இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSunday 11 May, 2008
Sunday Special - Matter பஞ்சம்..
AVG Anti virus தனது இலவச புது பதிப்பை வெளியிட்டிருக்கிறது. தனது போட்டியாளரான Avastஐ விட சிறந்தது என சொல்லிக் கொள்கிறது. ஆனால் இணைய விவாத குழுக்களில் இந்த புது பதிப்பை விட Avast சிறந்தது என சொல்கிறார்கள். சிலர் Avira தான் பெஸ்ட் என்கிறார்கள். AVGயின் புது பதிப்பு 4 வைரஸ்களையும் Avira ஒரு வைரசையும் நம் கணினியில் வர அனுமதித்து விடுவதாகவும் Avast இது போன்று எந்த வைரஸையும் அனுமதிப்பதில்லை எனவும் தகவல். என்னிடம் Avast இருக்கிறது. ஆனாலும் AVGயின் புது பதிப்பையும் டவுன்லோட் செய்து வச்சிருக்கேன். இதுல ஒரு வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதாவது கூகுள் மற்றும் MSNல் தேடும் போது அதில் வரும் இணைப்புகளை சோதித்து அந்த வலைதளம் பாதுகாப்பானதா அல்லது வைரஸ் அபாயம் உள்ளதா அல்லது அதில் வைரஸ் இருக்க்கிறதா என அறிவிக்கிறது.
பாதுகாப்பான தளங்களுக்கு அருகில் பச்சை நிற 'டிக்" இருக்கும். வைரஸை கொண்டுள்ள தளங்கள் சிவப்பு X குறியிடனும் , வைரஸ் பரவ வாய்புள்ள தளங்கள் ஆரஞ்சு நிற X குறியுடனும் தெரிகிறது. இந்த குறிகள் மீது மவுஸ் கொண்டு சென்றால் அந்த தளம் பற்றிய விவரங்கள் தெரிகிறது.
வைரஸ் அபாயம் உள்ள இணைப்புகளை க்ளிக் செய்தாலோ அல்லது நேரடியாக(தேடுதல் இல்லாமல்) அந்த தளத்தின் முகவரியை குறிப்பிட்டு செல்ல முயன்றாலோ ஒரு எச்சரிக்கை தகவல் வருகிறது( பார்க்க :2வது படம்). அந்த எச்சரிக்கையை மீறி செல்வது நமது ரிஸ்க். ஆகையால் இந்த வசதிக்காக Avast இருந்தும் AVGயின் இந்த புது பதிப்பையும் பதிவிறக்கி வைத்துக் கொண்டேன். ஓசியில் கிடைத்தால் எனக்கொன்று என் தம்பிக்கொன்று என கேட்கும் ஆட்கள் தானே நாமெல்லாம்.. :D.... முயற்சித்து பார்க்கலாம்...
மேட்டர் பஞ்சதால மக்கள் மறந்துடக் கூடாதேனு எப்டி எல்லாம் ஒப்பேத்த வேண்டி இருக்கு. என் ஆசான் ஜூவிக்கு இந்த ஒப்பேத்தல்கள் எல்லாம் சமர்ப்பணம். :)
6 Comments:
oppeethinalum urupadiyana thagvalgaluku nandri.
பஞ்ச் டயலாக் சூப்பரு.
தகவல் நல்லாத்தான் இருக்கு!
அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க?
இப்புடி ஏதாவது நல்லது சொல்ற ஆட்கள்தான் குறைஞ்சு போய்ட்டாங்க!
பின்னுங்க!
/
இகலப்பை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ண முடியவில்லை என்பது பெரும்பாலோனோரின் கவலை. ஆனால் அந்த வசதி வந்து நீண்ட நாட்கள் ஆகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது போலும். Yahoo Messenger 9.0வை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். இதில் இகலப்பை உதவியுடன் தமிழில் மின்னச்சு செய்யலாம்
/
யாகூ மெசென்ஞர் 9.0 பீட்டா வடிவம்தான் வந்திருக்கிறது. அதில் பேசினால் எதோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போன்று இருக்கிறது.
அதை நிறுவியதிலிருந்து ஜெட் வேகத்தில் இயங்கி வந்த என் கம்ப்யூட்டர் மாட்டு வண்டி கணக்காய் இயங்குகிறது :(
//புதுகைத் தென்றல் said...
oppeethinalum urupadiyana thagvalgaluku nandri//
:-)).. நன்றி..
---------
//நிஜமா நல்லவன் said...
பஞ்ச் டயலாக் சூப்பரு.///
என் ஆசானுக்கு சமர்ப்பணம் செய்வது உங்களுக்கு பஞ்ச் டயலாகா? இதெல்லாம் நல்லா இல்ல.. ஆமா.. :(
-------------
//சுரேகா.. said...
தகவல் நல்லாத்தான் இருக்கு!
அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க?
இப்புடி ஏதாவது நல்லது சொல்ற ஆட்கள்தான் குறைஞ்சு போய்ட்டாங்க!
பின்னுங்க//
நன்றி சுரேகா.. போனா போகுது.. பொடியந்தானே.. எதுனா சொல்லி வைப்போனு சொல்லாதிங்க.. இது சிலருக்கு பிடிக்கிது போலனு நெனச்சி நான் கண்டினியூ பண்ண ஆரம்பிச்சிடுவேன்.. அப்பால பீலிங் பண்ணி பிரயோஜனம் இல்ல.. :P
//யாகூ மெசென்ஞர் 9.0 பீட்டா வடிவம்தான் வந்திருக்கிறது. அதில் பேசினால் எதோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போன்று இருக்கிறது.//
இல்லையே.. பழய பதிப்பை விட நல்லா இருக்கே...
//அதை நிறுவியதிலிருந்து ஜெட் வேகத்தில் இயங்கி வந்த என் கம்ப்யூட்டர் மாட்டு வண்டி கணக்காய் இயங்குகிறது :(//
ஓ.. இதான் மேட்டரா.. கொஞ்ச காலமாவே என் கணினி வேகம் ரொம்ப கேவலமா இருந்தது. நானும் ஊ&ர்ல இருக்கிற ஆண்டி ஸ்பைவேர், ஆண்டி வைரஸ் எல்லாம் உபயோகித்து பார்த்தும் ஒண்ணும் பயன் இல்லை. இப்போ தான் தெரியுது என்ன காரணம்னு.. இதுக்கு தான் ஒரு அறிவாளி பக்கத்துல இருக்கோனும்னு சொல்றது.
....ஹிஹி.... புதுச தூக்கிட்டு யாஹூ8.1 இன்ஸ்டால் பண்ணிட்டு தான் இந்த பின்னூட்டமே போடறேன் :D....
Post a Comment