இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday 21 January, 2009

தலைக்கவசம் போட வைத்த 25 ரூபாய்

நான் ஈரோட்டில் இருந்த 4 வருடங்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தான் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பிறகு கோவையில் அலுவலகம் தொடங்க திட்ட்மிட்டதும், கோவையில் நம்ம தில்லாலங்கடி வேலை செல்லாது என்று ஓட்டுநர் உரிமம் பெற்றேன். நான் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது ஒரு போக்குவரத்து/போக்காவரத்து காவலரும் என்னை விசாரித்ததில்லை. இரவில் திரைப் படம் பார்க்க செல்வது, நண்பர்கள் வந்தால் அவர்களை அழைத்துவர செல்வது, தொடர்வண்டி நிலையம் செல்வது என முக்கிய்மான எல்லா இடங்களுக்கும் அடிக்கடி சென்றிருக்கிறென். ஆனால் என்னிடம் ஓட்டுநர் உரிமமோ வாகனத்திற்கான சான்றிதல்களோ எந்த அலுவலரும் விசாரித்ததில்லை. பல சமயங்களில் நான் செல்லும் சாலைகளில் இரவில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் என்னை யாரும் நிறுத்தியதில்லை. இன்றுவரை அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. பார்ப்பதற்கு மிக நாகரிகமானவன் போல் கூட இருக்க மாட்டேன். ஆனால் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஒரு வாரத்திற்குள் இரவு நேரத்தில் பேருந்து நிலையம் அருகில் ஒரு காவலர் என் வாகனத்தை நிறுத்தினார். அதான் உரிமம் இருக்கே. :).. நல்ல வேளை அவர் வாகனத்திற்கான சான்றிதல்கள் எதுவும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் சங்கு தான். :)

நாங்கள் கோவையில் அலுவலகம் தொடங்க ஆரம்பித்த சமயம் தமிழக அரசு , அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் உபயோகிக்க வேண்டும் என உத்தரவு போட்டது. ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னாடி அமர்ந்து வருபவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது அரசாணை. அப்போது நான் தினமும் ஈரோட்டிலிருந்து கோவை வந்து அலுவலகம் மற்றும் சேமிப்புக் கிடங்கிற்கான இடம் தேர்வு செய்ய ஒரு இடைத்தரகர் மற்றும் என் நண்பர் ஒருவருடன் இரு சகக்ர வாகணத்தில் சென்று சரியான இடம் பார்த்துக் கொண்டிருந்தேன். வாகனத்தில் பின்னாடி அமர்பவரும் தலைக்கவசம் போட வேண்டும் என்பதால் நான் புது இருசக்கர வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கி விட்டேன். தினமும் அதை ஈரோட்டிலிருந்து பேருந்தில் வரும் போது கொண்டுவந்து கோவையில் வாகனத்தில் செல்லும் போது உபயோகிப்பேன்.

பிறகு சில நாட்களிலேயே அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. ஆகவே நான் தலைக்கவசம் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிட்டேன். பிறகு கோவை வந்து புதிய வாகனம் வாங்கும் போது அவர்கள் கொடுத்த தலைக்கவசமும் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நான் ஆரம்பத்தில் வாங்கியதை வைத்திருந்தேன். ஆனால் அதை அணிந்து வாகனம் ஓட்டியதே இல்லை. வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கிவன் நான் ஒருவனாகத் தான் இருப்பேன்.

