இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comMonday, 6 October 2008
பெண்கள் வெட்கப்படுவது எப்போது? Not Adults Only
ஒரு பெண் தங்க நகை கடைக்கு முதல் முறை செல்லும் போது இருக்கும் கூச்சத்தை விட, அப்படி செல்லாத பெண்கள் ஒவ்வொரு முறையும் கவரிங் நகை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் பெரியது என்றே நினைக்கிறேன். நகைக்கடையில் வாங்கும் போது தன்னைவிட கூடுதல் எடையில் வாங்குபவர்களை பார்த்து கூச்சப் படுவார்கள்.
நம் இந்தியாவில் கவரிங் நகை கிடைக்கும் இடம் பெரும்பாலும் பேன்ஸி ஸ்டோர்கள்( Fancy Store ) தான், வீட்டின் அருகில் இருக்கும் கவரிங் நகை கடை, பாத்திரக் கடைகளில் கூட கிடைக்கும். ஆனாலும் தெரிந்த இடம் என்பதால் அங்கு வாங்க பலருக்கும் தயக்கம் இருக்கும்.
அறிமுகமில்லாத பேன்சி ஸ்டோர் எங்கிருக்கிறது என்று பார்பார்கள், அதன் பிறகு அந்த கடையில் யாராவது வளையல், ரிப்பன் வாங்க நிற்கிறார்களா என்று பார்ப்பார்கள், அதன் பிறகு யாரும் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு கடைக்கு அருகில் சென்றால் எதிர்பாராத அதிர்ச்சியாக அங்கு ஒரு ஆண் பணியாளர் இருப்பார். அவ்வளவுதான் அடுத்த கடைக்கு நடையைக் கட்டிவிடுவார்கள். இமேஜ் டேமேஜ் ஆய்டுமாம். அங்கு பெண் பணியாளர் இருந்தால் மட்டுமே வாங்குவார்கள், அவர் தரும் வரைக்கும் யாரும் கடைக்கு வேறு எதாவது வாங்க வந்துவிடுவார்களோ என்று திரும்பி திரும்பி பார்த்துக் கொள்வார்கள். தப்பித் தவறி ப்ராண்ட் பெயரைக் கடையில் இருக்கும் பெண் கேட்டுவிட்டால் அதற்கும் கூச்சம் வந்துவிடும், அதற்கெனவே சுறுக்கமான இரண்டு எழுத்து பெயர் இருக்கும் (KC - Kalyani Covering ...) அதை சற்று தயக்கத்துடனே சொல்லி வாங்குவதற்குள் மூச்சு வாங்குவார்கள், இந்த லட்சணத்தில் பல வகைக் கற்கள் பதித்து, ராசிக் கல் பதித்தது, புது டிசைன் என்கிற வகைகளெல்லாம் வேறு இருக்கும், அதை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் விலை அதிகமாக இருக்கும் என்பதால் சொல்லிக் கேட்கவும் பலருக்கு தயக்கமாகவே இருக்கும்.
தோழியின் பேன்சி ஸ்டோருக்கு செல்லும் போது இந்த காட்சிகளையெல்லாம் கவனித்து வந்திருக்கிறேன். அங்கே சிங்கையில் யாரும் அவ்வளவு கூச்சப் படுவது போல் தெரியவில்லை. பெரிய நகைக் கடைகளில் தங்க நகைகளுடன் சேர்த்து இடையிடையே போட்டுக்கொள்ள தேவையான அளவு அதனையும் சேர்த்து வாங்குவார்கள். பெரும்பாலும் ஆண்கள் தான் பில் போட்டுத் தருவார்கள். சிங்கை முணியாண்டி விலாஸில் (பெரும்பாலும் இந்தியர்கள் செல்லும் கடை) தரைத்தளத்திலேயே விதவிதமான கவரிங் நகைகள் வைத்திருக்கும் ஒரு பகுதி இருக்கும், யாராவது ஒரு பெண் அங்கு தைரியமாக நின்றாலே அவரை பலரும் ஒரு முறையேனும் முகத்தைப் பார்த்துவிட்டுச் செல்வார்கள்.
