இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday, 20 April 2009

Virus Found

கோவையில் நடந்த விஜய் டிவியின் இசைமழை நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அண்ணாச்சி தன் புது போனை என்னிடம் கொடுக்கிறார். சமீபத்தில் வாங்கியது.

“ அண்ணாச்சி.. போன் சும்மா கும்முனு இருக்கு.. சார்ஜ் ரொம்ப நேரம் இருக்குதா?”
அதற்காகத் தான் அதை வாங்கப் போவதாக சொல்லி இருந்தார்.

“ ஹ்ம்ம்.. அதெல்லாம் ஓகே.. அதுக்காக தான இதை வாங்கறதா சொன்னேன்”

“அட.. ஸ்க்ரீன் கலக்குதே.. இந்த கடிகாரம் ரொம்ப அழகா இருக்கு அண்ணாச்சி.. என் போன்ல இல்ல பாருங்க.. :( “

“ இது தேர்ட் பார்ட்டி ப்ரோக்ராம்பா.. ”

அருகில் இருந்த வெயிலானை காட்டி
“ இவர்கிட்ட இருந்து தான் எனக்கு கெடைச்சது.. இரு உனக்கும் அனுப்பறேன்..”

“ ஓ.. அப்டியா.. உடனே அனுப்புங்க.. ரொம்ப நல்லா இருக்கு”

“உன்னோட போன் 6200வா?”

“ இல்லை அண்ணாச்சி.. 6233”

“ அட.. ப்ளூ டூத் ஆன் பண்ணுப்பா.. அப்போ தான் அனுப்ப முடியும்”

“ அதெல்லாம் அப்போவே ஆன் பண்ணிட்டேன் அண்ணாச்சி”

“ உன்னோட போன் பேர் இதுல தெரியலையே”

என் போன் பெயர் அதில் இருப்பதை நான் முன்பே பார்த்துவிட்டேன். ஆனால் எதுவும் அவரிடம் சொல்லவில்லை. அண்ணாச்சி திரும்பவும் முயற்சிக்கிறார். திரும்ப திரும்ப முயற்ச்சிக்கிறார்.

“ அட போய்யா.. இதுல உன் போன் பேர் வரலை.. “

இதுக்கு மேல விட்டா அந்த ப்ரோக்ராம் நமக்கு கிடைக்காம போய்டும்னு நினைச்சி...

அவர் போனில் தெரிந்த ஒரு வாசகத்தை காட்டி “ ஹிஹி.. அண்ணாச்சி அதான் என்னோட போன்.. தைரியமாக அனுப்புங்க..:)))) “

“அடப்பாவி... #$%$#%^&%^%%$#$%%#.. நான் கூட என்னோட போன்ல வைரஸ் இருக்கும் போல.. இப்போ ஆஃப் பண்ணி பாக்கெட்ல போட்டு நாளைக்கு அந்த மொபைல் கடைக்கு போய் , என்னய்யா புது மொபைல்ல வைரஸ் இருக்குன்னு சண்டை போட்டிருப்பேன். வாங்கி ஒரு வாரம் கூட ஆகலை. அதுக்குள்ள வைரஸ் வந்துடிச்சேன்னு பயந்து போய்ட்டேன்.. ஆளைபாரு..”

அருகில் இதை கேட்டுக் கொண்டிருந்த சுரேகா சிரித்து முடிப்பதற்கு நீண்ட நேரம் ஆச்சி.. :)

என் மொபைல் ப்ளூ டூத் பெயர் : Virus Found என்று வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது பயணங்களில் இருக்கும் போது அருகில் ப்ளூடூத் மூலம் யாராவது ரொம்ப அலும்பு பண்ணிக் கொண்டிருந்தால் என் மொபைலில் ப்ளூடூத் ஆன் பண்ணிவிடுவேன். அடுத்து நடப்பதை பார்க்க ரசிக்க ஆயிரம் ஜென்மம் வேண்டும்.. :))

அஸ்கி புஸ்கி : இது ஒரு பழிவாங்கும் பதிவு அல்ல. :)

36 Comments:

Anonymous said...

பிசாசே :-)

Anonymous said...

அடப்பாவி..என்னோட போன்ல ப்ளூடீத் பெயர் "கொன்னுடுவேன்"

said...

//என் மொபைல் ப்ளூ டூத் பெயர் : Virus Found என்று வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது பயணங்களில் இருக்கும் போது அருகில் ப்ளூடூத் மூலம் யாராவது ரொம்ப அலும்பு பண்ணிக் கொண்டிருந்தால் என் மொபைலில் ப்ளூடூத் ஆன் பண்ணிவிடுவேன். அடுத்து நடப்பதை பார்க்க ரசிக்க ஆயிரம் ஜென்மம் வேண்டும்.. :)) //

Oru kolaveriyoda thaan irukkeenga pola :)))

said...

//இனியவள் புனிதா said...