சமீபத்தில் திருப்பூர் சென்றுவிட்டு என் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தேன். அப்போது பின்னாடி அமர்ந்திருந்த எங்கள் விற்பனை அலுவலர் தான் வண்டி ஓட்டுவதாக கூறினார். சரி.. பாசக்கார பய.. ரொம்ப தூரம் வாகனம் ஓட்டியதில் நான் களைப்பாக இருப்பேன் என்று எண்ணி கேட்கிறார் போலும் என்று நினைத்து அவரை ஓட்ட சொன்னேன். கொஞ்ச தூரம் வந்ததும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மூன்று போக்குவரத்துக் காவலர்கள் எங்களை நிற்க சொன்னார்கள். எப்போதுமே நம்ம பாசக்கார பயலுக நேரம் காலம் தெரியாமல் சொதப்புவதில் நம்மையே மிஞ்சுபவர்களாச்சே என்று நினைத்துக் கொண்டு, வாகனத்தில் இருந்து இறங்குவதற்கு முன் அவரிடம் உரிமம் உள்ளதா என விசாரித்தேன். நான் நினைத்த மாதிரியே நடந்தது. உரிமத்தை தொலைத்துவிட்டாராம். அதான பார்த்தேன். சரி கொஞ்சம் முன்னாடி நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டு அவரை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு வாகனத்தில் இருந்த சான்றிதல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் காவல் அதிகாரிகள் அருகில் சென்றேன். எங்களை நிறுத்திய அதிகாரி மற்றவர்களை ஓரங்கட்டுவதில் மும்முரமாய் இருந்தது எனக்கு வசதியாய் இருந்தது. ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த அதிகாரி அருகில் சென்று பவ்யமாய் எல்லா ஆவணங்களியும் கொடுத்தேன். பதிவு சான்றிதல், வாகன காப்பீட்டுச் சான்றிதல் எலலாம் சரியாக இருந்தது. அடுத்து?.. வேறென்ன.. ஓட்டுநர் உரிமம் இருக்கா என்று வினவினார். ஹிஹி.. ஓட்டியவ்ரிடம் தானே இல்லை.. உட்கார்ந்து வந்த என்னிடம் இருக்கே.. ஒருவழியாய் அன்று தில்லாலங்கடி வேலை செய்து தப்பித்தேன். அது வரை நான் அபராதம் என்று ஒரு பைசாவும் கட்டியதில்லை.

இதெல்லாம் பழங்கதை.. இப்போ கோவை மாநகர காவல்துறை ஆணையர் மஹாலி அவர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார். அப்படியும் நான் அதை பின்பற்றாமல் தான் சுற்றிக் கொண்டிருந்தேன். சில தினங்களுக்கு முன் இரவு ஒரு பாசக்கார முகவர் அவராகவே அழைத்தார் காசோலை தருவதற்கு. அது கனவா நனவா என்ற ஆச்சர்யத்தில் சென்ற எனக்கு நிஜமாகவே காசோலை அளித்து திக்குமுக்காட வைத்தார். அந்த மிதப்பிலேயே வந்துக் கொண்டிருந்த என்னை லட்சுமி ஆலைகள் தாண்டி ஒரு காவல் துறை அக்கா நிறுத்தவிட்டார். நான் நல்ல பிள்ளையாய் வாகன ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் போய் நின்றேன். அதற்கு அந்த அக்கா “ அதெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் தம்பி. தலைக்கவசம் எங்கே?” என வினவினார். அங்க அக்காவை பார்ப்பதற்கு மிக நல்லவராகவே தெரிந்தார். இத்தனை ஆண்டுகால சந்தைப் படுத்துதல் துறையில் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரே சிறப்பம்சம் இது தான். யாராக இருந்தாலும் முகம் பார்த்ததுமே அவர் எப்படிப் பட்டவராக இருபபார் என ஓரளவுக்கு கணித்து விட முடிகிறது. ஆஹா.. மாட்டிக்கிட்டயே காந்தி.. என்று நினைத்த வாறே “ அக்கா.. மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா. காலையில் இருந்து வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அப்போது தலைக்கவசத்துடன் தானக்கா ஓட்டினேன். இப்போது வீட்டிலிருந்து ஒரு நண்பரை பார்ப்பதற்காக வந்தேன். இப்போது தான் தலைக்கவசத்தை வீட்டில் வைத்துவிட்டு வந்தேன். இதுவரை நான் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதே இல்லை. இந்த ஒருமுறை மட்டும் விட்டுவிடுங்கள் அக்கா. இனி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டேன்..” என்று கூச்சநாச்சமே இல்லாமல் பொய் சொன்னேன். நிச்சயம் அபராதம் கட்டியாக வேண்டும் என்றாலும் கட்டிவிடுகிறேன். தவறு என்னோடது தானே என்று மிக நல்லவன் போல் நன்றாகவே நடித்தேன். அவரும் அதை நம்பியது போல் தான் தெரிந்தது. இன்னொருவரும் இதே போல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அபராதம் கட்ட 100 ரூபாய் இல்லை என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார். பிறகு அந்த அக்கா என்னைப் பார்த்து “ பாருங்க இவரிடம் 100 ரூபாய் இல்லையாம். கோவைக்காரங்க சட்டைப் பையில் 100 ரூபாய் கூட இல்லாமல் சுற்றுவார்களாம். இதை நான் நம்பனுமாம்” என்று சொனனார். சரி இருங்க என்று சொல்லிவிட்டு மற்ற எல்லாரிடமும் அபராதம் வசூலித்து தவறாமல அதற்கான ரசீதையும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆஹா.. நம்மை இன்னுமா இந்த உலகம் நம்புகிறது. விட்டுவிடுவார் போல் இருக்கே என்று நினைத்து ஓரமாக நின்றுக் கொண்டேன். அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கு அபராதம் போட்டு ரசீதும் எழுதிவிட்டார்கள் அந்த அக்கா. ஆனால் அந்த தோழரோ 50 ரூபாய் தான் இருக்கிறது. 100 ரூபாய் இல்லை என்று நிஜமோ பொய்யோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் புலம்பலில் கடுப்பான அக்கா வாகன சாவியை கொடுத்துவிட்டு செல்லுங்கள். பணம் கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுங்கள் என்று கோபமாக சொல்லிவிட்டார். இன்னும் சற்று நேரம் இருந்தால் நமக்கும் ஆப்பு அடிப்பார் போல என்று நினைத்து “ அக்கா.. நான் வேண்டுமானால் அபராதம் செலுத்திவிடுகிறேன்.. நேரம் ஆகிறது “ என்று சொன்னேன். உடனே இன்னொரு நண்பரையும் என்னையும் பார்த்து அந்த 50 ரூபாய் தோழரை காண்பித்து இவருக்கு ஆளுக்கு 25 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுங்கள். நான் ரசீது எழுதிவிட்டேன். இவர் 50 ரூபாய் மட்டும் கொடுத்தால் மீதம் 50 ரூபாய் நான் தான் கட்ட வேண்டும்.” என்றார். நான் 25 ரூபாயை அக்காவிடம் கொடுத்தேன் . ஆனால் அவர் அதை அந்தத் தோழரிடம் கொடுக்க சொன்னார். ஆஹா .. காவல் துறையில் இவ்வளவு நல்ல அக்காவா என்று நினைத்துக் கொண்டு அந்த தோழரிடம் 25 ரூபாய்க் கொடுத்து விட்டு அக்காவிர்கு நன்றி சொல்லி கிளம்பினேன்.

