இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday, 9 October 2008

ஆற்காட்டாரை திட்டுவது மடத்தனம்

முதலில் 3 மணி நேரம் மின் வெட்டு..பிறகு 4 மணி நேரம்.. பிறகு 5 மணி நேரம்.. இப்போது 6.30 மணி நேரம் மின்வெட்டு.. வேறு வழி இல்லை.. சுய தொழில், தொழிற்சாலை விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகள் என நீங்கள் பாட்டுக்கு பண வெறி பிடித்து ஆடுவதை நிறுத்துங்கள். பிறகு எல்லோருக்கும் 24 மணி நேரம் மின்சாரம் கிடைக்கும். மின் வெட்டு தமிழகத்தில் மட்டுமா இருக்கு? ஆந்திரா , கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரம்.. ஏன் டில்லியில் கூட தினம் ஒரு மணி நேரம் மின் தடை அமலில் இருக்கு. இதற்கெல்லாம் ஆற்காட்டாரா காரணம்? இல்ல... அங்கெல்லாம் திமுக ஆட்சிதான் நடக்கிறதா?..

தமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.. இன்னும் ஆயிரக் கணக்கான கிராமங்களுக்கு மின்சார இணைப்பே கிடையாது.. அவர்களெல்லாம் 24 மணி நேரமும் மின்சாரம் இல்லாமல் வாழ வில்லையா? உங்களால் வெரும் 6.30 மணி நேர மின்வெட்டை தாங்கிக் கொள்ள முடியாதா?

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை பயன் படுத்தக் கூடாது என்று சொல்வதால் இந்த வீணாப் போன தொழில் துறையினர் எதற்கு இப்படி குதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. எதோ தினமும் தொழில் நடந்தால் தான் இவர்களால் சாப்பிடவே முடியும் என்பது போல் கத்துகிறார்கள். எல்லாரும் நகரின் மையப் பகுதியில் ஆடம்பர பங்களாக்களில் வாழ்ந்துக் கொண்டு மின்சாரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி தொழிற்சலைக்கு மின்சாரம் கிடைக்கும்?..

இவர்களிடம் இருக்கும் பணவசதிக்கு வாரத்தில் 2 நாட்கள் முழுமையாக மின்சாரம் பயன் படுத்த தடை விதிக்க வேண்டும். இதனால் ஒன்னும் குடி மூழ்கிடாது.

இவர்களைவிட மோசம் இந்த விவசாயிகள். எதற்கெடுத்தாலும் நீலிக் கண்ணீர் விடும் கும்பல். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டும். முழுநேரமும் இலவச மின்சாரம் வழங்குவதால் செலவில்லாமல் நோகாமல் விவசாயம் செய்து கொள்ளை லாபம் பார்த்து தங்கள் பிள்ளைகளை எல்லாம் இஞ்சினியர்களாகவும் டாக்டர்களாகவும் உறுவாக்கி விடுகிறார்கள். பிறகு யார் விவசாயம் பார்ப்பது? நகரத்தில் இருப்பவருக்கெல்லாம் எவன் சோறு போடுவது?.. ஆகவே இவர்களுக்கும் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டும். அதுவும் இலவசமாக வழங்க கூடாது.

இதனால் என்ன ஆச்சி பாருங்க.. எல்லா துறை ஊழியர்களுக்கும் போனஸ் அள்ளி வழங்குகிறார்கள். ஆனால் கடுமையாய் உழைக்கும் மின்சார வாரிய ஊழியர்களுக்கு மிகக் குறைந்த அளவே போனஸ் வழங்க முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பாவம் விவசாயிகளை சும்மா விடாது.