கவரிங் நகை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் தேவையற்றதாகவே தெரிகிறது. கவரிங் வாங்குவதற்கு இவ்வளவு தயக்கம் காட்டுவதால் தான் தங்கத்தின் விலை இந்த அளவு உயர்ந்து நிற்கிறது. அங்கே வெளிநாட்டில் எக்ஸ்க்ளூசிவ் கவரிங் நகைக் கடைகள் ஒரு சில இடங்களில் இருக்கும், அதனுள் சென்று வருபவர்கள் எவரைப் பார்த்தாலும் திருமணம் ஆனவர்களாகவே தெரிவார்கள். கல்யாணத்திற்கு பெற்ரோர் போட்ட நகை எலலால் சேட்டுக் கடையில் இருக்கும். வட்டிக் கடையில் அடகு வைத்தவர்களுக்கு மாற்று வடிகால், அது சரியா ? தவறா ? என்பது தனிமனித மனம் தொடர்புடையது. இருந்தாலும் கண்டிப்பாக அவற்றை யாராலும் கண்டு பிடிக்க முடியாது.
பெரும்பாலும் புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு கவரிங் நகை வாங்கச் செல்லும் போது தயக்கமும், கூச்சமும் இருக்கும், அதைத் தவிர்க்க,
'அடகு வைத்த' பெண்களுக்குத்தானே கவரிங் நகை தேவை, வாங்கும் போது 'என்னால் தங்கமும் வாங்க முடியும்' என்ற நினைப்பின் உற்சாகம் இருந்தால் கவரிங் நகை வாங்கப் போகும் போது கூச்சம் கண்டிப்பாக வராது ! :)
********
மங்களூரு: மங்களூரில், கவரிங் நகை வாங்கினால், "லாந்தர் விளக்கு' பரிசாக வழங்கப்படுகிறது. மக்களிடம் கவரிங் நகை பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரிக்க, வித்தியசமான பிரசார முறைகளை, கல்யானி கவரிங் கார்பரேஷன் (க.க.கா.,) என்ற கவரிங் நகை நிறுவனம், கையாண்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த ஆண்டு, கவரிங் நகை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை அறிய, சர்வே நடத்தியது. அதில், கடைக்கு சென்று கவரிங் நகை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவது தெரிய வந்தது. கவரிங் நகையை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. - இது மங்களூர் டைம்ஸ் செய்தி
இந்த திட்டம் தமிழ் நாட்டிலும் செயல்படுத்தப்பட்டால் நல்லது, தமிழக மக்கள் தான் மின்சாரம் இல்லாமல் கும்மிருட்டில் அவதிக்குள்ளாகுறார்கள். :)
...........இந்த பதிவுக்கும் ”அந்த” பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
66 Comments:
/8கல்யாணத்திற்கு பெற்ரோர் போட்ட நகை எலலா சேட்டுக் கடையில் இருக்கும்./
oh..ithukkuthan kalayanathula nagai podaratha?!!!!:-))
:))))))
/
...........இந்த பதிவுக்கும் ”அந்த” பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
/
ஆமாம்பா ஆமாம்
ஜஞ்ஜய்கு நான் கேரன்டி
தலைப்பு சூப்பர்!!
me the 5th
/
கவரிங் நகை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் பெரியது என்றே நினைக்கிறேன்
/
கூச்சம் பெரியது சின்னது எப்படி அளக்குறது அதுக்கு எதும் மீட்டர் இருக்கா??
அப்பாவி
கோவிந்து
@ராப்பு
நீங்க கவரிங் நகை வாங்கிருக்கீங்களா கூச்சப்பட்டீங்களா??
/
நம் இந்தியாவில் கவரிங் நகை கிடைக்கும் இடம் பெரும்பாலும் பேன்ஸி ஸ்டோர்கள்
/
அரிய தகவல்
சமூகம் உங்களை நன்றி கூர்கிறது.
இதை பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மிகவும் அவசியம்.
10
தலைப்பு சூப்பர்!!
வழிமொழிகிறேன்
:) :)
தலைப்ப பாத்தா எதோ 'சப்ப' மேட்டரா இருந்தாலும் கருத்தாழம் மிக்க பதிவு
பதிவு ஆசிரியருக்கு ஒரு கேள்வி
வெட்கம் என்றால் என்ன?
பதிவு ஆசிரியருக்கு ஒரு கேள்வி
வெட்கம் என்றால் என்ன? கூச்சம் என்றால் என்ன?
பதிவு ஆசிரியருக்கு ஒரு கேள்வி
வெட்கம் என்றால் என்ன? கூச்சம் என்றால் என்ன?