கிளம்பும் போது அக்கா சொன்னாங்க. “ நகரில் மொத்தல் 21 இடத்தில் இது போன்ற தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே யாரும் தப்ப முடியாது. இனி தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டாம். மீறினால் ஒரு நாளைக்கு குறைந்தது 100 ரூபாய் நீங்கள் அபராதம் கட்டுவது உறுதி” என்றார்

அவர் சொன்னது போலவே நகரில் எங்கெங்கு காணினும் தலைக்கவச சோதனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் என்னை யாரும் நிறுத்தவில்லை. பின்ன.. தலைக்கவசம் இல்லாமல் ஓட்டினால் தானே நிறுத்துவார்கள். :))

பின்குறிப்பு : காலையில் இணையத்தில் என்னைக் கண்ட தாரணிபிரியா அக்கா “ டேய் தம்பி, என்னடா எப்போவும் அரசியல் பதிவா எழுதிட்டு இருக்க.. உன்னை திட்ட வேண்டும் போல் ஆசையா இருக்கு..ஒரு மொக்கை பதிவு போடுடா.. வந்து கும்மி அடிச்சிடறேன்” என்று பாசமாய் கேட்டதற்காகத் தான் இந்த மொக்கை.. எதுவாக இருந்தாலும் அவர திட்டிக் கொள்ளவும். :)

பிகு2 : என்னாலும் ஆங்கில சொற்கள் கலக்காமல் தமிழில் எழுத முடியும். :))
பிகு3 : ஆனாலும் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுத முடியாது. :))

மொக்கை போட்டவன்..

58 Comments:

said...

helmet is for your "PERSONAL" safety - :)

said...

mokkaiyo mokkai..
yen en time waste panra
naan kooda nee maati abaradham katirupanu nenachen ipdi escape ayitiye..cha

said...

//வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கிவன் நான் ஒருவனாகத் தான் இருப்பேன்.
//

History is very important. I did this in 2001.

said...

//நான் ஈரோட்டில் இருந்த 4 வருடங்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தான் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன்.//

இது தேச துரோகம், இறையாண்மை அந்த லிஸ்டுல வருமா? வரலைன்னா பரவா இல்ல ஓட்டலாம். :P

said...

