இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comFriday 10 October, 2008
ஜெயலலிதாவுக்கு வைகோ சவால்
Lables
அரசியல்
”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்.”
- ஏப்ரல் 2002ல் தமிழக சட்ட்ப் பேரவையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தீர்மானம்.
பிரபாகரனை வீழ்த்த யாராலும் முடியாது.எத்தனை நாட்டு ராணுவம் துணை நின்றாலும் இலங்கை ஜெயிக்க முடியாது.
- இந்தியப் பிரஜை வைகோ முழக்கம்..
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
பொருத்தமான நேரத்தில் வெளியிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.
//பிரபாகரனை வீழ்த்த யாராலும் முடியாது.எத்தனை நாட்டு ராணுவம் துணை நின்றாலும் இலங்கை ஜெயிக்க முடியாது.-வைகோ //
பின்பு ஏனாம் இவ்வளவு கஷ்டப்படுகிறார்?
yeppidi sanjai!..yeppidi ithellam..ivlo memory power ah ungalukku!..:-))
அரசியல், சகஜம் என்ற இரு வார்த்தைகளை வைத்து கவுண்டமணி பாஷையில் ஒரு வாக்கியம் எழுதி படித்துக் கொள்ளவும்.. :)))
இதுமாதிரி நாட்டுல ஏகப்பட்ட காமெடி இருக்கு தல :))))))))))))
"இருவரும் அவரவர் நிலைப்பாப்பாடீல் இருக்கிறார்கள். இதில் என்ன காமெடி என்று புரியவில்லை!!!! இன்றும் ஜே விடுதலைபுலிகளுடைய அரசியலை ஆதரிக்கவில்லை. வைகோ ஆதரிக்கிறார்" இது உலகறிந்த விஷயந்தானே.
காமெடி இல்லை சங்கர்.கூட்டணித் தலைவி பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்கிறார். ஆனால் வைகோ பிடிக்க முடியாது என்கிறார். அதுவும் எந்த நாட்டின் துணையுடனும்.
இலங்கை பிரஜயாக இருந்து இதை சொல்லி இருந்தால் யாரும் கண்டுக்க போறதில்லை. இவர் இந்திய பிரஜை. எந்த நாட்டாலும் முடியாது என்றால் இந்தியாவாலும் என்று தான் அர்த்தம். பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கா இல்லையா என்பது வேறு விஷயம்.ஆனால் ஒரு இந்தியனாக இருந்துக் கொண்டு தன் நாட்டை இழிவுபடுத்துவது என்ன நியாயம் என்று தான் புரியவில்லை. இவர் இந்தியனா இல்லை இலங்கைவாசியா?. இது இந்தியாவுக்கும் வைகோவை பின்பற்றுபவர்களுக்கும் கேவலம்.
ada pongayya...
ippadi paartha niraiya savaal edukkalaam.
thaathaa vida savaala...hyyo hyyo
"நல்ல காமெடி"
இது பழமொழி இல்லையே
அப்புறம் என் டவுசர அவுத்துருவாங்க
"இருவரும் அவரவர் நிலைப்பாப்பாடீல் இருக்கிறார்கள். இதில் என்ன காமெடி என்று புரியவில்லை!!!! இன்றும் ஜே விடுதலைபுலிகளுடைய அரசியலை ஆதரிக்கவில்லை. வைகோ ஆதரிக்கிறார்" இது உலகறிந்த விஷயந்தானே.
///
அதெல்லாம் உலகறிந்த விஷயம்தான்...இப்படி தொடர்ச்சியாக ஈழத்தமிழர்க்ளை எதிர்த்து வந்துவிட்டு , இன்று திடீரென ஒரு அறிக்கை மூலம் ஈழத்தமிழரை உய்விக்க வந்த ஜெயல்லிதா துரோகி இல்லையாம்.....ஆனால் தன்னாலான முயற்சிகளை எடுக்கும் கலைஞர் துரோகியாம் , அதனால் அவர் நடத்தும் அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்களாம்...எனக்கு வை.கோ பற்றிய கவலை எல்லாம் இல்லை...இந்த கண்ணப்பன் , இன்றைக்கும் சொந்த செல்வாக்கில் எங்கள் தொகுதியில் நின்றால் ஜெயிக்கும் கண்ணப்பன் இப்படி நாசமாக போறாரே....
நன்றி முதல் அனானியாரே.. :)
----------------
ஹிஹி.. நன்றி ராஜி.. என் மெமரி பவரை பாராட்டிய முதல் ஆள் நீங்க தான்.. :)
-----------------
நன்றி வெண்பூ.. ஆனால் புனிதப் பசு என்று கொண்டாடப் படுபவர்களுக்கும் சகஜம் தானா? இவர்கள் பிழைப்பு நடத்த பாதிக்கப் படும் மக்களை ஏன் இழுக்கிறார்கள். இப்படி மாற்றி மாற்றி சவடால் பேசுவதோடு நில்லாமல் அந்த மக்களுக்காக என்ன கிழித்திருக்கிறார்கள்?
ஆனாலும் வைகோ சொல்லி இருப்பது ஜெயலலிதாவுக்கு மட்டும் சவால் இல்லை.. இந்தியாவுக்கும் தான்.. மேலே கடைசி அனானியின் பின்னூட்டம் பாருங்க.. அதில் நானும் ஒத்துப் போகிறேன்.