இரண்டும் வேறு வேறா??
பதிவு ஆசிரியருக்கு ஒரு கேள்வி
வெட்கம் என்றால் என்ன? கூச்சம் என்றால் என்ன?
இரண்டும் வேறு வேறா??
வேறு வேறு என்றால் எப்படி கண்டறிவது??
தலைப்பில் வெட்கப்படுவது என எழுதிவிட்டு கூச்சப்படுவார்கள் என பதிவில் இருப்பதால் குழப்பமாக இருக்கிறது
அதனால்தான் கேட்கிறேன்
ஒருவேளை சிறிய வெட்கம் கூச்சமா?
இல்லை பெரிய கூச்சம் வெட்கமா?
அப்படி எனில் சிறிதுமல்லாத பெரிதுமல்லாத வெட்கமோ கூச்சமோ எனில் அதுக்கு வேறு எதும் பெயர் உண்டா??
பதிவின் ஆசிரியர் பதில் சொல்லாததை பார்த்தால் தெரியாத விசயத்தில் தலையிட்டு மூக்குடைந்தது போல் உள்ளது
எத்தினி கமெண்ட் வந்தால் ஜூடான இடுக்கை ஆகும்??
25
பதிவில் ஒரு மூலையில் வெக்கப்படும் நயந்தாரா படம் போட்டிருந்தால் பதிவுக்கு பொருத்தமாக அருமையாக இருந்திருக்கும்.
///மங்களூர் சிவா said...
பதிவில் ஒரு மூலையில் வெக்கப்படும் நயந்தாரா படம் போட்டிருந்தால் பதிவுக்கு பொருத்தமாக அருமையாக இருந்திருக்கும்.////
அண்ணே! நீங்க இன்னும் முடிக்கலையா? அடங்குங்க... இல்லைன்னா அடக்கப்படுவீங்க.. :)))
//
தமிழ் பிரியன் said...
அண்ணே! நீங்க இன்னும் முடிக்கலையா? அடங்குங்க... இல்லைன்னா அடக்கப்படுவீங்க.. :)))
//
அடக்கப்பட்டாலுமந்தாஅடக்கி வாசிப்பதாய் நடிப்பது ரங்கமணிகளுக்கு கைவந்த கலை என்பதை கற்று உணர்ந்துவிட்டேன்!!
நோ பலாப்பழம்
ச்ச
நோ ப்ராப்ளம்
:))
//
தமிழ் பிரியன் said...
அண்ணே! நீங்க இன்னும் முடிக்கலையா? அடங்குங்க... இல்லைன்னா அடக்கப்படுவீங்க.. :)))
//
அடக்கப்பட்டாலும் அடக்கிவாசிப்பதாய் நடிப்பது ரங்கமணிகளுக்கு கைவந்த கலை என்பதை கற்று உணர்ந்துவிட்டேன்!!
நோ பலாப்பழம்
ச்ச
நோ ப்ராப்ளம்
:))
ஹா ஹா ஹா, சூப்பர். அதைப் படிச்சப்பவே யாராவது இப்படி ஒன்னு எழுதுவீங்கன்னு தெரியும், ஆனா இந்தளவுக்கு ஒத்துப்போரா மாதிரி அதேசமயம் சம்பந்தமே இல்லாத மேட்டர கையில எடுத்ததுதான் சூப்பர்.
ஆனா இதுல சொல்லிருக்க ஒவ்வொரு வார்த்தையும் உண்மையோ உண்மை:):):)
//நீங்க கவரிங் நகை வாங்கிருக்கீங்களா கூச்சப்பட்டீங்களா??//
நானாவது இதுக்கெல்லாம் கூச்சப்படறதாவது? நான் இங்க ரோஷத்துல கொஞ்சமே கொஞ்சம் நகை தான் எடுத்துட்டு வந்தேன், அதால கவரிங், ஒயிட் அண்ட் ப்ளாக் மேட்டல்தான் என்கிட்டே ஜாஸ்தி.
//வெட்கம் என்றால் என்ன?//
அது கிலோ என்ன விலை?
//பெரிய கூச்சம் வெட்கமா? இல்லைஒருவேளை சிறிய வெட்கம் கூச்சமா?//
இதைப்பத்தின அறிய தகவல்கள் தெரிஞ்சிக்கணும்னா, ஒரு கவரிங் நகையை அடகுக் கடைக்கு கொண்டு செல்லுங்கள். அங்கு பொறுப்பில் உள்ளவர், தங்களுக்கு சிறப்பான விளக்கம், ஜென்மஜென்மத்துக்கும் மறக்காதவகையில் கொடுப்பார்.
