இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 12 October, 2008

பின்லேடனை அழைத்தீர்களா?

நேற்றைய தினம் நான் ஒரு வீட்டில் பீரோபுல்லிங் பண்ணி ஆட்டைய போட்டுக் கொண்டிருந்த போது அருகில் வந்த ஒரு தெரிந்த அன்பர் ஹாய் என்றார். நான் ஆட்டையப் போடும் போது ஆண்டவனே அருகில் வந்து சொரிந்தாலும் நான் கண்டுக்க மாட்டேன். ஒரு வீட்டில் ஆட்டையப் போட நினைத்து பீரோவை இழுத்துக் கொண்டிருந்த போது ஐந்தே நிமிடத்தில் பீரோவை இழுத்து உதவியவர் அந்த அன்பர்.அதோடு என் கொள்ளைப் பொருட்களின் தீவிர நுகர்வோர் அவர். அந்த நன்றிக் கடனுக்காக ’இன்னாமே’ என்று கேட்டுத் தொலைத்து விட்டேன். அதன் பலன் கைமேல் கிடைத்தது. அன்பர் ஒரு பிரபல பிக் பாக்கெட் பேர்வழி. பிக் பாக்கெட் அடிப்பவர்களெல்லாம் இன்று முட்டுக் காட்டில் கூடுகிறார்களாம். அதற்கு நான் வர வேண்டுமாம்.

ஏன் ஐயா, கொள்ளைக்காரன் என்றால் உங்கள் வீட்டு எடுபிடியா? நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கு ஓடி வருவதற்கு? அதோடு, இதுதான் ஒரு பிரபல கொள்ளையனை ஒரு கூட்டத்துக்கு அழைக்கும் முறையா?

பொதுவாக நான், 25 ஆண்டுகளாக தொடர் கொள்ளை அடித்துவரும் வரும் என் மதிப்புக்குரிய ஒரு கொள்ளைக்காரனையும் நேற்றே அடிக்கத் துவங்கியிருக்கும் ஒரு பிக் பாக்கெட் இளைஞனையும் தராதரம் பார்க்காமல் சமமான அளவிலேயே பாவித்துப் பழகுவேன். பீரோ புல்லிங் திருடன், பிக் பாக்கெட் அடிப்பவன் என்றெல்லாம் பார்த்துப் பழகுவது எனக்கு வழக்கமில்லை. ஆனால் என்னுடைய இந்த மொள்ளமாறித் தனத்தை தங்களுக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு பலரும் நம்முடைய தோளுக்கு மேல் ஏறிக் கொண்டு நம்மை அவர்கள் ப்ளேடுக்கு சானை பிடிக்க வைக்க பார்க்கிறார்கள்.

சரி, நேரம் இன்னும் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட பிக்பாக்கெட் பேர்வழிகள் கூட்டத்திற்கு பின்லேடனையும் அழைத்திருக்கிறீர்களா? அப்படியானால் நானும் வருகிறேன். சரியா?

09.0.2050.

5.19 p.m.

.... இது யாரையும் புண்படுத்த எழுதவில்லை.. சும்மா டைம் பாஸ் மச்சி ....

32 Comments:

said...

யோவ் மாம்ஸ் இந்த பதிவ மட்டும் அவரு படிச்சாரு அனேகமா இதுக்குமேல அவரு பொண்டாட்டி புள்ளைங்க எங்கயாவது கூப்பிட்டா கூட டென்சனாக போறாரு
:)))))

said...

கலக்கல் பதிவு...

ஒரு வாரம் முன்னமே வந்திருக்கவேண்டியது...!!!

கொஞ்சம் லேட் தான்..!!!

said...

சூப்பரூ சாரு!

said...

மாம்ஸ் ஒரு முடிவோட தான் இருக்கீங்கபோல! ரைட்டு!

said...

:)))))))))

said...

///புதுகை.அப்துல்லா said...

யோவ் மாம்ஸ் இந்த பதிவ மட்டும் அவரு படிச்சாரு அனேகமா இதுக்குமேல அவரு பொண்டாட்டி புள்ளைங்க எங்கயாவது கூப்பிட்டா கூட டென்சனாக போறாரு
:)))))////
அண்ணே! உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி தான் போங்க

said...

//
செந்தழல் ரவி said...
கலக்கல் பதிவு...

ஒரு வாரம் முன்னமே வந்திருக்கவேண்டியது...!!!

கொஞ்சம் லேட் தான்..!!!
//

ரிப்பீட்டேய்....!

சும்மா கில்லி மாதிரி கலாய்க்கரே மச்சி ;)

said...

சூப்பர்ப்!!!!!

said...

சூப்பரூ சாரு!

said...

கலக்கல் பதிவு...

ஒரு வாரம் முன்னமே வந்திருக்கவேண்டியது...!!!

கொஞ்சம் லேட் தான்..!!!

said...

:)))))))))

said...

மாம்ஸ் ஒரு முடிவோட தான் இருக்கீங்கபோல! ரைட்டு!

said...

:))))))

said...

:-)))))))))))))))

said...