பிறகு இந்த சொகுசு வாழ்க்கை வாழும் நடுத்தர குடும்ப கூட்டம்.. இரவில் மின் தடையால் இவர்களால் தூங்க முடியவில்லையாம். கொசுக் கடிக்கிறதாம். மக்களுக்காக எவ்வளவோ போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்ற அரசியல் தலைவர்களுகெல்லாம் சிறையில் ஏசி வசதியா செய்துக் கொடுக்கிறார்கள். அவர்களெல்லாம் கொசுக் கடியில் இருக்கவில்லையா?.. அரசியல் தலைவர்களே தாங்கிக் கொள்கிறார்கள். ஒண்டுக் குடித்தனத்தில் வாடகை வீட்டில் வாழும் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாதா? அட அதை கூட விடுங்க.. அந்த காலத்தில் எல்லாம் எல்லோர் வீட்டிலும் மின்சாரம் இருந்ததா?.. இல்லை ஃபேனும் ஏசியும் தான் இருந்ததா? உங்க தாத்தா பாட்டிகளெல்லாம் வாழவில்லையா? உங்களுக்கு மட்டும் என்ன சுகபோக வாழ்க்கை வேண்டி இருக்கு...

கோவிலுக்குள் செருப்பு போடாமல் போக ஒரே காரணம்.. அங்கு ஏழை பணக்காரன் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என எல்லோரும் சமமாய் இருக்கவேண்டும் என்பதால் தான். அதே போல் தான் இரவு நேர மின்வெட்டும். இதனால் சேரியில் வாழ்பவனும் மாட மாளிகையில் வாழ்பவனும் ஒன்றாகிவிடுகிறார்கள்.

இந்த உயரிய சிந்தனையை புரிந்துக் கொள்ள முடியாத கும்பல் ஆற்காட்டாரையும் திமுக ஆட்சியையும் குறை சொல்லித் திரிகிறது.

இலவசமா டிவி குடுக்கிறாங்கனு தெரிஞ்சதும் கட்சி பாகுபாடு இல்லாம வீட்டுக்கு 4 போலி ரேஷன் கார்டு தயாரிச்சு கார்டுக்கு ஒரு கலர் டிவி வாங்கி ஒரே ரூம்ல 2 டிவி வச்சி ஆளுக்கொரு நிகழ்ச்சி பாக்கறிங்களே.. அதுகெல்லாம் எங்க இருந்து வருது கரண்டு.. இப்படி அநியாயமா மின்சாரத்த வீணாக்குவதோடு மட்டும் இல்லாம ஆற்காட்டாரை கொற வேற சொல்லுவியளோ?

இனியாவது உங்க முட்டள் தனமான புலம்பலை நிறுத்துங்க. அவ்ளோ தான்.

42 Comments:

said...

:((

said...

me the second:(:(:(

said...

மங்களூரிலும் மின் வெட்டு உள்ளது ஆர்க்காட்டார் காரணம் இல்லை

said...

திமுக ஆட்சியும் இல்லை

said...

வீட்டுக்கு வீடு இன்வெர்ட்டர் வாங்கி வெச்சிக்கங்க என்ஜாய் பண்ணுங்க!

said...

தலைப்பு சூப்பர்

said...

நேத்தைக்கு எத்தனை மணிநேரம் கரண்ட் கட்? எக்கச்சக்க சூடாகிட்டீங்க.

said...

// ஏன் டில்லியில் கூட தினம் ஒரு மணி நேரம் மின் தடை அமலில் இருக்கு//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்பெல்லிங் மிஸ்டேக். ஒரு மணிநேரம் தான் கரண்ட் இருக்குங்கறாங்க:(:(:(

said...

// சுய தொழில், தொழிற்சாலை விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகள் என நீங்கள் பாட்டுக்கு பண வெறி பிடித்து ஆடுவதை நிறுத்துங்கள்//

:):):)

said...

நீங்க நல்லவரா? கெட்டவரா?

said...

intha pathivai aarkatar padicha...kanippa ungalukku mattum daily 4 mani neram special ah current supply pannuvar:-)

Anonymous said...