//பதிவில் ஒரு மூலையில் வெக்கப்படும் நயந்தாரா படம் போட்டிருந்தால் பதிவுக்கு பொருத்தமாக அருமையாக இருந்திருக்கும்//
மூலையில் நயந்தாரா படம் போடறது இருக்கட்டும், விஷயம் தெரிஞ்சா வீட்ல நாலு போடு போட்டு, ஒரு மூலையில் உக்கார வெப்பாங்களே, அதப்பத்தி யோசிச்சீங்களா?
அதர் ஆப்ஷன் இல்லாமையால் கும்மி புறக்கணிப்பு போராட்டம் நடத்துகிறோம்.
அடா...அடா...அடா...அடா...!!!
என்ன ஒரு சிந்தனை!!!
என்ன ஒரு பதிவு!!!
என்ன்ன்னா பின்னூட்டங்கள்!!!
@ ராஜி : அப்டிதான்னு நினைக்கிறேன்.. இல்லைனா சவரன் கணக்குல கிலோ கணக்குல வாங்கி என்னத்த பண்ணப் போறாங்க? :)
---------------------------
நன்றி ஜெகதீசன்.. என்ன கஞ்சத்தனம்.. தாராளமா 4 வார்த்தைல பின்னூட்டம் போடறது..இன்னும் 16 நாள் தானே .. ஊருக்கு வாங்க கவனிக்கிறேன் :)))
@ மங்களூர் முன்னால் மைனர் :
//ஆமாம்பா ஆமாம்
ஜஞ்ஜய்கு நான் கேரன்டி//
அப்போ.. ப்ரீத்திக்கு நான் கேரண்டி :))
//தலைப்பு சூப்பர்!!//
தேங்க்ஸ் மாம்ஸ்.. :)
//கூச்சம் பெரியது சின்னது எப்படி அளக்குறது அதுக்கு எதும் மீட்டர் இருக்கா??
அப்பாவி
கோவிந்து//
இதெல்லாம் எதோ புது வார்த்தைகளா இருக்கு.. அர்த்தம் தெரிஞ்சிட்டு வந்து அளக்கறது எப்டினு சொல்றேன்.. :))
//தலைப்ப பாத்தா எதோ 'சப்ப' மேட்டரா இருந்தாலும் கருத்தாழம் மிக்க பதிவு//
மிக்க நன்றி :)
//பதிவு ஆசிரியருக்கு ஒரு கேள்வி
வெட்கம் என்றால் என்ன?//
எதோ ஒரு நாட்டின் தலைநகரம் என்று நினைக்கிறேன்.. :))
// மங்களூர் சிவா said...
பதிவு ஆசிரியருக்கு ஒரு கேள்வி
வெட்கம் என்றால் என்ன? கூச்சம் என்றால் என்ன?//
வெட்கம் - ஒரு நாட்டின் தலைநகரம்.. கூச்சம் அந்த நாட்டின் பெயர்.. :)
/வெட்கம் என்றால் என்ன? கூச்சம் என்றால் என்ன?
இரண்டும் வேறு வேறா??//
ஒன்றுக்குள் இரண்டும் வேறு.. :)
//இரண்டும் வேறு வேறா??
வேறு வேறு என்றால் எப்படி கண்டறிவது?//
சோழி உருட்டி கண்டுபிடிக்கலாமாம்.. :)
// மங்களூர் சிவா said...
தலைப்பில் வெட்கப்படுவது என எழுதிவிட்டு கூச்சப்படுவார்கள் என பதிவில் இருப்பதால் குழப்பமாக இருக்கிறது//
பதிவுக்கு தொடர்பு இருப்பது போல் தலைப்பு வைக்க சொல்லும் உங்களது தவறான வழிகாட்டுதலை கன்னாபின்னாவென கண்டிக்கிறேன்.. :))
// மங்களூர் சிவா said...
அப்படி எனில் சிறிதுமல்லாத பெரிதுமல்லாத வெட்கமோ கூச்சமோ எனில் அதுக்கு வேறு எதும் பெயர் உண்டா??//
இந்து அலுவலகத்தில் இதை சொல்லித் தருவதில்லையா? :)
//மங்களூர் சிவா said...
