இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday 2 October, 2008

நோ கல்யாணம் - தொட்டில் - தேன்மொழி


இன்னும் கல்யாணத்துக்கு வழியக் காணொமாம்.. இந்த நெலமைல தொட்டில் கட்டி பொறக்கப் போற புள்ளைக்கு தேன்மொழினு பேர் வச்சானாம்/ளாம்... அப்படினு தலைப்பு வைக்க ப்ளாகர் எடம் கொடுத்தாலும் மனசு எடம் குடுக்கலீங்க. அதனால சுருக்கெழுத்து பாணியில தலைப்பு.

அதாகப் பட்டது மகா ஜனங்களே.. நம்ம ஊர்ல இன்னும் 3G தொழில்நுட்பத்தை பயன் படுத்த லைசென்சே குடுக்கலை.. ஆனா நெறய பேர் அந்த தொழில்நுட்ப்பத்தோட போன் வாங்கி வச்சிட்டு திரியறாங்க.. காரணம் கேட்டா.. “அதனால என்ன? எப்டியும் அந்த தொழில்நுட்பம் சீக்கிறமே வரத் தானே போகுது.. அதனால இப்போவே வாங்கி வச்சி சீன் போடறோம்” அப்டினு சொல்றாங்க... என்னக் கொடுமை பாருங்க...

அது சரி.. அதனால் உனகென்னடா காண்டுனு கேக்கறிங்களே.. இப்போ அந்த சீன் கும்பல்ல நானும் சேந்துட்டேன்ல.. :)

டேய் டேய்.. அடங்குடா நாதாரி.. அவனவன் 35000 ரூபாய் குடுத்து ஆப்பிள் ஐபோன் வாங்கி வச்சிகிட்டு கமுக்கமா இருக்கானுங்க.. நீ வெறும் 7000 ரூபாய் குடுத்து நோக்கியா 6233 வாங்கி வச்சிட்டு இந்த அலப்பறையா? தூத்தெறி...

ஹிஹி.. எல்லாம் ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்....
என்னாது....?
வெளம்பரங்க.. வெளம்பரம்ம்ம்ம்....

ஹ்ம்ம்ம்.. இதெல்லாம் எங்க போய் திருந்தப் போகுது...

அஸ்கிபுஸ்கி : 3ஜி என்றாலே 25000 , 35000 ரூபாய்க்கு தான் போன் கிடைக்கும் என்றுதான் பலரும் நினைத்திருக்கிறோம்.. ஆனால் நோக்கியாவில் 6233 என்ற மாடல் 7100 ரூபாய்க்கு கிடைக்கிறது. 2ஜிபி மெமரி கார்ட் போட்டுக்கலாம். எம்பி3, FM வசதிகள் இருக்கு. மிகத் துல்லியமான இசை. அதிக விலை போன்களைப் போன்று காபி பேஸ்ட் வசதி கூட இருக்கு...

3ஜி தொழில்நுட்பத்திற்கு அனுமதி அளித்ததும் அந்த தொழிநுட்ப போன்களின் தேவை அதிகமாகிவிடும். அப்போது குறைந்த விலையில் விர்பதற்காக நிச்சயம் பரவலாக தரம் குறைந்த அல்லது வசதிகள் குறைந்த போன்களையே அனைத்து நிறுவங்களும் வழங்கும். அதற்கு முன் இதை வாங்கிவது கொஞ்சம் நல்லதாகவே படுகிறது. எல்லாம் மின்னணு சாதன நுகர்வோர் துறையின் அனுபவம் தான்.... :)

21 Comments:

said...

me the first

said...

//இன்னும் கல்யாணத்துக்கு வழியக் காணொமாம்.. இந்த நெலமைல தொட்டில் கட்டி பொறக்கப் போற புள்ளைக்கு தேன்மொழினு பேர் வச்சானாம்/ளாம்//
உங்க உதாரணம் கூட இப்படி இருக்கு:):):)

said...

//இன்னும் கல்யாணத்துக்கு வழியக் காணொமாம்.. இந்த நெலமைல தொட்டில் கட்டி பொறக்கப் போற புள்ளைக்கு தேன்மொழினு பேர் வச்சானாம்//

சொல்லவேயில்ல, வீட்டுல தொட்டில் கட்டிட்டீங்களா :)))))

said...

பதிவு முழுவதையும் வழிமொழிகிறேன்

said...

தல, லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் எல்லாம் ஏற்கனவே வித்தாச்சு வித்தாச்சு...

said...

http://www.telecomasia.net/article.php?type=article&id_article=1738

said...

ஏற்கனவே ஏர்டெல் வோடபோன் ரிலையன்ஸ் வீடியோகான் எல்லாரும் பணத்த கட்டிட்டானுங்க கட்டிட்டானுங்க.

said...

http://news.in.msn.com/business/article.aspx?cp-documentid=1658281

said...

மக்கா.. ரொம்ப நாள் இல்ல.. இன்னும் கொஞ்ச நாள்ளேயே உங்க ஊருல 3G உபயோகிக்கலாம்.

உங்க ஊரு கவர்மென்டே பல ஊருல 3G சம்பந்த்தப்பட்ட பொருள்களை/ டெக்னோலோஜிகளை விநியோகிக்க திட்டம் போட்டிருக்கு. அதுல எங்க ப்ராடக்ட் கூட ரொம்ப வித்தியாசமா இருக்கேன்னு 2 மாதத்துக்கு முன்னாடி சேம்பல் கேட்ட்டிருக்காங்க. :-))

உங்க ஊருல கூடிய சீக்கிரம் எங்க ப்ராடக்ட் hot sale ஆகும் பாருங்களேன். :-)))


சரி, இன்னும் ஒரு 200 ரூபா அதிகம் செலவு பண்ணியிருந்தா 3G/ HSDPA/ Wi-fi/ SIP clientன்னு நெறய function உள்ள போனை வாங்க்கியிருக்கலாமே? ;-)

said...

