இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday 9 May, 2008

பை கூகுள்.. ஹை யாஹூ இந்தியா...

ஜிமெயில் வரும் வரை நம் வேடந்தாங்கல் யாஹூவாகத் தான் இருந்தது. ஆனால் ஜிமெயில் வந்ததும் அதில் இருந்த வசதிகளுக்காக யாஹூவை தலை முழுகினோம். ஆனாலும் சாட் பண்ண இப்போ வரை யாஹூ மெசஞ்சர்க்கு இணையாக வேறு எதுவும் கிடையாது. அதே போல் இவ்வளவு நாளும் தேடுதல் என்றாலே அது கூகுள் தான் என்று இருப்பேன். ஆனால் இப்போ யாஹூ ஒரு அற்புதமான தேடும் அனுபவத்தை தருகிறது. இதன் பெயர் Yahoo Glue! beta. இதை சோதனை அடிப்படையில் முதலில் யாஹூ இந்தியாவில் அறிமுகப் படுத்தி இருக்கிறது. இதைவிட சிறந்த தேடுபொறிக்கு கூகுள் ரொம்பவே மெனக் கெட வேண்டி இருக்கும். அது வரை இனி தேடுதலுக்கு யாஹூ இந்தியா தான் என்னோட ஃபேவரிட்டா இருக்கும்.
அப்படி என்ன இருக்கு இந்த புது Yahoo Glue! betaவில்?.. நாம் தேட வேண்டிய சொல்லை குடுத்து தேட சொன்னதும் அந்த சொல்லுக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே பக்கத்தில் தருகிறது. உதாரணமாக Kamal என்று தேடினால் கமல்ஹாசன் பற்றிய தகவல்கள் அடங்கிய இணைய தளங்கள், கமல் தொடர்பான புகைபடங்கள், விக்கிபீடியாவில் கமல், யாஹூ பதில்களில் கமல் பற்றிய விவாதங்கள், லாஸ்ட் எஃப் எம்மில் கமல் படங்களின் பாடல்களின் பட்டியல், Youtubeல் கமல் தொடர்பான விடியோக்கள் , மற்ற தளங்களில் உள்ள செய்திகள் , இன்னும் பல விதமான தகவல்கள் என அனைத்தும் ஒரே பக்கத்தில் அளித்து நம்மை திக்கு முக்காடச் செய்கிறது.
ஒவ்வொரு முறையும் தேட்டுவதற்கு யாஹூ இந்தியா தளத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் அட்ரஸ்பாருக்கு அடுத்து உள்ள தேடுதல் பெட்டியில் Yahoo Glue! betaவை தேர்ந்தெடுத்து அங்கிருந்தே தேடலாம். கீழுள்ள படத்தில் வட்டமிட்டுள்ள இடம்.
முயற்சி பண்ணி பாருங்க... வழக்கம் போல படத்து மேல வச்சி அமுக்குங்க.. பெரிசாகும்..

23 Comments:

said...

எளிமை தானுங்க கூகுளோட பலமே. அதை அடிச்சிக்க முடியுமா?

said...

இன்னைக்கு வரைக்கும் யாகூ மெசஞ்சர்ல தமிழ்ல டைப் பண்ண முடியல நேரடியா.

இகலப்பை வேலை செய்ய மாட்டிக்கிது. கூகிள்ல அந்த பிரச்சனை இல்லை.

said...

ஐ.. இது நல்லா இருக்கே! :-)

said...

பை கூகுள்ன்னு சொல்லிவிட்டு உங்களால இணைய உலகில வாழவே முடியாது என்பது எனது கருத்து.

நீங்கள் கூறும் யாகூ க்ளு பக்கம் தேடுபொறியல்ல. அது ஒரு வலைப்பதிவுக்கு ஒப்பானது.

அதனையும் கூகுள் தேடுபொறியையும் எப்படித்தான் ஒப்பிட்டுக் கதைக்கமுடிகிறதோ உங்களால்.

பொழுதுபோக்கிற்காக இந்த யாகூ குளூ பக்கத்தை பாவிக்கலாமே தவிர தேடுதலுக்காக அல்ல. தேடுதலுக்காக இதைப் பாவித்தீர்களானால் நீங்கள் அம்பேல்.

இந்தப் பக்கத்தில் கவனக் கலைப்பான்கள் அதிகமென்பதால் நீங்கள் தேடும் முக்கிய விடயங்கள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போகலாம்.

நான் இந்த யாகூ குளூ பக்கம் கூடாது என்று சொல்லவில்லை ஆனால் கூகுளையும் இதையும் ஒப்பிட்டுக் கதைக்க எந்தவொரு காரணமும் இல்லையென்கிறேன்.

said...