பிசாசே :-)//

LOL :))) Oru nimisham kavithayini voice mindla vandhuttu pochu ;)

said...

/
இனியவள் புனிதா said...

பிசாசே :-)
/

என்ன ஆச்சு??? அடி ரொம்ப பலமோ????

:))))))))))
ROTFL

said...

நல்லா இருய்யா!

said...

ஹி ஹி கீழே விழுந்தாலும் தர்மபுரிகாரர்களுக்கு மீசையில் மட்டும் மண் ஒட்டாது:)

said...

:)வாழ்க..

said...

சமாளிஃபிகேஷன்??? :) :)

said...

I AM ALSO DOING THE SAME THING :)

said...

// கீழே விழுந்தாலும் தர்மபுரிகாரர்களுக்கு மீசையில் மட்டும் மண் ஒட்டாது:) //

தலையிலும்.... :)

தொப்பியில தான் ஒட்டும்.

said...

Indha annangale ippadi dhaan pola?? :(( Madhavan-um avan mobile-ku indha name dhaan vechirukkaan.. :))

said...

// இனியவள் புனிதா said...
பிசாசே :-)//

Hahahahaha repeatuuuuuuuuuuu :))))

said...

hahahaha...

nice idea. :)

I'll follow it.

said...

இதையெல்லாம் சொல்லி தரணுமா இல்லியா?

said...

தல நம்ம பயளுக வைரஸ் அட்டாக்னு வெச்சிருப்பானுக.
அலும்புக்காக ஆன் பண்டிவேச்சவ்னுக்கு உண்மையிலேயே நல்ல வைரஸ் கேடச்சுது ஒரே மெஸெஜ் பாக்ஸா ஓபன் ஆயிகிட்டே இருக்கும்.
சீக்கிரம் உங்களுக்கும் கிடைக்க வாழ்துக்கள்

said...

:-))

Anonymous said...

நடத்துங்க நடத்துங்க

said...

அண்ணே..நீங்க இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு நல்லவரா?
இப்படி எல்லாம் சுத்தி இருக்கறவங்கள டெரர் ஆக்கறீங்களே :)

said...

புளூடூத்துன்னா என்னாங்கோ..!

said...

// டக்ளஸ்....... said...

புளூடூத்துன்னா என்னாங்கோ..!//

நீல நிற பல் !

said...

அடப் பாவி!!! இப்படி ஒரு கொலைவெறியா???
அன்புடன் அருணா

said...

என்ன ஜொள்றதுன்னே புரியல..அப்ப அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லையா? அண்ணாச்சிதான் தன்னை அழகான இளம்பெண்ணாக கற்பனை செய்துகொண்டுவிட்டாரா?

said...

:)))))))))) பிசாசே!!!

(ஜி3 என் வாய்ஸ்லயே கேட்டுக் கொள்ளவும்)

:)

said...

இப்படி எல்லாம் வேறே செய்யறீங்களா
உங்களைப் பார்க்க வந்தா என் போன் ஒளிச்சு வச்சிட்டுதான் வரணும் போல :-)

said...

//
என் மொபைல் ப்ளூ டூத் பெயர் : Virus Found என்று வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது பயணங்களில் இருக்கும் போது அருகில் ப்ளூடூத் மூலம் யாராவது ரொம்ப அலும்பு பண்ணிக் கொண்டிருந்தால் என் மொபைலில் ப்ளூடூத் ஆன் பண்ணிவிடுவேன். அடுத்து நடப்பதை பார்க்க ரசிக்க ஆயிரம் ஜென்மம் வேண்டும்
//

ரொம்ப மோசம்...................
இது ஒன்னும் சரி இல்லை :-)

said...

//இனியவள் புனிதா said...

பிசாசே :-)//

அய்யய்யோ என்ன அச்சு ஒரே பயந்து வருதே :-)

said...

நன்றி மெய்யாலுமே நல்லவரே..:)
ஸ்மைலியை குத்தகை எடுத்துட்டிங்களா? :)

-------------

ஹிஹி புனிதா.. ரொம்ப நன்றி.. பதில் மரியாதை செய்யப் படும் ஆத்தா. :)

-----------

அடப்பாவி தூயா.. நீயுமா? :))

-------------

said...

//Oru kolaveriyoda thaan irukkeenga pola :)))//

ஹிஹி..எதோ என்னால முடிஞ்சது ஜி3. :)

//LOL :))) Oru nimisham kavithayini voice mindla vandhuttu pochu ;)//

பாருங்க.. அந்தம்மாவே வந்து அவங்க வாயாலயே சொல்லிட்டாங்க.. இப்போ சந்தோஷமா? :(

said...

//என்ன ஆச்சு??? அடி ரொம்ப பலமோ????