//கோவி.கண்ணன் said...
பதிவு முழுவதையும் வழிமொழிகிறேன் //

இதை இப்போது நான் வழிமொழிகிறேன். இன்னும் சற்று நேரத்தில் ஜெகதீசன் வழிமொழிவார்.

said...

:-)

said...

இதுதான் என்னோட முதல் ஸ்மைலி என்பதை அறிக..

said...

// ஜோசப் பால்ராஜ் said...
//கோவி.கண்ணன் said...
பதிவு முழுவதையும் வழிமொழிகிறேன் //

இதை இப்போது நான் வழிமொழிகிறேன். இன்னும் சற்று நேரத்தில் ஜெகதீசன் வழிமொழிவார். //

ஜெகதீசன் சமையலறையில் அதிதீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ள காரணத்தி்னால், அவர் சார்பாக....நான் வழிமொழிறேன்...

said...

இந்த விளம்பரத்துக்காக நோக்கியா எவ்வளவு கொடுத்தது உங்களுக்கு

said...

/*இன்னும் கல்யாணத்துக்கு வழியக் காணொமாம்*/

athu yeppidi sanjai? suthi suthi kalayanatha pathiye post podareenga..Hello..yaaravathu seekiram ponnu kundunga...Pls...
:-)))

said...

Eno enakku 10 varusham munthi Nicom Stereo -nnu 23000 rupees kku vangiya panasonic 21 Inch gnapagam varuthu .

Regards
Singai Nathan

said...

நன்றி ராப் :)
//உங்க உதாரணம் கூட இப்படி இருக்கு:):):)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(
----
//வெண்பூ said...
சொல்லவேயில்ல, வீட்டுல தொட்டில் கட்டிட்டீங்களா :)))))//

வயித்தெரிச்சலைக் கெளப்பாதிங்க.. :(
---------
//கோவி.கண்ணன் said...

பதிவு முழுவதையும் வழிமொழிகிறேன்//
எச்சுச் மீ யுவர் ஆனர்... புகழ்றிங்களா இல்ல திட்றிங்களா? :)
-----------
//செந்தழல் ரவி said...

தல, லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் எல்லாம் ஏற்கனவே வித்தாச்சு வித்தாச்சு...//

அட.. ஆமால்ல்.. நான் தானே கையெழுத்தே போட்டேன்.. அளவுக்கதிகமான அலுவல் காரணமாக மறந்துட்டேன்..:))
-----------

said...

தகவல்களுக்கு நன்றி ரவி.. :)

--------
@ மைஃப்ரண்ட்
//சரி, இன்னும் ஒரு 200 ரூபா அதிகம் செலவு பண்ணியிருந்தா 3G/ HSDPA/ Wi-fi/ SIP clientன்னு நெறய function உள்ள போனை வாங்க்கியிருக்கலாமே? ;-)//

மலேசியாவுல இருந்து மைஃப்ரண்ட் ஃப்ரீயா அனுப்புவாங்க..:))
----------
@ ஜோசப் :
//இதை இப்போது நான் வழிமொழிகிறேன். இன்னும் சற்று நேரத்தில் ஜெகதீசன் வழிமொழிவார்.//
நல்லா கெளம்புறங்கய்யா குருப்பு குபுப்பா...:)
-------
//தாமிரா said...

இதுதான் என்னோட முதல் ஸ்மைலி என்பதை அறிக..//

மிக்க நன்றி தாமிரா... :)
---------
@ விஜய் ஆனந்த்
//ஜெகதீசன் சமையலறையில் அதிதீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ள காரணத்தி்னால், அவர் சார்பாக....நான் வழிமொழிறேன்...//
நன்றி அனந்த்...:)))))

said...

// வால்பையன் said...

இந்த விளம்பரத்துக்காக நோக்கியா எவ்வளவு கொடுத்தது உங்களுக்கு//

அதெல்லாம் ரகசியம்.. :))
----------

ராஜி டீச்சர் .. அடங்கவே மாட்டிங்களா? :(
---------

// singainathan said...

Eno enakku 10 varusham munthi Nicom Stereo -nnu 23000 rupees kku vangiya panasonic 21 Inch gnapagam varuthu .

Regards
Singai Nathan//
அப்டியா? ... நல்லது.. :)

said...

//
விஜய் ஆனந்த் said...

// ஜோசப் பால்ராஜ் said...
//கோவி.கண்ணன் said...
பதிவு முழுவதையும் வழிமொழிகிறேன் //

இதை இப்போது நான் வழிமொழிகிறேன். இன்னும் சற்று நேரத்தில் ஜெகதீசன் வழிமொழிவார். //

ஜெகதீசன் சமையலறையில் அதிதீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ள காரணத்தி்னால், அவர் சார்பாக....நான் வழிமொழிறேன்...
//

நானும் வழிமொழிஞ்சிக்கிறேன்பா :))

said...

பதிவு முழுவதும் வழிமொழியறதவிட செலக்டிவ்வா ஒரு அஞ்சு லைன் இருந்துச்சு அத வழிமொழிஞ்சிருந்தாலே போதுமோ!?!?!?

:)))))))))))))))))))))

Tamiler This Week