// இன்னும் ஆயிரக் கணக்கான கிராமங்களுக்கு மின்சார இணைப்பே கிடையாது.. அவர்களெல்லாம் 24 மணி நேரமும் மின்சாரம் இல்லாமல் வாழ வில்லையா? உங்களால் வெரும் 6.30 மணி நேர மின்வெட்டை தாங்கிக் கொள்ள முடியாதா?//
Boss மின்சாரத்தை பயன்படுத்ய பிறகு மின்சாரம் இல்லாமல் இருபது ரொம்ப கஷ்டம், ஏன் அடுத்த மாநிலத்தை இங்கு இழுக்குறீர்கள், தமிழ்நாட்டு மக்கள் யாருக்கு வோட்டு போட்டார்களோ அவர்களிடம் தான் கேட்கமுடியும், டெல்லிக்க சென்று பிரதமரிடமா கேட்கமுடியும், இல்லை கர்நாடக சென்று கேட்கமுடியுமா?

said...

//ஆற்காட்டாரை திட்டுவது மடத்தனம்//

அதாவது செவிடன் காதுல ஊதுன சங்குன்னு சொல்றிங்க கரைட்டா

said...

//

வீட்டுக்கு வீடு இன்வெர்ட்டர் வாங்கி வெச்சிக்கங்க என்ஜாய் பண்ணுங்க!

//

ரிப்பீட்டு : ): )

said...

//18 வயசுக்கு குறைவானவங்க ஓட்டும் செல்லும்..//

அப்போ எனக்கு ஓட்டு போடும் தகுதி உண்டா

said...

//பிறகு இந்த சொகுசு வாழ்க்கை வாழும் நடுத்தர குடும்ப கூட்டம்.. இரவில் மின் தடையால் இவர்களால் தூங்க முடியவில்லையாம். கொசுக் கடிக்கிறதாம். //

ஹி ஹி ஹி .

மின் வெட்டு னால னான் தினனும் மாலை சீக்கிரமாக வீட்டுக்கு வருவதில்லை :p அலுவலகத்தில் தான் எப்பொழுதுமே மின்சாரம் இருக்கே :)

said...

தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சாரம் இங்கேயே தயாரிக்கபடுதாமே,
அதையெல்லாம் வெளி மாநிலங்களுக்கு வித்துர்ராங்கலாமே

Anonymous said...

//வால்பையன் said...
//ஆற்காட்டாரை திட்டுவது மடத்தனம்//

அதாவது செவிடன் காதுல ஊதுன சங்குன்னு சொல்றிங்க கரைட்டா//

உடல் ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வதை விட மோசமான அல்பத்தனம் வேறெதுவுமில்லை. பேமானிகளுக்கு மட்டுமே இதுபோன்ற நையாண்டி வரும்.

said...

:(((

said...

ஹி..ஹி.. இதுக்கு நீங்க ஒங்க கால்ல கெடக்குறத கழட்டி ரெண்டு அடி அடிச்சிருக்கலாம். என்னை இல்ல!!!! :))))

said...

வால், மன்னிக்க வேண்டும். எதிரியாகவே இருந்தாலும், ஒருவரது உடல் ஊனத்தை கிண்டலடிப்பது தவறு என்பது என் கருத்து. உங்களுக்கு என் கண்டனங்கள் :(

said...

உன் குத்தமா என் குத்தமா...
யார நானும் குத்தம் சொல்ல...

said...

அட்டகாசம், பொடி.

said...

தூள் !!!!!!!!

Anonymous said...

அட்டகாசம், தூள் !.

Krithika,
Houston - TX.

said...

//நோகாமல் விவசாயம் செய்து கொள்ளை லாபம் பார்த்து தங்கள் பிள்ளைகளை எல்லாம் இஞ்சினியர்களாகவும் டாக்டர்களாகவும் உறுவாக்கி விடுகிறார்கள்.//

கண்டிப்பா ஆற்காட்டார் பொறுப்பு இல்லைதான். கொள்ளை லாபம் வரும்போது ஏன் பசங்களை எல்லாம் வேற தொழிலுக்கு அனுப்பி அலைய வெக்குறாங்க இவங்க?

said...

சூப்பர் ஸ்டார் ரஜினி வாரிசு இங்கதான்பா இருக்கு, அவரு பேசி இருந்தா கூட... முடியல

said...