:)

said...

thanks jeeves..but u ll be punished for the ulkuthu.. :(

------------

Aiz, dont talk too much.. u r always jealous on me dear.. :)) நான் அபராதம் கட்றது உனக்கு சந்தோஷமா.. கவனிக்கிறேன்.. :)

said...

இந்த டெம்ப்ளேட் சூப்பரா இருக்கு. ஆனா டைட்டில் என்னப்பா இது? முடியலை துப்பானந்தா முடியலை :(

said...

//நான் ஈரோட்டில் இருந்த 4 வருடங்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தான் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன்//

உங்க அறிவுக்கு நீங்க டூவீலர் இல்லாம கூட வண்டி ஒட்டலாம். (இந்த சின்ன பசங்க எல்லாம் ஒட்டுவாங்களே அந்த மாதிரி)

said...

//நான் ஈரோட்டில் இருந்த 4 வருடங்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தான் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன்//

உங்க அறிவுக்கு நீங்க டூவீலர் இல்லாம கூட வண்டி ஒட்டலாம். (இந்த சின்ன பசங்க எல்லாம் ஒட்டுவாங்களே அந்த மாதிரி)

said...

//பிறகு கோவையில் அலுவலகம் தொடங்க திட்ட்மிட்டதும், கோவையில் நம்ம தில்லாலங்கடி வேலை செல்லாது என்று ஓட்டுநர் உரிமம் பெற்றேன். //

வேற ஊரே கிடைக்கலயா தொழிலபதிரே எங்க ஊரு என்ன பாவம்பா செஞ்சது

said...

//இரவில் திரைப் படம் பார்க்க செல்வது, நண்பர்கள் வந்தால் அவர்களை அழைத்துவர செல்வது, தொடர்வண்டி நிலையம் செல்வது என முக்கிய்மான எல்லா இடங்களுக்கும் அடிக்கடி சென்றிருக்கிறென். //


நடந்து போயி இருப்பிங்க அதனாலதான் யாரும் விசாரிக்கலை

said...

//பார்ப்பதற்கு மிக நாகரிகமானவன் போல் கூட இருக்க மாட்டேன். //

யப்பா இத்தனை பெரிய பதிவுல ஒரே ஒரு உண்மை :)

said...

//தினமும் அதை ஈரோட்டிலிருந்து பேருந்தில் வரும் போது கொண்டுவந்து கோவையில் வாகனத்தில் செல்லும் போது உபயோகிப்பேன்.

//



பஸ்ல ஹெல்மெட் போட்டு வந்திங்களா :)

said...

//வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கிவன் நான் ஒருவனாகத் தான் இருப்பேன்.
//

இதை எல்லாம் பெருமையா வேற சொல்லிகிட்டு இருக்கிங்க‌

said...

//என்று கூச்சநாச்சமே இல்லாமல் பொய் சொன்னேன்//

என்னமோ மொத தடவை பொய் சொல்லற மாதிரி என்ன ஒரு பில்டப். வாயை திறந்தா பொய்தான்

said...

அது எப்படி இத்தனை வயசு ஆகியும் கொஞ்சம் கூட சங்கடபடாம எல்லா சின்ன புள்ளங்களையும் அக்கான்னு சொல்லறீங்க.

said...

அது எப்படி இத்தனை வயசு ஆகியும் கொஞ்சம் கூட சங்கடபடாம எல்லா சின்ன புள்ளங்களையும் அக்கான்னு சொல்லறீங்க.

said...

ஹீம் அந்த அக்காவால விளைஞ்ச ஒரே நன்மை என்னன்னா நீங்க ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஒட்டறதுதான். இந்த மூஞ்சிய பாக்கமா எதிர்ல வர்றவங்க தைரியமா வண்டி ஒட்டலாம். எத்தனை நாளைக்குதான் பயந்து பயந்து வண்டி ஒட்டறது/

said...

//பின்குறிப்பு : காலையில் இணையத்தில் என்னைக் கண்ட தாரணிபிரியா அக்கா “ டேய் தம்பி, என்னடா எப்போவும் அரசியல் பதிவா எழுதிட்டு இருக்க.. உன்னை திட்ட வேண்டும் போல் ஆசையா இருக்கு..ஒரு மொக்கை பதிவு போடுடா.. வந்து கும்மி அடிச்சிடறேன்” என்று பாசமாய் கேட்டதற்காகத் தான் இந்த மொக்கை.. எதுவாக இருந்தாலும் அவர திட்டிக் கொள்ளவும். :)
//

உங்களைத்தான் இப்ப எல்லாரும் திட்ட போறாங்க என்னை எல்லாம் யாரும் திட்ட மாட்டாங்க.

i am waiting for our pasa malar shree :)

said...

