இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 10 May, 2008

தமிழக காவல் துறையின் லட்சணம்


ஒரு காலத்தில் தமிழக காவல் துறை ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையாக பேசப் பட்டது. ஆனால் இன்று .. அவர்கள் தங்கள் திறமைய ஆளும் கட்சிக்கு ஆட்கள் இழுக்கவும் எதிர் கட்சியினரின் தொலை பேசி பேச்சிகளை ஒட்டு கேட்கவும் ஆளும் கட்சிக்கு அடிபணிந்து எதிர் கட்சியினரை உளவு பார்க்கவும் பயன்படுத்துகிறார்கள்.

இதைவிட பெருங்கொடுமைகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறை வெட்கி தலை குனிய வேண்டிய சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடப்பது தொடர்கதை ஆகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி அருகில் அதியமான் கோட்டை காவல் நிலையதிலும் அதை தொடர்ந்து பென்னாகரம் காவல் நிலையத்திலும் துப்பாக்கிகள் கொள்ளை போனது. அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் காவலர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறார்கள். எவ்வளவு கேவலம் இது... காவல் நிலையத்தையே காவல் காக்க முடியாத இவர்களால் எப்படி பொது மக்களை காக்க முடியும். இவர்களை பணி நீக்கம் செய்யாமல் விசாரணை குழு அமைக்கிறார்கள். கர்மம்....

அடுத்து சில தினங்களில் கோவையில் மரம் கடத்தும் கும்பல் ஒன்று ஒரு பூங்காவில் இருந்த சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்றார்கள். இத்தனைக்கும் இந்த பூங்கா நகரின் மத்தியில் இருக்கிறது. காவல் துறையினர் எந்த லட்சனத்தில் நகரில் இரவு ரோந்து பார்த்திருப்பார்கள் என்று பாருங்க.

இதைவிடக் கொடுமை.. கோவையில் இரவு பணியில் இருந்த காவலர்களில் வாக்கி டாக்கியை யாரோ அபேஸ் பண்ணி சென்றது. தன்னிடம் ஒருவன் திருடுவதையே தடுக்க முடியாத இவர்களா நகரில் நடக்கும் திருட்டை தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?..

சமீபத்தில் சென்னையில் நடந்த கொடுமை..... ராஜாஜி சாலையில் உள்ள அரசு கருவூலம், சம்பளக் கணக்கு அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளக் கட்டிடத்தில் நடந்த கூத்து... அந்த பகுதியில் இரவில் ரோந்து சென்ற கமிஷனர் அந்த அலுவலக கட்டிடத்திற்கு சென்று கதவை தட்டி இருக்கிறார். அரை மணி நேரம் கழித்து ஆயுதப் படை காவலர் ஒருவர் தூக்க கலக்கத்தில் கதவை திறந்திருக்கிறார். எந்த லட்சணத்தில் காவல் காக்கிறார்கள் பாருங்க.

அன்றைய உயர் அதிகாரிகள் ரோந்தின்.. ஒரு காவலர் லுங்கியுடனும், 4 பெண் காவலர்கள் நைட்டியுடனும் "பணி" புரிந்திருக்கிறார்கள். மேலும் 3 காவலர்கள் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றிருந்ததும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இதே ரீதியில் சேவை புரிந்தால் தமிழகத்தில் ஒரு பயலும் பாதுகாப்பாக இருக்க முடியாது. குறிப்பாக இரவில் யாரும் வெளியே செல்ல முடியாது. இவர்களை கண்காணிக்க வேண்டிய உயர் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து கொஞ்சம் ஒழுங்காக வேலை பார்த்தால் தான் இந்த நிலை மாறும்.

......... மங்கை அவர்களின் பதிவை படிசச்தும் இதை எழுதத் தோன்றியது....

15 Comments:

said...

இது போன்ற சம்பவங்கள் நடப்பது உலகில் உள்ள அனைத்து காவல் துறையிலும் சகஜம் தான். கடுமையான பணி நேரங்களால் இது போன்ற தவறுகள் நடப்பது தவிக்க இயலாதது. இதை வைத்து தமிழக காவல்துறையைக் குறைத்து மதிப்பிட இயலாது.

said...

ஐயா

காவல்துறையில் பணிபுரியும் கீழ்மட்ட காவலர்களுக்கு அளிக்கப்படும் விடுப்புகள் எவ்வளவு தெரியுமா ??

அவர்களின் பணிநேரம் தெரியுமா ??

தெரியுமா என்று தான் கேட்கிறேனே தவிர வேறு எதுவும் கூறவில்லை

said...

“நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்”

சரிதான குறள் ?