பதிவின் ஆசிரியர் பதில் சொல்லாததை பார்த்தால் தெரியாத விசயத்தில் தலையிட்டு மூக்குடைந்தது போல் உள்ளது//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
//மங்களூர் சிவா said...
எத்தினி கமெண்ட் வந்தால் ஜூடான இடுக்கை ஆகும்??//
நாம என்ன கர்மத்த எழுதினாலும் தான் சூடான இடுகைல வந்துடுமே.. இதுவும் வரும்.. :))
//பதிவில் ஒரு மூலையில் வெக்கப்படும் நயந்தாரா படம் போட்டிருந்தால் பதிவுக்கு பொருத்தமாக அருமையாக இருந்திருக்கும்.//
ஒரு மூலையில் என்ன 4 மூலையிலும் கூட,...ஏன் பதிவு முழுக்கக் கூட போட நான் தயார்..என்னால் அது முடியும்.. உ வெட்கப் பட உங்க நயந்தாரா தயாரா? அது அவரால் முடியுமா? :))
// rapp said...
me the 5th//
அநியாயமா மிஸ் பண்ணிட்டிங்களே தல.. சமீபமா என் பதிவுகளுக்கு நீங்க தான் முதல் எண்ட்ரி தருவீங்க.. இப்டி லேட் பண்ணிட்டிங்களே.. :(
// தமிழ் பிரியன் said...
அண்ணே! நீங்க இன்னும் முடிக்கலையா? அடங்குங்க... இல்லைன்னா அடக்கப்படுவீங்க.. :)))//
எச்சுச்சு மீ மிஸ்டர் தபிரி.. மொதல்ல பதிவுக்கு கமெண்ட் போடுங்க.. அப்பாலிக்கா பின்னூட்டத்துக்கு கமெண்ட் போடலாம்.. :))
// rapp said...
ஹா ஹா ஹா, சூப்பர். அதைப் படிச்சப்பவே யாராவது இப்படி ஒன்னு எழுதுவீங்கன்னு தெரியும், ஆனா இந்தளவுக்கு ஒத்துப்போரா மாதிரி அதேசமயம் சம்பந்தமே இல்லாத மேட்டர கையில எடுத்ததுதான் சூப்பர்.//
நன்றி தல.. :)
//நான் இங்க ரோஷத்துல கொஞ்சமே கொஞ்சம் நகை தான் எடுத்துட்டு வந்தேன், அதால கவரிங், ஒயிட் அண்ட் ப்ளாக் மேட்டல்தான் என்கிட்டே ஜாஸ்தி.//
என்னாது ரோஷ்மா? ச்ச.. ச்ச.. இவ்ளோ மோசமா தல நீங்க? :))
// rapp said...
//வெட்கம் என்றால் என்ன?//
அது கிலோ என்ன விலை?//
அதானே.. :)
ராப் :
//ஜென்மஜென்மத்துக்கும் மறக்காதவகையில் கொடுப்பார்.//
:)))))))))))))
//விஷயம் தெரிஞ்சா வீட்ல நாலு போடு போட்டு, ஒரு மூலையில் உக்கார வெப்பாங்களே, அதப்பத்தி யோசிச்சீங்களா?//
வீட்ல போனா தான் டமால்னு கால்ல விழுந்துடறாரே.. :))
//ஜோசப் பால்ராஜ் said...
அதர் ஆப்ஷன் இல்லாமையால் கும்மி புறக்கணிப்பு போராட்டம் நடத்துகிறோம்.//
அதர் ஆப்ஷன் போட்டா.. ரூம் போட்டு யோசிச்சி கெட்ட வார்த்தைல திட்றதுக்கு ஒரு அனானிக் கழகமே இருக்கு ஜோசப்.. :))
//விஜய் ஆனந்த் said...
அடா...அடா...அடா...அடா...!!!
என்ன ஒரு சிந்தனை!!!
என்ன ஒரு பதிவு!!!
என்ன்ன்னா பின்னூட்டங்கள்!!!//
அண்ணா.. ரொம்ப நன்றிங்கணா.. :))
49
50:):):)
என்னமா யோசிக்கிறாங்களப்பா
சஞ்ஜெய்,
என்னச் சொல்றதுன்னே தெரியலை, பதிவைப் படித்து சிரித்த சிரிப்பில் கண்களில் கண்ணீரே பெருக்கெடுத்துவிட்டது.