இப்பவாவது திருந்தினதுக்கு பாராட்டுக்கள்.

என்ன ஆகிவிடும் என்ற நினைப்புத்தான் பலரை தவறு செய்ய வைக்கிறது.

கோவையில் என் உறவினர் ஒருவர் தலைக்கவசம் இல்லாமல் வண்டி ஓட்டி எதிரில் வந்த வெறிநாய்க்காக வண்டியை திருப்ப கல்லில் தலை அடிபட்டு 1 மாதம் கோமாவில் இருந்து போய் சேர்ந்துவிட்டார்.

அவருக்கு ஒரே மகன் இந்த வருடம் தான் 10த் எழுதினான்.

said...

அட உதயக்குமார் நம்ம குருவா? :))

-----------
ஜோதி சார்,
இது மாநகர துரோகத்துல தான் வரும்..

(அய்யய்யோ.. கோவியாரே கோவை வரும்போது ஓம்காரர்கிட்ட ஒரு தாயத்து மந்திரிச்சிட்டு போய் நம்ம ஜோதிசார் இடுப்புல கட்டிவிடுங்க. அடங்கவே மாட்டேங்குறார்.. :) )

said...

நன்றி மெய்யாலுமே நலல்வரே.. :)

---------

நன்றி புதுகை அக்கா.. :)

உங்க சொந்தக்காரர் எதிர்ல வந்தது நான் இல்லை.. :(

said...

தாரணி அக்கா.. உங்க அகக்வுண்ட்ல பேலன்ஸ் ஏறிட்டே போகுது.. சீக்கிறமே அதிக வட்டி கிடைக்கும்னு நினைகிறேன். :)

said...

:) :) எவ்ளோ பெரிய்ய்யா பதிவு.. ஆனாலும் முழுதாக படித்தேன் !

said...

//நான் ஈரோட்டில் இருந்த 4 வருடங்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தான் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். //
சைக்கிள்க்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை

said...

//என்று ஓட்டுநர் உரிமம் பெற்றேன்//
அதுவே தில்லாலங்கடி வேலை ப‌ண்ணிதானே வாங்கி இருப்பீங்க‌;‍)

said...

//நான் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது ஒரு போக்குவரத்து/போக்காவரத்து காவலரும் என்னை விசாரித்ததில்லை//
வீட்டுக்குள்ள வாகனம் ஓட்டினா லைச‌ன்ஸ் கேக்க‌மாட்டாங்க‌;-))

said...

//பார்ப்பதற்கு மிக நாகரிகமானவன் போல் கூட இருக்க மாட்டேன்.//

அப்போ கொஞ்ச‌ம் நாகரிகமா இருப்பீங்க‌ளோ

said...

//நல்ல வேளை அவர் வாகனத்திற்கான சான்றிதல்கள் எதுவும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் சங்கு தான். :)//
ஆமா..ஆமா..அதுதான் திருட்டு வ‌ண்டி ஆச்சே:‍)))

said...

//வாகனத்தில் பின்னாடி அமர்பவரும் தலைக்கவசம் போட வேண்டும் என்பதால் .//
வாவ்!என்ன ஒரு க‌ட‌மையுண‌ர்ச்சி

said...

//ஒருவழியாய் அன்று தில்லாலங்கடி வேலை செய்து தப்பித்தேன்//
அன்று ம‌ட்டுமா?;‍)

said...

//ஆண்டுகால சந்தைப் படுத்துதல் துறையில் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரே சிறப்பம்சம் இது தான். யாராக இருந்தாலும் முகம் பார்த்ததுமே அவர் எப்படிப் பட்டவராக இருபபார் என ஓரளவுக்கு கணித்து விட முடிகிறது. //

இது உண்மைன்னா...க‌ண்ணாடி பாக்க‌றீங்க‌ இல்ல‌? அப்புற‌மும் எப்ப‌டி நானே கடவுள் சொல்லிகிட்டு சுத்த‌றீங்க‌?

said...

