இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday 14 May, 2008

பட்டாபிராமன் பாக்யலக்ஷ்மிக்கும் ஜெயந்தி மோகன்ப்ரபுவுக்கும் வாழ்த்துக்கள்

பட்டாபிராமன் என்றொரு அப்பாவி நண்பர் இருக்கார். நண்பர் மட்டுமில்லை... பார்ட்னரும் கூட. ஈரோடு அலுவலக நிர்வாகிகளுல் ஒருவர். பாவம் என்னிடம் மாட்டிகொண்டு விழிக்கும் அப்பாவி பார்ட்னர். அதுவும் மாதக் கடைசியில் நாங்கள் விநியோகஸ்தராக இருக்கும் நிருவனங்களுக்கு காசோலை கொடுக்க நான் செய்யும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு எங்க "தல"யிடம் போய் காசோலை வாங்கவும் முதல் வாரங்களில் கோயம்புத்தூர் அலுவலக ரிப்போர்ட்டை ஆடிட்டர் அலுவலகத்துக்கு அனுப்ப நான் செய்யும் தாமதத்திற்கு ஆடிட்டர்க்கு பதில் சொல்லிக் கொண்டும்... அதிலும் குறிப்பாக காசோலை ஈரோடு வங்கிக்கு வந்ததும் அந்த கிளை மேலாளர் எனக்கு போன் பண்ணி சொல்லுவார். அப்போ கோவை வங்கி கணக்கில் இருந்து ஈரோடு வங்கிக்கு பணம் மாற்ற வேண்டும். என் கையெழுத்திட்ட காசோலைகளும் ஈரோடு அலுவலகத்தில் எங்க தல கிட்ட தான் இருக்கும். அவர் எப்போவும் செம பிசி. அவரை பிடித்து கோவை அலுவலக காசோலையை வாங்கிக் கொண்டு ஈரோடு வங்கியில் கொடுத்து பணத்தை மாற்றுவதற்குள் பாவம் அவர் படும் அவதி இருக்கே.. அதற்குள் என்னாச்சி என்னாச்சி என்று என்னிடமிருந்து குடைச்சல் போன்.... (சீனா சார் எனக்காக இல்லைனாலும் இந்த அப்பாவிக்காகவாவது சீக்கிறமே உங்க வங்கியில் இணைய பண பரிமாற்றத்துக்கு ஆவண செய்யுங்கள்.. :) )இப்படி எல்லாம் என்னால் கொடுமை படுத்தப் படும் இந்த அபபாவி ஜீவனும் என் இனிய நண்பரும் பார்ட்னருமான பட்டாபிராமனுக்கும் சகோதரி பாக்யலக்ஷ்மிக்கும் வருகிற 18.05.2008 ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் திருமணமும் பவானியில் திருமண வரவேற்பும் இனிதே நடைபெற இருக்கிறது. இருவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவோம். :))

----------------********----------------

எங்கள் நட்பு முதலில் மோதலில் தான் ஆரம்பித்தது. அவர் அங்கிலத்தில் எழுதிய ஒரு பதிவுக்கு நான் சீரியஸாக பின்னூட்டம் போட அவரோ விளையாட்டாக பதில் சொல்ல.. அதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ள... சரியான திமிர் பிடித்த பெண் என்று நினைத்துக் கொண்டு அந்த பின்னூட்டங்களை கூட கோபத்தில் நான் அழித்துவிட்டேன் :).... ஆனால் அவர் இதை ஒரு மேட்டராகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் என் மீது அவர் கடும் கோபத்தில் இருந்தார்.

காரணம்.. நான் ப.பா.சங்கத்தை வம்பிழுத்து(பபாசங்கம் போட்டி - நடந்தது என்ன?) போட்ட ஒரு பதிவு :P.... நான் விளயாட்டாக போட்ட இந்த பதிவை அவர் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு பின்னூட்டம் போட்டு மிரட்டினார்:(.... பிறகு ஒருவழியாக இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிட்டோம். திருமணம் முடிவானதும் முதலில் 3 அல்லது 4 பேரிடம் தான் இதுவரை சொன்னதாக சொன்னார்.( இதே மாதிரி தான் சொல்லி அன்றே அனைவரிடமும் சொல்லிவிட்டார் என்பது பிற்பாடு தெரிந்துக் கொண்ட ரகசியம்:P )..அதாவது எங்கள் மோதல் நல்ல நட்பாக மாறியதுனு சொல்ல வரேன். :)...