இதை கொண்டு தான் காவல் துரையின் பெருவாரியான சீர்திருத்தம் செய்ய முடியும் .. சும்மா உணர்ச்சிவசப்படுவதால் இரத்த அழுத்தம் தான் வரும் .. இதை செய்யத்துணியும் ஆட்சியாளர்கள் யார் ?!

Anonymous said...

//இது போன்ற சம்பவங்கள் நடப்பது உலகில் உள்ள அனைத்து காவல் துறையிலும் சகஜம் தான்.//

உலகின் எந்த காவல்துறையினரும்
பிளாட்பார பிச்சைகாரனிடம் கூட லஞ்சம் கேட்பதில்லை.

நம்மூரில் எந்த சாப்பாட்டுக் கடையிலாவது போலிஸ்காரர் சாப்பிட்டுவிட்டு காசு கொடுப்பதினை பார்த்திருக்கிறீர்களா? புகார் தர போலிஸ் ஸ்டேஷன் போனால் கூடவே காபி-டிபன்/பிரியாணி இல்லை கடைசிக்கு ஒரு கட்டு பேப்பராவது
வாங்கி தரவேண்டும்.இல்லாவிட்டால் உங்கள் புகார் ஏற்றுக்கொள்ளப்படாது.


இதெல்லாம் நம்மூர் போலிஸிடம் மட்டுமுள்ள கல்யாண குணங்கள்

said...

//தமிழ் பிரியன் said...

இது போன்ற சம்பவங்கள் நடப்பது உலகில் உள்ள அனைத்து காவல் துறையிலும் சகஜம் தான். கடுமையான பணி நேரங்களால் இது போன்ற தவறுகள் நடப்பது தவிக்க இயலாதது. இதை வைத்து தமிழக காவல்துறையைக் குறைத்து மதிப்பிட இயலாது.//

என்ன சொல்றிங்க அண்ணாச்சி? தாங்கள் காவல் நிலையத்தில் இருக்கும் போதே துப்பாக்கி பறிகொடுப்பதும் , தங்களிடம் உள்ள வாக்கி டாக்கி பறிகொடுப்பதும் தவிர்க்க இயலாததா? உங்கள் வீட்டில் களவு போனால் காவல் துறையில் புகார் தெரிவிக்க மாட்டிங்களா? அவர்களுக்கு தான் கடுமையான பணி நேரங்கள் இருக்கே. இதில் உங்கள் உங்கள் வீட்டில் திருடு போனதை கண்டுபிடிக்க எங்கே நேரம் இருக்கும்? :)

said...

//புருனோ Bruno said...

ஐயா

காவல்துறையில் பணிபுரியும் கீழ்மட்ட காவலர்களுக்கு அளிக்கப்படும் விடுப்புகள் எவ்வளவு தெரியுமா ??

அவர்களின் பணிநேரம் தெரியுமா ??

தெரியுமா என்று தான் கேட்கிறேனே தவிர வேறு எதுவும் கூறவில்லை//

புருனோ சார்.. நீங்கள் எதற்காகவாவது காவல் நிலையம் போய் இருக்கிங்களா? அங்கு அவர்கள் வேலை பார்க்கும் லட்சணத்தை பார்த்திருக்கிறீர்களா? பணி நேரத்திற்கும் பணி செய்யும் நேரத்திற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். மேலும் காவல் துறையின் இந்த சொதப்பல்களுக்கு கீழ்மட்ட காவலர்கள் தான் பொறுப்பு என்று நான் சொல்லவில்லையே.

பொருட்களை பறிகொடுத்தது கீழ்மட்ட காவலர்களின் தவறு. எதிர் கட்சி தலைவர்களை உளவு பார்ப்பதும் ஆளுங்கட்சிக்கு ஆள் பிடிப்பதும் மேல்மட்ட அதிகாரிகளின் தவறு.

//தெரியுமா என்று தான் கேட்கிறேனே தவிர வேறு எதுவும் கூறவில்லை//
உங்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பவன் என்ற முறையில் கேட்க்கிறேன். விளக்கமாக சொல்லுங்கள்.

said...

//யாத்திரீகன் said...

“நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்”

சரிதான குறள் ?

இதை கொண்டு தான் காவல் துரையின் பெருவாரியான சீர்திருத்தம் செய்ய முடியும் .. சும்மா உணர்ச்சிவசப்படுவதால் இரத்த அழுத்தம் தான் வரும் .. இதை செய்யத்துணியும் ஆட்சியாளர்கள் யார் ?!//

சீர்திருத்ததிற்கு துணிவைவிட அந்த துறை மீதான அக்கறையே முக்கியம். ஆனால் காவல்துறை ஏவள்துறையாக செம்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது சீர்திருத்தம் யார் செய்வார்கள்? :)

கருத்துக்கு நன்றி யாத்ரீகன்.

said...