//என்று பாசமாய் கேட்டதற்காகத் தான் இந்த மொக்கை.. எதுவாக இருந்தாலும் அவர திட்டிக் கொள்ளவும். :)//
சே..சே..எவ்ளோ ந‌ல்ல‌ சான்ஸ் த‌ந்திருக்காங்க‌ ..ரொம்ப‌ தேங்ஸ் தாரணிபிரியா மேட‌ம்

said...

//-::- தீவிர பக்தர்கள் -::- //

இந்த‌ க‌ட‌வுள்க்கு நாம‌ தீவிர பக்தர்களாம்
ம‌க்க‌ளே..இதுக்குமேல‌யும் இந்த‌ பிளாக்கை ப‌ண்ண‌ணுமா? யோசிங்க‌:-)))

said...

//-::- தீவிர பக்தர்கள் -::- //

இந்த‌ க‌ட‌வுள்க்கு நாம‌ தீவிர பக்தர்களாம்
ம‌க்க‌ளே..இதுக்குமேல‌யும் இந்த‌ பிளாக்கை FOLLOW ப‌ண்ண‌ணுமா? யோசிங்க‌:-)))

said...

கடவுளுக்கு எதுக்கு ஓட்டுநர் உரிமம்? தலைக்கவசம்? அபராதம்?

said...

பொதுவாக வயதானவர்களிடம் காவலர்கள் ஓட்டுனர் உரிமம் கேட்பதில்லை, அதனால் தான் ஈரோட்டில் தப்பித்தீர்கள்! அங்கிள்!

said...

Podiponnu - பொடிப் பொண்ணு said...

:) :) எவ்ளோ பெரிய்ய்யா பதிவு.. ஆனாலும் முழுதாக படித்தேன் !
//

நான் ரீடர்ல படிச்சிக்கிறேன்.

said...

/
தாரணி பிரியா said...

//நான் ஈரோட்டில் இருந்த 4 வருடங்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தான் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன்//

உங்க அறிவுக்கு நீங்க டூவீலர் இல்லாம கூட வண்டி ஒட்டலாம். (இந்த சின்ன பசங்க எல்லாம் ஒட்டுவாங்களே அந்த மாதிரி)
/

ரிப்பீட்டு

said...

/
இய‌ற்கை said...

//நான் ஈரோட்டில் இருந்த 4 வருடங்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தான் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். //
சைக்கிள்க்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை
/
ரிப்பீட்டு

said...

இந்த ஒருமுறை மட்டும் விட்டுவிடுங்கள் அக்கா. இனி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டேன்..” என்று கூச்சநாச்சமே இல்லாமல் பொய் சொன்னேன்.

intha idathula naan mattum irunthu irunthen neenga avalavu than.
inemay lifela vadiya pathi nenachikuda pathu iruka mattenga .

said...

பார்ப்பதற்கு மிக நாகரிகமானவன் போல் கூட இருக்க மாட்டேன்.

ithu enna china pulla thanama .ithelam neega solli then engaluku thereyanuma

said...

எப்பிடியோ பொய் சொல்லனும்னு கிளம்பிட்டீங்க
பொய் சொல்லி தப்பிச்ச்டீங்க
இது ரொம்ப நாள் நடக்காது
அந்த அக்காவை நானும் தாரிணியும்
வந்து பாக்கலாம்னு இருக்கோம்
அப்போதான் உங்க வண்டவாளம்
தண்டவாளம் ஏறும்!!

said...

தாரணி பிரியா said...
//இரவில் திரைப் படம் பார்க்க செல்வது, நண்பர்கள் வந்தால் அவர்களை அழைத்துவர செல்வது, தொடர்வண்டி நிலையம் செல்வது என முக்கிய்மான எல்லா இடங்களுக்கும் அடிக்கடி சென்றிருக்கிறென். //


நடந்து போயி இருப்பிங்க அதனாலதான் யாரும் விசாரிக்கலை
//


Repeateeeeeeeeeeeeeeeeeeeeeai

said...

இந்த மாதிரி பேய் முழி முழிச்சிகிட்டு
ஏமாத்தற வேலை எல்லாம்
வேண்டாம் தலைகவசம்
இல்லாமல் போனா அடுத்த
முறை அந்த அக்கா உங்களுக்கு
வச்சிருக்கு வேட்டு இருங்க!!!

said...