//கிஷோர் said...

எளிமை தானுங்க கூகுளோட பலமே. அதை அடிச்சிக்க முடியுமா?//
எளிமையை விட நம் தேவை தான் முக்கியம் கிஷோர். கருத்துக்கு நன்றி. :)
----
//.:: மை ஃபிரண்ட் ::. said...

ஐ.. இது நல்லா இருக்கே! :-)//

ஆமாம் அனு.. ரொம்பவே நல்லா இருக்கு...

said...

//இன்னும் பல விதமான தகவல்கள் என அனைத்தும் ஒரே பக்கத்தில் அளித்து நம்மை திக்கு முக்காடச் செய்கிறது.//

இதைத்தான் நானும் சொல்கிறேன். இந்த யாகூ குளூ நம்மை திக்கு முக்காடச் செய்கிறதே தவிர தேவையானதைத் தேட வழிவகை செய்யவில்லை.

என்னதான் யாகூ அரிதாரம் பூசிக்கொண்டு வந்தாலும் கூகுளின் தேடுதலுக்கான அல்கோறித்திற்கு முன்னால் யாகூ எதுவுமே பண்ணமுடியாது.

said...

//மதுவதனன் மௌ. said...

பை கூகுள்ன்னு சொல்லிவிட்டு உங்களால இணைய உலகில வாழவே முடியாது என்பது எனது கருத்து.//

அப்படி சொல்ல முடியாது மதுவதானன்.. கூகுள் தரும் வசதிகள் எல்லாமே வேறு தளங்களும் தரத்தான் செய்கிறது. ஆனால் கூகிள் அதை சிறப்பாக தருகிறது. கூகுள் என்ற வார்த்தையை நீங்கள் ஏன் அவார்களின் மற்ற சேவைகளுக்கும் பயன்படுத்துகிறீர்கள். நான் ப்ளாகர் அல்லது ஜிமெயிலை எதனுடனும் ஒப்பிடவில்லையே. இப்போது வேர்ட்ப்ரஸ் ப்ளாகருக்கு இணையாக வளர்ந்துவருகிறது. கூகுளின் பிக்காசாவைவிட யாஹூவின் ஃப்ளிக்கர் நன்றாக இருக்கிறது.
ஜிடாக்கை விட யாஹூ மெசேஞ்சர் நன்றாக இருக்கிறது. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாதிற்கள் மது.

//நீங்கள் கூறும் யாகூ க்ளு பக்கம் தேடுபொறியல்ல. அது ஒரு வலைப்பதிவுக்கு ஒப்பானது.//
தவறு மது. அதுவும் தேடும் பொறியியல் தான். தேடுபொறிதான். இதை எப்படி வலைபதிவுடன் ஒப்பிடுகிறீர்கள் எனக்கு விளங்கவில்லை. நேரம் இருந்தால் விளக்கமாக சொல்ல முடியுமா? தெரிந்துக் கொள்கிறேனே.

// அதனையும் கூகுள் தேடுபொறியையும் எப்படித்தான் ஒப்பிட்டுக் கதைக்கமுடிகிறதோ உங்களால்.//

பலன்களை வைத்து தான். கூகுளைவிட இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

//பொழுதுபோக்கிற்காக இந்த யாகூ குளூ பக்கத்தை பாவிக்கலாமே தவிர தேடுதலுக்காக அல்ல. தேடுதலுக்காக இதைப் பாவித்தீர்களானால் நீங்கள் அம்பேல்.//

என்னது பொழுது போக்கா? உங்களால் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கருதுகிறேன். பழம் பெருமை ப்ஏசுவதில் எனக்கு விருப்பம் இல்லை. இன்றைய தேவை தான் முக்கியம்.

// இந்தப் பக்கத்தில் கவனக் கலைப்பான்கள் அதிகமென்பதால் நீங்கள் தேடும் முக்கிய விடயங்கள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போகலாம்.//

நாம் தேடும் சொல்லுக்கு தொடர்பான செய்திகள் ஒரு பகுதியில் இருக்கு. தொடர்பான வலைதளங்கள் ஒரு பகுதியில் இருக்கு. அந்த சொல்லுக்கு தொடர்பான புகைபடங்கள், விடியோக்கள், இசை என ஒவ்வொன்றும் ஒரு பகுதியில் இருக்கு. இதில் எப்படி உங்கள் கவனம் கலையும்?
//நான் இந்த யாகூ குளூ பக்கம் கூடாது என்று சொல்லவில்லை ஆனால் கூகுளையும் இதையும் ஒப்பிட்டுக் கதைக்க எந்தவொரு காரணமும் இல்லையென்கிறேன்//

நிறைய காரணங்கள் இருக்கு. இதற்கு முந்தய பத்தி பின்னூட்டத்திற்கு அளித்துள்ள விளக்கத்தை பார்க்கவும்.