//Anonymous said...

//இது போன்ற சம்பவங்கள் நடப்பது உலகில் உள்ள அனைத்து காவல் துறையிலும் சகஜம் தான்.//

உலகின் எந்த காவல்துறையினரும்
பிளாட்பார பிச்சைகாரனிடம் கூட லஞ்சம் கேட்பதில்லை.//

:))

// நம்மூரில் எந்த சாப்பாட்டுக் கடையிலாவது போலிஸ்காரர் சாப்பிட்டுவிட்டு காசு கொடுப்பதினை பார்த்திருக்கிறீர்களா? புகார் தர போலிஸ் ஸ்டேஷன் போனால் கூடவே காபி-டிபன்/பிரியாணி இல்லை கடைசிக்கு ஒரு கட்டு பேப்பராவது
வாங்கி தரவேண்டும்.இல்லாவிட்டால் உங்கள் புகார் ஏற்றுக்கொள்ளப்படாது.//

சரியாக சொன்னீங்க. பாஸ்போர்ட் விண்ணப்பம் சரிபார்த்தலுக்காக எங்க ஏரியா காவல் நிலையத்திற்கு சென்றிருந்த போது சரிபார்த்தல் முடிந்ததும் "செலவுக்கு பணம் குடுத்துட்டு போங்க" என்று வாய் கூசாமல் கேட்டு வாங்கினார்கள்.


//இதெல்லாம் நம்மூர் போலிஸிடம் மட்டுமுள்ள கல்யாண குணங்கள//
இன்னும் சில நாடுகளிலும் இது போன்ற நிலை இருக்கும் நண்பரே.

said...

நம் நாட்டில் இருக்கும் அவலங்களை விடுவிக்கும் முதல் முடிச்சு எங்கிருக்கு?
தெரிஞ்ச யாராவது சொல்லுங்க.
சில சமயம் மோசமான பாதையை நோக்கி போகிறோமோ என்ற பயமும் வந்துகொண்டு இருக்கிறது.

said...

நல்ல பதிவு!
ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதை நிறுத்தும் வரை காவல்துறையிடம் மக்கள் நேர்மையை எதிர்பார்ப்பது கஷ்டம்,

வால்பையன்

said...

/
தன்னிடம் ஒருவன் திருடுவதையே தடுக்க முடியாத இவர்களா நகரில் நடக்கும் திருட்டை தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?..
/

:))))))))

said...

/
அன்றைய உயர் அதிகாரிகள் ரோந்தின்.. ஒரு காவலர் லுங்கியுடனும், 4 பெண் காவலர்கள் நைட்டியுடனும் "பணி" புரிந்திருக்கிறார்கள்.
/

ட்ரெஸ் கோட் ரிலாக்ஸ் பண்ணிட்டாங்களோ????

said...

//வடுவூர் குமார் said...

நம் நாட்டில் இருக்கும் அவலங்களை விடுவிக்கும் முதல் முடிச்சு எங்கிருக்கு?
தெரிஞ்ச யாராவது சொல்லுங்க.
சில சமயம் மோசமான பாதையை நோக்கி போகிறோமோ என்ற பயமும் வந்துகொண்டு இருக்கிறது.//
என்ன சந்தேகம் குமார் சார். அந்த முடிச்சி நம்மிடம் தான் இருக்கிறது. சின்னத்தை பார்த்து மட்டும் ஓட்டு போடுவதை மாற்றினால் போதும். இதெல்லாம் தானாக மாறும்.

said...

//வால்பையன் said...

நல்ல பதிவு!
ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதை நிறுத்தும் வரை காவல்துறையிடம் மக்கள் நேர்மையை எதிர்பார்ப்பது கஷ்டம்,

வால்பையன//

ஜால்ரா போடவில்லை என்றால் அவர்கள் வேலையை தக்கவைத்துக் கொள்வது கடினம் வால். எல்லார் செயலிலும் சுயநலம் தான் முதன்மையாக இருக்கிறது.

said...

//மங்களூர் சிவா said...

/
அன்றைய உயர் அதிகாரிகள் ரோந்தின்.. ஒரு காவலர் லுங்கியுடனும், 4 பெண் காவலர்கள் நைட்டியுடனும் "பணி" புரிந்திருக்கிறார்கள்.
/

ட்ரெஸ் கோட் ரிலாக்ஸ் பண்ணிட்டாங்களோ????//

நல்ல வேளை.. வேற எதுனா ஏடாகூடமா சொல்லிடுவிங்களோனு பயந்தேன். இப்போ எல்லாம் ரொம்ப திருந்திட்டிங்க போல. எல்லாம் அம்மணி உத்தரவா? :P

Tamiler This Week