கலக்கி இருக்கிங்க.
:)
ஹைய்யோ ஹைய்யோ.....
//..........இந்த பதிவுக்கும் ”அந்த” பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... //
நம்பிட்டேன்:-)))))))))))))
நகை என்ன நகை.. இதுக்கு எதுக்கு இவ்வளோ பில்ட்-அப்ன்னு தெரியல.
எவ்வளவுக்கு எவ்ளோ சிம்பளா இருக்கணுமோ அப்படி போட்டாலே போதும். That's y I dont have any interest in gold. போடுற ஒன்னு ரெண்டு நகையும் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் மட்டுமே!
அப்படி போடணும்ன்னு ஆசை இருக்கிறவங்க அவங்க வசதிக்கேட்ப தங்கமோ, சில்வரோ, பித்தளையோ கவரிங்கோ, fancy type சம்பத்தப்பட்டவைகளோ போடலாம். எல்லாம் அவரவர்க்கு எது comfortable-ஆ feel பண்றாங்களோ அப்படி..
ஆனால், போட்டிருக்கிறது (கவரிங்கா இருந்தாலும்) தங்கமா ஜொலிஜொலிச்சா, நீங்க அதை போட்டுட்டு (டீவீல வர்ற நகைக்கடை விளம்பர மாடல்) ரோட்டுல நடந்து போகும்போது பார்க்கிற எவனாவது கண்ணு உறுத்தும். அடுத்த நிமிஷம், நீங்க போட்டிருக்கிற உங்க நகை கழுத்திலும், அகதிலும், மூக்கிலும், கைகளிலும் மிஸ்ஸிங். தங்கமா மின்னிட்டிருக்கிற இடத்துல சிவப்பா உதிரம்தான் ஓடும்..
எங்க ஊரையே எடுத்துப்போமே! வழிப்பறி கொள்ளைக்காரன்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.. தமிழ் பொண்ணுங்க கழுத்துல போட்டிருக்கிற செயினை வைத்தே அது தாலியா, ஜஸ்ட் ஒரு செயினா, பித்தளையான்னு கண்டு பிடிச்சிடுறானுங்க. அதைலேயே அது எவ்ளோ மதிப்பு தேறும்ன்னும் கணக்கு போட்டுக்கிறாங்க.
அது தாலின்னு தெரிஞ்சா மறுக்கா கணக்கு கூட போட மாட்டாங்க.. ஏன்னா தாலிலதான் தாலிக் கொடி, அது இதுன்னு என்னென்னமோ ஐட்டம் தொங்குமாம். ஒன்னு பறிச்சாலே நல்ல லாபம்ன்னு அதுல கை வைக்கிறாங்க. அதுவும் நல்ல மொத்தமாகவோ, இல்ல பறிக்கும்போது அது போகாம நாமளும் ஒரு பக்கம் இழுக்கும்போது, நமக்குதான் காயம் ஏற்படுது.. (இப்படி ஒரு சம்பவம் நடந்து ஒரு அம்மாவுக்கு கழுத்துல வெட்டே பட்டிருக்கு).. இதனாலேயே இப்போ உள்ள பொண்ணுங்க ஜஸ்ட் மஞ்ச கயிறை மட்டுமே போட்டுக்கிறாங்க (ஆசையா அம்மா வாங்கிப்போட்ட தாலியை வீட்டு பீரோ அல்லது பாங்க் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு)..
வேற என்ன?
கையில மோதிரமா? நீங்கள் கொள்ளை அடிக்கும்போது அதை கழுட்ட முடியலைன்னா, உங்க விரலையே தியாகம் பண்ண வேண்டி இருக்கும்..
காதில் தோடா?
மறுக்கா காது கேட்க அங்கே காதே இருக்காது..
ரிஸ்க் உங்களுக்கு ரஸ்க் சாப்பிட மேட்டரா இருந்தாலும்,
இதெல்லாம் தேவையில்லாத ரிஸ்க்! தேவையா மக்கள்ஸ்?