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதில் சா.நியை ( கவனிக்கவும் ஞானி இல்லை ) மிஞ்ச உலகத்தில் ஒருத்தர் பிறந்து வரணுங்கானும்

said...

என்னங்க நடக்குது...!
உண்மையிலேயே
புரியவில்லை..!

சஞ்சய் அய்யா!
போனில் கேட்டுத்தெரிஞ்சுக்கலாமா?

said...

ரைட்டு!

said...

ஸ்ஸ்ஸ்ப்பா ஆரம்பிச்சுட்டீங்களா, இனி இந்த வாரம் நல்லா முழுசும் ஜாலியா போகும்...

said...

அரசியல்...

said...

செந்தழல் ரவி said...
\\
கலக்கல் பதிவு...

ஒரு வாரம் முன்னமே வந்திருக்கவேண்டியது...!!!

கொஞ்சம் லேட் தான்..!!!
\\

ஆமா...:)

said...

:))

said...

ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன். சஞ்சய் பண்ணற திருட்டு வேலையே இப்படி வெளியில பெருமையா சொல்லிட்டு இருக்காரேன்னு?

நல்ல அங்கதம்.

said...

.... இது யாரையும் புண்படுத்த எழுதவில்லை.. சும்மா டைம் பாஸ் மச்சி ....
அப்புடின்னா என்னங்க அர்த்தம்!

said...

:)

said...

சூப்ப்ப்பர்..


:)

said...

//அந்தக் குறிப்பிட்ட பிக்பாக்கெட் பேர்வழிகள் கூட்டத்திற்கு பின்லேடனையும் அழைத்திருக்கிறீர்களா? //

சஞ்ஜெய்,

முதலில் கொஞ்சம் புரியல, படிக்க படிக்க ... உண்மையிலேயே 'எதிர்பதிவு ஏகம்பரம்' இவர் தான் என்று நினைக்க வைத்தது

said...

கொஞ்ச நாளு இங்ஙன வராமப் போனதுனாலே, ஒரு எழவும் புரியல. இருந்தாலும்..... ஒரு உள்ளேன் பொடியா போட்டுக்குறேன் :)

said...

//’இன்னாமே’//

இதில் சொற்குற்றம் உள்ளது. 'இன்னாபா' என்றுதானே அவர் கேட்டிருக்க முடியும்.

said...

அவர்கள் அழைத்ததில் ஏதும் தவறிருப்பதாக தெரியவில்லை.
உங்களையும் ஒரு கொள்ளைகூட்ட பாஸாக நினைத்து அழைத்திருக்கிறார்கள்.
போக வேண்டியது தானே.

ஆனாலும் நான் ஒரு விஷயம் கேள்வி பட்டேனே. இப்போதெல்லாம் நீங்கள் பீரோ புல்லிங் செய்வதில்லை, அதற்கு பதில் நாகரிகமாக கேட்டு பெருகிறீர்கலாமே

said...

@அப்துல்லா மாம்ஸ் : ஹிஹி.. நன்றி
-----------
நன்றி ரவி :) ... லேட் தான்.. நேரம் இல்லையே. என்ன செய்ய? :(
-----------
யாழ்.. அது சூப்பரு சாரு இல்ல.. சூப்பர் சார்.. எங்க.. சொல்லுங்க பாக்கலாம். சா..ர்ர்ர்ர்ர்.. சார்ர்ர்ர்ர்.. :))
------------
குசும்பன் மாம்ஸ்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்.. :)
--------------
நன்றி தமிழ்பிரியன் :)
-------------
நன்றி ரோஜா காதலன் மாப்ள :)
------------
யோவ் மங்களூர் முன்னால் மைனர்.. அடங்க மாட்டிங்களா நீங்க? :(

said...

நன்றி தம்பி :)
---------
நன்றி சின்னப் பையன் :)
---------
ஜீவ்ஸ் என்ன இது சின்னப் புள்ளதனமா சாநி பத்தி எல்லாம் இங்க பேசிகிட்டு.. ஆமா அதென்ன சாநி மாட்டு சாநி மாதியா? :))
------------
சுரேகா ஐய்யா சாட்டில் விம் பார் போட்டு விளக்கிட்டேனே.. :)
-----------
பரிசலாரே.. கீப் லெப்டு :))
---------
நன்றி ஆதவன்.. ஆனா யாரும் இத சீரியசா எடுத்துக்கல பாருங்க :))
----------
தமிழன் நன்றி.. யூ டூ? :))
----------
ஹிஹி.. நன்றி உதய குமார் :))

said...

விலெகா.. அநியாயத்துக்கு குழந்தையா இருக்கிங்களே.. :))
------------
நன்றி நாதஸ் :)
---------
நன்றி கணேஷ் :)
---------
நன்றி கோவியாரே.. எல்லாம் உங்களை போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம் தான் :)
------------
ராப்.. என்ன பாத்தா பாவமா இலையா?.. டீச்சரா போக வேண்டியவங்க .. :))
-----------
அய்யா ஈரோட்டு வாலு.. ஏனைய்யா இந்த கொல வெறி? :))

Tamiler This Week