:))))))))))
ROTFL//

அது ஒரு கதை சிவா மாமா.. :))

----------------

//ஹி ஹி கீழே விழுந்தாலும் தர்மபுரிகாரர்களுக்கு மீசையில் மட்டும் மண் ஒட்டாது:)//

ராசா குசும்பா.. இது 100% நிஜம் மட்டுமே. சிறிதும் கற்பனை இல்லை. சுரேகா வந்து சொல்லுவார் பாரும். :))

------------

நன்றி முத்தக்கா.. :))

------------

சமாளிபிகேஷன் இல்லை சுந்தர்ஜி. இதுவும் நிஜ சம்பவம் தான். அண்ணாச்சி பதிவுல இருக்கிறது ரொம்ப நாள் முன்னாடி நடந்த சம்பவம். இது கடந்த ஞாயிறு மாலை நடந்த சம்பவம். ;)

-------------

நன்றி தன்ஸ். நீங்களும் டரியல் படை வீரர் தான் போல. :)

said...

நன்றி வெயிலான். பக்கத்துல இருந்த சாட்சி நீங்க தானே..:))

----------

ஸ்ரீமதி, புத்திசாலிங்க ஒரே மாதிரி தான் யோசிப்பாங்க. :))
ரொம்ப சிரிக்காத.. பல்லு சுளுக்கிடுமாம்.. :)
-----------

நன்றி மஸ்தான். முடிந்த வரை எல்லோரையும் டரியலாக்க வாழ்த்துகள். :)

-------------

//இரா.சிவக்குமரன் said...

இதையெல்லாம் சொல்லி தரணுமா இல்லியா?//

இதுக்கெல்லாம் தனியா வரனுமா இல்லையா? :)) .. எழிலன் நலமா?

said...

கார்த்திக், வெறுமனே ப்ளூடூத் ஆன் பண்ணா மட்டும் வைரஸ் வராதுன்னு நினைக்கிறேன். நாம எதுனா ஃபைல் ட்ரான்ஸ்பர் பண்ணும் போது தான் வரும். இருந்தாலும் உங்க சாபத்தை மைஒண்ட்ல வச்சிக்கிறேன். உடனே ஒரு ஆண்டி வைரஸ்க்கு ஏற்பாடு பண்ணிடறேன். ;)

-------------

நன்றி சென்ஷி.. :)

--------

நன்றி சின்ன அம்மினி அக்கா.. வார்த்தை தவறிட்டிங்க.. கவனிச்சிக்கிறேன். :(

------------

நன்றி பட்டாம்பூச்சி. :). எல்லாம் பவானி தண்ணி குடிச்சதால தான் இப்டி. :)

-------------

டக்ளச், ப்ளூடூத் என்பது ஒரு ஐரோப்பிய மன்னன் பெயராம். அவர் எதோ சின்ன சின்ன தீவுகள் அல்லது நாடுகளை எல்லாம் எணைச்சாராமாம். அதனால மொபைல் டிவஸ்களை இணைக்கும் தொழில்நுட்பத்துக்கு அவர் பெரை வச்சிட்டாங்களாமாம். :)

------------

நன்றி அருணாக்கா..இது 2 பொண்ணுங்க ரயிலில் எதிர்ல உக்காந்து கடுப்பேத்தினதால வந்த கொலைவெறி..:))

-------------

நன்றி சின்ன பையன்.. :)

------------

said...

ஆதிமூலகிருஷ்ணன், ( தாமிரா எவ்ளோ அழகா இருந்தது ) அது வேறு சம்பவம்.. இது வேறு சம்பவம்.. இரண்டும் நிஜம் தான்.. அண்ணாச்சி சில பிட்டுகளை சேர்த்து போட்டுட்டார்.. நான் நிஜத்தை மட்டுமே எழுதி இருக்கேன்..:))

---------

கவுஜாயினி ரொம்ப நன்றி. :)
திட்றதுக்கு நன்றியான்னு யோசிக்காத.. வழக்கம் போல “ரொம்ப” மரியாதையா திட்டாம வெறும் பிசாசு மட்டும் சொல்லி இருக்கிற பாரு. ரொம்ப சந்தோஷம். போ.. போய் நல்லா தூங்கு.. ஜூலை மாசம் மாட்டுவ இல்ல.. அப்போ உன் மூஞ்சில எல்லாரும் கேக் பூசும் போது நான் மட்டும் தார் பூசாம விட மாட்டேன்..:))

-------------

ரொம்ப நன்றி ரம்யாக்கா.. :))
சரி இல்லைனாலும் விடறதா இல்லை.. :))

------------

////இனியவள் புனிதா said...

பிசாசே :-)//

அய்யய்யோ என்ன அச்சு ஒரே பயந்து வருதே :-)//

துக்கத்தை தோண்டி எடுக்காதிங்க.. பாவம்.. விடுங்க.. :)))

said...

நம்மளுது police!

said...

என் மொபைல் ப்ளூ டூத் பெயர் : Virus Found //

ஹா ஹா... ஜூப்பர்

said...

நன்றி போலிஸ் வால். :)

வருக வருக செல்வா.. :)

Tamiler This Week