(சஞ்சய், பின்னூட்டம் பதிவு அளவுக்கு ரொம்ப நீட்டா போச்சுன்னு நினைக்கிறேன்.. நீங்கதான் சகிச்சுக்கிட்டு படிக்கணும். :-P)
/கவரிங் நகை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் பெரியது என்றே நினைக்கிறேன். //
இல்லை , அங்கேயும் சிரித்து கொண்டே தான் இருக்கிறார்கள்
//நகைக்கடையில் வாங்கும் போது தன்னைவிட கூடுதல் எடையில் வாங்குபவர்களை பார்த்து கூச்சப் படுவார்கள்.//
உள்ளே போகும் போதே அவங்க எடையை பார்த்துகுவாங்க்களா
//தெரிந்த இடம் என்பதால் அங்கு வாங்க பலருக்கும் தயக்கம் இருக்கும்.//
அங்கே தான் கடன் கிடைக்கும் என்பதையும் மறந்து விடவேண்டாம்
பதிவு ரொம்ப மொக்கையப்பா
என்னால முடியல
கவரிங் சரக்கு அதாம்பா போலி சரக்கு அடிச்சா மாறி ஆகிருச்சு
:)
நல்லா யோசிக்கிறாங்கயா ரோம் போட்டு :)
சூப்பரப்பூ
hmm.. enna irundhaalum engoottu thangamani maathiri varumaa ?athu vEnum ithu vEnumnu nachcharippunnaa ?
ellaam oru kuduppinai saamigala
( ammni pakkaththula ninnukittu sonna maathiriyE type pannittEn )
50க்கு வாழ்த்துக்கள் ராப் :)
--------
நன்றி டொன்லீ :)
--------
மிக்க நன்றி கோவியாரே.. ரொம்ப சீரியசா நீங்க போட்ட பதிவை நக்கலடிச்சதுக்கு எங்க கோச்சிப்பிங்களோனு பயந்தேன்.. :)
உங்க பதிவிலும் இணைப்பு குடுத்ததுக்கு ரொம்ப நன்றி..
நீங்க இவ்ளோ ரசிச்சதுக்கு காரணம் நீங்க தான் கோவியாரே.. இந்த பதிவுல 50 வார்த்தைகள் கூட என்னோடது இல்ல.. உங்க பதிவை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி சில வார்த்தைகள் மட்டுமே மாற்றினேன்.. மற்றபடி பதிவு உங்களோட எழுத்து நடை தான்.. :))
நன்றி துளசியம்மா... :)
-----------
யக்கா மைஃப்ரண்டு.. வழக்கமான ஒரு மொக்கை பதிவுக்கு இம்புட்டு பெரிய சீரியஸ் பின்னூட்டமா? :)))
எனக்கு கூட தங்கத்தை பார்த்தாலே வாந்தி வாந்தியா வரும்.. சுத்தமா பிடிக்காது.. :)
இத உங்க ப்ளாக்ல இத பதிவா போட்டிருந்தா இந்த மாத கோட்டா முடிஞ்சிருக்குமே.. :)
---------------
//வால்பையன் said...
கவரிங் சரக்கு அதாம்பா போலி சரக்கு அடிச்சா மாறி ஆகிருச்சு//
இதை கண்டுபிடிக்க 6 பின்னூட்டம் போட வேண்டி இருக்கே வால்.. :)))
நன்றி வால்.. :)
---------
நன்றி தூயா... உங்க ப்ளாக்ல எவ்ளோ கமெண்ட் போட்டிருக்கேன்... நீங்க என்னடான்னா கடனுக்கு ஒரு ஸ்மைலி போட்டிருக்கிங்க.. அங்க வந்து கவனிக்கிறேன்.. :)))
---------
அப்துல்லா அண்ணாச்சி..
ரூம் போட்டு யோசிச்சி கேள்வி பட்டிருக்கேன்.. அது என்ன அண்ணாச்சி ரோம் போட்டு? :)))
தப்பு கண்டு பிடிச்சிட்டோம்ல.. :))
// Jeeves said...
hmm.. enna irundhaalum engoottu thangamani maathiri varumaa ?athu vEnum ithu vEnumnu nachcharippunnaa ?
ellaam oru kuduppinai saamigala
( ammni pakkaththula ninnukittu sonna maathiriyE type pannittEn )//
ரொம்ப நல்லவர் மாதிரியே நடிக்கிறார் பாருங்க.. சாப்ட பயன்படுத்தற தட்டை கூட கழுவாத இந்த பெரிசு ஊட்டம்மா சொல்ற மாதிரி டைப் பண்ணுதாம்.. எல்லாம் நடிப்பு.. :))
Post a Comment