//கோவிலுக்குள் செருப்பு போடாமல் போக ஒரே காரணம்.. அங்கு ஏழை பணக்காரன் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என எல்லோரும் சமமாய் இருக்கவேண்டும் என்பதால் தான். அதே போல் தான் இரவு நேர மின்வெட்டும். இதனால் சேரியில் வாழ்பவனும் மாட மாளிகையில் வாழ்பவனும் ஒன்றாகிவிடுகிறார்கள்.
// யப்பா...எப்படி ராசா!..இப்படியெல்லாம் யோசிக்கறீங்க!

said...

பாட்டன் முப்பாட்டன் யாருமே கணினி வைசுகலையே..

மின்சார மில்லாத கிராமம்.. சுதந்திர இந்தியாவின் வெட்கம்... தீர்வு - 24 மணி நேர மின் தடையா???

சுய தொழில், விவசாயம், தொழில் துறை இவை யாவும் மூடிய பின் சோற்றுக்கு என்ன வழி?? ஒ அதுக்குதான் இலவச அரிசியோ???

இட ஒதுக்கீடு போல இலவச மின்சாரமும் அரசியல்வாதிகளின் துருப்பு.. இதற்க்கு மோடி போல் துணிவு வேண்டும்.. ஆனால் குடும்ப அரசியல் சாக்கடையில் இருக்கும் இவர்களால் ஒன்றும் கிழிக்க இயலாது.. கலைஞரின் சினிமா வேலைகளுக்கு விளக்கு பிடிப்பதை விட்டு விட்டு மின்சார வாரியத்திற்கு கவனம் செலுத்தினால் நலம்.. ஆற்காடு அவர்களே தங்கள் தோல்வியுால் மின்வேட்டுதான் காரணம் என்று கூறிய பின் இந்தப் பதிவு வீண்..

said...

Pl remove Arcot's Photo.. This is the extreme Tease.. hahaha.. I was laughing when I saw the hard working Minister...

Anonymous said...

//இதற்க்கு மோடி போல் துணிவு வேண்டும்..//

ஆமாம். கர்ப்பிணி பெண்களின் வயிற்றிலிருக்கு சிசுவை வெளியே எடுத்து கொலை செய்ய சாதாரண துணிவா வேண்டும்?

மோடியை கொண்டாடுபவனெல்லாம் பேடி என்று சொல்வதில் எனக்கெந்த தயக்கமும் இல்லை.

Anonymous said...

//Pl remove Arcot's Photo.. This is the extreme Tease..//

Please put their Modi photo instead of arcot photo. i want to beat that son of bitch with my slippeers.

said...

Sanjay

Cool Down.
:)

Anonymous said...

////////ஆமாம். கர்ப்பிணி பெண்களின் வயிற்றிலிருக்கு சிசுவை வெளியே எடுத்து கொலை செய்ய சாதாரண துணிவா வேண்டும்?
மோடியை கொண்டாடுபவனெல்லாம் பேடி என்று சொல்வதில் எனக்கெந்த தயக்கமும் இல்லை.
/////////
This happened only because pregnant women butnt alive in Godhra rail.
FOR EVERY ACTION THERE IS EQUAL AND OPPOSITE REACTION. Mind it

said...

என்ன சோகம் சுந்தர்ஜி? :)
--------
என்ன சோகம் ராப்?
( உங்களுக்கு ஒருத்தர் ஆப்பு வச்ச மேட்டர் தான் அடுத்த பதிவு :) )
--------------
நன்றி சிவா மாம்ஸ்.. எனக்கொரு இன்வெர்ட்டர் பார்சல் :))
-----------
ராப் .. எவ்ளோ நேரம் கரண்ட் கட் ஆகலைனு கேளுங்க.. அதான் ஈசியா சொல்ல முடியும்.. :))
------------
//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்பெல்லிங் மிஸ்டேக். ஒரு மணிநேரம் தான் கரண்ட் இருக்குங்கறாங்க:(:(:(//

தானைத் தலைவர் ஆற்காட்டாரின் அறிக்கைப் படி ஒரு மணி நேரம் தான்.. :).. வரலாற்றை திருத்த முயற்சிக்க வேணாம் ராப் :))

said...

//இளைய கரிகாலன் said...