இப்படி நல்ல நண்பர்களாக மாறிய பின்பு அபி அப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க சாணக்யத்தனமாக :P பேசி மோகன்ப்ரபுவின் அலுவலக மின்னஞ்சல் மற்றும் யாஹூ ஐடி ஆகியவற்றை வாங்கி அதை ஜெ. கலயாண கும்மியில் சேர்த்துவிடுவேன் என்ற கடும் மிரட்டலுக்கு பயந்து உடனே போன் செய்தார். சில நிமிடங்கள் பேசியதும் ஒரு வேண்டுகோள்... "சஞ்சய் .. நான் நூடுல்ஸ் தயாரிச்சிட்டு இருக்கேன். சாப்டு முடிச்சதும் சென்னை போகனும். சமையல் முடிஞ்சதும் கேஸ் ஆஃப் பண்ண மறந்துடுவேன். ப்ளீஸ் சமையல் முடிஞ்சதும் எனக்கு ஞாபகப் படுத்தனும் .. அதுவரை பேசுங்க"னு சொன்னாங்க.... அட கொடுமையே.. இந்த பொண்ண நம்பி ஒரு பையன் வாழ்க்கைய ஒப்படைக்க போறானே என்று ப்ரபுவை நினைத்து அனுதாபப் பட்டுக் கொண்டே .. சரி என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து எவ்வளவு நேரம் நூடுல்ஸ் தயாரிப்பாய்? இன்னும முடியலையா என்று கேட்டேன்.. உடனே ரொம்ப பெருமையாக நான் சாப்பிட்டே முடித்துவிட்டேனே என்றார். அப்போ கேஸ் ஆஃப் பண்ணிட்டயா ஜெயந்தினு கேட்டேன்...

ஜெ : "அச்சாச்சோ.. ஓ மை காட்.. மறந்துட்டேன்... தேங்ஸ்.. தேங்ஸ்..."

ஹாஹாஹா.. என்ன கொடுமை சார் இது... இந்த குழந்தையவா திமிர் பிடித்த பெண் என்று நினைத்தேன்.... பேசும் போது யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொல்லி பல ரகசியங்களை அம்மணி சொன்னாங்க.. ஹிஹி.... அய்யோ பாவம் ஜெயந்தி என்று தனி பதிவே போடலாம் அதை வைத்து.. :P...

அதாகப் பட்டது மக்களே இந்த பச்சிளங்குழந்தைக்கும் பாவப் பட்ட ஜீவன் மோகன் ப்ரபுவுக்கும் வருகிற 18.05.2008 ஞாயிற்றுக் கிழமை திருமணமும் 19.05.2008 திங்கள் அன்று நாமக்கல்லில் வரவேற்பும் இனிதே நடைபெறவிருக்கிறது. இருவரும் வளமும் நலமும் ஆரோக்கியமும் சந்தோஷமும் பெற்று பல்லாண்டு பல நூறாண்டு வாழ வாழ்த்துவோம்... :))

"All married couples should learn the art of battle as they should learn the art of making love. Good battle is objective and honest--never vicious or cruel. Good battle is healthy and constructive, and brings to a marriage the principle of equal partnership."

6 Comments:

said...

என் வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள் சஞ்சய்

வால்பையன்

said...

அக்காவிற்கு குட்டி தம்பியின் வாழ்த்துக்கள்

(மிஞ்ச மீதி எதுனா திங்கிற ஐட்டங்கள் இருந்தா பார்சல் கட்டி அனுப்புங்க பாவம் தம்பி தின்னுட்டு போகட்டும்)

said...

எல்லோருக்கும் வாழ்த்துகள்

said...

பட்டாபிராமன் & பாக்யலஷ்மிக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.

அக்கா ஜெயந்திக்கு வாழ்த்துக்களும் மோகன் ப்ரபுவுக்கு ஆறுதல்களும் திங்களன்று நேரில் தெரிவிக்கப்படும்.

said...

/
ஆயில்யன். said...
அக்காவிற்கு குட்டி தம்பியின் வாழ்த்துக்கள்

(மிஞ்ச மீதி எதுனா திங்கிற ஐட்டங்கள் இருந்தா பார்சல் கட்டி அனுப்புங்க பாவம் தம்பி தின்னுட்டு போகட்டும்)
/

நான் போயும் மிச்சம் எதுனா மீறும்!?!?!?

என்ன இது ச்சின்னபுள்ளதனமா???

said...

வாழ்த்துகள்..இம்சை அரசியும் மாட்டியாச்சா..

Tamiler This Week