977: April 1980: April 19, 1982: April 1986: December 1991: Jan. 21-25, 1998: June 23, 2001: Dec. 16: March 18, 2003: Oct. 20, 2004: November 2004: July 27, 2006: July 31: Aug. 13: Dec. 2: March 28, 2007: Dec. 18: Jan. 20, 2008: Feb. 19: May 7: Sources: The Associated Press, USA TODAY research |
பின் குறிப்பு : இந்தப் பதிவில் தவறுகள் இருந்தால் பின்னூட்டவும். திருத்திக் கொள்ளப்படும். ஏனெனில் “வரலாறு முக்கியம் அமைச்சரே” .. :)
8 Comments:
இது ஆனந்தவிகடனில் வந்த மாதிரி தெரியுதே!
உண்மையிலேயே பிடல் நெருக்கடி நிலையில் எடுத்த சரியான முடிவுகளே அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவியது.
அப்போ உடஞ்ச மூக்கு தான் அதன் பிறகு தென் கொரியா, ஈராக்(புஷ்சே ஒத்துகிட்டார்)ன்னு வரிசையா மூக்கு உடஞ்சிக்கிட்டே இருக்குது
// வால்பையன் said...
இது ஆனந்தவிகடனில் வந்த மாதிரி தெரியுதே!//
முதல் பாதி அதில் வரவில்லை.மீதி பாதி ஆவியில் மருதன் எழுதியது.
இவ்வளவு பொருளதார தடைகலுக்கு மத்தியிலும் கியுபாவின் வள்ர்ச்சி பாராட்டப்பட வேண்டியதுதான்.
தல இன்னும் கொ்ஞச நாள்ல உங்கலையும் சே டீ சர்ட்டுல பாக்கலாம் :-))
வால் & கார்த்தி,
கடைசிக்கு முந்தைய பத்தியில் இருப்பது மட்டும் ஆனந்தவிகடனில் வந்திருக்கும். கடைசி பத்தி, சண்டே இந்தியனில் படிக்கும் போது தெரிந்துக் கொண்டது. பே ஆஃப் பிக்ஸ் எழுதும் போது அதன் தொடர்ச்சியாக இவைகளும் நினைவுக்கு வந்தன.. அதுமட்டுமில்லாமல் பே ஆஃப் பிக்ஸ் பற்றி எழுதுவதற்காக இணையத்தில் தேடும் போது ஆனந்தவிகடனில் வந்த பாதி விவரங்கள் கண்ணில் பட்டன. எல்லாம் இணையத்தில் எடுக்கப் படுபவைகள் தான். :)
go RED!
:)
Viva la revolucion!
புரட்சி வாழ்க என்பதை ஸ்பானிஷ்-ல சொன்னேன், நாங்களும் பல மொழிகளில் பேசுவோம்ல?
Good post!!!!!
குறிப்புகளுடன் நல்ல போஸ்ட் ஊர்ஸ்:)
Post a Comment