நீங்க நல்லவரா? கெட்டவரா?//
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ...:)
--------------------
நன்றி ராஜி... நாலு மணி நேரம் கரண்ட் கிடைக்கும்னா எதுவும் தப்பில்ல.. :))
----------------------
பாலாஜி.. உணர்ச்சிவசப் படவேணாம்.. உங்களால் முடிந்தால் ஜார்க் புஷ்ஷை வேண்டுமானாலும் கேளுங்கள்.. ஆனால் ஆற்காட்டாரை கேட்க வேணாம்.. அவர் கலைஞர் பின்னால் போவாரா.. இல்லை கலைஞர் தொ.காட்சியில் மானாட மயி..ஆட நிகழ்ச்சியை இன்னும் கிளுகிளுப்ப எப்டி நடத்தறதுன்னு பார்ப்பரா? இல்ல மாறன் சகோதரர்கள் எந்த காரணம் கொண்டும் கலைஞரை நெருங்காமல் பார்த்துக் கொள்வாரா? பொறுப்பில்லாமல் பேச வேண்டாம் பாலாஜி..
------------

said...

வால்.. ஆற்காட்டாருக்கு இருக்கும் கலை(ஞர்)பணிக்கு இடையில் இந்த மாதிரி லுச்சா மேட்டர்க்கு எல்லாம் அவரை குறை கூற வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். :)
-------------
//அப்போ எனக்கு ஓட்டு போடும் தகுதி உண்டா//
கவலை வேண்டாம் வால்.. 45 வயதில் ஓட்டு போடலாம்.. :)
-------------
அம்மாடி பொடிபொண்ணு.. உன் பின்னூட்டம் திரு. ராமதுரை அவர்களுக்கு அனுப்பிவைக்கப் படுகிறது.. :))
----------------
//வால்பையன் said...

தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சாரம் இங்கேயே தயாரிக்கபடுதாமே,
அதையெல்லாம் வெளி மாநிலங்களுக்கு வித்துர்ராங்கலாமே//
இது எதிர் கூடாரத்தின் சதி.. தமிழகத்தில் மின்சாரம் தயாரிக்க கழக ஆட்சியில் இதுவரை முயற்சி செய்ததே இல்லை.. பிறகு எப்படி அதை வெளியே விற்க முடியும்..? இதை யாரும் நம்ப வேண்டாம் ப்ளீஸ்..
-------------------------

said...

//உடல் ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வதை விட மோசமான அல்பத்தனம் வேறெதுவுமில்லை.//

உணர்ச்சிவசப் படாதிங்க அனானி.. வால்பையன் யாரையும் புண்படுத்துபவர் இல்லை.. ஒப்பீட்டிற்காக வழக்கத்தில் உள்ள பலமொழியை சொல்லிவிட்டார்.. யாரையும் கிண்டல் செய்யும் நோக்கம் அதில் இருககாது.. நன்றி.
---------------
ஏன் சோகம் அப்துல்லா அண்ணாச்சி? :)).. உங்களையும் கொசு கடிக்கிதோ? :))
-----------------------
வெண்பூ.. இப்படி எல்லாம் தப்பு தப்பா பேசக் கூடாது.. ஆற்காட்டுப் படை உங்களை ஒரு வழி பண்ணிவிடும் . ஜாக்கிரதை.. எச்சரிக்கிறேன்.. :))
--------------
//கிண்டலடிப்பது தவறு என்பது என் கருத்து. உங்களுக்கு என் கண்டனங்கள் :(//
உங்கள் கருத்து சரியே.. ஆனால் வால்பையன் உள்நோக்கத்துடன் அதை சொல்லவில்லை.. விட்டுவிடுங்கள். நன்றி..
--------------

said...

//Arnold Edwin said...

உன் குத்தமா என் குத்தமா...
யார நானும் குத்தம் சொல்ல...//
யாரையும் குத்தம் சொல வேணாம் அர்னால்ட்.. தேர்தல் வரும் போது அதை விடுமுறை நாளாக எண்ணி வீட்டில் டிவி பார்க்காமல் வந்து ஓட்டுப் போடுங்க.. அப்புறம் யாரையும் குத்தம் சொல்ல வேண்டி இருககாது.
-------------
//Kasi Arumugam - காசி said...