...விரிவான கருத்துக்கு நன்றி மது...

said...

//இதைவிட சிறந்த தேடுபொறிக்கு கூகுள் ரொம்பவே மெனக் கெட வேண்டி இருக்கும்//

ஹா ஹா..சிரிப்பை அடக்க முடியல. கூகுள் இதற்காக கொஞ்சம்கூட மெனக்கெடாது என்பது எனதெண்ணம். கூகுள் தனது தேடுதல் அல்கோறிதத்தை இன்னும் இன்னும் மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறதே தவிர இவ்வாறான பகட்டுத்தனங்களையல்ல.

மீண்டும் சொல்கிறேன். நான் ஒன்றும் யாகூ குளூவை கூடாது எனச் சொல்லவில்லை. இது ஒரு வலைப்பதிவு போன்றதே தேடுபொறியென்றால் அது கூகுளே என்றுதான் கூறுகிறேன்.

said...

//மதுவதனன் மௌ. said...

//இன்னும் பல விதமான தகவல்கள் என அனைத்தும் ஒரே பக்கத்தில் அளித்து நம்மை திக்கு முக்காடச் செய்கிறது.//

இதைத்தான் நானும் சொல்கிறேன். இந்த யாகூ குளூ நம்மை திக்கு முக்காடச் செய்கிறதே தவிர தேவையானதைத் தேட வழிவகை செய்யவில்லை.//

:))... எனக்கு பயனுள்ளதாக இருக்கு மது... ஒவ்வொருத்தருக்கும் தேவை ஒவ்வொரு மாதிரி இருக்கும் அல்லவா? பயன் படுத்டி பார்ப்போம்... கூகுளை விட இது சிறப்பாக இல்லை என்று தோன்றும் போது கூகுளுக்கு ஹை சொல்லிவிட்டால் போச்சி. நம் தேவை தானே முக்கியம். என்ன நான் சொல்றது? :)

//என்னதான் யாகூ அரிதாரம் பூசிக்கொண்டு வந்தாலும் கூகுளின் தேடுதலுக்கான அல்கோறித்திற்கு முன்னால் யாகூ எதுவுமே பண்ணமுடியாது//
மீண்டும் சொல்கிறேன். நம் தேவை தான் முக்கியம். பில்ட் அப் இல்லை. நீங்கள் தொழில்நுட்ப ரீதியில் பார்க்கிறீர்கள். நான் வெறும் பயனாளியாக மட்டும் பார்க்கிறேன். இப்போதைக்கு எனக்கு க்ளூ தான் பெஸ்ட். :))

said...
This comment has been removed by the author.
said...

//ஓகோ நீங்கள் இன்னும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரையா பாவித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த யாகு குளூ பிடித்துப் போனதில் ஆச்சரியப் பட ஒன்றுமேயில்லை.//
ஹாஹா.. நீங்கள் உங்கள் கருத்தை வெளிப் படுத்தும் விதத்திலேயே நீங்கள் எந்த ரகம் என்று தெரிகிறது. உங்களை எழுப்புவது கடினம். இப்போது கூட நான் நெருப்பு நரி பயன்படுத்தி தான் உங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் அதிகம் பயன்படுத்துவதும் இதை தான். நான் தினமும் கூகுளை உபயோகிப்பவன். அதற்காக அதை விட சிறந்த வசதி கி்டைக்கும் போது, பழங்கதை பேசிக் கொண்டு மாற்றங்களை வரவேற்காமல் இருக்க முடியாது. எனக்கு தேவை தான் முக்கியம். வெறும் தொழில்நுட்ப பந்தாவில் விருப்பம் இல்லை. நன்றி . வணக்கம். :)

said...

//நான் வெறும் பயனாளியாக மட்டும் பார்க்கிறேன். இப்போதைக்கு எனக்கு க்ளூ தான் பெஸ்ட்.//

சஞ்சய்..sports, travel, entertainment, health, stocks என்ற வகைகளுக்கு மட்டுமே யாகூ குளூ செயற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் எவ்வாறு இது பெஸ்டாக இருக்க முடியும்.

முன்னர் கூகுள் பெஸ்டாக இருந்த உங்களுக்கு இப்போது யாகூ குளூ பெஸ்டாகத் தெரிகிது என்றால் நீங்கள் sports, travel, entertainment, health, stocks எனும் வகைகளுக்காக மட்டுமே தேடுபொறியை பாவிக்கிறீர்கள் என்றாகிறது.