//
பார்ப்பதற்கு மிக நாகரிகமானவன் போல் கூட இருக்க மாட்டேன்.
//

உண்மை விளம்பிட்டாறு இல்லே
அப்புறம் என்னா சந்தேகம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

இதைவிட சூப்பரா ஒரு அனுபவம் எங்கிட்டே இருக்குப்பா சஞ்சய்...கூடிய சீக்கிரம் பதிவில் காணலாம்......இவ்வ்ளோ நல்ல அக்காக்காள் கோயம்பதூரில் இருக்காங்களா?
அன்புடன் அருணா

said...

அம்மாடி இயற்கை.. தூக்கம் வரலைனா மொட்டை மாடில இருந்து தலைகீழா குதிச்சி உடற்பயிற்சி செய்ங்க. ஏன் இந்தக் கொலைவெறி? :((

said...

நன்றி பொடிபொண்ணு :)

நன்றி வெயிலான்.. கிகிகி.. ;))

வாலு - தனியாக கவனிக்கிறேன்.. :(

நன்றி குடுகுடுப்பை.. :)

நன்றி மங்களூர் மாமா..
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. சைண்டிஸ்ட் கிட்ட சொல்லி பெரிய பூரிக் கட்டையா வாங்கிவைக்க சொல்றென்.. :)

said...

அருணா அக்கா சீக்கிறமே பதிவு போடுங்க.. ஆவலுடன் வெய்ட்டிங்.. :)
ஆமாக்கா நல்ல அக்காஸ் எல்லாம் இருக்காங்க.. வேணும்னா பாப்பாவை கேட்டுப் பாருங்க.. :))

காயத்ரி.. உங்களுக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆய்டிச்சி.. உங்க ஏரியாவுல வந்து ரவுண்டு கட்றேன் இருங்க.. ;))

ரம்யா - கொலை வெறிப் ப்டையின் புது உறுப்பினரா? நல்லா இருங்க தாயி.. :(

said...

காயத்ரி.. உங்களுக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆய்டிச்சி.. உங்க ஏரியாவுல வந்து ரவுண்டு கட்றேன் இருங்க

enga eariya ulla varatha.jakkartha

said...

// gayathri said...

காயத்ரி.. உங்களுக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆய்டிச்சி.. உங்க ஏரியாவுல வந்து ரவுண்டு கட்றேன் இருங்க

enga eariya ulla varatha.jakkartha//

ஹய்யா.. ஜாலி... :))

said...

SanJaiGan:-Dhi said...
// gayathri said...

காயத்ரி.. உங்களுக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆய்டிச்சி.. உங்க ஏரியாவுல வந்து ரவுண்டு கட்றேன் இருங்க

enga eariya ulla varatha.jakkartha//

ஹய்யா.. ஜாலி... :))

enna ஜாலி... chinaapulla mathiri

said...

காயத்ரி,

உங்க ஏரியா வர வேணாம்னு சொன்னிங்க இல்ல.. அதான் ஜாலி சொன்னேன்.. :))

said...

//தாரணி பிரியா said...
//பின்குறிப்பு : காலையில் இணையத்தில் என்னைக் கண்ட தாரணிபிரியா அக்கா “ டேய் தம்பி, என்னடா எப்போவும் அரசியல் பதிவா எழுதிட்டு இருக்க.. உன்னை திட்ட வேண்டும் போல் ஆசையா இருக்கு..ஒரு மொக்கை பதிவு போடுடா.. வந்து கும்மி அடிச்சிடறேன்” என்று பாசமாய் கேட்டதற்காகத் தான் இந்த மொக்கை.. எதுவாக இருந்தாலும் அவர திட்டிக் கொள்ளவும். :)
//

உங்களைத்தான் இப்ப எல்லாரும் திட்ட போறாங்க என்னை எல்லாம் யாரும் திட்ட மாட்டாங்க.

i am waiting for our pasa malar shree :)//

பாவி அண்ணா... இத என்கிட்டே இருந்து மறைச்சிட்டான்.. :((

said...

//என்னாலும் ஆங்கில சொற்கள் கலக்காமல் தமிழில் எழுத முடியும். :))//

நீ எழுதுவ.. எங்களுக்கில்ல புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கு.. :((

said...

//ஆனாலும் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுத முடியாது. :))//

இப்ப சொன்னியே இது நியாயம்.. நல்ல புள்ளைக்கு அடையாளம்... ;))

said...

//கூச்சநாச்சமே இல்லாமல் பொய் சொன்னேன் //

அது என்ன புதுசா மாப்ள உனக்கு???

Tamiler This Week