அட்டகாசம், பொடி.//
நன்றி காசி அண்னே.. :)
---------------
//செந்தழல் ரவி said...

தூள் !!!!!!!!//
என்ன தூள் ரவி.. எதுவாயினும் நன்றி.. :)
------------------
//அட்டகாசம், தூள் !.

Krithika,
Houston - TX.//
நன்றி கார்த்திக்.. :)
---------------------
//கண்டிப்பா ஆற்காட்டார் பொறுப்பு இல்லைதான். கொள்ளை லாபம் வரும்போது ஏன் பசங்களை எல்லாம் வேற தொழிலுக்கு அனுப்பி அலைய வெக்குறாங்க இவங்க?//
அதானே.. இந்த விவசாயிங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை பழமைபேசி.. ஒரு பக்கம் விவசாயம் பார்த்து கொள்ளை அடிக்கிறாங்க.. அதே மாதிரி பசங்களையும் பெரிய படிப்பு படிக்க வச்சி கொள்ளை அடிக்கிறாங்க.. :))

said...

//Pandi said...

சூப்பர் ஸ்டார் ரஜினி வாரிசு இங்கதான்பா இருக்கு, அவரு பேசி இருந்தா கூட... முடியல//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நன்றி பாண்டி.. நல்லா இருங்க.. :)
---------------
//// யப்பா...எப்படி ராசா!..இப்படியெல்லாம் யோசிக்கறீங்க!//
நன்றி ராஜ்.. எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசி தான்.. :))
------------------
சும்ம பொலம்பாதிங்க ஈரோட்டான்.. உங்களுக்கு ஒரு ரூபாய்ல என்ன.. அடுத்த தேர்தல்ல இலவச அரிசி தரப் போறோம்.. உழைக்காம உங்களுக்கு சாப்பிட வசதி பண்ணி குடுக்கிற எங்களையே கொற சொல்றிங்களா? :(
----------------------
//Pl remove Arcot's Photo.. This is the extreme Tease.. hahaha.. I was laughing when I saw the hard working Minister...//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

said...

மோடி (எ) பேடி..

அய்யா மோடியோ பேடியோ.. மக்கள் நல்லா இருக்காங்கோ.. குஜராத் மாநிலம் முன்னேற்றப்ப் பாதையில் உள்ளது.. அவர் நமீதாவை வைத்து கொண்டு கலைச்சேவை செய்யாமல் கர சேவை செய்வதை நான் ஆதரிக்கவில்லை..

மோடி போட்டோவை போட்டாலும் சரி மோடியையே போட்டாலும் எனக்கு வருத்தம் கிடையாது.. அடிப்படை வசதி இல்லாத தமிழகம் தான் பொற்காலம் என்ற நீங்கள் நினைத்தாலும் எனக்கு வருத்தம் கிடையாது..


பி. கு: அனானி கமெண்ட் மட்டும் தான் அடிக்க முடியும்.. செருப்பால் அடிப்பது உங்கள் திறமையே..

நன்றாக புரிந்து கொண்டமைக்கு பொடியன்னுக்கு என் நன்றிகள்.. தோழா ஒரு வாசகனை உன் வலைத்தளம் பெற்றுள்ளது..

மீண்டும் சொல்கிறேன்: சிசுவோடு பெண்ணையும் கொலை செய்தவன் நிச்சயம் மனிதனல்ல.. அது எதற்காக செய்தாலும்..

நன்றி..

said...

நன்றி கார்த்திக். நான் கூல் டவுணா இருக்க சொல்ல தான் ஆற்காட்டாருக்கு ஆதரவா கருத்து சொல்லினிகீறன்பா.. :)
--------------------
//நன்றாக புரிந்து கொண்டமைக்கு பொடியன்னுக்கு என் நன்றிகள்.. தோழா ஒரு வாசகனை உன் வலைத்தளம் பெற்றுள்ளது..//

ஈரோட்டான்.. இதில் இருக்கும் உள்குத்து புரியவில்லையே தலீவா.. :((

Tamiler This Week