நீங்கள் அப்படிப் பட்டவர்தான் என்றால் நான் முன்னர் இட்ட பின்னூட்டங்களுக்கு வருந்துகிறேன். நான் கூகுளையும் யாகூ குளூவையும் எல்லா தேவைகளுக்குமான தேடுதல் என்ற வகையிலேயே ஒப்பிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

said...

//முன்னர் கூகுள் பெஸ்டாக இருந்த உங்களுக்கு இப்போது யாகூ குளூ பெஸ்டாகத் தெரிகிது என்றால் நீங்கள் sports, travel, entertainment, health, stocks எனும் வகைகளுக்காக மட்டுமே தேடுபொறியை பாவிக்கிறீர்கள் என்றாகிறது.//

நான் கூகுளின் பல்வேறு சேவைகளை பயன்படுத்தினாலும் தேடுதலை பயன் படுத்துவது மிகவும் குறைவு தான். இந்த குறைவான வேலைக்கு க்ளூ நிறைவாக இருக்கிறது. ஓருவேளை நீங்கள் தேடுபொரியை அதிகம் உபயோகிப்பவராக இருக்கலாம். அந்த வகையில் உங்கள் ஒப்பீடு சரியாக இருக்கும். மீண்டும் சொல்கிறேன். தேவை தான் முக்கியம். என் தேவைக்கு க்ளூ போதும். உங்கள் தேவைக்கு கூகுள். விரைவில் உங்களை உங்கள் வலைபதிவில் சந்திக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்.உறக்கம் வருகிறது. இரவு வணக்கம் மதுவதனன். :))

said...

சஞ்சய்,

யாகூ குளூ மே மாதம் 7 ஆம் திகதியிலிருந்துதான் இந்தியாவில் சேவையை ஆரம்பித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இன்றைக்கு 9 ஆம் திகதி. நாங்கள் இரண்டு மூன்று நாட்களுக்குள் எவ்வாறு இதனை பெஸ்ட் என்று கூற முடியும்.

எல்லாச் சொற்களுக்கும் யாகூ குளூ வேலை செய்யுமெனில் (அதனைச் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்) அதைப் பாவித்து அனுபவிக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து.


பி.கு. நான் தமிழ் வலையுலகிற்கு வந்து கொஞ்ச நாள்தான் என்பதால் எனது பின்னூட்டங்களில் சீர்த்தன்மை இல்லாதிருக்கலாம், போகப் போக சரியாகிடும் என்று நினைக்கிறேன். எல்லாத்துக்கும் கொஞ்சக் காலம் தேவைப்படுகிறது போலும்.

Anonymous said...

//மதுவதனன் மௌ. said...//


Mr. Madhuvanadhan,

I think you need to grow up lot in tech to understand " What is Search "


I dont deny google search is dominating. but your argument is pre-judice one.

Thy one who act to be slept cant be woken up.

It might well fit for you. Open eyes and accept techs as is than with pre-judice mind.

For the one who works lot with .net, other technology may not be worth. same case with others.. the one who always works with python may not like others.

does that mean other programs are " NOT WORTH " trying out ? If some one says yes to this.. i would call them " NOT fit for IT industry "

said...

/
நீங்கள் கூறும் யாகூ க்ளு பக்கம் தேடுபொறியல்ல. அது ஒரு வலைப்பதிவுக்கு ஒப்பானது.
/

வலைப் பதிவிற்கும், தேடுபொறிக்கும் குறைஞ்ச பட்சம் ஆறு வித்தியாசங்களாச்சும் இருக்கும்.

அப்புறம்.. இந்த தேடி எடுத்த விஷயங்கள் ..யாஹூவின் உள்ளடக்கமாய் மட்டும் இருந்தால்... அது வலைப்பதிவுக்கு ஒப்பானது.


//
அதனையும் கூகுள் தேடுபொறியையும் எப்படித்தான் ஒப்பிட்டுக் கதைக்கமுடிகிறதோ உங்களால்.//


இரண்டுமே தேவையானதைத் தேடித் தருவதால் இருக்குமோ ? உங்களை மாதிரி பெரியவர்கள் தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும்.

//பொழுதுபோக்கிற்காக இந்த யாகூ குளூ பக்கத்தை பாவிக்கலாமே தவிர தேடுதலுக்காக அல்ல. தேடுதலுக்காக இதைப் பாவித்தீர்களானால் நீங்கள் அம்பேல்.//

டி.பி.சி.டி. அவர்களின் வார்த்த்தையைக் கடன் வாங்கிக் கொள்கிறேன்.