நன்றி அப்துல்லா அண்ணாச்சி.. நம்மள வச்சி தான் அந்த காமெடியே பண்றாங்க.. அதான் பிரசனை.. :)
------------------
நன்றி சங்கர்
//இன்றும் ஜே விடுதலைபுலிகளுடைய அரசியலை ஆதரிக்கவில்லை. வைகோ ஆதரிக்கிறார்" இது உலகறிந்த விஷயந்தானே.//
இவர்கள் வேறு எந்த விஷயத்தில் ஒத்துப் போகிறார்கள் என்று ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள்? ஒரு அதி முக்கிய விஷயத்தில் எதிர் எதிர் நிலைபபாடு இருப்பவர்கள் ஒன்றாய் அரசியல் செய்வதன் நோக்கம் என்ன?
------------------------
நன்றி வால்.. :))
-------------------------
//எனக்கு வை.கோ பற்றிய கவலை எல்லாம் இல்லை...இந்த கண்ணப்பன் , இன்றைக்கும் சொந்த செல்வாக்கில் எங்கள் தொகுதியில் நின்றால் ஜெயிக்கும் கண்ணப்பன் இப்படி நாசமாக போறாரே....//
இந்தோனேஷியால இருந்து எப்போ வரீங்க மதி? நாம 2 பேரும் அவர் வீட்டுக்கு போய் எடுத்து சொல்லி திருத்துவோம்.. தனித்து நின்னு ஜெயிக்கிற அளவுக்கு செல்வாக்கு இருந்தா வீரபாண்டியார் மாதிரி எனக்கொன்னு என் பையனுகொன்னுனு சீட் வாங்குவாரே.. அப்போ பொ.பழனிசாமியும் பைந்தமிழ்பாரியும் என்ன செய்வாங்க.. :))
////இப்படி தொடர்ச்சியாக ஈழத்தமிழர்க்ளை எதிர்த்து வந்துவிட்டு , இன்று திடீரென ஒரு அறிக்கை மூலம் ஈழத்தமிழரை உய்விக்க வந்த ஜெயல்லிதா துரோகி இல்லையாம்.....////
ஜெயலலிதா ஈழத்தமிழர்களை எதிர்க்கிறாரா அல்லது புலிகளது ஆயுதப் போராட்டத்தை எதிற்கிறாரா என்ற தெளிவு தேவை.
///ஆனால் தன்னாலான முயற்சிகளை எடுக்கும் கலைஞர் ///
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் அவரால் முடிந்தது ஒரு இரங்கல் செய்தியும்,தமிழனை விட்டு தந்தி அடிக்கச் சொல்வதும் 5 வருடங்களுக்கு பிறகு ஒரு அனைத்துக் கட்சி கூட்டமும் மட்டும்தானா? என்பதையும் எண்ணிப் பாருங்கள்.
///அதனால் அவர் நடத்தும் அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்களாம்///
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முன்னமேயே கூட்டி-அதாவது எதிர்கட்சிகளான அதிமுக முதல்,கம்யூனிஸ்டுகள் மற்றும் நேற்று கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் வரை தங்கள் வரையிலான போராட்டம் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்க , அதற்கு ஆதரவு பெருகி விடுமோ என்ற கவலையில் தான் ஏதோ நடவடிக்கை எடுப்பதாக கண்துடைப்பு நாடகம் நடத்த கூட்டப் படும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிரணியினரும் ஆதரவளித்து இவரது செல்வாக்கை ,ஓட்டு வங்கியை வளப்படுத்த அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது ? இலங்கைத்தமிழர் பிரச்சினையில் தன்னுடைய உண்மையான கவலையை உலகுக்குணர்த்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தலைமையை அதிமுகவும் மதிமுகவும் கூட ஒத்துக்கொள்ளும் யாருக்காவது அளிக்கட்டுமே பார்க்கலாம்.அப்போதும் அவர்கள் கலந்து கொள்ள முன்வரவில்லை யெனில் தாமாகவே அன்னியப்பட்டுப் போய் விடுவார்களல்லவா?
//இவர்கள் வேறு எந்த விஷயத்தில் ஒத்துப் போகிறார்கள் என்று ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள்? ஒரு அதி முக்கிய விஷயத்தில் எதிர் எதிர் நிலைபபாடு இருப்பவர்கள் ஒன்றாய் அரசியல் செய்வதன் நோக்கம் என்ன?///
இதை நையாண்டியாகக் கேட்கிறீர்களா அல்லது சீரியசாகவா என்று அவதானிக்க முடியவில்லை.இருந்தாலும் பதில்
" ஓட்டு அரசியல்".
இதுதான் இன்று இந்தியாவில் கூட்டணியை முடிவு செய்யும் தாரக மந்திரம். கழகம் பாஜகவுடன் கூட்டாவதும்,கம்யூனிஸ்டுகள் ஒரு காலத்தில் முதல் எதிரியான நிலப்பிரபுத்துவ முதலாளித்துவக் கட்சி என கூறி எதிர்த்த காங்கிரஸுக்கே 4 வருடம் ஆட்சியில் முட்டுக் கொடுத்து ஜால்ரா அடித்ததும் இந்த வகையிலேயே அடங்கும்.
இரு வேறான கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட சில பொதுவான கருத்துக்களில் இணைந்து செயல்படுவதும் தப்பில்லை.- மதிமுகவும் அதிமுகாவும் இன்றைய தேதியில் சேர்ந்து செயலாற்றும் புள்ளி-கருணாநிதி எதிர்ப்பு மற்றும் ஆட்சியைக் கைப்பற்றுவது.இதெல்லாம் ஒரு கொள்கையா என்று கேட்காதீர்கள்.இது இந்திய அரசியல் :)
இதைத்தான் நேரம் காலம் பார்த்து
கழுத்தறுக்கிறது என்பதோ?
super:):):)
Post a Comment