பு.த.செ.வி.

தேடுதலில் கிடைக்கும் விடைகள் எனக்குத் தேவையா என்பதே இங்கு பிரச்சினை. இதில் பொழுது போக்கு எங்கே வந்தது ? சாதாரண கூகுள் தேடுதலிலும் இங்கே குறிப்பிட்ட அனைத்தும் சுட்டிகளாகத் தரப்படுகிறது ஆக கூகுள் பக்கத்தையும் பொழுதுபோக்கிற்கு என எடுத்துக் கொள்ளலாமா?

//இந்தப் பக்கத்தில் கவனக் கலைப்பான்கள் அதிகமென்பதால் நீங்கள் தேடும் முக்கிய விடயங்கள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போகலாம்.//

மறுபடியும் பு.த.செ.வி

தேடியது கிடைக்கும் போது கவனம் எப்படிச் சிதறும்? உதாரணத்திற்கு கமல் பற்றிய விவரங்கள் சேமிக்கிறேன். அப்போது எதெல்லாம் கிடைக்குமோ அதெல்லாம் எனக்கு வரவு தானே. அப்படி என்றால் கவனச் சிதைவு எங்கே வந்தது ?


//நான் இந்த யாகூ குளூ பக்கம் கூடாது என்று சொல்லவில்லை ஆனால் கூகுளையும் இதையும் ஒப்பிட்டுக் கதைக்க எந்தவொரு காரணமும் இல்லையென்கிறேன்.//

//என்னதான் யாகூ அரிதாரம் பூசிக்கொண்டு வந்தாலும் கூகுளின் தேடுதலுக்கான அல்கோறித்திற்கு முன்னால் யாகூ எதுவுமே பண்ணமுடியாது.//

///மீண்டும் சொல்கிறேன். நான் ஒன்றும் யாகூ குளூவை கூடாது எனச் சொல்லவில்லை. இது ஒரு வலைப்பதிவு போன்றதே தேடுபொறியென்றால் அது கூகுளே என்றுதான் கூறுகிறேன்.//


முந்தைய பின்னூட்டத்தில் ஒருவர் சொல்லி இருப்பது போல முன் முடிவுகளுடன் அணுகுவது போலத் தான் இருக்கிறது. அல்லது நீங்கள் கூகுளில் வேலைசெய்பவராகத்தான் இருக்க வேண்டும்

said...

எல்லா சேவையும் இலவசம் தானே?? யார் கொடுத்தால் என்ன.. நம் தேவைக்கேற்ப மாறிக் கொள்ள வேண்டியதுதான் ..

said...

//Anonymous techine tick said...

//மதுவதனன் மௌ. said...//


Mr. Madhuvanadhan,

I think you need to grow up lot in tech to understand " What is Search "


I dont deny google search is dominating. but your argument is pre-judice one.

Thy one who act to be slept cant be woken up.//

ரொம்பவே சரி.

// It might well fit for you. Open eyes and accept techs as is than with pre-judice mind.

For the one who works lot with .net, other technology may not be worth. same case with others.. the one who always works with python may not like others.//
இதான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது. :)

//does that mean other programs are " NOT WORTH " trying out ? If some one says yes to this.. i would call them " NOT fit for IT industry //

இது மேட்டர்.:)

நன்றி நண்பரே. பெயர் என்னவோ?:)

said...

//தேடியது கிடைக்கும் போது கவனம் எப்படிச் சிதறும்? உதாரணத்திற்கு கமல் பற்றிய விவரங்கள் சேமிக்கிறேன். அப்போது எதெல்லாம் கிடைக்குமோ அதெல்லாம் எனக்கு வரவு தானே. அப்படி என்றால் கவனச் சிதைவு எங்கே வந்தது ?//

சரியாக சொன்னிங்க ஜீவ்ஸ்.. கருத்துக்கு நன்றி..

said...

// பொன்வண்டு said...

எல்லா சேவையும் இலவசம் தானே?? யார் கொடுத்தால் என்ன.. நம் தேவைக்கேற்ப மாறிக் கொள்ள வேண்டியதுதான//

அதானே...

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

ஐ.. இது நல்லா இருக்கே! :-//

ரிப்பீட்டேய்ய்ய்....

said...

பயனுள்ள தகவல்.. நன்றிகள் சஞ்ஜய்:)

said...

//ரசிகன் said...

பயனுள்ள தகவல்.. நன்றிகள் சஞ்ஜய்:)//

பயன்படுத்தி பாருன்ங்க மாம்ஸ்.. நன்றி.

Tamiler This Week